![]() |
|
தமிழ்த்தாய் நாட்காட்டியின் பதிவுகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: தமிழ்த்தாய் நாட்காட்டியின் பதிவுகள் (/showthread.php?tid=1677) |
- வினித் - 01-20-2006 <b>20 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்</b> <b>வீரவேங்கை ராஜ்மோகன் (சிவராமலிங்கம் ராஜ்மோகன்) தும்பளை - பருத்தித்துறை 29.03.1965 - 20.01.1984 ராஜ்மோகன் என்னும் போராளி துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும்போது சிங்களப் பொலிசாரால் சுடப்பட்டு 1984 ஆண்டு வீரச்சாவடைந்தார். தகவற் துளி சினிமாத்துறையின் மைய நிறுவனமாக 1913 ஆம் அண்டு ஹொலிவூட் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது. அன்றுதொட்டு இன்றுவரை தமிழரின் போராட்டம் அறவழியைத் தழுவி நிற்கிறது. அகிம்சை வழியிலும் சரி, ஆயுத வழியிலும் சரி, தமிழர் வரித்துகொண்ட போராட்டம் தர்மத்தின் நியமத்தில்நெறிப்பட்டிருகின்றது. இந்த தார்மீக அடிப்படையே எமது போராட்டத்தின் ஆன்மீக பலமாகவும் இருந்து வருகிறது. [b]-தமிழீழத் தேசியத் தலவர்</b> [b]மேதகு வே.பிரபாகரன் - வினித் - 01-21-2006 <b>21 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் சோவியத் யூனியனின் சிற்பி லெனின் 10.04.1870 - 21.01.1924 லெனின் - சோவியத் புரட்சிக்கு தலைமை வகித்து உலகின் முதல் சோசலிச அரசை நிறுவியவரும் தத்துவஞானியுமாவார். இன்று லெனின் நினைவுநாள் ஆகும். பதிவுகள் அறிஞர் ம.ப.பெரியசாமிதூரன் நினைவுநாள். (26.09.1908 - 21.01.1987) தகவற் துளி உலகின் முதன் அச்சிட்டு வெளியிடப்பட்ட நூல் 'டிமோன் சுட்ரா' என்பதாகும். இது 868- இல் சீனாவில் வெளியிடப்பட்டதாகும்........... நத்தையின் நாக்குல் 135 வரிசைகளில் 14175 பற்கள் காணப்படுகின்றன............. நாம் சுக்கிரன் எனக் கூறும் வெள்ளி(வீனஸ்) கிரகம் 'காதல் கிரகம்' எனவும் வர்ணிக்கப்படுகிறது. இதுவே மிகவும் பிரகாசம் கூடிய கிரகம் ஆகும்.......... சுதந்திர எழுச்சியின் உந்துதலால் தான் மனித வரலாற்றுச்சக்கரம் சுழல்கின்றது. [b]-தமிழீழத் தேசியத் தலைவர்</b> [b]மேதகு வே.பிரபாகரன் - சந்தியா - 01-21-2006 வாழ்த்துக்கள் அண்ணா பல பேருக்கு உதவக்கூடியதாக உள்ளது தங்கள் தகவல் - வினித் - 01-22-2006 [b]22 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் இலத்தீன் அமெரிக்கப் புரட்சி வீரன் சே குவாரா 14.06.128 - 09.10.1967 ஆர்ஜண்டீனாவில் பிறந்து கியூபாவின் விடுதலைக்காகப் போராடி வென்று, பின்னர்பொலிவியப் புரட்சியின்போது வீரச்சாவடைந்தவர் சே குவேரா. உலகப் புகழ்பெற்ற புரட்சிவீரனும், கெரில்லாப் போர்முறையுக்கு புதுமெருகூட்டிய வித்தகனுமான இவர் ஒரு வைத்திய நிபுணனுமாவார். பதிவுகள் சுவாமி ஞானப்பிரகாசர் நினைவுநாள் (30.08.1875 - 22.01.1947) தகவற் துளி கூடிய எல்லைகளைக் கொண்ட நாடுகள் சீனாவும். ருஸ்யாவும் ஆகும். இவை 14 எல்லைகளைக் கொண்டுள்ளன. அதிர்ஷ்டம் என்ற சொல், எப்போதும் துணிச்சல் உள்ளவர்களின் பக்கமே நிற்கும். -சீனப் பழமொழி- - Luckyluke - 01-23-2006 ஒரு போராளி அமைச்சராய் மாறுவது அதிசயமில்லை.... ஆனால் கியூபாவின் பொருளாதார அமைச்சராக இருந்த சே-குவாரா காங்கோ புரட்சியின் போராளியாய் மாறியது தான் அதிசயத்திலும் அதிசயம்.... போராளிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது சே-குவாரா தான்.... அவருக்கு என் வீர வணக்கங்கள்..... - வினித் - 01-23-2006 <b> 23 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் மேஜர் தாரணி (மதிவதனி சுப்பிரமணியம்) பூநகரி 20.02.1968 - 23.01.1991) மகளிர் படையணியின் முதன்மைத் தளபதிகளுள் இவரும் ஒருவர். பலாலித்தளத்தின் காவல்ரண்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்தார். தகவற் துளி பாரிஸ் சின்னமாக விளங்கும் ஈபிள் கோபிரம் 1889-இல் நடைபெற்ற உலகக் கண்காட்சிக்காகக் Gustave Eiffel என்னும் பொறியியலாளரால் கட்டப்பட்டது. 317 மீற்றர் உயரக் கோபுரத்தில் 3 மாடிகளும் 1652 படிகளும் உள்ளன................ தமிழ் இளைஞர் பேரவை உருவாக்கப்பட்ட நாள்..... இலட்சியத்தால் ஒன்றுபடு எழுச்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது [b]-தமிழீழத் தேசியத் தலைவர்</b> [b]மேதகு வே.பிரபாகரன் - வினித் - 01-24-2006 <b> 24 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் தேசபக்தை ஜோன் ஒன் ஆர்க் பிரான்ஸ் 26.01.1412 - 30.05.1431 இவர் பிரான்ஸ் நாட்டின் தேசிய வீராங்கனை. 15ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து பிரான்ஸ் விடுபட இவரது முயற்சியே காரணம். பிரெஞ்சுக்காரர்களை ஒன்று திரட்டி ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடினார். ஒரு சண்டையில் காயமடைந்த இவரை கைதுசெய்த ஆங்கிலேயர்கள் ஒரு கம்பத்தில் கட்டிவைத்து எரித்துக் கொன்றனர்........ தகவற் துளி கண்டியின் கடைசி மன்னன் சிறி விக்கிரம ராஜசிங்கன் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு வோலூருக்கு நாடு கடத்தப்பட்ட நாள்............ நான் உயிருக்குயிராக நேசித்ததோழர்கள். என்னோடுதோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்த்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன.. [b]-தமிழீழத் தேசியத் தலைவர்</b> [b]மேதகு வே.பிரபாகரன் - வினித் - 01-25-2006 <b>25 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் லெப். கேணல் தூயமணி/ லெனின் (வைத்தியநாதன் சிவநாதன்) கிளிநொச்சி 08.09.1968 - 22.08.1997 தமிழீழம் மீதான பெரும் படையெடுப்பான ஜெய்சிக்குறுய் சமர்களத்தில் எதிரிக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த இவர், சமரின் ஆரம்பகாலம் தொட்டு புலிகள் சேனையின் சிறந்த தளபதியாகக் கடமையாற்றினார். 22.08.1997 அன்று இடம்பெற்ற சமரில் வீரச்சாவடைந்தார். பதிவுகள் சுண்ணாகம் குமாரசாமிப் புலவர் நினைவு நாள். (12.01.1855 - 25.01.1922) தகவற் துளி அதிவேகமாக நீந்தக்கூடிய மீனினம் 'டியுனா' ஆகும் இது மணித்தியாலத்திற்கு 100 மைல்கள் நீந்தக்கூடியது. காலம் காலமாக எமது மக்கள் அனுபவித்த அவலங்கள், சாவும் அழிவுமாக அவர்கள் சந்தித்த அநர்த்தங்கள் இவை யெல்லாம் பெளத்த தேசத்தின் காருணயத்தைத் தொட்டதாகத் தெரியவில்லை......... [b]-தமிழீழத் தேசியத் தலைவர்</b> [b]மேதகு வே.பிரபாகரன் - வினித் - 01-26-2006 <b>26 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் சேர் எட்வேட் ஜென்னர்17.05,1749 - 26.01.1823 சேர் எட்வேட் ஜென்னர் சின்னம்மை நோய்க்கான மருந்தான அம்மைப்பால் குத்தலைக் கண்டுபிடித்தவராவார். பதிவுகள் தோலகட்டி ஆச்சிரம சுவாமி தோமஸ் நினைவு நாள் (1886 - 26.01.1964) அவுஸ்திரேலிய தேசிய தினம் இந்தியக் குடியரசு தினம் (1950) தகவற் துளி உலகின் இரண்டாவது பெரிய நகரம் மெக்சிக்கோ ஆகும். உலகிலேயே இலக்கியத்திற்கான நோபல் பரிசை முதலில் பெற்ற நாடு பிரான்ஸ் ஆகும்... மக்களின் துன்ப, துயரங்களில் பங்குகொண்டு, அவர்களது கஸ்டங்களைப் போக்குவதற்குத் திட்டமிட்டு செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை..... [b]-தமிழீழத் தேசியத் தலைவர்</b> [b]மேதகு வே.பிரபாகரன் - வினித் - 01-27-2006 [b]27 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் மாவீரன் பண்டாரவன்னியன் நினைவுக்கல் ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்து இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த வன்னிக் குறுநில மன்னன் பண்டாரவன்னியனுக்கு, ஆங்கிலத் தளபதியே இறுதி மரியாதை செலுத்தியுள்ளார். கப்டன் வொன் றிபேக் என்ற அந்த தளபதி, பண்டாரவன்னியனை தோற்கடித்த நிகழ்ச்சியினையே இந் நடுகல் காட்டுகின்றது. இது கற்சிலைமடுவில் உள்ளது. பண்டாரவன்னியன் நினைவுநாள் ஒக்டோபர் 31 ஆகும்..... தகவற் துளி யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் காரணங்களை விளக்கமாக எழுதியவர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள். இவ் ஊர் பெயர் அகராதி யாழ்ப்பாண வைபவ கெளமுதி ஆகும்...... ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம் குறைவற்ற அமைச்சு, முறிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளிடை ஆண்சிங்கம் போன்ற அரசாகும்...... -குறள் விளக்கம்- - வினித் - 01-28-2006 <b>28 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் <span style='font-size:25pt;line-height:100%'>கொக்கட்டிச்சோலை கிராமப் படுகொலை</span>(1987) மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை கிராமம், தமிழீழப் போராட்டத்திற்குச் செலுத்திய விலை அளப்பரியது. அக்கிராமத்தின் ஒவ்வொரு குடிசையிலும் சிங்களப் படை செய்த கோரத்தின் நிழல் தெரியும். பதிவுகள் முதலாவது கொக்கட்டிச்சோலைப் படுகொலை 1987 ஜனவரி 28, 29, 30 ஆகிய முன்று நாட்கள் நடந்தது. இதில் 86 தமிழ் இளைஞர்கள் படுகொல செய்யப்பட்டனர்... தகவற் துளி விமானப் போக்குவரத்தில் அதிக வருமானம் ஈட்டும் நாடு அமெரிக்கா ஆகும்.. சிங்களப் பயங்கரவாதம் எமது தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப்போவதில்லை.. [b]-தமிழீழத் தேசியத் தலைவர்</b> [b]மேதகு வே.பிரபாகரன் - வினித் - 01-29-2006 <b> 29 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் பிரபல தத்துவஞானி சோக்கிரட்டீஸ்(கி.மு. 470 - கி.மு. 399) புராதன உலகின் மிகச்சிறந்த அறிஞர்களும் ஒருவர் சோக்கிரட்டீஸ். அத்துடன் இளமைக் காலத்தில் இவர் ஒரு போர்வீரன். பின்பு இவர் ஒரு தத்துவஞானியாக மாறி இளம் சமுதாயத்தின் மனங்களில் புரட்சி விதையை விதைத்தார். இளைஞர்களைக் குழப்பிகிறாற் எனக் குற்றம் சாட்டி அரசு இவருக்கு மரண தண்டனை விதித்தது... பதிவுகள் நாதஸ்வரவித்துவான் பாலகிருஷ்ணன் நினைவுநாள் (21.06.1945 - 29.01.1981) தகவற் துளி வடதுருவத்திற்க்கு சென்ற முதல் மனிதன் றொபேட் பெரி என்ற அமெரிக்கர் ஆவர். 1909- ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ம் திகதி இன்னும் ஒரு அமெரிக்கரோடும் நான்கு எஸ்கிமோக்களுடனும் அங்கு சென்றார்.. விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி..... [b]-தமிழீழத் தேசியத் தலைவர்</b> [b]மேதகு வே.பிரபாகரன் - வினித் - 01-30-2006 [b]30 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் மகாத்மா காந்தி 02.10.1869 - 30.01.1948 பிரித்தானியருக்கெதிராக அகிம்சை வழியில் இந்திய சுதந்திரப் போரை முனெடுத்தவர். அகிம்சைத் தத்துவத்தை உலகிற்குக் கொடுத்தவர். இவர் எழுதிய சுயசரிதை நூலான சத்திய சோதனை பிரபல்யமானது. முஸ்லீம்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றார் என்று குற்றம் சுமத்திய ஒரு இந்து வெறியனால் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். பதிவுகள் வடலூர் இராமலிங்அ அடிகளார் நினைவு நாள். (05.12.1823 - 30.01.1874) தகவற் துளி தமிழில் சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் தமிழ் நாட்டை சேர்ந்த ராம் சாகிப் எம். சீனிவாசராவ். செய்வாய் கிரகம் சூரியனைச் சுற்றிவர 687 நாட்கள் எடுக்கின்றன... மானத்திற்காக அனைத்தையும் பணயம் வைக்கும் வீர. தியாக உணர்வு கொண்டவர்கள்தான் சுதந்திரத்தை எப்ப்ப்ழுதுமே போராடிப் பெறுவர்... -மகாத்மா காந்தி- - வினித் - 01-31-2006 <b> 31 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் வீரவேங்கை அமலதாஸ் (மைக்கல்பிள்ளை அமலதாஸ்) குருநகர் - யாழ்ப்பாணம் 26.08.1959 - 13.05 1984 சிங்கள இராணுவம் கைதுசெய்த வேளையில் இராணுவத்தை வெறுங்கையால் தாக்கிவிட்டு தஓயோட முயற்சித்த போது கைதுசெய்யப்பட்டார். பின்னர் முகாமில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டார். தகவற் துளி 1903-இல் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ரைட் சகோதரர்களால் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒட்டகங்கள் தமது உடல் வெப்பநிலையை பருவநிலைக்கேற்றபடி 6 பாகை பரனைட் தொடக்கம் 11 பாகை பரனைட் வரை மாற்றியமைத்துக் கொள்கின்றன. இந்த யுத்தத்தில் எமது போராளிகளும் பொதுமக்களும் செய்துள்ள அற்புதமான தியாகங்கள் உலக வரலாற்றில் ஒர் ஒப்பற்ற வீர காவியமாக பொறிக்கப்பட்டுவிட்டது.. [b]-தமிழீழத் தேசியத் தலைவர்</b> [b]மேதகு வே.பிரபாகரன் - வினித் - 02-01-2006 [b]01 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் லெப். கேணல் சுபேசன் மருசலீன் அல்வின் மன்னார் 02.07.1971 - 01.02.1998 சிறிலங்காவின் சுதந்திரதினப் பொன்வழாக் கொண்டாட்டத்திற்கு கிளிநொச்சியூடாக யாழ். மக்களைக் கொண்டுசெல்வோம் என்ற இறுமாப்புமிக்க சிங்கள் அரசுதரப்பின் நிலைப்பாட்டுக்கு 02.02.98 அன்று விடுதலைப் புலிகள் கொடுத்த பலமான அடி கிளிநொச்சி நகர் மீட்பாகும். கிளிநொச்சி நகரின் மையத்தில் சிங்களகொடி பறப்பை மாற்றி தமிழீழக் கொடியை பறக்கச் செய்த தாக்குதலுக்குப் பலம் சேர்த்து கரும்புலி லெப். கேணல் சபேசன் வீரச்சாவடைந்தார். தகவற் துளி கி.பி. 1619-இல் போர்த்துக்கேயத் தலைவன் பிலிப்பு த ஒலிவீரா சங்கிலி மன்னனுடன் போர் புரிந்தான். சங்கிலியன் தோற்கடிக்கப்பட்டான். மதித்தற்கரிய மாணிக்கமாகிய சுதந்திர யாழ்ப்பாணத் தமிழரசு இழக்கப்பட்டது. விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல் பாதை. -தமிழீழத் தேசியத் தலைவர் -மேதகு வே.பிரபாகரன்- - வினித் - 02-02-2006 [b] 02 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் வ¡É¢Âø ¿¢Ò½÷ ¿¢ì¸ÄŠ ¦¸¡ôÀɢ츊 þò¾¡Ä¢(1473 - 1543) þùÅ¡½¢Âø ¿¢Ò½§Ã Ó¾ý Ӿġ¸ Ýâ¨Éî ÍüÈ¢ âÁ¢ ÅÄõ ÅÕ¸¢ýÈÐ ±ன்À¨¾ ¦¸¡û¨¸ «ÇÅ¢ø ¦ÅǢ¢ø ¦º¡ýÉÅ÷. ¾¸Åü ÐÇ¢ 1290-þø Ó¾ý Ó¾ø Å¡º¢ì¸ìÜÊ ãìÌì ¸ñ½¡Ê þò¾¡Ä¢Â¢ø ¸ñÎÀ¢Êì¸ôÀð¼Ð. ¯Ä¸¢ý Á¢¸ô¦Àரிய மணி ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் உள்ளது. இதன் நிறை 193 தொன், உயரம் 6 மீற்றர். இதன் வாயின் சுற்றளவு 18.7 மீற்றர். பத்திரிகைகளும் புத்தகங்களும் ஓரளவிற்கு உதவி செய்யக்கூடியவை. மற்றவை அனுபவ வாயிலாக அறிய வேண்டியவை. கைகாட்டி மரம் வழியைக் காட்டுமே தவிர நம்மைக் கொண்டு சேர்க்காது. -ராமகிருஷ்ண பரம†ம்சர்- - வினித் - 02-03-2006 [b]03 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் அறிஞர் சி.என். அண்ணாத்துரை 15.09.1909 - 03.02.1969 தமிழின் தென்றலாய் வீசியவர்கள் பலர். ஆனல் தாழ்ந்த தமிழினத்தின் அரசியல் அனலாக எழுந்தவர் அறிஞர் அண்ணா ஆவார், பட்டி தொட்டி எங்கும் தமிழின் புது ஒளிவீச வைத்தவர். பல்லாயிரம் இளைஞர்களுக்கு இலட்சிய ஏற்றம் வீறும் ஏற்றியவர். எளிமை உருவும், ஆற்றலின் பெரு வலிமையும் ஒருங்கே இணைந்த பேரறிஞராக அவர் திகழ்ந்தார். அறிஞர் அண்ணா ஈடிணையற்ற பேச்சாளன், நாடகாசிரியன், இலக்கியச்செம்மல். தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராகவும் பணியாற்றினார். தகவற் துளி 'ஆசியன்'தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு. 1967-இல் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகள் இணைந்த ஓர் பிராந்தியக் கூட்டமைப்பு...[/color] முதல் முதலில் ஒலிம்பிக் போட்டி கி.மு 776இல் கிரேக்கத்தில் நடைபெற்றது. துன்பம் இல்லாத உலகுக்கு வழி காட்டுவது துன்பப் பாதையே.. -வில்லியம் கூப்பர்- - வினித் - 02-04-2006 [b] 04 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் தமிழறிஞர் வீரமா முனிவர் 08.11.1680 - 04.02.1747 கொன்ஸ்ட்டண்டைன் ஜோசப் பெஸ்கி என்ற இத்தாலியர் தமிழில் பெயரை மாற்றிக்கொண்டு தமிழ்மொழிக்கு அருந்தொண்டு புரிந்தார். இவரது அதிசிறப்புப் பணியாக தமிழ் எழுத்துக்களை சீர்திருத்தி இலகுபடுத்தியதைக் குறிப்பிடவேண்டும். பதிவுகள் சிறீலங்காவின் சுதந்திர தினத்தன்று திருமலையில் சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக்கொடி கட்ட முயன்றபோது சிங்கள காடையரால் சுடப்பட்ட தியாகி திருமலை நடராஜன் நினைவு நாள்.(04.02.1957) தகவற் துளி மலப்பாம்பு இரையின் தலைப்பகுதியையே முதில் விழுங்கும். போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறிதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்கமுடியாது.... -குறள் விளக்கம்- - வினித் - 02-05-2006 [b]05 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் நல்லூர் கந்தசுவாமி கோவில் யாழ்ப்பாணம் (கி.பி.948) கி.பி. 948-ஆம் ஆண்டு புவனேகவாகு என்ற சோழ அரசப் பிரதிநியால் முதல் முதல் குருக்கள் வளவு என்ற இன்றுள்ள இடத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில் கட்டப்பட்டது. பல படையெடுப்புக்களால் அழிக்கப்பட்டு மீண்டும் மீளக்கட்டியெழுப்பப்பட்ட இக் கோவில் சைவ மக்களின் வழிபாட்டிடமாகவும், தமிழ் மக்களின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்த பெருங்கோவிலாகவும். யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆயிரமாண்டுகள் நீண்ட பாதையில் வரலாறு படைத்துள்ளது. பதிவுகள் அறிஞர் சித்தாலெப்பை நினைவு தினம். (11.06.1838 - 05.02.1898) தகவற் துளி 1941-இல் ஜப்பானிய விமானப் படையினர் அமெரிக்காவின் 'பேர்ள்' துறைமுகத்தின் மீது தாக்குதலினை நடாத்தினர். முகமலர்ச்சி, ஈகைக்குணம் இனிய சொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புக்களும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும்.. -குறள் விளக்கம்- - வினித் - 02-06-2006 [b]06 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் மேஜர் குமுதன் மயில்வாகனம் இன்பராஜன் யாழ் மேஜர் ஜெயராணி நடராஜா சாந்தி மன்னார் மேஜர் ஆசா வேலுப்பிள்ளை சிவயமுனா யாழ் சிறீலங்காவின் சுதந்திரப் பொன்விழாக் கொண்டாட்டத்திற்கு கிளிநொச்சியூடாக யாழ், மக்களைக் கொண்டு செல்வோம் என்ற இருமாப்புமிக்க சிங்கள அரசுத்தரப்பின் நிலைப்பாட்டுக்கு, 2.2.98 அன்று விடுதலைப் புலிகள் கொடுத்த பலமான அடி கிளிநொச்சி நகர் மீட்பாகும். கிளிநொச்சியில் சிங்கக் கொடிபறப்பை மாற்றி த்மிழீழக் கொடியை பறக்கச் செய்த தாக்குதலுக்கு பலம் சேர்த்து கரும்புலிகளான மேஜர் குமுதன், மேயர் ஜெயராணி, மேஜர் ஆசா ஆகியோர் வீரச்சாவடைந்தனர்............... தகவற் துளி 1914ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ம் திகதி ஆரம்பித்து 1918ம் ஆண்டு 11ம் திகதி வரையிலான 1561 நாட்கள் முதலாம் உலக மகா யுத்தம் நடந்தது. இதில் 1 கோடி படைவீரர்களும் 2 கோடி மக்களும் இறந்தனர். உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும். -குறள் விளக்கம்- |