![]() |
|
பதில் தாருங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: பதில் தாருங்கள் (/showthread.php?tid=2837) |
- matharasi - 10-24-2005 இல்லேங்கோ...எல்லாம் உள்ளுக்குள் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்க...ஆசாடாதிபதிகளாய் காட்டிக்கொண்டு.... நங்காய் மலர்வாயாக என்று கோட்போமுங்க... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- தூயவன் - 10-24-2005 4 சுவருக்குள் நடப்பதை எல்லாம் நடுரோட்டிலே வந்து நாயைப்போல திரிய தமிழ் சமுதாயத்தை வர வைக்க ஆசைப்படுகிறியள். சரி. தமிழன் இதிலையாவது சாதிச்சான் எண்டு பெயரெடுக்க வேண்டாமே. உணர்ச்சிகள் இல்லாத உடல் என்று கிடையாது. ஆனால் அதை ஊர்முழுக்க ஊளை இட்டுத் திரியும் கூட்டமும் கிடையாது - nallavan - 10-24-2005 //தேங்கிநிற்கும் காம உணர்ச்சிகளை இலக்கியம் சார்பான விவாதம் என்ற பெயரில் தீர்த்துக் கொள்ளும் கபட எண்ணமே இது.// சரி தூயவன், தேங்கிக்கிடக்கிறதுகள அவையள் தீர்க்கப்போகினம். தேங்காத ஆக்கள் தீர்க்கத் தேவையில்லைத்தானே? அதுவும் தனியா ஒரு பக்கம் தொடங்கித் தீர்க்கப்போறதாச் சொல்லிற நேரத்தில அடுத்தவன் அறைக்குள்ள நீர் ஏன் எட்டிப்பாக்கிறீர்? ஆனா 'எட்டிப்பாக்காமலும் இருக்க ஏலாமக்கிடக்கு' எண்டு பிறகு உம்மை வைது கருத்துக்கள் வருமெல்லே? - nallavan - 10-24-2005 ஏதோ நீலப்படம் ஓட்டப்போறாங்கள் எண்ட றேஞ்சில சிலர் கருத்துச் சொல்லுகினம். இதைப்பற்றிப் போதுமான அளவுக்குக் கதைச்சாச்சு. அவையளா அப்பிடிக் கற்பனை பண்ணி வாயுூறிக் கொண்டிருந்தா என்ன செய்யிறது? நாலு சுவத்துக்க நடக்கிறத விருப்பமில்லாத ஆக்கள் ஏன் எட்டிப்பாக்கிறியள் எண்டு கேக்கிறன். விருப்பமான ஆக்களை மட்டும்தானே உள்ள விடப்போயினம்? - தூயவன் - 10-24-2005 தனிப்பக்கம் என்றால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நிர்வாகம் இதற்குள்ளல்லவா இணைப்பை கொடுத்து நிற்கின்றது. களத்துக்குள்ளேயே அசிங்கம் செய்யவேண்டாம் என்பதை காட்டிக்கொடுப்பது தப்பில்லையே. மேலும் தப்பு என்றால் தட்டிக்கேட்பமே தவிர கூட நின்று கூத்தடிக்க மாட்டோம் - matharasi - 10-24-2005 thuyawan Wrote:4 சுவருக்குள் நடப்பதை எல்லாம் நடுரோட்டிலே வந்து நாயைப்போல திரிய தமிழ் சமுதாயத்தை வர வைக்க ஆசைப்படுகிறியள். சரி. தமிழன் இதிலையாவது சாதிச்சான் எண்டு பெயரெடுக்க வேண்டாமே.நாலு சுவத்துக்குள்ளையோ வெளியிலையோ..என்னவேசம் போட்டாலும்..ஊளையிடாவிட்டிலும் body language காட்டிக்கொடுத்துவிடுதே........ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- தூயவன் - 10-24-2005 அடையாளம் தெரியாத பெயரில் என்னவென்றாலும் கதைக்கலாம் என்ற துணிவில் இச்சைகளுக்கு வாழ்வு கொடுங்கள். அது நிற்க இப்ப இலக்கிய நயம் கொண்டு பேசுவியள். இந்த நிமிடம் சவால் விடுகின்றேன். இன்னும் ஆறு மாதத்துக்குள் இந்தப் பக்கத்துக்கு நாற்சந்திக்கு நடந்த கதைதான் நடக்கும். மோகன் அண்ணாவே இதை நிறுத்திவிடுவார். அப்போது என்னை நினைத்துப்பாருங்கள். - Birundan - 10-24-2005 ஈழவவன் பூனை கண்மூடினால் உலகம் இருண்டு விடுவதில்லைதான், அதற்காக இந்த தமிழ் சாதியை இருண்ட உலகத்துக்குள் தள்ளி விட்டுவிடாதீர்கள். ஓரினச்சேர்கைக்கு ஆதரவாகக் கதைக்கும் நீங்கள் காலப்போக்கில் அதற்கு ஜரோப்பாவில் இருப்பது போன்று தமிழீழத்திலும் சட்ட அங்கிகாரம் வேண்டும் என குரல் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை, கேட்டால் அது தனிமனித விருப்பு, தனிமனித உரிமை என போர்க்கொடிதூக்குவீர்கள், உலகத்தில் இருக்கிறது என்பதற்காக எல்லாத்தையும் எம் சமூகம் ஏற்றுக்கொள்ளவேண்டுமா? எம் சமூகத்தில் இல்லையா? என கேட்பீர்கள், ஏன் களவுகூடத்தான் எம் சமூகத்தில் இருக்கிறது அதற்காக அதற்கும் சட்ட அங்கிகாரம் கொடுக்கலாமா? எம் பண்பாடு கலாச்சாரம் இதுதானா? எம் பாட்டனும், தந்தையும் தாயும் கட்டிக்காத்தவற்றை காற்றி பறக்க விடலாமா? எம் சமூகம் நல்லவற்றை உள்வாங்கிக்கொள்ளும், அதற்காக இதையும் கூடவா? - தூயவன் - 10-24-2005 இல்லை பிருந்தன் இப்படி நீங்கள் கதைக்கக் கூடாது. இவர்கள் எல்லாம் நவீன உலகத்துக்கேற்ற வகையில் மாற்றம் பெற்றவர்கள். ஆனாலும் உடல் உறுப்புக்களின் பெயர்கள் தெரியாமல் அது பற்றி விவாதம் செய்யவேண்டும் என நம்புபவர்கள். பெற்ற பிள்ளையின் முன்னே தம்பத்தியம் நடத்தினாலும் தப்பு இல்லை என்ற சீர்திருத்தக் கொள்கையை கொண்டிருப்பவர்கள். இப்படிப்பட்ட கனவான்களை ஒரு போதும் சிறுமைப்படுத்தி பேச வேண்டா. என்ன....... தங்களை நியாயப்படுத்த எம் முதாதையரான வள்ளுவனும், ஒளவையாரும் தான் கிடைத்துள்ளனர். அது தான் ஒரு கவலை. சிலவேளை தங்கள் பாட்டி, பாட்டனும் அப்படித்தான் நடந்தார்கள் என உதாரணம் காட்டுவார்களோ என்னவோ.... - matharasi - 10-24-2005 பாட்டன் பாட்டி காலத்திலை இல்லீங்க....சங்க காலத்த்திலையே களவியல் என்று இருந்திச்சாம்....உங்க பாஷையில் சொன்னால் அவங்க ரொம்ப மோசமாம்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- narathar - 10-24-2005 எங்கயோ கன காலமாக் கேட்ட குரல், தொடருங்கோ உங்கட வாதத்தை புதிய வடிவில். மேல எழுதினதில கருத்தெண்டு என்ன இருக்கு வெறும் தனி நபர் வசைபாடலும் முத்திரை குத்தலும் தான் இருக்கு. நிம்மதி அற்ற உலகு , நிலயில்லா உலகில இப்படித் தான் இருக்கும்.எல்லாம் மனசுதானே, நாங்க எப்படிப் பாக்கிறம் எண்டதில தான் எல்லாம் தங்கி இருக்கு.எங்களுக்குள்ள முதிர்ச்சியப் பொறுத்துத் தான் நாங்க உலகப் பாக்கிற விளங்கிற பக்குவம் இருக்கு.வளர்ச்சி வயசில இல்ல மனப் பக்குவத்தில இருக்கு.உள் வாங்கல் இல்லாட்டி ,வளர்ச்சி தடைப் படும்.எதோ நினச்சதச் சொன்னன் ,எடுக்கிறதும் விடுறதும் உங்களைப் பொறுத்தது.ஆனா ஆரோக்கியமான கருத்தாடலுக்கு வடிவத்தை மாதின மாதிரி ,இந்த முத்திரை குத்திறதையும் விட்டால் நல்லா இருக்கும். - Mathan - 10-24-2005 ஒரு கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் எழுதுவோர் ஏன் அதனை தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்பு படுத்தி எழுத வேண்டும்? வாதங்களை கருத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து சொல்லலாமே? - narathar - 10-24-2005 நல்ல அலேட்டாத் தான் நிக்கிறியள் மதன், வரவேற்கத் தக்க கருத்து,தக்க தருணத்தில் முன் வைக்கப் பட்டது,கருத்தாடல் வசை பாடலாக மாறது இருக்க. நன்றி. - matharasi - 10-24-2005 மதன் சார்...தடி வைச்சு எல்லாத்துக்கும் அதட்டி கொண்டிருந்தீஙக என்றா..ஹாயா கருத்து ஆடலேதுங்க...VICE PRINCIPAL கண்ட மாணவனுக்கு வரும் ஒனறுக்கு போற மாதியிருக்கும் மனோ நிலை தான் வருமுங்க.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 10-24-2005 மதராசி, தடி வச்சு அதட்டல. தணிக்கை கட்டுப்பாடுகளில் எனக்கு முன்பு முதலே நம்பிக்கையும் இல்லை, ஆனால் சுய தணிக்கை குறைந்து களத்தில் இதனால் பிரச்சனைகள் எழுதுள்ள நிலையில் எனக்கு இதனை தவிர வேறு வழியில்லை, கொஞ்சம் கடுமையாக தான் நடந்து கொள்ள வேண்டியிருக்கின்றது. இந்த தலைப்பும் மோதல்கள் அதிகரித்து பூட்ட வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு செல்ல கூடாது என்ற விருப்பத்தில் தான் முன் கூட்டியே கருத்துக்களை அவதானமாக எழுதும்படி எழுதினேன். காலப்போக்கில் இந்த கட்டுப்பாடுகளுக்கு அவசியம் ஏதும் இல்லாமல் நிலமை சீரடையும் என நம்புகின்றேன். - Eelavan - 10-25-2005 பிருந்தன் எனக்கு இந்த பிற் 'கோக்கு'வாதம் முற்'பெப்சி' வாதம் எல்லாம் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்தது இலக்கியம் என்பது பொய்யும் புனைசுருட்டுமாக இல்லாமல் யதார்த்தமாக இருக்கவேண்டும். பிருந்தன் அவ்வையாரும் வள்ளுவரும் இன்னும் சங்ககாலத்தில் திணைக்கொரு ஒழுக்கம் சொல்லி களவியல் பற்றியெல்லாம் பாடி வைத்தவர்கள் தமிழர்கள் இல்லை தமிழ்க்கலாச்சாரத்தைப் பாடவில்லை என்று சொல்ல வருகிறீர்களா.நீங்கள் மட்டும்தான் தமிழர் நீங்கள் நினைத்தது தான் தமிழர் கலாச்சாரம் என்று வாதிடுவது பூனை கண்ணை மூடிக்கொண்டுவிட்டது போலத் தான் எனக்குப் படுகிறது. கண்ணகி மட்டுமல்ல மாதவியும் தமிழ் நாட்டில் தமிழ்க்கலாச்சாரத்தில் இருந்துதான் வந்தால்.ஆனானப்பட்ட கம்பனே தாசி பொன்னிக்குக் கம்பன் அடிமை என்று எழுத்தாதனம் பண்ணிக் கொடுத்தான் என்று சொல்வது அந்தக் காலத்தில் எம்மவர்கள் இதைப் பற்றி தெளிவுடன் இருந்தார்கள் என்பதைக் காட்டத்தான் அகத்தில் ஒன்று வைத்துப் புறத்தில் இன்னொன்று பாடவில்லை. சொல்லும் செயலும் எழுத்தும் என்றாகவே இருந்தது. இன்று நாங்கள் பேசுவது போன்று எழுதுவதில்லை.எழுத ஆரம்பித்தாலே எங்களை அறியாப் புனிதம் எங்களிடம் ஒட்டிக்கொண்டுவிடுகிறது.முன்னிரவில் செய்தவற்றை மறந்து விடியற்காலையில் பட்டாடை அணிந்துகொண்டு எழுத ஆரம்பிக்கிறோம்.தமிழ் மொழி பொய்மையாலும் புனைவாலும் நிறைந்துகொண்டே போகிறது. ஐரோப்பாவில் சட்டபூர்வமாக்கப்பட்ட பாலியல் தொழில் இலங்கையில் சட்டபூர்வமாக்கப்படக் கூடாது ஏனெறால் ஐரோப்பாவிலும் சிங்கப்பூரிலும் வசிக்கும் நீங்களும் நானும் எதை வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் எங்களுக்கு பாலியல் சுதந்திரம் உண்டு ஆனால் ஈழத்தில் அவற்றை அனுபவித்துவிடக் கூடாது. அப்படித்தானே? சட்டபூர்வமாக்கப்பட்ட பாலியல் தொழில்,ஒரு பாலுறவு போன்றவை உள்ள ஐரோப்பாவில் இருந்துகொண்டு நீங்கள் கெட்டுப்போகமாட்டீர்கள் ஆனால் ஈழத்தில் அவை சட்டபூர்வமாக்கப்பட்டால் அவர்கள் கெட்டுப்போவார்கள் ஏனென்றால் அங்கிருப்பவர்கள் எது நல்லது எது கெட்டது என்று சிந்திக்கத் தெரியாத அறிவிலிகள்.அவர்களுக்கு எது நல்லது எது கெட்டது என்று பிரித்துக் கொடுக்கும் வேலையை நீங்கள் பார்க்கிறீர்கள். யாழ் களத்தில் எழுதக் கூடாது என்பது உங்களின் சுய விருப்பாகவே இருக்கிறதே ஒழிய அதனால் வாசிப்பவர்கள் கெட்டுப்போவார்கள் என்றல்ல.இங்கே எழுதுபவர்களில் 90 சதவீதமானோர் புலத்தில் அதுவும் அதிகமாக ஐரோப்பாவிலும் கனடாவிலும் இருக்கிறார்கள் அவர்கள் உள்ள நாடுகளில் பாலியல் பற்றிய பேச்சுகளும் எழுத்துக்களும் வெளிப்படையாக வருகின்றன.அவர்கள் யாழ் களத்தைப் படித்துத் தான் கெட்டுப்போக வேண்டுமென்றில்லை. யாழ் களம் வெளிப்படையான கருத்தியல் விவாதங்களுக்கானது.அதை புனிதமாகக் கட்டமைக்காதீர்கள்.பலமும் பலவீனமும் இச்சைகளும் கொண்டதுதான் மனித வாழ்க்கை.அவை இல்லாதவர்கள் இமய மலைக்குத் தவம் செய்யப்போகலாம். - இவோன் - 10-25-2005 யாழ்க்களம் தான் தேசியப் போராட்டத்தை நிர்ணயிக்கிறது. யாழ்க்களம் தான் ஒட்டுமொத்தத் தமிழினத்தின் கலாச்சாரம், பண்பாட்டை நிர்ணயிக்கிறது. இங்கு எழுதும் நாலு பேரின் கருத்துக்கள்தான் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயத்தின் பழக்கவழக்கங்களை நிர்ணயிக்கிறது. எனவே ஈழநாதன் போன்ற சமூகவிரோதிகளை ஏதாவது செய்ய வேணும். 'அண்ணா' மாரிட்டைச் சொல்லி அவருக்கு ஏதாவது செய்ய வேணும். தமிழீழத் தேசியப் போராட்டத்தைத் தம் கருத்துக்களால் அழிக்க நினைக்கும் துரோகிகளை சும்மாவிடக்கூடாது. - இவோன் - 10-25-2005 இனி சற்று சீரியசாக, மரணதண்டனை கூட பல நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளது. சிலவற்றில் நடைமுறையில் இருக்கிறது. அதற்காக இன்னார் செய்வது சரி, இன்னார் செய்வது பிழை என்று ஒரேயடியாகத் தீர்ப்புக்கூற முடியுமா? தற்பால் திருமணத்துக்கு இரண்டொரு நாடுகள் அனுமதியளித்துள்ளன. மற்றவை அளிக்கவில்லை. யார் சரி. யார் பிழை? சரி. இவை அனுமதியளிக்கப்படாத நாடுகளில் அவற்றைப்பற்றிக் கதைப்பதில்லையா? பாராளுமன்றங்களில்கூட பகிரங்கவிவாதம் நடக்கிறது. இது தமிமீழத்துக்கு ஒவ்வாததாயிருக்கலாம். ஆனால் இதைப்பற்றி வாயே திறக்கக்கூடாது என்று சொல்வது இங்குமட்டும்தான் நடக்கிறது. கருத்துக்களால் இவற்றைத் தீயவையென்று மறுக்க முடியாத, மறுக்கத் திராணியற்றவர்களின் கூச்சல் தான் இவைகள். சரி. பெரிய பண்பாடு, ஒழுக்கம் பற்றிக் கதைப்பவர்களே, இந்த விவாதத்தைக்கூட எதிர்கொள்ளப் பயப்படும் உங்கள் உயர்ந்த பண்பாட்டுக் கட்டமைப்பு எத்தகையது. கதைத்தாலே எல்லாம சிதறி மக்கள் வழிதவறிப்போய்விடுவர் என்று பயப்படும் உங்கள் பண்பாட்டு இறுக்கம் எத்தகையது? எல்லாம் வெறும் கோறைதான். வெறும் சோத்தி மரங்கள்தான். முழுக்க முழுக்கப் பலவீனமான மக்கள் சமுதாயம்தான் எங்களது என்று நிங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். சும்மாவொரு கவிதை பார்த்தாலே எங்கட சனம் குழம்பி சமூகக் கட்மைப்புக் குலைந்துபோறதெண்டா, எவ்வளவு பலவீனமான சமுதாயம் எங்களது? இதை நான் சொல்லவில்லை. இங்கே கூப்பாடு போடுபவர்கள் சொல்கிறார்கள். "உவங்களெல்லாம் கூடி ஏதோ பாலியல் அரட்டை அடிக்கப்போகிறார்கள். ஐயகோ! அதெப்படி இன்னொருத்தன் உப்பிடி சுகம் அடையலாம்? உவங்கள விடக்கூடாது." என்பது போன்ற மனநிலையும் காரணமாக இருக்கலாம். அல்லது இன்னொருவரைக் கீழ்த்தரமாகச் சித்தரிப்பதன்மூலம் அவர்களைப் பயப்படுத்தி ஒதுங்கவைக்கும் நோக்கமாகவும் இருக்கலாம். "நீயும் அப்படித்தான். நீ விபச்சாரி. உன்ர தங்கச்சியை அனுப்பிவை. நீ எந்த நேரமும் அந்த யோசினையில தான் திரியிறனி" என்றவாறாகச் சொல்லி மற்றவர்களைப் பயப்படுத்தி விவாதத்திலிருந்து ஒதுங்கச் செய்வதுதான் அது. கருத்தை எதிர்கொள்ள முடியாதவர்கள் செய்யும் முதல்வேலை குடும்பத்தை இழுப்பது. நடிகைக்கு ஆதரவாகக் கதைக்கும் பெண்ணை, நீயும் விபச்சாரிபோல கிடக்கு எண்டு சொல்லி ஒதுங்கச் செய்வது முதல் பலதரப்பட்ட நிலைகளில் இது நடக்கிறது. எங்கட சமூகத்திலயும் இதுதான் நடக்கிறது. இதுபற்றி விரிவா தனியொரு பதிவாக எழுதிப்போடுறன். இப்ப வாறன். - Eelavan - 10-25-2005 நல்ல விளக்கம் இவோன் அண்மையில் மறைந்த சுந்தர ராமசாமி அவர்களுடைய ஜே.ஜே சில குறிப்புகள் யாராவது படித்திருக்கிறீர்களா? உன்னுடைய காலடிகள் தான் உன்னுடைய பாதையைத் தீர்மானிக்கின்றன என்பார்.மற்றவர்களுடைய காலடிகளைப் பின்பற்றிப் போகிறவர்களை நாய்வாய்க்கழிக் குருடர்கள் அதாவது நாயின் வாயிலுள்ள தடியைப் பிடித்தவாறே தொடரும் குருடர்களுக்கு ஒப்பிடுவார். கலாச்சாரம் மனிதனுக்கானதன்றி மனிதன் கலாச்சாரத்துக்காக வாழ்வதில்லை - தூயவன் - 10-25-2005 matharasi Wrote:பாட்டன் பாட்டி காலத்திலை இல்லீங்க....சங்க காலத்த்திலையே களவியல் என்று இருந்திச்சாம்....உங்க பாஷையில் சொன்னால் அவங்க ரொம்ப மோசமாம்... <!--emo& சரி நவீன உலகத்துக்கு ஏற்ற விதத்தில தானே மாறப்போறம் என்று மார்தட்டிப் புறப்பட்டனியள். ஆனால் இப்ப சங்க காலத்தில போய் நிக்கின்றியளே. அது தான் ஒண்டுமாப் புரியவில்லை. :roll: :roll: :roll: |