Yarl Forum
பாடல்கள்(திரைப் படம்..., மெல்லிசை......., துள்ளிசை......) - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பாடல்கள்(திரைப் படம்..., மெல்லிசை......., துள்ளிசை......) (/showthread.php?tid=8381)

Pages: 1 2 3 4 5 6 7


தொட்டுத் தொட்டு... - இளைஞன் - 07-19-2003

<b>பாடல் வரி: ?
பாடல் இசை: யுவன் சங்கர் ராஜா
பாடிய குரல்: ஹரிஷ் ராகவேந்திரா
படம்: காதல் கொண்டேன்</b>


தொட்டுத் தொட்டுப் போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டுத் தூறும் தூறல்
வெள்ளமாக மாறாதோ

ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே
அவள் பார்க்கும் பார்வைதான் துளிர்கிறதே
போகும் பாதைதான் தெரிகிறதே
மனம் எங்கும் மயங்கிடும் பொழுது

வார்த்தையா இது மெளனமா?
வானவில் வெறும் சாயமா?
வண்ணமா மனம் மின்னுமா?
தேடித் தேடித் தொலைந்திடும் பொழுது

தொட்டுத் தொட்டுப் போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டுத் தூறும் தூறல்
வெள்ளமாக மாறாதோ

தொட்டுத் தொட்டுப் போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டுத் தூறும் தூறல்
வெள்ளமாக மாறாதோ

இந்தக் கனவு நிலைக்குமா?
தினம் காணக் கிடைக்குமா?
உன் உறவு வந்ததால்
புது உலகம் திறக்குமா?

தோழி உந்தன் கரங்கள் தீண்ட
தேவனாகிப் போனேனே
வேலி போட்ட இதயம் மேலே
வெள்ளைக் கொடியைப் பார்த்தேனே

தட்டுத் தடவி இன்று பர்க்கையிலே
பாத சுவடு ஒன்று தெரிகிறதே
வானம் ஒன்றுதான் பூமி ஒன்றுதான்
வாழ்ந்து பார்த்து வீழ்ந்திடலாமே

தொட்டுத் தொட்டுப் போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டுத் தூறும் தூறல்
வெள்ளமாக மாறாதோ

தொட்டுத் தொட்டுப் போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டுத் தூறும் தூறல்
வெள்ளமாக மாறாதோ

விண்ணும் ஓடுதே மண்ணும் ஓடுதே
கண்கள் சிவந்து தலை சுற்றியதே
இதயம் வலிக்குதே இரவு கொதிக்குதே
இது ஒரு சுகம் என்று புரிகிறதே

நேற்றுப் பார்த்த நிலவா என்று
நெஞ்சம் என்னைக் கேட்கிறதே
பூட்டி வைத்த உணர்வுகள் மேலே
புதிய சிறகு முளைக்கிறதே

இது என்ன உலகம் என்று தெரியவில்லை
விதிகள் வரைமுறைகள் புரியவில்லை
இதய தேசத்தில் இறங்கிப் போகையில்
இன்ப துன்பம் எதுவுமில்லை

தொட்டுத் தொட்டுப் போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டுத் தூறும் தூறல்
வெள்ளமாக மாறாதோ

ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே
அவள் பார்க்கும் பார்வைதான் துளிர்கிறதே
போகும் பாதைதான் தெரிகிறதே
மனம் எங்கும் மயங்கிடும் பொழுது

வார்த்தையா இது மெளனமா?
வானவில் வெறும் சாயமா?
வண்ணமா மனம் மின்னுமா?
தேடித் தேடித் தொலைந்திடும் பொழுது

பாடல் வரிகளில் பொருள் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் பாடலில் ஒரு ஏக்கம் தவிப்பு என்று எல்லாவித உணர்வு வெளிப்பாடும் உள்ளது. அதுபோல இசையும் அற்புதம். அதுதவிர பாடியவர் குரலும் பாடல்வரிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளது. மற்றும் படத்தில் பாடற்காட்சியும் அதற்கான நடன அமைபுங்கூட சிறப்பாகவே உள்ளது. இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அத்தைனையுமே கேட்டு அனுபவிப்பதற்குரியவையே. ஏன் பாடல் மட்டுமல்ல, படமும், படத்தில் Heroism காட்டாத அந்த இளைஞனின் திறமையான நடிப்பும் பாராட்டுதற்குரியதே.


- Paranee - 07-19-2003

வாழ்த்துக்கள் இளைஞனே
நீண்டநாட்களின் பின் ஒரு அருமையான திரைப்படம் பார்த்த உணர்வை தந்தது அந்த படம். அருமையான பாடல் வரிகள். மிகைப்படுத்தாத காட்சிகள். விறுவிறுப்பான எதிர்பார்ப்புகள். மொத்தத்தில் திரைஉலகின் சினிமாத்தனத்தில் இருந்து சற்று வேறுபட்டு இருக்கின்றது. இத்திரைப்படம். அது மட்டுமன்றி இந்த நாயகனின் நடிபபு நல்லதொரு எதிர்காலம் ஒன்று அவனிற்காக காத்திருக்கின்றது என்பதை பறை சாற்றுகின்றது.


- Mullai - 07-26-2003

கெட்டிமேளம் கொட்டுற கல்லாணம்
தங்கத்தாலி கட்டுற கல்யாணம்
பூவிலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்கள் கல்யாணமடி கல்யாணம்

வெத்தலை பாக்கு வைச்சு
அதிலே ஊரை வரவழைச்சு
குத்துவிளக்கு வைச்சு நடுவே
கோலம் வரைஞ்சு வைச்சு
மாவிலைப் பந்தலில்
மாப்பிள்ளைப் பையன் மாலையிடுவானாம்
வண்ணச் சேலை அணிந்தவள்
மாலை கொடுத்தவன் காலைத் தொடுவாளாம்
இந்த ஏமாளிக்கும் கோமாளிக்கும்
கல்யாணமாம் கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்கள் கல்யாணமடி கல்யாணம்

மஞ்சளைப் பூசிக்கிட்டு
காலிலே மிஞ்சி அணிஞ்சுக்கிட்டு
அஞ்சி நடந்துக்கிட்டு
மாமியார் சொன்னதைக் கேட்டுக்கிட்டு
வீட்டுச் சிறையிலே கூட்டுக்கிளியென
பெண்ணுமிருப்பாளாம்
அவள் கண்ணும் கலங்கிட
கட்டிய புருசன் ஆட்டிப் படைப்பானாம்
அந்தக் கோணங்கிக்கும் பூங்கொடிக்கும்
கல்யாணமாம் கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்கள் கல்யாணமடி கல்யாணம்

பட்டுச் சிறகடிக்கும் நானொரு
சிட்டுக் குருவியடி
கட்டுக் கடங்காமல் மலையில்
கொட்டும் அருவியடி
பாடிப்பறக்கவும் ஆடித்திரியவும் ஆசைபிறக்குமடி
அந்தி மாலை அழகிலும் சோலை அழகிலும்
இன்பம் பிறக்குமடி
வண்ண மயில்களுக்கும் மந்திகளுக்கும்
கல்யாணமாம் கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்கள் கல்யாணமடி கல்யாணம்

படம்- சந்ரோதயம்
பாடல் -வாலி
பாடியவர்கள்- பி.சுசீலா
இசை- எம்.எஸ்.வி.


- Paranee - 07-29-2003

வாலியின் முத்தான் வரிகளில். . .


ஒருவரம் தெய்வம் தந்தால்
நான் உன்னைக்கேட்டுப்பெறுவேனே
உன்னைபபெறுவது என்றால் நான்
உயிரைக்கூட தருவேனே


- Mullai - 08-02-2003

படம் -
பாடல் -
பாடியவர் -

மனுசனை மனுசன் சாப்பிடுறான்டா தம்பிப்பயலே - இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

வானம் பொழியுது புூமி விளையுது தம்பிப் பயலே
நாம வாடி வதங்கி வளப் படுத்துறோம் வயலை
தானியமெல்லாம் வலுத்தவனோடை கையிலே - இது
தகாதுன்னு எடுத்துச் சொல்லியும் புரியேல்லை - அதாலை

மனுசனை மனுசன் சாப்பிடுறான்டா தம்பிப்பயலே - இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு
தன் குறையை மறந்து மேலே பார்க்குது பதரு - அதுபோல்
அறிவு உள்ளது அடங்கிக் கிடக்குது வீட்டிலை - எதுக்கும்
ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே

மனுசனை மனுசன் சாப்பிடுறான்டா தம்பிப்பயலே - இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப்பயலே - எதுக்கும்
ஆமாம்சாமி போட்டுவிடாதே தம்பிப்பயலே
புூனையைப் புலியாய் எண்ணிவிடாதே தம்பிப் பயலே - உன்னைப்
புரிஞ்சுக்காமலே நடுங்காதேடா தம்பிப் பயலே

மனுசனை மனுசன் சாப்பிடுறான்டா தம்பிப்பயலே - இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை


- Alai - 08-07-2003


படம் - பொன்னூஞ்சல்
இசை - எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்கள் - டி.எம். செளந்தரராஜன் - பி. சுசீலா

டி.எம்.எஸ்
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா

பி.எஸ்.
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா

ஓ ஓ....
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி
மணச்செம்பு கையேந்தி
நாம் அங்கே போவோமா
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி
மணச்செம்பு கையேந்தி
நாம் அங்கே போவோமா
மீனாவின் குங்குமத்தை
மீனாவின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா
மானோடு நீராட மஞ்சள் கொண்டு செல்வோமா
ஆகாயப் பந்தலிலே பொன்னு¡ஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதமமா

டி.எம்.எஸ்
பால்வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம்
மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா
பால்வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம்
மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா
ஊராரின் சன்னதியில் ஒன்றாக வேண்டுமம்மா
தாயென்றும் சேயென்றும் தந்தையென்றும் ஆவோமா
ஆகாயப் பந்தலிலே பொன்னு¡ஞ்சல் ஆடுதம்மா

பி.எஸ்
கண்ணென்றும் வளை கொண்ட கை என்றும்
இவள் கொண்ட அங்கங்கள் நீ காணும் சின்னங்கள்

டி.எம்.எஸ்
பொன்மாலை அந்தியிலே என் மானை தேடி வரும்
அம்மா உன் பெண்ணுள்ளம் நாணம் சொல்லி ஆடி வரும்

இருவரும்
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஆ...ஆ
ஆ....ஆ


- Mullai - 08-08-2003

[quote]Alai[/color]
ஓ ஓ....
ஆ...ஆ
ஆ....ஆ
ஓ போட்டிருக்கிறீங்கள். சரி.
பிறகெதற்கு ஆ போட்டிருக்கிறீங்கள்?


- sethu - 08-12-2003

இந்த முல்லைக்கிளவிக்கு பாட்டும் வருத


- Chandravathanaa - 08-16-2003

படம் பயணங்கள் முடிவதில்லை
குரல் எஸ். பி. பாலசுப்ரமணியம்
பாடல் கண்ணதாசன்
இசை இளையராஜா


இளைய நிலா பொழிகிறது... இதயம் வரை நனைகிறது..
உலாப் போகும் நேரம்.. கனாக் காணுமே..
விழாக் காணுமே.. வானமே..

இளைய நிலா பொழிகிறது... இதயம் வரை நனைகிறது..
உலாப் போகும் நேரம்.. கனாக் காணுமே..
விழாக் காணுமே.. வானமே..
இளைய நிலா பொழிகிறது... இதயம் வரை நனைகிறது..

வரும் வழியில் பனிமழையில்.. பருவ நிலா தினம் நனையும்..
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்..

வரும் வழியில் பனிமழையில்.. பருவ நிலா தினம் நனையும்..
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்..
வானவீதியில் மேக ஊர்வலம்..
காணும் போதிலே ஆறுதல் தரும்..
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்..

இளைய நிலா பொழிகிறது... இதயம் வரை நனைகிறது..
உலாப் போகும் நேரம்.. கனாக் காணுமே..
விழாக் காணுமே.. வானமே..
இளைய நிலா பொழிகிறது... இதயம் வரை நனைகிறது..

முகிலினங்கள் அலைகிறதே.. முகவரிகள் தொலைந்தனவோ..
முகவரிகள் தவறியதால்.. அழுதிடுமோ அது மழையோ..

முகிலினங்கள் அலைகிறதே.. முகவரிகள் தொலைந்தனவோ..
முகவரிகள் தவறியதால்.. அழுதிடுமோ அது மழையோ..
நீலவானிலே.. வெள்ளி ஓடைகள்..
ஓடுகின்றதே.. என்ன ஜாடைகள்..
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்..

இளைய நிலா பொழிகிறது... இதயம் வரை நனைகிறது..
உலாப் போகும் நேரம்.. கனாக் காணுமே..
விழாக் காணுமே.. வானமே..
இளைய நிலா பொழிகிறது... இதயம் வரை நனைகிறது..


நல்லகாலம்.. தப்பீட்டார - sOliyAn - 08-17-2003

Quote:பருவ மகள் விழிகளிலே கனவு வரும்..

ம்.. அதெப்படி பருவமகளுக்கு கனவு வரலாம்.. கேள்வி இதுவரை வராததால் தப்பீட்டார் வைரமுத்து!


- Mullai - 08-17-2003

[quote=Chandravathanaa]படம் பயணங்கள் முடிவதில்லை
குரல் எஸ். பி. பாலசுப்ரமணியம்
பாடல் கண்ணதாசன்
இசை இளையராஜா

பாடல் கண்ணதாசன் என்று போட்டிருக்கிறதே.
தேசியவிருது பெற்றவர் கோவித்துக் கொள்ள மாட்டாரா?


- sethu - 08-17-2003

முல்லை கோவிக்கட்டில் சரிதானே?


- sOliyAn - 08-17-2003

ம்.. கண்ணதாசன் மாட்டீட்டார்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sethu - 08-18-2003

அப்ப தாசன் இனி கவிதை உருளும் எண்டுறியளோ


- Chandravathanaa - 08-18-2003

<b>
வரும் வழியில் பனிமழையில்..
பருவ நிலா தினம் நனையும்..
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்..
வானவீதியில் மேக ஊர்வலம்..
காணும் போதிலே ஆறுதல் தரும்..

முகிலினங்கள் அலைகிறதே..
முகவரிகள் தொலைந்தனவோ..
முகவரிகள் தவறியதால்..
அழுதிடுமோ அது மழையோ..</b>

<b>இந்த அழகிய கற்பனைக்குச் சொந்தக் காரன் கவிஞர் வைரமுத்து என்று தெரிந்தும்
தவறுதலாக கண்ணதாசன் என எழுதி விட்டேன்</b>.

<b>தவறைச் சுட்டிக் காட்டிய முல்லைக்கு நன்றி</b>.


Re: நல்லகாலம்.. தப்பீட்ட - Chandravathanaa - 08-18-2003

[quote]sOliyAn

[b]யார் யாருக்கு கனவு வர வேண்டும் என்று ஏதாவது விதிமுறை இருக்கா?


- sOliyAn - 08-18-2003

ஒரு பெண்ணை அழகாக இருக்கிறாள் என்று எழுதினால்.. அதெப்படி பெண்களைமட்டும் வர்ணிக்கலாம் என சண்டைக்க வாற காலமுங்கோ?


- AJeevan - 08-18-2003

sOliyAn Wrote:ஒரு பெண்ணை அழகாக இருக்கிறாள் என்று எழுதினால்.. அதெப்படி பெண்களைமட்டும் வர்ணிக்கலாம் என சண்டைக்க வாற காலமுங்கோ?

பெண்மைக்கு மறு பெயர் அழகு
தாய்மைக்கு மறு பெயர் அன்பு

அன்பானவர்களிடம் உண்மையையும்
உண்மையானவர்களிடம் அன்பையும்
தாராளமாக வெளிப்படுத்தலாம்.............


- nalayiny - 08-19-2003

அற்புதம்.


- sOliyAn - 08-19-2003

ஆண் அழகுப்போட்டிக்கு வேறு பெயர் சொல்லுங்கோ.. ப்ளீஸ்..!!