Yarl Forum
கணவனாக இருப்பவர்களே..கணவனாக போகிறவர்களே.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: கணவனாக இருப்பவர்களே..கணவனாக போகிறவர்களே.. (/showthread.php?tid=4353)

Pages: 1 2 3


- KULAKADDAN - 09-08-2005

Malalai Wrote:[

கரையேறுவதிலும் முன்னர் மூழ்காமல் இருந்தாலே நல்லம்... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink:
கரையேறுறவனையும் விடாம தள்ளி விழுத்திபோடுவியளே,


- Malalai - 09-08-2005

ஏன் தள்ளிவிழுத்திற அளவுக்கு விளிம்பில் நிற்கிறியள்...


- KULAKADDAN - 09-08-2005

Malalai Wrote:ஏன் தள்ளிவிழுத்திற அளவுக்கு விளிம்பில் நிற்கிறியள்...
தூர நிண்டாலும் இழுத்துகொண்டு போடுவியளே, பாவம் கணவன் மார்.


- Malalai - 09-08-2005

மனைவிமார்களை மூழ்கடிக்காத கணவன்மார்கள் பாவம் தான்...


- vasanthan - 09-09-2005

ஆரம்பம் எப்படியென்று கரியிடம் கேட்போமென்றால் ஆளையே காணோமே?! :?: வந்தததும் வராதததுமாக யாழ் களத்தில் களமாடுவதற்கே தடா போட்டு விட்டாங்களோ தெரியவில்லை :oops:


- vasanthan - 09-09-2005

Malalai Wrote:மனைவிமார்களை மூழ்கடிக்காத கணவன்மார்கள் பாவம் தான்...

மூழ்கடிக்கப்போற(மனைவி மார் இழுத்துகொண்டு விழும் போது) கணவன்மார் கரைசேர்வதில்லையாம் :oops: . மனைவிமார் மட்டும் தான் கரை சேருகினமாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .

:twisted: எச்சரிக்கை: நீந்தத் தெரியாத கணவன்மாரே மாற்று வழியை தேடவும் Idea


- MUGATHTHAR - 09-09-2005

vasanthan Wrote:
Malalai Wrote:மனைவிமார்களை மூழ்கடிக்காத கணவன்மார்கள் பாவம் தான்...

மூழ்கடிக்கப்போற(மனைவி மார் இழுத்துகொண் விழும் போது) கணவன்மார் கரைசேர்வதில்லையாம் :oops: . மனைவிமார் மட்டும் தான் கரை சேருகினமாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆனா தம்பி சொல்லுறாங்கள் இந்த சுனாமி அடிச்சதில்லை நிறைய மனைவிமாரைத் தான் அள்ளிக்கொண்டு போயிருக்காம் அப்பிடியெண்டால் அவை கணவன்மாரை காப்பாத்தாப் போய்தான் அப்பிடி நடந்திச்சோ .............


- aathipan - 09-09-2005

Quote:ஆனா தம்பி சொல்லுறாங்கள் இந்த சுனாமி அடிச்சதில்லை நிறைய மனைவிமாரைத் தான் அள்ளிக்கொண்டு போயிருக்காம் அப்பிடியெண்டால் அவை கணவன்மாரை காப்பாத்தாப் போய்தான் அப்பிடி நடந்திச்சோ .............

எப்படி என்டாலும் இப்ப அவை மனைவிமாரின் கொடுமையில் இருந்து தப்பிச்சு சந்தோசமா இருக்கினம் தானே.. அது போதும்


- ANUMANTHAN - 09-10-2005

aathipan Wrote:
Quote:ஆனா தம்பி சொல்லுறாங்கள் இந்த சுனாமி அடிச்சதில்லை நிறைய மனைவிமாரைத் தான் அள்ளிக்கொண்டு போயிருக்காம் அப்பிடியெண்டால் அவை கணவன்மாரை காப்பாத்தாப் போய்தான் அப்பிடி நடந்திச்சோ .............

எப்படி என்டாலும் இப்ப அவை மனைவிமாரின் கொடுமையில் இருந்து தப்பிச்சு சந்தோசமா இருக்கினம் தானே.. அது போதும்
இதை வாசிக்கும்போது கவலையாக உள்ளது சுனாமி ஏற்பட்டது கரையோரங்களில் கரையோரம் வாழும் மக்களில் 95வீதமான ஆண்களும் தொழில் நிமித்தம் கடலிலும் பிடித்தமீனை விற்பதற்காக கரையை விட்டு நீண்டதூரம் சென்றதாலும் கரையில்நின்ற சிலரும் கடல்மேலெழும்புவதை கண்டு ஓடியும் தப்பியுள்ளார்கள். ஆனால் பெண்கள் கடலால் வரும்கணவனுக்கு தேனீர் சாப்பாடு கொண்டுசென்றவர்களும் சாப்பாடு செய்துகொண்டு வீட்டுக்குள் நின்றதாலும் அலைவந்தபின் எதுவும் செய்யமுடியாமலும், நிலைமையை பார்த்து பிள்ளைகளை காப்பாற்றமுனைந்தும்,வீட்டில உள்ள வயதுபோன தாய்தந்தை மாமன்மாமியை காப்பாற்றமுனைந்தும்தான் பல பெண்கள் உயிழக்கவேண்டிஏற்பட்டது. அங்கே உயிரிழந்த பெண்களினால் கணவனமார்; உண்மையிலேயே சந்தோசமடையமுடியாது. அது தவறு. இந்தஅனர்த்தம் நடந்தபோது நானும் வடமராட்சியில் நின்றேன் ஆனால் சுனாமியைகண்ணால் காணமுடியவில்லை! பாதிக்கப்பட்டு ஓடிவந்தவர்களையும் அவர்களின் அலறல் எல்லாமே நேரடியாக கேட்டேன்.
''மனைவி இறந்துவிட்டாள் என சந்தோசப்படுவன் ஒரு மனைவிக்கு சிறந்தகணவனாக இருந்திருக்கமுடியாது'' இது என் கருத்து!


- MUGATHTHAR - 09-10-2005

Quote:''மனைவி இறந்துவிட்டாள் என சந்தோசப்படுவன் ஒரு மனைவிக்கு சிறந்தகணவனாக இருந்திருக்கமுடியாது''

தம்பி நான் ஒரு கட்டுரை வாசிச்சன் அதிலை இந்த சுனாமிலை வாழ்க்கைத்துணையை இழந்தவர்களில் மறுமணம் புரிவதற்கு பெண்கள் தயக்கம் காட்டுகிறார்கள் காரணம் அவர்களால் பழைய வாழ்க்கையை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாமல் இருக்கிறது ஆனா இந்த ஆம்பிளையள் (எல்லோரும் அல்ல) பிள்ளைகளுக்கு ஒரு அம்மா தேவையென மறுமணத்துக்கு ரெடியாகிவிட்டார்கள் சரி கட்டுறதுதான் கட்டுறியள் கணவனை இழந்த ஒரு விதவைப் பெண்ணைக் கட்டலாம் எல்லோ அதை விட்டுப் போட்டு புதுசா கட்டினம் அதுதான் மனதுக்கு சங்கடமாகிடக்கு இவர்களே விதவைப் பெண்களை ஓதுக்கினால் ........................... இப்பிடி பார்க்கேக்கைதான் இவர்கள் மனைவியை இழந்து சந்தோஷப்படுகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது ( எங்கடை ஆட்களுக்கும் வெளுக்கவேணும் மனைவியை இழந்து வாறவனுக்கு ஏன் புதுப்பெம்பிளையை கொடுப்பான் சீர் இல்லாமல் தள்ளிவிடலாம் எண்டுதான் பாக்கினம் போல )


- ANUMANTHAN - 09-10-2005

ஆமாம் முகத்தார் அண்ணை நீங்கள் சொல்வதுபோல் மறுமணம் தேடும் போது இப்படியான பிரச்சனைகள் உண்டு! அதற்கான காரணங்கள் பல சொல்கிறார்கள்! இதில இரண்டு பேருக்குமே பிள்ளைகள் இருந்தால் சற்று யோசிக்கவேண்டும்தான் ஏனெனில் ஒருவரின் பிள்ளை தவறுசெய்யும்போது மற்றவர் அடிக்கும்போதுதான் பிரச்சினைகள் ஆரம்பமாகும் என்னஇருந்தாலும் மாற்றாந்தாய்தானே என்றஎண்ணம் வந்து குடும்பத்தில் பிரச்சினைகள் உண்டாகும் என்ற எதிர்காலபயம்தான் மறுமணத்தில் முக்கிய பிரச்சினையாகஉள்ளது! இருவருக்குமே பிள்ளைகள இல்லையென்றால் பெரிதாக பிரச்சினைக்கு இடமில்லை.
நானும் பத்திரிகையொன்றில் வாசித்ததாக ஞாபகம் சுனாமியால் தமது துனைகளை இழந்தவர்களில் சிலர்மட்டுமே(பிள்ளைகள் இல்லாத இளவயதினர்) முகாம்களிலேயே மறுமணத்திற்கு ஓப்புக்கொண்டுள்ளதை. என்னதான் சொன்னாலும் நாட்டில் அதுவும் கரையோரகிராமங்களில் உள்ளபெண்கள் மறுமணம்செய்வதற்கு மிகவும் பின்நிறகிறார்கள்! மறுமணம் செய்தால் வரும்கணவன்மார்கள் பணத்துக்காகத்தான் கட்டுவார்கள் பின்பு எதற்கு எடுத்தாலும் இன்னும் அவன் நினைப்போ என்று கேட்டு திட்டித்திட்டியே வாழ்க்கை நடத்துவார்கள் அதைவிட பேசாமல் இருக்கலாம் என்பார்கள்.

ஒருசிலர் மட்டுமே மனைவிஇறந்ததையிட்டு சந்தோசப்படலாம்!
அப்படியானவர்கள் இறந்தமனைவிக்குநல்லகணவனாக இருந்திருக்கமுடியதாது!