![]() |
|
ஆவல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: வீடியோ தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=26) +--- Thread: ஆவல் (/showthread.php?tid=8361) Pages:
1
2
|
- AJeevan - 08-07-2003 அன்பு சுரதா, உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி. உங்களைப் போன்றவர்கள் எமக்கு கிடைக்கும் ஒரு பெரிய பொக்கிசமாகவே கருதுகிறேன்.முதற்கண் எமது வாழ்த்துகள். உங்களைப் போன்றவர்கள் பொதுவாக இப்படியான பொது நலங்களுக்கு முன் வருவது மகிழ்சியாக இருக்கிறது. நான் ஏற்கனவே குறும்படப் பகுதியில் குறிப்பிட்டுள்ளதை அப்படியே தருகிறேன். <b>"சினிமா பற்றிக் கற்றுக் கொள்ள விரும்பி தொடர்பு கொண்டால் உதவ முடியும். உங்களைப் போலவே குறிப்பாக உங்கள் குழந்தைகளுக்கும் இந்த வாய்பை பெற்றுக் கொடுங்கள்.அவர்கள்தான் நாளைய உலகம்.நம்மால் முடியாத கனவுகளை அவர்கள் மூலம் நிஜமாக்குங்கள். தவிர விசயம் தெரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து படைப்புகளை உருவாக்குவதன் மூலமும் புதியவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதன் மூலமும் விசயம் தெரிந்தவர்களை ஆதரிப்பதன் மூலமும் எமது படைப்புகள் வெளிவரக்கூடிய நிலையை உருவாக்கும்".</b> என்னைப் பொறுத்தவரையில் திரைப்படத் தொழில் நுட்பத்தில் எனக்கிருக்கும் பரிச்சயத்தில் 100 ல் 1 பங்குக்கு குறைவாகவே கணணி பற்றிய அறிவு உண்டு. நான் திரைப்படத் தொகுப்புக்காகவும் சில தனிப்பட்ட தேவைகளுக்காகவும் மட்டுமே கணணியை பாவிப்பேன். என் நண்பர்கள் அன்றும் இன்றும் எனக்கு இவ்விடயத்தில் பக்க பலமாக இருக்கிறார்கள். எனவே திரைப்பட பயிற்சிப் பட்டறையொன்று மூலம் பயிற்சி பெற விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். அடிப்படையான திரைப் பட தொழில் நுட்ப நேரடிப் பயிற்சி இல்லாமல் வாசிப்பின் மூலம் பயன் பெறுவார்கள் எனும் கருத்தில் கற்பிப்பது பல தவறுகளை உருவாக்க வழி வகுத்து விடும். இது தபால் மூலம் நீச்சல் பயிற்சியளிப்பது போன்றதாகிவிடும். AJeevan www.ajeevan.com ajeevan@mailcity.com - sethu - 08-19-2003 இந்த இளங்கோ எங்கை அடிகடி காணவில்லை - vasisutha - 02-26-2004 மழைக்குத்தான் இந்தப் பக்கம் ஒதுங்குவது. இளங்கோ எனக்கு நீங்கள் சொன்னது சத்தியமாய் விளங்கவில்லை! பதில் தருவீர்களா? Ilango Wrote:எனது வீட்டுக்கு பாம்பு வந்தது. என்பது போல் உள்ளது உங்கள் கதை. இந்தப் பக்கத்தில் கேட்டது தவறு என்றால் வேறு எங்காவது பதில் தாருங்கள். - Mathan - 02-27-2004 AJeevan Wrote:Ilango Wrote:அஜீவன் எனக்கு சரியா தெரியாது அஜீவன். ஒரு சந்தேகம் தான். ஒருகாட்சிஔஔயை கமறாவை பக்கத்தில் வைத்து எடுத்தா லைட் போதாமல் இருந்தாலும் கிளியரா வரும் தானே? - AJeevan - 02-28-2004 BBC Wrote:AJeevan Wrote:Ilango Wrote:அஜீவன் <span style='color:red'>Lighting with writing is photography. ஒளியால் வரைவது ஒளி ஓவியம். எனவே இருட்டில் பார்க்கும் எமக்கே, முன்னே இருப்பது என்னவென்று தெரியாத போது, லைட் போதாமல் ஒருகாட்சிஔஔயை கமறாவை பக்கத்தில் வைத்து எடுத்தா, எப்படி தெளிவாக தெரிய முடியும்? 1.<b>[size=18](இரவு காட்சியாக)</span></b> ![]() முறையான ஒளியமைப்பு அற்ற இரவு காட்சி ![]() முறையான ஒளியமைப்புடன் கூடிய இரவு காட்சி 2.[size=17]வித்தியாசமான ஒளியமைப்பில், கீழ் உள்ள படங்களில் தெரியும் மாற்றங்கள் வித்தியாசமாக இருக்கும் BBC?........ ![]() தேர்வு உங்கள் கையில்தான் உள்ளது. AJeevan - Mathan - 02-29-2004 விளக்கத்துக்கு நன்றி அஜீவன். |