![]() |
|
சச்சின் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: சச்சின் (/showthread.php?tid=4535) |
- KULAKADDAN - 04-18-2005 pepsi Wrote:திரைப்படமுன்னா என்ன எண்டு முதலில்தெரிந்து கொண்டு அப்புறம் விமர்சனம் எழுதுங்கடா சனி சவுத் காறங்களா. சும்மா நொய் நொய் எண்டு குறுக்கு கேள்வி கேட்காமல் :oops:ஆமா பெப்சி ஏனுங்க இம்புட்டு கோவம்...............எழுதினவர் விஜய் ரசிகராக்கும். அப்ப திரைப்படம்னா என்னண்ணு ஒரு வகுப்பெடுக்கீங்களா................ எப்ப நேரம் வரும்............. - pepsi - 04-19-2005 படமுன்னா 100 விதம் கற்பனையான பொய். அப்படி குறுக்குகேள்வி கேட்கிற கட்டவுடுக்கு பால்லூத்திறவனும் தேரிந்து கொள்ளுங்க நொன்னைகளா. பள்ளிக்கூடத்தில திரைபடமுன்னா என்ன அதை எப்படி எடுகிறாங்க அதில எப்படியானவங்கள் நடிகிறாங்க நியவாழ்கையில் அவங்கள் எப்படி இருக்ககூடும் இதையெல்லாம் ஒரு பாடமாக சின்னவயதில இருந்து சொல்லிகொடுத்து வந்தாள் தமிழனும் நல்லா இருப்பான் திரைப்படமும் நல்லா இருக்கும். எங்கட புத்தியிவிகள் மத்தியில திரைப்படம் சமுகத்தின் வழர்ச்சிய கெடுக்குது எண்ட கெட்டபேரும் திரைப்படத்துக்கு இல்லாமல் போகும்.மிஸ்டர்குலைகட்டான் சக்கை போடு போடும் சச்சின் - Mathuran - 04-21-2005 சச்சின் வெளிநாடுகளில் சக்கை போடு போடுகின்றது. விஜை மற்றும் வடிவேலு வரும் காட்சிகளில் அரங்கம் நிறைந்த சிரிப்பொலியும் கரவொலிம் கேட்கின்றது. விஜையின் குழந்தைத்தனமான நடிப்பு எல்லோரையும் கவர்ந்திருக்கின்றது. கரினியின் முகனயம் அடிக்கடி கதைக்கு ஏற்றால் போல மாறுகின்றது. கதை நகச்சுவையுடன் கூடிய கதை. நல்ல திரைப்படம். இளவட்டங்களையும் கவர்ந்துள்ளது. பாடல்கள் ரசிகர்களை ஆட வைக்கின்றன. குறிப்பாக விஜை பாடிய வாடி வாடி கை படாத சீடி என்னும் பாடல் பொருள் பொதிந்திருக்கவில்லை என்றாலும். இளம் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட பாடல். மொத்தத்தில் சச்சின் புதுவருடம் வெளிவந்து சக்கை போடு போடும் நல்ல திரைபடம். யாழ் வாசி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kuruvikal - 04-21-2005 சந்திரமுகிக்கும் முப்பாய் எக்ஸ்பிரச்சுக்கும் என்ன நடக்குது...??! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Sriramanan - 04-21-2005 சச்சின் சந்திரமுகியை விட மும்பை எக்ஸ்பிரஸ்தான் நல்ல படம் என்று கூறுகிறார்கள். - Mathuran - 04-22-2005 ஸ்ரி றமணன் இச் செய்தி எவ்வளவுற்கு உண்மை என எனக்கு தெரியாது. மும்பை எக்கிஸு பிரசு மிகவும் அலுப்படிம் திரப்படம் என எனது நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டேன். நீங்கள் இப்படி கூறுகின்றீர்கள். நேரம் இருந்தால் சச்சினையும் பாருங்களேன். - KULAKADDAN - 04-22-2005 http://tamilstate.com/board/viewtopic.php?t=7175 போட்டிருக்கு ஆனா தரவிறக்க முடியலை/சரியான மெதுவா முடியுமோ தெரியலை :? - Mathuran - 04-23-2005 நன்றி தம்பி<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- KULAKADDAN - 04-23-2005 வழமையான பாணிப்படமாக இருந்தாலும் பாக்கலாம். நமக்கு பிடிச்சுது. - vasisutha - 04-24-2005 :roll: :roll: - KULAKADDAN - 04-24-2005 vasisutha Wrote::roll: :roll:என்ன நடந்தது வசீ சீ......................................... - tamilini - 04-26-2005 எங்காவது திருப்பாச்சி சுட முடிஞ்சால் அறியத்தாருங்கள்.. :wink: - KULAKADDAN - 04-26-2005 மேல சொல்ல பட்ட இடங்களில் இருக்கலாம் - sathiri - 04-26-2005 Mathuran Wrote:ஸ்ரி றமணன் இச் செய்தி எவ்வளவுற்கு உண்மை என எனக்கு தெரியாது. மும்பை எக்கிஸு பிரசு மிகவும் அலுப்படிம் திரப்படம் என எனது நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டேன். நீங்கள் இப்படி கூறுகின்றீர்கள்.மதுரன் அது எக்ஸ்பிரஸ் இல்லை சரியான லோக்கல் ரெயின் நான் பாதியிலை நிப்பாட்டி போட்டன் - kavithan - 04-26-2005 இந்த இணைப்பிலும் படம் இருக்கு பாருங்கப்பா,,.... http://www.sunmix.us/movie.html - KULAKADDAN - 04-27-2005 சந்திரமுகி முதலிடம், நம்பர் டூ கமல்: "சச்சின்' அவுட்! தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியான படங்களில் ரஜினியின் சந்திரமுகி வசூலில் சாதனை படைத்து வருகிறதாம். படையப்பாவின் வசூலை சந்திரமுகி முந்தி விடும் என்கிறார்கள். கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸும் வசூலில் தேறி வருகிறதாம். ஆனால் விஜய்யின் சச்சின் படு டல்லான வசூலை எடுத்து வருகிறது. ஜெய் ஆகாஷ், ராஜ்கிரண் நடிப்பில் வெளியான செவ்வேல், திரையிடப்பட்ட பல தியேட்டர்களில் எடுக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் புத்தாண்டுக்கு சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸ், சச்சின், செவ்வேல் என நான்கு படங்கள் வெளியாகின. இதில் எதிர்பார்த்தது போல சந்திரமுகியும், மும்பை எக்ஸ்பிரஸும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதிகம் பூஸ்ட் செய்யப்பட்ட சச்சின், போட்ட பணத்தைத் திருப்பிக் கொடுக்குமா என்ற ரீதியில் ஓடிக் கொண்டிருக்கிறதாம். சென்னையைப் பொருத்தவரை, சந்திரமுகி திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளும் நிரம்பி வழிகின்றன. அதே அளவு ரெஸ்பான்ஸ் மும்பை எக்ஸ்பிரஸுக்கும் கிடைத்துள்ளது. படம் வெளியான 10 நாட்களில் மட்டும் ரூ. 60 லட்சம் வரை லாபம் ஈட்டியுள்ளதாம் சந்திரமுகி. புத்தாண்டுக்கு வெளியான நான்கு படங்களில் சந்திரமுகியின் வசூல் 90 சதவீத மார்க்கெட்டைப் பிடித்துள்ளதாம். மும்பை எக்ஸ்பிரஸைப் பொருத்தவரை 80 சதவீத மார்க்கெட்டை அது பிடித்துள்ளது. இந்தப் படத்திற்கு பெரும்பாலும் குடும்பத்துடன் ரசிகர்கள் வந்து பார்க்கிறார்கள். வழக்கமான காமெடியாக இல்லாமல், வித்தியாசமான முறையில் இந்தப் படத்தின் காமெடிக் காட்சிகள் அமைந்துள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. போட்ட பணத்தை மட்டுமல்லாது, நல்ல லாபத்தையும் பார்க்க முடியும் என்று விநியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த சச்சின், விநியோகஸ்தர்களுக்குப் பீதியைக் கொடுத்துள்ளதாம். முதல் சில நாட்கள் கூட்டத்தை சேர்த்த சச்சின் பின்னர் டல் அடிக்க ஆரம்பித்துவிட்டது. இத்தனைக்கும் சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸை விட கதையில் சச்சின் நம்பர் ஒன்னாக இருந்தும் இந்த நிலை. படம் சரியாகப் போகவில்லை என்பது ஒருபுறம் இருக்க, போட்ட பணமாவது திரும்ப வருமா என்ற சந்தேகம் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்டுள்ளதாம். ரஜினிக்கு இணையாக தன்னை கருதிக் கொண்ட விஜய்க்கு இந்தப் படம் செம அடியைத் தரும் என்கிறார்கள். இரவுக் காட்சிகளும், விடுமுறை நாட்களிலும் மட்டுமே சச்சின் திரையிடப்பட்ட தியேட்டர்களில் கூட்டம் வருகிறதாம். அதுவும் கூட ஹவுஸ் புல் போட முடியாத அளவுக்கு ஏராளமான இருக்கைகள் காலியாகவே உள்ளன. விஜய் ரசிகர்கள் மட்டுமே அதிக அளவில் வருவதாகவும், பொதுமக்களை இப்படம் கவரவில்லை என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகிறார்கள். திருப்பாச்சி, கில்லி போல இந்த படம் ஓடாது என்றும் உறுதியாக கூறுகிறார்கள். இதன் மூலம் ரஜினி, கமல் படங்கள் நேரடியாக மோதினால் மற்ற நடிகர்களின் படங்கள் அடிபட்டுப் போகும் என்ற வாதம் நிரூபணமாகியுள்ளதாகவும் தியேட்டர் உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்தப் படங்களோடு வெளியான செவ்வேல் படு தோல்வி அடைந்துள்ளது. படம் பரவாயில்லை என்ற பேச்சு இருந்தும் கூட பல தியேட்டர்களில் படத்தைத் தூக்கி விட்டனர். படம் வெளியான முதல் நாள் மட்டுமே ஹவுஸ் புல் போர்டை மாட்டினார்கள். அதன் பின்னர் விரல் விட்டு எண்ணும் அளவுக்கே படம் பார்க்க ஆட்கள் வருகிறார்கள். இதனால் பல தியேட்டர்களில் படத்தைத் தூக்கி விட்டார்கள். சென்னையில் ஒரு தியேட்டரில் ஒரு காட்சியை ஆபரேட்டர், டார்ச் பாய், டிக்கெட் கிழிப்பவர் உள்பட 30 பேர் மட்டுமே படம் பார்த்திருக்கிறார்கள். தமிழ்ப் புத்தாண்டு ரிலீஸிலேயே அதிக வசூலைக் கொடுத்துள்ள படங்கள் சந்திரமுகியும், மும்பை எக்ஸ்பிரஸ்ஸும் மட்டும்தான். பாபா படுதோல்வியால் வெறுத்துப் போயிருந்த ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் சந்திரமுகி மிகப் பெரிய வரமாக அமைந்துவிட்டது. - Mathuran - 04-28-2005 ஐயோ.... தமிழன் இனியேனும் திருந்துவான் எண்டு பார்த்தால் அதுவும் சாத்தியப் படாது போல கிடக்குது. சந்திரமுகிக்கு ஏன் இவ்வளவு விளம்பரம் எண்டு எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரியுது. இணயத்திரைப்பத்திரிகை வைத்திருந்தால் பத்திரிகை நடத்துபவர்களுக்கும் லாபம், நடத்தும் அந்த தனிப்பட்ட சமூகத்துக்கும் லாபம். இரண்டு மூன்று இணையதிரைப்பத்திரிக்கைகலும் ஒரு சில தங்களின் சமூகத்தை சார்ந்த நடிகர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை பிரசுரித்து, நடக்காத பல நிகள்வுகளைக்கூறி படம் வெற்றி பெற்றதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை கொடுத்து பிரமாண்டத்தினை தேடிக்கொள்கின்றனர். விஜையின் சச்சினுக்கே கூட்டம் அதிகம் என்பது நான் கண்னால் கண்ட உண்மை. சமத்துவம் சச்சின் - Mathan - 05-17-2005 சந்திரமுகி, சச்சின்- இலங்கை நிலவரம் புகை நுழையாத இடங்களிலும் தமிழ் சினிமா புகுந்துவிடும். தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்பாணம், திரிகோணமலை, கொழும்பு என இலங்கையின் பல பகுதிகளில் இறக்கை கட்டிப் பறக்கிறது தமிழ் சினிமா. ரஜினி, கமல் படங்களுக்கு இங்கு ராஜமரியாதை. அடுத்த இடம் விஜய்க்கு. அதுவும் 'கில்லி', 'திருப்பாச்சி'க்கு பிறகு முதலிடத்தை நோக்கி முன்னேறியிருக்கிறார் விஜய். இந்தியாவில் சென்ஸார் செய்யப்பட்டிலிருந்தாலும், இலங்கை தன் பங்குக்கு கத்திரி வைத்த பிறகே தமிழ் படங்களை அனுமதிக்கிறது. பிறகு தமிழர்கள் பகுதியிலுள்ள போராட்டக்குழுக்கள் அக்கு வேறு ஆணி வேறாக படத்தை அலசி, தேவைப்பட்டால் சில இடங்களில் கத்தரி போட்டு, படம் தியேட்டரை அடையும்போது பல கைகள் பட்டிருக்கும். அப்படியிருந்தும், கொழும்புவில் உள்ள கொட்டாஞ்சேனை, தெகிவளை, மருதாணை, யாழ்பாணத்திலுள்ள கன்னாகம், சங்கானை, நெல்லியடி, சாவகச்சேரி பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் தமிழ் படங்களுக்கு கூட்டம் அலைமோதுகிறுது. கட்டணமும் அதிகம். இங்கு 70, 80 ரூபாய் என்றால் அங்கு 100,120! புத்தாண்டு ரிலீஸில் சச்சினுக்கே முதலிடம் அளித்துள்ளனர் இலங்கை தமிழர்கள். விஜய்படம் ஒடும் தியேட்டர்களில் கூட்டம் இன்றும் அலைமோதுகிறது. புதிய படங்கள் தவிர சிவாஜி, எம்.ஜி.ஆருக்கு இன்றும் கணிசமான ரசிகர்கள் இலங்கையில் உள்ளனர். அங்குள்ள முக்கியப் பிரச்சனை திருட்டு விசிடி. ஆனாலும் இதையும் மீறி தமிழ் சினிமா இலங்கை தமிழர்களை தியேட்டர்களுக்கு இழுத்துக் கொண்டுதான் இருக்கிறது. சினி சவுத் இது எந்த அளவுக்கு உண்மை என்று இலங்கையில் உள்ள கள உறவுகள் தான் சொல்லணும் - tamilini - 05-17-2005 :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: - Mathuran - 05-17-2005 செய்தியைப் பார்க்கும் பொழுது சினிசொத் இணையத்தளம் ஏதோ உள்நோக்கம் வைத்து செய்தி வெலியிடுவது போல உள்ளது. உண்மை என்னவென்றால் இந்தியாவில் சச்சின் படத்துக்கே மக்கள் அதிகம் அலைமோதுகின்றார்கள் என்று இந்தியாவில் இருந்து பல நண்பர்கள் தொலைபேசியில் சொன்னார்கள். ஆனால் இந்திய ஈனைய பத்திரிகைகள் என்னவென்றால். றஜனியின் ஆவிப் படமான சாத்திரமுகியே சக்கை போடு போடுகின்றது என்று உண்மைக்கு புறம்பான செய்திகளை ஈணைத்துள்லார்கள்.ஈழத்தில் மக்கள் இப்போதெல்லாம் இந்தியதிரைப்படங்களை விரும்பி பார்ப்பதில்லை.நண்பர்களே கொஞ்சம் சிந்தியுங்கள். ஈழத்தமிழர்களுக்கு இருக்கும் பிரச்சினக்குள் அவர்கள் திரைப்படத்திற்க முக்கியத்துவம் கொடுப்பார்கள். இப்போதெல்லாம் மக்கள் ஈழத்து திரைப்படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க தொடங்கிவிட்டார்கள். அப்ப்டியும் சிலவேளைகளில் இந்திய திரைப்படங்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் பார்க்க நேர்ந்தாலும்,மக்கள் நல்ல கருத்தோட்டமுள்ள திரைப்படங்களையே பார்ப்பார்கள். றஜனி கமல் போன்றவர்களின் திரைப்படங்கள் திரையிடப்படுவதையே மக்கள் வருங்காலங்களில் புறக்கணிப்பார்கள் என்பது எனது கருத்து. |