Yarl Forum
விளையாட்டு...கிரிக்கெட்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: விளையாட்டு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=41)
+--- Thread: விளையாட்டு...கிரிக்கெட்...! (/showthread.php?tid=7296)

Pages: 1 2 3


- vasisutha - 08-09-2005

<b>முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில்
சம்பியன் பட்டத்தை இலங்கை வென்றது</b>.



கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற
இறுதி ஆட்டத்தில் இந்தியாவை 18 ரன்கள்
வித்தியாசத்தில் தோற்கடித்தது இலங்கை.

முன்னதான லீக் போட்டி இரண்டிலும்
இலங்கையிடம் இந்தியா தோல்வியுற்றது
நினைவிருக்கலாம்.

282 ரன்களைச் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன்
ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை
இழந்து 263 ரன்களையே சேர்க்க முடிந்தது.

ஒருகட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து 186
ரன்களைச் சேர்த்து வலுவான நிலையைப்
பெற்றிருந்தது இந்தியா. கடைசி 15 ஓவர்களில்
இலங்கை வீரர்களின் சுழல்பந்து வீச்சு மற்றும்
சிறப்பான பீல்டிங் காரணமாக இந்திய பட்ஸ்மேன்கள்
திணறினர்.

முன்னதாக, சேவாக் 22 பந்துகளில் 48 ரன்களைக்
குவித்து சிறப்பான தொடக்கம் தந்தார்.

அணியிலேயே அதிகபட்சமாக திராவிட் 77
ரன்களைச் சேர்த்தார். அவர் ரன் அவுட் ஆனது, ஆட்டத்துக்கு
திருப்பமாக அமைந்தது.

<b>இலங்கை 281-9:</b> முன்னதாக, "டாஸ்'
வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்
செய்வதாக அறிவித்தது. அதன்படி 9 விக்கெட்டுகளை இழந்து
281 ரன்களைக் குவித்தது.

அட்டப்பட்டுவும், ஜயசூர்யாவும் ஆட்டத்தைத்
தொடங்கினர்.

தனது முதல் ஓவரின் முதல் 4 பந்துகளை உபரி
ரன்களாகக் கொடுத்து சொதப்பினார் ஜாகீர்கான்.
அதே சமயம் நெஹ்ரா தான் எதிர்கொண்ட முதல் ஓவரிலேயே
அட்டப்பட்டுவை ஆட்டமிழக்கச் செய்து, அணியினருக்கு உற்சாகம் அளித்தார்.

என்றாலும் ஜயசூர்யா நிலையான ஆட்டத்தை
தந்தார். அவர் 10-வது ரன்னை எட்டியபோது
10 ஆயிரம் ரன்களைக் குவித்த முதல் இலங்கை
வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

இதற்கிடையே தில்ஹாரா, சங்கக்கரா ஆகியோர்
சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததும், ஜயசூர்யாவுடன்
இணைந்து அணிக்கு வலுசேர்த்தார் ஜயவர்தனே.

ஜயசூர்யா 67 ரன்களைச் சேர்த்திருந்தபோது
ரன் அவுட் ஆனார். அவரது எண்ணிக்கையில்
9 பவுண்டரிகள் அடங்கும்.

அர்னால்டு: அதன் பின்னர் அர்னால்டுவுடன்
இணைந்து அணியின் எண்ணிக்கையை கிடுகிடுவென உயர்த்தினார் ஜயவர்தனே.

இந்த ஜோடி 117 பந்துகளில் 125 ரன்களைக் குவித்து
வலு சேர்த்தது.

ஜயவர்தனே 97 பந்துகளில் 83 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து, ரன்னை விரைவாக சேர்க்க
முற்பட்டு ரன் அவுட் ஆனார் அர்னால்டு. அவர்
63 பந்துகளில் 64 ரன்களைக் குவித்தார்.

நெஹ்ரா 6வி: இலங்கை அணியில் 3 பேர் ரன்
அவுட் முறையில் ஆட்டமிழந்தனர். மற்ற 6 பேரும்
நெஹ்ராவின் வீச்சிலேயே ஆட்டமிழந்தனர். அதற்காக
அவர் 59 ரன்களைக் கொடுத்தார்.

<b>மாற்றம் :</b> இந்திய அணியில் லக்ஷ்மணுக்குப்
பதிலாக ஹர்பஜன் சிங் சேர்க்கப்பட்டிருந்தார். அதே
போல இலங்கை அணியில் முதன் முதலாக சாமிந்த
வாஸ் இடம்பெற்றார்.


<b>இலங்கை</b>


<b>அட்டப்பட்டு</b> (பி) நெஹ்ரா 11

<b>ஜயசூர்யா</b> ரன் அவுட் 67

<b>தில்ஹாரா</b> எல்பிடபிள்யூ (பி) நெஹ்ரா 9

<b>சங்கக்கரா</b> (சி) சேவாக் (பி) நெஹ்ரா 8

<b>ஜயவர்தனே</b> (சி) கைஃப் (பி) நெஹ்ரா 83

<b>அர்னால்டு</b> ரன் அவுட் 64

<b>தில்ஷான்</b> (பி) நெஹ்ரா 7

<b>வாஸ்</b> நாட் அவுட் 18

<b>சந்தனா</b> (சி) ஹர்பஜன் (பி) நெஹ்ரா 2

<b>முரளீதரன்</b> ரன் அவுட் 0

உபரி 12

மொத்தம் (50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு) 281

விக்கெட் வீழ்ச்சி: 1-32, 2-46, 3-67, 4-122, 5-247, 6-257, 7-262, 8-268, 9-281.

<b>பந்துவீச்சு:</b>

<b>பதான்</b> 9-0-59-0

<b>ஜாகீர் கான்</b> 9-1-43-0

<b>நெஹ்ரா</b> 10-1-59-6

<b>ஹர்பஜன்</b> 10-0-40-0

<b>கும்ப்ளே</b> 10-0-64-0

<b>சேவாக்</b> 2-0-14-0

<b>இந்தியா</b>

<b>கங்குலி</b> எல்பிடபிள்யூ (பி) தில்ஷான் 26

<b>சேவாக்</b> (பி) வாஸ் 48

<b>திராவிட்</b> ரன் அவுட் 72

<b>யுவ்ராஜ் சிங்</b> (சி) தில்ஹாரா (பி)சந்தனா 42

<b>கைஃப்</b> (சி) அட்டப்பட்டு (பி) வாஸ் 31

<b>தோனி</b> எல்பிடபிள்யூ (பி) சந்தனா 7

<b>பதான்</b> (பி) முரளீதரன் 1

<b>ஹர்பஜன் சிங்</b> ரன் அவுட் 0

<b>ஜாகீர் கான்</b> (சி) தாரங்கா (பி) முரளீதரன் 5

<b>கும்ப்ளே</b> நாட் அவுட் 9

<b>நெஹ்ரா</b> நாட் அவுட் 9

உபரி 13 மொத்தம் (50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு) 263

விக்கெட் வீழ்ச்சி: 1-62, 2-102, 3-186, 4-205, 5-216, 6-219, 7-223, 8-229, 9-246.

<b>பந்துவீச்சு:</b>

<b>வாஸ்</b> 10-1-37-2

<b>மஹ்ரூப்</b> 6-0-48-0

<b>தில்ஹாரா</b> 5-0-41-0

<b>தில்ஷான்</b> 7-0-42-1

<b>முரளீதரன்</b> 10-0-35-2

<b>ஜயசூர்யா</b> 0.1-0-1-0

<b>சந்தனா</b> 9.5-0-41-2

<b>அர்னால்டு</b> 2-0-12-0


<b>Dinamani.com</b>


- vasisutha - 08-09-2005

<img src='http://img353.imageshack.us/img353/4544/fpn5mv.jpg' border='0' alt='user posted image'>


- SUNDHAL - 08-22-2005

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.

இங்கிலாந்து வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும்இ இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. மூன்றாவது போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலம் தொடர் 11 என்ற சமநிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் வரும் 25ல் டிரன்ட்பிரிட்ஜ் நகரில் துவங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. மூன்றாவது டெஸ்டில் விளையாடிய வீரர்கள் அனைவரும் இடம் பெற்றுள்ளனர். இது குறித்து இங்கிலாந்து அணி தேர்வுக் குழு தலைவர் டேவிட் கிராவெனி கூறுகையில்இ ""கடந்த இரண்டு போட்டிகளில் எங்கள் வீரர்கள் எதிர்பார்த்ததை விட அபாரமாக ஆடினர். தற்போது இவர்கள் முழு பார்மில் உள்ளனர். இதனால் டிரன்ட்பிரிட்ஜ் போட்டியில் ஆஸ்திரேலியாவை வெல்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறதுஇ'' என்றார்.

அணி: மைக்கேல் வான் (கேப்டன்)இ டிரஸ்கோதிக்இ ஸ்ட்ராஸ்இ இயான் பெல்இ கெவின் பீட்டர்சன்இ பிளின்டாப்இ ஜெரைன்ட் ஜோன்ஸ்இ கைல்ஸ்இ ஹோகர்ட்இ ஹார்மிசன்இ சைமன் ஜோன்ஸ் மற்றும் கிறிஸ் டிரீம்லெட்.


- Danklas - 09-06-2005

ஆஹா ஒகோ,, கங்குலியின் தலைமையிலான இந்திய அணியின் தொடர் தோல்வி தொடர்கின்றது... நியுசிலாந்து முக்கோண ஒரு நாள் போட்டிக்கு புறப்படுவதற்கு முன்னர் கங்குலி சொன்னார் "எனிமேலும் எங்கள் அணி இறுத்திபோட்டிகளில் தோற்காது" என்று. சொன்ன சொல்லை காப்பாற்றி போட்டார் இந்திய அணியின் சுதப்பல், காமெடி கப்டன் சவ்ராவ் கங்குலி... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

இன்று நடைபெற்ற நியுசிலாந்து இந்திய அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில்....

இந்திய அணி 276/allout/49.3overs
முகமட் கைய்வ் 93*
சேவாக் 75

பந்துவீச்சில்..
ஒறம் 4விக்கட்,
மில்ஸ், விற்றோறி தலா 2 விக்கட்.

நியுசிலாந்து.. 278/4இலக்குகள்/48.1 ஒவர்ஸ்
நாதன் அஸ்ரில் 115*
பிளைமிங் 61

பந்துவீச்சில்..
சேவாக் 3/10/44

நீயுசிலாந்த 6 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது..
இன்றைய போட்டியின் சிறந்த விளையாட்டுவீரராக நாதன் அஸ்ரிலும்
இத் தொடரின் நாயகனாக சேன் போண்ட்டும் தெரிவாகினர்..


இந்த தொடரில் இந்திய அணியின் சொதப்பல் மன்னன், காமெடி துரை கங்குலி எடுத்த ஓட்டங்கள்...

26/08/2005 நியூசிலாந்தோடு- 5 ஒட்டங்கள்..
29/08/2005 சிம்பாப்வேயுடன் - 20 ஓட்டங்கள்...
02/09/2005 நீயுசிலாந்துடன் - 19 ஓட்டங்கள்...
04/09/2005 சிம்பாப்வேயுடன் - 2 ஓட்டங்கள்..
06/09/2005 நீயுசிலாந்துடன் - 31 ஓட்டங்கள்..

5 போட்டிகளிலும் துரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.. ஆக மொத்ததில 5 போட்டிகளிலும் ஒரு அணியின் கப்டன் அகங்காரமன்னன், சொதப்பல் ஆட்டக்காரர், பிற அணியினை மதிக்கத்தெரியாத அவர்களின் பலம் அறிந்தும் சும்மா எழுந்த மானத்திற்கு புழுகு மூட்டைகளை அவிட்டுவிடும் சவ்ராவ் கங்குலியின் மொத்த எண்ணிக்கை வெறும் 77 ஓட்டங்கள் மட்டுமே, ஆக மொத்தம் ஒரு போட்டியில் எடுக்கவேண்டிய ஓட்டங்களை 5 போட்டிகளில் விளையாடி சாதித்திருக்கிறார் நம்மதுரை.... ஒரு அணியை வழி நடத்துகிற கப்டனின் அபார திறமையை பாருங்க.. இப்படியொரு கப்டன் இந்திய அணிக்கு தேவையா??...

சேவாக், கைய்ப், யுவராஜ், தோனி, போன்ற திறம் வீரர்களை வைத்துக்கொண்டு அணியை வழி நடத்த தெரியாத கங்குலியை வெகு விரைவில் அணியிலிருந்து தூக்கியெறிய வேண்டும்... :evil:

இப்படியே சொன்றால், இந்திய அணி பங்களாதேஸ் சா அவங்க இப்ப நல்லா விளையாடுறாங்க கெனியா அணியின் ரொக்கோடை முறியடிக்கும் என்பதில் சந்தேகமில்லை... Idea


- MUGATHTHAR - 09-06-2005

தம்பி இதுக்குத்தான் Megi நூடுல்ஸ் செய்முறை விளம்பரத்தை இப்பிடிப் போட்டுது
கிரிக்கெட் மச் பாத்துக் கொண்டிருக்கும் போது மிக இலகுவாக சமையல் செய்ய Megi நூடுல்சை பாவியுங்கள்

<b>செய்முறை விளக்கம்</b>
ஒரு பாத்திரத்தில் கொதிநீரை எடுத்துக் கொள்ளுங்கள் கங்குலி களம் இறங்கும் போது அதனூள் நூடுல்சை போடுங்கள் அவர் களத்திலிருந்து திரும்பும் போது எடுத்து பரிமாறுங்கள் (Megi நூடுல்ஸ் 3 நிமிடத்தில் தயாரிக்கலாம் என உங்களுக்குத் தெரியாதா என்ன?)


- MUGATHTHAR - 12-11-2005

<b>பாகிஸ்தான் 42 ஓட்டங்களால் தோல்வி</b>

பாகிஸ்தானுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று லாகூரில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்து ஆடியது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கட்டுகளை மாத்திரமே இழந்து 327ஓட்டங்களைப் பெற்றது அணி சார்பாக
AJ.Strauss - 94 Runs
KP.Pietersen - 56 Runs
A.Flintoff - 72 not out

இதுக்கு பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி 46.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 285 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது பாகிஸ்தான் அணி சார்பில்
Salman Butt - 67 Runs
Younis Khan - 60 Runs
M.Yousuf - 59 Runs
Shoaib Malik - 50 Runs

<b><i>இதன் மூலம் இங்கிலாந்து அணி முதலாவது போட்டியில் 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது </i></b>

ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியின் AJ.Strauss(94) தெரிவு செய்யப்பட்டார்

ஸ்கோர் விபரம் http://mugaththar.blogspot.com/


- MUGATHTHAR - 12-13-2005

<b>பாகிஸ்தான் 7 விக்கட்டுகளால் வெற்றி</b>

பாகிஸ்தானுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்து ஆடியது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் சகலவிக்கட்டுகளை இழந்து 230ஓட்டங்களைப் பெற்றது அணி சார்பாக
Plunkett - 56 Runs

இதுக்கு பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி 44 ஓவர்களில் 3 விக்கட்டுகளை மாத்திரமே இழந்து 231 ஓட்டத்தைப் பெற்றது பாகிஸ்தான் அணி சார்பில்
Salman Butt - 43 Runs
Kamran Akal - 102 Runs


ஸ்கோர் விபரம்
<b>இங்கிலாந்து -230 ஓட்டங்கள் (50ஓவர்)

பாகிஸ்தான் -231/3

ஆட்ட நாயகன் -[b]shoaib Akthar -54/5</b>
http://www.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._12DEC2005.html

இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் 7 விக்கட்டுகளால் இலகுவான வெற்றியை பெற்றது 1வது போட்டியில் இந்கிலாந்து வெற்றி பெற்றது தெரிந்ததே. . .


- MUGATHTHAR - 12-15-2005

<b>பாகிஸ்தான் 165 ஓட்டங்களால் அமோக வெற்றி - 3வது போட்டி </b>

பாகிஸ்தானுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கராச்சியில் நடைபெற்றது முதலில் துடுப்பெடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 353ஓட்டங்கள் என்ற பெரிய இலக்கைப் பெற்றது அணி சார்பாக
Kamaran Akal - 109 runs
Mohd.yousuff - 68 runs
Abdul razzaq - 51* runs (21 balls)

இதுக்கு பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி மிகவும் பரிதாபமாக 42 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 188 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது பெரிதாக எந்த வீரரும் சிறப்பாக துடுப்பெடுத்து ஆடவில்லை அணி சார்பில
J.bell - 39* runs
Filintoff - 36 runs

ஸ்கோர் விபரம்
பாகிஸ்தான் [size=18]-353/6

இங்கிலாந்து [size=18]-188
ஆட்ட நாயகன் - <b>Kamaran Akal -109 runs(Pak)</b>

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் 165 ஓட்டங்களால் இலகுவான ஒரு வெற்றியை பெற்றதின் மூலம் 5போட்டிகள் கொண்ட தொடரில் 2 : 1 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது

http://www.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._15DEC2005.html


- kuruvikal - 12-17-2005

முகத்தார் உங்கள் ஸ்கோர் போட் நேர்த்தியா இருக்கு... பார்த்திட்டுத்தான் போறனாங்க.. அடிக்கடி..அப்டேட் பண்ணுங்க...இப்ப போல எப்பவும்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- MUGATHTHAR - 12-20-2005

<b>பாகிஸ்தான் 13 ஓட்டங்களால் அபார வெற்றி - 4வது போட்டி </b>

பாகிஸ்தானுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நாலாவது ஒருநாள் போட்டி நேற்று ராவல்பிண்டியில் நடைபெற்றது முதலில் துடுப்பெடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து <b>210 </b>ஓட்டங்களைப் பெற்றது
அணி சார்பாக
<b>Inzan ul haq - 81* Runs
Afridi - 31 runs </b>

இதுக்கு பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி மிகவும் கடுமையாக போராடியும் 48.1 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து <b>197</b> ஓட்டங்களை மாத்திரமே பெற்றது
<b>K.Ali - 39* runs
Filintoff - 41 runs</b>
ஸ்கோர் விபரம்
பாகிஸ்தான் <b>-210 ஓட்டங்கள் 47.2ஓவர்)
இங்கிலாந்து [b]-197 ஓட்டங்கள் 48.1ஓவர்)

ஆட்ட நாயகன் -[b]Inzan ul haq 81 runs(Pak)</b>பாகிஸ்தான் பெற்ற இந்த வெற்றியின் மூலம் 5போட்டிகள் கொண்ட தொடரில் 3 : 1 என்ற நிலையில் தொடரைக் கைப்பற்றியது


- MUGATHTHAR - 12-24-2005

<b>6 ஓட்டங்களால் இங்கிலாந்து வென்றது</b>

<img src='http://www.thinakkural.com/New%20web%20site/web/2005/December/23/sp1.jpg' border='0' alt='user posted image'>

அன்டர்சன், பிளங்கெட் அசத்தலாக ஆட 6 ஓட்டங்களால் இங்கிலாந்து வென்றது

அன்டர்சன் மற்றும் பிளங்கெட் அசத்த, ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
பாகிஸ்தான் வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் பாகிஸ்தான் 3-1 என்ற ரீதியில் தொடரை வென்ற நிலையில், கடைசிப் போட்டி ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் நடந்தது.
பாகிஸ்தான் அணியில் அக்தர் நீக்கப்பட்டு அறிமுகவீரர் முகமது ஆசிப் இடம்பெற்றார். காயம் காரணமாக இன்சமாம் விலகியதால் கப்டன் பொறுப்பை யூனிஸ்கான் ஏற்றார்.
நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது. முகமது ஆசிப் அசத்தலாக பந்து வீசி இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களை வெளியேற்ற 52 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பிளின்டாப் மற்றும் சோலங்கி இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். நான்காவது விக்கெட்டுக்கு 65 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சோலங்கி (49) ஆட்டமிழந்தார். பிளின்டாப் 39 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்
பிளாக்வெல், ஜோன்ஸ் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து 200 ஓட்டங்களை எட்டுமா என்பதே கேள்விக்குறியானது. கடைசி நேரத்தில் பிளங்கெட் 12 பந்துகளில் 24 ஓட்டங்கள் (3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாச இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 206 ஓட்டங்கள் குவித்தது.
வெற்றிக்கு 207 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய பாகிஸ்தான் ஹார்மிசன், அன்டர்சன் வேகத்தில் தடுமாறியது. பொறுப்புடன் விளையாடிய அமீத் (57), யூசுப் (52) அரைச்சதம் அடித்தனர். இந்நிலையில் யூசுப் ஆட்டமிழந்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

கடைசி ஓவரில் 11 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பிளங்கெட் வீசினார். முதல் நான்கு பந்துகளில் 3 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன. மீதமிருந்த இரண்டு பந்துகளில் ஒரு ஓட்டம் மட்டுமே எடுக்க பாகிஸ்தான் அணி 200 ஓட்டங்களை எட்டி தோல்வியைத் தழுவியது.

இங்கிலாந்தின் வெற்றிக்குக் காரணமான <b>அன்டர்சன்</b> 4 விக்கெட்டு வீழ்த்தினார். ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.

thinakkural


- Mathan - 12-24-2005

முகத்தாருக்கு கிரிக்கட்டில் நல்ல ஆர்வம் போல இருக்கு. உங்க புளொக்கிலும் நிறைய கிரிக்கட் செய்திகள் போட்டிருந்தீங்க. ம் தகவல்களை தொடர்ந்து தாங்க


- Mathan - 12-24-2005

MUGATHTHAR Wrote:தம்பி இதுக்குத்தான் Megi நூடுல்ஸ் செய்முறை விளம்பரத்தை இப்பிடிப் போட்டுது
கிரிக்கெட் மச் பாத்துக் கொண்டிருக்கும் போது மிக இலகுவாக சமையல் செய்ய Megi நூடுல்சை பாவியுங்கள்

<b>செய்முறை விளக்கம்</b>
ஒரு பாத்திரத்தில் கொதிநீரை எடுத்துக் கொள்ளுங்கள் கங்குலி களம் இறங்கும் போது அதனூள் நூடுல்சை போடுங்கள் அவர் களத்திலிருந்து திரும்பும் போது எடுத்து பரிமாறுங்கள் (Megi நூடுல்ஸ் 3 நிமிடத்தில் தயாரிக்கலாம் என உங்களுக்குத் தெரியாதா என்ன?)

ஆகா ஆகா இதை இப்போது தான் பார்த்தன். முகத்தாருக்கு லொள்ளு ஜாஸ்தி தான் கங்குலியை இந்த கடி கடிக்கிறீங்க.

அது சரி கங்குலியின் தற்போதைய நிலை என்ன? அடிக்கடி அணிய விட்டு தூக்கிறதும் சேர்க்கிறதுமா இருக்காங்க? கங்குலியின் போக்கில் இப்போது நல்ல மாறுதல் என்றும் இணையத்தில் எங்கையோ படிச்சன்


- Danklas - 12-24-2005

Mathan Wrote:முகத்தாருக்கு கிரிக்கட்டில் நல்ல ஆர்வம் போல இருக்கு. உங்க புளொக்கிலும் நிறைய கிரிக்கட் செய்திகள் போட்டிருந்தீங்க. ம் தகவல்களை தொடர்ந்து தாங்க

அட நம்ம முகத்தார் யாரு,,, விக்கட் கீப்பருக்கு போற பந்துக்கே 4 ரன் ஓடுறவர் ஆயிற்றே....சும்மாவா,,, :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 12-24-2005

<b>பவாருடனான சந்திப்பு குறித்து இரகசியம் காக்கும் கங்குலி; அணியில் மீண்டும் இடம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிப்பு </b>

இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் சரத் பவார் சௌரவ் கங்குலி சந்திப்பு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விஷயங்கள் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. பவார் இறங்கி வந்துள்ள நிலையில் இனி பயிற்சியாளர் சப்பலும் கருணை காட்டினால் கங்குலிக்கு மீண்டும் வாய்ப்புக் கிடைக்கலாம்.

இந்திய அணியில் இருந்து கங்குலி நீக்கப்பட பெரும் சர்ச்சை வெடித்தது. கிரிக்கெட் சபைத் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத் பவார் தூண்டுதலின் பேரில் தான் கங்குலி நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.

டால்மியாவுக்கு நெருக்கமானவர் என்பதால் டில்லி டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டும் கங்குலிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின.

இதையடுத்து பவாருக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்கடிகள் வரத் தொடங்கின. சக அமைச்சர்கள்இ மத்திய அரசுக்கு ஆதரவு தரும் இடது சாரித் தலைவர்கள் எல்லாம் கங்குலியை மீண்டும் அணியில் சேர்க்குமாறு வலியுறுத்தினர்.

இதனால் வேறு வழியில்லாத பவார் இறங்கி வந்தார். கங்குலியை நேரில் சந்தித்து பிரச்சினைக்கு தீர்வு காண திட்டமிட்டார். இந்த அழைப்பை ஏற்ற கங்குலிஇ டில்லி சென்று பவாரை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார்.

இருவரும் சுமார் ஒரு மணிநேரம் இரகசிய அறையில் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்தனர். அணியின் வளர்ச்சி பற்றி பேசியதாக கூறப்பட்ட போதும்இ உண்மை விபரங்களைத் தெரிவிக்க இருவரும் மறுத்துவிட்டனர்.

இப்பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த கங்குலி மிகுந்த திருப்தியுடன் காணப்பட்டார். இதனால் பவாரின் சமரச முயற்சிக்கு வெற்றி கிடைத்து விட்டதாகக் கருதப்படுகிறது.

<b>வெளியே சொல்ல முடியாது'</b>
நேற்று முன்தினம் காலை கொல்கத்தா திரும்பிய கங்குலி பவாருடன் பேசியது முழுக்க முழுக்க தனிப்பட்ட விஷயம் என்றார். "இருவரும் தனிப்பட்ட விஷயங்களை விவாதித்தோம். இதை வெளியே சொல்ல முடியாது. பவார் சந்திப்புக்குப் பிறகுஇ அணியில் இருந்து நீக்கப்பட்ட அந்த உணர்வில் மாற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து உள்ளூர் போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளேன். அணிக்கு மீண்டும் திரும்ப முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.

<b>பதவியை பறித்தது டால்மியாவா?</b>

டில்லி சந்திப்பின் போது டால்மியாவின் மறைமுக சதி குறித்து பவார் விளக்கிக் கூறியுள்ளார். டால்மியா கோஷ்டி பதவியில் இருந்த காலத்தில் தான் கங்குலியின் கப்டன் பதவி பறிக்கப்பட்டது. இலங்கை தென் ஆபிரிக்க அணிகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்தும் நீக்கப்பட்டார். ஆக நெருக்கமானவர் போல் காட்டிக் கொண்ட டால்மியா உண்மையிலேயே கங்குலிக்கு துரோகம் செய்துள்ளார். இப்போது கங்குலி நீக்கப்பட்ட பிரச்சினையைப் பெரிதாக்கி சுய விளம்பர தேட முயற்சிப்பதாக பவார் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே டால்மியாவிடம் இருந்து விலகி இருக்கும்படி கங்குலியை பவார் எச்சரித்துள்ளார். புதிய தலைமைக்குப் பணிந்து இனி பவார் சொற்படி கேட்பாரா கங்குலி!

தினக்குரல்