![]() |
|
குஷ்பு மீண்டும் வம்பு: துணைக்கு சுகாசினி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: குஷ்பு மீண்டும் வம்பு: துணைக்கு சுகாசினி (/showthread.php?tid=2541) |
- Vasampu - 11-17-2005 சா சா வினித் நீங்கள் நல்லபிள்ளை எனக்குத் தெரியாதா?? அப்பப்ப <b>திரியை இழுத்துவிட்டு எண்ணெய் ஊற்றினால் </b>கூடாத பிள்ளையென்று யார் சொன்னது?????? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - aathipan - 11-17-2005 வசம்பு நீங்கள் சொன்னது போல அரசு பஸ்களில் திருடர்கள் சாக்கிரதை என்று எழுதி உள்ளது. உண்மையில் அரசியல்வாதிகள் அதற்கும் எதிர்ப்புதெரிவித்து இருக்க வேண்டும். ஏன் என்றால் நாங்க தான் தமிழர்கள் ஆச்சே. எங்க தமிழ்நாட்டில எதுக்கு அப்படி எழுதவேண்டும். எங்களைத்திருடர்களாக பார்க்கிறது தமிழ்நாடு அரசு என சீறிப்பாய்ந்து இருக்க வேண்டும். தமிழன் கற்பு என்றதும் சண்டைக்குதயாராகிறான் ஏன் திருட்டு பட்டம் கொடுத்தால் ஏற்றுக்கொள்கிறான். அதை எழுதியவர்களை குஸ்புபோல நினைத்து ஏன் சண்டைக்கு போகவில்லை. உண்மையில் பிரச்சனைக்கு காரணம் அரசியல்வாதிகள் வேறு ஒரு விடயத்தில் குஸ்புமேல் கடுப்பானதுதான். அதைத்தான் இங்கே காட்டுகிறார்கள். குஸ்பு அளவுக்கதிகமாக தங்கர்பச்சன் விடயத்தில் கோபங்கொண்டு மன்னிப்புக்கேள் என மரியாதைக்குறைவாக அவரை நடத்தியதும் தாங்கள்(நடிகைகள்) எல்லாம் கற்புக்கரசிகள் எனஅப்போது காட்டிக்கொண்டதும்தான் காரணம். - Vasampu - 11-17-2005 <b>ஆதிபன் உங்களது வாதத்தில் என்ன நியாயமுள்ளது. தற்போது இந்தப் பிரைச்சினைகளை அரசியல்வாதிகளா மீண்டும் கிளப்பினார்கள்???</b> - Mathuran - 11-18-2005 aathipan Wrote:வசம்பு நீங்கள் சொன்னது போல அரசு பஸ்களில் திருடர்கள் சாக்கிரதை என்று எழுதி உள்ளது. உண்மையில் அரசியல்வாதிகள் அதற்கும் எதிர்ப்புதெரிவித்து இருக்க வேண்டும். ஏன் என்றால் நாங்க தான் தமிழர்கள் ஆச்சே. எங்க தமிழ்நாட்டில எதுக்கு அப்படி எழுதவேண்டும். எங்களைத்திருடர்களாக பார்க்கிறது தமிழ்நாடு அரசு என சீறிப்பாய்ந்து இருக்க வேண்டும். தமிழன் கற்பு என்றதும் சண்டைக்குதயாராகிறான் ஏன் திருட்டு பட்டம் கொடுத்தால் ஏற்றுக்கொள்கிறான். அதை எழுதியவர்களை குஸ்புபோல நினைத்து ஏன் சண்டைக்கு போகவில்லை. அபிதனுகு வணக்கம்! நீங்கள் குறிப்பிடுவது சிலாவேளை உங்கள் பார்வைக்கு சரியாக இருக்கலாம். ஆனால் குஸ்பு கூறிய கருத்திற்கு நீங்கள் கூறும் காரணமும் உதாரணமும் பொருத்தமற்று இருக்கின்றன. திருடர்கள் கவனம் என அரசு பேருந்துகளில் இருப்பதற்கும் தமிழ்நாட்டு அரசியல்த்தலைவர்கள் அதை எதிர்த்துப் போராடவேண்டும் என்பதற்கும் என்ன சம்மந்தம் இருக்கின்றது? குஸ்பு அவமானப் படுத்தியது தமிழ் பெண்களைத்தானே. அதனால்த்தான் தமிழ் தலைவர்கள் அதனை எதிர்த்து போராடுகின்றார்கள். அரசியல் வாதிகள் என்ற ஒரு சொல்லுக்குள் பலவிடயங்களை புறம்தள்ளிவிடாதீர்கள். அந்த தமிழ் அரசியல் வாதிகளில் பலருக்கு தமிழின் மீதும் தமிழரின்மீதும் அக்கறை இருக்கின்றதென்பதை புரிந்துகொள்ள முயலுங்கள். நேற்று நடிக்க வந்ததனால் குஸ்புவை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் தமிழ் உணர்வாளர்கள் அப்படியானவர்கள் அல்லர். அவர்கள் உங்களின் எங்களின் தமிழுக்காக பாடுபடுபவர்கள். முடிந்தால் போற்றுங்கள் இல்லாது விடில் தூற்றாமலாவது -இருந்தாலே போதும். எயிட்சைப்பற்றிய அறிவுரை தமிழர்களுக்கு குஸ்ப்பு புகட்டித்தான் தெரிய வேண்டியதில்லை. அதற்கென பல விளிப்புணர்வு கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவர்கள் கூட தமிழர்களை வம்பிற்கு இழுத்ததும் இல்லை இழுக்கவும் மாட்டார்கள். - aathipan - 11-18-2005 தமிழ்நாட்டில் எயிட்ஸ் இதை நான் வெட்டி ஒட்டியுள்ளேன். NATIONAL AIDS CONTROL PROGRAMME, INDIA AIDS CASES IN INDIA (Reported to NACO) (As on 31st July, 2005) S. No. State/UT AIDS Cases 1 Andhra Pradesh 12349 2 Assam 225 3 Arunachal Pradesh 0 4 A & N Islands 33 5 Bihar 155 6 Chattisgarh 0 7 Chandigarh (UT) 1260 8 Delhi 970 9 Daman & Diu 1 10 Dadra & Nagar Haveli 0 11 Goa 567 12 Gujarat 5636 13 Haryana 486 14 Himachal Pradesh 252 15 Jharkhand 0 16 Jammu & Kashmir 2 17 Karnataka 2896 18 Kerala 1769 19 Lakshadweep 0 20 Madhya Pradesh 1396 21 Maharashtra 13747 22 Orissa 467 23 Nagaland 736 24 Manipur 2866 25 Mizoram 106 26 Meghalaya 8 27 Pondicherry 302 28 Punjab 292 29 Rajasthan 1153 30 Sikkim 8 31 Tamilnadu 52036 32 Tripura 5 33 Uttranchal 0 34 Uttar Pradesh 1383 35 West Bengal 2397 36 A,bad Mun.Corp. 621 37 Chennai M.C. 0 38 Mumbai M.C 7484 Total: 111608 http://www.psgaidsinfo.org/indianscenario.htm - Vasampu - 11-18-2005 ஆதிபன் தமிழ் நாட்டில் எத்தனை பெண்கள் திருமணத்திற்கு முன் கற்போடு இருக்கின்றார்கள் என்ற கேள்விக்கும் இதற்கும் என்ன சம்பந்தம். அத்துடன் நீங்கள் குறிப்பிடும் பட்டியலில் தமிழ் நாட்டில் வசிக்கும் தமிழர் அல்லாதோரும் அடங்குகின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்க. - Danklas - 11-18-2005 அடச்சா.. இந்தியாவில உள்ள அரைவாசி எயிட்ஸ் நோயாளிகள் தமிழ் நாட்டிலா இருக்கிறார்கள்?? (52ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள்??).. ஓம் ஓம் வரும்,,, 3 வயசு பெண் சிசுவையெ கற்பழிச்சு கொலை செய்யிற மனிதர்கள் இருக்கிற இடமாச்சே?? எப்படியப்பா?? ஓய் இந்தியாவிலையும் ஒரு சட்டம் போடுங்கப்பா.. ஒவ்வொரு குற்றத்துக்கு ஒவ்வொரு உறுப்பை வெட்டுறதெண்டு... (அரபிய நாடுகளில நடக்கிறமாதிரி).. சா என்ன ஒரு காட்டுமிராண்டித்தனமப்பா.... சென்னையிலேயே இப்படியெண்டால் மும்பை என்ன பாடு படும்,,,, :evil: :evil: :evil: - Danklas - 11-18-2005 Vasampu Wrote:ஆதிபன் ஓய் வம்பு என்னப்பா என்னைவிட கனக்க தெரியும் எண்டு சொன்னீங்க? ஓ அரசியல்ல மட்டும்தானோ?? அதுசரி வசம்பு எயிட்ஸ் நோய் எதால பரவுறது? காக்கா கொண்டு வந்து போடுற எச்சத்தாலையா?? ஆதிபன் குறிப்பிட்டதை பாருங்க,, இந்தியாவிலேயே தமிழ் நாட்டிலதான் எயிட்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கிறார்கள், அது என்னத்தால வந்தது?? :roll: :twisted: :twisted: ஒகே வசம்ஸ் உங்க கருத்தை "டக்குகண்ணா" வில இருந்து ஆரம்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்,,, :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vasampu - 11-18-2005 மக்கு டண்னா எயிட்ஸ் பரவுவதற்கு நீங்கள் ஆற்றும் சேவை நான் அறியாததல்ல. அதை ஒருபுறம் வைத்துவிட்டு. தமிழ் நாட்டில் மொத்த சனத்தொகை என்ன 60000மா அல்லது 70000மா????? சரி இந்தத் தொகை இளைஞர்களை மட்டுமா சொல்கின்றது. குஸ்பு கேட்டது திருமணத்திற்கு முன்பு எத்தனை பேர் கற்புடன் இருக்கின்றார்கள் என்று. அப்படி அவர் கேட்டதற்கு ஆதிபன் தந்த இந்த விபரங்கள் ஆதாரம் என்றால் அங்கு காலேஜ் மாணவமாணவிகளிடமல்லவா எயிட்ஸ தொற்று அதிகரித்திருக்க வேண்டும். இவையெல்லாம் உமது ம---மண்டையில் எப்படி ஏறும். எனிமேலாவது கொஞ்சம் பாவியும்----------------------- - வினித் - 11-18-2005 குஸ்பு கேட்டதோ சொன்னாதோ தப்போ இல்லை ஏன் என் எண்டு தெரியுமோ?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- aathipan - 11-18-2005 வசம்பு குஸ்பு சொன்னதை இன்னும் ஒருதடவை படியுங்க. படித்த எந்த ஆணும் திருமனத்தின் போது மனைவியின் கன்னித்தன்மையை எதிர்பார்க்க மாட்டான். குஷ்பு பெண்கள் தங்களுடைய செக்ஸ் விருப்பங்களை வெளியிடும் விஷயத்தில் சென்னை பெங்களுரை விட பின் தங்கியே இருக்கிறது. இப்போது கடந்து வருகிறார்கள். பப்களிலும் டிஸ்கொதேகளிலும் ஏராலமான பெண்களை பார்க்க முடிகிறது.செக்ஸ் பற்றி பெண்களால் வெளிப்படையாக பேசமுடிகிறது. கட்டு பெட்டித்தனம் நிறைந்த இந்திய சமூகத்தில் பெண் மெல்ல இந்த விஷயத்தில் சிறகடிக்க ஆரம்பிக்கிறாள். ஆனாலும் ஸ்டெஃபானி போன்ற பெண்களுக்கு ஏற்பட்ட விபத்துக்கள் இந்த போக்கு ஆரோக்கியம்தானா என்கிற கேள்வியை எழுபுகிறது. அதே சமயம் பள்ளி கூடங்களில் செக்ஸ் கல்வி மிகவும் அவசியம். பள்ளி கூடங்களில் சொல்லி தரவில்லை என்றாலும் கூட பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய அடிப்படைகளை சொல்லித் தர வேண்டியிருக்கிறது. என்னை பொறுத்தவரை செக்ஸ் என்பது உடல் பற்றியது மட்டுமல்ல. அதில் மனதும் சம்பந்தப் பட்டிருக்கிறது. வாரந்தோறும் பாய்ஃப்ரண்டை மாற்றிகொள்வது போன்ற விஷயத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு பெண் தனது பாய் ஃப்ரண்ட் பற்றி உறுதியாக இருக்கும் போது அவள் தனது பெற்றோரிடம் சொல்லிகொ0ண்டே அவனுடன் வெளியே போகலாம். தன் பெண் சீரியஸான உறவை வைத்திருக்கும் போது அதை பெற்றோர் அனுமதிக்க வேண்டும். பெண்கள் திருமணம் ஆகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களில் இருந்து நமது சமுகம் விடுதலை ஆகவேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்ய போகிறவள் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துகொள்ளும் போது கர்ப்பமாகாமலும்இ பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னை தற்காத்து கொள்ள வேண்டும். நான் காதலித்த நபரை திருமணம் செய்துகொண்டேன். நாங்கள் எங்களது உறவு பற்றி நிச்சயமாக இருந்ததால் திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்ந்தோம். இப்போது திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு குழந்தைகள் பிறந்ததால் எங்கள் பொறுப்புகள் அதிகமாகியிருக்கின்றன. குழந்தைகளும் எங்களுடனேயே தூங்குவதால் நாங்கள் எங்களுக்கென்று தனியான நேரத்தை ஒதுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இப்பொழுதும் எங்கள் தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கிரது.மனவாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் உடல்ரீதியாகவும் சந்தோஷமளிக்க தெரிந்திருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் முழுமையாக திருப்தியடைய செய்வதுதான் ஆனந்தம். இருவரும் தங்கள் செக்ஸ் ஆசைகளை பரஸ்பரம் புரிந்துகொண்டால் மணவாழ்வில் பிரச்சனை இருக்காது. சில தம்பதிகள் செக்ஸ் புத்த்கங்கள் படங்கள் பயன்படுத்தி தாம்பத்திய இன்பத்தை பெருக்கி கொள்கிறார்கள். அதை தவறு என்று சொல்ல முடியாது. அதே சமயம் இருவருமே ஒருவர் மற்ரவரது விருப்பு வெறுப்புகளையும் சௌகரிய அசௌகரிய்ங்களையும் உணர்ந்து செயல்பட வேண்டும். பெண்கள் தமது செக்ஸ் விருப்பங்களை பற்றி பேசினால் அவர்களை தவறானவர்களாகப் பார்க்கும் ஆண்களின் கண்ணோட்டம் மாற வேண்டும். செக்ஸிற்கு இரு நபர்களிடைய மன இணக்கம் அவசியம். - Vasampu - 11-18-2005 <b>ஆதிபன் </b> முதலில் நீங்கள் நிஜ உலகிற்கு வாங்க. இந்தியா டுடேயில் இடம்பெற்ற குஸ்புவின் இந்தச் செவ்வியால் பிரைச்சினை ஆரம்பிக்கவில்லை. இச்செய்வி பற்றி இன்னொரு பத்திரிகையின் நிருபர் கேட்டபோது குஸ்பு தமிழ் நாட்டில் எத்தனை பெண்கள் திருமணத்திற்கு முன் கற்புடன் இருக்கின்றார்கள் என்ற கேள்விதான் பிரைச்சினையை ஆரம்பித்து வைத்தது. அதன் பின் அது ஓரளவு ஓய்ந்து கொண்டு போனபோது யார் அதை மீண்டும் தொடக்கி வைத்தது. இவற்றிற்கு முறையாக பதிலெழுதாமல் ஏதேதெல்லாம் எழுதுகின்றீர்கள். எனவே ஒரு விடயத்தைப் பற்றி எழுதும் போது அதைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்து விட்டு எழுதுங்கள். - வினித் - 11-18-2005 [quote=Vasampu]<b>ஆதிபன் </b> முதலில் நீங்கள் நிஜ உலகிற்கு வாங்க. இந்தியா டுடேயில் இடம்பெற்ற குஸ்புவின் இந்தச் செவ்வியால் பிரைச்சினை ஆரம்பிக்கவில்லை. இச்செய்வி பற்றி இன்னொரு பத்திரிகையின் நிருபர் கேட்டபோது குஸ்பு தமிழ் நாட்டில் எத்தனை பெண்கள் திருமணத்திற்கு முன் கற்புடன் இருக்கின்றார்கள் என்ற கேள்விதான் பிரைச்சினையை ஆரம்பித்து வைத்தது. அதன் பின் அது ஓரளவு ஓய்ந்து கொண்டு போனபோது யார் அதை மீண்டும் தொடக்கி வைத்தது. யார்? யார்? - Vasampu - 11-18-2005 <b>வினித்</b> நீங்களில்லையென்று நான் முன்பே சொல்லிவிட்டேன் தானே. பொறுங்கள் ஆதிபன் தேடிக் கண்டு பிடிச்சு இங்கெ கொண்டவந்து கட்டுவார் சா சா கொட்டுவார். - அருவி - 11-18-2005 Quote:திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துகொள்ளும் போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் வராமலும் <b>பெண் தன்னை</b> தற்காத்து கொள்ள வேண்டும். ஏன் இதில் பெண்களை மட்டும் தனிமைப்படுத்திக்கூறினீர்கள் என்று அறியலாமா? :?: இதில் பால்வினைநோயைக் காவி வழங்குவது ஆணும் அதைப்பெறுவது பெண்ணும் போலல்லவா உள்ளது. ஆனால் அது அவ்வாறில்லையே. பால்வினை நோய்கள் தொற்றாமல் இருப்பதற்கு இருவரும் அவதானத்துடன் இருக்கவேண்டும். அடுத்து கர்ப்பமாதல், இதிலும் ஆண் கணிசமான பங்கை வகிக்கிறான் என்பதை மறந்திடாதீங்க. இதில் பெண் கருவைச் சுமக்கிறாளே தவிர அதற்கான முழுப் பொறுப்பையும் அவள் சுமக்க முடியாது. கனடாவினில் ஒருவரின் மீது இரண்டு முதன்நிலைக் கொலைக்குற்றச்சாட்டுக்கள் பதிவாகி விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. குற்றச்சாட்டு என்னவெனில், தனது இரண்டு பெண்நண்பிகளிற்கு எச்.ஐ.வி. பொஸிட்டிவ் வைரஸ் தொற்றிற்கும் அதனால் அவர்களின் மரணத்திற்கு இவர் காரணமாக இருந்தார் என்பதாகும். :!:
- aswini2005 - 11-18-2005 Mathuran Wrote:[மதுரன் நீங்கள் சொல்லும் கழகங்கள் குழுக்களின் விழிப்புணர்வு பேசும் பெரியவர்களின் இரண்டாம் மூன்றாம் மனைவிகளின் சோகங்களை அறியவில்லையோ நீங்கள் ? உங்கள் மதிப்புக்கு உரிய தமிழககழகங்கள் அமைப்புகளின் உணர்வாளர்களின் பாலியல் வக்கிரங்களுக்கு எத்தனையே தமிழகத்துச் சிறுமிகளும் பலியாகி தன்னைக்காக்க இயலாத கையினால் தன் வயிற்றிலிருந்து ஒரு குழந்தையையும் பிரசவித்து சாவுக்கும் வாழ்வுக்கும் போராடும் பெண்களின் கதை இந்த உணர்வாளர்களினால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதையும் புரியுங்கள்.
- Vaanampaadi - 11-19-2005 அமெரிக்காவுக்கு பறந்தார் சுஹாசினி நவம்பர் 19, 2005 சென்னை: சுஹாசினி தன் மீது குவிந்து வரும் வழக்குகளில் இருந்து தப்பித்துக்கொள்ள அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு வைத்து கொள்வதில் தவறில்லை என்று நடிகை குஷ்பு சொன்ன கருத்துக்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அந்த பிரச்சினை அடங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நடிகை சுஹாசினி தமிழர்களுக்கு எதிரகவும் குஷ்புவுக்கு ஆதரவாகவும் தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்து இருக்கிறது என்று கருத்து வெளியிட்டார். தமிழினத்தையே அவமானப்படுத்தும் வகையில் அவரது பேச்சு இருந்ததால் தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் பல்வேறு நீதிமன்றங்களில் சுஹாசினிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து வருகிறார்கள். சுஹாசினிக்கு எதிராக கரூர் நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடரப்பட்டன. அதன் பிறகு ஈரோடு, வாலாஜபேட்டை, திருச்சி, எழும்பூர், நாமக்கல், திருப்பூர் ஆகிய ஊர்களில் உள்ள நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. நேற்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் நீதிமன்றத்திலும், திண்டுக்கல் 3வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும் சுஹாசினி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே இன்று தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் குற்றவியல் நீதிமன்றத்தில் பாமக சார்பில் சுஹாசினி மீது மேலும் ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. முதல் கட்டமாக ஈரோடு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் டிசம்பர் 5ம் தேதி நேரில் ஆஜராக சுஹாசினிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆஜராகவில்லையெனில் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்படும். தனக்கு எதிராக குவியும் வழக்குகளை கண்டு மலைத்து போய் உள்ள சுஹாசினி தமிழ்நாட்டில் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னையில் தங்கியிருப்பது நல்லதல்ல என்று அவர் குடும்பத்தினர் சொன்னார்களாம். இதை ஏற்றுக் கொண்ட சுஹாசினி மிக ரகசியமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றுவிட்டதாக தெரியவந்துள்ளது. ஹைதராபாத்தில் நடந்த ஒரு விழாவுக்கு சென்றவர் அப்படியே அங்கிருந்து அமெரிக்காவுக்கு விமானத்தில் எஸ்கேப் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் அவர் எங்கு தங்கியிருக்கிறார் என்பதை அறிய அவரது உதவியாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, தனக்கு எதுவும் தெரியாது. ஆனால் இப்போது சென்னையில் அவர் இல்லை. திங்கட்கிழமை திரும்பிவிடுவார் என்றார். ஆனால் நீதிமன்றத்தில் இருந்து வரும் சம்மன் உத்தரவை கையெழுத்திட்டு பெறுவதை தவிர்க்கவே அவர் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் சொல்கின்றன. இது பற்றி பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் மூத்த தலைவர்களிடம் கேட்ட போது தமிழர்களை அவமானப்படுத்திய சுஹாசினி எங்கு போனாலும் தப்ப முடியாது. சம்மனை அவர் சார்பில் யாரும் வாங்காவிட்டால் அவர் வீட்டு கதவில் ஒட்ட முடியும். அதன் பேரில் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்க முடியும் என்றனர். எனவே சுஹாசினி விவகாரத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. thatstamil - narathar - 11-20-2005 தமிழர்களுக்கென்ன கொம்பா முளைத்திருக்கின்றது? * குஷ்பு விவகாரத்தை ஊதிப் பெருப்பித்து விட்ட சுஹாசினியின் கேள்வி * தமிழகத்தை கலக்கும் `கற்பு ' விவகாரம் -யாழினியன் "ஒரு பெண் எப்போது சந்தோஷமாக இருப்பாள்? தன் கருத்துக்கள், கனவுகள் மதிக்கப்படுகின்றன,. அவற்றை பயப்படாமல், தயங்காமல், சுதந்திரமாக வெளிப்படையாகச் சொல்ல முடிகிறது, அவை பலரால் கேட்கப்படுகின்றன என்ற நிலை வரும்போது தான் அவள் மனநிறைவுடன் இருப்பாள். "நான் பார்த்தவரையில் முன்பு கட்டுப்பெட்டித்தனமாகக் கருதப்பட்ட தமிழ்ப் பெண்கள் இன்று நிறைய மாறியிருக்கிறார்கள். குடும்பப் பொறுப்புகளில் எந்தக் குறையும் வைக்காமல் சிரத்தையாகச் செய்துவிட்டு நாட்டு நடப்பில் அக்கறையும், விஞ்ஞானத்தில் ஆர்வமும், இயற்கைச் சீற்றத்தால் மற்றவர்களுக்கு உதவும் கருணையும், எதிர்காலம் பற்றிய குறிக்கோளும் கொண்டவர்களாக மாறியிருக்கிறார்கள்". அவர்களுக்கு இப்போது தேவைப்படுவதெல்லாம் அடைப்பட்டுக் கிடக்கும் தங்கள் திறமையை, மிதமிருக்கும் தெம்பை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தும் வாய்ப்புகள் தான். அதற்கு அவர்களுக்கு முன்மாதிரிகளையும், வழிகாட்டிகளையும் அவர்கள் மனம் தேடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்". "இன்று சிறு ஊர்களில் இருக்கும் நம் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு வழிகாட்ட, உந்துதலும் உத்வேகமும் தருவதற்கு நிறைய நிஜவாழ்க்கை ஹீரோயின்கள் தேவை. மேற்குறித்த வாசகங்களுக்கு உரித்துடையவர் நடிகை சுஹாசினி. இவர் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்பவும், நடித்துக் கொண்டிருக்கின்றார். இவர் ராஜ் தொலைக்காட்சிச் சேவையில் பெண்களுக்காக "லேடீஸ் ஜங்ஷன்" என்ற விவாத நிகழ்ச்சியைத் தொகுத்துத் தருகின்றார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பெண்களையும் அவர்களது மன ஓட்டங்களையும் வைத்துத் தான் மேற்குறித்த கருத்துகளை முன்வைத்துள்ளார். தமிழ்நாட்டுப் பெண்களுக்கு வழிகாட்ட உந்துதலும் உத்வேகமும் கொண்ட பெண்ணாக நிஜ வாழ்க்கை ஹீரோயினாக தன்னை வெளிப்படுத்தும் விதத்தில் நடிகை குஷ்பு விவகாரத்தில் சுஹாசினி தலை நீட்டியுள்ளார். கருத்துச் சொல்லியுள்ளார். உலக சினிமா அக்கெடமி மற்றும் செவன்த் சேனல் நிறுவனத்தின் சார்பில் "தமிழ்நாடு உலகத் திரைப்பட விழா" சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய சுஹாசினியின் கருத்துகளுக்கு பலமான எதிர்ப்புகள், கண்டனங்கள் வெளிப்பட்டுள்ளன. தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி நடிகை குஷ்பு பேசிய கருத்துக்கள் சரியே அதில் தவறேதுமில்லை. அதைப் பிரச்சினையாக்கி அவரை சங்கடத்துக்கு உள்ளாக்கிய தமிழர்கள் தலை குனிய வேண்டும். அதற்காக தமிழர்களின் சார்பில் நான் குஷ்புவிடம் மன்னிப்புக் கேட்கிறேன் என்று பேசினார். இந்தப் பேச்சுக்கு திரைப்பட உலகைச் சார்ந்தவர்களும் அரசியல்வாதிகள் பலரும் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்த் திரைப்பட உலகம் திரையில் மட்டும் போராட்டங்களை சந்திக்கவில்லை. நிஜத்திலும் பல்வேறு போராட்டங்களை சமீப காலங்களில் சம்பவங்களில் பல நிலைகளில் பல்வேறு முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இயக்குநர் தங்கர்பச்சான் நடிகைகளை இழிவு செய்து பேசிய பிரச்சினை திரைப்படத் துறையைத் தாண்டி அரசியல் களத்திற்கு வந்தது. தங்கர் பச்சான் மன்னிப்புக் கேட்டு அந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டினாலும் தமிழ் உணர்வாளர்கள் தங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள். குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன தங்கருக்கு ஆதரவாகச் செயற்பட்டன. ஏலவே ரசிகர் மன்றங்களுக்கு எதிராகப் போராடி வருபவர்களுக்கு தங்கர் விவகாரம் மேலும் வலுவூட்டியுள்ளது. இந்தியா டுடே 2005 செப்டெம்பர் 28 இதழில் இந்தியப் பெண்களின் பாலியல் விருப்பங்கள் பற்றிய ஒரு விரிவான கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் நடிகை குஷ்புவிடம் கருத்துக் கேட்கப்பட்டிருந்தது. அதில் அவர் கூறியதாவது; "படித்த எந்த ஆண்மகனும் திருமணத்தின் போது தனது மனைவி கன்னித் தன்மையுடன் தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான்.... திருமணத்திற்கு முன்பு பாலுறவு கொள்ளும் போது பால்வினை நோய் வராமலும் கருத்தரிக்காமலும் பார்த்துக் கொள்வது தான் முக்கியம்.திருமணத்திற்கு முன்பு சேர்ந்து வாழ்வது தவறில்லை..... செக்ஸ் புத்தகங்கள், படங்கள் மூலம் பாலியல் இன்பத்தைப் பெற்றுக் கொள்வது தவறில்லை....." என்பன போன்ற கருத்துகளைக் கூறியிருந்தார். தமிழ்ப் பெண்களை குஷ்பு அவமானப்படுத்திவிட்டார் என்ற தொனியில் ஊடகங்களில் கருத்துப் பரப்புகை செய்யப்பட்டது. பலரும் குஷ்புவை நேரடியாகவே கண்டித்தார்கள். பா.ம.க.மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் குஷ்புவுக்கு எதிராக தெரு முனைப் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். குஷ்புவுக்கு எதிரான போராட்டம் மேலும் மேலும் வலுப்பெறத் தொடங்கியது. ஊடகங்களும் போராட்டத்தை வளர்த்தன. குஷ்புவின் கருத்துக்கள் அவர் மீதான தனிப்பட்ட அவதூறாக மாற்றப் பட்டது. தங்கர் பச்சானை மன்னிப்பு கேட்க வைத்த நடிகர் சங்கம் குஷ்புவின் கருத்துத் தொடர்பாக என்ன சொல்கிறது? என்ற எதிர்வாதம் மேற்கிளம்பத் தொடங்கியது. எங்கிருந்தோ எம் மண்ணில் பிழைக்க வந்த குஷ்பு தமிழ்ப் பெண்களின் கற்புப் பற்றி பேச முடியுமா? என்னும் வாதம் சூடுபிடிக்கத் தொடங்கியது. பின்னர் குஷ்பு தான் கூறியதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டிருந்தார். ஆனாலும், குஷ்பு மீது பல வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் நடிகை சுஹாசினி குஷ்புவுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருக்கும் விவகாரம். "குஷ்பு தெரிவித்த கருத்துத் தொடர்பாக கருத்துக் கேட்டவர்கள் குஷ்புவுக்கு எதிரானவர்களிடம் மட்டுமே கேட்டு அதை வெளியிட்டுள்ளனர். என்னிடம் கருத்துக் கேட்டிருந்தால் கிழித்திருப்பேன். குஷ்புவை வட மாநிலத்துக்கு ஓடு என்று சொன்னவர்கள் என்னை பரமக்குடிக்கு ஓடு என்று சொல்வார்களா? தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது?" என்றும் சுஹாசினி பேசினார். இதற்கு திரையுலகினர், தமிழ் உணர்வாளர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒட்டு மொத்தத் தமிழர்களின் பிரதிநிதியாக மன்னிப்புக் கேட்க இவர் யார்? என்று சுஹாசினி மீது பாயத் தொடங்கியுள்ளார்கள். எதிர்ப்புகள், போராட்டங்கள் பல வடிவங்களில் வெளிப்பட்டன. ஆனால், இவற்றை துணிவுடன் எதிர்கொள்ளும் திராணி சுஹாசினிக்கு இருக்கவில்லை. அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார். ஆனால், எதையும் சமாளித்து முன்னேறும் நிஜவாழ்க்கை ஹீரோயினாக அவரால் பரிணமிக்க முடியவில்லை. ஒரு கலைஞருக்குரிய உணர்ச்சி வேகம் தான் இருந்தது. ஆனால், குஷ்பு தெரிவித்த கருத்துக்கள் மூலம் வெளிப்பட்ட எதிர்வினைகளின் பின்னால் உள்ள சமூக உணர்வுகளை சமூகக் கிடக்கையை அரசியலைப் புரிந்து கொள்ளுமளவிற்கு முதிர்ச்சியும் அறிவும் நிதானமும் பொறுப்பும் இருக்கவில்லை. இதைவிட ஊடகங்களும், இந்த குஷ்பு விவகாரத்தை திசை திருப்பி விட்டன. உதாரணமாக கடந்த (23.9.05) சன் தொலைக்காட்சியில் சுனாமி பற்றிய அறிவிப்பைப் போல ஒரே ஃப்ளாஷ் நியூஸ் தமிழ்ப் பெண்கள் கற்பு இல்லாதவர்களா? குஷ்புவுக்கு சரமாரியான கண்டனம்...... பாருங்கள் இன்றைய தமிழ் முரசு, மாலை முரசு போன்ற விளம்பரங்கள் ஆங்காங்கு பெட்டிக் கடைகளில் முன்புறம் தொங்கவிடப்பட்டன. மொத்தத்தில் குஷ்பு தமிழ்ப் பெண்கள் கற்பு இல்லாதவர்கள்,. திருமணத்திற்கு முன்பே அவர்கள் உறவு கொள்ளக்கூடியவர்கள் என்ற தொனியில் பேசியுள்ளார். என்ற விளக்கம் ஒன்றைப் பரிமாணத்தில் எங்கும் பலரால் கருத்தாடல் பரப்புகை செய்யப்பட்டது.இந்தப் பரப்புகை கருத்தாடல் சார்ந்து தான் பா.ம.க.விடுதலைச் சிறுத்தைகள் பெண்கள் அணியினர் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் இன்னொரு விதமாகவும் மாறியது. தமிழ்ப் பண்பாடு பற்றி தமிழ்ப் பெண்கள் பற்றி வடக்கிலிருந்து வந்தவர்களுக்கு எப்படித் தெரியும்? இவள் எப்படி (தமிழச்சிகளை) எங்களைச் சொல்ல முடியும்? எங்கிருந்தோ பிழைக்க வந்தவள் தமிழ்ப் பெண்கள் கற்பு இல்லாதவர்கள் என்று சொல்ல முடியுமா? அதுவும் இவள் முஸ்லிம் பெண். தமிழர் அல்லாதவள்? எப்படி இவள் கருத்துக் கூற முடியும்?....... இப்படி விவகாரம் பல நிலைகளில் வளர்ந்தது. இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் நடிகை சுஹாசினி தன்னுணர்வு பெற்று உணர்ச்சி பொங்கிப் பேசிய கருத்துகள் மேலும் நிலைமைகளை சிக்கலடையச் செய்துள்ளது. "தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது?" தமிழர்கள் சார்பில் நான் குஷ்புவிடம் மன்னிப்புக் கேட்கிறேன்" போன்ற வார்த்தைகள் தமிழ் உணர்வாளர்களை மேலும் உசுப்பி விட்டுள்ளது. குஷ்பு தெரிவித்த இந்தக் கருத்துகள் ஏற்படுத்தி உள்ள நெருக்கடிகள் ஒரு புறமிருக்க, கருத்துச் சுதந்திரம் பறி போகிறது என்று குஷ்புவைப் பாதுகாக்கும் நோக்கில் சில சிந்தனையாளர்கள் அள்ளி விடும் கருத்துகள் ஒரே நாளில் குஷ்புவை பெரியாரி பெண்ணியவாதியாகப் புரட்சியாளராக்கி விட்டன. இந்தக் கோணத்தில் குஷ்புவை பார்க்க வேண்டுமா? என்ற கேள்வியும் எழுகிறது. இந்து பார்ப்பன கலாசாரத்திற்கு எதிராக மானுட விடுதலைக்காகக் களம் கண்டவர் பெரியார். அந்தக் களத்தில் இந்து கலாசார மதிப்பீடுகளையும் புனித ஒழுக்கக் கட்டுமானங்களையும் உடைத்தெறிந்தவர் அவர். <span style='color:red'>அதாவது, கற்பு, தேசியம், ஒழுக்கம், சாதி, மதம், கடவுள் என்று புனிதமாகக் கட்டமைக்கப்பட்டிருந்த அனைத்தையும் பல்லாயிரக் கணக்கான மக்கள் என்ன நினைப்பார்களோ? என்று கவலைப்படாமல் போட்டு உடைத்தவர் பெரியார். அவரது சிந்தனையில் செயலில் உதித்த `தமிழகம்' `தமிழுணர்வு' `விடுதலை' பற்றிய கருத்தாக்கங்கள் புரட்சிகரமானவை - கலகத்தன்மை மிக்கவை. இயங்கியல் தன்மை கொண்டவை. நடைமுறை சார்ந்தவை. இதற்கு நீண்ட வரலாறு உண்டு எவ்வாறு குஷ்புவை தமிழகத்தை விட்டே விரட்ட வேண்டும் என்று கூறுவது முட்டாள்தனமோ அதே அளவு குஷ்புவை பெண்ணியவாதியாக பெரியாரிஸ்டாக பார்ப்பது அவலமானது என்று கருத்துத் தெரிவிப்பவர்களும் உள்ளார்கள். குஷ்பு கூறிய கருத்தும் அதற்கு எதிராக எழுந்த உணர்வலைகளும் அடங்குவதற்குள் குஷ்புவுக்கு ஆதரவாகப் பேசிய சுஹாசினி `தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது?' என்ற கேள்வி மூலம் குஷ்பு விவகாரத்தை மேலும் ஊதிப் பெருக்கி விட்டார். தமிழுணர்வாளர்கள் இதற்கெதிராக குரல் கொடுப்பது, போராடுவது அவரவர் அரசியல் - நலன்கள் சார்ந்து வெளிப்படும். தமிழ்த் திரையுலகில் பெண்கள் (நடிகைகள்) படும் அவலங்களும் சுரண்டல்களும் அதிகம். இந்தக் கதைகள் வெளியில் வருவதும் உண்டு. அதை விட அதுவே இயல்பென்று கருதி வாழ்ந்துவிட்டுப் போகும், சலித்துக் கொண்டு போகும் கொடுமை தான் மோசமானது. இந்த வாழ்க்கை பற்றியெல்லாம் ஆத்திரப்படாமல் குரல் கொடுக்க முடியாத நடிகைகள் தான் `பெரும்' நடிகைகளாக உலா வருகிறார்கள். இதை விட துணை நடிகைகள் மிக மிக மோசமாக பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் கொடுமை சொல்லி மாளாது. இவையெல்லாத்துக்கும் குரல் கொடுக்கவும் துணிச்சலும் இல்லை. அதற்கெதிராக தொடர்ந்து போராடவும் தைரியமும் இல்லை. [size=18]நடிகைகள் தினமும் பல நிலைகளில் சுயமரியாதை இழந்து வாழத் தள்ளப்படுகிறார்கள். இதற்கெதிராக சுஹாசினி போன்றவர்கள் எப்போதாவது குரல் கொடுத்தார்களா? சமூகத் தளங்களில் பெண்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் அதிகம். இவையெல்லாம் இவர்களுக்கு பிரச்சினைகளாகப்படவில்லை.</span>அப்ப இவர்களுக்கு எதுதான் பிரச்சினை? இதுதான் புரியாமல் தமிழ்நாட்டின் சுயமரியாதைக்காரர்கள், கலகக்காரர்கள் உள்ளார்கள் போலும். ஆனால், ஊடகங்கள் தமது கோணல் பார்வைகளால் வக்கிர உணர்வுகளால் `இந்த விவகாரங்களை' ஊதிப் பெருக்கி கிசுகிசு விவகாரங்களாக சுருக்கி விடும் அபாயம் நோக்கி நகர்த்திச் செல்லும் கொடுமை தமிழ் நாட்டில் ஒரு மாயச் சுழலாக மாறியுள்ளது. http://www.thinakural.com/New%20web%20site.../Article-12.htm - Vasampu - 11-20-2005 நன்றி நாரதர் இணைப்பிற்கு கட்டுரையாசிரியர் தன் சுய விருப்புகளையே திணிக்க முற்பட்டுள்ளார். உண்மையில் இந்தியாடுடேயில் வந்த செவ்வியால் பிரைச்சினை ஆரம்பிக்கவில்லை. அதன் பின்பு இன்னொரு பத்திரிகை நிருபர் அந்தச் செவ்வி பற்றிக் கேட்டபோது தமிழ்நாட்டில் எத்தனை பெண்கள் திருமணத்தின் போது கற்புடன் இருக்கின்றார்கள் என்ற கேள்விதான் பிரைச்சினையாகியது. கட்டுரையாசிரியர் முழுப்புூசனிக்காயை சோற்றில் மறைக்க முற்படுவதுபோல் இவ்விடயத்தை மறைத்து கட்டுரை எழுதியுள்ளார். - Birundan - 11-20-2005 "படித்த எந்த ஆண்மகனும் திருமணத்தின் போது தனது மனைவி கன்னித் தன்மையுடன் தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான்...." முதல் முதலில் பிரச்சனை தொடங்க இந்த வார்த்தைகள்தான் காரணம், அதுதான் சொல்கிறார்கள் கதைக்கும்போது வார்த்தைகளை அளந்து கதைக்க வேண்டும் சிதறியவார்த்தைகள் சிதறியதுதான் சிதறியவார்த்தைகளை திரும்ப அள்ளமுடியாது. மண்ணிப்பு கேட்டவர், புது கூட்டு சேர்தவுடன் அதை மறுதலித்து தான் கூறியதுதான் சரி எனமாறுவது இன்னமும் வேடிக்கையானது. தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது?" தமிழர்களுக்கு என்றால் இவர் யார்? இவர்கள் எப்போதும் தங்களை தமிழர்கள் என்று சொல்வதில்லை, இது பார்பனீயத்துக்கு இருக்கக்கூடிய இயல்பு, தமது தேள்வைகளுக்கு மட்டுமே தமிழை பாவிப்பார்கள் மற்றப்படி தாங்கள் தமிழர் இல்லை பார்ப்பனீயத்தார் என நிறுவ முற்படுவினம், இது எப்படி என்றால் தமிழ் பேசுவினம் ஆனால் தாம்தமிழர் இல்லை முஸ்லீம்கள் என ஈழத்து முஸ்லீம்கள் கூறுவதுக்கு ஒப்பானது, சாதியும், மதமும் முக்கியம் ஆனால் உரையாட மொழி இல்லை, அதற்க்கு மட்டும் தமிழ் வேண்டும் மற்றப்படி நான் பார்பனீயன் நான் முஸ்லீம் என்ற பல்லவிதான். :wink: |