![]() |
|
தமிழ்ச் சொற்களஞ்சியம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22) +--- Thread: தமிழ்ச் சொற்களஞ்சியம் (/showthread.php?tid=4270) |
- anpagam - 05-25-2005 Nilavan Wrote:தமிழ் நாட்டு தொலைக்காட்டி பெயரை நங்கள் மாற்றவா....அட பாவிங்களா தொலைச்சிடுவன் மவனுகள... நாங்கள் யார் தமிழின் தாய் வீடு நாங்கள் ஆங்கித்தை தமிழ்ல கலப்பம் தமிழை ஆங்கிலத்தில் கலப்பம் ஈழத்தமிழ் முட்டாள் வேண்டுமென்றால் தமிழுக்காய் உயிர் கொடுக்கட்டும் நாங்கள் மானப்பிறவிகள் எங்களுக்கு எங்கள் வீட்டுப்பிரச்சினைதான் முக்கியம் உழை உண் உடு படு சாவு...இந்த இரண்டெழுத்து வாக்கியங்கள் தான் எங்கள் தாரக மந்திரம் எவனாவது சண் ரீவியை சூரியன் தொலைக்காட்சி என்றோ ராஸ் ரீவியை ராஜா தொலைக்காட்சி என்றோ கதைச்சீக்க அவ்வளவு தான்...8) :?: :!: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Kalai - 05-26-2005 <b>தமிழ்ச்சொல்--------------------------வடசொல்</b> அடிப்படை---------------------------அத்திவாரம் ஆண்டு-------------------------------வருடம் இன்றியமையாமை--------------------அத்தியாவசியம் உவச்சகன்----------------------------அர்ச்சகன் உழவு--------------------------------விவசாயம் உறுப்பு-------------------------------அங்கம்அவயம் ஏனம்--------------------------------பாத்திரம் கட்டளை-----------------------------ஆணை கணியன்-----------------------------ஜோதிடன் கழகம்-------------------------------சங்கம் குடிகள்------------------------------பிரஜைகள் குழந்தை----------------------------சிசு குறும்பு------------------------------சேட்டை கோவில்-----------------------------ஆலயம் ss - thamilvanan - 05-26-2005 Sriramanan Wrote:திரவிடம் ---> திரமிளம் ---> திரமிழம் ---> தமிழம் நீங்கள் குறிப்பிடுவதிலும் உண்மைகள் இருக்கலாம். நீங்கள் குறிப்பிடுவது போலவும் சில தமிழ் வரலாற்று நூல்கள் கூறுகின்றன. - thamilvanan - 05-26-2005 சூரியன் என்பது தமிழ்ச்சொல் அல்ல என நிறுவுகின்ற சான்றுகள் இருப்பின் அதனை தெரியப்படுத்தி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். லங்கா என்ற வடமொழி சொல்லே இலங்கை என்ற தமிழ் சொல்லிருந்து மருவியதாக அரசேந்திரன் ஐயா குறிப்பிடுகிறார். - Kalai - 05-26-2005 thamilvanan Wrote:சூரியன் என்பது தமிழ்ச்சொல் அல்ல என நிறுவுகின்ற சான்றுகள் இருப்பின் அதனை தெரியப்படுத்தி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். சூரியன் என்பது வடமொழிச் சொல் அது ஆரியரின் வருகைக்குப் பின்பே எமது பாவனைக்கு வந்ததாக பாவணர் அவர்கள் கூறுகிறார். இதைவிட என்னிடம் இப்போiதைக்கு வேறு ஆதாரங்கள் இல்லை. அப்படி சூரியன் என்பது தமிழ்ச் சொல்தான் என்பதற்கு உங்களிடம் ஆதாரம் இருந்தால் தந்துதவினால் நன்றாக இருக்கும். மற்றும் லங்கா என்ற வடமொழிச்சொல் இலங்கை என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து மருவியதாக நானும் படித்துள்ளேன் அதற்காக நாங்கள் இலங்கைக்கு லங்கா என்று எழுதுவது தவறு என்பதே எனது கருத்து. இலங்கை என்ற வேர்ச் சொல் இருக்கும்போது ஏன் நாங்கள் லங்கா என்று பாவிக்க வேண்டும். - Nitharsan - 06-27-2005 நன்றி கலை - karna - 07-14-2005 வடசொல் ஜன்னல் தமிழ்சொல் சாளரம் - Mathuran - 07-14-2005 Kalai Wrote:தமிழகராதி என்பதற்குப் பதிலாக தமிழாகரதி என்று தவறுதலாக இடம்பெற்றுவிட்டது. திருத்தி வாசிக்கவும்.(எனக்கு திருத்தம் செய்கிற அதிகாரம் தரப்படவில்லை).ஊதியம்.......இலாபம் என்று அழைத்தமைக்கான காரணம். சில வேளைகளில் இவ்வாறு இருக்கலாம். அதாவது தமிழில் ஊதியம் என்றால் வரவு என்றும் பொருள்படும் ஆகையினால் சிலவேளைகளில் இலாபம் என்னும் வடமொழியும் வரவு என்னும் பொருளினைக் கொண்டிருக்கலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- கரிகாலன் - 10-18-2005 உங்கள் தகவலுக்கு நன்றி கலை. எனக்குத் தெரிந்த, நான் படித்த ஆங்கிலச்சொற்களின் தமிழாக்கத்தை இங்கே பதிகிறேன். ஆங்கிலச்சொல் - தமிழாக்கம் Bio Diversity - உயிர்ப் பன்மயம் Genetic Contamination - மரபணுக் கலப்பு Taxi - வாடகை மகிழுந்து Sponsor - ஏற்பிசைவு Industrial - தொழிலியல் Industrial Relation - தொழிலுறவு Cut out - வெட்டுரு Banner - பதாகை Keyboard - விசைப்பலகை Rainmaker - உற்பத்தியாளர் Network - பணிப்பின்னல் Allowance - ஊதியப்படி Court of Appeal - முறையீட்டு நெறி மன்றம் CD(CompactDisc) - குறுந்தட்டு Guarantor - உத்தரவாதப் பொறுப்பாளர் Novel - புதினம் Coral Reefs - ஆழ்கடல் வங்கள் |