Yarl Forum
வணக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் (/showthread.php?tid=8122)

Pages: 1 2


- தணிக்கை - 09-21-2003

இலண்டன் வணக்கம் சுணக்கத்திற்கு குதர்க்கம் கொடக்காட்டி சரி


- PATCHI - 09-21-2003

குதர்க்கம்....
இதன் அர்த்தம் புரிந்திருந்தால் இருக்காது தர்க்கம் வீண் தர்க்கம்.

எச்சரிக்கை உங்களுக்கு 3
நீங்கள் முதலில் திருந்துவது நன்று

எனக்கில்லை தயக்கம் - அதனால்
தந்தேன் ஐ.பி. - இலக்கம்
உங்களுக்கும் இருந்தால் நெஞ்சழுத்தம்
இட்டுவிடுங்கள் உங்கள் இலக்கம்..

நான் யாருக்கும் எதிரியல்ல
இங்கிருக்கும் எவருக்கும் புதிருமல்ல
வேதனையெனக்கு புதுமையல்ல
ஆனால் உங்கள் போன்ற
கோமாளிகள் இரக்கம்
தேவையுமல்ல...

கருத்துக்களை எழுதுங்கள்...
நிலைத்திருங்கள்..என்னை என்பாட்டில்
விட்டு விடுங்கள்.

ஷ்...பட்சி வந்திடுச்சு பட்சி வந்திடுச்சு ஷ்.....


- Selan - 09-21-2003

வணக்கம் பட்சி
எனக்கில்லை கட்சி
யாரென்றாலும் வரவேற்போம் மெச்சி
ராஜேந்தர் படம் ஏதும் உண்டா தங்கச்சி


- குயில் - 09-21-2003

[b]பட்சிகளை எங்கேயோ பார்த்த ஞாபகம்.

[quote=PATCHI]உலகெங்கும் தேடுகிறேன் மனிதர்களை....
[b]நானும்தான் தேடுகிறேன் மனிதர்களை.

[b]ஆனாலும் வாருங்கள் என வரவேற்கிறேன்.


- Mathivathanan - 09-21-2003

வாருங்கள் வாருங்கள் என பட்சியை வரவேற்கிறேன்.

[quote]குயில்[/color]

[quote]PATCHI[/color]
[b]நானும்தான் தேடுகிறேன் மனிதர்களை.

[b]ஆனாலும் வாருங்கள் என வரவேற்கிறேன்.

நன்றி குயில்..

உண்மையா நானும் இந்தப் பட்சியை எங்கேயோ பார்த்த ஞாபகம். நண்பர்களாக சேர்ந்து பறந்திருப்பாரோ..? அடக்கம்.. ஒடுக்கம்.. நயம்.. லயம்.. பிரயோகம் சுட்டுவது கூட்டத்தைத்தான்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Manithaasan - 09-21-2003

வணக்கம் பட்சிகளே!
வரும்போதே இடர்பாடுகளுடன் வருகிறீர்கள் போலிருக்கிறது.....
யாழ் களம் உங்களுக்கு அறிமுகமானதுபோல் தெரிகிறது...உரிமையை நிலைநிறுத்தும் வேகமும் வார்த்தைகளும் அப்படியிருந்தன....இருக்கட்டும்...வலுவான கருத்துகளுடன் வாருங்கள்.என வரவேற்பதில் மகிழ்கிறேன்.


- PATCHI - 09-24-2003

இடர்பாடுகள்
இவை நமது -:- வாழ்க்கையின்
நடைபாதைகள்..

உடன்பாடுகள்
அவை மாத்திரமே
திருப்திக்காக
நாம் கண்ட -:- இறுக்கங்கள்..

என் செய்வதாம்..?

அறிந்ததாய்க் காண்பவர்கள்
அறிந்ததாயே இருக்கட்டும்.
அறியாதவர்களுக்கு புதிய
நட்புக்கு களம் வழியாகட்டும்

புரியாதவர்கள் தெரிந்து கொள்ள
நல்ல பதில்கள் கிடைக்கட்டும்
எதுவும் கிடைக்காத போதிலே
மரணம் அது உன்னையும் என்னையும் அவசரமாய் தழுவட்டும்...!

என்ன மகிழ்ச்சி தானே ?

வரவேற்றவர்க்கும் களத்தின் உயிர்களாய் வாழ்பவர்கட்கும் .. அனைவருக்கும் மீண்டும் நமது நன்றி கலந்த வணக்கம்

ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சி வந்திடுச்சு..ஷ்...


- Paranee - 09-25-2003

அழகு கவிபுனைந்து களத்தை புன்முறுவிக்கும் பட்சிக்கு வரவேற்புடன் வாழ்த்துக்கள்

கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடும் என்று கேட்டதுண்டு
இங்கு பட்சியின் இறக்கைகள்கூட சங்கீதம் இசைக்கின்றன

வாருங்கள் தாருங்கள் சுவைபட கவிகள் கதைகள் கருத்துக்கள்

நட்புடன் பரணீதரன்


- Mathan - 01-29-2004

பரணி எங்க தமிழ் படிச்சீங்க? நல்லா எழுதுறீங்க. கவிதை எழுதினா என்ன?


- Eelavan - 02-04-2004

வசந்த கீதம் பாடி வரவேண்டிய பட்சியின் வாயில் சோக கீதம்
அதனால் வரவேற்புரையை விட்டுவிட்டு ஆறுதல் கூறவேண்டிய நிலையெமக்கு

இக்களத்தில் எமது எழுத்துக்கள் புதிது
இக்களத்திற்கு நாங்கள் புதிது
ஆனலும் களங்கள் எங்களுக்கு புதிதல்ல
பாடிப் பல ஊர் திரிந்த வேளையில்
பல களங்களை கண்டிருப்பீர்
ஆயினும்
போராடியாவது இக்களத்தில் உம்மை
நிலைநாட்ட வேண்டிய அவசியமென்ன
எப்படியாயினும்
போராட்டத்தின் அவசியத்தை இப்போதாவது உணர்ந்தீரே

பட்சி வந்ததில் சந்தோசம்
அதனால் - களத்தில்
கட்சி வராமலிருந்தால் சரி