Yarl Forum
துளிகள்.....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: துளிகள்.....! (/showthread.php?tid=6728)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


- tamilini - 10-15-2004

Quote:பிய்த்து போட்ட மலரை
ஓசீலை எடுத்து
உன்னவளை மகிழ்விக்கணும்
என்று ஒரு கேடா..!
பூவை பார்த்து மகிழ
அவள் என்ன பூவையா..?
ஒரு எலும்பு துண்டை
இப் பூவைப்போல்
கவ்வி நில்
உன்னவள் உன்னை தேடி
ஓடோடி வருவாள்...
வவ்,,,வவ்.. லொள்..லொள்......
வாறா போலை இருக்கு...



ஏனுங்க மானிடர் என்று பெயர் தானோ..??
காதலுக்கு சின்னம் மலர் தான்..
எலும்பை வைத்து என்ன என்னவளை
கலைக்க ஐடியாவோ...
அற்ப ஆயுள்ள பேக இருந்த ஒரு மலரை
அரை நொடி எனினும்
பயன்படுத்த விடமாட்டியலா...


- kavithan - 10-15-2004

காதலுக்கு சின்னம் மலரா..?
யார் சொன்னர்கள்.?
அது மனிதக்காதலுக்கு
உங்க காதலுக்கு
எலும்புத் துண்டு தான் லாயக்கு..
உங்களவளை கலைத்து
எனக்கு என்ன கிடைக்கும்
கல்லை கண்டால் நாயை காணம் என்பார்கள்
அப்படி இருக்கும் போது
இப்படி கைவலிக்க
கவிதை எழுதியா கலைக்கணும்..
சரீ...சரி .. விழுந்த பூதானே..
இதை வச்சே
நீ விழுத்த பாக்கிறாய்
உன்னவளை..
ரை பண்ணு....
வெற்றி எண்டால் சொல்லு..
நானும் ஒருக்கா,...... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:


- tamilini - 10-15-2004

நாய்க்கு வெற்றியாம் நீங்கள் என்ன செய்ய போறீங்கள். ஓ நீங்களும் கொடுக்க போறீங்களா.. வாழ்த்துக்கள்....! <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> . காதல் என்றால் எல்லாம் காதல் தானே அதென்ன நாய்காதல் மனிதக்காதல் என்றிருக்கா....??


- kavithan - 10-15-2004

tamilini Wrote:நாய்க்கு வெற்றியாம் நீங்கள் என்ன செய்ய போறீங்கள். ஓ நீங்களும் கொடுக்க போறீங்களா.. வாழ்த்துக்கள்....! <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> . காதல் என்றால் எல்லாம் காதல் தானே அதென்ன நாய்காதல் மனிதக்காதல் என்றிருக்கா....??

நாய்க்கு வெறி தானே வரும்.. ஒரு பூவை வைத்து கொடுக்க போறன் என்னும் போதே புரியேல்லையா.. நாய் தான் சொல்லனும் .. எப்படி ரியாக்சன் இருந்துது எண்டு..... பார்த்து தான் கொடுக்கலாம்....


நாய் நாயை காதலித்தால்.. நாய்க்காதல் :wink:
மனிதன் மனிதனை காதலித்தால் மனிதக்காதல் :wink:


- kuruvikal - 10-16-2004

tamilini Wrote:<img src='http://p.webshots.com/ProThumbs/30/42730_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>

என்ன மானிடா..
எவனோ ஒருதன்..
பிய்த்துப்போட்ட மலரை..
வாட விட மனமின்றி...
என்னவளுக்கேனும் பரிசிளிக்க
காத்திருக்கிறேன்..
மலர் மடிவதற்கு முன்..
என்னவளை எனினும்
மகிழ்விக்கட்டும் என்று தான் பாக்கிறன்...!
நீங்கள் மனிதனை தெய்வம் ஆக்குவியள்..
தெய்வத்தை பாறையாக்குவியள்..
உங்கட கதையை விடுங்கோ...
ஏதோ என்னால முடிஞ்சது..
என்னவள் என்டாலும்
மகிழட்டும்....!
:wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மலரோடு வண்டுக்கு
மலரும் காதல்
மலரை வருத்தாது...!
மலரோடு குருவியின் நேசம்
மனதோடு மகிழ்வு
மலருக்கு வசந்தம்...!
மானிடத்தின் மயக்கக் காதலில்
மலர்ப் பலி...!
மலராகிக் கனியாகி
மலர வேண்டிய வாழ்வு
மடிந்து சிதையுது - அதுகண்டு
மானிடம் களிக்குது
மலரும் பாவத்தை எண்ணாமலே...!
மனிதரோடு உன் வாழ்வு - அதுதான்
மனது மயக்கும் சிற்றின்பக் காதல் கொண்டு
மனது கசியாமல்
மலரைக் கசக்கிறாய்....!
மலரும் எதிர்காலமதில்
மலரும் உன் பாவத்தின் விதி - கூடவே
மலரும் தவறிற்குத் தண்டனை - பின்
மனதோடு வருந்துவாய்
மானிடனைத் திட்டித்தீர்ப்பாய்...!
மானம் கெட்ட மானிடன் கொண்ட
மானிலம் அன்றுன்
மகிமை மறந்து மகிழும் - நீயும்
மன்னிப்பின்றி
மடிவாய் கேடுகெட்ட நாயாய்...!
மனதோடு இன்றே நிறுத்து
மனிதம் மறந்து மானிடன் செய்யும்
மகா பாதகங்கள்
மறந்தும் செய்யேன் என்ற
மனதின் உறுதி...!


- tamilini - 10-16-2004

Quote:
மலரோடு வண்டுக்கு
மலரும் காதல்
மலரை வருத்தாது...!
மலரோடு குருவியின் நேசம்
மனதோடு மகிழ்வு
மலருக்கு வசந்தம்...!

எனது மலர் மீதான காதலும்...
மலரை வருத்தாதே........! :wink:


Quote:மானிடத்தின் மயக்கக் காதலில்
மலர்ப் பலி...!
மலராகிக் கனியாகி
மலர வேண்டிய வாழ்வு
மடிந்து சிதையுது -

வெட்டிப்பேச்சில் காலம் கடத்தும் மானிடனே...
உன்னைப்போல் நானிருந்தால்...
போட்டிடுவேன் பல சட்டங்கள்..
மலரைக்காத்தி்ட
பண்ணிடுவேன் பல ஆக்கினைகள்..
பாளாய் போன அந்த மனிதருக்கு...
நீங்கள் செய்ய வேண்டியவையை விட்டுவிட்டு
வாய்ப்பேச்சில் காலம் ஓட்டும்..
விந்தை தான் என்னவோ...?? :roll: :roll:


- tamilini - 10-16-2004

Quote:நாய் நாயை காதலித்தால்.. நாய்க்காதல்
மனிதன் மனிதனை காதலித்தால் மனிதக்காதல்
_________________

யார் பண்ணினாலும் காதல் காதல் தானே....!


- வெண்ணிலா - 10-16-2004

tamilini Wrote:
Quote:நாய் நாயை காதலித்தால்.. நாய்க்காதல்
மனிதன் மனிதனை காதலித்தால் மனிதக்காதல்
_________________

யார் பண்ணினாலும் காதல் காதல் தானே....!


<b>அதுதானே நமக்கு என்ன அப்படித்தானே அக்கா.</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 10-16-2004

tamilini Wrote:
Quote:
மலரோடு வண்டுக்கு
மலரும் காதல்
மலரை வருத்தாது...!
மலரோடு குருவியின் நேசம்
மனதோடு மகிழ்வு
மலருக்கு வசந்தம்...!

எனது மலர் மீதான காதலும்...
மலரை வருத்தாதே........! :wink:


Quote:மானிடத்தின் மயக்கக் காதலில்
மலர்ப் பலி...!
மலராகிக் கனியாகி
மலர வேண்டிய வாழ்வு
மடிந்து சிதையுது -

வெட்டிப்பேச்சில் காலம் கடத்தும் மானிடனே...
உன்னைப்போல் நானிருந்தால்...
போட்டிடுவேன் பல சட்டங்கள்..
மலரைக்காத்திட
பண்ணிடுவேன் பல ஆக்கினைகள்..
பாளாய் போன அந்த மனிதருக்கு...
நீங்கள் செய்ய வேண்டியவையை விட்டுவிட்டு
வாய்ப்பேச்சில் காலம் ஓட்டும்..
விந்தை தான் என்னவோ...?? :roll: :roll:

பறித்துப் பற்களால் கவ்வி
பாதி உயிரில் பரிதவிக்க வைத்து
பரிசளிக்க பற்றியதாய் பிதட்டிய பப்பியே - இப்போ
பருவ மலரிடத்தில் காதலா...?!
பாவ மனிதரிடத்தில்
பலிக்கும் உன் நாடகம்
பார் முழுதும் பறந்தே களிக்கும்
பறவை எனக்கு கதையளக்காதே...!

நான் அற்ப மானிடன் அல்லன்
நல்ல கொள்கைக்காய்
நாலும் துறந்து வாழும் சுதந்திரப் பறவை
நாயே உன்னிலும் பலமடங்கு மேல்
நல்லது சொன்னால்
நன்மை பிறக்கும் எனில் கேள்
நடக்கப் பழகு நல் வழியில்...!
நாய் வாலை நிமிர்த்த முடியாது
நல்லாத் தெரியும் எனக்கு
நப்பாசை கொண்டு சொன்னேன்
நாலு வார்த்தை நல்லதாய்
நாயாய் கருதாது
நல்ல பிராணியாய் கருதி - நீயோ
நான் "நாய் தான்" என்று அடம்பிடித்தால்
நான் தான் என் செய்ய முடியும் சொல்....!
நல்லதுக்கு காலமில்லை
நாளை நீயாய் தேடும் வேளை
நன்மை தூர இருக்கும்....தீமை அண்மித்திருக்கும்....!


- tamilini - 10-16-2004

அப்படியா.. நீங்கள் மானிடன் என்றெல்லோ நினைச்சன்..
சரி சுதந்திரப்பறவையே.. உங்கள் அறிவுரைக்கு நன்றி.. நான் பறிக்கல எவனோ ஒருதன் பறித்தது என்று சொல்லியல்லோ இருக்கிறேன்... நாம் என்னங்க பண்ண முடியும்... கடவுள் நம்ம வாலை அப்படி படைச்சிட்டான்.. அதற்காக நீங்க இப்படியா நாய் நாய் என்றது...!

இப்படிக்கு பப்பி...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 10-16-2004

Quote:இப்படிக்கு பப்பி...!
_________________

சரிங்க பப்பி குட்டி...... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 10-17-2004

tamilini Wrote:அப்படியா.. நீங்கள் மானிடன் என்றெல்லோ நினைச்சன்..
சரி சுதந்திரப்பறவையே.. உங்கள் அறிவுரைக்கு நன்றி.. நான் பறிக்கல எவனோ ஒருதன் பறித்தது என்று சொல்லியல்லோ இருக்கிறேன்... நாம் என்னங்க பண்ண முடியும்... கடவுள் நம்ம வாலை அப்படி படைச்சிட்டான்.. அதற்காக நீங்க இப்படியா நாய் நாய் என்றது...!

இப்படிக்கு பப்பி...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பறித்தது யாராகினும்
பகட்டுக் காதலுக்கு
பரிசுக்காய் கவ்வியதும்
பரிசுத்த மலரைக் கசக்கியதும்
பப்பியே நீதான்...!
பாவம் செய்து விட்டாய்
பழி ஏற்றுத்தான் ஆக வேண்டும்....!

நாயை நாயெனாமல்
நவில நான் அறியேன் பொய்கள்...!
நாய் நீயாகினும் - என்றும்
நன்மைகள் செய்திட
நன்றே உறுதிகொண்டால்
நீயே என் நட்பின் உறவாவாய்...!
நன்றி பப்பி
நயமாய் நீ வரைந்த மடலுக்கு...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 10-17-2004

பப்பி .. போய்..இனி மற்றது எப்ப வரும்..


- kuruvikal - 10-18-2004

<b>துளிக்க மறந்த கவித்துளி....களத்தில் இருந்து மறைக்கப்பட்டதன் மர்மம் என்னவோ....???!</b>

<img src='http://tamilini.yarl.net/archives/cat11.jpg' border='0' alt='user posted image'>

மலர்கள் பிடிக்குமாம்...
மழை சுடுமாம்...
வெயிலோ குளிருமாம்
இரவுகள் நீளுமாம்...
தனிமை வாட்டுமாம்...
சிரிப்பு வருமாம்..
வீரம் வருமாம்
உலகம் விந்தையாகுமாம்
உறவுகள் புதிராகுமாம்
உணவு கசக்குமாம்...
உளறல்கள் வருமாம்
கவிதை பிறக்குமாம்....
கனவுகள் சூழுமாம்
கற்பனை நீளுமாம்...
காதல் வந்தால் இவை எல்லாம்
கட்டாயம் வருமாம்...

காதல் இல்லாமலே இவைகள் என்னுள்...
காதல் வந்தவுடன் எனக்கு
பைத்தியம் பிடிக்கிது....
கோழையாக உணர்கிறேன்
வாழ்வே பிடிக்கவில்லை
உயிர் வாழ உண்கிறேன்
விருப்பம் இன்றி வாழ்கிறேன்..........
இதில் ஏன் காதல் என்று கேட்கிறேன்...
குழப்பம் மட்டும் மிஞ்சுது பதில் இன்றி...
முடிவுகள் எடுக்க முடியாமல்...
முட்களாக வாழ்க்கை...
நரகமாய் உலகம்...
நிச்சயமாய் இது அவஸ்தை...
வெளியே வர முடியவில்லை...
இவைகள் யாவும் என்னுள்ளே
யாருக்கும் தெரியாமல்.....!

நன்றி : http://www.tamilini.yarl.net/


- kavithan - 10-18-2004

எல்லாம் இந்த குட்டிக்கா.. சரி. அக்கா..துளிகள் குருவி மூலம் இங்கு வந்து சேர்ந்தது.. உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் குருவிகளூக்கு


- kuruvikal - 10-18-2004

அன்னை மடி அரவணைத்து
அன்பாய் பகிர்ந்த அமுதம் அருந்தி
அளவில்லா களிப்பில்
அழகான பூனைக்குட்டி - அதையே
அழகாய் களவெடுத்து
அநாதையாய் விட்டிட
அதுவும் மியா மியா என்று அலறிட
அன்பே உருவான குருவிகள்
அரவம் இன்றி அணுகிப் பார்க்க
அந்தோ பரிதாபம்
அழகான பூனைக்குட்டியோடு
அரைப் பைத்தியம் ஒன்று
அவசரத்தில் கிறுக்கிய வரிகள்...!
ஆராய்ச்சி மணியில்லை - பூனைக்குட்டிக்காய்
அடித்து நீதி கேக்க
அழகிய யாழ்களத்தில் இட்டோம்
அன்பர்களே பகருங்கள் நீதி...!
அழகான பூனைக்குட்டியை - தன்
அற்ப காதலுக்காய் அபகரித்து
அதன்மீதோர் பொய்க் காதல் குற்றம் சுமத்தி
அந்தரத்தில் தவிக்கவிட்ட
அந்தக் காதல்
அரைப் பைத்தியத்துக்கு தண்டனையென்ன..??!
ஆராய்ச்சி செய்துமே சொல்லுங்கள்
மனுநீதிச் சோழன் சபை முன்
மனுப் போக முதலாய்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 10-18-2004

அக்கா பாவமுங்க ஆகா தான் அவவை லொள்ளு பண்ணிறியள்..அவா ஓடி ஒழியப்போறா எங்கையன்..


- tamilini - 10-18-2004

Quote:துளிக்க மறந்த கவித்துளி....களத்தில் இருந்து மறைக்கப்பட்டதன் மர்மம் என்னவோ....???!

மறைக்கப்டவில்லை கொஞ்சம் பிஸி அது தான் போடலை களத்தில போடத்தானுங்க இருந்தோம் குருவிகள் போட்டதிற்கு நன்றிகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 10-18-2004

Quote:அரைப் பைத்தியம் ஒன்று
அவசரத்தில் கிறுக்கிய வரிகள்...!

யாருங்க அது...?? ! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- kuruvikal - 10-18-2004

tamilini Wrote:
Quote:அரைப் பைத்தியம் ஒன்று
அவசரத்தில் கிறுக்கிய வரிகள்...!

யாருங்க அது...?? ! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

யாரறிவார்... நீங்க தான்.... கூட்டிலேறி சாட்சி சொல்ல வேணும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->