![]() |
|
நடப்பு அரசியல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நடப்பு அரசியல் (/showthread.php?tid=7366) |
- Kanthar - 04-08-2004 BBC Wrote:தேர்தல் முடிந்துவிட்டதால் வாக்கு எண்ணிக்கையை கீழே போட்டுவிட்டு Poll ஐ எடுத்து விடலாம் என்று நினைக்கின்றேன். ஆரோ சங்கரியருக்குதான் இங்கை கள்ள வோட்டு போட்டுடினம் 21% சரியாக்கூடக்காட்டுது.......இதிலையும் முறுக்கலாமோ தம்பி பிபிசி - Mathan - 04-08-2004 அடக்கடவுளே ஆளை விடுங்க சாமி. - Mathan - 04-09-2004 தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி TNS இல பார்த்த கேலி சித்திரம் <img src='http://www.tamileelamnews.com/news/uploads/cartoonl.gif' border='0' alt='user posted image'> - Mathan - 04-09-2004 <img src='http://www.thinakural.com/2004/April/09/moorthy.gif' border='0' alt='user posted image'> Thanx: Thinakkural - Mathan - 04-10-2004 தற்போது கிழக்கில் சண்டை வெடித்து கடுமையாக நடந்து வருகின்றது. பலர் உயிர் இழந்திருப்பதாக செய்திகள் வருகின்றன். இரண்டு வருட காலத்திற்கு பின் மீண்டும் இலங்கையில் இரத்தம் சிந்த ஆரம்பித்திருக்கின்றது. சிலர் இதை கருணாவிடம் இருந்து கிழக்கை விடுவிக்கும் ந்டவடிக்கை என வர்ணிக்கின்றார்கள். மற்றும் சிலர் இதை சகோதர யுத்தம் தவிர்த்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். இப்படி பலவிதமான விமர்சனங்கள். உங்கள் கருத்து என்ன? - Eelavan - 04-10-2004 இதையெல்லாம் விடுதலைப் புலிகளுக்கே யுத்த முறை கற்றுக் கொடுத்த ஆசிரியர் முன்னமே உணர்ந்து கொண்டு மன்னிப்பை ஏற்றுக் கொண்டிருந்தால் இந்நிலையைத் தவிர்த்திருக்கலாம் மன்னிப்பை ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் தானும் நாட்டை விட்டுத் தப்பியோடி நல்வாழ்வு வாழ்ந்திருக்கலாம் தனது பகுதி மக்களையும் நிம்மதியாக வாழவிட்டிருக்கலாம் - Mathan - 04-10-2004 ம் கருணா பிரிவின் மீதான தாக்குதல் போர்நிறுத்த மீறல் என்று சந்திரிகா சொல்லியிருக்கிறாமே? - shanthy - 04-10-2004 Eelavan Wrote:இதையெல்லாம் விடுதலைப் புலிகளுக்கே யுத்த முறை கற்றுக் கொடுத்த ஆசிரியர் முன்னமே உணர்ந்து கொண்டு மன்னிப்பை ஏற்றுக் கொண்டிருந்தால் இந்நிலையைத் தவிர்த்திருக்கலாம் கச்சை நனைஞ்சாப்பிறகும் கருணாவுக்குப் புத்தி வராட்டி என்ன ஈழவன் செய்யிறது. துள்ளின மாடு பொதிசுமந்து ஆகவேண்டியதுதான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Paranee - 04-10-2004 கச்சை நனைவதா ? நகைப்பாக இருக்கின்றதே ழூழ்கி முக்குளித்துக்கொண்டிருக்கின்றார். இனி என்ன செய்வது ? - Eelavan - 04-10-2004 BBC Wrote:ம் தாக்குதல் நடக்கும் பிரதேசம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத பிரதேசம் என்று போர்நிறுத்த உடன் படிக்கையில் வரையறுக்கப்பட்ட பிரதேசம் இதனை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் விதிகள் மீறப்படுகின்றனவா என்று கண்காணிப்பதில் விழிப்போடிருப்பதாகவும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு சொல்லியிருக்கிறது இதே சந்திரிகா மட்டக்களப்பிலிருந்து பலநூற்றுக்கணக்கானவர்கள் கருணா குழுவின் தொல்லையால் இடம்பெயர்ந்த போது என்ன செய்துகொண்டிருந்தார்? - Eelavan - 04-10-2004 Paranee Wrote:கச்சை நனைவதா ? இனி என்ன செய்வது மூழ்கி எடுத்த முத்துகளை கிடைத்தவரை இலாபம் என சுருட்டிக் கட்டிக் கொண்டு ஓட வேண்டியதுதான் இன்று கூட நிலமை மோசமில்லை தனது சகாக்களை சரணடையும் படி கூறிவிட்டு தான் ஓடித்தப்பலாம்/தப்பிவிட்டாரா? - Mathan - 04-10-2004 <img src='http://www.thinakkural.com/2004/April/10/moorthy.gif' border='0' alt='user posted image'> Thanx: Thinakkural - Eelavan - 04-10-2004 விவசாய, சந்தை அபிவிருத்தி, இந்து விவகாரம், தமிழ் மொழி பாடசாலை மற்றும் தொழிற் பயிற்சி வடக்கு அமைச்சர் - டக்ளஸ் தேவானந்தா நிறையப் பொறுப்புகள் டக்ளசிற்கு வழங்கப்பட்டிருக்கின்றன இது பற்றி உங்கள் கருத்து? - Paranee - 04-11-2004 நிறைய சுருட்டலாம் - sethu - 04-11-2004 எல்லாம் தமிழ் மக்கழை இலக்கு வச்சு கொடுக்கப்பட்டிருக்கு நல்ல ஒது து}ன்டில் கனபேர் அகப்படலாம் என்டு கனவாக்கும். - Manithaasan - 04-11-2004 குட்டையை இன்னும் எப்படிக் குழப்பலாம் என்பதற்காக சந்திரிகா ஏதாவது சொல்லுவா...உள்வீட்டுக்குள்ளை உள்ள பிரச்சினையை இன்னும் தீர்;க்க வழிதெரியாமல் அவ யோசிக்கிறா....அமைச்சரவை பதவியேற்பில் ஜே.வி.பி..பகிஷ்கரிப்பு...புலிகள் உள்வீட்டுப்பிரச்சினையைத் தீர்க திட்டமிட்டே செயலாற்றுகிறார்கள்..இதில் இருவேறு கருத்துகளுக்கு இடமேது..பிரதேசவாதம் எடுபடவில்லையென்பதை கிழக்குமக்கள் நிரூபித்திருக்கிறார்கள். டக்ளஸ் வடக்கு அடைச்சரா???.அப்ப கிழக்கு.மேற்கு.தெற்குக்கு??? அட்டதிக்கு அமைச்சராக யாரேனும் நியமிக்கப்படுவார்களோ?. .நல்லா கண் துடைக்கிறா...தாடியைவச்சு ; அடுத்த தேர்தலுக்கு ஏதாவது செய்யலாமென்ற திட்டமாக்கும்.... உலக நாடுகளுக்கு கதிர்காமர் முன்பு விட்ட கரடியை இனிமேல் விட இயலாதென்றே கருதுகிறேன். பார்ப்போம்.நித்திய கண்டத்திலுள்ள அரசு என்பதை...தேரர் கட்சி இல்லாமற் செய்திருக்கிறது போலிருக்கிறது...தேரர்கள் சந்திரிகாவின் தலைக்குமேல் தொங்கும் கத்தியாக இருக்கவே விரும்புகிறார்கள்...பார்ப்போம் நான்குமாதமா?..இரண்டுமாதமாவென. - Mathan - 04-12-2004 <img src='http://www.thinakural.com/2004/April/12/moorthy.gif' border='0' alt='user posted image'> நன்றி - தினக்குரல் - Mathan - 04-18-2004 கருணா காணாமல் போய் சில நாட்களாகிவிட்டன. இவர் எங்கே இருக்கின்றார் என்பது மில்லியன் ரூபாய் பெறுமதியான கேள்வி ,,,, கொழும்பு, இந்தியா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா என்று அந்த பட்டியல் நீள்கின்றது. அவர் எங்கே இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? - Paranee - 04-19-2004 இருக்கவேண்டிய இடத்தில் பத்திரமாக இருக்கின்றார் - Mathan - 04-19-2004 தமிழரசு கட்சி பற்றி டக்ளஸ் தேவானந்தா வெளியிட்ட கருத்துக்கள் .... உங்கள் பார்வைக்காக .... தமிழரசு கட்சி திருடர்கள் கும்பலை பிரதிநிதித்துவப் படுத்துகிவதால் அதற்கு தான் அமைச்சு பதவியை ஏற்றது குறித்து விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். நன்றி - த ஐலண்ட் |