Yarl Forum
யூனிக்கோட் என்னும் God - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: யூனிக்கோட் என்னும் God (/showthread.php?tid=8413)

Pages: 1 2


- தமிழன் - 10-27-2003

நன்றி சற்று சிந்திக்க வைத்துவிட்டீர்கள். உதாரணத்திற்கு விரித்தாளில் நான் அகர வரிசையில் எனது தரவுகளை பதிகிறேன் என்று வைப்போம் ஒரு இடத்தில் நான் ஒள' வன்னா வரிசையில் பதிகிறேன் கணனி எவ்வாறு அதனை ஒள ன்னா என்று விளங்கும். ஒ னா ள னா என்று தானே விளங்கிக்கொள்ளும்.

location of tamil character in unicode
ஒ 2962 0B92

ஔஒள 2964 0B94 (நன்றி: http://www.alanwood.net/unicode/tamil.html)

ஆக தனி தனி எழுத்துக்களாக இருப்பதை நாம்தாம் உட்படுத்துதலில் குழப்புகிறமோ என்று எண்ணத் தோன்றுகிறது

நான் Microsoft Frontpage மென்பொருளில் பாமுனி யூனிக்கோட்டில் 'ஒள' வன்னாவை'ஒள'வன்னா ஒரு எழுத்தை உட்படுத்த பாமுனி விசைப்பலகையில் கட்டை இல்லை என்பதால்) xs என்று அடித்தேன்( இறுதியில் அவை 'ஒ'னா 'ள' னா என கணனி இரு எழுத்துக்காக விளங்கிவிட்டதை அறிந்தேன்.

சான்று இதுதான்

&#2962 ;&#2995
= ஒள

ஒள' வன்னா ஒரு எழுத்தென்றால்

&#2964 ;
மட்டுமே வந்திருக்க வேண்டும்.


இதற்கெல்லாம் தெளிவான விளக்கம் தந்தால் என்னைப்போல் குழப்ம் அடைந்த பலபேர் தெளிவார்கள் என நினைக்கிறேன்.

நன்றி


- sOliyAn - 10-27-2003

நன்றி தமிழன்.. ஓரளவு விளங்குகிறது..


- yarl - 10-27-2003

தமிழன் இது உங்களக்கு உதவியாகவிருக்குமா பாருங்கள் .தொடராகவருகிறது.
http://www.kumudam.com/kumudam/27-10-03/pg25.php


- தமிழன் - 10-27-2003

நன்றி சுரதா ஐயா இது எனக்கு நிச்சயமாக பயன்தரும் என்று எதிர்பார்க்கிறேன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Arrow


- Paranee - 10-27-2003

தகவலிற்கு நன்றி சுரதா அண்ணா

குமுதம் நீண்டநாட்களாக புகவில்லை. தற்போது புகமுனையும்போது அது ஏற்கமறுக்கின்றதே. ?

சரி எதுவாகினும் தங்கள் இணைப்பிற்கு நன்றி

அது சரி தமிழன் அண்ணாவை ஏன் ஜயா ஆக்கிவிட்டீர்கள்.
Quote:நன்றி சுரதா ஐயா இது எனக்கு நிச்சயமாக பயன்தரும் என்று எதிர்பார்க்கிறேன்



- கண்ணன் - 02-11-2004

யாழ்

அவ்வன்னா பிரச்சினைபற்றி பற்றி தமிழன் இங்கு குறிப்பிட்டபோது
தேனி எழுத்து அவ்வன்னாவை ஆதரிக்காததினால் ஒள என்று கொடுத்திருப்பீர்கள் என்று எண்ணினேன்.
ஆனால்
கௌ
ஙௌ
சௌ
ஞௌ
டௌ
ணௌ ................ எழுத்துக்களுக்கும்

கெ+ ள= கெள
ஙெ+ ள= ஙெள
செ+ ள= செள
ஞெ+ ள= ஞெள
டெ+ ள= டெள
ணெ+ ள= ணெள ......... போன்று எழுதப்பட்டுள்ளது.

சாதரணமாக ஒரு கருத்தை வாசிப்பவர்களுக்கு இதனால் எந்தவித பிரச்சினைகளுமில்லை அவர்கள் அதை உணரவும்மாட்டார்கள்.

ஆனால் இதனால் இரண்டு வித தீமைகள் உண்டு.

1.ஏற்கனவே Unicode Character கள் அதிக wepspace ஐ பிடிக்கிறது என்று முறைப்பாடு உள்ளது. இந்தநிலையில் இன்னும் கூடிய Characterகளை பயன்படுதிதி ஒரு எழுத்தை எழுதவேண்டுமா?

2. எழுத்துக்களை அகரவரிசைப்படுத்தும் போது பாமுனியோ அல்லது உங்களின் மற்றைய தயாரிப்புகளோ சிக்கலைக்கொடுக்கிறது.

அசல் யுனிகோட்டை அடிப்படையாக வைத்து ஒரு spellchek (சொல் சோதனை) மென்பொருளை செய்து அதனை பரிசோதனை செய்வதற்கு பாமுனியை இறக்கி பரிசோதித்தேன். சரியான சொற்களை தவறாக பாமுனி எழுத்துக்கள் சுட்டின.

மண்டையை குடைந்ததில் என்ன பிரச்சினை என்று புரிந்தது.


யுனிகோட் என்பதே தனி எழுத்துத்தானே. அதிலும் சிக்கலை ஏற்படுத்தினால் எப்படி?

எனவே அசல் யுனிகோட் எழுத்துகளில் உள்ள கௌ ஙௌ ...களை போடுவதே சரி
அது மட்டுமல்லாது இனிவரும் காலங்களில் மென்பொருள் இறக்கம் செய்வோரின் மின்னஞ்சலை பெற்றபின் அனுமதி வழங்குவதே நல்லது ஏனெனில் தவறுகள் ஏற்படும் போது அவர்களுக்கு அதை அறிவிக்க உதவியாக இருக்கும்.

அனேகமானோர் பாமுனியை பாவிக்கின்றனர்.
க வரிசைக்குள் ள வரிசையை புகுத்துகின்றது
எனவே பாமுனிக்கு ஏற்றவாறு நானும் சொல்த்திருத்திக்கு தவறான கௌ வையே கொடுக்கவேண்டியுள்ளது. இதனால் அசல் கௌ வை பயன்படுத்துவோருக்கு சிக்கலைக்கொடுக்கலாம்.

எனவே இதனை கவனத்தில் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.