Yarl Forum
பெண்களும் சமூகமும்.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: பெண்களும் சமூகமும்.... (/showthread.php?tid=8385)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36


- Mullai - 07-23-2003

[quote=GMathivathanan]
பங்கை.. சத்தம்போடாமல்.. பேசாமல்..சந்தொஷமாக்.. குடும்பம்.. நடாத்திற..
99.9 வீத.. பொண்டுகளுக்கு.. அடக்குமுறையும்.. தெரியாது.. ஆதிக்கமும்.. தெரியாது..
அதுகளுக்கு.. உது.. தேவையில்லை..

சத்தம்போடாமல், பேசாமல் ஒரு வாழ்க்கை..? அதுவும் சந்தோசமாக...
மதி, வரவர [/color]


- GMathivathanan - 07-23-2003

[quote=Mullai]சமூக பாராம்பரியங்களை பெண்கள்தான் கட்டிக் காக்க வேண்டுமா? இது என்ன ஆண்களின் எழுதாத சட்டமா? அதுசரி எவ்வகையான சமூகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்க வேண்டுமென்கிறீர்கள்.ரிவிக்கு.. முன்னாலுள்ள.. செற்றியிலை.. குந்தியிருந்து.. நொறுக்குத்தீனி.. கொறிச்சு.. சீரியல்.. பார்த்துக்கொண்டு. வேலையால்வரும்.. கணவனிடம்.. அப்பா.. தேத்தண்ணி.. சொல்லும்.. கலாச்சாரம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- GMathivathanan - 07-23-2003

GMathivathanan Wrote:[quote=Mullai][quote=GMathivathanan]
பங்கை.. சத்தம்போடாமல்.. பேசாமல்..சந்தொஷமாக்.. குடும்பம்.. நடாத்திற..
99.9 வீத.. பொண்டுகளுக்கு.. அடக்குமுறையும்.. தெரியாது.. ஆதிக்கமும்.. தெரியாது..
அதுகளுக்கு.. உது.. தேவையில்லை..
மதி, வரவர [/color]காதைக்.. கிட்டக்கொண்டுவாருங்கோ.. ரகசியமா.. செய்யிதை.. சத்தம்போட்டுச்.. சொல்லேலாது..

ஒருவேளை.. நீங்கள்.. விதிவிலக்குகள்.. சத்தம்போட்டு.. காட்டிச்..சொய்வியள்.. ஆனால்.. சந்தோஷமாயிருக்கிறதுகள்.. இரகசியமாத்தான்.. எல்லாம்.. செய்யிறதுகள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->



- இளைஞன் - 07-23-2003

Quote:இந்தக் கேள்வியின் மூலம் நீங்கள் எந்த அளவில் உங்கள் சிந்தனையை விருத்தி செய்துள்ளீர்கள்
என்பது தெளிவாகிறது..... நீங்கள் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் மிக அதிகம்....
நாங்களும் தான்...ஆனால் எங்களுக்கு எங்கள் ஆசிரியர்கள் ஊட்டிய அரசியல் சமூகவியல் உண்மைகள்...
சிலவற்றை தெளிவாகக் காண உதவியளிக்கின்றன...நீங்கள் மேற்குலகில் உங்கள் இடைக்காலக்
கல்வியை பெற்று இருக்கிறீர்கள் போல் தெரிகிறது ...அவர்கள் தான் உலகளாவிய பரந்த அறிவு
இல்லாமல் இருக்கின்றனர்.....அந்தச் சாயல் உங்களிலும் அடிக்கிறது....!

மீண்டும் மீண்டும் உங்களால் கருத்துக்களை கூர்ந்து காண முடியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.....
ஏற்கனவே நாம் குறிப்பிட்டுவிட்டோம் விஞ்ஞான ஆய்வுகளில் இன்னும்பலதை சாதிக்க வெண்டியுள்ளது
என்று...அதற்குள் முடிவைக் கொண்டுவா என்றால் என்னாவது....மன்னிக்கவும் இப்படியான்
சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கு எம்மிடம் பதிலை எதிர்பார்க்காதீர்கள் பதில் இருந்தாலும்
அதை உங்களுக்கு விளங்கப்படுத்த புதிய கல்வியியல் முறையை கண்டுபிடித்துக் கொண்டுதான்
நாம் இங்கு வரவேண்டும்...!

எங்களால் மட்டுமல்ல எவராலும் உங்கள் போன்றவர்களுக்கு பதில் தர முடியாது.....காரணம்
உண்மையையே பொய் என்பவனுடன் களத்தில் சந்திக்க முடியாது வேண்டும் என்றால் ஆய்வு
சாலையில் அல்லது மருத்துவ மனையில் சந்திக்கலாம்...!

இளைஞரே...உங்களுக்கும் உயிரியல் உண்மைகளுக்கும் வெகு தூரம் போல் மட்டுமன்றி...நாங்கள் எங்கள்
பெருமைக்கு அங்கு குறிப்பிடவில்லை...நீங்கள் சொல்லகராதி தேடக் கூடாது என்ற நோக்கத்திலேயே
குறிப்பிட்டோம்....! அந்தச் சாதாராண உண்மையையே உங்களால் சரிவரா இனங்காண முடியாத போது
உங்களுக்கு எங்களின் பார்வை பழையதாகத்தான் தெரியும்...உங்களைப் போல..நாங்களும் இளைஞர்கள்
தான்..என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்....

நண்பரே....உங்களுடன் கருத்தாடியது எமது தவறே....காரணம் உங்களிடம் அடிப்படையே இல்லை
என்பதுதான் உங்களின் பதில் தரும் செய்தி....!
Very sorry...! Bye...!

ஆழ்ந்த அனுதாபங்கள் குருவிகளே...

முரண்படுவது போன்று பாவனை செய்வீர்கள். பிறகு இதைத்தான் நானும் சொன்னேன் என்று
உடன்படுவதாய் உள்வருவீர்கள். பெண்நிலைவாதத்தின் அடிப்படையில் இருந்து விலகி நின்று
கருத்து முன்வைப்பீர்கள், பிறகு மற்றவரின் கருத்தில் அடிப்படையில்லை என்பீர்கள். உங்கள்
கருத்தோடு நீங்களே முரண்படுவீர்கள். முன்னொன்றும் பின் வேறொன்றும் சொல்வீர்கள், சுட்டிக்
காட்டினால் அடுத்தவரை கருத்தில் திசைமாற்றம் செய்து கருத்தாடுபவரை தனிப்படத் தாக்க
முனைவீர்கள். உங்கள் கருத்தில் நியாயம் இல்லை என்பதை உணர்ந்தவுடன், மற்றவரில் குற்றம்
சாட்டி நழுவாமல் நழுவிக் கொள்வீர்கள்.

கருத்தோடு கருத்தாட வாருங்கள். கருத்தாளரின் நிலை பார்த்து வாராதீர்கள். அரசியலும்,
சமூகவியலும் பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டு, படித்ததிற்கொப்ப என்றும் ஒழுகும் கல்வியல்ல.
உயிரியலை வைத்து இங்கு சமத்துவமும் உரிமைகளும் பேசப்படுவதில்லை. ஆதிக்கம்
என்றால் என்ன, அடக்குமுறை என்றால் என்ன, விடுதலை என்றால் என்ன, விழிப்புணர்வு
என்றால் என்ன என்பதை உள்வாங்கியிருந்தால் உங்கள் கருத்துக்கள் தடம் மாறியிருக்காது.

எடுகோளிற்குக் கொள்கை தேவை, கொள்கைக்குக் கோட்பாடு தேவை, கோட்பாட்டிற்கு விதி தேவை,
விதியிற்கு திருத்தம் தேவை. ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதும் தெரியும், ஒன்று இன்னொன்றை
இழந்தால் மனிதனின் கருத்தியல் சித்தாந்தமே உடைந்துவிடும் என்பதும் தெரியும். உங்களிற்குப்
புரியாததை கருத்தாடலர்களிடம் விளக்கும் கேட்டு பிழைகளைச் சுட்டிக்காட்டுவது திறமை. அதைவிடுத்து
தெரிந்ததை அடுத்தவரிடம் விளக்கம் கேட்டு மட்டந்தட்ட எண்ணுவது உங்கள் இயலாமை.

இப்படித்தான் வாழவேண்டும் என்பது ஒன்று. இப்படியும் வாழலாம் என்பது இன்னொன்று. எப்படியும்
வாழலாம் என்பது மற்றொன்று. இதில் இப்படித்தான் வாழவேண்டும் என்பதில் கொள்கையிருக்குத்
திருத்தமில்லை. எப்படியும் வாழலாம் என்பதில் எதுவும் இல்லை. இப்படியும் வாழலாம் என்பதில்
எல்லாம் இருக்கு.

ஒரு இடத்தில் நின்றுகொண்டு இதற்குப் பின்னால் ஒன்றுமில்லை என்பது அறியாமை. கிணற்றுக்குள்
நின்று கொண்டு அதைவிடப் பெரிதொன்றுமில்லை என்பது அறியாமை. கிணற்றைத்தாண்டி வெளியில்
வர விருப்பமில்லை. தாண்டிச் சென்றால் தடக்கி விழுந்துவிடுவோம் என்கின்ற பயம்.

இது Readymade உலகம் என்பது உங்கள் கருத்தின் தொனிப்பு. எல்லாமே படைப்பு என்பதுதான் உங்கள்
வாதம். அப்படியிருக்க உருவாக்கமும் உருமாற்றமும் உணர்ந்த தொனிப்பை உங்கள் கருத்தில் எப்படி
எதிர்பார்ப்பேன். தவறுணர்ந்து விலகிச் செல்கிறேன்.

நன்றி


- sOliyAn - 07-23-2003

இளைஞன் Wrote:கருத்தோடு கருத்தாட வாருங்கள். கருத்தாளரின் நிலை பார்த்து வாராதீர்கள். அரசியலும்,
சமூகவியலும் பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டு, படித்ததிற்கொப்ப என்றும் ஒழுகும் கல்வியல்ல.
உயிரியலை வைத்து இங்கு சமத்துவமும் உரிமைகளும் பேசப்படுவதில்லை. ஆதிக்கம்
என்றால் என்ன, அடக்குமுறை என்றால் என்ன, விடுதலை என்றால் என்ன, விழிப்புணர்வு
என்றால் என்ன என்பதை உள்வாங்கியிருந்தால் உங்கள் கருத்துக்கள் தடம் மாறியிருக்காது.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கதவாது என்கிறீர்கள்.. சரி.. உங்கள் பார்வைக்கே வருவோம்.. பொதுவாக என்னென்ன விசயங்களில் குறிப்பாக ஈழத் தமிழ் ஆண் சமுதாயம் பெண்களை அடக்குகிறது.. என்பதையும், அதில் சம்பந்தப்பட்ட பெண்ணின் எண்ணத்திற்கு எதிராக எத்தகைய அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன என்பதையும் உங்களால் ஆதாரத்துடன் தரமுடியுமா?
ஏதோ சில பெண்கள் தாம் அதனுள் இல்லை என்றபோக்கில் நின்று எழுதுவதை வைத்து கருத்தகளை கொண்டு செல்லாதீர்கள்.. முடிந்தால் ஆதாரத்துடன் நீங்களும் அடக்குமுறைகளைப்பற்றி கூறுங்கள்.. அல்லது ஏற்கெனவே எழுதியவர்களும் ஆண்களால் தங்களுக்கு என்ன பாதிப்பு நிகழ்ந்தது என்பதையாவது கூறி ஆதாரப்படுத்தலாமே?! Idea


- nalayiny - 07-23-2003

:wink: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :?


- kuruvikal - 07-23-2003

மீண்டும் இளைஞரே....
எங்கள் கருத்துக்கள் எங்களைப் பெறுத்தவரை சரியானதே...பிழையென்றால் என்ன பிழை எதில் பிழை என்று எழுதுங்கள்...அதைவிடுத்து இந்தப் பொதுமைப்பாடாக எழுதும் வேலைகள் எல்லாம் எங்களிடம் வேண்டாம்...இவற்றைக் கடந்துதான் நாமும் வந்தோம்...அதுவும் அதிக காலமல்ல நேற்றுத்தான்...!
உங்கள், எடுகோள் கொள்கை கோட்பாடு விதி திருத்தம் குறித்த விளக்கம் உங்களை காட்டிக் கொடுத்துவிட்டது அங்கும் வழமை போல தெளிவில்லாத நழுவலைக் காண்பிக்கிறீர்கள்...நீங்கள் பல தடவைகள் கருத்தெழுதும் போது ஏதோ ஆழமாக எழுதுவதாக எண்ணிக் கொண்டு நுனிப்புல் தான் மேய்கிறீர்கள்...உலகில் உயிரியல் சமூகவியல் அரசியல் இரசாயன வியல் பெளதீகவியல் என்று எல்லாமே ஏதோ ஒரு வகையில் தொடர்பு பட்டுத்தான் உள்ளன..!

இதற்கு மேல் உங்களுக்கு பதில் எழுதுவது எம்மைப் பொறுத்தவரை வீண்....!
:evil: :roll:


- kuruvikal - 07-24-2003

இளைஞரே...
நீங்கள் குருவிகளில் பிழைபிடிப்பதற்குப் பதில் குருவிகளின் கருத்துக்களுக்கான எதிர்கருத்தை வைப்பதுதான் கருத்துக்களம் சரியான பாதையில் செல்ல அனுமதிக்கும்...வெறுமனே கேள்விகள் கேட்பதும்...'உமது கருத்து உமக்கே புரியவில்லை எமக்கு எங்கே புரியப்போகிறது' எனக்கடிதல்களும் அவசியமற்றவை...எமது பார்வைக்கும் உங்கள் பார்வைக்கும் இடையே பலத்த வேறுபாடுகள் இருக்கலாம்...உங்களின் பார்வை மேலானதாகக் கூட இருக்கலாம்...அதற்கு உங்கள் பார்வை என்ன என்பதைக் குறிப்பிட்டால்தான் உங்கள் கருத்துக்களை பற்றி தீர்மானங்களை எடுக்க முடியும்....அவற்றிற்கு பதில் கருத்துக்களை முன்வைக்க முடியும்...அதைவிடுத்து தேவைக்குப் புறம்பான ஆதாரம் காட்டு...அல்லது இரண்டு கேள்விகளை புகுத்தி அதற்கு பதில் தா என்றால்...நாங்கள் உங்களிடமும் இவற்றையே திருப்பிக் கேட்க என்னவாகும்...இதை முதல் ஒரு தடவை பழைய களத்தில் செய்தும் காட்டியிருந்தோம் ஆனாலும் நீங்கள் அதைக் கவனத்தில் எடுக்கவில்லை....அது மட்டுமன்றி உங்கள் கேள்விகள் எல்லாம் எங்களுக்கு அர்த்த புஷ்டியானதாக இருக்க வேண்டும் என்றும் நீங்கள் கருத முடியாது....
குருவிகள் கருத்தால்தான்
இங்கு மோதுகின்றனவே தவிர மற்றவர்களின் தகுதி நிலையறிந்தல்ல...அப்படிப் பார்த்திருந்தால் நாம் இங்கு வந்திருக்கவே முடியாது...காரணம் சிறந்த படைப்பாளிகளைக் கொண்டதாக இக்களம் விளங்குகிறது...நாங்கள் அவர்களின் முன்னால் எம்மாத்திரம்.....!

நீங்கள் பல ஆதாரங்களைக் இதோ கொண்டுவருகிறேன் என்று போனீர்கள் ஆனால் இது வரைக்கும் எதையும் கொண்டுவரவில்லை....சமாளிப்புப் பதில்களைத் தந்துவிட்டு குருவிகள் மீது பிழை பிடிப்பதாக காட்டிவிட்டு தப்பி ஓட முனைகிறீர்கள்...இது குருவிகளை குற்றவாளியாக்கும் முயற்சியாகவே குருவிகள் கருதுகின்றன....தயவு செய்து கருத்துக்கு கருத்தெழுதுங்கள் மற்றவர்களுக்கும் எமக்கு மிடையே கருத்தால் கருத்தாடலால் தேவையற்ற மனக் கசப்புகள் உருவாக இடமளிக்க வேண்டாம்....அப்படிச் செய்வது நாம் இக்களம் வருவதை பரிசீலிக்க வகை செய்யும்...! நாம் சில கருத்துக்களால் வேறுபட்டிருந்தாலும் ஒரே குடும்பத்தவர்களே என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்...!

:evil: :twisted: :evil:


- Paranee - 07-24-2003

யாழ் இணையத்தின்முகப்பில் பிரசுரமான ஒரு விடயம்

இங்கு பொருந்தும் என்பதால் இணைக்கின்றேன். நன்றி அம்பலத்தார்

Quote: சில வாரங்களுக்கு முன் எங்கட பகுதியிலை நடந்த தமிழாலயங்களின் பதின்மூன்றாவது ஆண்டு விழாவிற்குப் போயிருந்தன். அதிலை கண்ட காட்சியள் எனக்கொரு ஆதங்கத்தை உண்டாக்கிவிட்டுது. அதை ஒருக்கால் ஆரோடையாவது பகிர்ந்துகொள்ளவேணும்போல கிடந்தது அதுதான் விசயத்தை எழுதுறன் படிச்சுப்போட்டு நீங்களும் ஒருக்கால் சிந்திச்சுப் பாருங்கோவன்.

அங்கை விழாவிலை பல ஆசிரியைகள் பம்பரமாச் சுத்திச் சுழன்று மண்டப ஒழுங்கு, நிகழ்ச்சுp ஒருங்கிணைப்பு, நிகழ்ச்சித் தயாரிப்பு எண்டு பல வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்துகொண்டு இருந்தினம். இவ்வளவு ஆர்வத்தோடையும் தங்கட வீட்டு நிகழ்வு எண்டதுபோன்ற உணர்வோடையும் அவையள் வேலை செய்யிறதைப் பார்த்து அட எங்கட பொம்பிளையள் பொதுச்சேவையளிலை இவ்வளவு ஈடுபாடாய் இருக்கினமெண்டு வலு சந்தோசமா இருந்தது. கொஞ்ச நேரத்திலை ஆசிரியர் கௌரவிப்பு நடந்தது. அதிலையும் பத்து ஆண்டுகளுக்கு மேல சேவை செய்த ஆசிரியைகள் எண்டு தாய்க்குலத்தினர் பலர் கௌரவிக்கப்பட்டினம். எனக்கெண்டால் புளுகம் தாங்கேல்லை, பக்கத்திலை இருந்த என்ரை செல்லம்மாட்டைச் சொன்னன். அடியே செல்லம் ஊரிலைதான் எங்கட பெண்டுகள் ஆம்பிளையளுக்குச் சற்றும் குறைவில்லாமல் எல்லாத்துறையளிலையும் நிக்கேல்லை இங்கையும் விவரமான பெண்டுகள் நிறைய இருக்கினம்போலக்கிடக்கு பாரன் மேடையிலை எத்தினை பெண்டுகள் கேடயத்தோட நிக்கினம். நான் சொல்லி முடிக்க முந்தியே அவளென்டால் அவசரப்பட்டுக் குதிக்காதையுங்கோ மிச்ச நிகழ்ச்சியளையும் வடிவாப் பாத்திட்டு பிறகு சொல்லுங்கோ. எண்டு ஒரே போடாப்போட்டாள். எனக்கெண்டால் ஒண்டுமாப் புரியேல்லை, இவளுக்கு நான் என்ன சொன்னாலும் பொறுக்காதே அதுதான் புறுபுறுக்கிறாள். எண்டு மனசுக்கை கறுவிக்கொண்டாலும் செல்லம்மா சொன்னால் அதிலை எதாவது விசயம் இல்லாமலும்போகாது எண்ட பயத்திலை கம்மெண்டு உக்காந்து மிச்ச நிகழ்ச்சியளைப் பாக்கத் தொடங்கினன். கொஞ்ச நேரத்திலை நிர்வாகியள் கௌரவிப்பு நடந்தது. இப்ப என்ன சொல்லுறியள் செல்லத்தின்ரை குரல் நக்கலாக் கேட்டுது. பாருங்கோ எத்தனை நிர்வாகியள் வரிசையா வந்து கேடயத்தோட போகினம் இதிலை உங்கட பெண்டுகள் எங்கைபோட்டினம், ஒருத்தரையும் காணேல்லை.

அப்பத்தான் என்ரை மர மண்டைக்கு உதிச்சுது. இதிலை மட்டுமில்லை புலம்பெயர் நாடுகளிலை இருக்கிற எங்கட அரசியல் அமைப்பு, புனர்வாழ்வு அமைப்பு, பொருண்மிய மேம்பாட்டு அமைப்பு எண்டு எதிலையும் நிர்வாகத் தரத்திலை பெண்டுகள் ஒருத்தரும் இருக்கிறதாத் தெரியேல்லை எண்டது.

ஆனால் பாருங்கோ எனக்கு இதிலை ஒரு விசயம் புரியேல்லை. இஞ்சை இருக்கிற எங்கட பொம்பிளையள் றேடியோவிலை புதுக்கவிதை படிக்கிறது, பெண்ணியம் பேசுறது எழுதுறது, உணர்ச்சி புூர்வமான கதையள் எழுதுறதோட தங்கட பணி முடிஞ்சுpட்டுது எண்டு இருக்கினமோ? அல்லது எங்களுக்கு வீட்டிலை மட்டுமில்லை பொது விசயத்திலையும் மாடா உழைக்கிறதுக்குத்தான் பெண்டுகள் தேவை அதுக்குமேல சிந்திச்சுச் செயல்படுற மாதிரி ஒரு அமைப்பை நிர்வகிக்கிற அளவுக்கு அவையளை விடமாட்டம் எண்டதிலை புலம்பெயர் ஆம்பிளையள் கவனமா இருக்கினமோ?............



- nalayiny - 07-24-2003

அம்பலண்ணையின் கருத்து சத்திய வாக்கு. அது தான் உண்மை.

சிந்திச்சுச் செயல்படுற மாதிரி ஒரு அமைப்பை நிர்வகிக்கிற அளவுக்கு அவையளை விடமாட்டம் எண்டதிலை புலம்பெயர் ஆம்பிளையள் கவனமா இருக்கினமோ?............


- nalayiny - 07-24-2003

இந்த களத்திலையே பெண்களை ஓரம் கட்ட என்றே சிலர் பறப்பது தெரியவில்லையா? ஒரு பெண்ணின் சுய சிந்தனையிலான கருத்தையே ஏற்காது ஏதோ தாம் தோம் என்கின்ற பாணியில் பறக்கிறவர்கள் எப்படி தமது குடும்ப உறுப்பினப்பெண்ணவளின் கருத்தை ஊள்வாங்குவார்கள் என்பது அதிற்சி மிகு தன்மையை என்னுள் தோற்றுவித்தள்ளது. கூண்டுப்பறவைக்கு கூட பாட கூவ தூங்க உரிமை உள்ளது பாவம் அந்த பெண்களிற்கு என்னத்தை கொடுத்து வைத்துள்ளார்களோ? ஒரு பெண்ணியக்கருத்தை ஏற்றுக்கொள்வதா நான் என்கின்ற முனைப்பில் பறப்பவர்களை நாம் ஒன்றுமே செய்து விட முடியாது தான். அவர்கள் எல்லாம் ஆறறிவிற்கு மனித நேயத்திற்கு அப்பால் பட்டவர்களே. குடத்துள் விளக்காய் இருப்பவர்கள் குன்றின் விளக்கு என நினைத்துக்கொள்ளட்டுமே .அந்த திருப்தியில் வாழ்நாளை கழித்து மடியட்டும் என விட்டுவிடுவதே களநிலமைக்கு சிறந்தது.

அகப்பை அறியுமா கறியின் சுவை. ஒரு துளியாயினும் நாக்கு அறியுமே அதன் சுவை.

நளாயினி தாமரைச்செல்வன்.


- GMathivathanan - 07-24-2003

GMathivathanan Wrote:[quote=Karavai Paranee]யாழ் இணையத்தின்முகப்பில் பிரசுரமான ஒரு விடயம்
இங்கு பொருந்தும் என்பதால் . நன்றி அம்பலத்தார்
அம்பலத்தார் ..செல்லம்மா.. சொன்னதும்.. பேசாமலிருந்து.. பார்த்தாரே..
அந்த.. மாதிரித்தான்.. எல்லாம்.. நடக்குதுபோலை..
[size=14]பிடிச்ச.. பிள்ளையார்.. கும்பம்.. மாதிரி..


- sOliyAn - 07-24-2003

நீங்களொண்டு.. ஒரு சின்ன விமர்சனம் வைச்சுப் பாருங்கோ.. நீங்கள் ஆண் என்றாலும் உள்ளுக்கை போகவே ஏலாது.. இதுக்கை பெண்ணியம் பேசாதீங்கோ.. அண்மையிலை எங்கடை பகுதி பள்ளிக்கூடத்திலை விளையாட்டுப் போட்டி நடந்துது.. வேறை பகுதி பள்ளிக்கூடத்திலை இருந்து சிலபேர் வந்திச்சினம்.. நடுவர்களாம்.. ஓடுறவர்கள் தமக்குரிய கோட்டிலே ஓடவேணும் என்ற சின்னவிசயம்கூட தெரியாத நடுவர்கள்.. கேட்டதுக்கு என்ன பதில் வந்தது தெரியுமே.. தாங்கள் நடுவர்களாம்.. தாங்கள் பிழையை சரியென்றாலும் ஏற்றுக் கொள்ளவேணுமாம்.. நடுவராய் வந்தவேக்கை கூடுதலானவை அம்மணியள்தான்.. :mrgreen:


- Alai - 07-24-2003

kuruvikal Wrote:மூளை தொடர்பான ஓரளவு புதிய ஆய்வுக் கட்டுரை ஒன்று....
http://www.sciam.com/article.cfm?articleID...E49809EC588EEDF
twisted: Idea :twisted:

இந்தக் கட்டுரையில்
ஆண்களுக்குக் கொம்பு முளைத்திருப்பதாக ஒன்றும் எழுதப் படவில்லையே!


- GMathivathanan - 07-24-2003

Alai Wrote:[quote=kuruvikal]மூளை தொடர்பான ஓரளவு புதிய ஆய்வுக் கட்டுரை ஒன்று.... http://www.sciam.com/article.cfm?articleID=00018E9D-879D-1D06-8E49809EC588EEDF
இந்தக் கட்டுரையில்
ஆண்களுக்குக் கொம்பு முளைத்திருப்பதாக ஒன்றும் எழுதப் படவில்லையே!உது.. என்ன.. கேள்வி..?
ஆடு..மாட்டுக்குத்தான்.. கொம்பு.. மனிதருக்குக்.. கொம்பில்லை.. உது.. தெரியாமல்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Alai - 07-24-2003

Quote:[b]<span style='font-size:25pt;line-height:100%'>sOliyAn</span>ஏட்டுச் சுரைக்காய் கறிக்கதவாது என்கிறீர்கள்.. சரி.. உங்கள் பார்வைக்கே வருவோம்.. பொதுவாக என்னென்ன விசயங்களில் குறிப்பாக ஈழத் தமிழ் ஆண் சமுதாயம் பெண்களை அடக்குகிறது.. என்பதையும், அதில் சம்பந்தப்பட்ட பெண்ணின் எண்ணத்திற்கு எதிராக எத்தகைய அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன என்பதையும் உங்களால் ஆதாரத்துடன் தரமுடியுமா?
ஏதோ சில பெண்கள் தாம் அதனுள் இல்லை என்றபோக்கில் நின்று எழுதுவதை வைத்து கருத்தகளை கொண்டு செல்லாதீர்கள்.. முடிந்தால் ஆதாரத்துடன் நீங்களும் அடக்குமுறைகளைப்பற்றி கூறுங்கள்.. அல்லது ஏற்கெனவே எழுதியவர்களும் ஆண்களால் தங்களுக்கு என்ன பாதிப்பு நிகழ்ந்தது என்பதையாவது கூறி ஆதாரப்படுத்தலாமே?! Idea

[b]சாகாவரம்
எழுதியவர் - இராஜன் முருகவேல்

Quote:முதலில் அது சாதாரணமாக இருந்தாலும், நாட்கள் செல்லச்செல்ல அது அவளுக்கு முள்ளாக உறுத்தியது.

~தன்னையொரு வாழவழியற்றவள்| எனப் பலருக்குப் பறைசாற்றுவதுபோல இருந்தது.

~இதற்காகவா சீதனம் வாங்காமல் கலியாணம் கட்டினான்...|

நாட்கள் செல்லச்செல்ல சந்திரனின் சுயரூபம் அவளுக்கு மெல்லமெல்லப் புரிய ஆரம்பித்தது.

'சகுந்தலா.... ~ரொய்லட்|டை வடிவாய்க் கழுவு.... உடுப்பைத் தோய்ச்சு ~அயன்| பண்ணி வை.... சப்பாத்தைத் துடைச்சு வை... தேத்தண்ணி கொண்டு வா... காலைப் பிடிச்சு விடு... பொடியள் வாறாங்கள்- நாலைஞ்சு கறியோடை சமைச்சு வை.... வேலையாலை களைச்சுப்போய் வாறன். உனக்கென்ன வீட்டிலை காலாட்டிக் கொண்டிருக்கிறாய்..."

சீதனமில்லாமல் திருமணம்செய்து வீட்டோடு வேலைக்காரியாக வைத்திருக்கத் தீர்மானித்துவிட்டான்போலும்.

அவளால் பெருமூச்சுத்தான் விட முடிந்தது.
Ööö

'சகுந்தலா... ஐஞ்சாறு ~கிளாஸ்| கொண்டு வா..." என்றவாறு உள்ளே நுழைந்தான் சந்திரன்.

கையில் ஒரு துணி ~வாய்க்|. அதனுள் சில போத்தல்கள் சிணுங்கின. அவனைத் தொடர்ந்து ஐந்தாறு பேர்- நண்பர்கள்.

வரவேற்பறையில் இருந்த மேசையில் போத்தல்களை எடுத்து அடுக்கினான்.

'மச்சான்! முதலிலை ~வீடியோ| எடுக்கவேணும். என்னட்டை இருக்குது. நானும் சகுந்தலாவும் ~கேக்|கை வெட்டேக்கை நீ ~சூட்| பண்ணு..."

'பண்ணினால் போச்சு...."

'வடிவாய் எடுக்கவேணும். ஊரிலை அம்மா, மாமா மாமி எல்லாருக்கும் அனுப்பவேணும்.... ஏய் சகுந்தலா.... ~கிளாஸ்| எங்கை?"

'என்ன பொரிச்சனீ..... அதையும் கொண்டு வா..."

சகுந்தலா மௌனமாகப் பரிமாறினாள்.

'உதுக்குத்தான் சொல்லுறது, எங்கடை ஊhர்ப் பொம்பிளையளைக் கலியாணம் செய்யவேணும் எண்டு. வேறை நாட்டுக்காரியளெண்டால் நீ உன்ரை வேலையைப் பார், நான் என்ரை அலுவலைப் பாக்கிறனெண்டு போவிடுவாளவை..." என்றான் பாலன்.

'ஓமோம்.... செல்வம் ஒரு ஜேர்மன்காரியைக் கட்டி படுறபாடுதான் தெரியுமே? காசிருக்கோ இல்லையோ ஒவ்வொரு சனிக்கிழமையும் ~றெஸ்ரோண்ட்|டிலை சாப்பிடவேணும். அவையவேன்ரை வேலையளை அவையவைதான் செய்யவேணும். வேலையாலை வந்து அதை எடு, இதை எடெண்டு அதிகாரம் செய்யேலாது.... எங்கடை பொம்பிளையள் எவ்வளவு மேல்...."

'நான் சீதனம் வேண்டாமையெல்லே கலியாணம் கட்டினனான்..." என்று பெருமையாகக் கூறினான் சந்திரன்.

ஒருநாளைக்கு ஒருமுறையாவது சொல்லாவிட்டால் அவனுக்குத் தலை வெடித்துவிடும் போலும்.

சகுந்தலாவுக்கு அவமானமாகக்கூட இருந்தது. தன் தலைவிதியை நொந்துகொண்டாள்.


'என்ன ~ம்|மெண்டிருக்pறாய்... இண்டைக்காலும் சிரிச்சுக் கொண்டிரன்...."

சிரிக்க முயன்றாள். முடியவில்லை.
கதையை முழுமையாக வாசிக்கhttp://www.yarl.com/articles.php?articleId=259




[b]மறுவிசாரணை
எழுதியவர் - இராஜன் முருகவேல்

Quote:'நான் நந்தன்...."

'நந்தனோ...? எனக்குத் தெரியேலை..."

'என்ன அக்கா உப்பிடிச் சொல்லுறியள்?! நான் சின்னையா வாத்தியாற்றை மகன்..."

'ஓ.... ஓ.... தெரியும். தெரியும். என்ன திடீரெண்டு இந்தப் பக்கம்..."

'உதை றோட்டிலை நிக்க வைச்சே விசாரிக்கிறது? கதவைத் திறவுங்கோவன்..."

பிரயாணக் களைப்பு. அவசரத்தில் தேனீரைமட்டும் பருகிவிட்டு வெளிக்கிட்டது. வசந்தியின் வீட்டில் சாப்பிடலாம்தானே என்ற எண்ணம்.

வீட்டிற்கு வரும் விருந்தினர்களை.... அதுவும் பல வருடங்கள் கழித்து வரும் விருந்தினர்களை விழுந்து விழுந்து உபசரிப்பார்கள் என்ற திடமான நம்பிக்கை அவனுக்கு.

சிறிதுநேரம் வசந்தியின் குரலைக் காணவில்லை.

'என்ன அக்கா.... என்ன யோசினை....?!"

'யோசினை இல்லை நந்தன். பயம்..."

'பயமோ...?"

ஆச்சரியத்துடன் கூவினான்.

'எனக்கோ..."

'அவருக்குப் பயம்.... நீர் ரெலிபோன் எடுத்துக்கூடச் சொல்லாமை வந்திட்டீர்...."

'உங்கடை ரெலிபோன் நம்பர் என்னட்டை இல்லை அக்கா..."

'குறை நினையாதையும்.... அவர் இல்லாத நேரத்திலை ஆரையும் வீட்டுக்குள்ளை விடக்கூடாதெண்டு உத்தரவு.... அதுதான் நந்தன். நீர் என்ன நினைப்பீரோ தெரியாது..."

வசந்தியின் குரல் பரிதாபமாக ஒலித்தது.

நாகரீகத்தின் உச்சியில் நிற்கும் ஒரு நாட்டில் இப்படியொரு கணவன். அவருக்கு இப்படியொரு மனைவி, கூண்டுக்கிளியாக...!!

நாடு மாறினாலும் பாஷை மாறினாலும் உடைகள் மாறினாலும் உள்ளத்தை மாற்ற விரும்பாத மனிதர்கள்.

'அக்கா! அப்ப நான் போவிட்டு வாறன்..."

'கொஞ்சம் பொறும் நந்தன்.... வீட்டுக்குள்ளைதான் கூப்பிட முடியேலை. என்ன விசயமாய் வந்தனீரெண்டு கேக்கலாமில்லையா?"

~நாலு சுவர்களுள் அடைபட்டுக்கிடக்கும் இவளிடம் சொல்லுவதால் என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது?|

யோசித்தான்.

'விருப்பமில்லாட்டால் வேண்டாம்...."

'இல்லை அக்கா... விசயத்தைச் சொல்லி விசாரிக்கத்தானே விடியவெள்ளண்ண எழும்பி இவ்வளவு து}ரம் வந்திருக்கிறன்.... ஆனால் இப்பிடி வாசலிலை நிண்டு கதைக்கிறது புது அனுபவம்..."

'எனக்கு இது பழகிப்போன விதி.... அப்பா அம்மா பெரிசில்லை, காதலன்தான் வேணுமெண்டு நானே என்ரை வாழ்க்கையை அமைச்சுக்கொண்டன். இப்ப பாழாய்ப்போன சந்தேகம்.... அதுக்குப் பயந்து பயந்து வாழவேண்டிக் கிடக்கு...."

'கவலைப்படாதேங்கோ.... காலம் எப்பவும் கஸ்டமாக இருக்காது. அக்கா, எனக்கொரு சம்பந்தம் ஊரிலையிருந்து பேசி வந்தது. பிறக்கறாசியாற்றை மகளாம்.... அவவைப்பற்றி உங்களிட்டை ஏதாலும் விசாரிக்கலாம் எண்டுதான் வந்தனான்..."

'என்னத்தைப்பற்றி விசாரிக்கப் போறீர்? அழகு... குணம்.... படிப்பு... பண்பு... இல்லாட்டில் பணம் காசு...?! நான் சொல்லுறனெண்டு குறை நினைக்காட்டில் ஒண்டு சொல்லுறன்..."

'சொல்லுங்க..."

'உங்கடை தாய் தேப்பன் உங்களுக்கு நல்லதைத்தான் செய்வினம்.... அவையிலை சந்தேகப்படாதையுங்கோ... ஒவ்வொரு மனுசருக்கும் ஒவ்வொரு குறை இருக்கு. ஒருத்தருக்குப் படிப்பு இல்லாட்டில் நல்ல குணம் இருக்கும். பணம் இல்லையெண்டால் நல்ல அழகு இருக்கும். வாழ்க்கைக்கு இதுகளெல்லாம் ஓரளவுக்குத்தான் தேவை... விட்டுக் கொடுத்து வாழுற மனம்தான் முக்கியம்... இண்டைக்கு என்ரை வாழ்க்கையைப் பாருங்கோ... காதலிச்சம்.... படிப்பு ~ரியூசன்| எண்டு தாய் தேப்பனை ஏமாத்திக் காதலிச்சம்.... ஓருயிர் ஈருடல் எண்டமாதிரி.... ஆனால் எல்லாம் கொஞ்சநாள் கவர்ச்சி.... இப்ப கவர்ச்சி போய் சந்தேகம் வந்து நான் ஒரு சிறைப்பறவையாய்.... ஓமோம்.... அவருக்கு என்னிலை சந்தேகம்... அடி உதை... குத்து.... நான் ஆசையாகத் தேடிக் கொண்ட வாழ்க்கை. என்ரை 'பாஸ்போட்"கூட என்னட்டை இல்லை. அவர்தான் கொண்டு திரியுறார்.... ஓடீடுவனாம்..."

சுவரில் பொருத்தியிருந்த ஒலிபெருக்கியில் வசந்தியின் குரல் விம்மியது.

நந்தனுக்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை.
கதையை முழுமையாக வாசிக்கhttp://www.yarl.com/articles.php?articleId=258


- Alai - 07-24-2003

சோழியான்

உங்கள் கதைகளை வாசித்து விட்டு
மிகுந்த சமூகப் பிரக்ஞையுடன்தான் கதைகளை எழுதுகிறீர்கள் என நினைத்தேன்.

கதை வேறு
கருத்து வேறு
வாழ்க்கை வேறா..?


- Alai - 07-24-2003

GMathivathanan Wrote:ஆடு..மாட்டுக்குத்தான்.. கொம்பு.. மனிதருக்குக்.. கொம்பில்லை.. உது.. தெரியாமல்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

மனிதர்கள்.

ஆண்கள் பெண்கள் இருவருமே மனிதர்கள்
ஒப்புக் கொள்கிறீர்களா?


- GMathivathanan - 07-24-2003

[quote=Alai]சோழியான்
உங்கள் கதைகளை வாசித்து விட்டு
மிகுந்த சமூகப் பிரக்ஞையுடன்தான் கதைகளை எழுதுகிறீர்கள் என நினைத்தேன்.
கதை வேறு
கருத்து வேறு
வாழ்க்கை வேறா..?யை.. சீர்செய்யும்.. அப்படித்தானே.. சோழியான்..


- GMathivathanan - 07-24-2003

Alai Wrote:
GMathivathanan Wrote:ஆடு..மாட்டுக்குத்தான்.. கொம்பு.. மனிதருக்குக்.. கொம்பில்லை.. உது.. தெரியாமல்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
மனிதர்கள்.
ஆண்கள் பெண்கள் இருவருமே மனிதர்கள்
ஒப்புக் கொள்கிறீர்களா?மூளை தொடர்பான ஓரளவு புதிய ஆய்வுக் கட்டுரை ஒன்று.... http://www.sciam.com/article.cfm?articleID=00018E9D-879D-1D06-8E49809EC588EEDF
இந்தக் கட்டுரையில்
<span style='font-size:25pt;line-height:100%'>ஆண்களுக்குக் கொம்பு முளைத்திருப்பதாக ஒன்றும் எழுதப் படவில்லையே! </span>உது.. என்ன.. கேள்வி..?
ஆடு..மாட்டுக்குத்தான்.. கொம்பு.. மனிதருக்குக்.. கொம்பில்லை.. உது.. தெரியாமல்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->[/quote]
நீங்கள்தானே.. கொம்பு.. முளைத்திருப்பதுபற்றி.. எழுதியிருக்கிறீர்கள்.. நான்.. எழுதவில்லையே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
உங்கள்.. பார்வை.. எப்படியானது.. என்பது.. தெட்டத்தெளிவாகத்.. தெரிகின்றது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->