![]() |
|
நாரி நோ? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28) +--- Thread: நாரி நோ? (/showthread.php?tid=8374) Pages:
1
2
|
- Mullai - 06-21-2003 sethu Wrote:ஆம் விபத்து பயங்கரமானது. ஜரோப்பிய ஆசிய ஊடகங்கள் மட்டத்தில் பரவிய விடயம். மற்றது வெளிக்காயங்கள் ஏற்படாமல் தப்பியவன் நான் மட்டுந்தான் என்பது அதிசயம். இப்பொழுதுதான் இந்தப் பக்கத்தைப் பார்க்க நேர்ந்தது. ஒரு பெரிய விபத்தில் இருந்து நீங்கள் தப்பியது உண்மையிலேயே பெரிய அதிசயம்தான். அதுசரி தலையில் அடிகிடி ஒன்றும் படவில்லைத்தானே? - sethu - 06-21-2003 உணர்ச்சியற்று இருந்தேன் ஆனால் காயங்கள் இல்லை - Mullai - 06-21-2003 சேது குருவிகள் சொன்னது போல வைத்தியரை உடனடியாக அணுகுவது நன்மை பயக்கும். - sethu - 06-22-2003 நன்றி வெகுவிரைவில் - sethu - 06-22-2003 திடீர் என என் நண்பன் ஒருவனுக்கு கண் வலிக்கின்றது. மருத்துவர் எந்தவித நோய்களும் இல்லை என்கிறார். யாராவது காரணம் தெரிந்தால் சொல்லுங்கள். - sOliyAn - 06-22-2003 தற்போது ஜேர்மனியில் கண் வலியும் தும்மலும் பலரை ஆட்கொண்டிருக்கிறது.. இது ஒரு வகை அலர்ஜி என்கிறார்கள்.. இது பூக்களில் இருந்து மகரந்தம் உதிரும் காலகட்டத்திலேயே நிகழ்கிறது.. வருடாவருடம் குறிப்பிட்ட காலப்பகுதியில் இந்நோய்க்கு ஆளாகும் இவர்கள்.. மாத்திரைகளை நாடி.. இறுதியில் ஊசி மருந்தின்மூலமாகவே இந்நோயை கட்டுப்பாட்டுள் வைத்திருக்கிறார்கள். - sethu - 06-22-2003 நன்றி சோழியன் எனது நண்பன் இலங்கைக்கு சுமார் 7 மாதத்திற்கு முதல் போய்வந்தான். அதன்பின்பு தொடர்ந்து இருமுகின்றான் மருந்தெடுத்தும் சரிவரவில்லை. காரணம் தெரியுமா? - GMathivathanan - 06-22-2003 <!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->நன்றி சோழியன் எனது நண்பன் இலங்கைக்கு சுமார் 7 மாத்திற்கு முதல் போய்வந்தான். அதன்பின்பு தொடர்ந்து இருமுகின்றான். மருந்தெடுத்தும் சரிவரவில்லை. காரணம் தெரியுமா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->காரணம் தெரியாது ஆனால் மருந்து.. ஆளை உடனை ஐசலேசன் வாட்டிலை விட்டிட்டு கண்ணாடிக்குள்ளாலை கதையுங்கோ.. என்னத்தை வாங்கிவந்தார் எண்டது சரியாத் தெரியும்வரை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- சாமி - 11-02-2003 <img src='http://www.yarl.com/forum/files/muttu_noo.gif' border='0' alt='user posted image'> வயது அதிகரிக்க அதிகரிக்க எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது. உடல் பருமனும் எலும்பு தேய்மானத்திற்கு காரணமாக அமைத்து விடுகிறது. கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண்கள் மூட்டு வலியால் அவதிப்படுவார்கள். இதற்கு காரணம் `ஹார்மோனல் இன்பென்' ஏற்பட்டு கால்சியம் சத்தை எலும்புகளால் கிரகிக்க முடியாத தன்மையை ஏற்படுத்தி விடுவதுதான். பரம்பரைத் தன்மை, பாரம்பரியமாகத் தோன்றி ஏதாவது ஒரு வயதில் நோய் கலவை ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தலாம். அதேபோல் அவ்வப்போது ஏற்படும் காய்ச்சல், நோய்க்கிருமிகளின் தாக்குதல் எதிர் விளைவுகளை ஏற்படுத்தி மூட்டு வலியை ஏற்படுத்தி விடும் நிலை உள்ளது. ஒரு சிலருக்கு புரதச் சத்தை உடம்பு கிரகிக்க முடியாமல் ரத்தத்தில் `ïரிக்ஏசிட்' எனப்படும் உப்பு சத்தை அதிகமாக்கி `கவுட்' என்னும் மூட்டுவலியை ஏற்படுத்தி விடும். மூட்டு வலியை எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை மூலம் அறியலாம். நோய் தன்மை உருவாவதற்கு அடிப்படை காரணங்களை நீக்குவதன் மூலம் மூட்டு வலிகளை குணப்படுத்த முடியும். மூட்டு வலியால் பாதிக்கப்படுபவர்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. உடல் குண்டாக இருப்பவர்கள் சைக்கிளிங், நீச்சல் போன்றவற்றில் ஈடுபட்டு வரலாம். அதேபோல் எண்ணைப் பலகாரங்கள் மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து விடுவதும் நல்லது. நன்றி: தினத்தந்தி - AJeevan - 11-02-2003 sOliyAn Wrote:தற்போது ஜேர்மனியில் கண் வலியும் தும்மலும் பலரை ஆட்கொண்டிருக்கிறது.. இது ஒரு வகை அலர்ஜி என்கிறார்கள்.. இது பூக்களில் இருந்து மகரந்தம் உதிரும் காலகட்டத்திலேயே நிகழ்கிறது.. வருடாவருடம் குறிப்பிட்ட காலப்பகுதியில் இந்நோய்க்கு ஆளாகும் இவர்கள்.. மாத்திரைகளை நாடி.. இறுதியில் ஊசி மருந்தின்மூலமாகவே இந்நோயை கட்டுப்பாட்டுள் வைத்திருக்கிறார்கள். இததைவிட இன்னுமொரு வழியுண்டு. [size=15] (i) அதாவது உங்கள் இரத்தத்தை பரிசோதித்து ,எவையெவை நோயாளிக்கு அலர்ஜி தருகிறது என்று கண்டறிந்து,அவற்றை ஊசி மூலமாக vaccination முறையில் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு வாரத்தில் ஒரு முறை இரத்தத்தில் செலுத்தி அலர்ஜி தரும் வகைகளை இரத்தத்துடன் ஒத்துப் போகப் பண்ணுவார்கள். இவற்றைப் பற்றி உங்கள் வைத்தியரிடம் ஆலோசனை பெறலாம்.அவரே உங்களை அலர்ஜி சம்பந்தமான விசேட வைத்தியரிடம் அனுப்புவார்கள். (ii)புதிய (German) ஜேர்மனிய மருத்துவ முறையில் பரிசோதித்து ,எவையெவை நோயாளிக்கு அலர்ஜி தருகிறது என்று கண்டறிந்து,அவற்றை ஒரு மெசின் மூலமாக - & + எனும் மெக்னட் தெரப்பியாக செய்து வெற்றி கண்டிருக்கிறார்கள். இவ் முறைகள் சுவிசில் நடைமுறையில் உள்ளது. இது தவிர இந்தியாவில் ஆயுர்வேத முறைகளில் அலர்ஜிகள் குணமாக்கப்பட்டு வருகின்றன பழைய வித சிகிச்சையாக தற்போதும்:- 1.மாத்திரைகள் எடுக்கிறார்கள். 2.ஹைட்ரோகோடிசோன் எனும் ஊசி போடுகிறர்கள்.ஹைட்ரோகோடிசோன் போடும் போது ஒரு மாதம் அளவுக்கு அலர்ஜி வராமல் தவிர்க்கப் படுகிறது. ஆனால் இவை முழு நிவாரணமல்ல.இது தவிர ஊசி போடுவதால் பக்க விளைவுகள் (side effects) வர வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்கள். எனவே பக்க விளைவற்ற:- புதிதாக German மருத்துவ முறையில் பரிசோதித்து ,எவையெவை நோயாளிக்கு அலர்ஜி தருகிறது என்று கண்டறிந்து,அவற்றை ஒரு மெசின் மூலமாக - & + எனும் மெக்னட் தெரப்பியை........... அல்லது உங்கள் இரத்தத்தை பரிசோதித்து ,எவையெவை நோயாளிக்கு அலர்ஜி தருகிறது என்று கண்டறிந்து,அவற்றை ஊசி மூலமாக vaccination செய்து கொள்வது............... அல்லது ஆயுர்வேத முறைகளில் அலர்ஜிகள் குணமாக்கப்பட்டு வருவதை சிறந்ததெனக் குறிப்பிடுகிறார்கள். இது பற்றிய விபரங்களை உங்கள் குடும்ப மருத்துவரோடு பேசி முடிவெடுங்கள்............ AJeevan - yarl - 11-02-2003 அலேர்ஜிக்கு இங்கு ஜேர்மனியில் கருஞ்சீரக மருந்தைத்தான் இப்போது சிபாரிசுபண்ணுகிறார்கள்.இயற்கை மருந்து பொருட்கள் விற்கும் கடையில் எடுக்கலாம். - சாமி - 11-13-2003 மூட்டு வலிக்கு முடிவு - டாக்டர் வி.எம். சசிகுமார் நாற்பது வயதை நெருங்கி விட்டாலே நாம் அழைக்காமல் வந்து விடும் நோய்களில் மிக முக்கியமானது மூட்டுவலி. மூட்டு வலி ஆண், பெண் என்ற பாகுபாடின்றி இரண்டு தரப்பாரையும் தாக்கும் தன்மை கொண்டது. இந்த மூட்டுவலி என்பது என்ன? இது எதனால் வருகிறது? தடுப்பது எப்படி? என்று பார்க்கலாம். மூட்டுவலி என்பது என்ன? நமது உடலில் 206 எலும்புகள் உள்ளன. இவ்வெலும்புகளை ஒன்றுடன் ஒன்று இணைத்திருப்பது மூட்டுகள்தான். மூட்டுகளில் இரண்டு வகை உண்டு. 1. அசையும் மூட்டுகள் 2. அசையா மூட்டுகள் அசையா மூட்டுகளைப் பொருத்தவரை பிரச்னையில்லை. ஏனென்றால் அதில் எந்தவிதமான வலியும் தோன்றுவதில்லை. பெரும் பாலும் அசையும் மூட்டுகள்தான் இந்த வலித் தொல்லையைத் தோற்றுவிப்பவை. மூட்டுவலி என்றால் மூட்டுகளில் ஒருவிதமான வலி இருக்கும். மூட்டுகளில் `அழற்சி' ஏற்பட்டிருக்குமாயின் வலி மற்றும் மூட்டுகள் உள்ள மேல் தோல் பகுதி சிவந்து காணப்படும். அந்தப் பகுதியில் கை வைத்துப் பார்த்தாலே வெதுவெதுப்பான வெப்பமான உணர்வு இருக்கும். இது தவிர மூட்டைப் பயன்படுத்தும் போது அதாவது அசைக்கும்போது அதிகமான வலி இருக்கும். மூட்டுவலி எதனால் ஏற்படுகிறது? மூட்டுவலி தோன்றுவதற்கு முக்கிய காரணம் மூட்டுகளில் தோன்றும் அழற்சியே. மற்றும் மூட்டுகள் எளிதில் அசைய அம்மூட்டுகளில் பசை போன்ற திரவம் இயற்கையாகவே சுரக்கும். இத்திரவம் எஞ்சினுக்கு கிரீஸ் மற்றும் ஆயில் எப்படி உதவுகிறதோ அதைப்போல உதவி, மூட்டுகளின் சிரமத்தை இலகுவாக்குகிறது. இதனால் மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்கின்றன. இத்திரவம் குறையுமேயானால் எலும்புகள் நேரடியாக உரச ஆரம்பித்து மூட்டுகள் தேய்ந்துவிடவும் வாய்ப்புள்ளது. எனவே இந்த மூட்டுவாத நோய் தோன்றுகிறது. இதனால் வலி தாங்க முடியாத அளவிற்கு ஏற்படுகிறது. மூட்டுவலியைத் தடுப்பது எப்படி? வருமுன் காப்பது வந்தபின் குணமாக்குவதை விடச் சிறந்தது. ஆகவே மூட்டுவலியைத் தடுக்க, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் நமது எடையை தாங்கி உடலை அசைய வைப்பது மூட்டுகளே. படிக்கட்டுகள் ஏறும்போது மிகவும் கவனமாக ஏறவேண்டும். வேகமாகவோ அல்லது படிகளில் ஓடும் போதோ மூட்டுகளில் சுற்றியுள்ள சவ்வு பாதிக்கக் கூடும். நடைபயிற்சி மூட்டுகளில் திரவத்தை சுரக்கச் செய்து மூட்டுகளை ஆரோக்யமாக பார்த்துக் கொள்ளும். விளையாடும்போது மூட்டுகளுக்கான பாதுகாப்பு முறைகளை கையாள்வது அவசியம். உணவில் உப்புக் குறைவாக அல்லது சரியாகச் சேர்த்துக் கொள்ளுதல் மூட்டைப் பாதுகாக்கும். கீரை காய்கறிகள் மூட்டுகளைப் பலமானதாக்கும். அளவிற்கு அதிகமான மாத்திரைகள் அல்லது முறையான ஆலோசனையில்லாத மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். காலையில் 15லிருந்து 20 நிமிடம் மூட்டுகளுக்கென பயிற்சி செய்யுங்கள். மூட்டுவலி பற்றிய கவலையைவிட்டு விடலாம். நன்றி: வெப் உலகம் |