Yarl Forum
பிரித்தானிய அரச குடும்பம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: பிரித்தானிய அரச குடும்பம் (/showthread.php?tid=4517)

Pages: 1 2 3 4 5


- tamilini - 04-10-2005

சின்னாச்சி.. உங்கள் தலைக்கு.. கத்தி... கள்ளில கொஞ்சம்.. ( ஆந்திராக்ஸ்போடனை) :evil:


- stalin - 04-10-2005

கரோல்ட் அதிபரின் மகனை டயானா மணக்க இருந்தார் கரோல்ட் அதிபர் எகிபது நாட்டைசேர்ந்த முஸ்லீம் -- டோடியின் மகனுக்கும் டயானாவுக்கும் திருமணம் நடந்து ஒரு பிள்ளை வந்தால் வில்லியத்தக்கு அது cousin brother ஒரு முஸ்லிம் எதிர்கால ராஜாக்கு சகோதரமா வாறதா என்றதற்காக பரிஸில் அந்த சதி இந்த கூட்டம் செய்ததாக கதை உண்டு.--------------ஸ்ராலின்


- Mathan - 04-10-2005

டயானா இறக்கும்போது கர்ப்பமாக இருந்தார் என்றும் டோடியின் வாரிசு அது என்றும் கூறுவோர் உண்டு. டயானாக்கு டோடியுடன் உறவு ஏற்பட முன்பு வேறு சிலருடன் தொடர்பு இருந்தது. டயானாக்கு தனது மெய்பாதுகாப்பாளர், குதிரை பயிற்சியாளர், பாகிஸ்தானிய டாக்டர் உட்பட வேறு சிலருடன் தொடர்பு இருந்தது. டயானாவின் மெய்பாதுகாவலர் அப்பணியின் இருந்து வேறு ஒரு பணிக்கு மாற்றப்பட்ட சில காலத்திற்கு பின்பு மர்மான விபத்தொன்றில் இறந்தார்.


- tamilini - 04-11-2005

என்ன மதன்.. இப்படிச்சொல்லுறியள்..சும்மா கதை சொல்லுறமாதிரி.. :twisted: :mrgreen:


- Mathan - 04-11-2005

சண் பத்திரிகை உட்பட பல பத்திரிகைகளின் வெளிவந்த செய்திகளின் ஒரு பகுதிதான் இவை. இணைய இணைப்பு கிடைத்தால் தருகின்றேன்.


- tamilini - 04-11-2005

அந்த சன் பத்திரிக்கைக்கு வேலையே.. விடுப்புப்பேசுறது தான் என்று சொல்கிறார்கள் உண்மையா..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 04-11-2005

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40605000/jpg/_40605641_mannakee_203300.jpg' border='0' alt='user posted image'>

டயானாவின் முன்னாள் மெய்ப்பாதுகாப்பாளரும் காதலர்களின் ஒருவருமான Mannakee படத்தில் டயானாவுடன் உள்ளார்.

படம் BBC.co.uk


- Mathan - 04-11-2005

tamilini Wrote:அந்த சன் பத்திரிக்கைக்கு வேலையே.. விடுப்புப்பேசுறது தான் என்று சொல்கிறார்கள் உண்மையா..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சண் மட்டுமல்ல டெயிலி எக்ஸ்பிரஸ், டெய்லி மிரர், டெய்லி நியூஸ் போன்ற பத்திரிகைகளும் அப்படித்தான். கார்டியன், ஒப்சேவர் போன்றவைதான் தரமான செய்திகளை தருகின்றன.


- Mathan - 04-11-2005

<img src='http://news.bbc.co.uk/media/images/39288000/jpg/_39288549_carriage_238.jpg' border='0' alt='user posted image'>

டயானா தனது voice coach இனால் 1992இல் ஒலிபதிவு செய்யப்பட்ட உரையாடலில் காதலர்களில் ஒருவரான மெய்பாதுகாவலர் குறித்து விபரித்துள்ளார். அதில் அரண்மனையிலிருந்த பாதுகாவலருடன் காதல் வசப்பட்டதாகவும் சார்லஸ்சிடமிருந்து விலகி அவருடன் வாழ விரும்பியதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இவர் 1987இல் வீதி விபத்து ஒன்றில் இறந்தார் (திட்டமிட்டு கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகின்றது)

செய்தி ஆதாரம் பிபிசி இணையத்தளம்

http://news.bbc.co.uk/2/hi/uk_news/4074545.stm


- kuruvikal - 04-11-2005

Mathan Wrote:டயானா இறக்கும்போது கர்ப்பமாக இருந்தார் என்றும் டோடியின் வாரிசு அது என்றும் கூறுவோர் உண்டு. டயானாக்கு டோடியுடன் உறவு ஏற்பட முன்பு வேறு சிலருடன் தொடர்பு இருந்தது. டயானாக்கு தனது மெய்பாதுகாப்பாளர், குதிரை பயிற்சியாளர், பாகிஸ்தானிய டாக்டர் உட்பட வேறு சிலருடன் தொடர்பு இருந்தது. டயானாவின் மெய்பாதுகாவலர் அப்பணியின் இருந்து வேறு ஒரு பணிக்கு மாற்றப்பட்ட சில காலத்திற்கு பின்பு மர்மான விபத்தொன்றில் இறந்தார்.

சாள்ஸ் மட்டும் கமீலாவோட 30 வருசமா தொடர்பு வைச்சிருக்கலாம்...டயானா மட்டும் பத்தினியா இருக்க வேணுமோ... டயானாவின் நிலையில் எந்தப் பெண்ணிருந்தாலும் சில காத்திரமான முடிவுகளையே எடுப்பாள்...! டயானா தவறுவிட சாள்ஸும் கமீலாவுந்தான் அடிப்படைக்காரணம்....! அதையும் சன் சொன்னா நல்லா இருக்கும்...! :wink: Idea


- stalin - 04-11-2005

டயனா ஒரு காதல் தேவதை என்ற பிரமை பலருக்கு உண்டு டயனா காதல்+காம reVenge எடுத்ததிலும் பார்க்க காதல்+காம addicted கூட காணப்பட்டுள்ளது---------------------------

இதன் மூலம் ஒண்ணை தெரிஞ்சுக்கலாம் சார்ள்ஸ்க்கு டயானாவிடம் பார்க்க கமிலா பிடிச்சுக்கொண்டிருக்கு இதிலையிலிருந்து என்ன தெரியது so called அழகு முக்கியமில்லை வேறு ஒண்ணு இருக்கு-----------------------------ஸ்ராலின்


- Vasampu - 04-11-2005

Mathan Wrote:டயானா இறக்கும்போது கர்ப்பமாக இருந்தார் என்றும் டோடியின் வாரிசு அது என்றும் கூறுவோர் உண்டு. டயானாக்கு டோடியுடன் உறவு ஏற்பட முன்பு வேறு சிலருடன் தொடர்பு இருந்தது. டயானாக்கு தனது மெய்பாதுகாப்பாளர், குதிரை பயிற்சியாளர், பாகிஸ்தானிய டாக்டர் உட்பட வேறு சிலருடன் தொடர்பு இருந்தது. டயானாவின் மெய்பாதுகாவலர் அப்பணியின் இருந்து வேறு ஒரு பணிக்கு மாற்றப்பட்ட சில காலத்திற்கு பின்பு மர்மான விபத்தொன்றில் இறந்தார்.

மதன் நீங்கள் எழுதியது முற்றிலும் உண்மை. டயானா முன்பு பனிச்சறுக்கலுக்காக ஒவ்வொரு வருடமும் சுவிஸ் வருவா. அப்போது ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு ஆடவருடன் இருந்த விடயம் மறுநாள் பதஇதிரிகையில் தலைப்புச் செய்திகளாக வரும். சார்ள்ஸ் கமிலாவுடன் தான் திருமணத்திற்கு முன்பிருந்தே தொடர்பு வைதஇதிருந்தார். ஆனால் இதைச் சாட்டாக வைத்து டயானாவின் பட்டியலின் நீளம் ???? டயானா தனக்கு எழுதிய காதல் கடிதங்களை குதிரைப் பயிற்சியாளர் வெளியிட்டது. அதே போல் ஈராக் போர் முனையில் நின்ற இன்னொரு காதலனுக்கு அவர் எழுதிய கடிதங்கள் வெளிவந்தன. எல்லாவற்றையும் கிளறுவது என்றால் சாக்கடையை விட நாறும்.


:roll: :roll: :roll: :roll:


- Vasampu - 04-11-2005

kuruvikal Wrote:சாள்ஸ் மட்டும் கமீலாவோட 30 வருசமா தொடர்பு வைச்சிருக்கலாம்...டயானா மட்டும் பத்தினியா இருக்க வேணுமோ... டயானாவின் நிலையில் எந்தப் பெண்ணிருந்தாலும் சில காத்திரமான முடிவுகளையே எடுப்பாள்...! டயானா தவறுவிட சாள்ஸும் கமீலாவுந்தான் அடிப்படைக்காரணம்....! அதையும் சன் சொன்னா நல்லா இருக்கும்...! :wink: Idea


ஐயா குருவிகளே தாங்களா இப்படி எழுதினீர்கள். சார்ள்ஸ் செய்தது தவறுதான். அதனால் தானே இரவரும் விவாகரத்து எடுத்தார்கள். டயானா இன்னொருவருடன் திருமண பந்தத்தை ஏற்படுத்தி புது வாழ்கை அமைத்திருக்கலாமே. ஏன் சார்ள்ஸை விட மோசமாக புதுப்புது காதலர்களை தேடினார். என்ன மாமியார் உடைச்சால் மண் குடமோ ??

8) :roll: 8) :roll:


- kuruvikal - 04-11-2005

Vasampu Wrote:
kuruvikal Wrote:சாள்ஸ் மட்டும் கமீலாவோட 30 வருசமா தொடர்பு வைச்சிருக்கலாம்...டயானா மட்டும் பத்தினியா இருக்க வேணுமோ... டயானாவின் நிலையில் எந்தப் பெண்ணிருந்தாலும் சில காத்திரமான முடிவுகளையே எடுப்பாள்...! டயானா தவறுவிட சாள்ஸும் கமீலாவுந்தான் அடிப்படைக்காரணம்....! அதையும் சன் சொன்னா நல்லா இருக்கும்...! :wink: Idea

ஐயா குருவிகளே தாங்களா இப்படி எழுதினீர்கள். சார்ள்ஸ் செய்தது தவறுதான். அதனால் தானே இரவரும் விவாகரத்து எடுத்தார்கள். டயானா இன்னொருவருடன் திருமண பந்தத்தை ஏற்படுத்தி புது வாழ்கை அமைத்திருக்கலாமே. ஏன் சார்ள்ஸை விட மோசமாக புதுப்புது காதலர்களை தேடினார். என்ன மாமியார் உடைச்சால் மண் குடமோ ??

8) :roll: 8) :roll:

டயானா சாள்ஸை விட 13 வயது இளையவர்... அப்போ சாள்ஸ்... தான் தவறுவிட்டால் அது டயானாவைப் பாதிக்கும் என்று தெரிந்து செயற்பட்டிருக்க வேண்டும்..ஆனால் அவர் காதலிக்கும் போது டயனாவின் மீது காட்டிய பரிவை துணைவியானதன் பின் காண்பிக்கவில்லைப் போலும்..அதனால்தான் அவர் வேறு ஆடர்வர்களை நாடிச் செல்லத் தூண்டப்பட்டிருப்பார்...அப்படிச் செய்தது டயானாவின் தவறென்றாலும்...அப்படிச் செய்யத் தூண்டியது சாள்ஸும் அவரிடம் காணப்படாத துணைவி மீதான அக்கறையும்...( இதை டயானாவே பல பேட்டிகளில் சொல்ல...அதை பக்கிங்காம் மறுத்து வந்தது).. கமீலா போன்றோருடன் அவர் காண்பித்த நெருக்கமுமே...!

சில சந்தர்ப்பங்களில் ஆண்கள் தங்கள் தவறுகளை மறைத்துப் பெண்களை மட்டும் குற்றம் சுமத்துதல்... பிரச்சனைக்குத் தீர்வாகாது... அதற்காக பெண்கள் தாங்களாவே குற்றம் செய்யமாட்டார்கள் என்பதல்ல அர்த்தம்...! :wink: Idea


- Vasampu - 04-11-2005

முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் குருவி டயானாவை காதலிக்கும் முன்பு அவரின் சகோதரி ஒருவரையே சார்ள்ஸ் விரும்பியிருந்தார். அவரை சந்திக்கப்போகும் போது டயானாவை கண்டு பழகி பின்பு அதுவே காதலானது. அப்போதே டயானாவிற்கு சார்ள்ஸ் பற்றி நன்கு தெரிந்திருந்தது. ஆனால் அவவின் ஒரே நோக்கம் இளவரசிப் பட்டம் பெறுவதிலேயே இருந்தது. விவாகரத்தின் முன்பு ஒரு பத்திரிகை பேட்டியிலும் தான் விவாகரத்துப் பெற்றாலும் தனது இளவரசிப் பட்டத்தை விட்டுத் தரமாட்டேனென சொல்லியிருந்தா.

8) :roll: 8) :roll:


- kuruvikal - 04-11-2005

வசம்பு... நீங்க டயானாவா உங்களைப் பாவிச்சு யோசிச்சுப் பாருங்க...லூசு மாதிரி உள்ள பெட்டைப் பைத்தியம் சாள்ஸுக்கு ஒரு அழகான மனைவியாப் போய் வாழ்ந்து எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் குறைஞ்சது அந்த இளவரசிப்பட்டமாவது வரட்டும் என்றுதானே எதிர்பார்ப்பீர்கள்..யாராவது தங்கள் வாழ்க்கையைச் சீரழிச்சவைய சும்மா விடுவினமோ...!

இல்ல நீங்கள் சொல்வது போல டயானா திட்டமிட்டுத்தான் காதலிக்கச் சம்மதித்து திருமணத்துக்கு வருகிறார் என்று தெரிந்திருந்தால் பிறகெதற்கு சாள்ஸ் அவரை காதலித்தார்... திருமணம் செய்தார்...??! ஆக அவரை ஒரு அழகான பெண்ணாக தேவைக்குப் பயன்படுத்த மனைவியாக்கி இருக்கிறார் என்றீங்களா...??! அப்ப டயானா தேவைக்குப் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படப் போவது அறிந்துதான் இளவரசிப் பட்டதைக் கோரினார் போலும்...அரச குடும்ப கொட்டத்தை அடக்கி பெண்மையின் பெறுமதியை உணர்த்துவதற்காக...! :wink: Idea


- Mathan - 04-11-2005

எது எப்படியா டயானா, சார்ளஸ் இருவருமே ஒருவருக்கொருவர் ச்ளைத்தவர் இல்லை போல் தெரிகின்றது.


- Vasampu - 04-12-2005

Mathan Wrote:எது எப்படியா டயானா, சார்ளஸ் இருவருமே ஒருவருக்கொருவர் ச்ளைத்தவர் இல்லை போல் தெரிகின்றது.

மதன் நீங்கள் எழுதியது நூற்றுக்கு நூறு உண்மை. அதே போல் குருவி எனது கேள்வி என்னவென்றால் எது பிழை என்று டயானா சொன்னாவோ அதை விட அதிகமாக அவ பிழைவிட்டது பழிவாங்கலென்று எப்படி சொல்லமுடியும். மற்றவர்களின் ஒழுக்கத்தை விமர்சிப்பவர்கள் முதலில் தங்கள் ஒழுக்கத்தை பேணிக் கொள்ள வேண்டும். அதைவிட இன்று எல்லோராலும் பேசப்படும் ஒரு பெண்மணியாக டயானா வந்ததே சார்ள்ஸை திருமணம் செய்த பின்தான். இல்லையேல் டயானாவை உமக்குத் தெரிந்திருக்குமா அல்லது எனக்குத் தெரிந்திருக்குமா??

8) :roll: 8) :roll:


- Malalai - 04-12-2005

டயானாவ விட்டுட்டு கமிலாட்ட போனா டயானா என்ன செய்றது? அவவும் மனித ஜாதி தானே....சரிசரி...பெரிய வீட்டு சமாச்சாரங்கள் பெரியவங்க நீங்க பேசிக்கிறிங்க...பேசுங்க...நாம எஸ்கேப்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 04-12-2005

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry