Yarl Forum
வேதனையான உண்மை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: வேதனையான உண்மை (/showthread.php?tid=7915)

Pages: 1 2 3 4 5 6 7


- தணிக்கை - 10-28-2003

இந்த விடயத்தில் முக்கியமாக ஒன்று சொல்லவேன்டும்.

இந்த தன்டனைப்பணம் அதாவது குற்றப்பனம் முக்கியமானது காரனத்தை சொல்கிறேன்.

இந்த விடயம் தொடர்பாக இவை அனைத்தையும் அவதானிக்கும் ஒருவரிடம் சொன்னேன் உங்கள் அவசரதேவைக்குப்போகும்போது இப்படி ஒரு பருப்பு அவிந்துபோய்விட்டது என அதற்கு அவர் சொன்னார் உங்கள் ஆதங்கம் எனக்கு தெரியும் ஆனால் இதுதான் உன்மை அனைத்துத்தரப்பினரும் எமது ஒளங்கை கடைப்பிடிக்கிறார்கள் உன்மையில் தனது வாகனம்கூட ஒரு தடவை மாட்டுப்பட்டது.

ஆனால்

அவர்களுக்கு சில விட்டுக்கொடுப்புகளை கொடுத்து சந்தர்பத்திற்கு ஏற்ப மாற்ற வெளிக்கிட்டால்

அங்கு மற்றது தொடங்கிவிடும் ஆகவே விட்டுக்கொடுப்புக்குள் அது புதைந்திருக்கிறது என்ற உண்மையை புரிய வைத்தார்.

முற்றிலும் உண்மை நான் ஏற்றுக்கொன்டேன் ஆனால் அதன்பின் மாற்றுவளிகளில் நான் அதிவேகமாக பயனம் செய்தேன்.


- தணிக்கை - 10-28-2003

யாழ் அந்த இடத்தை செல்லும்போது நின்று பார்த்தேன் அந்த இடத்தில் இப்போது புதிய மதகு ஒன்று கட்டப்படுகிறது

அந்த விபத்தில் பலருக்கு தவறு இருக்கிறது அதாவது இடப்பக்கமாக வந்த முதியவரைகாப்பாற்றும் நோக்குடன் அந்த போ..........ளின் வாகனம் தவறுதலாக இந்த வாகனத்தில் மோதியது அப்போது அந்த வாகனம் ஓட்டிய ஜோமன் நாட்டவரும் தவறு இழைத்துள்ளார் யாழ் சொல்வது போன்று.


- P.S.Seelan - 10-28-2003

தணிக்கை அவர்களே போராளிகளின் வாகனமல்ல, தமிழீழ போக்குவரத்து கழகம நடத்தும் பேரூந்து தான் மோதியது. அவ் விரண்டு வாகனங்களும் நான் வரும் பொழுது கூடு கிளி. நீதிமன்ற வளவில் நிறுத்தி வைத்திருப்பதைக் கண்டேன்.

அன்புடன்
சீலன்


- தணிக்கை - 10-28-2003

அய்யோ அப்பாடா நான் போராளிகள் வாகனம் என்று எளுதவில்லை போக்குவரத்து கழகங்களின்

என்பதை சுருக்கமாக போ...........களின் வாகனம் எனபோட்டேன்

இந்த டாட்டா பஸ் இப்ப மீன்டும் பாவனையில் இருக்கின்றது அந்த பஸ்சின் வலப்பக்க கண்னாடி இல்லாமல் ஓடுகிறது அதற்கு பொலித்தீன் பாக் ஒட்டி இருக்கு வாகனத்தையும் ஒரு சந்தர்பத்தில் பார்க்கும் வாய்புக்கிடைத்தது.

டாட்டா இந்தியன் இடை தர பஸ்


- Paranee - 10-28-2003

வேதனையான உண்மைகள்தான்


- தணிக்கை - 10-28-2003

அதமட்டுமா அந்த இடத்தில் இருந்து ஒரு சில கிலோமீற்றர் தூரத்தில் அதைவிடபெரிய ஒரு விபத்து

அதாவது லொறி ஒன்று சீமேந்துடன் வந்து மதவுகட்ட கின்டின கிடங்கிற்குள் கவுன்டு அதன் பாரத்தால் அந்த லொறி அந்த கிடங்கிற்குள் முற்றுமுளுதாக புதைந்துவிட்டது.

அதை கன்னால் பாத்தபோது அதிசமாக இருந்தது.


- தணிக்கை - 10-28-2003

Chief truce monitor to return to Norway for now after Sri Lankan president calls for his removal


- Paranee - 10-28-2003

இப்பவுமே ஒன்றிற்குள் இன்னொன்றை செருகுவது உங்கள் பழக்கமா ?
ஒரு தலைப்பின்கீழ் விடயங்களை எழுதுங்கள். எல்லாவற்றையும் ஓன்றாக்காதீர்கள்.
மேலே எழுதியதை அழகு தமிழில் தரலாமே !
Quote:Chief truce monitor to return to Norway for now after Sri Lankan president calls for his removal



- தணிக்கை - 10-28-2003

இவையும் வேனைகளான உன்மைகள்தான் என்பதை சுட்டிக்காட்டினேன்.

இங்கு எதுவும் செருகப்படவில்லை


- தணிக்கை - 10-29-2003

இன்று தமிழ் சிங்கள கலாச்சார நிகள்வு கொளும்பில் நடைபெற்றது சிங்கள காடயர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் இதனால் இரன்டு பத்திரிகையாளர்கள் உட்பட 4 பேர் காயப்பட்டுள்ளனர்.

சிங்களவர்கள் சிங்கள பத்திரிகையாளரை தாக்கியதில் இருவர் காயமடைந்தனர்.
மீன்டும் இனக்கலவரமா தொடங்கட்டும் எங்குபோய் முடியும்.


- தணிக்கை - 10-29-2003

<img src='http://www.oslovoice.com/injured_journo_18695_200.jpg' border='0' alt='user posted image'>


- P.S.Seelan - 10-29-2003

வருங்காலத்தில் இன்னமும் வேதனையான நிகழ்வுகள் காணவும் கேட்கவும் கூடியதாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்படுகின்றது. இனி கண்காணிப்புக்குழுத் தலைவரின் சொல் கேட்க வேண்டாம் என ஆச்சி முப்படைத்தரப்புக்கும் ஆனையிட்டுள்ளார். இனி இவர்களின் கொட்டம் கூடும். பத்திரிகையாளர் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் சிறீலங்காவில் என்ன இன்று நேற்று நடக்கும் நிகழ்வா?

அன்புடன்
சீலன்

அன்புடன்
சீலன்


- தணிக்கை - 10-29-2003

Prime Minister Ranil Wickremesinghe that it had no legal power whatsoever to transfer governing power to North and east.


- yarl - 10-29-2003

கொழும்பு ச்ம்பவத்தின் எதிரொலியாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

பொதி நாளை மறுநாள் கைமாற இருக்கும் சமயத்தில் இப்படி ஒரு ஸ்டன்ட் காட்டுகிறார்கள்.

இன்று கஸ்பா அடிகளார் சொன்னதுபோல ஒரு இடைக்கால அலகை தருவதற்கே இவ்வளவு
இழுப்பு இழுக்கும் சிங்கள அரசு எப்படி தமிழாகளுக்கு நிரந்தர தீர்வை தரப்போகிறார்கள்????


- தணிக்கை - 10-29-2003

அதான் சொல்கிறேன் கட்டாயம் ஒரு புது விதமான யுத்தம் தமிழ் ஈழத்தை ஆட்கொள்ளும் என்பது உன்மை.

இது எனது திடமான நம்பிக்கை.

ஆனால் வருடக்கனக்குகள் செல்லாது ஆனால் பாதிப்புகள் அதிகமாக இருதரப்பிற்கும் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


- தணிக்கை - 10-30-2003

புலிகளின் இடைக்கால நிர்வாகத் திட்ட வரைவு சூடானின் இடைக்கால நிர்வாகத் திட்டங்களிலிருந்து இரவல் பெறப்பட்டதா?


தமிழீழ விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாக வரைபின் பலவிடயங்கள் வட ஆபிரிக்க நாடான சூடானின் இடைக்கால நிர்வாகத் திட்டங்களிலிருந்து இரவல் பெறப்பட்டுள்ளதா எனச் சம்பிகா லியன ஆராய்ச்சி எனும் சிங்களப் பத்திரிகையாளர் டெய்லி மிரர் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறிலங்கா சூடான் ஆகிய இரு நாடுகளிலும் காணப்படும் போராட்டங்களுக்கு இடையில் போராட்டத்தின் தன்மைகளிலும் வரலாற்றிலும் பல ஒப்புவமைகள் இருப்பதாகக் கூறியுள்ள கட்டுரையாசிரியர் 1983 முதல் இரு நாடுகளிலும் நடைபெற்று வரும் போராட்டங்களால் சிறிலங்காவில் 75000 பேரும் சூடானில் ஒன்று புள்ளி ஐந்து மில்லியன் பேரும் இறந்துள்ளனர் எனத் தொவித்துள்ளார்.

சூடானில் பெரும்பான்மையினரான சன்னி முஸ்லீம்கள் (ளுரnni ஆரளடiஅள) 70 வீதமென்றும் சிறிலங்காவில் சிங்கள பௌத்தர்களும் அதே அளவினர் எனக் கட்டுரையாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். தெற்கு சூடானில் உள்ள கிறிஸ்தவ சிறுபான்மையினர் சூடான் மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைமையில் முஸ்லீம் பெரும்பான்மையினர் இடமிருந்து உள்ளக சுய நிர்ணய உரிமையினைக் கோருகின்றார்கள் எனவும் தற்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளும் அவ்வாறே உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வுக்கு விருப்பினை வெளிப்படுத்தியுள்ளனர் என்று கட்டுரையாளர் சம்பிகா லியனஆராய்ச்சி விளக்குகின்றார்.

இரு நாடுகளிலும் சர்வதேச நாடுகளின் ஈடுபாடு பலமாகவுள்ளதெனவும் அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் பங்களிப்பு முக்கியமானதாகவுள்ளது என்பது கட்டுரையாளரின் கருத்து. மேலும் நோர்வே, கடந்த நவம்பர் மாதத்தில் ஒஸ்லோவில் சிறிலங்காவில் சமாதானத்தை உறுதிப்படுத்த உதவி வழங்கும் நாடுகளின் மகாநாட்டை நடத்தியது போல தற்பொழுது சூடானின் புனரமைப்புக்கான உதவி வழங்கும் நாடுகளின் மகாநாடு ஒன்றை நோர்வே நடாத்தவிருப்பதாக இவ்வாரத்தில் அறிவித்துள்ளது.

சூடானின் அரசாங்கத்திற்கும் போராளிகளுக்கும் இடையிலான அடுத்த கட்டப் பேச்சுக்கள் நவம்பர் 30ம் திகதி இடம்பெறும் எனத் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த வாரத்தில் சூடானின் இரு தரப்பினரையும் கென்யாவில் சந்தித்த அமெரிக்காவின் ராஜாங்கச் செயலாளர் கொலின் பவல் அவர்கள் எதிர்வரும் மார்கழி மாதத்திற்கு இடையில் இரு தரப்பினரும் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிடல் வேண்டுமென வலியுறுத்தியிருக்கின்றார் எனவும் கட்டுரையாளர் சம்பிகா லியனஆராய்ச்சி குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவிலும் சூடானிலும் சமாதானத்தை ஏற்படுத்த அயல் நாடுகள் மேற்கொண்ட பல தரகு முயற்சிகள் தோல்வி கண்டு யுத்தமே மீளவும் மீளவும் தொடர்ந்து வந்தது என்னும் கட்டுரையாளர் இறுதியில் சூடானின் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் தாங்களாகவே மேற்கொண்ட சமாதான முயற்சிகள் தான் ஏற்புடைய பலனை அளிக்கத் தொடங்கியுள்ளது எனத் தெரிவித்து இவ்வாறான பல வழிகளில் சூடான் சிறிலங்காவுக்கு பிரச்சினைத் தீர்வுக்கான முன்னுதாரண வடிவமாக உள்ளது எனத் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்கா போன்ற நாடுகளின் முன்னுதாரணங்களில் சிறுபான்மையானவர்கள் பெரும்பான்மையானவர்கள் மேல் ஆட்சி செலுத்திய நிலைகள் உள்ளதால் அவற்றை விட சூடானின் முன்னுதாரணம் சிறிலங்காவுக்குப் சிறப்புடையதாக அமைகிறது எனக் கட்டுரையாளர் கருதுகின்றார்.

இவ்வாறு கூறிவிட்டு கட்டுரையாளர் நிலம், வரிகள் பாதுகாப்பு என்னும் மூன்று விடயங்களில் எவ்வாறு அதிகாரங்களைப் பெறுவது என்பதற்குச் சிறிலங்கா அரசாங்கத்தின் யுூலை மாத இடைக்கால நிர்வாக விவாதிப்பு ஆவணத்திற்கு முன்மொழிவுகளை மேற்கொள்வது என்பது மிகவும் கடினமானதும் கடும் முயற்சியானதுமான ஒன்றாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருந்திருக்கும் இதற்காக அவர்கள் நீண்ட காலத்தைச் செலவிட்டுள்ளார்கள் எனத் தன் கருத்தை விபரித்துள்ளார்.

ஆயினும் தற்பொழுது உள்ள உண்மையான சிக்கல் என்னவென்றால் சிறிலங்கா முஸ்லீம்; காங்கிரஸ் தற்பொழுது பிரித்தானியாவில் ஆய்வுச் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு விட்டு நாடு திரும்பியதும் இரண்டு மாதத்துள் தாங்களும் இடைக்கால நிர்வாகம் தொடர்பாகத் தங்களுடைய சொந்த முன்மொழிவுகளைச் சமர்பிப்பக்கப் போவதாகத் தெரிவித்து வருவதேயாகுமென கட்டுரையாளர் சம்பிகா லியன ஆராய்ச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மீளவும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஆரம்பமாகவுள்ளதாக உத்தேசப் பேச்சுகக்ள் அடிபடும் நிலையில் மூன்றாவது தரப்பு என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே காணப்படுவதாக கட்டுரையாளர் சம்பிகா லியன ஆராய்ச்சி கவலை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே தமிழீழ விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாகத் தீர்வுகள் 1981ம் ஆண்டின் சனத்தொகை மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு காணப்படுவதாகவும் ஆனால் அன்று 40 வீதமாக இருந்த தமிழர்களின் சனத்தொகை இன்று 33 வீதமாக குறைந்து விட்டது என்னும் கட்டுரையாளர் சம்பிகா லியன ஆராய்ச்சி ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னைய அடிப்படையிலேயே தங்கள் தீர்வுகளைத் தேடுவதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கு உதாரணமாக கிழக்கில் 37 வீதம் முஸ்லீம்களும் 30 வீதம் சிங்களவர்களும் உள்ளனரெனவும் ஆயினும் தமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லீம்கள் அதிகமாகவுள்ள அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் தங்களுடைய நீதி நிர்வாகத்தை நீடித்துள்ளனர் எனக் கட்டுரையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போரில் ஈடுபட்ட எந்த ஒரு தரப்பும் பேச்சுவார்த்தைக் காலங்களில் அத்தரப்பு போர்க்காலத்தில் படைபலம் கொண்டு பெற்றிருந்த நன்மைகளை விட எந்த அதிக நன்மையையும் அடைந்துகொள்ள அனுமதிக்க கூடாது என்பது சர்வதேச வழமையெனவும் ஆனால் சிறிலங்காவைப் பொறுத்தவரை சர்வதேச வழமைக்கு மாறாக சம நிலையின்றி விடுதலைப்புலிகளின் பக்கம் சார்புத்தன்மை அதிகமாகவுள்ளது எனவும் சம்பிகா லியன ஆராய்ச்சி கருத்து வெளியிட்டுள்ளார்.

அத்துடன் சிறிலங்கா படையினரிடையே தோல்வியுற்ற படையினர் என்ற மனோநிலை அதிகரித்து உள்ளதெனவும் முன்னர் அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து இருந்த நிலையிலும் அவர்கள் உற்சாகமாக கட்டுப்பாட்டுடன் இருந்ததாகவும் ஆனால் இன்றோ அவர்கள் மனச்சோர்வுற்று ஒரு படையினர் தன்னிடமே இந்நிலையில் ஒரு படையினன் இங்கு எதற்குத் தேவையெனக் கேட்டதாகவும் கட்டுரையாளர் சம்பிகா லியன ஆராய்ச்சி தெரிவித்துள்ளார். சிறிலங்கா இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்வது படைகளின் உற்சாகத்திற்கு மிகவும் உதவுமெனவும் கட்டுரையாளர் கருதுகின்றார்.

இந்நேரத்தில் இராணுவத்தன்மையை அகற்றுதல் என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தின் அளவை மேலும் குறைக்க அனுமதிப்பது சிறிலங்கா அரசாங்கத்தின் பேரம் பேசும் ஆற்றலைக் குறைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதாகவும் கட்டுரையாளர் சம்பிகா லியன ஆராய்ச்சி கருத்துத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பௌத்த மதம் 70 வீதமான மக்களால் பின்பற்றப்படும் மதம் எனவும் அதற்கு அரசியலமைப்பில் அளிக்கப்பட்டுள்ள முன்னுரிமையை நீக்குவது என்பது இறுதித்தீர்வில் முன் வைக்கப்படும் பொழுது அதனைச் சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்குமெனவும் இந்நிலையில் அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துவது எந்தஅளவுக்குச் சாத்தியமாகுமென்று கூற முடியாதிருப்பதாகவும் கட்டுரையாளர் சம்பிகா லியன ஆராய்ச்சி அச்சம் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் இடைக்கால நிர்வாகம் குறித்த எழுத்து மூலமான தங்கள் பதிலைத் தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசாங்கத்திடம் அனுசரணையாளர் மூலம் சமர்ப்பிப்பதற்கு இன்னமும் இரு தினங்கள் இருக்கும் நிலையில் த சன்டே லீடரில் தெரிவிக்கப்பெற்ற ஊகங்களை மையமாக வைத்து வெளிவந்துள்ள கட்டுரையாளர் சம்பிகா லியன ஆராய்ச்சியின் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்மொழிவுகளில் பெரும்பாலானவை சூடானிடம் இருந்து இரவல் வாங்கப்பெற்றவையா ? டுவுவுநு pசழிழளயடள: டீரடம ழக வாநஅ டிழசசழறநன கசழஅ ளுரனயn? என்ற இக்கட்டுரை சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் மக்களின் இடைக்கால நிர்வாகம் என்பதை எவ்வாறு பார்க்கப்போகிறது என்பதற்கு முன்னுதாரணமாகவுள்ளது.

நன்றி: இலண்டன் ஐபிசி தமிழ் வானொலி


- P.S.Seelan - 10-30-2003

பேரின அரசியல் வாதிகள் எல்லோரும் ஒரே அச்சில் வார்ததெடுக்கப்பட்வையே. இவர்களை நம்பி இனியும் மோசம் போனால் அது அவர்கள் தவறல்ல. தமிழரின் இழிச்சவாய் முட்டாள்த்தனம். ரணில் எப்படியும் இந்த சமாதான சூழ்நிலையை சனாதிபதி தேர்தல் வரை இழுத்தடித்துத் தனக்கு ஆதாயம் தேட நினைப்பதே கசப்பான உண்மை நிலை.
ஆனால் இம் முறை ஏமாறப் போவது தமிழரல்ல. பேரினமே.

அன்புடன்
சீலன்


- தணிக்கை - 10-30-2003

யார்தான் கண்டது.


- தணிக்கை - 11-01-2003

தமிழ் ஊடகவியலாளர்கள் மீது இன்று புலி முத்திரை. -டி.சிவராம்-

ஒரு தமிழ் ஊடகவிய லாளர் உண்மையான செய்திக ளை ஊடகங்களுக்கு வழங்கினால் அவர் புலியாக சித்தரிக்கப்படு வதுதான் இந்த நாட்டின் வரலாறு என சிரேஷ்ட ஊடகவியலாளரும், இராணுவ ஆய்வாளருமான டி.சிவராம் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் கொழு ம்பு புதிய நகர சபை மண்டபத்தில் இடம் பெற்ற சிங்கள - தமிழ் கலைக் கூடல் நிகழ்வில் உரையா ற்றிய டி.சிவராம் தொடர்ந்து கூறு கையில்:-

தமிழ் ஊடகவியலாளர்க ளுக்கான அச்சுறுத்தல், போராட்டம் ஆரம்பித்த காலம் முதல் சமாதான காலம் வரை கடந்த போராட்ட காலத்தில் ஊடகவியலாளர் கே.மா ணிக்க வாசகம் இராணுவத் தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட போது பல சிங்கள ஊடகங்கள் இவருக்கு புலி முத்திரை குத்தியது மட்டுமன்றி தமிழ் பத்திரிகை ஒன்றும் செய்தி வெளியிட்டிருந்தது. இவ்வாறுதான் தமிழ் ஊடகவியலாளர்களை சிங்கள ஊடகவியலாளர்களும், அரசியல்வாதிகளும் எம்மை பார்த்தனர், இவற்றிற்கெல்லாம் முகம் கொடுக்கத்தான் இன்றும் கொழும்பில் இருந்து என்னைப் போன்ற பத்திரிகையாளர்கள் செய ல்படுகின்றனர் எனவும் கூறினார்.


- P.S.Seelan - 11-01-2003

அப்படிச் செய்தால் தானே பயத்தில் உண்மைகளை வெளியிடாமல் பேரினம் கொடுக்கும் பொய்களை வெளியிடலாம். இப்படித்தானே இத்தனை காலமும் நடந்தது. துணிந்தவர்கள் அடிவாங்கினார்கள். உயிரைக் கொடுத்தார்கள். உதாரணம் திரு.நிமலராஜன்.

அன்புடன்
சிலன்