![]() |
|
காதல் காதல் காதல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: காதல் காதல் காதல் (/showthread.php?tid=7279) |
- Mathan - 04-02-2004 Eelavan Wrote:BBC Wrote:ஏன் விழிகள் பேசும் மொழி? தொடுகைக்கு கூடுதல் சக்தி உண்டு என்பதை நான் ஏற்றுக் கொள்கொள்கின்றேன், ஆனால் தொடுகை முடியாத சந்தர்பங்களில் விழிகள் பேசுகின்றன, - Mathan - 04-02-2004 Eelavan Wrote:kuruvikal Wrote:அப்ப எல்லாம் மாயை....! உண்மைதான் அப்படி பார்த்தால் அனைத்தும் மாயையாகிவிடும். - nalayiny - 04-02-2004 மாயை எண்டா சொல்லிக்கொண்டிருக்காதேங்கோ இப்பவே சாகுங்கோ. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 04-02-2004 காதலுக்கும் அன்புக்கும் இடையே தெளிவான வேறுபாடு ஒன்று இருக்க வேண்டும் அன்றில் இரண்டு தனிப் பதங்கள் ஒரே உணர்வுக்கு வந்திருக்க முடியாது...எனவே அங்கு உணர்வுகள் வேறுபட்டிருக்க வேண்டும்...எந்த உணர்வுக்கும் ஒரு அளவு உண்டு...கலப்படம் உண்டு....எனவே தான் தூய கெட்ட என்ற சொற்கள் முற்சேர்க்கையாகின போலும்...ஆங்கிலத்தில் உண்டு இந்த அடைமொழிகள்....! அல்லது காதல் என்பது ஏதோ ஒரு உணர்வு.... ஆண் பெண்ணின் பால் நிலைக் கவர்சியால் உருவாகும் ஒரு உணர்வு.....! அதற்குள் அன்பு கலப்படம் செய்யப்பட்டு சமூக அங்கீகாரம் தேடப் பயன்படும் ஒரு பதம்.....தான் காதல்...! சமூகத்தில் அன்பை வெளிப்படுத்தாது மனிதன் வாழ முடியாது...ஆனால் காதல் இன்றி எவரும் வாழலாம்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Eelavan - 04-02-2004 kuruvikal Wrote:காதலுக்கும் அன்புக்கும் இடையே தெளிவான வேறுபாடு ஒன்று இருக்க வேண்டும் அன்றில் இரண்டு தனிப் பதங்கள் ஒரே உணர்வுக்கு வந்திருக்க முடியாது...எனவே அங்கு உணர்வுகள் வேறுபட்டிருக்க வேண்டும்...எந்த உணர்வுக்கும் ஒரு அளவு உண்டு...கலப்படம் உண்டு....எனவே தான் தூய கெட்ட என்ற சொற்கள் முற்சேர்க்கையாகின போலும்...ஆங்கிலத்தில் உண்டு இந்த அடைமொழிகள்....! அது அவரவர் எடுத்துக்கொள்ளும் முறையைப் பொறுத்து அதற்காகத் தான் ஆங்கிலத்தில் கடிதம் எழுதும் போதும் with love என்று கூறி முடிக்கிறோம் பால்நிலையால் வரும் கவர்ச்சிக்கு அன்பு என்று கூறி சமூக அங்கீகாரம் தேடவேண்டிய அவசியம் எவர்க்கும் இல்லை அன்பிற்கும் காதலுக்கும் வித்தியாசம் கற்பிக்க முயல்பவர்கள் மத்தியில் தங்கள் காதல் கொச்சைப்படுத்தப்பட்டு விடக்கூடாதே என்ற கவலையில் அந்த விளக்கம் குறைந்தவர்களுக்கும் விளங்கும் வகையில் காதல் அன்பு என்று இரு பதங்கள் பயன்படுத்தப்படுகின்றது ஏன் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மத்தியில் இருப்பது அன்பாக இருக்கக்கூடாது அதை காதல் என்று(உங்கள் கருத்துப்படி) சொல்வீர்கள் - Eelavan - 04-02-2004 சமூகத்தில் அன்பை வெளிப்படுத்தாது மனிதன் வாழ முடியாது...ஆனால் காதல் இன்றி எவரும் வாழலாம்....! நாட்டைக் காதலிப்பவன் தேசப்பற்றாளன் மொழியைக் காதலிப்பவன் கவிஞன் இயற்கையைக் காதலிப்பவன் சமூகப்பற்றாளன் சக மனிதர்களைக் காதலிப்பவன் மனிதநேயன் தன்னைத் தானே காதலிப்பவன்..... இதோ திருவள்ளுவர் சொல்கிறார் தன்னை தான் காதலன் ஆகில் ஆகுல நீர பிற - kuruvikal - 04-02-2004 நாம்தானே சொல்லுகிறோமே சமூகத்தில் அன்பு செலுத்தாமல் எவரும் வாழ முடியாது...ஆனால் காதல் இன்றி வாழ முடியும்...சமூகத்துள் ஆணும் பெண்ணும் அடக்கம்....எனவே தான் நீங்கள் காட்டியது போல அங்கு நாம் தனித் தொடர்பைக் காட்டவில்லை...ஆனால் காதல் என்பதால்....கலியாணம்..காமம்...நோக்கிய பயணம் ஆரம்பிக்க முயலப்படுகிறதே...பெரும்பாலும்...அதுவே அன்புக்கும் காதலுக்கும் இடையே தெளிவான சமூக நடத்தையியல் வேறு பாட்டைக் காட்டி நிற்கிறதே....! அப்போ காதல் என்பது அன்பல்ல....அன்பு கலந்த ஏதோ ஒன்று...அன்பு மாசாக்கப்படும் ஒரு செயல்...காதல்....! அது போக காதலிலும் பல வகை உண்டு போல....! - Eelavan - 04-02-2004 உங்களுக்கு உள்ள தோற்றப்பாட்டின் படி ஒரு இளவயது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள அன்பிற்குப் பெயர் தான் காதல் என்றால் நான் என்ன சொல்ல நீங்கள் சொல்வது போன்று நோக்கினாலும் காதல் கனிந்து கல்யாணமாகி பின்னர் அது கணவன் மனைவிக்கிடையிலான காம உறவு அதனால் வந்த அன்பு பரஸ்பர புரிந்துணர்வு,நெருக்கம்,இதனால் கிடைத்த புத்திரச்செல்வங்கள்-பிறப்பு,அவர்கள் மேல் கொண்ட பாசம்,நேசம்,அந்த செல்வங்கள் தாய் தந்தையர் மேல் செலுத்தும் அன்பு எல்லாமே காதல் என்ற ஒருவரிக்குள் அடங்கிவிடுகின்றனவே - kuruvikal - 04-02-2004 அன்பு ஓர் உயிரின் உணர்வு.. மனிதனுக்கிடையே...உயிர்களுக்கிடையேதான் தான் பரிமாறக் கூடியது...ஆனால் காதல் ஆண்- பெண்...மனிதன் - தேசம்...கவிஞன் - கவிதை (தங்கள் உதாரணப்படியே) சடத்துடனும் மனிதனுக்கு ஏற்படும் ஒரு உணர்வு...எனவே தான் அது அன்புடன் கலந்து உயிர் பெற்று மனிதரிடையேயும் பகிரப்படுகிறது...ஆகவே காதல் என்பது...ஒரு பரிசுத்தமான அன்பின் நிலை அல்ல.....அது அன்புடன் கலந்த ஒரு மாசு நிலை....மனிதருக்கிடையே பகிரப்படும் போது கூட...எனவே காதல் என்பது..அன்பை மாசுபடுத்தும் ஒன்று....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 04-02-2004 காதல் மாசு என்றால் காதலிக்கவே கூடாதா? காதலித்து திருமணம் செய்ய கூடாதா? - kuruvikal - 04-02-2004 அது அல்ல முடிவு...காதல் என்பது மனிதரிடையே அவசியமில்லாதது என்பதுதான் முடிவு....தாராளமாய் அன்பிருக்கும் போது காதல் எதற்கு....! கலப்படம் எங்கும் நல்லதல்லவே....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Eelavan - 04-02-2004 தமிழில் படித்தீர்களானால் குழந்தை அது இது என்னும் சுட்டுக்களோடு சடப்பொருளுக்கு இணையாக வழங்கப்படும் ஆனால் அது சடப்பொருளாவெனில் இல்லை மண்-தாய் கவிதை-தாய்மொழி அதேவேளை அன்பால் மனிதரிடையே அல்லது உயிரினங்களுக்கிடையே மட்டும் உணர்ச்சிப் பரிமாற்றம் நிகழ்த்தக்கூடியதாக இருக்கும் அதேவேளை காதலானது மனிதனுக்கிடையிலும் சடப்பொருள்களுடனும் கூட ஏற்படும் உணர்ச்சி எனின் காதலானது அன்பையும் தன்னுள் அடக்கி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறதல்லவா நான் சொன்னது தேசத்தின் மீது ஏற்படுவது அன்புதான் அதுவே எல்லை கடந்த அன்பாக மிளிரும் போது காதல் என்கின்றோம் அதாவது படிநிலைக் குறியீடு காதலுடன் கலப்பதால் அன்பு மாசுபடும் எனின் காமம் குரோதம்,வெகுளி மயக்கம் இவையாவற்றுடனும் கலந்து அன்பு தன் செயலிழக்கக் கூடும் அப்பிடிப்பட்ட சந்தர்ப்பவாத உணர்வா அன்பு? - Mathan - 04-02-2004 அதை கலப்படம் என்று நான் நினைக்கவில்லை. காதல் என்ற பெயரில் சில அசிங்கங்கள் நிகழ்வது உண்மைதான், அதற்காக காதலே கலப்படம் என்று சொல்ல முடியாது. - kuruvikal - 04-02-2004 அதுதானே சொன்னோமே அன்பு புனிதமானது...அதனைச் சார்ந்து மனிதரிடையே முளைப்பது காதல் தான்....அது அன்பின் படி நிலை கூட்டுதோ குறைக்குதோ...யார் அறிவார்....ஆனால் எல்லா அன்பின் படி நிலைகுறைக்கும் மயக்கத்திற்கும் வழி சமைக்கிறது...எனவே அன்பு காதலால் மாசாகிறது என்பதுதான் முடிவு....! அன்பே தெய்வம்...என்றுதான் சொல்லப்படும்...காதலே தெய்வம் என்று அல்ல....இதுவும் தெய்வம் போல் அன்பும் புனிதம் என்று உணரப்பட்டதை உணர்த்துவது போல் தான் தெரிகிறது....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
- Eelavan - 04-02-2004 படி நிலை என்பது வளர்ச்சிக்கட்டம் இதில் அன்பின் ஒருவிதமான முதிர்ச்சி நிலைதான் காதல் அப்பிடியிருக்க அதனை மாசு என்று எப்படிச் சொல்லமுடியும் காதல் என்பது முளைப்பதல்ல அன்பின் பரிணாமம் அதாவது அன்பு வெளிப்பாட்டின் குறிப்பிட்ட வடிவம் நீங்களே கூட்டுதோ குறைக்குதோ தெரியாது என்று சொல்லி படிகுறைக்கிறது இதுதான் முடிவு என்றால் என்ன அர்த்தம் அன்பு கூட ஒரு கட்டத்தில் மயங்க வைக்கும் தாயார் தன் பிள்ளைமீது கொண்ட அதீத அன்புதான் ஒரு கட்டத்தில் தன் பிள்ளை பற்றி யாரும் தப்பாகச் சொன்னாலும் அது உண்மையாக இருக்குமோ இல்லையோ என்று கூட ஆராய்ந்து பார்க்கவிடாமல் மயக்கும் அப்பிடி மயக்கும் தாய்ப்பாசம் அன்பின் மாசு கலந்த ஒரு வடிவமா? - kuruvikal - 04-02-2004 அன்பின் பரிணாம நிலை காதல் என்றால் காதல் என்பது அன்பின் பரிணாமத்தின் முந்திய நிலைதான்....காரணம் ஒரு தூய நிலையை நோக்கி செல்வதுதான் உணர்வுகளின் பரிணாம வளர்ச்சியின் உன்னத நிலை....ஆன்மீக உணர்வின் உன்னத நிலை முத்தி என்பது போல...அது மட்டுமல்லாமல்...காதல் காமத்துடனும் கலந்து மனிதனை மிருகமுமாக்குகிறது...எனவே அது படி நிலை கூடிய நிலை என்பது பொருந்தாது....! அன்பு மயக்குவதில்லை...அன்பு தவறாக உணரப்படுதல்தான் மயக்கத்தைத் தருகிறது...ஆனால் அன்பு சார்ந்து முளைக்கும் காதல் எனும் உணர்வுதான் இன்னும் பல கீழ் படி நிலை உணர்வுகளுடன் கலந்து மனிதனுக்குள் மிருக்கத்திற்கு இணையான வெறித்தனத்தை உண்டு பண்ணுகிறது....காதலை விலக்கினால் மட்டுமே தூய அன்பை உணர முடியும்....நாம் எல்லோரும் தூய அன்பை உணர்ந்தோமா...என்றால் இல்லை....காரணம்...அன்பை எதிலும் கலந்து கலப்படமாக்கி வழங்குவதே மனித இயல்பாகிவிட்டது....! வேண்டும் என்றால் தூய அன்பின் அடையாளம் காண காதல் என்ற அன்பின் முன்னைய கலப்பட படி நிலை வழியாகப் பயணிக்கலாம்...ஆனால் அது மனத்தின் பலவீனத்தையே காட்டும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Eelavan - 04-02-2004 அன்பே தெய்வம் அவ்வன்பே காதல் இதுதான் என் கருத்து அன்பின் பரிணாமத்தில் முந்திய நிலைதான் காத்ல் என்றால் சமய குரவர் எவரும் இறைவன் மீது செலுத்திய அன்பு படிநிலை கடந்ததும் காதலாக மாறியது என்கிறார்களே அது பொய்யா? அதே ஆன்மீகத்தின் முத்தி நிலையைத் தானே இறைவன் மீது கொண்ட காதலாக திருப்பாவைகளும்,திருவெம்பாவைகளும்,பாசுரங்களும் பாடி வைத்திருக்கின்றன அன்பு கூட நான் சொன்ன ஆசைகளாலும்,மோகங்களாலும் மாசுபடக்கூடிய மாசு படுகின்ற நிலமையே காணப்படுகின்றது அந்த அன்பு மயக்குவதில்லை தவறாக உணரப்படுகின்றது என்கிறீர்கள் அதையே தான் நானும் சொல்கிறேன் காதல் மயக்குவதில்லை தவறாக ஊனரப்படுகின்றது அன்பு சார்ந்து முளைக்கும் காதல்தான் மனிதனை மிருகமாக்கும் என்பதை அன்பின் வழியது உயிர்நிலை என்று சொன்ன திருவள்ளுவர் கேட்கவில்லை நல்லகாலம் என்னைப் பொறுத்தளவில் அன்பு சார்ந்து உருவாகும் எதுவும் மனிதனை நல்வழிப்படுத்துமே தவிர மிருகமாக்கும்,தேவனாக்கும் என்பதெல்லாம் அதீத கற்பனையின் வெளிப்பாடு மனிதன் மனிதனாக வாழ அன்பு தேவை அதாவது காதல் தேவை அந்த அன்பானதை கலப்படம் செய்து கொடுப்பதுதான் மனித இயல்பு என்றால் மனிதமே எமக்குப் பொதும் மாசு மருவற்ற தேவுக்களின் வாழ்க்கை எமக்கு வேண்டாம் - kuruvikal - 04-02-2004 சமய குரவர்களில் மனிதக் காதல் கொண்ட சம்பந்தரும் சுந்தரரும் ஏன் தடுத்தாட் கொள்ளப்பட்டனர்...மாணிக்கவாசகரும் ஆண்டாளும் இறைவனை அன்பில் மாசு கலந்த காதல் கொண்டு பார்த்ததால்தான் பல சோதனைகளின் பின் தூய அன்புணர்ந்து இறைவனை அடையும் ஆன்மீக நெறி பற்றி காதல் கடந்த அன்பு கொண்டார்....இறை முத்தி பெற்றார்....! மகான்களின் மனத்தில் இருந்து எழும் அன்புடனேயே காதல் எனும் மாசு கலந்து விடும் நிலை என்றால் அது சாதாரண மனிதனில்....! அதுதான் சொன்னோமோ தூய அன்பை நாம் எவரும் உணரவில்லை...ஆனால் காதல் எனும் அன்பு கலந்த ஒரு மாசு நிறை உணர்வை எவரும் இலகுவில் கண்டுணர்ந்து கொள்கின்றனர்...அதனால்தான் காதல் சாதாரண மனிதருள் செல்வாக்குச் செய்கிறது...அதற்காக காதல் அன்பின் தூய நிலை அல்ல..படி நிலை கூடிய நிலையும் அல்ல.......காதல் விலக்கப்படக் கூடியதுமே....! காதல் வாழ்வுக்கு அவசியமும் இல்லை....மாசுகளில் காதல் மாசு கலக்காத அன்பே போதும்...மனிதம் வாழ்வதற்கு.....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Eelavan - 04-02-2004 ம்ம் சம்பந்தர் திருமணம் செய்த பின்னர் காதல் மனைவியைக் கைப்பிடித்தபின் மனைவியுடன் இறைவனடி சேர்ந்தவர் என்றும் சுந்தரர் ஒன்றுக்கு இரண்டு பெண்களைத் திருமணஞ்செய்ததாகவும் அவர்களுக்கிடையில் காதலின் ஒரு வெளிப்பாடான ஊடலைத் தீர்க்க சிவனே வந்ததாகவும் தான் நன் படித்தேன் புதிய பெரிய புராணம் சொல்கிறீர்கள் தடுத்தாட்கொள்ளப்பட்டதாக நீவிர் சொல்லும் இறைவன் கூட சிவன் என்றும் முருகன் என்றும் கிருஸ்ணன் என்றும் பல்வேறு வடிவங்களில் மானுடர் மத்தியில் அவதாரங்கள் எடுத்ததாகவும் காதல் பண்ணியதாகவுமே புராணங்கள் கூறுகின்றன ஆதாமும் ஏவாளும் வெறுமனே அன்பு செலுத்தியிருந்தால் உலகின் மனித இனம் அவர்களுடனேயே முடிந்து போய்விட்டிருக்கும் நீங்கள் சொன்னமாதிரி காமத்தாலும் காதலாலும் மாசுற்ற அன்பை ஒருவர் மீது ஒருவர் காட்டியதாலேயே இன்று அவர்களின் சந்ததி மனிதமாக ஆக உயிரின் தோற்றப்பாட்டிற்கும் பரிணாமத்திற்கும் அவசியம் காதல் என்ன குருவிகாள் குழப்பமா?தூய அன்பை நாம் எவருமே உணரவில்லை என்று சொல்லிவிட்டு அடுத்தவரியிலேயே மாசு கலக்காத அன்பே போதும் மனிதம் வாழ்வதற்கு என்கிறீர்கள் அதேவேளை மகான்களிலேயே காதல் கலந்தபின் மனிதரில்...... என்றும் கேள்வியெழுப்புகிறீர்கள் ஆக மொத்தம் மாசுற்றதோ என்னவோ காதல் இன்றி யாருமே இல்லை என்பதை ஒப்புக் கொண்டுவிட்டீர்கள் நம் எவராலுமே உணரப்படாத தூய அன்பு தான் உண்மை என்று உமக்கு யார் சொன்னது முக்காலம் உணர்ந்த முனிவரே காதல் பண்ணினார் என்றால் உணரப்படாததை உண்மையென்றுரைக்கும் அறியாமையை என்னவென்பது சாதரண மனிதருள் செல்வாக்குச் செலுத்தும் காதல் அதாவது உணர்ச்சியுடனும் மனிதத்துவத்துடனும் கலந்துவிட்ட மனிதரால் உணரப்படக்கூடிய அன்பின் வடிவமே மனிதனுக்குப் போதும் தூய அன்பை உணரக்கூட முடியாத நிலையில் மனிதம் இருக்கும்போது அதை எதற்கு காதலே போதும் - nalayiny - 04-02-2004 அன்பு என்பது கடவுள்.முக்தி என்பது காதல் அத்தகைய உன்னத தெய்வீக காதல் கிடைக்காதவர்க்கு ஏது முக்தி. ?..! நீயே எனக்கான வரம். அது தான் முக்திநிலைக் காதல். காதல் இல்லாமல் வாழ்வதும் ஒரு வாழ்வா...?!!!!! :wink: :wink: :wink: |