![]() |
|
புகைப்பட ஆர்வலர்கள் நட்புவட்டம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: புகைப்பட ஆர்வலர்கள் நட்புவட்டம் (/showthread.php?tid=7094) |
- aathipan - 06-08-2004 <img src='http://www.silverlight.co.uk/tutorials/tutorial_graphics/camera.gif' border='0' alt='user posted image'> 1. Film winder. 2. Shutter Speed Dial. 3. Flash Hotshoe. 4. Focusing ring. 5. Film Rewind Crank. 6. Film Speed Dial. 7. Flash Synch Socket. 8. Lens. 9. Depth of Field Preview. 10. Self Timer/Exposure Lock. 11. Aperture Ring. 12. Shutter Release. - aathipan - 06-08-2004 மேலே இலக்கங்களால் குறிக்கப்;பட்ட பகுதிகளின் பயன்கள் 1 ஒவ்வோரு காட்சியை பதிவதற்கும் புகைப்படச்சுருளை நிரைப்படுத்தி தயாராக வைத்திருக்க உதவும் 2.ஒளிவிடும் நேரத்ததை தேவைக்கேற்ற மாற்ற உதவும் 3. புகைப்படக்கருவியுடன் வரும் விளக்கைப்பொருத்த உதவும் 4. காட்சியை தெளிவுபடுத்த உதவும் 5 புகைப்படச்சுருள் முழுவதும் படத்தியபின் அவற்றை திருப்பிசுற்ற உதவும் 6 புகைப்படச்சுருளில் இருக்கும் ஐஎஸ்ஓ இலக்கத்திற்கு எற்ப புகைப்படக்கருவியில் மாற்றம் செய்ய உதவும் 7. விளக்கை தேவையான போது எரியவைக்க உதவும் 8. குவிவு வில்லைக்கண்ணாடி. காட்சிகளை பெரிதாக சட்டத்தில் பதிய உதவும் 9 காட்சியை கூர்மையாக அவதானிக்க உதவும். 10. காட்சியை சட்டத்தினூடாக பார்த்து தெளிவுபடுத்தி அதே நிலையில் கோணத்தைமட்;டும் மாற்றி காட்சியைப்பதிய உதவும் 11 ஒளிவிடும் துளைகளை தேவைக்கேற்ப மாற்றஉதவும். 12. காட்சியைப்பதிய உதவும் பொத்தான். - aathipan - 06-09-2004 ஒளிவிடும்துளைகளை, ஒளி உள்விடும் நேரம் ஆகியவற்றை ஒவ்வோரு காட்சியை எடுக்கும் போதும் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். புகைப்படச்சுருளை ஒரு முறை தேர்ந்தெடுத்தால் அதை காட்சிக்குக்காட்சி மாற்றமுடியாது. ஓரு சுருள் முடியும் வரை அந்த சுருளையே பயன்படுத்தவேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த மாற்றக்கூடிய காரணிகளைச்சரியான சேர்க்கையில் பயன்படுத்துவதன்மூலம் நல்ல புகைப்படத்தைநீங்கள் எடுக்கமுடியும். அவற்றைப்பற்றி இன்னும் விரிவாகப்பார்ப்போம். சரியாகக்காட்சி அமைத்துப்புகைப்படம் எடுப்பது என்பது சரியான அளவில் வெளிச்சத்தை பயன்படுத்தி எடுக்கப்பதாகும். குறிப்பிட்ட அளவிற்க்கு மேலாக ஒளியை உள்ளேவிட்டு பதியப்படும் காட்சி வெளிறிக்காணப்படும். அதாவது வெளிச்சம் குறைவாகத்தெரியவேண்டிய பகுதிகள்கூட அளவுக்கதிகமான வெளிச்சமாக காணப்படும். தேவகை;கு குறைவா ஒளியை உள்விட்டு பதியப்படும் காட்சி இருளாகக்காணப்படும். அதாவது வெளிச்சமாகத்தெரியவேண்டிய காட்சிகூட இருளாகக்காணப்படும். இவற்றையே ஆங்கிலத்தில் முறையே under exposure, Over exposure என அழைப்போம். அளவுக்கதிகமான ஒளி உள்ளே செல்ல ஒளியை உள்விடும் நேரம் அதிகமா இருப்பதோ அல்லது ஒளிவிடு துளைகள் பெரிதாக இருப்பதோ காரணமாக அமையலாம். குறைந்த ஒளி உள்ளே செல்வதற்கு சிறிய ஒளிவிடும் நேரம் அதாவது வேகமாகக் கதவுகள் திறந்து மூடிவிடுவதோ அல்லது ஒளிவிடும் துளைகளின் அளவு மிகசிறியாதாக இருப்பதோ காரணமாக அமையலாம் சரியான அளவுகளைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் வெளிச்சமான பகுதியும் இருளான பகுதியும் சரியான வீதத்தில் காணப்படும். பொதுவாகப்பயன்படுத்தப்படடும் சரியான அளவு ஒளிவிடுதுளைகளின் அளவு f/11 ஒளி உள்விடும் நேரம் 1/250 ISO 100 <img src='http://www.joliuphotography.com/photo/headshot_portrait/004.gif' border='0' alt='user posted image'> - aathipan - 06-09-2004 சாதாரணமாக நாம் பார்க்கும் பொருட்கள் கூட புகைப்படத்தில் அழகாகக்காட்சிதரும். அதை எப்படி எடுக்கின்றோம் என்பது தான் அதன் அழகைமெருகூட்டுகிறது. <img src='http://www.levyphoto.com/pr14ph.gif' border='0' alt='user posted image'> - aathipan - 06-10-2004 நேற்றைய பாடத்தில் பார்த்தது போல <b>ஒளிவிடும் துளையை</b> மாற்றி ஒரு நிறுத்தத்திலும் <b>ஒளி உள்விடும் நேரத்ததை</b> மாற்றி ஒரு நிறுத்தத்திலும் காட்சியைப்பதிந்து கொள்ளலாம். உதாரணமாக ஒளிவிடும்துளையை சிறியதாகதேர்வுசெய்து ஒளிவிடும் நேரத்தை அதிகரிப்பதன்மூலமோ அல்லது ஒளிவிடும் துளையைப்பெரியதாக தேர்வுசெய்து ஒளிவிடும் நேரத்தைக்குறைத்து அதே காட்சியை எந்தக்குறைகளும் இன்றிப்பதிய முடியும். இதை ஒரு உதாரணம் மூலம் இலகுவாக விளக்கமுடியும். வாளி ஒன்றில் நீர் நிரப்பவேண்டும். தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் குழாயைப்பயன்படுத்தி நிரப்புகிறோம். சிறிய குழாயைப்பயன்படுத்தி அதிக நேரம் செலவு செய்து நிரப்பமுடியும். அல்லது பெரிய குழாயைப்பயன்படுத்தி சிறிது நேரம் செலவு செய்து நிரப்பிக்கொள்ளலாம். எப்படியிருந்தாலும் வாளி நிறையவேண்டும் என்பது தான் முக்கியம். புகைப்படம் எடுத்தலும் இதற்கு ஒப்பான செயல்தான். புகைப்படக்கருவியில் உள்ள ஒளிவிடும்துளைகளை பெரியதாகவோ சிறியதாகவோ தேர்வு செய்யமுடியும் அல்லவா இந்தத்துளைகள் நீர்நிரப்பும் குழாய்களுக்கு நிகராகசெயல்படுகின்றன. அதுபோல வாளியை நிரப்பப் பயன்படுத்தப்படும் நேரம் புகைப்படக்கருவியில் நாம் பயன்படுத்தும் ஒளியை உள்விடும் நேரத்திற்கு நிகரானது என எடுத்துக்கொள்ளலாம். புகைப்படக்கருவியில் நீருக்குப்பதிலாக ஒளியைக்கொண்டு நிரப்புகிறோம். எனவே நாங்கள் ஒளிவிடும் துளையை பெரியதாகதேர்ந்தெடுக்கமுடியும் ஆதற்கேற்ப ஒளி உள்விடும் நேரத்தை குறைத்து தேர்வுசெய்யவேண்டும். அதே போல ஒளிவிடும் துளையை சிறிதாக தேர்வு செய்தோமானால் ஒளிவிடும் நேரத்தை அதிகரிக்கவேண்டும். இதன்மூலம் ஒரேகாட்சியை எந்தவிதமான வித்தியாசமும் இன்றி வேறுபட்ட அளவுகளைப்பயன்படுத்தி பதியமுடியும். ISO ஒளிவிடும்துளை ஒளிஉள்விடும்நேரம் 100 f/4 1/2000 Also Correct 100 f/5.6 1/1000 Also Correct 100 f/8 1/500 Also Correct <b>100 f/11 1/250 </b> InitialCorrectValue 100 f/16 1/125 Also Correct 100 f/22 1/60 Also Correct 100 f/32 1/30 Also Correct [/b] - aathipan - 06-10-2004 புகைப்படம் எடுப்பதற்கு அழகான பொருள் எதுவும் எம்மைச்சுற்றி இல்லை என்று இலகுவாக நாம் சொல்லிவிட்டாலும். புகைப்படத்திற்கு அழகாகக்காட்சிதரக்கூடிய பொருட்கள் நிறையவே உண்டு. <img src='http://www.rmsp.com/gallery/largeImages/Inside-Boathouse.jpg' border='0' alt='user posted image'>[/flipv] - Chandravathanaa - 06-11-2004 ஆதிபன் நீங்கள் குறிப்பிட்ட. இது தற்போது யேர்மனியில் மாறியுள்ளது. துமிலன் எடுத்த இந்தப் புகைப்படம் இங்கு பெரிய வரவேற்பைப் பெற்றது. வேறு பத்திரிகைகளும் இதை வாங்கிப் பிரசுரித்தன. Photo-Thumi http://thumi.blogspot.com/2004/03/das-dase...l-hat-auch.html இதே போன்று எடுக்கப் பட்ட துமிலனின் வேறும் சில புகைப்படங்கள் பத்திரிகையின் முதற் பக்கத்துக்காகத் தெரிவு செய்யப் பட்டன. - Chandravathanaa - 06-11-2004 <img src='http://www.sir-henrys-villa.de/Links/Album_15/Kastanien_02.jpg' border='0' alt='user posted image'> Eelavan Wrote:இந்தப்பூக்கள் எமது நாட்டிலுள்ள கிளிசறியா(சீமைக் கிழுவை) பூக்கள் மாதிரியே இருக்கின்றன.சரிதானே சந்திரவதனா அக்கா? ஈழவன் இவ்வளவு பெரிதாக நானும் இந்தப் புகைப்படத்தில்தான் பார்த்தேன். உண்மையில் இது மிகச் சிறிய பூ. அதனால் கிளிசறியாப்புூ போன்றதுதானா என என்னால் உறுதிப் படுத்த முடியவில்லை. ஆனால் கிளிசறியாப் பூப்போன்று தொங்கும் பூ உள்ள ஒரு மரம் இங்கு இருக்கிறது. இலைகளும் கிட்டத்தட்ட கிளிசறியா இலை போலவே இருக்கும். எப்போதாவது என் கமராவுள் அகப்பட்டால் இங்கே தருகிறேன். - இளைஞன் - 06-11-2004 வணக்கம்... எங்கள் வீட்டின் வெளிச் சுவரில் இதே போன்று பூக்கள் அழகாகப் பூத்துள்ளன. ஆனால் அவற்றின் இலைகள் இதனிலும் மாறுபட்டது. ஆமாம் ஆதிபன்... சந்திரவதனா அக்கா குறிப்பிட்டது போல் ஜேர்மனியில் மட்டுமல்ல பொதுவாக எல்லா இடத்திலுமே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய உலகம் இப்படித்தான்: கிறுக்கினால் ஓவியம் உளறினால் கவிதை கசக்கினால் கைவேலைப்பாடு கத்தினால் பாட்டு சிதைத்தால் சிலை குதித்தால் நடனம் ...<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->நாம் படிக்கும் போது கற்றுக்கொள்ளும் விதிமுறைகள் படித்து வெளியே வந்ததும் முற்றிலும் மாறிவிடும். காலத்திற்குக் காலம் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இப்பொழுது இருக்கிற உலகத்தின் பார்வைக்கேற்றது போன்றே நாமும் படைப்புக்களை வெளிக்கொணரவேண்டிய தேவையுள்ளது. அப்போதுதான் படைப்பின் தேவை பூர்த்தியாகும். உதாரணத்திற்கு இப்படி இருந்தால் தான் கதாநாயகனாக அங்கீகரிக்கப்படுவார்கள் என்கின்ற நிலையிலிருந்த தென்னிந்தியத் தமிழ் சினிமாவில் இன்று ஒரு தனுஷ் உள்நுழையவில்லையா. எனவே கற்றுக்கொண்ட விதிமுறைகளைவிட காலத்திற்கேற்ற புதிய பயனுள்ள விதிமுறைகளை ஏற்படுத்திக்கொள்வது படைப்புக்களைப் பொறுத்தவரை பயனுள்ளதாக அமையும். - sOliyAn - 06-11-2004 ஏற்கெனவே ரஜனிகாந்த், விஜயகாந்த் போன்றவர்கள் நுழைந்த பிறகுதானே தனுஷ் நுழைந்தார்...?! நம்பாளைப்பற்றி இப்பிடி எல்லாம் பேசாதீங்கப்பா! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 06-11-2004 :roll: :roll: - aathipan - 06-11-2004 விதிமுறைகள் இருந்தாலும் அவற்றை கட்டாயமாக பின்பற்றவேண்டும் என்பதில்லை. உங்கள் விருப்பத்தி;ற்கு எற்ப விதிமுறைகளை மாற்றிக்கொள்ளலாம். கற்றுத்தேர்ந்தபின் விதிமுறைகள் மீறுவது நல்லது. உங்கள் புகைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். புதிய மாற்றமாக வரவேற்கப்படும். - aathipan - 06-11-2004 ஒரு காட்சியை பதிவுசெய்வதற்கு தீர்மானித்தபின்பு அந்தக்காட்சி எவ்வளவுதெளிவாக இருக்கவேண்டும் என விரும்புகிறீர்கள் என்பதும் முக்கியமாகும். சில புகைப்படங்களில் வேண்டிய பொருள் மட்டும் தெளிவாகவும் ஏனைய பகுதிகள் தெளிவற்றும் காணப்படும். இவ்வகையான புகைப்படங்களைப்பதிய ஒளி உள்விடும் நேரத்தை(shutterspeed) சரியாகப்பயன்படுத்தவேண்டும். கீழே உள்ள புகைப்படத்தில் சிறுமி தெளிவாகவும் பின்னால் தெரியும் மரங்கள் தெளிவற்றும் காணப்படுகின்றன. <img src='http://www.setzler.net/images/marilyn.jpg' border='0' alt='user posted image'> - aathipan - 06-11-2004 அதுமட்டுமன்றி ஒரு புகைப்படத்தில் எவ்வளவு இருள் தேவை என்பதையும் தீர்மானிக்கவேண்டும். இதை ஆங்கிலத்தில் Depth என அழைப்பார்கள். இந்த இருளே ஒரு புகைப்படத்தில் பதிவாகின்ற பொருளின் முப்பரிமானத்தை காட்டப்பயன்படுகிறது. ஒளிவிடும்துளைகள் சிறியவையாக தேர்ந்தெடுக்கப்பட்டுஇருப்பின்; இந்த இருளை அதிகமாகப்பெறமுடியும். ஒளிவிடும்துளைகள் பெரிதாக இருப்பின் வெளிச்சம் அதிகமாக உள்ளே சென்று இத்தகைய இருள் காணாமல்போய்விடும். புகைப்படத்தில் தெரியும் பொருட்களின் முப்பரிமானம் மறைந்து தட்டையாக காட்சிதரும். கீழே உள்ளபடத்தில் இத்தகைய இருள் சதுரங்கக்காய்களின் முப்பரிமானத்தை அழகாக காட்டப்பயன்பட்டுள்ளது. <img src='http://www.setzler.net/images/prints/BlackMagicWoman-ss.jpg' border='0' alt='user posted image'> - aathipan - 06-11-2004 புகைப்படத்தின் கருவிற்கு தேவையான பொருளைமட்டும் தெளிவாகக்காட்டி மற்றவற்றை தெளிவற்றதாகக்காட்டுவதும் புகைப்படநிபுணர்கள் பயன்படுத்தும் முக்கியமான தொழில்நுட்பமாகும். இதன் மூலம் பார்ப்பவர்கள் புகைப்படத்தில் என்ன சொல்லப்படுகிறது என்பதை இலகுவாக விளங்கிக்கொள்ளலாம். கீழே உள்ளபுகைப்படத்தில் வெள்ளைப்பந்து மட்டும் புகைப்படச்சட்டதினூடாகப்பார்த்து தெளிவு செய்யப்பட்டுள்ளது. காட்சியில் ஏனையவை தெளிவற்றதாக காட்டப்பட்டுள்ளது. இதற்காக ஒளிவிடும் துளைகள் f/3.2 ஒளி உள்விடும் நேரம் 1/25 ISO 100 பயன்படுத்ப்பட்டுள்ளது. <img src='http://images.dpchallenge.com/images_portfolio/18897/orig/68059.jpg' border='0' alt='user posted image'> - aathipan - 06-11-2004 காட்சியில் அனைத்து பகுதிகளும் தெளிவாக வேண்டுமெனில் ஒளிவிடும்துளைகள் சிறியதாக தேர்வுசெய்யது அதன்மூலம் கிடைக்கும் இருளைபயன்படுத்தி தெளிவான தோற்றத்தைக் காட்டமுடியும். கீழே உள்ள படத்தில் ஒளிவிடும்துளைகள் அளவு f/8 ஓளி உள்விடும் நேரத்தின் அளவு 1/125sec பயன்படுத்தப்பட்டுள்ளது. <img src='http://images.dpchallenge.com/images_portfolio/22127/medium/80128.jpg' border='0' alt='user posted image'> - இளைஞன் - 06-12-2004 aathipan Wrote:விதிமுறைகள் இருந்தாலும் அவற்றை கட்டாயமாக பின்பற்றவேண்டும் என்பதில்லை. உங்கள் விருப்பத்தி;ற்கு எற்ப விதிமுறைகளை மாற்றிக்கொள்ளலாம். கற்றுத்தேர்ந்தபின் விதிமுறைகள் மீறுவது நல்லது. உங்கள் புகைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். புதிய மாற்றமாக வரவேற்கப்படும். நிச்சயமாக. கற்கும்போது விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமே அதன் நுணுக்கங்களை அறிந்துகொண்டு கற்றத்தேர்ந்தபின் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தமுடியும். இது இந்தத் துறையில் மட்டுமல்ல. கவிதையில்கூட "நாங்கள் மரபுகளை எல்லாம் உடைத்தெறிந்துவிட்டோம்" என்பதற்கு முன்னால் மரபுகள் பற்றி அறிந்திருக்கவேண்டும். தொடருங்கள் ஆதிபன். நீங்கள் எழுதுவதில் இருந்து நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ளமுடிகிறது. - aathipan - 06-12-2004 புகைப்படக்கருவியில் ஒளியை உள்விடுவதற்காக கதவு ஒன்று வேகமாக திறந்து மூடுகிறது என்பதை அறிந்து இருப்பீர்கள். இந்தக்கதவு வழியாகத்தான் வெளிச்சம் உள்ளேவந்து புகைப்படசுருளில் காட்சியாகப் பதிவாகிறது. இந்த கதவிற்கு சற்று முன் ஒளிவிடும் துளைகள் உண்டு இந்தத்துளைகளை நாம் மாற்றிக்கொள்ளலாம் எனபதும் தெரிந்ததே. பகல் வேளையில் புகைப்படம் எடுக்கும் போது ஒளிவிடும் நேரத்தை நாம் சிறியதாக அதாவது கதவு வேகமாக திறந்து மூடும்படி வைத்துக்கொள்வோம். ஆனால் மாலையிலோ அல்லது கட்டடத்;திற்கு உள்ளேயோ புகைப்படம் எடுக்கும் போதுஒளிவிடும் நேரத்தை அதிகரிக்கவேண்டி நேரிடுகிறது. அல்லது ஒளிவிடும் துளைகளை பெரிதாக தேர்வு செய்யவேண்டி இருக்கிறது. ஒளிவிடும் நேரத்தை அதிகரிக்கும் போது ஒரு சிறு தீமை ஏற்படுகிறது. பயந்துவிடவேண்டாம் பெரிதாகஒள்றும் இல்லை. கைகளால் புகைப்படக்கருவியை பிடித்து பொத்தானை அழுத்தி காட்சியைப்பதியும் போது அறியாமலேயே புகைப்படக்கருவி அசைய வாய்பாகிவிடுகிறது. இதனால் புகைப்படம் தெளிவற்றதாகிவிடுகிறது. ஆகவே ஒளிஉள்விடும் நேரம் அதிகரிக்கவேண்டி இருப்பின் புகைப்படக்கருவி நிறுத்தியைப்பயன்படுத்துவது நல்லது. எவ்வளவு தான் அசையாது நின்று புகைப்படம் எடுத்தாலும் பொத்தானை அழுத்தும் போது சிறிதாகிலும் அசைய வாய்ப்புள்ளது. எது எப்படியோ நீங்கள் புகைப்படக்கருவியைப் பிடிப்பதும் மிக முக்கியமானதொன்றாகும். அருகில் சாய்ந்துகொள்ள ஏதும் இருந்தால் சாய்துகொள்வது நல்லது. 1/60sec மற்றும் அதற்கு மேல் ஒளிவிடும் நேர்த்தை அதிகரிக்க வேண்டியிருப்பின் தெளிவான காட்சி;க்கு புகைப்படக்கருவி நிறுத்தி நல்ல பலன் தரும் கீழே உள்ள புகைப்படக்கருவியை எவ்வாறு பிடிப்பது என்பதைக்காட்டுகிறது. தெளிவாக காட்சியைப்பதிய இ;ம்முறையைபின்பற்றுவது நல்லது. <img src='http://www.mir.com.my/rb/photography/hardwares/manuals/nikonf/nikonfmanual/jpg/17.jpg' border='0' alt='user posted image'> கீழே உள்ள புகைப்படத்தில் புகைப்படநிறுத்தியில் புகைப்படக்கருவியைப்பொருத்தி காட்சியைப்படமாக்குதல் காட்டப்பட்டுள்ளது <img src='http://www.tcnet.net/unknownpic/photographer.jpg' border='0' alt='user posted image'> - aathipan - 06-12-2004 பொதுவாக அசையும் பொருட்களை குறுகிய ஒளிவிடும் நேரத்தில் காட்சியாகப்பதிவது வழக்கம். உதாரணமாக விளையாட்டுப்போட்டி, நடனநிகழ்ச்சி, மோட்டார்க்கார்ப்பந்தயம் போன்றவை. அவ்வாறு செய்யாது ஒளிவிடும் நேரத்ததை அதிகரிப்போமானால் அசையும் பொருட்கள் தெளிவற்று பதிவாகும். ஆனாலும் அது கூட அழகாகவே இருக்கும். புகைப்படநிறுத்தியில் புகைப்படக்கருவியைபொருத்தினாலும் இந்த தெளிவற்ற தன்மையைப்போக்கமுடியாது ஏன் எனில் இங்கே அசைவது புகைப்படக்கருவியல்ல காட்சியில்வரும் பொருள். கீழே உள்ள புகைப்படத்தில் கார் (அசையும் பொருள் )தெளிவற்று பதிவாகி உள்ளது. <img src='http://www.camcycle.org.uk/newsletters/26/images/Speed2.JPG' border='0' alt='user posted image'> - Mathivathanan - 06-12-2004 aathipan Wrote:கீழே உள்ள புகைப்படத்தில் சிறுமி தெளிவாகவும் பின்னால் தெரியும் மரங்கள் தெளிவற்றும் காணப்படுகின்றன. aathipan Wrote:கீழே உள்ள புகைப்படத்தில் கார் (அசையும் பொருள் )தெளிவற்று பதிவாகி உள்ளது.தெளிவு தெளிவில்லை எண்டு ஏதேதோ சொல்லுறியள்.. எனக்குப் பார்க்க மரங்களும் சரி பிள்ளையும் சரி தெளிவில்லாமலத்தான் தெரியிது.. கார் மிகத் தெளிவா தெரியிது.. வேகத்தாலை இழுபட்ட மாதிரி தெரியேல்லை. எனது அபிப்பிராயத்தை சொன்னன் சண்டைக்கு வந்திடாதேங்கோ.. :?: :!:
|