Yarl Forum
தமிழர்கள் உயர்கல்வி கற்பது ஏன்....?! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: தமிழர்கள் உயர்கல்வி கற்பது ஏன்....?! (/showthread.php?tid=4741)

Pages: 1 2 3


- tamilini - 03-20-2005

நாங்கள் இப்ப பாக்கிறது எங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாய் வைத்திருக்கிறதற்கு வழி. ஒரு டாக்டர் பெண் ஒரு விவசாயியை மணம் முடிக்கலாம் தப்பில்லை. ஆனால் பின்பு அந்த டாக்டர் பெண் செய்வது கதைப்பது எல்லாம் அந்த விவசாயியை பல பல இடங்களில் பாதிக்கலாம் அதனால் அவள் உயர்ந்தவள் நான் படிக்காதவன் என்கிற எண்ணம் தோன்றலாம் இதால பல பின்விளைவுகளை ஏற்படலாம்.
இப்ப நாங்கள் ஓல் படிச்சம் என்றால் ஒரு டாக்கடர் மாப்பிளை வந்தால் தான் எங்கள் சந்ததி முன்னேறும் என்கிறது தப்பு. அப்படிப்பாத்தா நாங்கள் ஓல் மட்டும் எனினும் படிச்சிருக்க முடியாது. ஒராள் பெரிய பட்டதாரியாய் இருந்து மற்றவர் குறைவாய் இருந்து குடும்பத்தில் ஏற்படுகின்ற பல விடயங்கள் வருகிற சந்ததியையும் பாதிக்கலாம்.

ஊரில் விவசாயம் செய்தவர்கள் இங்க வந்து கொஞ்சம் ஆங்கிலத்தைப்படிச்சிட்டு பின்னர் வந்த மனைவியவையை படுத்திற பாடு அதிகம். இப்ப பாருங்கள் ஆண்கள் கூடுதலாய் தங்களை விட அதிகம் படிச்ச பெண்களை மணம் முடிக்க முன்வரமாட்டார்கள் அப்படிச்செய்வது குறைவு. அப்படித்தான் பெண்கள் ஏன் நினைக்கக்கூடாது. பூந்தோட்டமாய் அமைய வேண்டிய வாழ்வில் ஏன் இந்தப்பிரச்சனையில் முட்கள் முளைக்க வேண்டும்.

பெண்கள் படித்து பட்டதாரிகளாய் இருக்கலாம் தங்களுக்கு எற்ற பட்டதாரிகளைத்தெரிவு செய்யலாம். ஆனால் தேவையில்லாமல் டாக்டர் என்சினியர் தான் வேணும் என்று ஒற்றைக்காலில நிண்டுவிட்டு பிறகு. கண்ணீர் வடிச்சு பிரியோசனம் இல்லை. :wink: ஆரம்பத்திலையே சரியாய் முடிவெடுத்து வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் பிற்காலத்தில் தட்டுத்தடுமாறிக்கூட வார்த்தைகள் விளையாட வாய்ப்பில்லை அல்லபா :wink: :mrgreen:


- kuruvikal - 03-20-2005

புரிந்துணர்வும் அன்பும் பாசமும் இருந்தால் யாரும் யாரோடும் சேர்ந்து வாழலாம்...பிறக்கும் போதே மனிதனை யாரும் தரப்படுத்தி உலகத்துக்கு அனுப்பி வைப்பதில்லை..உங்க கருத்து மனிதனை மனிதன் தரப்படுத்தித் தாழ்த்துவது உயர்த்துவதும்...அதன் மூலம் சமூகத்துள் மனிதப் பிரிவினையைத் தூண்டி சமூக ஒற்றுமையை குடும்ப ஒற்றுமையைக் குலைப்பதையுமே சொல்கிறது...! தமிழர்கள் மற்றும் தெற்காசிய ஆண்கள் தான் தங்களிலும் படிப்பில் குறைந்த பெண்ணைத் தேடுவது...காரணம்..அவர்களுக்குள் பெண் இரண்டாம் நிலை என்ற சிந்தனை நல்லாவா வளர்க்கப்பட்டதன் பலனாக...!

நாம் சொல்வது விவசாயம் சொய்பவருக்கு அவர் செய்யும் தொழிலில் நுட்பம் தெரிந்திருக்கும்...ஆனால் அதே நுட்பம் மருத்துவம் படித்த பெண்ணுக்குத் தெரிந்திருக்காது...இப்போ இருவரும் சேரும் போதும் குழந்தைகளுக்கு இரண்டுமே தெரிய வாய்ப்பு வரும்....பெறப்படும் கல்வியின் வீச்சு அதிகமாகும்.... இப்படியான குழந்தைகள் பின்னாளில் தொழில் சார் கல்விசார் ஏற்றத்தாழ்வுகளுக்கு மதிப்பளிக்காது எல்லாம் ஏதோ ஒருவகையில் சமனானதே எனும் உணரும் நிலை வரும்..இப்போ உங்கள் பார்வையில் கூட ஓல் குறைவு பட்டம் பெரிசு என்ற ஒரு நிலை இருக்கிறது...அது தவறு...ஓல் அடிப்படை... பட்டம் அதன் குறித்த அளவு விரிவு அவ்வளவும் தான்..நீங்கள் விரும்பினால் அந்த விரிவை நீங்களாகவே கடதாசிப் பட்டம் இல்லாமல் உள்வாங்கிக் கொள்ளலாம்..அது உங்கள் ஆர்வத்தைப் பொறுத்தது...!

அதற்காய் மனிதனை மனிதன் பெறப்படும் அறிவால் தாழ்த்தி நோக்குவது என்பதை குறிப்பாக கேடுகெட்ட தமிழர்கள் மத்தியில் வழக்கத்தில் இருந்து அகற்றிக் கொள்வது வளமான சமூகத்தை உருவாக்க உறுதுணையாக இருக்கும்...!

உங்களைப் போன்ற இப்படியான சமூகப் பிரிவினையாளர்களே ஆபத்தான சமூகக் களைகள்...! :wink: Idea


- tamilini - 03-20-2005

நாங்கள் வாழ்கின்ற இந்த சமுதாயம் இப்பொழுதும் ஆணாதிக்க வெறிபிடித்ததாய் தான் இருக்கு முழுதாய் மாறிவிடவில்லை. எங்களது கருத்து பெண்கள் தன்னைவிட படித்த ஒரு ஆடவனை மணம்முடித்த பின்னர் எல்லாத்திற்கும் அவனில தான் சார்ந்திருக்க வேண்டிய நிலை வரலாம். ஒரு டாக்கடர் கண்டிப்பா தன் மனைவி சாதாரன தொழில் செய்ய விடமாட்டார் காரணம். கெளரவம் அது இது என்று. அந்தப்பெண்ணின் வாழ்வு அங்கு சார்ந்து வாழ வேண்டிய நிலையில போய் முடிகிறது. எங்களது படிப்பு தகுதிக்கு ஏற்ற வாறு ஒருவனை மணம் முடித்தால் அவனிற்கு நிகராய் பெண் வேலைக்கு போகலாம் சம்பாதிக்கலாம் அவனில சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதைவிட படித்த ஒருவர் என்றால் பிழைகள் செய்யும் போது சமநிலையில் இல்லாத ஒரு பெண் அதைத்தட்டிக்கேட்கிற வேளை கூட பிரச்சனைகள் உருவாகிறது. நீ என்ன என்னைக்கேக்கிறது நான் என்ன உனக்கு சொல்கிறது என்று. இப்படிப்பல. வருகிற சந்ததிகள் துறைசார் முறையில் இருவரது அறிவையும் பெறுவதற்காய் வாழ்கிற சந்ததி இன்னல்களை அனுபவிக்க முடியாது.

பெண்கள் படித்து தமக்கு சரிசமமாய் மாப்பிள்ளையைத்தேடலாம் அது வேறு. இன்றைய சூழ்நிலையில் ஆண் எப்படி தன்னைவிடப்படித்த ஒரு பெண்ணை மணம் முடிக்க தயங்குகிறானோ அப்படி பெண்ணும் யோசிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு.

புரிந்துணர்வு இருந்தால் போதும் என்று. சொல்லில மட்டும் சொல்லலாம். இப்படிப்பட்ட பிரச்சனைகளை தாங்கியவாறு நிறையப்பெண்கள் வாழ்கிறார்கள். இவை களையப்படவேணும் என்றால். பெண்கள் இவைகளை சிந்திக்கவேணும். டாக்டர் மாப்பிளை நல்ல காசுவரும். நல்லாய் வழலாம் என்று எண்ணுறவை கடைசியில நின்மதி சந்தோசம் தொலைத்துவிட்டு நிண்டு பிரியோசனம் இல்லை. :wink: :mrgreen: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- manimaran - 03-20-2005

Thusi Wrote:முந்தின காலத்தில பேருக்கும் புகழுக்கும் படித்தார்கள். இடைக்காலத்தில வளமான வாழ்வு தேடப் படித்தார்கள். தற்போதைய நிலையிலை திருமணத்தின் போது சீதனம் வாங்கப் படிக்கிறார்கள். ஆனால் எங்களது இளம் தலைமுறையின் மனப்போக்கில் பாரிய மாற்றங்கள் காணப்படுகிறது என்று நான் நினைக்கிறன். இவர்கள் அறிவைப் பெருக்கி தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு உதவ வேணும் என்று நினைக்கிறார்கள். இதனை நான் கூறுவதற்கு காரணம் - சுனாமியின் பின்னர் பிபிசி தமிழோசையில் ஒலிபரப்பான பெட்டக நிகழ்ச்சியொன்றில் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் சிறுமியொருவரிடம் உன்னால என்ன செய்ய முடியும் என்று கேட்டார்கள். அவள் சொன்னாள் - [size=18]நான் நல்லாய் படிப்பன் நல்லாய் படிச்சுப்போட்டு என்ரை நாட்டுக்குப் போய் சேவை செய்வன்.

என்ன ஏற்றுக்கொள்கிறீர்களா? நான் எதுக்கு வாக்குப்போட?

ஆமாம் புலம் பெயர்ந்து வாழும் இளம் சமுகத்தினரிடையே ஒரு பரந்த அறிவு வளர்ந்து வருவது தெரிகின்றது.


- kirubans - 03-21-2005

<b>தமிழர்கள் உயர்கல்வி கற்பது ஏன்....?
* அறிவைப் பெருக்கி சமூகத்துக்கு உதவ
* வளமான வாழ்வு தேட மட்டும்
* திருமணத்தின் போது சீதனம் வாங்க
* பெருமைக்கும் புகழுக்கும் </b>

கேள்வியை [b]தமிழ் ஆண்கள் உயர்கல்வி கற்பது ஏன்....? என்று மாற்றினால் கொடுத்த விடைகள் பொருத்தமாக இருக்கும். திருமணத்தின் போது தமிழ் சமூகத்தில் பெண் சீதனம் வாங்கியதாகக் கேள்விப்படவில்லை.


- MEERA - 03-21-2005

[quote=kirubans]<b>தமிழர்கள் உயர்கல்வி கற்பது ஏன்....?
* அறிவைப் பெருக்கி சமூகத்துக்கு உதவ
* வளமான வாழ்வு தேட மட்டும்
* திருமணத்தின் போது சீதனம் வாங்க
* பெருமைக்கும் புகழுக்கும் </b>

கேள்வியை [b]தமிழ் ஆண்கள் உயர்கல்வி கற்பது ஏன்....?

கொழுந்து... அறிவுக்....


- MEERA - 03-21-2005

tamilini Wrote:
Quote:லண்டன் . சுவிஸ் . பிரான்ஸ் ----40 --50 லச்சதிற்கு இடை
லண்டன் மாடுகள் சே மாப்பிள்ளைகள் 2 வது இடத்திலையா இருக்கினம். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இப்ப இங்க மட்டை போடுவதில் பிரச்சனை அதனால் கொஞ்சம் குறைச்சிருக்கினம் போல....?


- kirubans - 03-21-2005

ஆண் என்ற ரீதியில் எனது அபிப்பிராயங்கள்

<b>* அறிவைப் பெருக்கி சமூகத்துக்கு உதவ </b>
அறிவை வளர்க்கலாம்தான். என்றாலும் உயர் கல்வி கற்றுத்தான் அறிவு வரும் என்று நான் நம்பவில்லை. தமிழர்கள் மத்தியில் பட்டம் பெற்றவர்கள் எல்லோரும் அறிவாளிகள், அவர்கள் சொல்லுவது எல்லாம் சரி என்ற பிழையான கருத்துருவாக்கம் உள்ளது.

சமூகத்திற்கு உதவ வேண்டும் என்று உயர் கல்வி கற்போர் மிக அரிது. தாயகத்தில் சமூகம் என்பது ஓரளவேனும் தற்போதும் உள்ளது. புலத்தில் சமூகம் என்று பொதுவான ஒரு கட்டமைப்பை நான் காணவில்லை. ஒன்றில் தனது ஊராருடன் தங்களை அடையாளப் படுத்துவார்கள், அல்லது தமது வேலைத்தள, கல்வியிட, விளையாட்டு நண்பர்களுடன் தங்களை அடையாளப்படுத்துவார்கள்.

இருக்கும் சமூகத்திற்கு ஏதாவது சேவை செய்ய யாராவது முயல்கிறார்களா? பணத்தைச் சுருட்டவே பலர் சமூக சேவை செய்கிறார்கள். இதில் உயர்கல்வி கற்றவர்கள், கல்லாதோர் என்ற பேதமில்லை.

<b>* வளமான வாழ்வு தேட மட்டும் </b>
படிக்கும்போது ஏன் படிக்கிறோம், அல்லது பெற்றோர் பிள்ளைகளை படி என்று சொல்லும்போது ஏன் சொல்லுகிறார்கள் என்று சிந்தியுங்கள். படிக்காவிட்டால் பிற்கால வாழ்வு சிறப்பாக இராது, கஸ்டப்படுவாய், பிறர் உன்னை ஏமாற்றிவிடுவார்கள், பெற்றோரை வயதான காலத்தில் நன்றாகப் பார்க்க வேண்டும் என்று சொல்லத்தான் கேட்கிறோம்.

எனவே வளமான வாழ்வுக்குக் கல்வி அவசியம். உயர்கல்வி என்றால் மேலும் வளமாக்கலாம்.

<b>* திருமணத்தின் போது சீதனம் வாங்க </b>
பரீட்சை வரும்போது யாராவது பரீட்சையில் நன்றாகச் செய்து சித்தி எய்தினால் 50 லட்சம் வாங்கலாம் என்று எண்ணிப் படிக்கிறார்களா?
சீதனம் வாங்க வேண்டும் எவ்வளவு வாங்க வேண்டும் என்பதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டு யாரும் கல்வி கற்பதில்லை (அப்படி இருக்கிறார்கள் என்றால் அவர்கள் கடைசி மட்டும் சித்தியடைய மாட்டார்கள்). படித்து முடித்தபின்னரே பலர் திருமணத்தை பற்றி ,கூடவே சீதனத்தைப் பற்றியும், சிந்திக்கிறார்கள்.
எனவே சீதனத்தை வாங்கவேண்டும் என்பது முதற்காரணியாக இருக்காது.

சீதனம் வாங்குவதைவிட தன்னளவு படித்த, தன்னளவு சம்பாதிக்கக் கூடிய பெண்ணை ஆண் தெரிவு செய்தால், நீண்டகால நோக்கில் நன்மை பயக்கும். என்றாலும் நம்வர்கள் அதைச் செய்ய முன்வரமாட்டர்கள். காரணம் பலவாக இருக்கும். சிலவேளை, சீதனம் வாங்கா விட்டால், தன்னை வியாதிக்காறன் என்று எண்ணிவிடுவார்களோ என்ற பயம், சிலவேளை படித்த பெண் என்றால் சொல்வழி கேட்கமாட்டாள் என்ற பயம் (படித்த பெண் என்றால் கொஞ்ச விஷயங்கள் தெரியத்தானே செய்யும்), சிலவேளை பெண்களை அடக்கி ஆள வேண்டும் என்ற நோய், சிலவேளை அவசரம் பெருந்தொகை தேவைப்படலாம் (கல்யாண வயதி ஒரு தங்கை, படித்ததால் வந்த கடன் சுமை) இப்படிப் பல காரணங்கள்.

<b>* பெருமைக்கும் புகழுக்கும் </b>
பெருமையும் புகழும் யாருக்குத்தான் கசக்காது. இவை உயர்கல்வி கற்றால் மட்டும் கிடைக்காது. மனித நேயமும், சமூகத்திற்கு உதவும் குணமும், அல்லது மனித குலத்திற்கே நீண்டகாலத்திற்கு உதவக்கூடிய எதையாவது கண்டுபிடிக்கக் கூடிய திறமையும் இருக்க வேண்டும். அல்லாவிடில் திருமண அழைப்பிதழில் மட்டும்தான் தான் படித்ததை பறைசாற்ற முடியும். இது குறுகியகால சந்தோஷத்தை மாத்திரம்தான் தரும்.


- kirubans - 03-21-2005

MEERA Wrote:[quote=kirubans]<b>தமிழர்கள் உயர்கல்வி கற்பது ஏன்....?
* அறிவைப் பெருக்கி சமூகத்துக்கு உதவ
* வளமான வாழ்வு தேட மட்டும்
* திருமணத்தின் போது சீதனம் வாங்க
* பெருமைக்கும் புகழுக்கும் </b>

கேள்வியை [b]தமிழ் ஆண்கள் உயர்கல்வி கற்பது ஏன்....?

கொழுந்து... அறிவுக்....
எனக்கு என்னைப் புரிந்துகொள்ளுமளவிற்கு அறிவு உள்ளது. சிலருக்கு நீ இப்படி என்று மற்றவர்கள் சொல்ல வேண்டியுள்ளது. :wink:


- tamilini - 03-21-2005

Quote:இப்ப இங்க மட்டை போடுவதில் பிரச்சனை அதனால் கொஞ்சம் குறைச்சிருக்கினம் போல....?
அப்ப மட்டை தான் தரத்தை தீர்மானிக்குதோ.. சரி சரி :|


- kuruvikal - 03-21-2005

தமிழ் ஆண்கள் சீதனம் வாங்க வேண்டும் என்று நினைத்துப் படிக்கினமோ இல்லையோ தமிழ் பெண்களின் அநேக பெற்றோர் தங்கள் மருமகன்கள் இன்ன இன்னதாக இருந்தால் இன்ன இன்ன கொடுக்க வேண்டும் இன்ன இன்னதாய் நீ வர வேண்டும் என்பதை தங்கள் புத்திரியர்களுக்குப் புரிய வைக்கத் தவறுவதில்லை...தற்போதும் அது தாராளமாக நடை முறையில் உள்ளது...! எனவே பெண் வாக்காளர்கள் தங்கள் சிந்தையில் புகுத்தப்பட்டதை வாக்கின் மூலம் வெளிப்படுத்த அனுமதிக்கும் முகமாகவே தலைப்பிடப்பட்டுள்ளது....!சீதனமாகப் போகப்போறவை அதைப் பற்றிச் சிந்திக்காமலா இருப்பினம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea


- kuruvikal - 03-21-2005

tamilini Wrote:நாங்கள் வாழ்கின்ற இந்த சமுதாயம் இப்பொழுதும் ஆணாதிக்க வெறிபிடித்ததாய் தான் இருக்கு முழுதாய் மாறிவிடவில்லை. எங்களது கருத்து பெண்கள் தன்னைவிட படித்த ஒரு ஆடவனை மணம்முடித்த பின்னர் எல்லாத்திற்கும் அவனில தான் சார்ந்திருக்க வேண்டிய நிலை வரலாம். ஒரு டாக்கடர் கண்டிப்பா தன் மனைவி சாதாரன தொழில் செய்ய விடமாட்டார் காரணம். கெளரவம் அது இது என்று. அந்தப்பெண்ணின் வாழ்வு அங்கு சார்ந்து வாழ வேண்டிய நிலையில போய் முடிகிறது. எங்களது படிப்பு தகுதிக்கு ஏற்ற வாறு ஒருவனை மணம் முடித்தால் அவனிற்கு நிகராய் பெண் வேலைக்கு போகலாம் சம்பாதிக்கலாம் அவனில சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதைவிட படித்த ஒருவர் என்றால் பிழைகள் செய்யும் போது சமநிலையில் இல்லாத ஒரு பெண் அதைத்தட்டிக்கேட்கிற வேளை கூட பிரச்சனைகள் உருவாகிறது. நீ என்ன என்னைக்கேக்கிறது நான் என்ன உனக்கு சொல்கிறது என்று. இப்படிப்பல. வருகிற சந்ததிகள் துறைசார் முறையில் இருவரது அறிவையும் பெறுவதற்காய் வாழ்கிற சந்ததி இன்னல்களை அனுபவிக்க முடியாது.

பெண்கள் படித்து தமக்கு சரிசமமாய் மாப்பிள்ளையைத்தேடலாம் அது வேறு. இன்றைய சூழ்நிலையில் ஆண் எப்படி தன்னைவிடப்படித்த ஒரு பெண்ணை மணம் முடிக்க தயங்குகிறானோ அப்படி பெண்ணும் யோசிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு.

புரிந்துணர்வு இருந்தால் போதும் என்று. சொல்லில மட்டும் சொல்லலாம். இப்படிப்பட்ட பிரச்சனைகளை தாங்கியவாறு நிறையப்பெண்கள் வாழ்கிறார்கள். இவை களையப்படவேணும் என்றால். பெண்கள் இவைகளை சிந்திக்கவேணும். டாக்டர் மாப்பிளை நல்ல காசுவரும். நல்லாய் வழலாம் என்று எண்ணுறவை கடைசியில நின்மதி சந்தோசம் தொலைத்துவிட்டு நிண்டு பிரியோசனம் இல்லை. :wink: :mrgreen: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உங்கள் கருத்து பெண்களை பலவீனமாகவே சிந்திக்கச் சொல்வதாக இருக்கிறது...! மீண்டும் சொல்கிறோம்...ஒருவர் டாக்டர் என்றால் அவருக்கு அனைத்தும் தெரியும் என்பதல்ல அர்த்தம்... கல்வி அறிவென்பது தேவைப்படும் இடத்துக்குப் பயன்படுத்தவே அன்றி...வீட்டில் உள்ளவர்களிடம் காட்டுவதற்கல்ல....ஒருவர் டாக்டர் ஆகும் போது அவரின் பெற்றோர் டாக்டர் ஆக இல்லாது இருப்பினும் அவர் பெற்றோரை சகோதரங்களை மதிப்பதில்லையா....அதே போல்தான் அவர் அவரின் துணையாக வருபவருக்கும் மதிப்பளிக்க வேண்டும்...! பெண்கள் இப்படியான சூழல்களை எதிர்கொள்ளப் பழக வேண்டுமே தவிர சூழ்நிலைக்களைக் கண்டு ஒதுங்கக் கூடாது....! இதைத்தான் கடந்த காலங்களிலும் செய்துவிட்டு இப்போ ஆண்கள் மீது ஆதிக்க குற்றம் சுமத்துகின்றனர்....! :wink: Idea


- tamilini - 03-22-2005

இப்ப நாங்க சொல்லவில்லையே டாக்டருக்கு எல்லாம் தெரியும் என்று. ஆனால் இப்படிப்பட்ட பிரச்சனைகள் நடக்கிறது அதைத்தான் சொன்னம். அதை விட துணைவியை தாய் தந்தையை நடத்திற போல நடத்திறாங்களா என்ன.? நாங்கள் எண்ணியதைச்சொன்னம். மதிப்பளிக்க வேண்டும் அதை ஏற்றுக்கொள்கிறம். மதிப்பளிக்கிறாங்களா என்றது யாருக்கு தெரியும். மற்றவங்க மதிப்பளிக்க வேணும் என்ற அவசியம் இல்லைத்தானே. :wink: :mrgreen:


- Thusi - 03-22-2005

kuruvikal Wrote:கவனியுங்கள் சொன்னது சிறுமி...எங்களில எத்தினை பேர் பாலர் வகுப்பில் ரீச்சர் கேட்க டாக்குத்தர் இஞ்சினியர் ஆகி எங்க ஊருக்கு சேவை செய்வம் என்று சொல்லி இருப்பம்.....ஆனா இப்ப...என்ன கனவில இருக்கம்.....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

இதிலை சிறுமிதான் சொல்லியிருக்கிறாள் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தற்போதை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தான புலம்பெயர்ந்து போனவை எல்லோரும் தாயகத்திற்கு ஒரு விசிற் அடிச்சு காணி, பூமி எல்லாம் பார்த்து விக்கிறதை வித்து, வயது போனதுகளையெல்லாம் போய் பாத்து 'இனி எப்ப வாறமோ தெரியாது' எண்டு சொல்லிப் போட்டுத் திரும்பிப் போட்டினம். இதிலை என்ரை அனுபவம் என்னவென்று சொன்னால் இந்த 'தாயக விசிற்' அடிச்ச இளம்தலைமுறையினர் கனபேரோடை எனக்கு பழகிற வாய்ப்புக் கிடைத்தது. குறிப்பாக உயர்கல்வி கற்கும், பல்கலைக்கழக மாணவர்கள் பலரின் அறிமுகம் கிடைத்தது. அதிலை குறிப்பிடத்தக்க அளவிலான ஆக்கள் உங்க வெளிநாட்டிலேயே பிறந்து வளருற ஆக்கள். அவர்கள் சொல்கிறார்கள். தாங்கள் இங்க தான் வரப்போறம் எண்டு. அவர்கள் சும்மா சாட்டுக்குச் சொன்ன மாதிரி எனக்குப்படேல்லை.


- kuruvikal - 03-23-2005

Thusi Wrote:
kuruvikal Wrote:கவனியுங்கள் சொன்னது சிறுமி...எங்களில எத்தினை பேர் பாலர் வகுப்பில் ரீச்சர் கேட்க டாக்குத்தர் இஞ்சினியர் ஆகி எங்க ஊருக்கு சேவை செய்வம் என்று சொல்லி இருப்பம்.....ஆனா இப்ப...என்ன கனவில இருக்கம்.....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

இதிலை சிறுமிதான் சொல்லியிருக்கிறாள் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தற்போதை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தான புலம்பெயர்ந்து போனவை எல்லோரும் தாயகத்திற்கு ஒரு விசிற் அடிச்சு காணி, பூமி எல்லாம் பார்த்து விக்கிறதை வித்து, வயது போனதுகளையெல்லாம் போய் பாத்து 'இனி எப்ப வாறமோ தெரியாது' எண்டு சொல்லிப் போட்டுத் திரும்பிப் போட்டினம். இதிலை என்ரை அனுபவம் என்னவென்று சொன்னால் இந்த 'தாயக விசிற்' அடிச்ச இளம்தலைமுறையினர் கனபேரோடை எனக்கு பழகிற வாய்ப்புக் கிடைத்தது. குறிப்பாக உயர்கல்வி கற்கும், பல்கலைக்கழக மாணவர்கள் பலரின் அறிமுகம் கிடைத்தது. அதிலை குறிப்பிடத்தக்க அளவிலான ஆக்கள் உங்க வெளிநாட்டிலேயே பிறந்து வளருற ஆக்கள். அவர்கள் சொல்கிறார்கள். தாங்கள் இங்க தான் வரப்போறம் எண்டு. அவர்கள் சும்மா சாட்டுக்குச் சொன்ன மாதிரி எனக்குப்படேல்லை.

இதே ஆக்களோட பழகும் வாய்ப்பு அவர்கள் வாசற்படியில் வைத்து எங்களுக்கு கிடைத்தது...அவர்களின் பெற்றோரும் அவர்களில் பெரும்பாலானோர் சொன்னது நாங்க அங்க போய் என்ன செய்யுறது....இங்க எங்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம்...அதுமட்டுமல்லாமல்..அரசாங்க நிதி உதவிகள் கிடைக்கும்....இப்படிப்பட்ட வாழ்க்கைச் சூழல் அங்க இல்லை....அது எங்களுக்கு அதிகம் ஒத்து வராது என்று மட்டுமல்ல... அங்க சுனாமி நிவாரணத்துக்குப் போக விரும்பிய ஒரு இளம் பெண் பிபிசிக்குச் சொன்னது இப்படி சுனாமி வந்ததால அங்க போய் எங்க திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு...அது மகிழ்ச்சியா இருக்கென்று....! ஒரு துக்க்கர சூழலை விளங்கிக் கொண்டி கருத்துச் சொல்ல முடியாதவர்களால் துன்பலுக்குள் நின்று அந்த மக்களுக்கு நீண்ட காலப் போக்கில் உதவ முடியும் என்பதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை...அப்படி நடந்தால் அதை வரவேற்கலாம்...! Idea