![]() |
|
லண்டனில் தமிழ் வாலிபர் கொலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: லண்டனில் தமிழ் வாலிபர் கொலை (/showthread.php?tid=2043) |
- sri - 01-07-2006 07.01.06 கரவெட்டி வாசி லண்டனில் கத்தியால் குத்திக்கொலை! யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் லண்டனில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார். லண்டன் விம்பிள்டன் பகுதியில் நீண்ட காலமாக வசித்துவந்த சுப்பிரமணியம் சிவ குமார்(வயது 38 ) என்பவரே கொலையுண்ட வராவார். கடந்த வியாழனன்று இனந்தெரியாத நபர்களால் இவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்று இங்குள்ள அவரது உறவினருக்கு அறிவிக்கப்பட்டிருக் கிறது.கரணவாய் கிழக்கு, செம்பாடு தூதாவளை யைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந் தையே கொலையுண்டவராவார். இவர் விம்பிள்டன் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்திவந்தார் என்று கூறப்படுகிறது. இந்தக் கொலை தொடர்பாக லண்டன் பொலீஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். உதயன் லண்டனில் இலங்கை தமிழர் ஒருவர் படுகொலை - Vaanampaadi - 01-07-2006 சனி 07-01-2006 06:27 மணி தமிழீழம் [நிருபர் மாறன்] லண்டனில் விம்பில்டனில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதாக அறிவிப்பு. லண்டனில் இலங்கை தமிழர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கரணவாய் கிழக்கு, செம்பாடு தூதாவளை சேர்ந்த 44 வயதான சுப்பிரமணியன் சிவகுமார் என்பவரே கடந்த வியாழனன்று கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று, லண்டன் விம்பில்டனில் இடம்பெற்றுள்ளது. மரணமான இவர் 3 பிள்ளைகளின் தந்தையான இவர் விம்பில்டனில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Pathivu - kuruvikal - 01-07-2006 அடுத்த கொலையா...என்ன மாதம் ஒரு கொலையா..! வாழ்க வளர்க்க லண்டன் தமிழர் கொலைக் கலாசாரம்..! hock: :roll:
- MEERA - 01-07-2006 நீங்களும் லண்டன் தமிழர்களுக்குள் தான் அடங்குகிறீர்கள் என்பதை மறந்து விட்டீர்களா....? - MEERA - 01-07-2006 லண்டன் தமிழர்களுக்கும் இந்தக் கொலைக்கும் என்ன தொடர்பு.....? - kuruvikal - 01-07-2006 MEERA Wrote:லண்டன் தமிழர்களுக்கும் இந்தக் கொலைக்கும் என்ன தொடர்பு.....? கொலை செய்யப்பட்டது..படுவது லண்டன் தமிழர்..!:roll: hock:
- kuruvikal - 01-07-2006 MEERA Wrote:நீங்களும் லண்டன் தமிழர்களுக்குள் தான் அடங்குகிறீர்கள் என்பதை மறந்து விட்டீர்களா....? இது எங்களைக் குறித்தால்.. பதில். எமக்கும் லண்டன் தமிழர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை..!
- MEERA - 01-07-2006 தாயகத்திலும் கொலை செய்வதும் செய்யப்படுவதும் தமிழர்களே........ - ஊமை - 01-07-2006 இதைப்பற்றி யாரையும் குறை கூறி பிரயோசனம் இல்லை. இதில் முழுத்தவறும் பிரித்தானிய சட்ட இயற்றுனரையும் காவல்துறையினரையும் தான் சாரும். ஏனெனில் அங்கு குண்டர்களுக்கும் தெருச்சண்டியர்களுக்கும் எதிரான சட்டங்கள் அவர்களை சரியாக தண்டித்து சீர்திருத்தவில்லை என்பதையே இவ்வாறான செயற்பாடுகள் தெளிவாக காட்டுகின்றன. மற்றது பிரித்தானியாவில் காவல்துறையினரை உதவி கோரி அழைத்தால் அவர்கள் ஏறக்குறைய 01 மணித்தியாலத்தின் பின்னரே சம்பவ இடத்துக்குச் செல்கின்றனர். இது அவர்களின் அசண்டையீனமோ அல்லது இயல்போ என்பது புரியவில்லை. இங்கு ஜேர்மனியில் கத்திக்குத்தில் கைது செய்யப்பட்ட தமிழர் ஒருவர் (டுஇஸ்பேர்க் Duisburg - Moers மோஎர்ஸ்) சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு 4 வருடங்கள் சிறைத்தண்டனை என்று நீதிமன்றில் தீர்ப்பளிக்கப்பட்டது. அவர் உடனே நான் சிறீலங்கன் எனவே என்னை சிறையில் இடாது சிறீலங்காவுக்கு அனுப்பும் படி நீதிபதியிடம் வேண்டுகோள் ஒன்றைவிடுத்தார். அதற்கு நீதிபதி புன்முறுவல் பூத்தபடி சரி உங்கள் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் ஆனால் ஜேர்மனியில் கொலைமுயற்சியில் ஏடுபட்டமைக்காக எமது நாட்டின் தண்டனையை அனுபவித்த பின்னரே நீங்கள் உங்கள் நாடு சென்று அங்கு மகிழ்ச்சியாக வாழலாம் என தீர்ப்பளித்தார். எனவே அவருக்கு தண்டனை முடிவடைந்தபின்னர் இலங்கை நோக்கி செல்லும் விமானம் ஒன்று அவரையும் அவரது சோகச்சுமையையும் தாங்கிச்செல்லும் என்பது உண்மை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 01-07-2006 MEERA Wrote:தாயகத்திலும் கொலை செய்வதும் செய்யப்படுவதும் தமிழர்களே........ அதையே உலகம் பூராவும் செய்து தமிழர்களை அழிக்கப் போறேளா...பல விதத்திலும்..! லண்டன் சிங்களவன் கொலை செய்யுறானா..இல்ல செய்யப்படுறானா..??! தமிழர்கள் மட்டும் ஏன் இப்படி..???! :roll:
- kirubans - 01-07-2006 மற்ற இனத்தினருக்கு சட்டம், பொலிஸ் என்ற பயம் உள்ளன. லண்டன் தமிழரில் பலர் சட்டம், பொலிஸ் என்றெல்லாம் சிந்திப்பதேயில்லை. எனவே கொலைகள் நடக்கின்றன. மேலும் கொலையாளிகளை எம்மவர்கள் தெரிந்தாலும் காட்டிக்கொடுக்க மாட்டார்கள் (வெகுமதி கொடுத்தால் செய்வார்கள்). எனவே சண்டியர்களுக்குத் தைரியம் இருக்கின்றது (தைரியம் இல்லாமல் எப்படி சண்டியராவது?) - tamilt - 01-08-2006 " லண்டன் தமிழரில் பலர் சட்டம்இ பொலிஸ் என்றெல்லாம் சிந்திப்பதேயில்லை." அது அப்படி இல்லை நாட்டுல இருந்து இங்க வந்தா Rules and Laws குரங்குட கயில பூமாலை கொடுத மாதிரி இருக்குது அப்புறம் வேற என்ன நடக்கும்.... :roll: :roll: - ஈழமகன் - 01-08-2006 குருவிகள் நீங்கள் லண்டன் வாழ் தமிழர்கள் எல்லோரையும் குற்றம் சாட்டுவது தவறு..... - AJeevan - 01-08-2006 sri Wrote:07.01.06 Quote:<b> தமிழ் குடும்பஸ்தர் லண்டனில் படுகொலை </b> - sinnakuddy - 01-08-2006 எல்லா ஊடகங்களில் லணடன் விம்பிள்டன்பகுதியிலை கொலை நடந்ததாக கூறப்பட்டுள்ளது.. விம்பிளியில் வசிப்பிடமாககொண்டவர் லண்டன் வீல்ட்சன் பகுதியிலையே கொலை செய்யபட்டுள்ளார் - cannon - 01-09-2006 Quote:எல்லா ஊடகங்களில் லணடன் விம்பிள்டன்பகுதியிலை கொலை நடந்ததாக கூறப்பட்டுள்ளது.. விம்பிளியில் வசிப்பிடமாககொண்டவர் லண்டன் வீல்ட்சன் பகுதியிலையே கொலை செய்யபட்டுள்ளார் ஆமாம், சுப்பிரமணியம் சிவகுமார் என்ற 45 வயது மதிக்கத்தக்க கரணவாய் செப்பாட்டைச் சேர்ந்த இவ்வாலிபர் கொலையுண்டது "வீல்ஸ்டன்" பகுதியில்தானாம்! அதிகாலை தனது கடையை திறக்கும்போது கொலை நடைபெற்றிருக்கிறதாம். இக்கொலைக்கும் தமிழ்க் கும்பல்களுக்கும் தொடர்பேதும் இருப்பதாகத் தெரியவில்லை!!! இக்கொலையை கறுப்பினத்தைச் சேர்ந்த சிலரே, கடையை கொள்ளையிட முயற்சித்த வேளையில் நடைபெற்றதாக நம்பப்படுகிறது. <b>* "வீல்ஸ்டன்" - இங்கு கறுப்பர்கள் செறிந்து வாழுமொரு லண்டன் பகுதியாகும். அதிலும் இப்பகுதியை சூழவுள்ள இடங்களான "கால்ஸ்டன், ஸ்ரோன்பிறிஜ்பாக்,.." போன்றன போதைப்பொருள் விற்பனை/பாவனை, கொலை, கொள்ளை, வாகனக்கடத்தல்கள், பயங்கர ஆயுதங்களின் பாவனை என்பவற்றிற்கு பஞ்சமே இல்லாத இடங்கள். அண்மையில் இன்னுமொரு கடை உரிமையாளரான பாகிஸ்தானியர் ஒருவரும் இப்பகுதியில் கொல்லப்பட்டிருக்கிறாராம்!!!</b> [size=18]மு.கு: லண்டனிலுள்ள தமிழ்க்காடையர்களின் அட்டகாசங்கள் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுமென மக்கள் கதைக்கிறார்கள்!!! hock: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
- ஈழமகன் - 01-09-2006 குருவிகளுக்கு இப்போது புரிந்திருக்கும்.... இந்த கொலையின் பின்ணனி பற்றி...... kuruvikal Wrote:அடுத்த கொலையா...என்ன மாதம் ஒரு கொலையா..! வாழ்க வளர்க்க லண்டன் தமிழர் கொலைக் கலாசாரம்..! - ஊமை - 01-09-2006 Quote:அதிகாலை தனது கடையை திறக்கும்போது கொலை நடைபெற்றிருக்கிறதாம். இக்கொலைக்கும் தமிழ்க் கும்பல்களுக்கும் தொடர்பேதும் இருப்பதாகத் தெரியவில்லை!!! இக்கொலையை கறுப்பினத்தைச் சேர்ந்த சிலரே, கடையை கொள்ளையிட முயற்சித்த வேளையில் நடைபெற்றதாக நம்பப்படுகிறது. இந்த தகவல் உங்கள் கண்ணுக்கு / காதுக்கு எப்படி எட்டியது ? - ஈழமகன் - 01-09-2006 இந்த செய்தி வாய்மொழியாகவே லண்டனில் திரிகின்றது.... எழுத்தில மிகவிரைவில் வெளியாகும்...... - Sukumaran - 01-09-2006 அண்ணா இதுக்கு முன்னம் நடந்த கொலையும் மர்மமாயிருக்கு.. ஆளாளுக்கு விதவிதமா செல்லுறானுக.. யாரை நம்பிறதெண்டே தெரியல.. |