![]() |
|
அம்பலமாகின்றது இன்னுமொரு சதி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: அம்பலமாகின்றது இன்னுமொரு சதி (/showthread.php?tid=7011) |
- kavithan - 06-29-2004 அது ஊரிலை... பாருங்க வல்லையண்ணையை பனங்கள்ளும், பனங்கட்டியும், கருப்பணியும், புளுக்கொடியலும், ஒடியல் கூழும், எண்டு அடிச்சு சாப்பிட்ட ஆள் அடிச்சு சொல்லிறார் தான் இன்னும் இருபது வருசம் இருப்பன் எண்டு. நான் அப்படியா பாணும், சிக்கிணும், சான்விச்சும், சாப்பிடாமலும், இருக்கையுக்கை இண்டைக்கோ, நாளைக்கோ தானே.... ஆர் கண்டது.... - tamilini - 06-29-2004 மறக்க முடியலையோ........... - kavithan - 06-29-2004 அப்படித்தானே வாழ்க்கையே ஓடிக்கொண்டிருக்கு பேந்தென்னண்டு மறக்கிறது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Eelavan - 06-30-2004 கவிதன் யாரை மறக்க முடியவில்லை - kavithan - 06-30-2004 அச்சச்சோ கடிக்கிறியளே.... அது யாரை இல்லை..... எதை? :?: எவற்றை? :?: - Eelavan - 06-30-2004 கவி சின்னனிலை இருக்கும்போது என்ன நடந்ததென்று சொல்லுங்கள் ஓடித்தப்பப் பார்க்கிறீர்கள் - Paranee - 06-30-2004 இப்ப நீங்கள் பெரிசாகிட்டீங்களா கவி - kavithan - 07-01-2004 ஞாபகங்கள் ஏதோ ஞாபகங்கள் என் மனதை சுற்றி வர.. ஏன் என்ற கேள்விகள் அடுக்கடுக்காய் என்னை சுற்றி நிற்கும். எப்படித்தான் பதில் சொல்வேன் இவைகளுக்கு.....! ஏலுமட்டும் சொல்கின்றேன் கேளுங்கள். எமது ஊர், நாடு எமது கல்வி, கலாச்சாரம் எமது உணவுப் பழக்க வழக்கங்கள் எமது அன்னை, தந்தை, சகோதரங்கள் எமது உறவுகள், நண்பர்கள் எமது அன்றைய குறும்புகள்,சுட்டி தனங்கள் எமக்கு நடந்த கொடூரங்கள், கொடுமைகள், பிரிவுகள் என எத்தனை எத்தனை நினைவுகள் எண்ண முடியுமா எழுதமுடியுமா எல்லாவற்றையும் ஏலுமானால் நீங்களும் நினைத்துப் பாருங்கள் அப் பசுமையான நினைவுகளை. அவற்றைத் தான் நான் மறக்கமுடியவில்லை என்றேன். ஓடித் தப்புவதற்காய் சோழியன் அண்ணாவின் படத்தைப் போட்டேன் முதல் கருத்தில். அவர் கருத்தையும் கொண்டு ஓடி விட்டார். என்ன செய்ய. அறிவிலோ வயதிலோ எல்லாவற்றிலும் சின்னவன் தான் இவன், பழையது எண்டது எனது வயதை ஒரு இலக்கத்திலை எழுதேக்கையும், நான் தமிழீழத்திலை இருக்கேக்கையும். இப்ப அது இரண்டு இலக்கம் சேர்த்து எழுதக்கூடியதாய் வந்து கொஞ்ச வருசம் . என்றாலும் எல்லாவற்றிலும் சிறியவன் தான் பரணியண்ணா. ஒரு நாளும் பெரியவனாக நினைப்பதில்லை நான். நன்றி - kavithan - 07-01-2004 சண்முகி எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார் பாருங்கள்......அவருடைய நினைவுகளை..... <b>ஞாபகங்கள்.... </b> மனம் என்றொன்று இருப்பதால் ஞாபகங்கள் அங்கே சங்கமம் வெள்ளையாய் உடை கண்டால் பள்ளி சென்ற தோழிகளுடன் அள்ளிச் சென்ற புத்தகங்களுக்குள் சுமந்து சென்ற ஞாபகங்கள்... பட்டாடையுடுத்தி பட்டாம் புூச்சியாய் வட்டமடிக்கும் திருவிழாக் காலமதில் கடலை வாங்கி உண்ட கடந்து போன ஞாபகங்கள்.... மண் மணக்கும் மழைத்துளிகளினுடே மனை நோக்கி வருகையில் அன்னையவளின் தாளித்த சமையலில் வாசனையாய் போன ஞாபகங்கள்... வயதுக்கு வந்த போது புதுப்புது மாற்றங்களுடே.. முதன் முதலாய் புதுச் சேலையின் தழுவலில் அனுபவமாகிப் போன ஞாபகங்கள்.... பருவ வயதில் பருவமான போதே உருவமாய் உள்ளத்தில் உறைந்துபோன முதற்காதலின் ஸ்பரிசங்கள் ரணங்களாகிப்போன ஞாபகங்கள்.... http://shanmuhi.yarl.net/archives/000671.html |