![]() |
|
கணணி நீங்களும் செய்யலாம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: கணணி நீங்களும் செய்யலாம் (/showthread.php?tid=8338) Pages:
1
2
|
- ahimsan - 06-30-2003 தொடருங்கள் கணணிப்பித்தன்.. -வாழ்க வளர்க - GMathivathanan - 07-03-2003 கணணிப்பித்தன்/Kanani Wrote:DDR SDRAM இலத்திரனியலில்.. குளொக்.. (In Electronics.. Clock)என்பது.. அதிர்வுகளைக்குறிக்கும்.. (Frequency) இவை ஒரு செக்கனுக்கு எத்தனைமுறை.. (Cycle/Sec)அல்லது கேட்ஸ்.. (Hertz) என்ற.. அலகில்.. அளவிடப்படுகின்றது.. ஸ்கோப்.. (Osloscope)என்ற உபகரணத்தின் உதவியுடன் பார்த்தால்.. பெட்டிகள் (Boxes) போலத் தோற்றமளிக்கும்.. கணணியில்.. இவை செய்யும் தொழிலும்.. அதுதான்.. கொடுக்கும் தரவுகளை.. அப்பெட்டிமூலம் காவிச்சென்று.. (Carry..Information) உரியஇடத்தில் சேர்ப்பது.. அதுதான்.. அந்தப் பெட்டியளுக்குள்ளை.. அடுக்கிவச்சுக்..கொண்டுபோய்க.. குடுக்கிற வேலை.. பியோன்.. வேலைதான்.. பியோன் இல்லாமல்.. ஒபிஸ்; இயங்காதமாதிரி.. இந்தக் குளொக்.. இல்லாட்டில்.. கணணியே.. இயங்காது. . <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->- GMathivathanan - 07-04-2003 கணணிப்பித்தன்/Kanani Wrote:DDR சொல்லவேண்டிய இரகசியமொண்டை.. அண்டைக்குச் சொல்லயில்லை.. குடைஞ்சுகொண்டிருக்குது.. அதுதான் சொல்லிப்போட்டுப்போவம்.. எண்டு வந்தன்.. பெட்டியளிலை..அடுக்கித்தான்.. அனுப்புறது.. எடுக்கிறதுதெண்டு.. சென்னன்தானே.. அந்தப் பியோன்.. ஆரம்பத்திலை.. இடைக்கிடை..பெட்டியளை.. வெறுமனை கொண்டுபோய் வந்தவன்.. பிறகு.. வேலை பழகினாப்பிறகு.. ஒரு பெட்டிகூட வெறுமனை போகாமல்.. அடுக்கினான்.. இப்பபாத்தால்.. பெட்டியின்ரை மேல்பக்கமும் (நிமித்தி)அடுக்கி பிறகு கீழ்ப்பக்கமும் (கவிட்டு)அடுக்கி கொண்டு போய் வாறான்.. அதாலைதான்.. Double data.. அனுப்பி.. எடுக்கிறான்.. என்னண்டு கெட்டுண்ணாமல்.. கொண்டு போய் வாறானெண்டு மட்டும் கேக்காதீங்கோ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kanani - 07-13-2003 கொஞ்சநாள் வேலைப்பளு காரணமாக இத்தொடரை தொடர முடியாமலிருந்தமைக்கு வருந்துகிறேன்..... முதன்மை நினைவகங்கள் எவ்வளவு தேவை? இது உங்களின் தேவையைப் பொறுத்தது.... நுண்செயலிகளுக்கு அடுத்ததாக கணணியின் திறனை தீர்மானிக்கும் முக்கிய பாகம் இந்த முதன்மை நினைவகங்களே! ஆதலால் இதை உங்களின் தேவைக்கேற்ப தீர்மானிக்க வேண்டும்.. கணணியை தொடக்கியவுடன் அதன் நினைவகத்தில் ஏற்றப்படும் செயலி இயங்குதளம் ஆகும். இவ்வியங்குதளமே மற்றய செயலிகளைச் செயற்படுத்தும். ஆகவே இயங்குதளத்தையும் மற்றய செயலிகளையும் நினைவில் வைத்துக்கொள்ளக் கூடிய அளவிற்கு நினைவகம் தேவை....பொதுவாக வின்டோஸ் 95-98 க்கு குறைந்தது 32 MB ம் வின்டோஸ் NT-2000 க்கு குறைந்தது 64 MB ம் வின்டோஸ் ME - XP க்கு குறைந்தது 128 MB ம் தேவைப்படும் ஆனால் லினக்ஸ் அல்லது அப்பிள் மக் இயங்குதளம் போனறன இயங்க 16 MB யே போதுமானது ஆனால் இதை விட நீங்கள் பாவிக்கும் மென்பொருட்களின் வகையையும் அது சிறப்பாக இயங்க எடுக்கும் நினைவகத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். சாதாரண பாவனைக்கு (இணையம் மற்றும் மைக்ரோசொப்ற்றின் அலுவலக செயலிகள் போன்றன) மேற்குறிப்பிட்ட அளவு போதுமானது ஆனால் ஒரே நேரத்தில் பல செயலிகளையும், ஒலிஒளி (வீடியோ ஓடியோ) செப்பனிடல் மற்றும் கணணி விளையாட்டுக்கள் போன்றவற்றை செவ்வனே செய்ய கூடிய நினைவகம் தேவைப்படும். - Kanani - 07-14-2003 முதன்மை நினைவக சிலிக்கன் சில்லுகள் ஒரு அட்டைபோன்ற கூறு (Module) ஒன்றில் பொருத்தப்பட்டு கிடைக்கின்றன. ஆரம்ப காலத்தில் நினைவக தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்பிற்கே தனித்துவமான இணைப்பு முறைகளைக் கொண்ட கூறுகளையே தயாரித்தனர். இததனால் பலவகை நினைவகங்களை தாய்ப்பலகையுடன் இணைக்க முடியாமலிருந்தது. இதை நிவர்த்தி செய்யவே பொதுவான ஒரு இணைப்பு முறை ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. SIMM - single in-line memory module - ஓற்றை உள்ளமை நினைவகக் கூறு இது 30 அல்லது 72 முனைகள் (pin) கொண்ட இணைப்பி மூலம் இணைக்கப்படும் நினைவகக் கூறு பொதுவாக ஒத்த இரு நினைவகக் கூறுகளை சேர்த்தே இணைக்கவேண்டி இருக்கும். இதிலிருந்து தகவல் பரிமாற்றம் மெதுவாகவே நடைபெறும். ஆரம்பகால நுண்செயலிகளைக் கொண்ட கணணிகளுக்காக வடிவமைக்கப்பட்டது. ஒரு சிம் கூறு ஆகக் கூடியது 32 MB நினைவகத்தையே கொண்டிருக்கும். இது இக்கால கணணிகளின் நுண்செயலி வேகத்துடனும், பாட்டைவேகத்துடனும், நினைவகத் தேவையுடனும் ஒத்துப்போகாத தொழில்நுட்பம். DIMM - dual in-line memory module - இரட்டை உள்ளமை நினைவகக் கூறு இது 168 முனைகளைக் கொண்ட இணைப்பி மூலம் இணைக்கப்படும் நினைவகக் கூறு இதன் ஒரு கூறை மட்டும் தனியே நிறுவிப் பயன்படுத்தலாம். ஒரு கூறு மட்டும் 1000 MB வரையான நினைவகத்தை கொண்டதாக அமைக்கலாம். இதுவே இப்பொழுது பரவலாகப் பயன்படுத்தப்படும் நினைவகக் கூறு. தகவல் பரிமாற்ற அளவு அதிகம். SODIMM - small outline dual in-line memory module இது பொதுவாக மடிக்கணணிகளில் (Laptop) பாவிக்கப்படும் நினைவகக் கூறு. படங்கள் - Kanani - 08-27-2003 மீண்டும் நேரம் கிடைத்தது :wink: மேலும் சில நினைவகங்கள் பற்றி........ ROM - Read-only memory படிப்பு நினைவகம் இவ்வகை நினைவகங்களில் தரவுகள் நிரந்தரமாக இதற்கான ஒருங்கினை சுற்று சில்லுகள் (Integrated circuit) தயாரிப்பின்போதே புகுத்தப்படும். இவை கணணிகளில் மட்டுமன்றி ஏனைய இலத்திரனியல் சாதனங்களிலும் காணப்படும். RAM வகை நினைவகங்கள் தற்காலிதமாக தரவுகளை சேமித்து வைக்கின்றன(RAM பற்றி மேலே பார்க்கவும்) ஆனால் ROM வகை நினைவகத்தில் தரவுகள் நிரந்தரமாக சேமிக்கப்படும் அதாவது மின்னோட்டம் வழங்கப்படா நிலையிலும் தரவுகள் அழியாமல் இருக்கும். இதை இவ்வாறு எடுக்கலாம்... நிரைகளாகவும் நிரலகளாகவும் மின்கடத்திகள் ஒரு சதுர வலைபோல் இணைக்கப்பட்டிருக்கும் நிரைக்கம்பிகளும் நிரல்கம்பிகளும் சந்திக்கும் சந்திகள் உருகிகள்(fuse)மூலம் இணைக்கபட்டுள்ளன என வைத்துக்கொள்வோம். இப்பொழுது இந்த நினைவகத்தை நிரல்ப்படுத்தும்போது (program செய்யும்போது - தரவுகள் பதியும்போது) தேவையான இடங்களில்(சந்திகளில்)உருகிகளை எரித்துவிட்டால் அவ்விடங்களில் தொடர்பு துண்டிக்கப்படும்தானே பின்னர் நிரைகளில் மின்னழுத்தத்தைச் செலுத்தி நிரல்களில் மின்னழுத்தத்தை வாசித்தால் துண்டிக்கப்பட்ட இடங்களில் 0ம் இணைக்கப்பட்ட இடங்களில் 1ம் பெறலாம். இதை தொடர்ச்சியாக வாசித்தால் 110010, 00100, போன்ற கணணியின் பாசையில் தரவுகளைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு செய்யப்படும் ROM வகை நினைவகத்திலுள்ள தரவுகளை மாற்ற முடியாது அதாவது நிரந்தரமான தரவுப் பதிவுகள். இப்பொழுது மின்புலம் மூலமும் (Electric field), கழியூதாக் கதிர் மூலமும் (Ultra Violet rays) நிரல்படுத்தக்கூடிய ROM வகை நினைவகங்களுண்டு. இவற்றை Erasable programmable read-only memory (EPROM) என்போம். அதிலும் இலகுவாக விரும்பிய தகவல் சேமிப்பு இடங்களில் (சந்திகளில்) தரவுகளை மாற்றியமைக்கக்கூடியவாறு Flash memory எனப்படும் மின்புலம் மூலம் நிரல்படுத்தக்கூடிய Electrically erasable programmable read-only memory (EEPROM) உண்டு - Mathivathanan - 08-27-2003 Kanani Wrote:மீண்டும் நேரம் கிடைத்தது :wink: ROM - Read-only memory படிப்பு நினைவகம் ல் சிலவகைகள்.. ROM SMALL BIOS SOFTWARE PROGRAMME (READ ONLY MEMORY) PROM PROGRAMMABLE READ ONLY MEMORY EPROM POWER ON SELF TEST, COMPARE AND READ BOOTSTRAP (ERASABLE) EEPROM ELECTRICALLY ERASABLE PROGRAMMABLE MEMORY தற்போது உபயோகத்திலிருப்பது.. EEPROM - Kanani - 08-28-2003 கணணியில் ROM.... இது பல இடங்களில் இருக்கிறது. முக்கியமாக தாய்ப்பலகையில் இருக்கும் BIOS ஏனும் சிலிக்கன் சில்லு இவ்வகை நினைவகமாகும் (Basic Input Output system) இதில் கணணியை தொடக்கத் தேவையான ஆரம்ப கட்ட மென்பொருன் பதிந்து வைக்கப்பட்டிருக்கும். செத்ததுபோல் அணைக்கப்பட்டு இருக்கும் கணணி எவ்வாறு உயிர் (மின்சாரம்) கொடுத்தவுடன் தரவுகளை நினைவகத்தில் ஏற்றி இயங்கத்தொடங்குகிறது? உங்கள் இயங்குதளமான வின்டடோஸ் அல்லது லினக்ஸ் வன்வட்டிலேயே பதிந்து வைக்கப்பட்டிருக்கும். இயங்குதளங்கள் முதன்னம நினைவகத்திலேயோ அல்லது நிரந்தர நினைவகங்களிலேயோ சேமித்து வைக்க முடியாதளவு பெரிய மென்பொருட்கள். கணணிக்கு உயிர் கொடுத்தவுடன் முதலில் துாண்டப்படுபவர் நுண்செயலி. நுண்செயலியானது BIOS எனப்படும் ஒருங்கினை சுற்றை இயக்கி அதிலுள்ள தகவல்கள் மூலமே உங்கள் கணணியின் பாகங்களை இனங்காண்கிறது. அதாவது நுண்செயலி தனது முதலாவது அறிவுறுத்தலை BIOS இல் தேடும். BIOS ஆனது CMOS எனும் 64 KB அளவிலுள்ள சிறிய முதன்மை நினைவக வகை சிலிக்கன் சில்லினுள் உங்கள் தனிப்பட்ட கணணிப் பாகங்கள் பற்றிய தகவல்களை வாசிக்கும். பின்னர் நுண்செயலிக்கு "இந்தக்கணணியில் யானை மார்க் வன்வட்டும் பூனை மார்க் நெகிழ்வட்டும் இருக்கிறது எல்லாப் பாகங்களும் சரியாக இணைக்கப்பட்டு வேலைசெய்கிறதா பார்" எனும் அறிவுறுத்தலை வழங்கும். இதை POWER ON SELF TEST என்று சொல்வோம். பின்னர் நுண்செயலிக்கு முதன்மை நினைவகத்தை பரிசோதித்து அது இயங்கக்கூடிய நிலையிலுள்ளதா எனச் சரிபார்க்கச்சொல்லும். பின்னர் நுண்செயலிக்கு மற்றய பாகங்களில் இருக்கும் BIOS களைத் தொடக்கி (ஒலி அட்டை, ஒளி அட்டை போன்றன) அவற்றில் நிரந்தரமாக சேமிக்கப்பட்டிருக்கும் ஆரம்பநிலை அறிவுறுத்தலை இயக்கி அவற்றை தயார் நிலையில் வைத்திருக்கும்படி அறிவுறுத்தலை வழங்கும். பின்னர் சிறுபாகங்களை இணைக்கும் பாட்டையை (PCI Bus)கண்டுபிடித்து அது சரியாக இயங்குகிறதா எனப்பார்க்கும்படி சொல்லும். இப்படியே எல்லாவற்றையும் சரிபார்த்து உங்கள் கணணியில் பொருத்தப்பட்டுள்ள பாகங்களுக்கு பொருத்தமான இயங்குதள மென்பொருட்களை (Interrupt handlers -குறுக்கீடு கட்டுப்படுத்தி and device drivers - சாதன இயக்கி)முதன்மை நினைவகத்தில் ஏற்றும்படி கட்டளையிடும் (அதாவது விசைப்பலகை, எலி, திரை, இணைநிலை மற்றும் தொடர்நிலைத் துறைகள் - parallel and serial ports). ...இதன்பொழுது ஏதாவது சிக்கல் ஏற்படின் சிறிய "பீப்" எனும் ஒலியை கணணி ஒலிபெருக்கியில் நீங்கள் கேட்டிருப்பீர்கள். பின்னர் இயங்குதளத்தின் தொடக்கப் பகுதி பற்றிய தகவலை வாசித்து ன்தட்டிலிருந்து இயங்குதளம் இயக்கப்படும். இப்பொழுது திரையில் பில்கேட்ஸ் "Welcome to Windows" என வரவேற்பார். :wink: - Kanani - 08-28-2003 <b>திருத்தம்.</b> Quote:இதன்பொழுது ஏதாவது சிக்கல் ஏற்படின் சிறிய "பீப்" எனும் ஒலியை கணணி ஒலிபெருக்கியில் நீங்கள் கேட்டிருப்பீர்கள்.இதன்பொழுது ஏதாவது சிக்கல் <b>ஏற்படாதவிடத்து</b> சிறிய "பீப்" எனும் ஒலியை கணணி ஒலிபெருக்கியில் நீங்கள் கேட்டிருப்பீர்கள். சிக்கல் <b>ஏற்பட்டால்</b> "பீப்" ஒலி <b>தொடரச்சியாக</b> ஒலிக்கும் திரையிலும் பிழைக்குரிய தகவல் வரும். - Mathivathanan - 08-28-2003 Kanani Wrote:<b>திருத்தம்.</b>இந்த நிகழ்வு Power on self test இன்போது இடம்பெறும். - sOliyAn - 08-28-2003 நன்றி கணனி.. நன்றி தாத்ஸ்.. இது எல்லாம் நினைவிலை இருக்கமோ தெரியேலை.. எப்ப கணனி பொருத்துறதுக்கு வரப்போறீங்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Kanani - 08-28-2003 கணணி பொருத்துறது பற்றி இப்பவும் சொல்லலாம்....அதாவது இதுதான் வன்வட்டு இதுதான் நுண்செயலி...இப்படிப்போடுங்கோ என்று... ஆனால் அதில் பயனில்லை...சிறு தவறோ அல்லது சரியாக வேலைசெய்யாவிட்டால் ஏன் அவ்வாறு நிகழ்ந்தது? எங்கு பிழை இருக்கும் என்று கண்டுபிடிக்கவோ அல்லது ஊகிக்கவோ கடினமாக இருக்கும்..அதனால் ஒவ்வொரு பாகம் பற்றிய விளக்கமும் அவற்றின் தொழிற்பாடுகள் பற்றியும் கூறிய பின்னர் பொருத்தும் பகுதிக்குப் போனால்..பிழை ஏற்படின் நீங்களே எங்கு பிழை நடந்நது என்று குறைந்தது ஊகிக்கக்கூடியதாக இருக்கும்.... இப்பதான் 4ம் 5ம் வகுப்பு...பொறுங்கோ :wink: - Kanani - 08-28-2003 மேலே நான் கூறியவற்றை உற்று நோக்கினால் உங்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். அதாவது முதன்மை நினைவகம்(RAM) மின்சாரம் கொடுக்கப்படாதவிடத்து தனது தரவுகளைத் தொலைத்துவிடும் அதே நேரம் படிப்பு நினைவகம்(ROM) மின்சாரம் இல்லாதவிடத்தும் தரவுகளை வைத்திருக்கும். இதனால்தான் கணணியைத் தொடக்கத்தேவையான தரவுகளை படிப்பு நினைவகத்தில் வைத்திருப்பார்கள் என்றும் ஆனால் அளவில் சிறிய படிப்பு நினைவகமோ, CMOS (சிமொஸ் என்று அழைக்கப்படும்) எனும் சிறிய 64 KB முதன்மை நினைவக வகை ஒருங்கினணச்சுற்றில் வன்வட்டு நெகிழ்வட்டு போன்றன பற்றிய தகவல்களைத்தேடும் என்றும் குறிப்பிட்டேன். அப்படியானால் இந்த CMOS எனப்படும் சிறிய நினைவகம் எவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டபோதும் தரவுகளை அழியாமல் வைத்திருக்கிறது? விடை... கணணியில் மின்கலம்.... நீங்கள் கணணியை எத்தனை மாதமும் இயக்காமல் மூடி வைத்திருந்தாலும், மீண்டும் இயக்கும்போது அது சரியான நேரத்தைக் காட்டும் கவனித்தீர்களா? பொதுவாகவே இவ்வாறு நேரத்தைப் பயன்படுத்தும் இலத்திரனியல் சாதனங்களுக்கு பிரதான மின்சாரம் வழங்கப்படா நேரத்திலும் அதன் மணிக்கூட்டின் நேரத்தை தவறவிடாதிருக்கக மிகச்சிறிய மின்கலம் ஒன்று பொருத்தப்பட்டு அதன்மூலம் இத்தகைய நேரங்காட்டி மற்றும் சிறிய நினைவகங்கள் போன்றன சிதைவுறாமல் பாதுகாக்கப்படும். இதேதான் கணணியிலும். கணணியின் தாய்ப்பலகையிலுள்ளு சிறிய மின்கலம் மூலம் மேலே குறிப்பிட்ட 64 KB CMOS வகை நினைவகத் தரவுகள் அழியாமல் பாதுகாக்கப்படும். நீங்கள் மீண்டும் கணணியை நீண்டகால்த்தின் பின் இயக்கினால் கணணி பிரச்சனையின்றி இயங்கும். இந்த மின்கலத்தை பொதுவாக 5-6 வருடங்களுக்கு மாற்றவேண்டிய அவசியமில்லை. 5-6 வருடப் பழைய கணணிகள் சிலவேளை திடீரென்று தொடங்க மறுத்து தனக்கு வன்வட்டு நெகிழ்வட்டு போன்றவை பற்றி ஒன்றுமே தெரியாது என கூறினால் இந்த மின்கலம் இறந்தமை காரணமாகலாம். பழைய மின்கலத்தை மாற்றி, CMOS இல் உங்கள் கணணியின் வன்வட்டு, நெகிழ்வட்டு, நேரம் பற்றிய தகவலைக்கொடுத்தால் கணணி மீண்டும் பழையபடி இயங்கும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|