Yarl Forum
பெண்களும் சமூகமும்.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: பெண்களும் சமூகமும்.... (/showthread.php?tid=8385)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36


- குயில் - 08-18-2003

[quote=Kanani][b]உண்மைபோலத்தான் கிடக்கு ஏன் என்றால் பெண்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரியெல்லே நிற்கினம்....
அவையும் பிளேட்டும் அந்தக் கறுத்தப் பென்சிலும் புருவத்தைப் படுத்தும் பாடு....ஒவ்வொரு நானளக்கு ஒவ்வொரு புருவம் வைக்கினம்...
சிலநேரம் வழிச்சுப்போட்டு இல்லாமலும் திரியினம்? தாத்தா வீண்முயற்சி வேண்டாம் உதில இருக்கிற ஒவ்வொரு குணத்திலையும் ஒவ்வொருநாளும் இருப்பினம்


[b]ஏன் நீங்கள் படிக்கிறதை விட்டிட்டு உதுகளைப் பார்த்துக் கொண்டு திரியிறியள்.


- nalayiny - 08-19-2003

இந்த 34 பக்கங்களை வைத்தே எமது சமூகம் பெண்ணிற்கு கொடுத்த கொடுக்கும் மரியாதையை காணலாம். ஏதாவது ஆய்வுக்கட்டுரைகளிற்கு கூட உதவினாலும் உதவலாம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sOliyAn - 08-19-2003

புருவத்தைப்பற்றிய ஆய்வா? முல்லைபோல் புருவத்தைப்பற்றித்தானே கேட்டேன்.. அதுக்கேன் புருவம் சுருங்குகிறது? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Paranee - 08-19-2003

இந்தப்புருவத்திற்கு ஏதாவது சொல்லுங்களேன்.


- Paranee - 08-19-2003

இப்படிக்கேட்காமல் விட்டுவிட்டீர்கள்
[quote=sOliyAn]<b>ப</b>


- sethu - 08-19-2003

என்ன எல்லாருக்கும் புருவத்தைபற்றி ஆய்வு


- Mullai - 08-19-2003

<span style='color:green'>தாலி அணிதலும் அதன் கருத்தாக்கமும்
[size=18]ஸ்டாலின்</span>


<img src='http://www.koodal.com/aer/images/pic4.jpg' border='0' alt='user posted image'>
..............மனித சமூகம் பல படிநிலை வளர்ச்சியில் வந்து கொண்டிருக்கிறது. இந்த மனித இன சமூக அமைப்புகளின் பரிணாமத்திற்குப் பரந்து விரிந்த வரலாறே இருக்கிறது. அது குழுச் சமூகத்திலிருந்து தனிமனிதச் சுதந்திரம் பேசும் நவீனச் சமூகம் வரை வந்து சேர்ந்திருக்கிறது.
இப்படி, குழு கூட்டம் என்ற மனித வரலாற்றில் 'குடும்பம், திருமணம், கணவன், தாலி' என்பவைகள் உடமைச் சமூகத்தின் இறுக்கத்திற்குப் பிறகான ஓர் அலகு. குறிப்பாக, தாய்வழிச் சமூக அமைப்பு அழிந்து ஆணாதிக்கச் சமூக அமைப்பு உருவானது. இனக்குழுச் சமூகம் அழிந்து நிலவுடைமை சமூகம் உருப்பெறும் போது தான் உடமை மனோபாவம் தோன்றுகிறது. ஆணாதிக்க - நிலவுரிமைச் சமூகத்தில் பெண்ணும் கூட உடமையாக மாற்றப் படுகிறாள். ஒருவகையில் ' நிலம் / பெண் ' என்பவைகளையே உடமையாக உருவாக்கினர். எதை இழந்தாலும் இந்த இரண்டையும் இழக்க விரும்புவதில்லை. ஆதிக்கச் சக்திகள் ஒன்றில் ஒன்றைத் தனித் தனியாகக் கருதாமல் ஒன்றாகவே கருதினர். இதை இன்றும் ' நாடு கட்டமைப்பு ' எனும் நடைமுறை நிலையில் நாம் பார்க்க முடியும். இவர்களுக்கு நிலத்தைக் கைப்பற்றினாலும், பெண்ணைக் கைப்பற்றினாலும் ஒன்று தான்...............
வாசிக்கத் தோன்றினால்
http://www.koodal.com/aer/thali.htm


- sethu - 08-19-2003

இந்தப்படம் ஒரு தாய்குலத்தை அசிங்கப்படுத்துற மாதிரி இரக்கு


- Mullai - 08-29-2003

<img src='http://www.maalaimalar.com/Images/Magalir/Article/mag06.jpg' border='0' alt='user posted image'> [size=20]பழமைவாதிகளின் எதிர்ப்புகளையும் மீறி...

ஆணாதிக்கத்துக்கு பெயர் பெற்ற இஸ்லாமிய நாடுகளில் கூட பெண்கள் அதிரடியாக முன்னேறி வருகிறார்கள். பெண்கள் வேலைக்கு செல்வதற்கு பழமைவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதையெல்லாம் இப்போதைய இளம்பெண்கள் கொஞ்சம்கூட கண்டு கொள்வதில்லை. இது ஆதிக்க மனப்பான்மை கொண்ட ஆண்களுக்கு பலத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.ஆணாதிக்கம் நிறைந்த வங்காள தேசத்தில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் தற்போது பெண்கள் அதிரடியாக குதித்துள்ளனர்.

பெண்கள் போக்குவரத்து காவலர் களாக மாறி இருப்பது மற்ற பெண்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. 4 ரோடுகள் சந்திக்ககூடிய இடத்திலேயே வேலை செய்ய முடியும் என்றால், மற்ற வேலை எல்லாம் எங்களுக்கு வெகுசுலபம் என்கிறார் டாக்காவைச் சேர்ந்த அமானா!
நன்றி மாலைமலர்


- Mullai - 08-29-2003

<span style='font-size:25pt;line-height:100%'>இரும்பு மனுஷி</span>
இந்தியாவின் இரும்பு மனுஷி என்று வர்ணிக்கப்படுபவர் மல்யுத்த வீராங்கனை கீத்திகா ஜாகர்! 18 வயதே ஆன இவர் சர்வதேச மல்யுத்த போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை அள்ளி இருக்கிறார்!

இவர் கனடாவில் நடந்த காமன் வெல்த் போட்டியில் 63 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்தார்.

2001-ம் ஆண்டு நடந்த தேசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம், 2002-ல் ஐதராபாத்தில் நடந்த தேசிய போட்டியில் தங்கம், அதே ஆண்டில் துருக்கியில் நடந்த போட்டியில் தங்கம்... என்று கீத்திகா பெற்ற வெற்றிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இனி மல்யுத்த மன்னி கீத்திகா சொல்கிறார்.

எனக்கு சின்ன வயசுல இருந்தே மல்யுத்தம், குத்துச்சண்டை போட்டின்னா ரொம்ப இஷ்டம், என்னோட ஆர்வத்தை அறிந்த அப்பா எனக்கு மல்யுத்த பயிற்சிக்கு அனுப்பினார்.

சர்வதேச அளவில் வெற்றி பெறணுங்கிற வெறி இருந்ததுனால நான் தினமும் 7 மணி நேரம் பயிற்சி செய்தேன்!

என்னோட கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைச்சுருக்கு 18 வயசுக்குள்ளேயே நான் ஏராளமான தங்கப்பதக்கம் வாங்கி இருக்கேன். இது எனக்கே பிரமிப்பாகத்தான் இருக்கு!

நான் இன்னும் செய்ய வேண்டிய சாதனை நிறைய இருக்குது, அதற்காக புதிய புதிய நுணுக்கங்களை கத்துட்டு இருக்கேன்!

நான் பழைய டெக்னிக்கையெல்லாம் கடைபிடிக்க கூடாதுன்னுதான் மல்யுத்தம் பற்றிய புத்தகங்களை படிப்ப தில்லை. அதில் பெரும்பாலும் மற்ற வீராங்கனை களுக்கும் தெரிந்த டெக்னிக்கைத்தானே சொல்லி இருப்பார்கள்! என்று கடகட வென பேசிக்கொண்டே போன கீத்திகா விடம். உடம்பை இப்படி இரும்பு மாதிரி வச்சுருக்கீங்களே. அப்படி என்னதான் சாப்பிடறீங்க? என்றோம்.

இதுல ரகசியம் ஒண்ணும் இல்லீங்க. நான் சுத்த சைவம்! இதுவரையிலும் அசைவ உணவை கொஞ்சம் கூட டேஸ்ட் பண்ணியதில்லை.

வெளிநாடுகளுக்கு போகும்போதுதான் சாப்பாட்டு விஷயத்துல நான் ரொம்பவே சிரமப்படுவதுண்டு! அங்கெல்லாம் நல்ல சைவ உணவு கிடைக்காது. ஆனாலும் ருசி எப்படி இருந்தாலும் கஷ்டப்பட்டு நிறைய சாப்பிடுவேன். நல்லா சாப்பிட்டால்தானே எதிராளியை வீழ்த்த முடியும்" என்கிறார் கீத்திகா!

மல்யுத்தத்தில் இவரது ரோல் மாடல் இந்திய மல்யுத்த வீரர்காமா பல்வான்.

அரியானாவில் உள்ள ஜாட் கல்லூரியில் படித்து வரும் கீத்திகா ஜாகர் சிறப்பு பயிற்சி பெற ஜப்பான், கனடா போன்ற நாடுகளுக்கு செல்ல இருக்கிறார்.

நிïயார்க்கில் விரைவில் உலக சீனியர் மல்யுத்தப்போட்டி நடைபெற உள்ளது. அதில் இவரும் கலந்து கொள்ள இருக்கிறார். இப்போட்டியில் வென்றால் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து விடும்.

என்னுடைய லட்சியமே ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தருவதுதான்! அந்த லட்சியத்தை என்னால் அடைய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்கிறார் கீத்திகா நம்மை மல்யுத்த லுக் விட்டபடியே!

நன்றி மாலைமலர்


- Mathivathanan - 08-29-2003

அதுதானப்பா.. ஒப்புக்கொள்ளுறம்.. நாங்கள் மல்..யுத்தக்காரரில்லை. ஒப்புக்கொண்டு உந்த யுத்தம் வேண்டாமெண்டு ஒதுங்கியிருக்கவும் விடுறியளில்லை.. வலியவந்து கொளு(ழு)வுறியள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Kanani - 08-29-2003

சந்தோசமான செய்தி
இவ்வளவு காலமும் ஆண்களின் உழைப்பில் வாழ்ந்து வந்தவை இப்ப இப்படியெல்லாம் உழைக்கிறது வரவேற்கக்கூடிய விடயம். அப்பதான் குடும்ப பொருளாதாரச்சுமை எங்கள் தலையில் குறையும் எங்களுக்கும் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் :wink:


- Mullai - 08-30-2003

[size=18]புதுப் பாஞ்சாலி
ஆகஸ்டு 30, 2003

வீட்டு பத்திரத்தை வைத்து சீட்டாட்டம்: கணவரின் கையை வெட்டினார் மனைவி

சென்னை:

வீட்டின் பத்திரத்தை வைத்து சீட்டாடிய கணவரின் கையை வெட்டினார் மனைவி. பின்னர் பரிதாபப்பட்டு மனைவியே, அவரை மருத்துவமனையில் சேர்த்தார்.


சென்னை தி.நகர் பகுதியில் ஒரு அபார்ட்மென்ட்டில் சூதாட்ட விடுதி இயங்கி வருகிறது. இங்கு பணம் வைத்தும், சொத்துக்களை வைத்தும் சூதாட்டம் நடக்கிறது.

சென்னைக்கே தெரிந்த இந்த சூதாட்ட விடுதி, நம் காக்கிகளின் கண்ணில் மட்டுமே படவே இல்லையாம். மாமூல போய்விடுவதால் இந்த விடுதியை கண்டும் காணாமல் இருக்கின்றனர் போலீசார்.

இந் நிலையில் அங்கு வழக்கம் போல சூதாட வந்த ஒருவர் தன்னிடம் பணம் இல்லாததால், வீட்டுப் பத்திரத்தை வைத்து விளையாடியுள்ளார்.

இது குறித்து அறிந்த அவரது மனைவி ஆவேசத்துடன் அங்கு வந்தார். கையில் காய்கறி நறுக்கும் அரிவாள் மனையுடன் அங்கு வந்தார் மனைவி.

சூதாடிக் கொண்டிருந்த கணவரிடம் வீட்டுப் பத்திரத்தைக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அவர் தர மறுக்கவே, கோபமடைந்த மனைவி அரிவாள் மனையால் கணவன் கையை வெட்டினார்.

அலறித் துடித்த கணவரின் இன்னொரு கையில் இருந்த வீட்டுப் பத்திரத்தை பறித்த மனைவி, கணவரையும் தரதரவென கீழே இழுத்து வந்து, அங்கிருந்த ஒரு ஆட்டோவைப் பிடித்து, அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்.


நன்றி தற்ஸ் தமிழ்


- kuruvikal - 08-30-2003

குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்குவதில் வேறுபாடென்ன....வெட்டுக்குங்கள் கொத்துங்கள் குற்றவாளிகள் எங்கிருப்பினும் களையப்பட வேண்டியவர்களே....! நாம் நீதிக்கு தலை வணங்குகிறோம்...ஒழுக்கத்தை உயிரினும் மேலாய் மதிக்கிறோம்....எனவே அவற்றை யார் உறுதியுடன் கடைப்பிடித்தாலும் மனித சமூகத்தின் வினைத்திறனான முன்னேற்றம் கருதி நாம் வரவேற்போம்....!

முன்னைய செய்தியின் இரும்பு பெண்மணிக்கு வாழ்த்துக்கள் இன்னும் ஒலிப்பிக் வரை சென்று தங்கம் வெல்லவும் வாழ்த்துகின்றோம்....! அவரின் திறமையை அடையாளங்கண்டு வளர்த்தெடுத்த அவரின் தந்தையையும் அவரை மனித சமூகத்துக்கு அளித்த அவரின் தாயையும் இங்கு நினைவு கூர்ந்து பாராட்டுவது சாலச்சிறந்ததல்லவா...!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:


- Mathivathanan - 08-30-2003

அதையேனய்யா வச்சு விளையாடுறா என்னைவச்சு விளையாடு எண்டு சொல்லி குந்தியிருந்தியிருந்தால் நவீன பாஞ்சாலியாகலாம்.. கை வெட்டியது..எப்படி..? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sOliyAn - 08-30-2003

கண்ணன் அரிவாள் கொடுத்து உதவினாரோ? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Kanani - 08-30-2003

தாத்ஸ் இன்னும் அந்தக்காலத்திலேயே நிற்கிறார்....இப்பத்தேய பாஞ்சாலிமார் வந்து "எழும்பையா உன்னை வைச்சு நான் ஆடுறன்" எண்டுவாளவை கவனம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- nalayiny - 08-30-2003

நெருப்பு சுவாலை நல்லாத்தான் சுட்டிருக்கு கணணித்தம்பிக்கு.வாழ்க்கையில் தோத்து போனியள் போங்கோ கணணி.இனி எதையும் வைத்து இந்த இழந்ததை மீட்கேலாது கண்டியளோ.சும்மா பிதற்றல் மாங்காய் கத்தரிக்காய் பாவக்காய் என. ஐயோ பாவம்........

கற்பனை செய்
கனவு காண்
நிசம் உணர்.


நளாயினி தாமரைச்செல்வன்.


- Kanani - 08-30-2003

என்னம்மா நடந்தது? வந்தியள் புலம்புறியள்? என்ன பிரச்சனை? ஏதும் பெரிசாவோ?


- Mathivathanan - 08-30-2003

Kanani Wrote:தாத்ஸ் இன்னும் அந்தக்காலத்திலேயே நிற்கிறார்....இப்பத்தேய பாஞ்சாலிமார் வந்து "எழும்பையா உன்னை வைச்சு நான் ஆடுறன்" எண்டுவாளவை கவனம்

nalayiny Wrote:நெருப்பு சுவாலை நல்லாத்தான் சுட்டிருக்கு கணணித்தம்பிக்கு.வாழ்க்கையில் தோத்து போனியள் போங்கோ கணணி.இனி எதையும் வைத்து இந்த இழந்ததை மீட்கேலாது கண்டியளோ.சும்மா பிதற்றல் மாங்காய் கத்தரிக்காய் பாவக்காய் என. ஐயோ பாவம்........

கற்பனை செய்
கனவு காண்
நிசம் உணர்.
நளாயினி தாமரைச்செல்வன்.

Kanani Wrote:என்னம்மா நடந்தது? வந்தியள் புலம்புறியள்? என்ன பிரச்சனை? ஏதும் பெரிசாவோ?

ஷ்.. ஷ்.. ஷ்.. என்னப்பா.. விசிலடிப்பமெண்டால்.. காத்துத்தான் வருகுது.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->