![]() |
|
மண்ணில் வந்த நாள்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: மண்ணில் வந்த நாள்...! (/showthread.php?tid=8151) |
- இளைஞன் - 09-11-2003 ஆதிக்கமாய் ஆண்கள் உள்ளதனால் பாதிப்பது பெண்கள். உண்மையன்றோ!? காதலனும் ஆணே! காதலியைப் பெற்றவனும் ஆணே! ஆதிக்கங்கள் போட்டியிட்டால் ஆடிப்போவாள் தானே! சும்மா கத்துவதேன் அண்ணா வீணே! பெண்ணை சுயமாய் சிந்திக்க விடுவீரே! காதலிலே வெற்றி அடைவீர் நீரே! - Kanani - 09-11-2003 ஆதிக்கத்தில் காதல் என்றால் அவர்கள் காதலிப்பது ஏனோ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ஆதிக்கத்தில் பழியைப்போட்டு இன்னொரு வாழ்வமைக்கத் தானோ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பெண்களின் சுய சிந்தனையை விட பலமானது அவர்கள் சுயநலம்... - இளைஞன் - 09-11-2003 ஆண்கள் எல்லாம் சைட் அடித்தால் ஓடி ஒழிவதா? வயசுப் பையன் வால் பிடித்தால் என்ன செய்வதாம்? சுயநலங்கள் இருப்பதால்தான் குழந்தை பிறக்குது... சுயநலங்கள் இருப்பதால்தான் வாழ்க்கை நடக்குது... - Kanani - 09-11-2003 <!--QuoteBegin-இளைஞன்+-->QUOTE(இளைஞன்)<!--QuoteEBegin--> சுயநலங்கள் இருப்பதால்தான் குழந்தை பிறக்குது... சுயநலங்கள் இருப்பதால்தான் வாழ்க்கை நடக்குது...<!--QuoteEnd--><!--QuoteEEnd--> கடைசியில் உண்மையை ஒப்புக்கொண்டீரே தெளிவு பிறந்தமைக்கு வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- இளைஞன் - 09-11-2003 உண்மைகளைப் பூட்டி வைத்தால் உலகம் பொறுக்குமா? உள்ளதெல்லாம் சொன்னபின்பும் கலகம் இருக்குமா? சுயநலத்தில் பயனிருந்தால் வாழ்க்கை இனிக்குது! சுயநலத்தின் சுயநலத்தால் வாழ்க்கை கசக்குமே. காதலெல்லாம் முறிவடைந்தால் அது உந்தன் குற்றமே பெண்ணின் மீது பழியைப்போட்டு தப்பல் குற்றமே - Kanani - 09-11-2003 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> சுயநலத்தில் பயனிருந்தால் வாழ்க்கை இனிக்குது! சுயநலத்தின் சுயநலத்தால் வாழ்க்கை கசக்குமே. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> திருப்பித் திருப்பி அதைத்தானே சொல்கிறீர்கள்..... சுயநலம் கொண்ட பெண்களுக்கு வாழ்வு இனிக்குது சுயநலமற்ற ஆண்களுக்கு வாவழ்வே வெறுக்குது - இளைஞன் - 09-11-2003 ஆண்களுடைய சுயநலத்தைச் சொல்லிக் காட்டவா? எந்தனது சொந்த மொழியில் சொல்லுக் காணுமா? சுயநலத்தால் காதலித்து சுயநலத்தால் தாடிவச்சு சுயநலத்தால் அழிஞ்சு போறார் சுயநலத்தால் அடக்கவச்சு சுயநலத்தால் ஆட்டிவச்சு சுயநலத்தால் அடங்கிப் போறார் - Kanani - 09-11-2003 உங்களைப்போல் நானில்லை...ஏன் மற்றவர்களும் அவ்வாறில்லை....சுயநலமின்றி வாழப் பழகும்....ஆணாதிக்கம் சமுகத்தை நெறிப்படுத்தவேயன்றி அடக்குமுறைக்கல்ல.... ஆண்களுக்குரிய தலைமைத்துவப் பண்பையும் திறனையும் துஷ்பிரயோகம் செய்தல்தான் சுயநலம்..... இளைஞர்களே காதல் வாழ்வில் ஒர் சிறிய பகுதியே...காதலித்துப் பார் உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும் என்பார்கள்..... என்னைப் பார் என் அழகைப்பார் என்று பெண்கள் கூட்டமும் வரும்... இது எல்லாம் எம் கவனத்தை சிதறடிக்கும் மாயைத் தோற்றமே.... இளமையின் வலிமையை, சக்தியை வெறுமனே காதலே நிம்மதி காதலே சந்நிதி என்று செலவழிக்காதே...உனக்காக சமுகத்தில் எத்தனையோ கடமைகள் காத்திருக்கின்றன....காதலி...உன்னைக் காதலி...காதலைக் காதலி.... நானும் காதலிக்கிறேன்...என் காதலியை விட அவள்மீது நான் கொண்ட காதலை!!! - இளைஞன் - 09-11-2003 வாழ்க காதல்! வாழ்க காதல்! காதலி உன்னைக் காதலி காதலைக் காதலி....! அருமையான வரிகள்! வாழ்த்துக்கள் கணணி! பெண்ணைக் காதலித்ததால் வந்த வரிகளோ?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sOliyAn - 09-12-2003 <!--QuoteBegin-சாந்தி+-->QUOTE(சாந்தி)<!--QuoteEBegin-->sOliyAn wrote:காதல் சோகத்தை அனுபவிக்க வேணுமென்று ஆசையாத்தான் இருக்க.. வழிதான் தெரியலை.. காதலித்தால் மட்டுமே அந்த இனிமையை அனுபவிக்கலாம் சோழியான் அண்ணை. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> காதலித்தால் அல்ல.. காதலித்து தோற்றால்.. என்ன நீங்கள்.. இனி எங்கே தோற்பது.. இரண்டாச்சு.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 09-12-2003 பெண்ணெனும் மாயப்பிசாசு வீசும் ஒரு வலை வீழ்ந்தவர் மீண்டிடார் உளறியே வீழ்வர் மண்ணிலே...! சமுதாயமும் அப்பன் அம்மையும் அக்காவும் தங்கையும் கேடயமாய் இருக்க அண்ணனும் தம்பியும் அயல் வீட்டு அங்கிளும் இருப்பர் காவலரனாய்...! ஆண்டாண்டாய் காதல் செப்பிய உதடுகள் கணத்தில் உதிரும் காதலுக்கு சமாதிகட்டும் கொங்கிறீட் வார்த்தைகள்...! பெண்ணே உன் இதயம் என்ன 'போலட்' சீமேந்து உற்பத்திமையமா...?!!! காதலுக்கு மட்டுமல்ல மனிதாபிமானத்துக்கே நீ ஓர் அவமானம்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Paranee - 09-13-2003 மண்ணில் வந்த நாள் இங்கு மாசுபட்டுப்போவதுமேனோ வாழ்த்துக்கள் இளைஞா வார்த்தைகளில் அங்கங்கே வைரங்கள் ஜொலிக்கின்றன - shanthy - 09-16-2003 kuruvikal Wrote:பெண்ணெனும் மாயப்பிசாசு பேயவள் பெண் மாயப்பிசாசு ஆடவரை வலைவீசி கண்ணீரைப் பரிசளிக்கும் காரிகைகள் பெண்களெல்லாம்..... கருவறையில் இடம்தந்து உனைக்கவியெழுத வைத்த அம்மா யாரடா மைந்தா.....? உன் அம்மாகூட நீ சொன்ன வார்த்தைபோல் இருக்கலாமில்லையா.....? இதையேன் மறந்தாயோ....? - shanthy - 09-16-2003 Kanani Wrote:நேரம் பொன்னானது... நேரம்பொன்னானது உன் அம்மாவாகிய பெண் அதைவிடவும் பொன்னான பெண். - sOliyAn - 09-16-2003 பலே பலே.. இது நியாயம்.. ஆனால் என்ன.. அம்மாவுக்கு பல விசயங்கள் தெரியது.. :mrgreen: - Kanani - 09-16-2003 shanthy Wrote:அம்மா வேறு நான் வேறல்லை..எண் கண்களில் ஒன்று...அது எப்பவும் என்னுடனே இருக்கும்... நான் கூறிய பெண் தங்கையுமல்ல அக்காவுமல்ல..... <!--emo&Kanani Wrote:நேரம் பொன்னானது... --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Paranee - 09-17-2003 வணக்கம் உங்களிற்கு அவள் தங்கையுமல்ல அக்காவுமல்ல இன்னொருவரிற்கு அவள் அக்காவாகவோ தங்;கையாகவோ மகளாகவோ தாயாகவோ இருக்கலாம் இல்லையா ???????ஃஃஃ Kanani Wrote:shanthy Wrote:அம்மா வேறு நான் வேறல்லை..எண் கண்களில் ஒன்று...அது எப்பவும் என்னுடனே இருக்கும்... நான் கூறிய பெண் தங்கையுமல்ல அக்காவுமல்ல..... <!--emo&Kanani Wrote:நேரம் பொன்னானது... - Kanani - 09-17-2003 இன்னொருவரின் அக்கா தங்கைக்கு நீங்கள் ஏன் நேரம் செலவழிக்கிறியள்?...என்ன பிளான் அண்ணை? உது சரியில்லை :wink: - Paranee - 09-17-2003 சிலவேளை அவர் உங்களிற்கு மனைவியாக அமையலாம் இல்லையா ? - Kanani - 09-17-2003 இதுதான் இன்றைய பெடியளுக்கு (Boys) உள்ள பிரச்சினை...பார்க்கும் இளம் பெண்களெல்லாம் கரவர்ச்சியாகவும் மனைவியாகவும் தெரிவாள்..இதைத்தானே படம் சொல்லுது இது இயற்கையின் விளையாட்டு..ஆண் பெண் கவர்ச்சி இல்லாவிட்டால் இனப்பெருக்கம் நடைபெற வாய்ப்புக் குறைவு எமது உடலைக் கட்டுப்படுத்தும் மூளையே இந்தக் கவர்ச்சிக்கான சுரப்புகளையும் துாண்டுகிறது... ஆனால் இந்த மூளையையும் கட்டுப்படுத்தக் கூடிய ஒன்று எம்மால் பார்க்க முடியாத ஒன்று...முயன்றால் உணரமட்டும் கூடிய ஒன்று உண்டு... அதுதான் எமது உடலினுள்ளும் வெளியும் அலைகள்போல நீக்கமற மறைந்திருக்கும் ஆன்மா...அதாவது கடவுளின் படைப்பு... இதையும் மேற்கத்தேயம் விரைவில் கண்டறியும்... இதை உணர்ந்து மூளையைக் கட்டுப்படுத்தினால் மாயை புலப்படும்... |