Yarl Forum
சினேகா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: சினேகா (/showthread.php?tid=5407)

Pages: 1 2 3 4 5 6 7 8 9


- Mathan - 02-25-2005

ஸ்னேகாவின் சின்ன கவலை

<img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/sneha-550.jpg' border='0' alt='user posted image'>

"எழிலை" எடுப்பாக்க ஸ்னேகா சில அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளாராம்.

ஸ்னேகாவிடம் பல பிளஸ் பாயிண்டுகள் உண்டு. லாலிபாப் முகம், அதே நேரத்தில் வாலிப்பான தேகம். கூடவே கொள்ளையடிக்கும் சிரிப்பு. எல்லாம் சேர்ந்த இந்த அழகிய ராட்சசிக்கு சமீப காலமாக சின்னக் கவலை.

நீங்கள் பயப்படுவது போல ஒன்றுமில்லை, கொஞ்சம் உடம் போட்டுவிட்டதாக ஸ்னேகாவுக்குள் வருத்தம்.

இடுப்பைச் சுற்றி டயர்கள் உருவாவதற்கான ஆரம்ப அறிகுறியும், ஜோதிகா கிரண் போன்றவர்களுக்கு போட்டியான தொப்பையும் வைக்க ஆரம்பித்துவிட்டதால், உடனே உடலை ஸ்லிம்மாக்குமாறு ஸ்னேகாவுக்கு ஸ்னேகமானவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்களாம்.

ஒரு காலத்தில் கே.ஆர்.விஜயாக்கள் போன்ற மெகா சைஸ் மாமிகள் ஆட்சி நடத்திய தமிழ் சினிமாவில் சிம்ரனின் வரவுக்குப் பின் சிக் உருவங்களுக்கு தனி மவுசு வந்துவிட்டது.

ஸ்னேகாவுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?. சமீபத்தில் ஆயுதம் படத்தில் தனது தொப்பை தன்னை விட்டுவிட்டு பிரஷாந்துடன் தனியே டான்ஸ் ஆடியதைப் பார்த்து வெறுத்துப் போய்விட்டாராம் ஸ்னேகா.

சரவண சுப்பையா இயக்கத்தில் ஏபிசிடி என்ற படத்திலும் ஸ்னேகா நடிக்கிறார். இதில் ஸ்னேகா தவிர அபர்ணா, நந்தனா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இருவரும் ஸ்னேகாவைவிட ரொம்பவே வயது குறைந்தவர்கள்.

ஆனாலும் அவர்களைத் தூக்கி அடிக்கும் வகையில் தனது தோற்றம் இருக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார் ஸ்னேகா. இதனால் தொப்பைக்கு குட்பை சொல்ல நேரம் கிடைக்கும்போதெல்லாம் டிரட் மில்லில் நேரத்தை செலவிடுகிறார்,

கூடவே நடிகைகளுக்கே உரிய சில இத்யாதி சமாச்சாரங்களுக்கும் "பில்ட்அப்" கொடுக்க முடிவு செய்ள்ளாராம். இதற்காக சில சமாச்சாரங்களை வெளிநாட்டிலிருந்து வரவழைத்துள்ளார் என்கின்றன கோடம்பாக்கம் குருவிகள்.

அந்த "சமாச்சாரங்களுடன்" ஏபிசிடி மற்றும் அர்ஜூனுடன் சின்னா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதன் முலம் தனக்கும் "எடுப்பான" நாயகிகளின் வரிசையில் இடம் கிடைக்கும் என்று நம்புகிறார் ஸ்னேகா.

இதுவரை அடக்கமமாய், புன்னகையுமாக வந்து கொண்டிருந்த ஸ்னேகா இனி வரும் படங்களில் கவர்ச்சி அவதாரம் எடுக்கவும் முடிவு செய்துவிட்டார். இல்லாவிட்டால் மும்பை, தெலுங்கு வரவுகள் தன்னை ரொம்ப சீக்கிரத்திலேயே கல்யாணம் குட்டி என்று வாழ்க்கையில் செட்டிலாக்கிவிடுவார்கள் என்று கருதுகிறார் ஸ்னேகா.

thatstamil


- tamilini - 02-25-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Malalai - 02-25-2005

சினேகாவுக்கு வந்த சோதனை.... :mrgreen:


- sayanthan - 02-25-2005

திரிஷாடை தோழிகள் சிட்னியில் இருக்கிறார்களாம். கடந்த யூன் மாசம் இங்கை வந்தாவாம். நானும் அதை குமுதத்திலேயோ விகடனிலையோ படிச்சன்! அடுத்த யூன் கொஞ்சம் அலேட் ஆக இருக்க வேணும்! என்ன செய்ய சிட்னிக்கு போட்டுவரவே பிளேனுக்கு 250 டொலர்! ட்ரெயினுக்கு அதை விட கூடவாம்!!!!

ஏன் த்ரிஷா மெல்பேண் வரக்கூடாது? மெல்பேண் மலர் போல் மெல்லிய மகளா எண்டும் பாட்டு ஒண்டு இருக்கெண்டு நினைக்கிறன்.


- shiyam - 02-25-2005

<!--QuoteBegin-sayanthan+-->QUOTE(sayanthan)<!--QuoteEBegin-->திரிஷாடை தோழிகள் சிட்னியில் இருக்கிறார்களாம். கடந்த யூன் மாசம் இங்கை வந்தாவாம். நானும் அதை குமுதத்திலேயோ விகடனிலையோ படிச்சன்! அடுத்த யூன் கொஞ்சம் அலேட் ஆக இருக்க வேணும்! என்ன செய்ய சிட்னிக்கு போட்டுவரவே பிளேனுக்கு 250 டொலர்! ட்ரெயினுக்கு அதை விட கூடவாம்!!!!  

ஏன் த்ரிஷா மெல்பேண் வரக்கூடாது? மெல்பேண் மலர் போல் மெல்லிய மகளா எண்டும் பாட்டு ஒண்டு இருக்கெண்டு நினைக்கிறன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->சயந்தன் மெதுவாக அனால் உறுதியாக <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 02-25-2005

<!--QuoteBegin-sayanthan+-->QUOTE(sayanthan)<!--QuoteEBegin--> சிட்னிக்கு போட்டுவரவே பிளேனுக்கு 250 டொலர்! ட்ரெயினுக்கு அதை விட கூடவாம்!!!!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஏன் நீங்க Qantas Airways எடுக்குறீங்க? Virgin Blue போல ஏதாவது ஒரு budget airline எடுக்கலாமே? முன்னாடியே புக் பண்ணினால் மலிவாக கிடைக்குமே?


- kavithan - 02-25-2005

<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-sayanthan+--><div class='quotetop'>QUOTE(sayanthan)<!--QuoteEBegin--> சிட்னிக்கு போட்டுவரவே பிளேனுக்கு 250 டொலர்! ட்ரெயினுக்கு அதை விட கூடவாம்!!!!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஏன் நீங்க Qantas Airways எடுக்குறீங்க? Virgin Blue போல ஏதாவது ஒரு budget airline எடுக்கலாமே? முன்னாடியே புக் பண்ணினால் மலிவாக கிடைக்குமே?<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

ஆ..ஜடியா... Idea <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 03-05-2005

"அந்த" உணர்ச்சி இன்னும் வரலை: ஸ்னேகா

<img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/snea450.jpg' border='0' alt='user posted image'>

ஸ்னேகாவைப் போல ஒரு கமுக்கமான ஆளைப் பார்க்கவே முடியாது.

ஸ்ரீகாந்த்துடன் சேர்த்து எத்தனையோ செய்திகள் வந்து விட்டாலும் இன்னும் கூட சிரித்துக் கொண்டே அதை மழுப்புவதில் அவருக்கு நிகர் அவரே தான்.

சமீபத்தில் சென்னையில் ஒரு சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் ஸ்னேகாவும், ஸ்ரீகாந்த்தும் கலந்து கொண்டனர். மற்றவர்களைப் போல அல்லாமல் எக்ஸ்ட்ரா சிரிப்பு, எக்ஸ்ட்ரா உற்சாகத்துடன் இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

நம்ம நிருபர்களும் வழக்கம் போல அவர்களை ஓரங்கட்டி, "ரெண்டு பேரும் காதலிக்கிறீர்களா'? என்ற பழைய கேள்வியையே புதிய எதிர்பார்ப்புடன் கேட்டனர்.

அதற்கு இருவருமே ஒரு வெடிச் சிரிப்பை உதிர்த்து விட்டு வழக்கம் போல மழுப்பினர். அதாவது, நாங்கள் ரெண்டு பேருமே நல்ல நண்பர்கள். எனக்கு நிறைய நடிகைகள் தோழிகளாக உள்ளனர்.

எனக்கு நடிகைகள் மட்டுமல்லாது நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், கேமரமேன்கள் என பல தரப்பினரும் நல்ல நண்பர்களாக உள்ளனர்.

எனக்கு ஒருவரைப் பிடித்து விட்டால் அவரிடம் நெருங்கிய நட்பு வைத்துக் கொள்வேன். கடைசி வரை அந்த நட்பு நீடிக்க வேண்டும் என்றும் விரும்புவேன். அதேபோலத்தான் ஸ்னேகாவிட¬மும் வைத்துள்ளேன்.

அதில் ஒரு தவறும் இல்லை. நாங்க நல்ல பிரண்ட்ஸ் என்பது திரையுலகினருக்கு நன்றாகவேத் தெரியும். வேறு ஒன்றும் எங்களுக்குள் இல்லை என்றார் ஸ்ரீகாந்த்.

ஸ்னேகா அதற்கு மேல்! நட்புக்கும், காதலுக்கும் ரொம்ப பெரிய வித்தியாசம் இருக்கு சார். என்னைப் பொருத்தவரை காதல் என்பது ஒரு உணர்வு. அது தானாக வர வேண்டும்.

எல்லோரும் சேர்த்து வைத்துப் பேசினால் அது வந்து விடாது. என்னைப் பொருத்தவரை இதுவரை அந்த உணர்ச்சி வரவில்லை. அது வரும்போது பார்க்கலாம்.

இப்போதைக்கு அப்பா, அம்மாவுக்குக் கட்டுப்பட்ட நல்ல பொண்ணு நான். அவர்கள் கையைக் காட்டும் நபரைத் தான் கண்டிப்பாக திருமணம் செய்வேன்.

ஒருவேளை காதல் ஏதாவது ஏற்பட்டால், அப்போதும் அம்மா, அப்பா சம்மதத்துடன்தான் கல்யாணம் செய்வேன். எனக்குக் கல்யாணம் நடக்கும்போது உங்களையெல்லாம் நிச்சயம் கூப்பிடுவேன், கவலையே படாதீர்கள் என்று கூறி விட்டு ஸ்ரீகாந்த்துடன் "கடலை"யைத் தொடர்ந்தார்.

எங்ஙன போயி ¬முட்டிக்கிறதுன்னு தெரியலையே!

thats tamil


- kavithan - 03-05-2005

எங்க தமிழினி அக்காவின் டயொலொக்கா இருக்கு.... யாழ்களத்துக்கு வந்திருப்பா போலை அவாவும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- KULAKADDAN - 03-05-2005

வந்திருப்பா......
ஆமா அப்ப இப்பவும்.........யாரும் முயற்சிக்கலாம்.....காலம் பொகேல்ல...... Idea


- Mathan - 03-07-2005

'நானும் அவரும் பிரிஞ்சுட்டோம்...' மனம் திறந்த சினேகா

<img src='http://cinesouth.com/images/new/05032005-THN13image1.jpg' border='0' alt='user posted image'>

தலைப்பை பார்த்துவிட்டு ஆஹா... சினேகா மறைத்த முழு பூசணிக்காய் வெளியே தெரிந்துவிட்டது என இஷ்டத்துக்கு கற்பனை செய்யாமல் முழு மேட்டரையும் படிங்க.

கவர்ச்சி காட்டிட்டா கண்ணா பின்னான்னு வாய்ப்புகள் வண்டிகட்டிட்டு வரும் என்னும் எண்ணத்தில் 'ஆயுதம்' உள்ளிட்ட படங்களில் கொஞ்சம் தன் கொள்கையை அட்ஜஸ்ட் செய்துகொண்டு நடித்த பிறகும் சினேகாவிற்கு பெருசாக வாய்ப்புகள் எதுவும் இல்லை.

'சின்னா' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அவரிடம் என்ன மேடம் எப்படி இருந்த நீங்க இப்படி ஆகிட்டீங்களே என கேள்வி குண்டை தூக்கியெறிந்தபோது, "கவர்ச்சி காட்டி நடித்ததைதானே சொல்றீங்க. பாடல் காட்சிகளில் கமர்ஷியல் டச் இருக்கணும். அது அவசியமும்கூட. எனவேதான் 'ஆயுதத்'தில் அப்படி நடித்தேன் மற்றபடி அப்பவும் சொன்னேன்; இப்பவும் சொல்றேன்; எப்பவும் சொல்வேன் ஓவர் கிளாமருக்கு நான் ஒத்துக்கமாட்டேன்" என்று ஒரே போடாக போட்டார்.

காதல் அது இதுன்னு செய்தி வந்ததே என்னாச்சு....? "மூணு படத்துல நாங்க இருவரும் சேர்ந்து நடிச்சதுனால வந்த கிசுகிசுக்கள் அது. நாங்க இப்ப இணைந்து நடிக்கல, அவரும் நானும் பிரிஞ்சு நடிக்கிறோம். ஸோ இனி கிசுகிசு வராதுன்னு நம்புறேன்" என்ற சினேகா, அவர் என்று எவரை சொன்னார் என்பது உங்களுக்கு தெரியாதா என்ன!?

சினி சவுத்


- tamilini - 03-07-2005

Quote:எங்க தமிழினி அக்காவின் டயொலொக்கா இருக்கு.... யாழ்களத்துக்கு வந்திருப்பா போலை அவாவும்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 03-07-2005

tamilini Wrote:
Quote:எங்க தமிழினி அக்காவின் டயொலொக்கா இருக்கு.... யாழ்களத்துக்கு வந்திருப்பா போலை அவாவும்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அதுதாங்க பெண்கள் டயலாக்கே...! தமிழினி என்ன சிநேகா என்ன எல்லாம் ஒரே மந்தையில மேய்ஞ்ச ஆடுகள் தான்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 03-07-2005

இதை ஆண்கள் புரிஞ்சு கொள்ள இத்தனை தாமதமா..?? :wink:


- kuruvikal - 03-07-2005

குருவிகளுக்கு குஞ்சா இருக்கேக்கையே உதுகள் புரிஞ்சிட்டுது...என்ன பாவம் மானுடப் பசங்க...புரிஞ்சுக்குறாங்க...இல்ல...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 03-07-2005

ம் அத்தனை அனுபங்கள்.. குருவி புரிஞ்சிட்டுது.. குஞ்சில புரிஞ்சது என்றால்.. வெம்பிபழுத்திட்டோ..?? Idea


- kuruvikal - 03-07-2005

tamilini Wrote:ம் அத்தனை அனுபங்கள்.. குருவி புரிஞ்சிட்டுது.. குஞ்சில புரிஞ்சது என்றால்.. வெம்பிபழுத்திட்டோ..?? Idea

வெம்பில் இல்லேங்க...அவதானிச்சு தெளிச்சது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 03-07-2005

நீங்கள் தான் .. சொல்லிக்கணும்.. :wink:


- KULAKADDAN - 03-09-2005

மல்லிகைப்பூ சினேகா!

அன்றைய ஷட்டிங் முடிந்து விட்டது. விட்டது.

‘‘சரி, அப்போ நான் கிளம்பறேன். நாளைக்கும் இதே ஸீனோட தொடர்ச்சிதானே... வழக்கம்போல நானே மல்லிகைப் பூ வாங்கித் தலையில வெச்சிட்டு வந்துடறேன்!’’ என்றார் சினேகா.

சினேகாவின் போக்கு புரொடக்ஷன் மேனேஜருக்குப் புரியவில்லை. அதென்ன, மல்லிகைப் பூ மீது மட்டும் சினேகாவுக்கு அவ்வளவு அக்கறை... ஆர்வம்!

அடுத்த நாள், சினேகா வீட்டுக்குப் போய்விட்டார் புரொடக்ஷன் மேனேஜர்.

கொஞ்ச நேரத்தில் ஒரு சின்னப் பெண் பூக்கூடையோடு வந்தாள். அவளிடம் நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு, பூவை வாங்கித் தலையில் வைத்துக்கொண்டு, சினேகா சொன்னார்...

‘‘அந்தப் பொண்ணு பத்தாவது படிக்கிறா சார்! ஸ்கூல் பீஸ் கட்டணும்னு ஒருநாள் வந்தா. பணம் கொடுத்தேன். ஆனா, ‘உழைக்காமல் காசு வாங்கறது தப்பு. தினமும் என்கிட்டே பூ வாங்கிக்கோங்க’னு சொன்னா. எனக்கும் தொடர்ந்து உங்க ஷ¨ட்டிங்கில் தினமும் பூ வெச்சுக்கிட்டு வர்ற மாதிரி கேரக்டர்தானே... அதான், நீங்க வாங்கற பூவை நானே வாங்கி, இந்தப் பொண்ணுக்கு உதவறதா முடிவு செய்தேன்!’’

புரொடக்ஷன் மேனேஜர் பார்வையில் விஸ்வரூபம் எடுத்து நின்றார் சினேகா

எம்.எஸ்.தீபன்


- KULAKADDAN - 03-09-2005

சினேக விஸ்வருபம் எடுக்கிறாரோ இல்லயோ ; எடுக்க வைத்து விடுவார்கள்......