Yarl Forum
தத்துவங்களை இங்கே உதிருங்க - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: தத்துவங்களை இங்கே உதிருங்க (/showthread.php?tid=3695)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28


- MEERA - 09-29-2005

வரும் கொஞ்ச நேரத்தில்........ படம் எடுத்துக் கொண்டு...


- கீதா - 09-29-2005

ப்ரியசகி Wrote:
MEERA Wrote:இல்லை பாம்பு......

ஆகா..மீரா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இல்லை பாம்பு களத்துக்க வந்து விட்டதோ எண்டு பயந்துட்டன்.. Confusedhock:


களத்துக்கு வந்தால் உங்களை மட்டுமா கடிக்கப் போது என்னையும் சேர்த்துத் தான் கடிக்கும் Cry


- RaMa - 09-30-2005

நன்றி மறப்பது நன்றன்று


- Birundan - 09-30-2005

என்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை செய்நன்றி கொண்டமகற்கு.


- RaMa - 10-01-2005

உப்பிட்டவரை உள்ளஅளவும் நினை


- Birundan - 10-01-2005

உப்பத்திண்டவன் தண்ணி குடிச்சுதான் ஆகனும்.


- RaMa - 10-01-2005

உப்பில்லா பண்டம் குப்பையிலே


- Birundan - 10-01-2005

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே.


- vasisutha - 10-01-2005

[size=13]தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம்..
அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருந்தால்..


- கீதா - 10-01-2005

குற்றமுல்ல நெஞ்சு குறு குறுக்கும்


- sakthy - 10-01-2005

தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம்..
அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருந்தால்...

வைரமுத்து வின் "தண்ணீர் தேசம் " இருந்து அருமையான வரிகள்


- கீதா - 10-01-2005

அடியாத மாடு படியாது


- Maruthankerny - 10-01-2005

திருமணமென்பது முற்றுகைக்குள் உட்பட்ட கோட்டை மாதிரி!


- Maruthankerny - 10-01-2005

பிரபஞ்சத்தில் உள்ளவை எல்லமே 'இருத்தலில்" இருந்து வந்தவை. இருத்தல்'இருத்தல்லின்மையில்" இருந்து வந்தது!


- vasisutha - 10-01-2005

<!--QuoteBegin-sakthy+-->QUOTE(sakthy)<!--QuoteEBegin-->தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம்..  
அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருந்தால்...
   
வைரமுத்து வின் \"தண்ணீர் தேசம் \" இருந்து அருமையான வரிகள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அப்படியா.. தகவலுக்கு நன்றி..
நான் இந்த வரிகளை கேட்டது.. (அண்ணாமலை) மெகாத் தொடர்
நாடகத்தின் ஆரம்ப பாடலில்.. அந்தப் பாடல் எழுதியதும்
வைரமுத்து தான்.


- sakthy - 10-01-2005

"தண்ணீர் தேசம் "
தமிழில் ஒரு விஞ்ஞானக் காவியம் .ஒரு அழகான காதல் கதையுடன் கூடிய கவிதை நடையில் ஒரு கதை. முடிந்தல் படித்து பாருங்கள்


- vasisutha - 10-01-2005

ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்தபோது
படித்திருக்கிறேன் சக்தி. புத்தகமாக இன்னும் படிக்கவில்லை.


அந்தவரிகள் படித்தது நினைவில் இல்லை
மறந்துவிட்டேன்


- sakthy - 10-01-2005

"கண்களிருந்தே
காட்சிகள் தோன்றும்.
களங்களிருந்தே
தேசங்கள் தோன்றும்

துயரத்திலிருந்தே
காவியம் தோன்றும்
தோல்வியிலிருந்தே
ஞானங்கள் தோன்றும்

சூரியன் மறைந்தால்
விளக்கொன்று சிரிக்கும்
தோணிகள் கவிழ்ந்தால்
கிளை ஒன்று கிடைக்கும்

மரமொன்று விழுந்தால்
மறுபடி தளைக்கும்
மனம் இன்று விழுந்தால்
யார் சொல்லி நடக்கும் ?

பூமியை திறந்தால்
புதையலும் இருக்கும்
பூக்களைத் திறந்தால்
தேன் துளி இருக்கும்

நதிகளைத் திறந்தால்
கழனிகள் செழிக்கும்
நாளையைத் திறந்தால்
நம்பிக்கை சிரிக்கும்."

வைரமுத்து (தண்ணீர் தேசம்)


- கீதா - 10-06-2005

சிற்றினம் அஞ்சும் பெருமைசிறுமை தான் சுற்றமாச்சூழ்ந்து விடும்

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்கும் தகமையாவார்


- RaMa - 10-07-2005

சாது மிரண்டால் காடு கொள்ளாது