![]() |
|
பிருந்தனின் கவிதைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: பிருந்தனின் கவிதைகள் (/showthread.php?tid=3637) |
- கீதா - 09-17-2005 நல்ல வரிகள் வாழ்த்துக்கள் - Mathan - 09-17-2005 கவிதை நல்லாருக்கு பிருந்தன். இயற்கையை காதலன் காதலியாக உருவகிச்சு கவிதையை எழுதியிருக்கிறீங்க. அது சரி இயற்கையில் காதலனும் காதலியும் சந்திக்க வழியில்லை போலும் சூரியன் வர நிலவு ஓடிவிடுகிறதே அதனால் கேட்டேன். - sakthy - 09-17-2005 வாழ்த்துக்கள் பிருந்தன், உங்கள் படைப்புக்கள் அருமை,தொடருங்கள் - அனிதா - 09-17-2005 கவிதை நல்லாருக்கு தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 09-17-2005 நன்றாக எழுதி இருக்கிறீர்கள் பிருந்தன் அண்ணா.. நானும் எவ்ளோ நேரமாக..வானத்தை ப்பார்த்துக்கொண்டு இருப்பேன்..ஆனால் கவிதை எழுத தலை கீழா நின்றாலும் வரவில்லை..ஏனென்றால்..எல்லாரும் எழுதி விட்டார்கள்..கவிஞர்களைச் சொன்னேன்.. ஆனால் நீஙகள் வித்யாசமாக சிந்தித்து எழுதி இருக்கிறீர்கள்.. - RaMa - 09-17-2005 நல்லாயிருக்கு கவிதைகள் பிருந்தன் - Birundan - 09-18-2005 அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகள். இழப்பு - Birundan - 09-27-2005 <span style='font-size:30pt;line-height:100%'>இழப்பு</span> கடற்கரை ஓரத்தில் கற்பாறையில் கடல் அடித்திருக்கும்! நெஞ்சின் ஓரத்திலே உன்நினைவுகளை இதயம் சுமந்திருக்கும்! சில்லிடும் கடற்காற்றில் நான் காத்திருந்தேன்! நீ என்னை கடந்து செல்கையில் என் கண்களைப் பார்த்திருந்தாய்! என்னை கண்டவுடன் மலரும் உன் முகமென்ன! ஆனந்தத்தில் தாவி ஓடும் உன் நடை என்ன! உன்னிடத்தில் எனக்கோ மயக்கம் ஆயினும் பேச தயக்கம்! பேசாத என்னைக்கண்டு உனக்கு கோபம் ஆயினும் என்னைக்கண்டு நாணம்! காலம் என்னை உன்னிடத்தில் இருந்து பிரித்துவிட்டது! நீயோ உன் நெஞ்சில் இருந்து என்னை தூக்கி எறிந்து விட்டாய்! காதலை வெளிப்படுத்தத் தெரியாத எனக்கு இப்பேரிடி தேவையான ஒன்றுதான். - Mathan - 09-27-2005 வாழ்த்துக்கள் பிருந்தன், தொடர்ந்து எழுதுங்க - Birundan - 09-29-2005 நன்றி மதன். - sooriyamuhi - 09-29-2005 நல்ல கவிதை :?: :?: :?: - வெண்ணிலா - 09-29-2005 நல்லாக இருக்கு இழப்பு கவிதை பிருந்தன். ஏன் காதலை வெளியிடத்தெரியாமல் இருந்தீங்க. யாழில் கேட்டிருந்தால் .................. :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
- ப்ரியசகி - 09-29-2005 அழகான கவிதை பிருந்தன் அண்ணா... - Birundan - 09-30-2005 சூரியமுகி,வெண்ணிலா,ப்ரியசகிக்கு எனது நன்றிகள். - sankeeth - 09-30-2005 பிருந்தன் உங்கள் கவிதைகள் எல்லாமே நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள். - கீதா - 09-30-2005 நல்ல கவிதை நன்றி - Birundan - 10-01-2005 சங்கீத்,ஜோ இருவருக்கும் நன்றிகள். - Birundan - 11-22-2005 [size=18]இயந்திர மனிதன் குளிர்ந்த காலைவேளையில் பனித்துளிகள் மூடி நிற்கும்! பனித்துளியின் பாரம் தாங்காது இளம்தளிர்கள் தலை சாய்த்திருக்கும்! அவற்றுக்கு விடுதலை கொடுப்பதற்கு புறப்பட்டான் இளம் சூரியன்! அவன் கதிர்பட்டவுடன் உருக்கிய வெள்ளி போன்று கரைந்தோடியது பனி! கதிரவனின் வருகையினால்தான் எத்தனை ஆர்ப்பாட்டம்! அவனை வரவேற்க ஒவ்வொரு உயிரினமும் கானம்பாடின! குஞ்சுகள் கூட தமது சின்னவாயால் வரவேற்பு கொடுத்தன! மொட்டுக்கள் அவிழ்ந்தன பூ மணம் பரப்பின! விலங்கினங்கள் கூட கண் விழித்தன! மனிதன் மட்டும் போர்வைக்குள் முடங்கிக்கிடந்தான்! அவனை எழுப்ப வேண்டும் கடிகார சத்தம்! இன்ப ஓசையில் எழும்பாத அவன் இயந்திர ஒலியில் இயந்திரமாய் எழுந்தான். - Niththila - 11-22-2005 நல்லாயிருக்கு அண்ணா இயந்திர மனிதன் பற்றிய கவிதை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> கிட்டத்தட்ட நாம எல்லாரும் இயந்திரமயமாயிட்டோம் தானே ( நான் அலார்ம் அடிச்சாலும் எழும்ப மாட்டன் அம்மா அடிச்சுதான் எழும்புவன்) :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 11-22-2005 Quote:மனிதன் மட்டும் சேவல் கூவி எழுந்ததில்லையோ.. என்ன தான் பண்ண பின்ன.. வெளியில அடிக்கிற குளிருக்கு.. கம்பளியை விட்டு விலக யாருக்கு மனசு வரும்... வைத்தெரிச்சலைக்கொட்டிக்காதீங்க.. அதுவும் இப்ப றொம்பக்குளிர். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Quote:நான் அலார்ம் அடிச்சாலும் எழும்ப மாட்டன் அம்மா அடிச்சுதான் எழும்புவன்) நம்ம கேசு.. :? |