![]() |
|
நடப்பு அரசியல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நடப்பு அரசியல் (/showthread.php?tid=7366) |
- Mathan - 03-13-2004 அட இதை டெய்லி ஸ்ராரில் திலக் சொன்னதாக படித்தேன் ஆனால் BBC இணையத்தளத்தில் படிக்க தவறிவிட்டேன். நன்றி - Mathan - 03-13-2004 இந்த முறை யாழ்ப்பாணம் வந்த நோர்வே சமாதான தூதுவர் தன்னை சந்திக்காததில் ஏமாற்றம் என்று சங்கரி சொல்லியிருக்கின்றார். - kuruvikal - 03-13-2004 அங்க Breaking News போட்டெல்லே கிடக்கு உந்தக் குப்பையளக் கொட்ட... இங்கையுமா....???! :roll: :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- Mathan - 03-13-2004 இது கருத்தை கேட்க குருவி. எல்லாத்தையும் இங்க போடேல்ல - Eelavan - 03-13-2004 Mathivathanan Wrote:என்ரை நாட்டிலை றோட்டாலை நடந்துபோகேலாமல்.. .. .. .. .. .. காரிலை போனாலும் இரண்டு ஜீப்பும் 40மோட்டார் சைக்கிலும் காட் பண்ணிக்கொண்டு பாதுகாப்பு தாறதா.. அந்தாள் சொல்லி எழுதியிருந்ததை வாசிச்சன்.. சாரைப்பாம்புக்கு இவ்வளவு பயப்படுறாங்கள் அது இன்னும் ஆச்சரியமாயிருக்கு.. நாக பாம்பு படமெடுத்தால் கொத்தும் என்று பயப்படலாம் சாரைப்பாம்பு ஆட்டம் போட்டால் யாரவது அடித்துப் போட்டு பழியை தம் மீது போட்டுவிடுவார்கள் என்று பயப்படுகிறார்கள் போல - Mathan - 03-13-2004 சங்கரியை உண்மையில் எதிர்க்கவேண்டியதில்லை. அதை மக்கள் கையில் விட்டுவிடலாம். ஒருவரை கடுமையாக எதிர்க்கும்போதுதான் பெரியவராகின்றார். - TMR - 03-13-2004 ஒம் முந்தி போஸ்ரறுக்கு சாணி அடிச்சம் ஏனென்டால் அந்த நேரத்தில போஸ்ரர் கேவலமா இருந்தது இப்ப என்ன செய்ய போஸ்டருக்கு பதிலா 4 திரியுதுகள் அம்பிட்டால் சாணிதான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- TMR - 03-13-2004 Quote:சங்கரியை உண்மையில் எதிர்க்கவேண்டியதில்லை. அதை மக்கள் கையில் விட்டுவிடலாம். ஒருவரை கடுமையாக எதிர்க்கும்போதுதான் பெரியவராகின்றார். ஓ அப்ப சாணி அடிவாங்க சங்கரி ரெடிடிடிடிடிடிடிடி!!!!! அப்ப முதல் அடிவாங்க சாணியும் ரெடி ஆளும் ரெடி!!!!!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> 2வது????சாணிஉருண்டை ரெடிடிடிடிடி ்ஆள்???? - Mathivathanan - 03-13-2004 ragi swiss Wrote:அட சாரைப்பாம்புக்குக்கூட சாணியடிக்கிற வம்புகள்.. அது தன்ரைபாட்டிலை போகுது.. எப்பவும் கல்லெறியிறதும் சாணியடிக்கிறதும் விரட்டிறதும் அடிக்கிறதும் கொல்லுறதும்தானே செய்யிறியள்.. விட்டிட்டு ஏதாவது நல்லது உருப்படியா செய்வமெண்டில்லை..Quote:சங்கரியை உண்மையில் எதிர்க்கவேண்டியதில்லை. அதை மக்கள் கையில் விட்டுவிடலாம். ஒருவரை கடுமையாக எதிர்க்கும்போதுதான் பெரியவராகின்றார். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 03-13-2004 சர்வதேச நாடுகளின் ஆதரவு இல்லாததால் தனிநாடு சாத்தியமில்லையாம் கருணாவின் திடீர் ஞானோதயம் - Mathan - 03-13-2004 <img src='http://www.thinakural.com/2004/March/13/moorthy.gif' border='0' alt='user posted image'> தமிழ் பத்திகைகஊக்கு எப்படி எழுதினாலும் பிரைச்சனை தான். - Mathan - 03-13-2004 புலிகள் தலைவர் பிரபாகரனை கொல்வதற்கு கருணா ஆட்களை அனுப்பியுள்ளார்? இது சந்திரிகா கட்டுப்பாட்டில் உள்ள ITN தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி. குழப்பத்தை ஏற்படுத்துவற்காக வெளியிட்ட செய்தியா? - Manithaasan - 03-13-2004 <b>பி.பி.சிஎழுதியது</b> Quote:சர்வதேச நாடுகளின் ஆதரவு இல்லாததால் தனிநாடு சாத்தியமில்லையாம் கருணாவின் திடீர் ஞானோதயம் நல்ல விலைக்கு விலைப்பட்டிருக்கிறார் என்பதை விரைவில் உறுதிசெய்வார் போலிருக்கிறது - Mathan - 03-14-2004 பிரதேசவாதம் பற்றி இது என்னோட தனிப்பட்ட கருத்து. மக்களில் ஒரு பகுதியை குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தோட இணைத்து அவர்களை ஒரு தனிக் குழுவா காட்ட முயற்சி செய்வது பிரதேசவாதம். அந்த தனிக்குழுவுக்கு தனியான மொழி, பேச்சு நடை (மொழியை பேசும் விதம்), கலாச்சாரம், மதம், பழக்கவழக்கம் இதில் ஏதாவதோ இல்லை அனைத்துமோ இருக்கலாம். உதாரணத்துக்கு யாழ்ப்பாண தமிழன், வன்னி தமிழன், கொழும்பு தமிழன், மலையக தமிழன், இலங்கை தமிழன், இந்தியத் தமிழன், தீவான், வடமராச்சியான், வலிகாமத்தான், கண்டி சிங்களவன் இன்னும் நிறைய இருக்கின்றது இவை எல்லாமே பிரதேசவாதம் தான். ஒரு பொது பிரைச்சனை என்று வரும்போது அதனோட தன்மையை பொறுத்து மக்கள் எல்லோஒருமே வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவார்கள். அந்த பிரச்சனை தீர்ந்தவுடன் இல்லை அது ஓய்ந்திருக்கும் போது அவர்களுடைய தனி தன்மைகள்கள் அல்லது வேறுபாடுகள் தலை தூக்கும், இது இயல்பானதுதான். இப்போது தமிழர் சிங்களவர் சண்டை என்று நடக்கும்போது இரண்டு பக்கமும் மொழிவாரியா ஒன்றுபடுவாங்க. அவங்களுக்கு இடையிலே உள்ள வேறுபாடுகள், பிரைச்சனைகள், தனிதன்மைகள் வெளியே தெரியாது. அவர்கள் பொது எதிரிக்கு எதிரா ஒன்றுபடுவார்கள். ஆனால் அந்த பிரைச்சனை ஓயும்போது மற்ற வேறுபாடுகள் இரண்டுபக்கமும் தலைகாட்டும். உதாரணமாக இந்தியாவில் எத்தனையோ பிளவுகள்/பிரிவுகள் இருக்கின்றது. ஆனால் கார்கில் சண்டை வந்தபோது அவர்கள் அதை மறந்து எல்லோரும் ஒன்றாக பொது எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரா போரடினார்கள். அப்போது பிளவுகள் இல்லாமல் போகவில்லை. அது அப்படியே தான் இருந்தது. ஆனா அந்த வேறுபாடுகள் எல்லாம் கார்கில் பிரைச்சனையோட ஒப்பிடும்போது முக்கியமில்லாததாக இருந்ததால மக்கள் அதை ஒதுக்கியிருந்தார்கள். கார்கில் யுத்தம் முடிந்ததும் அவை எல்லாம் மீண்டும் தலை தூக்கிவிட்டது. இதை நாம் உலகத்தில எங்கேயும் பாக்கலாம். இந்த அளவிற்கு மோதிக்கொள்கின்ற பாகிஸ்தானும் இந்தியாவும் நாளைக்கே உலகத்து இன்னொரு கிரகத்தில இருந்து ஒரு பொது எதிரியால சண்டை வந்தால் சேர்ந்துதான் போராடுவார்கள். இந்த வேறுபாடுகள் எல்லாம் அதன் முக்கியத்துவத்தை பொறுத்து வெளியில் வரும். மற்றப்படி இல்லாமல் இல்லாமல் மனிதர்கள் இல்லை. எல்லோரும் சக மனிதர்கள் நமக்கு இருக்கின்ற உரிமை மற்றவர்களுக்கும் இருக்ககின்றது என்று நினைத்து சக மனிதனா நடத்தினால் இந்த பிரைச்சனை தீரும் அல்லது குறையும். அது ஆண்கள்/பெண்கள் அல்லது தமிழன்/சிங்களவன் எந்த பிரைச்சனையாக இருந்தாலும் சரி. என்னை பொறுத்தவரை நாம் எல்லோரும் மனிதர்கள். அவர்கள் எந்த்வகையிலும் பிளவுபடுவதை நான் விரும்பவில்லை. ஆனா மற்றவர்களை சக மனிதனாக நடத்தாதபோது அடக்குமுறைக்கு உள்ளாக்கும்போது பிரிவினை ஆரம்பமாகின்றது. அதற்கு பின்பு என்ன நடக்கும் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். வேறுபாடுகள் தீவிரமாகிவிட்டால் பிரிந்துவாழ்வது தவிர்கமுடியாமல் போய்விடும். சேர்வதோ பிரிவதோ அவரவர் விருப்பம். கூடி வாழந்தால் கோடி நன்மை - Mathan - 03-14-2004 இது நான் மற்ற பகுதில எழுதின கருத்து. விவாதத்துக்காக இங்க போட்டிருக்கேன். பிரதேசவாதம் பத்தி உங்க கருத்து என்ன? - thampu - 03-14-2004 பொதுவாக ஒவ்வொரு சமூகமும் முரண்பாடுகளில் இயக்கத்தாலே முன் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இலங்கையை நோக்குவோமாயின் சிங்கள-தமிழ் முரண்பாடு இருப்பது போல் சிங்கள சமூகத்துக்குள்ளும் தமிழ் சமூகத்துக்குள்ளும் உள்முரண்பாடுகள் உள்ளன. பிரதேச வாதம் என்பது தமிழ் சமூகத்துக்குள் புது விடயம் போல் தற்போது பார்க்கப்படுகிறது. 70பதுகளின் நடுபகுதியில் தமிழர் விடுதலை கூட்டணியை தேசியத்தின் பேரில் எதிரும் புதிருமாக இருந்த தமிழரசு கட்சியும் தமிழ் காங்கிரசும் இணைந்து உருவாக்கிய போதும் யாழ்பாண தலைமையான அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் கிழக்கிலங்கை தலைமையான இராஜதுரைக்கு கூட்டணியில் முக்கிய இடத்தை கொடுக்க தவறியமை வரலாற்றுத்தவறாகும். அதன் நீட்சிதான் இன்றைய நிதர்சனமோ என அஞ்சவேண்டியுள்ளது. - Mathan - 03-14-2004 எங்க ஈழவன், தாத்தா உங்க கருத்து என்ன? - Mathivathanan - 03-14-2004 BBC Wrote:எங்க ஈழவன், தாத்தா உங்க கருத்து என்ன?நான் உதைப்பற்றி எழுத மன்னாரான்.. திருக்கணாமலையான்.. வன்னியான்.. கொழும்பான்.. கொழும்புத்தீவான் எண்டுவந்து என்ரை தலையிலை குட்டுவாங்கள்.. எனக்கேன் வீண்வம்பு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 03-14-2004 குட்டுக்கு பயந்து எழுதமாட்டன் என்று சொல்லாதீங்க. அப்பிடி எண்டா நீங்க ஒரு கருத்து கூட எழுதியிருக்க முடியாது. உங்களோட எந்த கருத்துக்கு குட்டு விழாமல் விட்டது தாத்ஸ்? - Mathivathanan - 03-14-2004 Mathivathanan Wrote:BBC Wrote:எங்க ஈழவன், தாத்தா உங்க கருத்து என்ன?நான் உதைப்பற்றி எழுத BBC Wrote:குட்டுக்கு பயந்து எழுதமாட்டன் என்று சொல்லாதீங்க. அப்பிடி எண்டா நீங்க ஒரு கருத்து கூட எழுதியிருக்க முடியாது. உங்களோட எந்த கருத்துக்கு குட்டு விழாமல் விட்டது தாத்ஸ்?குட்டாமல் குட்டியிருக்கிறன் விளங்காதமாதிரி இப்பிடி கட்டையடிபட நூல் விடுறியள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|