![]() |
|
மீண்டும் சுனாமி....? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மீண்டும் சுனாமி....? (/showthread.php?tid=4645) |
- hari - 03-29-2005 [size=16]சுனாமி தாக்க வாய்ப்புள்ளது: ஆஸ்திரேலிய வானிலை மையம் சிட்னி: இந்தோனஷியாவின் மேற்குப் பகுதியில் கடலுக்கடியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தையடுத்து நடுக்கடலில் 25 செ.மீ. உயரமான சிறிய சுனாமி அலைகள் உருவானதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பசிபிக் கடலில் உள்ள இந்த மையத்தின் சுனாமியைக் கண்டறியும் கருவிகளில் இந்த சுனாமி அலைகள் பதிவாகியுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட சுமத்ரா தீவுப் பகுதியில் இருந்து 1,100 கி.மீ. தூரத்தில் நடுக்கடலில் இந்த சுனாமி எச்சரிக்கைக் கருவிகள் உள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்களில் 25 செ.மீ. அளவுக்கு சுனாமி அலைகள் இந்தக் கருவிகளை தொட்டுச் சென்றன. கடந்த டிசம்பரில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தையடுத்து இந்தக் கருவிகளில் 33 செ.மீ. அளவுக்கு சுனாமி அலைகள் பதிவாயின. இவை கடற்கரைகளை அடைந்தபோது 10 மீட்டர் வரை உயர்ந்தன. ஆனால், இம்முறை 25 செ.மீ. உயரமான சுனாமி அலைகள் நடுக்கடலில் உருவானாலும் கடற்கரைகளை சுனாமி அலைகள் இதுவரை தாக்கவில்லை. ஆனால், அவை தாக்கக் கூடும் என ஆஸ்திரேலிய வானிலை ஆராய்ச்சி மையம் தொடர்ந்து எச்சரித்துள்ளது. பிற நாடுகளும், வானிலை ஆராய்ச்சி மையங்களும் சுனாமி தாக்குதலுக்கு வாய்ப்பில்லை என கூறிவிட்ட நிலையில் ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது - hari - 03-29-2005 இந்தோனேஷியாவில் இன்றும் நிலநடுக்கம் ஹாங்காங்: இந்தோனேஷியாவில் நேற்றிரவு பயங்கர பூகம்பம் ஏற்பட்ட இடத்தில் இன்று காலை மீண்டும் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 8.7 என்ற அளவுக்குப் பதிவான நிலையில் இன்றைய அதிர்வு 5.7 என்ற அளவில் பதிவானது. இத் தகவலை ஹாங்காங் நிலவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.49 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்றைய நிலநடுக்கம் ஏற்பட்ட பாண்டா அச்சேவுக்கு அருகே இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. - thivakar - 03-29-2005 <b> மீண்டும் நிலநடுக்கம்: இந்தோனிசியாவில் ஆயிரக்கணக்கில் உயிர்பலி? நேற்று நள்ளிரவு இந்தோனிசியாவை மையமாகக் கொண்டு மாபெரும் நிலநடுக்கம் இந்தோனிசியாவின் சுமத்ரா தீவிலுள்ள Nias தீவினை நிலைகுலைய வைத்தது. இச்சம்பவத்தில் குறைந்தது 2000 பேர் இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 8.7 ரிக்டர் அளவிலான இந்நிலநடுக்கம் நேற்று நள்ளிரவு இந்தோனிசியா, மலேசியா,தாய்லாந்து, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கடுமையாக உணரப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட மூன்று மணிநேரத்திற்கெல்லாம் சுனாமி பேரலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. டிசம்பர் 26 ஆம் தேதிக்குப் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இதுவென கடலோரமக்கள் தெரிவித்தனர். இந்தோனிசியாவில் Nias தீவில் குறைந்தது 2000 பேராவது இறந்திருக்கக் கூடும் என இந்தோனிசிய துணை அதிபர் Jusuf Kalla தெரிவித்தார். 80% கட்டிடங்கள் முழுமையாக அங்கு சேதமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். Gunungsitoli நகரத்தில் பெரும்பாலான வீடுகள் இடிந்து விழுந்துவிட்டன. அக்கட்டிட இடிபாடுகளிலிருந்து இறந்தவர்களின் உடல்களை எடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே மின்சாரத்தடை ஏற்பட்டதால் நிலைமை அங்கு மோசமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இருளினாலும், தொடர்ந்து நிலஅதிர்வுகள் ஏற்பட்டு கட்டிடங்கள் சரிந்து விழுவதினாலும் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் காவல்துறை விளக்கமளித்துள்ளது. Gunungsitoli நகரம் தற்போது இறந்த நகரமாக ஆகிவிட்டது. நிலைமை பயங்கரமாக உள்ளது என அந்நகரத்தின் மேயர் Agus Mendrofa தெரிவித்தார். இந்நிலநடுக்கம் 9 ரிக்டர் அளவிலானது எனவும் மிக மோசமான ஒன்றாக இந்நிலநடுக்கம் இருக்கக்கூடும் எனவும் அமெரிக்க புவியியல் துறை தெரிவித்துள்ளது. [b]மலேசியாவில்.... </b> மலேசியா முழுக்கப் பரவலாக இந்நிலநடுக்கம் உணரப்பட்டது. கோலாலம்பூர், ஈப்போ, பினாங்கு, கிள்ளான் பள்ளத்தாக்கு,லங்காவி,கெடா போன்ற இடங்களில் கடுமையாக உணரப்பட்டது. வீடுகளை விட்டு அச்சத்தால் ஓடி வந்த மக்கள் தெருக்களில் கூடியிருந்தனர். சுமார் 90 வினாடிகள் இந்நிலநடுக்கம் நீடித்ததால், பயங்கர பீதி ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். வணக்கம் மலேசியா - Mathan - 03-30-2005 நேற்றைய நிலநடுக்கம் சுனாமியை தோற்றுவிக்காதது ஏன்? <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40973000/gif/_40973645_earthquake_mar_map416.gif' border='0' alt='user posted image'> நேற்று இரவு இந்தோனேஷியாவில் சுமத்ராத் தீவுக்கு சற்று மேற்கே இந்துமாக் கடலில் ஏற்பட்ட கடும் நில நடுக்கம், கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி நடந்ததைப் போன்ற ஒரு சுனாமிப் பேரலையை ஏன் தோற்றுவிக்கவில்லை என்கிற கேள்வி பெரிதாக எழுந்து நிற்கிறது. அதற்கு விஞ்ஞானிகள் பல்வேறு காரணங்களை முன்வைக்கிறார்கள். முதலாவது, நேற்றைய நில நடுக்கம் மிகக் கடுமையானது கடந்த நூறு ஆண்டுகளில் நடந்த நில நடுக்கங்களில் எட்டாவது இடத்தைப் பெறுகிறது அது ரிக்டர் அளவில் எட்டு புள்ளி ஏழு என்று சக்தி வாய்ந்தது இருந்தாலும்கூட, இது ஒரு சுனாமியைத் தோற்றுவிக்கவில்லை என்பதற்கு ஒரு முக்கிய காரணம் அந்த நில அதிர்ச்சி முழுவதுமாக பூமிக்குள்ளாக ஏற்பட்டு வெடித்திருக்கிறது, கடற்படுகை அதனால் பெரிதாக அதிர்ந்து நகர்ந்துவிட வில்லை கடற்படுகை நகர்ந்தால்தான் சுனாமிப் பேரலை வரும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதுதவிர நேற்று நில நடுக்கம் ஏற்பட்ட இடம் வேறு, கடந்த டிசம்பர் மாதம் நில நடுக்கம் ஏற்பட்ட இடம் வேறு, அதுதான் முக்கியக் காரணம் என்கிறார், டாக்டர் ஜார்ஜ் பரராஸ் கரயானிஸ், ஹவாய்த் தீவில் இயங்கும் பசிபிக் மாக்கடல் சுனாமி எச்சரிக்கை நிலையத்துக்கு இயக்குநராக இருந்த இவர். இல்லை, இந்த இரண்டு நில நடுக்கங்களுக்கும் தொடர்பிருக்க வாய்ப்புண்டு, எனவே மேலும் நில நடுக்கங்கள் இப்பகுதியில் நிகழலாம் என்கிறார், பிரிட்டிஷ் விஞ்ஞானி டாக்டர் பிரயன் பாப்ட்டி. கடந்த டிசம்பர் மாதம் 26-ஆம் திகதி நிகழ்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் ஒன்பதை எட்டியது. இந்த நில நடுக்கம் அதை விட சக்தி குறைந்தது என்பது முக்கியம் என்கிறார் இன்னொரு பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜான் மெக்லாஸ்கி. எப்படி இருந்தாலும் பலமான, மோசமான நில நடுக்கங்களுக்குப் பெயர்போன பகுதி இந்தோனேஷிய என்பதால் அப்பகுதியில் இதுபற்றிய கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டியிருக்கிறது. நிலநடுக்கம் வந்தாலும் சுனாமிப் பேரலை வருகிறதா என்பதை செய்மதிப் புகைப்படங்கள் வழி உடன் ஆராய்ந்து அறிவதன் தேவையும் வெகுவாக தற்போது உணரப்பட்டிருக்கிறது. BBC Tamil News - vasisutha - 07-24-2005 * அடையாறு , அண்ணாநகர், மயிலாப்பூர் , பெசன்ட் நகர் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர் * ஜப்பானில் நில நடுக்கம் * இலங்கை தாய்லாந்தில் உஷார் நிலை * அந்தமான் நிகோபார், சென்னை, விசாகப்பட்டிணத்தின் சில பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ; வீடுகள் குலுங்கின; பாதிப்பு இல்லை * சுனாமி பற்றி கவலைப்படவேண்டாம் : மத்திய அரசு அறிவிப்பு ; இந்திய கடற்கரை பகுதியில் சுனமி எச்சரிக்கை அறிவிப்பு * சுனாமி ஏற்பட வாய்ப்பு? ஜப்பான் சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் * dinamalar.com - vasisutha - 07-24-2005 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40873000/gif/_40873193_nicobar_campbell_map203.gif' border='0' alt='user posted image'> <b>Strong quake hits Nicobar Islands</b> <b>A strong earthquake has hit the Nicobar Islands in India but there are no reports of damage or casualties.</b> With memories of December's tsunami still fresh, Thai authorities briefly issued a tidal wave alert, but within two hours had withdrawn the warning. The magnitude-7 quake occurred at 1542 (GMT) about 135km (85 miles) west of Misha, Nicobar Islands, and 440km (275 miles) from Banda Aceh, Indonesia. It was felt as far away as Madras (Chennai), India, and Phuket, Thailand. It is the second time the Thai authorities have issued such a warning since the 26 December tsunami. Near the Thai beaches of Bangtao, Surin and Karon, eyewitnesses reported people had taken to higher ground in the darkness because of the warning. But Waverly Perso of the US Geological Survey told the BBC it was "unlikley to spark a tsunami". "I don't think they'll be any activity from this earthquake," he said. "We have got reports from all inhabited islands through the police and there has been no casualties or damage," the Nicobar Islands federal top administrator Ram Kapse told Reuters news agency. "There has been no tsunami alert." In Sri Lanka, where more than 30,000 people died in December's tsunami, the meteorological department said there was no need to issue a tsunami alert. The Andaman and Nicobar islands are still reeling from December's quake and tsunami which killed up to 10,000 people. The tsunami killed at least 200,000 people in 13 countries. Most of the victims were in the Aceh province. <b>BBC.com</b> - வினித் - 07-24-2005 þø¨Ä ¸¼º¢Â Åó¾ ¦ºö¾¢Â¢ý ÀÊ ÍÉ¡Á¢ Å¡ÃÐ - vasisutha - 07-24-2005 <i>வீணாணவன் நீங்கள் கூறியது சரிதான்..</i> நிகோபார் தீவில் பலத்த பூகம்பம்: சுனாமி எச்சரிக்கையை விடுத்தது தாய்லாந்து ரிக்டர் கருவியில் 7.2 ஆக பதிவு; சென்னையிலும் உணரப்பட்டது அந்தமான் தீவை அடுத்துள்ள நிகோபார் தீவில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.12 மணிக்கு பலத்த பூகம்பம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை அளவிடும் ரிக்டர் கருவியில், அதன் திறன் 7.2 ஆகப் பதிவாகியுள்ளது. சென்னை நகரிலும், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ஆகிய மாவட்டங்களிலும், இலங்கையில் தலைநகர் கொழும்பு உள்பட பல இடங்களிலும் தாய்லாந்திலும் அந்த பலத்த பூகம்பத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. அதையடுத்து தாய்லாந்து நாட்டின் தென்மேற்கில் உள்ள புகேட் தீவு உள்ளிட்ட பகுதிகளை சுனாமி தாக்கக்கூடும் என்ற எச்சரிக்கையை அந் நாட்டு அரசு விடுத்தது. இந்தோனேசிய அரசும் அதேபோன்ற சுனாமி எச்சரிக்கையை விடுத்தது. எனினும் சில மணி நேரங்கள் கழித்து, சுனாமி எச்சரிக்கையை தாய்லாந்து விலக்கிக்கொண்டது. ஆனால், இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்க வேண்டிய தேவை இல்லை என்று மத்திய இணை அமைச்சர் கபில் சிபல் கூறினார். இலங்கையிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. ""நிகோபார் தீவிலிருந்து தென்மேற்கே 60 கி.மீ. தொலைவில், தாய்லாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே, இந்தியப் பெருங்கடல் பகுதியில், கடலடியில் பூகம்பம் மையம் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து பல முறை லேசான அதிர்வுகள் ஏற்பட்டன. அதையடுத்து, நிகோபார் மற்றும் அந்தமான் தீவுகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். எனினும் உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று நிகோபார் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று மக்களை நிகோபார் அரசு எச்சரித்துள்ளது'' என்று நிகோபார் மாவட்டத்தின் துணை ஆட்சியர் ஏ. அன்பரசு, சென்னையிலிருந்து தொடர்பு கொண்ட நமது நிருபரிடம் தெரிவித்தார். கார் நிகோபார் தீவுக்கு அருகில் உள்ள கச்சால் தீவிலும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த இரு நாள்களாகவே கடல் அலையின் சீற்றம் இப் பகுதியில் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. அசாதாரணமான அந்த அலைகளால் தாழ்வான பகுதிகள் பல நீரில் மூழ்கின. சென்னை மெரீனா கடற்கரையிலும் கடல் அலைகள் வழக்கத்தைவிட அதிக அளவுக்கு உயர்ந்து வந்து, அருகில் உள்ள மணல் பகுதியை மூழ்கடித்தது. அதைத் தொடர்ந்து, இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து, பேரழிவு நிர்வாக கட்டுப்பாட்டு அறை உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நிகோபார் மற்றும் தமிழ்நாட்டு அதிகாரிகளுடன் அக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்பு கொண்டு நிலைமையை உன்னிப்பாகக் கவனித்துவருகின்றனர் என்று மத்திய உள் துறைச் செயலர் (எல்லை நிர்வாகம்) டி.கே. சங்கரன் தெரிவித்தார். கடலுக்கு அடியில் ஏற்படும் பூகம்பத்தின் திறன் 7.2-லிருந்து 7.5 வரை இருந்தாலே, அதனால் வட்டார அளவில் சுனாமிகள் தாக்கக்கூடும் என்று அமெரிக்காவின் பசிபிக் சுனாமி கண்காணிப்பு மையத்தின் அதிகாரிகள் கூறினர். ஆனால், ""பூகம்பம் ஏற்பட்டு ஒன்றரை மணி நேரம் ஆன பிறகும் கடல்நீர் மட்டத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. எனவே சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆகவே, தேவையில்லாமல் சுனாமி எச்சரிக்கையை விடுத்து, மக்களைப் பீதிக்கு உள்ளாக்க விரும்பவில்லை'' என்று கூறினார் சங்கரன். dinamani.com |