Yarl Forum
என்ன படிக்கிறீர்கள் / என்ன துறையில் வேலை செய்கிறீர்கள்? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: என்ன படிக்கிறீர்கள் / என்ன துறையில் வேலை செய்கிறீர்கள்? (/showthread.php?tid=4792)

Pages: 1 2 3 4 5 6 7 8


- Mathan - 03-15-2005

thamizh.nila Wrote:இப்ப என்ன கேள்வி என்றால், நாங்கள் அனைவரும் வேறு வேறு படிக்கிறம், ஆகாவே எப்படி எல்லாவற்றையும் இங்கு எழுத முடியுமா? அப்படியே எழுதுவதாயினும், எதை எழுதுவது...இப்படியான வற்றை பேசினால் பிரயோசனம் இருக்கும்..சரியா அண்ணா?

நீங்கள் Computing & Information System மற்றும் Business & Retail Management படிப்பதாக சொல்லி இருந்தீர்கள், அந்த துறை என்றால் என்ன? அதனை படிக்க எப்படி தயார் செய்வ்து? ஏன் இந்த துறையை தேர்வு செய்தீர்கள்? இந்த கல்வியை படித்தபின் என்ன மாதிரியான வேலை செய்யலாம்? என்பதை சொல்லுங்களேன். இது போல மற்றவர்களும் சொல்லலாம்.


- thamizh.nila - 03-16-2005

பேச்சா...உங்களுக்கு இருட்டடிதான் கிடைக்கும் போல கிடக்கு.... ரயிலை வேறு தண்டவாளத்திற்கு மாற்றா வேண்டாம் என தாழ்மையுடம் வேண்டி கொள்கிறோம்.


- shiyam - 03-16-2005

தமிழ் நிலா கோவிக்க போகுது படிப்பற்கே வருவம் நான் மானிப்பாய் இந்து கல்லுரியில் 10 வரை படித்தனான் அதுக்கு மேலை படிச்சா புத்தி கூடிடும் எண்டு விட்டிட்டன் யாருக்கும் ஏதும் சந்தேகமிருந்தா தயவு செய்து என்னை கோட்காதையுங்கோ பிறகு நான்<img src='http://img125.exs.cx/img125/2001/49711nx.gif' border='0' alt='user posted image'>


- KULAKADDAN - 03-16-2005

[quote=thamizh.nila]பேச்சா...உங்களுக்கு இருட்டடிதான் கிடைக்கும் போல கிடக்கு.... ரயிலை வேறு தண்டவாளத்திற்கு மாற்றா வேண்டாம் என தாழ்மையுடம்
உங்க வேண்டுகோழுக்கிணங்க.....
நாம கா போ த உ/த படிச்சிருக்கம்.


- Thusi - 03-16-2005

நானும் க.பொ.த. உயர்தரம் தான். உயிரியல் பிரிவு. ஆனால் இறுதிப்பரீட்சை எடுக்கவில்லை.


- thamizh.nila - 03-17-2005

ஆகா இங்க நிறைய குத்து வெட்டு நடந்திருக்கு போல. சரி நான் முதலில் எழுதுகிறேன். தமிழாக்கம் செய்வதில் தான் பிரச்சனை...தப்பாக இருப்பின் மன்னிக்க வேண்டும்.

இடைவேளை


- kavithan - 03-17-2005

எழுதுங்கோ... Arrow Arrow Arrow :|


- shobana - 03-18-2005

வணக்கம் இங்கு நிறைய புத்தியீவிகள் உலாவும் இடம் என நினைக்கிறன்... அப்ப நாங்கள் இங்கு கருத்து எப்படி எழுதுவது என நினைத்துத்தான் எழுதாமல் விட்டுவிட்டேன் இப்போது இளைஞள் அண்ணாவின் வேண்டுகோளுக்கு இணங்க தான் இங்கு எழுத வந்தேன் வாசித்துப்போட்டு நிறைய கேள்வி கேட்டுப்போடாதீங்கோ அதுக்கு பதில் கூற எனக்கு நிறைய நேரம் இருக்காது என்றாலும் பதில் கூற முயற்சிக்கிறேன்

இலங்கையில் படிச்சது கா.போ.உ.தரம் பல்களைக்கழகத்துக்கு போக உள்ளவிடமாட்டோம் என்றுபோட்டினம் (எப்பிடி விடுவினம் 13வயதில் கா.போ.(சா.தரம்) எடுத்து கா.போ (உதரம்) படிச்சால் அதனால நம்மளுக்கு இனி இலங்கை சரிவராது என்று அப்பவே புரிஞ்சு போச்சு.. ஐரோப்பா வந்தேன் ஆரம்பத்தில் மொழி ஒரு பெரிய பிரச்சினையாக இருந்திச்சு... அதுக்குப்பிறகு கணனி தான் படிச்சன்..
இப்போது ஒரு நிறுவனத்தில் கொஞ்ச நாளா குப்பை கொட்டுறன் (அச்சச்சோ தப்பா நினைப்பாதீங்கோ இந்த சின்னப்பிள்ளையை சோபனா இப்பிடித்தான்) ஐரோப்பாவில் படித்தது Information Systems and network . சில கணனி மொழிகள் தெரியும். வேலை செய்வது JAVA+ASP கொஞ்சம் பேராசை கூற எல்லாம் தெரிந்து இருக்கனும் என்று அதனால் இரவு பல்கழைக்கழகத்தில் இப்போது படிப்பது Business & Retail Management
ரொம்ப அலட்டீட்டன் போல இருக்கு மன்னித்துக்கொளுங்கோ...
நன்றி


- tamilini - 03-18-2005

அப்படியா சோபனா.. 13 வயதில் சாதாரன தரம் முடித்துவிட்டீர்களா..? வாழ்த்துக்கள் கெட்டிக்காரி தான் நீங்கள் என்றியள். உங்கள் கல்விச்சாதனைகள் தொடர எமது வாழ்த்துக்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Kurumpan - 03-18-2005

வாழ்த்துக்கள்! ஆனால் உது என்ன பெரிய விஷயம்.
எங்கட அப்பு 7ம் வகுப்பிலேயே டாக்டருக்கு படிச்சு இருக்குறார். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Kurumpan - 03-18-2005

ஏட்டுச் சுரக்கா கறிக்கு உதவாது எண்டு சொல்லிப்போட்டு.
எங்கட வீட்டுக்காரர் நீ ஏட்டுல எல்லாம் படிக்கவேணாம் எண்டுபோட்டினம். அதுதான் கணனியில கொஞ்சம் படிச்சு இருக்குறன் :wink:


- shobana - 03-18-2005

நன்றி தமிழ் பாராட்டுக்காக எழுதவில்லை ... என்ன படித்தேன் என்று சொன்னேன்


- kuruvikal - 03-18-2005

Kurumpan Wrote:வாழ்த்துக்கள்! ஆனால் உது என்ன பெரிய விஷயம்.
எங்கட அப்பு 7ம் வகுப்பிலேயே டாக்டருக்கு படிச்சு இருக்குறார். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

தவறு 7 அல்ல 4....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 03-18-2005

shobana Wrote:வணக்கம் இங்கு நிறைய புத்தியீவிகள் உலாவும் இடம் என நினைக்கிறன்... அப்ப நாங்கள் இங்கு கருத்து எப்படி எழுதுவது என நினைத்துத்தான் எழுதாமல் விட்டுவிட்டேன் இப்போது இளைஞள் அண்ணாவின் வேண்டுகோளுக்கு இணங்க தான் இங்கு எழுத வந்தேன் வாசித்துப்போட்டு நிறைய கேள்வி கேட்டுப்போடாதீங்கோ அதுக்கு பதில் கூற எனக்கு நிறைய நேரம் இருக்காது என்றாலும் பதில் கூற முயற்சிக்கிறேன்

இலங்கையில் படிச்சது கா.போ.உ.தரம் பல்களைக்கழகத்துக்கு போக உள்ளவிடமாட்டோம் என்றுபோட்டினம் (எப்பிடி விடுவினம் 13வயதில் கா.போ.(சா.தரம்) எடுத்து கா.போ (உதரம்) படிச்சால் அதனால நம்மளுக்கு இனி இலங்கை சரிவராது என்று அப்பவே புரிஞ்சு போச்சு.. ஐரோப்பா வந்தேன் ஆரம்பத்தில் மொழி ஒரு பெரிய பிரச்சினையாக இருந்திச்சு... அதுக்குப்பிறகு கணனி தான் படிச்சன்..
இப்போது ஒரு நிறுவனத்தில் கொஞ்ச நாளா குப்பை கொட்டுறன் (அச்சச்சோ தப்பா நினைப்பாதீங்கோ இந்த சின்னப்பிள்ளையை சோபனா இப்பிடித்தான்) ஐரோப்பாவில் படித்தது Information Systems and network . சில கணனி மொழிகள் தெரியும். வேலை செய்வது JAVA+ASP கொஞ்சம் பேராசை கூற எல்லாம் தெரிந்து இருக்கனும் என்று அதனால் இரவு பல்கழைக்கழகத்தில் இப்போது படிப்பது Business & Retail Management
ரொம்ப அலட்டீட்டன் போல இருக்கு மன்னித்துக்கொளுங்கோ...
நன்றி

சோபனாரீச்சர் உங்கடை யாவா, பிளாஸ் வகுப்பின்ரை முதலவது மாணவன் .. ஏதோ இன்னும் கனக்க படியுங்க நீங்கள் படித்தால் நாங்கள் படித்த மாதிரி தானே.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- thamizh.nila - 03-19-2005

மன்னிக்கவும். எனக்கு தற்போது பரீட்சை காலம். அதனால் விபரமாக எழுதவில்லை. நான் படிக்கும் கல்கலைக்கழக இணைய முகவரியை இப்போதைக்கு விட்டு செல்கிறேன். http://www.mq.edu.au

சோபனாவும் business & retail management படிக்கதால் அவ அதை பற்றி எழுதுவா தானே.சோபனா, எனக்கும் கொஞ்சம் உதவி செய்யுங்கள். எனக்கு இது தான் 1ஆம் ஆண்டு. நானும் இரவு நேர படிப்பு தான். 6 - 9 வரை.சில நேரத்தில் தூக்கம் தான் வரும். ஏன்டா நமக்கு தேவை இல்லாதா வேலை என்றும் தோணும்.


- shobana - 03-21-2005

தமிழ்நிலா நிலா வாழ்த்துக்கள்.... உங்களுக்கு பறுவாயில்லை 6 மணி தொடக்கம் 9மணி வரை தானே ஆனால் எனக்கு கொடுமை 6மணி தொடக்கம் 10மணி வரையும் நடைபெறும்.... 8மணிக்குப்பிறகு பெறுமையை காசு கொடுத்து வாங்கவேண்டிவரும்.... வகுப்புமுடித்து வீடுபோக 11.30 மணி தாண்டும்.... அப்பதான் தோன்றும் ரொம்ப ஆசைப்படக்கூடாது என்று...


- shobana - 03-21-2005

கவிதன் என்னை ரீச்சர் ஆக்கிப்போடாதீங்கோ..... ஏத்தாதீங்கோ பப்பா மரத்திலே.....


- kavithan - 03-22-2005

Quote:தமிழ்நிலா நிலா வாழ்த்துக்கள்.... உங்களுக்கு பறுவாயில்லை 6 மணி தொடக்கம் 9மணி வரை தானே ஆனால் எனக்கு கொடுமை 6மணி தொடக்கம் 10மணி வரையும் நடைபெறும்.... 8மணிக்குப்பிறகு பெறுமையை காசு கொடுத்து வாங்கவேண்டிவரும்.... வகுப்புமுடித்து வீடுபோக 11.30 மணி தாண்டும்.... அப்பதான் தோன்றும் ரொம்ப ஆசைப்படக்கூடாது என்று...
எனக்கும் கொஞ்சம் வேணும்


Quote:கவிதன் என்னை ரீச்சர் ஆக்கிப்போடாதீங்கோ..... ஏத்தாதீங்கோ பப்பா மரத்திலே.....
ஏன் ரீச்சராக விருப்பம் இல்லையோ..? .. சரி சரி சும்மா கிடக்கிற பப்பா மரத்தில் ஏறி மரத்தை முறித்து போடாதைங்கோ அக்கா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- thamizh.nila - 03-22-2005

கவிதன் அண்ணா, உங்களுக்கு என்ன வேண்டும்? சரிநாங்கள் தான் பரீட்சை என்றால் மற்றவர்களுக்கு என்ன நடந்தது.


- shobana - 03-22-2005

தமிழ்நிலா பரீட்சைக்கு படிக்கிற மாதிர் தெரியவில்லை படிக்கிறேன் என்று போக்கு காட்டுறமாதிரி இருக்கு
கவிதன் அண்ணாக்கு என்னவேண்டும் பொறுமையா??? எனக்கு தெரிந்த அளவில் அதன் விலை கொஞ்சம் கூட என நினைக்கிறேன் இங்குள்ள கள உறுப்பினர்கள் யாருக்காவது தெரிந்து இருக்கும் மலிவு விலையில் எங்கு வாங்கலாம் என்று அவர்களிடம் கேட்டுப்பாருங்கள் .... தெரிந்தால் எனக்கும் கூறுங்கள்
நன்றி