Yarl Forum
vectontv - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: vectontv (/showthread.php?tid=8180)

Pages: 1 2 3


- இளைஞன் - 12-30-2003

சேது எழுதியது:
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இதுமட்டுமல்ல இது போல பல மோசமானவர்களின் கருத்துகளை இந்த ஊடகம் காவி வருகின்றமை மிகவும் மனவருந்தத்தக்கது.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<b>யாழ் கருத்துக்களமும் அப்படித்தானே?</b> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
எல்லாருக்கும் கருத்துத் தெரிவிக்க ஒரு ஊடகம் இடமளிக்கும் போது அதில் வெவ்வேறு சூழ்நிலையில் வெவ்வேறு பார்வைகளைக் கொண்ட வெவ்வேறு கருத்தாளர்கள் தமது வெவ்வேறு கருத்துக்களை வெவ்வேறு விதமாக வெவ்வேறு நேரங்களில் முன் வைப்பார்கள். அதில் தமக்குத் தேவையானதை, பயனுள்ளதை உள்வாங்கி ஆராய்ந்து அறிந்து கொள்ளவேண்டியது பார்வையாளரின் பிரச்சினை. எதற்குக் குத்தி முறிகிறீர்கள்?

அதுதவிர "மதிப்பிற்குரிய" (<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->) "சுப்பிரமணிய சுவாமி" அவர்களிடம் (<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->) கேட்கப்படும் கேள்வியும், பெறப்படும் பதிலும் எப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

கடந்த வாரம் ஒருவர் அறிவிப்பாளர் கண்ணன் அவர்களிடம் அவரின் சொந்த ஊர் எதுவென இருவர் தொபேசியில் கேட்டனர். அதற்கு கண்ணன் தனது ஊர் வல்வெட்டித்துறை என்று கூறி(உண்மையான பதிலோ, பொய்யான பதிலோ) முற்றுப்புள்ளி வைத்தார். ஒரு ஊடகத்துக்கு "ஒருவித" முத்திரை குத்தி அதனை ஒதுக்க நினைப்பது மடமை.

அதைவிடுவோம். வெக்ரோன் தொலைக்காட்சியினை சிலநாட்களாக பார்த்தேன். இன்று ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் மிகவும் தொழில்நுட்பம் சார்ந்து Professional ஆக செயற்படுகிறார்கள். SunTV பொழுதுபோக்கு சார்ந்து தன்னை முன்னிலைப்படுத்தினாலும் தொழில்நுட்பம் சார்ந்து வெக்டோன் தொலைக்காட்சியே முன்னிலை வகிக்கிறது. செய்திகள் வழங்கும் விதம், விளம்பரங்களின் தரம், Digital Animation, ஒளியமைப்பு எல்லாமே நன்றாக இருக்கிறது. ஆனால் என்ன இளைஞிகளை வைத்து தமிங்கிலிசால் இளைஞர்களைக் கொள்ளை கொள்ளலாம் என்ற நினைப்புத்தான் கொஞ்சம் அருவருக்கிறது. "எங்கள்" என்பதை செல்லத் தமிழில் "Angel" என்று உச்சரிக்கும் பொழுது இனிமையாகத்தான்(காதுக்கு சர்க்கரை வியாதி வந்துவிடப் போகிறது <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->) இருக்கிறது.


- sethu - 12-30-2003

வல்வெட்டித்துறை என்டால் என்ன எனக்கு கவலை இல்லை அறிவிப்பாளனின் ஒப்பீடு தவறானது என்பது எனது கருத்து அதுமட்டுமல்ல அந்த கொமடிக்கு 2-30 மனிநேரம் ஒதுக்கியதே முளு கோமாளித்தனம்.

மாற்று இயக்கத்திலும் வல்வெட்டித்துறையார் இருக்கினம் அதற்காக கொள்கையை விற்கமுடியாது.


- இளைஞன் - 12-30-2003

மாற்று இயக்கத்தில் வல்வெட்டித்துறையார் இருப்பதும் தெரியும், வல்வெட்டித்துறையோர் எல்லோரும் உறவில்லை என்பதும் தெரியும். இங்கு அதுவல்ல பிரச்சினை. இந்தியத் தமிழர் என்று முத்திரை குத்தி, இந்தியத் தொலைக்காட்சி என்று கோசம்போட்டு ஒதுக்க நினைத்ததற்கே குறிப்பிட்டேன். "அது நகைச்சுவை" என்பது உங்கள் கருத்து. அதற்காக ஊடகத்திற்கு நீங்கள் நினைத்த சாயம் பூசுவது என்ன கணக்கு?

அறிவிப்பாளர் கேள்விதான் கேட்டாரே ஒழிய, கருத்துச் சொல்லவில்லை. உதாரணத்திற்கு மேலே நான் எழுதிய கருத்தில் "யாழ் இணையமும் அப்படித்தானே?" என்பது எனது கருத்து அல்ல கேள்வியே (சந்தேகமே)!

வாய்க்குள் போட்டு மென்றுவிட்டு உள்விழுங்குங்கள். அப்படியே விழுங்கினால் இப்பிடித்தான்! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sethu - 12-30-2003

முதலில் நீங்கள்தான் வல்வெட்டித்துறை என்று கருதினீர்கள் அறிவிப்பாளர் விட்டதவறை நான் சுட்டிக்காட்டினேன். இந்தியத்தமிழர் என்று நான் முத்திரை குத்தவில்லை. இந்திய தொலைக்காட்ச்சி என்று கூறவில்லை


- இளைஞன் - 12-30-2003

வல்வெட்டித்துறை என்று தொலைக்காட்சியில் குறிப்பிட்டதை நான் தான் இங்கே முதலில் குறிப்பிட்டேன். ஆமாம். அதனால் ஏதாவது பிரச்சினையா? :wink:

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அறிவிப்பாளர் விட்டதவறை நான் சுட்டிக்காட்டினேன்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இதன்மூலம் இந்த தொலைக்காட்சியும் அந்த அறிவிப்பாளனும் தாயகரீதியில் எந்த ஒரு உணர்வில் செயற்படுகிறார்கள் என்டு புரியுது.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு கருத்தும் உங்களுடையதுதான். சாயம் பூச முனைந்துவிட்டு, பிறகு அறிவிப்பாளரின் தவறினைச் சுட்டிக்காட்டினீர்கள் என்றால் என்ன பொருள்?

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இந்தியத்தமிழர் என்று நான் முத்திரை குத்தவில்லை. இந்திய தொலைக்காட்ச்சி என்று கூறவில்லை
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆண்டவா!!!
மென்று விழுங்குக! :x எத்தனை தடவை சொல்வது? நான் நீங்கள் சொன்னதாகக் குறிப்பிட்டேனா? இல்லைத்தானே? சாயம் பூசுதலுக்கு ஒரு உதாரணமாகவே குறிப்பிட்டேன்!

எப்படி சாயம் பூசப்படுகிறது என்று இன்னொரு உதாரணம் சொல்லவா பழைய களத்திலிருந்து <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->.


- sethu - 12-30-2003

எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை மீண்டும் சொல்கிறேன் அறிவிப்பாளரிள் ஒப்பீடும் அவரால் எமது தலைவரை கொச்சைப்படுத்தி கேட்கப்பட்டகேள்வியும் தவறானது.


- இளைஞன் - 12-30-2003

நன்றி சேது!
இப்பொழுது இறுதியாக எழுதியிருப்பது உங்கள் தரப்பில் நியாயமான கருத்து. வரவேற்கிறேன். இதே கருத்தைத்தான் முதலும் எழுதியிருந்தீர்கள், ஆனால் அதனுடன் சேர்த்து மேலதிகமாக:

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இதன்மூலம் இந்த தொலைக்காட்சியும் அந்த அறிவிப்பாளனும் தாயகரீதியில் எந்த ஒரு உனர்வில் செயற்படுகிறார்கள் என்டு புரியுது.  
இதுமட்டுமல்ல இது போல பல மோசமானவர்களின் கருத்துகளை இந்த ஊடகம் காவி வருகின்றமை மிகவும் மனவருந்தத்தக்கது.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்கின்ற கருத்தினையும் எழுதியிருந்தீர்கள். இந்த Quote செய்யப்பட்ட கருத்துக்குத்தான் எனது பதிலை முன்வைத்தேன். மற்றும்படி உங்கள் நிலைப்பாட்டிற்கு அல்ல!

நன்றி வணக்கம்


- sethu - 12-30-2003

இன்று இந்த வெக்ரோன் தொலைக்காட்ச்சி யாருக்கு சேவை செய்கிறது? தமிழர்களுக்கு என எடுத்துக்கொன்டால் தமிழர்களின் தலைவர்களை இனங்கன்டு அவர்களை ஊடகதினு}டாக வளத்துவிடுவதே சிறந்தது

புலிகளுக்கு எதிராக கொமடி சுவாமி கருத்துக்கூற கண்ணன் என்ற அறிவிப்பாளன் சிரித்துக்கொன்டிருந்தார்.

இந்தியாவிலையே ஒரு பொதுமகனாலும் மதிக்காத இந்த கோமாளியை ஜரோப்பாவுக்கு கோமாளித்தனமாக ஊடகரீதியாக காவி வந்த அந்த கோமாளித்தனமே கோமாளிகளுக்கு உதாரனம்.

தம்பி இளைஞனே கோளி சொன்ன கதைகளை கேட்டீர்களா?
இந்தியா இறானுவம் இலங்கையில் எதுவும் செய்யவில்லையாம்.
அவர்களை கொலை செய்த புலிகளை கொலை செய்யவேனுமாம்.
புலிகளை அளிப்பனாம்.
இலங்கை தமிழனுக்கு தான் தானாம் உதவிசெய்யமுன்னுக்கு நிற்பனாம்.
புலிகள் பயங்கரவாதிகளாம்.
கருனாநிதி கொள்ளைகாறனாம்.
போடா சட்டம் சரியாகவே பயன்படுத்தப்படுதாம்.
சோனியா உளவுப்படையாம் இந்தியாவிலை சிற்பங்களை களவேடுக்க வந்தவவாம்.
புலிகள் றாயீவை கொலை செய்ததாம் ஆகவே அவர்களை கொலை செய்தே தீருவனாம்.
தான் படித்தவனாம்.

மொத்ததிலை அவர் ஒரு படித்த முட்டாள் அவருடைய நிகள்சியை நடத்தியும் பாத்தவர்களும் படிக்......முட்டாள்.


- sethu - 12-30-2003

நான் இந்த நிகள்சிகளை எல்லாம் நிச்சயமாகபாத்திருக்கமாட்டேன் ஆனால் எனது நன்பன் ஒருவன் றஸ்சியாவில் இருந்து இதை கட்டாயம் பார் என தொலைபேசியில் தெரிவித்தான் அதன் பின்பே போய் ரீவிக்கு முன்னால் குந்தினேன் அதனால் குறையில்தான் பார்க்கமுடிந்தது. எனது அனுபவத்தினபடி கோமாளி சாமியை கடந்த 6 வருடங்களாக தெரியும்.


- vasisutha - 12-31-2003

இளைஞன் மன்னிக்க வேண்டும்.
நான் வழமையாக வெக்ரோன் தொலைக்காட்சி பார்க்கும் போது கவனித்தவற்றை சொல்கிறேன்.

நன்றாக கவனியுங்கள் இனிமேல்.

பேட்டி நிகழ்ச்சிகளாகட்டும் சிலவேளைகளில்
பாடல் காட்சிகளாகட்டும் ஒலிப்பதிவும் ஒளிப்பதுவும் ஒன்றை ஒன்று முந்துகின்றன.

பேட்டிகாணப்படுபவர் வாயசைந்த பிற்பாடு தாமதமாக ஒலி வருகிறது.
இதை தொடர்ந்து பார்க்கும் போது எரிச்சல் தான் வருகிறது.
கடந்த வாரம் ஒளிபரப்பான பல பேட்டிகளை பார்த்துவிட்டே இதை எழுதுகிறேன்.
ஒளிப்பதிவு கூட ஒரு வித நடுக்கத்துடனேயே
காணப்படுகிறது.

செய்திகள் வாசிப்பு நன்று ஆனால் நெறியாள்கை ஒரே குழறுபடி.

கடந்த நத்தார் தினமென்று நினைக்கிறேன்.
செய்தியில் ஏதோ ஒரு உலகச்செய்தியை வாசித்து விட்டு அதற்கு கிளிப்பிங் போட்டார்கள்.
வீட்டில் எல்லோரும் ஒரே சிரிப்பு.
என்னவென்றால் வெக்ரோன் கலையகத்தில்
அடுத்த நிகழ்ச்சிக்கு தயார் செய்வது மைக் கொழுவுவது போன்றவற்றை காட்டிவிட்டார்கள்.

இதே போல முன்பு ஒருமுறை தாலாய் லாமா பற்றிய செய்திகளை வாசித்து விட்டு
சம்பந்தம் இல்லாமல் வேறு ஏதோ காட்சியை காட்டினார்கள்.

நடிகை சங்கவியின் பேட்டி ஒரு முறை போனது.
சங்கவி மட்டும் தனது பேட்டியை பார்த்திருந்தால் அழுதிருப்பார்.

வழமைபோல உச்சரிப்புக்கு பின் ஒலி வருகிறது வேறு விசயம்.
சங்கவி தான் நடித்த பொற்காலம் பற்றியும்
அதில் தன்பங்கு பற்றியும் சொல்லும் போது
இவர்கள் அதில் என்ன காட்சி ஒளிபரப்பினார்கள் தெரியுமா.
அந்த படத்தில் மீனா நடித்த பாடல் ஒன்றை.
பாவம் சங்கவி. :-)

இப்படித்தான் ஒவ்வொரு பேட்டியிலும் நடக்குது.

மற்படி வெக்ரோனில் நேரடி தொலைபேசி
நிகழ்ச்சிகள் நன்றாக இருக்கின்றன.

வான்மதி, பிரசன்னா இருவரும் நன்றாக நிகழ்ச்சிகளை நடத்துகின்னறனர்.


- vasisutha - 12-31-2003

இன்னொன்றும் சொல்லவேண்டும்.
அது என்ன செய்திகள் வாசிக்கும் போது கணணியை பக்கத்தில் வைத்துக் கொண்டு காட்டுகிறார்கள். எல்லாருக்கும் தெரியும் செய்தி வாசிப்பவர் தான்
கணணிணை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் என்று, அதுக்காக இப்படியா?
செய்தி வாசிப்பவர்கள் கணணிணை தட்டுவதையும்,முளிப்பதையும் பார்க்க சிரிப்பு வருது.
:mrgreen:


- shanthy - 12-31-2003

சேது ! வெக்ரோன் தொழில்நுட்பரீதியாக உண்மையியே நன்றாகச் செய்கிறார்கள். செய்தி எமது தமிழ்த்தொலைக்காட்சியை விஞ்சும்படியாகவுள்ளது. பாராட்ட வேண்டும். எங்கள் அரசியல் தலைவர்கள் முதலில் நல்ல அரசியல் தலைவர்களாகட்டும் முதலி;ல்.(அரசியல் தலைவர்கள் என நான் குறிப்பிடுவது சிறீலங்கா அரசுசார்ந்து நிற்போரை)

அறிவிப்பாளரின் தவறு என எடுத்துக்கொண்டு அவரை விமர்சிப்பதை வி;ட்டு அவரை இயக்குவோரைத் திருத்துவதே சிறந்தது. சில இடங்களில் பணமும் , திறனும் இருக்கும் அவர்களை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு நமது ஊடகங்கள் தயாரில்லை. சுத்திச்சுத்திச் சுப்பர் வீட்டுக்குள்ளேயே சுழல்வதால் குறிப்பிட்ட சிலர் கீரோக்களாகி உள்ளதையும் கெடுக்கும் நிலைதான் உள்ளது.

இங்கு ஊர்களைச் சொல்லியோ , உறவுமுறைகளைச் சொல்லியோ முரண்பட்டு நீங்களும் இருப்பதையும் கெடுக்கும் முயற்சியாகவே கருதுகிறேன்.

இணைப்பதற்கு நாங்கள் எண்ணுகிறோம்
நீங்களோ உடைப்பதற்தாய் எழுதுகிறீர்கள்.

எங்கும் அரசியல் ரீதியாக நமது பார்வை விரிகிறது. சில இடங்களில் அதுவும் தேவை. ஆனால் நாம் பார்க்கின்ற அரசியலில் எந்த ஞானமும் இல்லாதிருக்கும் ஒருவரை அடி , பிடியென்று நின்றால் என்னவாகும் ?

ஈழத்துக்கு ஒரு வரதராசப்பெருமாள் இந்தியாவுக்கு ஒரு கோமாளிச்சாமி. இவர்கள் அடிக்கடி தங்கள் இருப்பைச் சொல்கின்றபோதே எமக்கு அவர்களை ஞாபகம் வருகிறது. இவர்கள் கூவித்தான் தமிழினம் விடியும் என்ற நிலையில் ஈழத்தமிழர் இல்லை.

மற்றும்படி இளைஞன் சொன்னது போல் அருவருப்பும் கனத்துத்தான் போச்சு.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ஆனால் என்ன இளைஞிகளை வைத்து தமிங்கிலிசால் இளைஞர்களைக் கொள்ளை கொள்ளலாம் என்ற நினைப்புத்தான் கொஞ்சம் அருவருக்கிறது. \"எங்கள்\" என்பதை செல்லத் தமிழில் \"Angel\" என்று உச்சரிக்கும் பொழுது இனிமையாகத்தான்(காதுக்கு சர்க்கரை வியாதி வந்துவிடப் போகிறது ) இருக்கிறது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


- shanthy - 12-31-2003

<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->இன்னொன்றும் சொல்லவேண்டும்.
அது என்ன செய்திகள் வாசிக்கும் போது கணணியை பக்கத்தில் வைத்துக் கொண்டு காட்டுகிறார்கள். எல்லாருக்கும் தெரியும் செய்தி வாசிப்பவர் தான்
கணணிணை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் என்று, அதுக்காக இப்படியா?
செய்தி வாசிப்பவர்கள் கணணிணை தட்டுவதையும்,முளிப்பதையும் பார்க்க சிரிப்பு வருது.
:mrgreen:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

வசி கணணியை செய்திவாசிப்பவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால். ஏன் சில தொலைக்காட்சிகளில் செய்தி வாசித்துக்கொண்டிருக்கும் போது இடையில் பேந்தப்பேந்த முளிக்கிறார்கள். பிறகு விட்ட இடத்தைத்தேடி வாசிக்குப்பேப்பரை எடுத்து வாசிக்கிறார்கள்....? :roll:


- sethu - 12-31-2003

நான் பிரதேசவாதமோ எதுவுமோ கதைக்கவில்லை இளைஞன் ஆரம்பித்தார் என்னதான் சொன்னாலும் எனது கருத்தில் மாற்றமில்லை அறிவிப்பாளர் கண்ணனால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பீடு மிகப்பெரும் தவறானது. தமிழ் மக்கள் பிரபாகரனை ஒரு ஜனாதிபதியாக ஏற்றுக்கொன்டால்? என்றவசனமும் அவர் பாவித்தார். இது நியாயமா? முசாரவ்வுடன் பிரபாகரனை ஒப்பிட்டார் அது நியாயமா? பிரபாகரனை தமிழர்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற பொருள்படவே அவர் கேள்வியை தொடுத்தார் அது நியாயமா? இவை கண்ணன் வாயில் இருந்து கேட்கப்பட்டகேள்விகள் சாந்தி.
அவருக்கு ஆதரவாக ஒரு தரம் கருத்தெளுதிய இளைஞன்தான் பிரதேசவாதத்தை சுட்டிக்காட்டினார் நான் அதைப்பற்றி கவலை கொள்ளபோவது இல்லை என பதில் கொடுத்தேன். காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம் இறுதி இலட்சியம் மாறக்கூடாது. அதேபோலவே ஆடும் மேடைகளும் மாறிபின்பு உங்கள் இருப்புகளை தப்பி வைத்துக்கொள்ள கொள்கைகளை இந்த ஊடகத்தில் வேலை செய்பவர்கள் மாற்றாமல் இருக்கவேனும். பல ஊடகங்கள் வரும் ஊடம் என்பது மக்களை உளவியல்ரீதியாக வெல்வதாக அமரிக்க ஆய்வாளன் சோம்சி தெரிவித்துள்ளார் இதே கருத்தை தத்துவ ஆசிரியர் அன்ரன் பாலசிங்கம் தனது விடுதலை என்ற நு}லில் சுட்டிக்காட்டி உள்ளார். ஆகவே எமது மக்களின் இரத்தத்தில் நஞ்சை ஊடகங்கள் ஊட்டக்கூடாது அதற்குப்பதிலாக வீரத்தமிழ் இரத்தத்தை ஊட்டவேன்டும்.


- sethu - 12-31-2003

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- இளைஞன் - 12-31-2003

வணக்கம் வசி அண்ணா...
கடந்த நத்தார் தினத்தன்றுதான் இருந்து வெக்டோன் ரிவியைப் பாக்க முடிந்தது. அதனால் குறைபாடுகளைக் கவனிக்காமல் விட்டிருக்கலாம். ஆனால் இந்த ஒலி ஒளிப் பிரச்சினையை இன்று கவனிக்கக்கூடியதாக இருந்தது. நான் நினைக்கிறேன் இவர்கள் இந்தியாவில் பேட்டி எடுத்துவிட்டு, அதனை இணையத்தின்மூலமாக அனுப்பி பின்னர் ஒளிபரப்புகிறார்கள் என்று. அப்படிச் செய்கின்றபோது ஒலி ஒளிப் பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கிறது. அதுதவிர அந்தப் பேட்டி நிகழ்ச்சிகளைக் கவனித்துப் பார்த்தால் படங்களில் Pixel தெரிகிறது. குறைகள் இருக்கத்தான் செய்கிறது.

மற்றது கணணியை முன்னுக்குக் காட்டிக் கொண்டு செய்தி வாசிப்பது பற்றிக் குறிப்பிட்டீர்கள். அதுதான் இன்று Professional.

அதைவிடுங்கள் TRT தொலக்காட்சியிலல் நேற்று செய்தி பார்க்க நேர்ந்தது. உண்மையில் செய்தி வாசித்தவருக்கு வேர்த்து ஒழுகியது. பாவமாக இருந்தது... Cry


- yarl - 12-31-2003

வெக்ரோன் ரீவி சாந்தி சொல்லியது போல திறமையாக சுடசுட செயல்படுகிறார்கள்.உண்மையை ஒத்துக்கொள்ளவேண்டும்.

எதிர்காலத்தில் இவர்கள் இலவசமாக செயல்பட்டு தேசியத்திற்கே போட்டியாக செயல்படலாம்.கருத்துகளை பரப்பலாம்..அல்லது ஆதரவாகக்கூட மாறலாம் எதுவும் நடக்கலாம்.

ஆனாலும் எமது என்ற நோக்கம் வருகையில் மாற்றான் தோட்டத்து மல்லிகையைவிட எமது தோட்டத்து மல்லிகையே மணக்கவேண்டும் என்ற காலப்பகுதி இது..சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்கவேண்டும்.


- kuruvikal - 12-31-2003

<!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->இன்று இந்த வெக்ரோன் தொலைக்காட்ச்சி யாருக்கு சேவை செய்கிறது? தமிழர்களுக்கு என எடுத்துக்கொன்டால் தமிழர்களின் தலைவர்களை இனங்கன்டு அவர்களை ஊடகதினு}டாக வளத்துவிடுவதே சிறந்தது  

புலிகளுக்கு எதிராக கொமடி சுவாமி கருத்துக்கூற கண்ணன் என்ற அறிவிப்பாளன் சிரித்துக்கொன்டிருந்தார்.

இந்தியாவிலையே ஒரு பொதுமகனாலும் மதிக்காத இந்த கோமாளியை ஜரோப்பாவுக்கு கோமாளித்தனமாக ஊடகரீதியாக காவி வந்த அந்த கோமாளித்தனமே கோமாளிகளுக்கு உதாரனம்.

தம்பி இளைஞனே கோளி சொன்ன கதைகளை கேட்டீர்களா?
இந்தியா இறானுவம் இலங்கையில் எதுவும் செய்யவில்லையாம்.
அவர்களை கொலை செய்த புலிகளை கொலை செய்யவேனுமாம்.
புலிகளை அளிப்பனாம்.
இலங்கை தமிழனுக்கு தான் தானாம் உதவிசெய்யமுன்னுக்கு நிற்பனாம்.
புலிகள் பயங்கரவாதிகளாம்.
கருனாநிதி கொள்ளைகாறனாம்.
போடா சட்டம் சரியாகவே பயன்படுத்தப்படுதாம்.
சோனியா உளவுப்படையாம் இந்தியாவிலை சிற்பங்களை களவேடுக்க வந்தவவாம்.
புலிகள் றாயீவை கொலை செய்ததாம் ஆகவே அவர்களை கொலை செய்தே தீருவனாம்.
தான் படித்தவனாம்.

மொத்ததிலை அவர் ஒரு படித்த முட்டாள் அவருடைய நிகள்சியை நடத்தியும் பாத்தவர்களும் படிக்......முட்டாள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

எமக்கும் இந்த உல்டா தொலைக்காட்சிகளுக்கும் எட்டாப் பொருத்தம்....எது என்றாலும் நகைச்சுவையோ நம்பகக் கருத்தோ.... சிலரின் மனக்கிடக்கைகள் இப்படித்தான் வெளிக்காட்டப்படுகின்றன...நாம் பல இந்திய உறவுகளைச் சந்தித்த போதும் சேது மேலே எழுதிய கருத்துக்கு ஒப்ப அவர்களின் கருத்துக்களும் அப்படியே அவர்களின் உணர்வுகளாக வெளிவந்தன...பிரச்சனை என்னவென்றால் நகைச்சுவைக்குள்ளாலும் பல பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியும் என்ற ஊடக சித்தாந்தம் நயவஞ்சகமாக இங்கும் புகுத்தப்படுகிறதோ என்பதுதான்.....!

கோமாளிகள் குளறுபடிகள் ஆகாவிட்டால் சரி.....அன்று அமிர்தலிங்கம் சொன்னார் நகைச்சுவையாகவோ என்னவோ இந்திய இராணுவம் இறப்பர் செல்தான் அடித்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது என்று........அப்போ அங்கு ஓடிய இரத்த ஆறிற்கு யார் காரணம்...????!!! நிகழ்சிகள் எதுவானாலும் வரலாற்றுத் துயரங்களை.... தமிழர் வரலாற்று நிகழ்வுகளை... கேளிக்கைகளுக்குள் புகுத்துதலை தவிர்த்தல் நன்று....!

குறிப்பாக புலத்தில் வாழும் அரைகுறை அறிவுஜீவிகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் பொறுப்பான ஒருவிடயத்தை கையாளும் போது அதன் வரலாற்றை அதன் யதார்த்த நிலையை உணர்ந்த பின்னர்தான் கையாள வேண்டும் என்று....அப்படித்தான் சர்வதேச ஊடகங்கள் செய்கின்றன......!BBC CNN SKY........... பார்ப்பதில்லையோ என்னவோ....அதில உந்த பிளட் ஸ்கிறீன் மொனிற்றர் காட்டுறது இப்ப கிட்டத்தட்ட 10+ வருசத்துக்கும் மேலால நடக்குது....ஆனா எங்கட ஆக்களுக்கு இப்பதான் அது Professional ஆகி இருக்குது.....எங்கோயோ போகப்போகுது உந்த ரீவி என்னடது மட்டும் புரியுது... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shanthy - 12-31-2003

<!--QuoteBegin-யாழ்/yarl+-->QUOTE(யாழ்/yarl)<!--QuoteEBegin-->வெக்ரோன் ரீவி சாந்தி சொல்லியது போல திறமையாக சுடசுட செயல்படுகிறார்கள்.உண்மையை ஒத்துக்கொள்ளவேண்டும்.

எதிர்காலத்தில் இவர்கள் இலவசமாக செயல்பட்டு தேசியத்திற்கே போட்டியாக செயல்படலாம்.கருத்துகளை பரப்பலாம்..அல்லது ஆதரவாகக்கூட மாறலாம் எதுவும் நடக்கலாம்.

ஆனாலும் எமது என்ற நோக்கம் வருகையில் மாற்றான் தோட்டத்து மல்லிகையைவிட எமது தோட்டத்து மல்லிகையே மணக்கவேண்டும் என்ற காலப்பகுதி இது..சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்கவேண்டும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

.(தேவைகருதி இக்கவியை இப்பகுதியிலிடுகிறேன்)

இந்தத் திமிர்தானோ இத்தனையும் செய்கிறது....?

செவிகளுக்கும் சக்கரை வியாதியாம்
இன்றைய செல்லத் தமிழ் பேசும்
சேவைத் தொலைக்காட்சிகளும்
கொல்லும் தமிழ் வளர்க்கும்
குறைத்தமிழ் வித்தகரின்
வாய்களில் தமிழின்று சாவழுத்த
மூச்சுத்திணறி செத்துவிடத் துடித்தபடி....

வெல்லும் தமிழினி வெற்றியென்ற
தொலைக்காட்சிகளோ
தனியாட்சி செய்வதிலே
ஊடகப்பணம் வைத்து
உறவு வளர்க்கும் சுத்துமாத்தில்
கோடிரூபாய் கடனாம்....

கண்ணாடி அறைக்குள் கனவானாய்
இருந்தவரின் வாய்மை புரியாமல்
நீதி கேட்டவரை நியாயமின்றித் தண்டித்தது
நெஞ்சைச் சுடுகிறது.
கண்ணாடி அறை நாயகனின்
கண்ணாமூச்சி புரியுதின்று.
கை சுட்டித் தவறுரைக்க
கையிலும் பலமில்லை
வாயிலும் வல்லமையில்லை.

உணவில்கூட ஊழியர்க்குப் பேதமாம்
தன்னருகிருந்தவர்க்குத் தனிக்கவனிப்பாம்.
தத்துப் பிள்ளையென்றும் ,
தன் மாணாக்கனென்றும் ,
தன் நண்பனென்றும் ,
தர்மம் சொல்லியே தமிழின் ஒளிதரும்
தலம் குழியொன்றின் அடிநோக்கி
விழுந்து கொண்டிருக்கிறது.....
விழியெல்லாம் அது நோக்கி....

'இருவருடம் என்னை அசைக்கா பலமுண்டு"
இந்தத் திமிர்தானோ இத்தனையும் செய்கிறது....?
விதைத்த நஞ்செல்லாம் மறந்து
வியாக்கியானம் வேறு.
வயதில் முதிர்ந்துவிட்டால்
குணமும் முதிர்ந்தா போனது.....?

இளையோர் திறன் அழித்து
முதியோர் எழுவதென்றால்
என்றோ தமிழினம் வென்றிருக்கும்.
வைரமென்ற முத்துக்கவிஞன்
சொன்ன வரிகளே நினைவில் வருகிறது.
'வயதானவர்களுக்கு இயலாத கற்பனைதான் வரும்
இளைஞர்களுக்குத்தான் காரியக் கற்பனை வரும்"
வைரத்துடன் முரண் இருந்தாலும்
வார்த்தையின் உயிரில் உடன்பாடே.

கண்ணாடியறையும் , கசங்கா உடையும் ,
உண்ண வகையாய் உணவும் ,
இருந்து வாழ அறுநு}ற்றைம்பது யூரோவில்
அழகிய வீடும் , அதற்கான பொருட்களும்
ஊதியமாய் இரண்டாயிரம் யூரோவும
ஒருசதமும் குறையாமல் குடிகாக்க
ஈழத்தவர் உளைப்புத்தான் மறக்கலாகாது.


எதிர்த்துச் சொல்ல நாவில் பலமில்லை
எழுதக்கூட எழுத்தில் வலுவில்லை.
ஏனென்றால் எம்மிடம் பலமில்லை.

31.12.03.



- sethu - 01-01-2004

வெக்ரோன் தொலைக்காட்ச்சி மீன்டும் ஒரு தவறை இன்று விட்டுள்ளது அங்கு அறிவிப்பாளன் கண்னன் ஒரு கேள்வியை விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவரிடம் ஒரு கேள்வி கேட்டார்.

தமிழ்ஈழவிடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் ஒரு ஜனநாயகப்போராட்டத்திற்குள் அடக்கமுடியுமா என கேட்டிருந்தார்?

இந்த கேள்வி தேவைதானா. இந்தக்கேள்வி ஒரு ஜனநாயகமானதா? இவர் இந்தப்போராட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது புலநாகிறது. இது இரண்டாவது தடைவையாக இவர் நான் அறியத்தக்கதாக விட்டதவறு.
எனது கருத்தில் மாற்றமில்லை கேள்விகள்போல பல நசுக்குத்தனமான கண்டனங்கள் புலிகள்மீது கட்டவிள்துவிட்டுள்ளது வெக்ரேன் போல தெரிகிறது.