![]() |
|
புலத்தமிழர்கள் நாடு திரும்புவார்களா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: புலத்தமிழர்கள் நாடு திரும்புவார்களா? (/showthread.php?tid=786) |
- Luckyluke - 02-20-2006 எனக்கு என் சொந்த ஊர் பற்று உண்டு... ஆனால் என் பணி நிமித்தம் மற்றும் குடும்ப சூழ்நிலைகள் காரணத்தால் நான் அங்கு திரும்ப முடியாது... இதைத்தான் நான் யதார்த்தம் என்று குறிப்பிட்டேன்... சாரு நிவேதிதா எனக்கு தெரிந்து மிகத்தீவிரமான ஈழத்தமிழர் ஆதரவாளர்.... அவர் தவறான பொருளில் கூறியிருப்பதாக எனக்கு தெரியவில்லை...... - tamilini - 02-20-2006 stalin Wrote:<b>என்னய்யா இங்கை இன்பம் ...சொகுசு வாழ்க்கை...</b> இதைத்தான் நானும் கேட்கிறேன்.. என்ன தான் இருக்கிறது.. சொர்க்கமாய் இங்கு.. இக்கரைக்கு அக்கரை பச்சை போல.. நம்ம ஊர்களும் மாறிக்கொண்டு வருகிறது. எடுக்கவேண்டியதை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகத்தான் பார்ப்பார்கள். (இந்த காலநிலையில காய வேறை வேலையில்லையா) :roll: :roll: :roll: - கறுப்பன் - 02-20-2006 Luckyluke Wrote:எனக்கு என் சொந்த ஊர் பற்று உண்டு... ஆனால் என் பணி நிமித்தம் மற்றும் குடும்ப சூழ்நிலைகள் காரணத்தால் நான் அங்கு திரும்ப முடியாது... இதைத்தான் நான் யதார்த்தம் என்று குறிப்பிட்டேன்... எனக்கும் உங்கள் கருத்து சரி என்றே படுகிறது.... - Niththila - 02-20-2006 சாருநிவேதிதாவை விடுங்க அவருக்கு ஷோபா சக்தி சொல்வதுமட்டுமே இலங்கை தமிழரின் கருத்தா தெரியுமோ என்னவோ என்னை பொறுத்தவரை கூடுதலாக எனது பெற்றேரின் தலைமுறையினர் ஊருக்கு போய் வாழ்வதையே விரும்புகினம் எனது நண்பர்கள் பலர் என்னை மாதிரி சிறு வயதில இங்க வந்தவைக்கு ஊருக்கு போக விருப்பம் ஆனால் ஈழம் கிடைத்தா பிறகு போவதை விரும்புகினம் ஆனால் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் பலருக்கு அப்படி போக பெரிய விருப்பம் இல்லை விடுமுறைக்கு போய் வர மட்டுமே விரும்புகினம் இது பெற்றோரது பிழைதானே - jsrbavaan - 02-20-2006 .. Quote:சாருநிவேதிதாவை விடுங்க அவருக்கு ஷோபா சக்தி சொல்வதுமட்டுமே இலங்கை தமிழரின் கருத்தா தெரியுமோ என்னவோஓம் இளைய தலைமுறை வர விரும்பாது எண்டுதான் நானும் நினைக்கிறன் - ¾õÀ¢Ô¨¼Â¡ý - 02-20-2006 Niththila இணைந்தது: 22 தை 2005 கருத்துக்கள்: 2098 வதிவிடம்: United Kingdom எழுதப்பட்டது: திங்கள் மாசி 20, 2006 5:18 pm Post subject: -------------------------------------------------------------------------------- <b>சாருநிவேதிதாவை விடுங்க அவருக்கு ஷோபா சக்தி சொல்வதுமட்டுமே இலங்கை தமிழரின் கருத்தா தெரியுமோ என்னவோ </b> <b>¬¸îºÃ¢Â¡É Å¡÷ò¨¾ ¿¢ò¾¢Ä¡ !</b> - Mathan - 02-20-2006 புலம் பெயர்ந்த ஈழ தமிழர்களுக்கு சொந்த மண் மீதான பாசமும் பற்றும் அதிகமாகவே இருக்கின்றது ஆனால் அதே நேரம் அங்கு ஒரு விடிவு ஏற்படும் போது பலர் உடனே திரும்பி செல்வார்கள் என நான் நினைக்கவில்லை. - நர்மதா - 02-20-2006 நான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் சென்ற போது சில குடும்பங்கள் புலத்திலிருந்து தாயகம் வந்து நிரந்தரமாக தங்கியிருந்தார்கள் நான் அவர்களை விசாரித்தோன் அப்போது அவர்கள் கூறியகாரணம் சிலது ஏற்றுக் கொள்ளக்கூடியது மற்றயவை அவர்களின் தனிப்பட்டவிடயம் அதற்காக எல்லேரும் தாயகம் திரும்புவார்கள் என்றில்லை நிச்சயமாக தமிழிழம் மலர்ந்தால் பலர் தாயகம் திரும்புவார்கள் இது எனது தனிப்பட்ட கருத்தல்ல - Nilavan. - 02-20-2006 எல்லோரது எண்ணப்பாடுகளும் வித்தியாசமானது. வடுதலை பெற்று ஈழம் வளர்ச்சி பாதையில் செல்கையில் எந்த ஒரு தமிழனும் புலத்தில் இருக்க விரும்பமாட்டான் ( பதவி,பணத்துக்கு அடிமையானவர்களை தவிர) உண்மையில் இங்கிருக்கும் நிலை பாருங்கள்!? தொழிற்ச்சாலை வேலை உணவக வேலை இப்பிடியிருந்தால் எப்படி இங்கே வாழ்வது? ஓ நீஙங்கள் சொல்ல வருவது புரிகின்றது. எமது இளைஞர்கள் படித்து நல்ல நிலையில் இருக்கின்றனர் என்று. ஆனால் 100 க்கு 20 வீதமானவர்களே உயர்தரப்பாடசாலையை முடிக்கின்றனர் அவர்களில் 5 சதவீதத்துக்கு குறைவானர்களே முழுமையாக தங்கள் உயர் கல்வியை முடிக்கின்றனர். பெரும்பாலன இளைஞர்களை பார்த்தீர்களானால் உயர்தர பள்ளி முடிய வேலைக்கு செல்ல முற்ப்படுகின்றனர். அது பெரும்பாலும் தொழிற்சாலையாகத்தான இருக்கின்றது. எனவே தமிழீழும் கிடைக்குமு; பட்சத்தில் அங்கு ஒரு ஜனநாயக ஆட்சி அதாவது இலங்கை போல அல்லாது. புலத்தில் இருக:கும் ஜனநாயகத்தோடு கூடிய அரசங்கம் அமைந்தால் நிச்சயம் இவர்கள் முPண்டு வருவார்கள். பெண்ணடிமை தனம் என்பது தமிழீழத்தை பொறுத்தவைர 90 வீதம் இல்லாமல் போய் விட்டது எனலாம். ஆனால் அது இன்னும் புலத்தில் வளரவில்லை என்பது வேறு விடையம். எனவே பெண்ணடிமை தனத்தில் தமிழகத்தையும் தமிழீழத்தையும் ஒப்பிட முடியாது. எழுத்தாளர் அவர்களின் கருத்து முன்னர் ஒரு கம்பரின் வம்பு பாடும் ஒருவரது கருத்து போல இருக்கு.. (பெயர் மறந்திட்டு வாராதோ வரவல்லாய் எழுதியவர்) - கறுப்பன் - 02-20-2006 இருக்கலாம். நான் நினைக்கிறேன் பழசுகள் மட்டுமே அப்படியே போனாலும் போவார்கள்... ஆனால் இளையவர்கள் தமிழீழம் கிடைத்தாலும் லீவுக்கு சுற்றுலா போவார்களே தவிர நிரந்தரமாக போகமாட்டார்கள் என்று. ஏனென்றால் அவர்களுக்கு அது தாய் நாடு. அவர்கள் பிறந்து வளர்ந்தது தந்தை நாடு. இது எனது தனிப்பட்ட கருத்து. - KULAKADDAN - 02-20-2006 புலம் பெயர் மக்கள் மீள திரும்புவார்களா மாட்டார்களா என்பது உண்மையில் சிந்திக்கப்பட வேண்டிய விடயம். ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழ் சமூகமும் மீள திரும்பி ஈழத்தில் குடியேறுவார்கள் என்பது என்பது கற்பனையில் கூட நடக்காத காரியம் என்பது எனது கருத்து. ஒரு பகுதியினர் மீள திரும்பி செல்லலாம். மீள திரும்பாமல் இருபதில் பல காரணிகள் செல்வாக்கு செலுத்தலாம் * இங்கு தொழிலகளை முதலிட்டு அதை வெற்றிகரமாக நடாத்துபவர்கள்.....அங்கும் தொழில் தொடங்கலாம் என்றாலும் அவர்களால் முற்றாக மீள திரும்பமுடியுமா என்பது சந்தேகமே * இங்கேயே பிறந்து வளர்ந்து படித்து இங்கே வேலைகளை பெற்று இருக்கும் இளம் சந்ததிக்கு அவர்களின் பெற்றோர்கள் போல அங்கு மீள திரும்ப, அங்கு குடியமர சாத்தியமாக இருக்குமா என்பது சந்தேகம்.... அவர்கள் வாழ்ந்த, வளர்ந்த கலாச்சார, பழக்க வழக்க சூழல்கள் மாறுபட்டது. அவர்கள் மீள திரும்பி அங்குள்ள சமுதாயத்துடன் ஒன்றுவது என்பது எவ்வாறு அமையும் என்று சொல்வது கடினம். அங்கும் காலத்தோடு மாற்றங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது, ஆனால் இடைவெளி அதிகம் தான். வாழ்க்கை வசதி என்பதும் இடைவெளியை ஏற்படுத்தலாம், - ஊமை - 02-20-2006 வடிவேலு Wrote:அடே தம்பிமார்களே அண்ணான் ஒன்று சொன்னா கேட்பிர்களா? சரி சரி களைச்சுபோனார் அண்ணனுக்கு ஒரு ரீ சொல்லு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வடிவேலு - 02-20-2006 Quote:சரி சரி களைச்சுபோனார் அண்ணனுக்கு ஒரு ரீ சொல்லு தம்பி அதை நீர் சொல்ல மாட்டிரோ? - ஊமை - 02-20-2006 Nilavan. Wrote:எல்லோரது எண்ணப்பாடுகளும் வித்தியாசமானது. வடுதலை பெற்று ஈழம் வளர்ச்சி பாதையில் செல்கையில் எந்த ஒரு தமிழனும் புலத்தில் இருக்க விரும்பமாட்டான் ( பதவி,பணத்துக்கு அடிமையானவர்களை தவிர) உண்மையில் இங்கிருக்கும் நிலை பாருங்கள்!? தொழிற்ச்சாலை வேலை உணவக வேலை இப்பிடியிருந்தால் எப்படி இங்கே வாழ்வது? ஓ நீஙங்கள் சொல்ல வருவது புரிகின்றது. எமது இளைஞர்கள் படித்து நல்ல நிலையில் இருக்கின்றனர் என்று. ஆனால் 100 க்கு 20 வீதமானவர்களே உயர்தரப்பாடசாலையை முடிக்கின்றனர் அவர்களில் 5 சதவீதத்துக்கு குறைவானர்களே முழுமையாக தங்கள் உயர் கல்வியை முடிக்கின்றனர். பெரும்பாலன இளைஞர்களை பார்த்தீர்களானால் உயர்தர பள்ளி முடிய வேலைக்கு செல்ல முற்ப்படுகின்றனர். அது பெரும்பாலும் தொழிற்சாலையாகத்தான இருக்கின்றது. எனவே தமிழீழும் கிடைக்குமு; பட்சத்தில் அங்கு ஒரு ஜனநாயக ஆட்சி அதாவது இலங்கை போல அல்லாது. புலத்தில் இருக:கும் ஜனநாயகத்தோடு கூடிய அரசங்கம் அமைந்தால் நிச்சயம் இவர்கள் முPண்டு வருவார்கள். பெண்ணடிமை தனம் என்பது தமிழீழத்தை பொறுத்தவைர 90 வீதம் இல்லாமல் போய் விட்டது எனலாம். ஆனால் அது இன்னும் புலத்தில் வளரவில்லை என்பது வேறு விடையம். எனவே பெண்ணடிமை தனத்தில் தமிழகத்தையும் தமிழீழத்தையும் ஒப்பிட முடியாது. எழுத்தாளர் அவர்களின் கருத்து முன்னர் ஒரு கம்பரின் வம்பு பாடும் ஒருவரது கருத்து போல இருக்கு.. (பெயர் மறந்திட்டு வாராதோ வரவல்லாய் எழுதியவர்) இது என்ன நிலவன் சுத்த சின்னபுள்ளதனமாய் இருக்கு . <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இங்கு வெளிநாட்டில் அகதி அந்தஸ்தில் வசிப்பவர்கள் ( நான் உட்படதான் ) என்ன போர் சூழல் காரணமாக தான் வந்தவர்கள் என எண்ணுகிறீரோ? இல்லவே இல்லை அவர்கள் அனைவரும் அரசியல் சம்பந்தமான அகதிகள் கிடையாது அனைவருமே பொருளாதாரம் சம்பந்தமான அகதிகள் தான். சரி அரசியல் சம்பந்தமான அகதிகள் என்றால் போலந்தில், செக்கோசுலோவாக்கியாவில், ஹங்கேரியில், அரசியல் தஞ்சம் கோரி இருக்கலாமே ஏன் அவைகளை கடந்து ஐரோப்பாவில் ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், இத்தாலி, ஹோலண்ட், பெல்ஜியம், பிரித்தானியா, அல்லது ஸ்கண்டிநேவியன் நாடுகள் அல்லது அமெரிக்கா, கனடா, சென்றீர்கள். உங்களுக்கு அரசியல் தஞ்சம் தானே தேவை நான் முன்னர் சொன்ன இடங்களில் எல்லாம் அரசியல் தஞ்சம் கொடுக்கிறார்களே.Nilavan. Wrote:தொழிற்ச்சாலை வேலை உணவக வேலை இப்பிடியிருந்தால் எப்படி இங்கே வாழ்வது? அப்ப என்ன மாதிரி வேலையை எதிர்பார்க்கிறீர் நிலவன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உணமையைச் சொன்னா வெளிநாடுகளில் வாழுகிற தமிழன் எவனுமே இலங்கைக்கு சென்று நிரந்தரமாக வாழமாட்டான். - narathar - 02-20-2006 கி.பி. அரவிந்தன் நேர்காணல் - புதிய பார்வை, டிசம்பர் 2005: பகுதி 6 http://mathy.kandasamy.net/musings/2006/02/16/314 புதிய பார்வை: நீங்கள் 90-இல் புலம்பெயர்ந்து விட்டீர்கள். அதற்கிடையில் அமைதி பேச்சுவார்ட்தை, நார்வே டலையீடு என பல நிகழ்வுகள் இலங்கையில் தொடர்ந்து நடந்திருக்கின்றது. இப்போது புதிய அதிபர் ராஜபக்சே மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம் என்று சொல்லியிருக்கிறார். இந்நிலையில் திரும்பவும் ஈழத்திற்குப் போகவேண்டும் என்ற உந்துதல் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் ஏற்பட்டுள்ளதா? கி.பி.அரவிந்தன்: புலம்பெயர்ந்த தமிழர்களுக்குத் தங்கள் தாயகம் மீதான ஒரு விருப்பம் இருக்கிறது. பலவற்றை இழந்துவிட்டோம். திரும்பப்போய் அதை அடைய வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதே வேளையில் இவ்வளவு கடுமையாக உழைக்கவேண்டியதில்லை என்ற மனநிலையும் இருக்கிறது. உண்மையில் அங்கொரு அமைதியான சூழலொன்று தோன்றுவதை மனதார விரும்புகிறார்கள். அங்கு சென்று சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு அமைதியாக வாழலாம் என்றும் நினைக்கிறார்கள். இன்னொரு போர் பற்றிய விருப்பமின்மைதான் அவர்களிடம் இருக்கிறது. ராஜபக்சே போரின் ஒரு குறியீடாகத்தான் பார்க்கப்படுகிறார். அவருடைய கூற்றும், பேச்சும், பின்னணியும் போரின் அறைகூவலாகத்தான் இருக்கின்றன. அவர் இன்னுமொரு பண்டார நாயக, ஜெயவர்த்தன போலவேதான் தனது முகத்தைக் காட்டுகிறார். இது ஒருவிதமான அச்சத்தை தோற்றுவித்திருக்கிறது. அதேசமயம், இவருடைய கடும்போக்கினால் ஏதோவொரு நிலையில் ஒரு முடிவுக்கு வரும். இனி நீண்டகாலத்திற்கு இழுபட்டுச் சொல்கிற வாய்ப்பை இவருடைய வருகை குறித்துள்ளது. நல்லதொரு தீர்வை நோக்கி நகரப்போகிறோம் என்பதான நம்பிக்கையும் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. புதிய பார்வை: ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடியேறி வசதியாக வாழ்கிற தமிழர்களுக்கு இங்கேயே வாழ்ந்துவிடலாம்; இலங்கைக்குச் செல்ல வேண்டாம் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறதே? கி.பி.அரவிந்தன்: போருக்கு முன்பே சில புலம்பெயர்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. மலேசியாவிற்கு 1800களிலேயே சென்று அங்கு மலேசிய யாழ்ப்பாணத் தமிழர்களாக வாழ்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து ஈழத்திற்கு வந்த கதைகளும் உண்டு. இப்படி புலம்பெயர்வுகள் தொடர்ந்து நிகழ்ந்துள்ளன. இலங்கை சுதந்திரமடைந்த காலகட்டத்திலும் இலண்டன் போன்ற நகரங்களுக்குச் சென்று குடியமர்ந்துள்ளார்கள். இப்போது குடியேறியவர்களும் சொத்துகளோடு இருக்கிறார்கள். நாங்கள் பழுத்த இலைகள். எங்களுடைய தீர்மானம் பெரிதாக எடுபடப்போவதில்லை. ஏனென்றால் புதிய குருத்துகளான தலைமுறை வந்துவிட்டது. அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்பதுதான் முக்கியமானது. அவர்களை விட்டுவிட்டு நாங்கள் என்ன செய்யமுடியும். இதில் நிறைய கேள்விகள் இருக்கின்றன. பிள்ளைகளுக்கு எவ்வகையான உணர்வுகளைக் கொடுத்து வளர்த்திருக்கிறோம் என்பதில்தான் எங்களுடைய எதிர்காலம் இருக்கிறது. 38 வருட காலம் ஊரில் வளர்ந்த எனக்கிருக்கிற பற்றிற்கும், நான் கொண்டிருக்கிற ஊர் பற்றியதான கனவிற்கும், ஊரே தெரியாமல் பிறந்து வளர்ந்து வருகிற பிள்ளைகளின் கனவிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. புதிய பார்வை: புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகள் அங்குள்ள சூழலோடு எளிதாக கலந்திருக்கிறார்களா? கி.பி.அரவிந்தன்: அங்குதான் பிறந்து வளர்ந்திருக்கிறார்கள். அந்த மொழியில் கல்வியை கற்கிறார்கள். வீட்டில் எங்கள் மொழ்யை, சாப்பாட்டை உண்டு வளர்ந்தாலும் அவை அவர்கள் எடுக்கிற தீர்மானங்களுக்கு உதவியாக இருக்கும் என்று சொல்லமுடியாது. பாரீஸில் இருந்தாலும் இப்படி இருக்கலாம்தானே? வெள்ளிக்கிழமைகளில் சோறு சாப்பிடவேண்டும். முக்கியமான நாட்களில் சேலை கட்ட வேண்டும். சாமி கும்பிட வேண்டும். அம்மாவிற்கு வணக்கம் சொல்ல வேண்டும்; வீட்டில் ஒரு குத்துவிளக்கு இருக்க வேண்டும். ‘அப்பவும் நான் தமிழன்தானே, ஆசியந்தானே’ என்றுகூட அவர்கள் கேட்கலாம். இந்த தலைமுறையினர் ஈழத்திற்குப் புலம்பெயர்ந்து வருவார்களா? என்பது தெரியவில்லை. இன்னும் எத்தனை தலைமுறை போனாலும் நாங்கள் யாராக இருக்க வேண்டும் என்பதை சூழல்தான் தீர்மானிக்கும், நீ ஆசியன், நீ கறுப்பன், நீ பாகிஸ்தானி என்பதை ஒருபோது மறைக்க இயலாது. எத்தனை தலைமுறை கடந்தாலும் அடையாளங்கள் மறையாது. இதற்கு வரலாறு முழுக்கச் சான்றுள்ளது. 500 வருடங்களுக்குப் பிறகு கொலம்பஸ் பற்றி எழுதும்போது குறிப்பிடப்படுகிறான்; “Origin Italian. ஸ்பெயினில் அரசிக்காக கப்பல் கட்டிக்கொண்டு போன இடத்தில் அமெரிக்காவைக் கண்டுபிடித்தான்” என்கிறான். இதைத் தவிர்க்க முடியாது. புதிய பார்வை: இலங்கை மண்ணைப் பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார்களா? கி.பி.அரவிந்தன்: இங்கு கிடைப்பதைவிட ஈழ மண்ணில் இணக்கமான உறவு கிடைக்கும். சுதந்திரம் கிடைக்கும். நீண்டகாலமாக அடைபட்டுக் கிடக்கிற வீட்டி.ல் இருக்கிறோம். அங்கு திறந்த வீட்டில் எங்கேயும் நிற்கலாம்; எங்கேயும் போகலாம். காற்றுக்காக ஜன்னலை திறந்து வைக்கலாம். ஒரு திறந்தவெளி வாழ்க்கை. புலம்பெயர்ந்த நாடுகளில் அந்த வெளிகள் அடைபட்டுக் கிடக்கின்றன. இத்தனை மணிக்குள் வீட்டிற்குத் திரும்ப வேண்டும்; குளிர்காலமென்றால் ஜன்னலைத் திறக்கக்கூடாது. சில உடுப்புகள் போடவேண்டும். இதெல்லாம் இயல்பிலேயே பழகினால்கூட, சொந்த ஊருக்கு அந்தால் மிக மெல்லிய உடையில் நிற்கலாம். காற்று வாங்கலாம். எதிலும் படுத்து உறங்கலாம். காலாற நடக்கலாம். இதெல்லாம் முக்கிய வி்ஷயங்களாகப் படுகின்றன. ஊர் பற்றிய ஆர்வம் உறுதியாக இருக்கிறது. தவிர்க்க முடியாமல் பல தேசத்தவர்களோடு பழக வேண்டிய கட்டாய நிலைமை இருக்கிறது. அவரவர்கள் தங்கள் தேசியத் தன்மையைக் கொண்டிருக்கும்போது இவர்களையும் தமிழ் தேசியத்தைப் பேண வேண்டிய நிலைமைக்குத் தள்ளுகிறது. எங்கள் புலம்பெயர்வின் சாதகமான அம்சங்களில் முக்கியமானது மொழி அறிவு. பொதுவாக தமிழ்ச் சமூகத்திற்கு பல மொழி அறிவு கிடையாது. இன்றைக்கு புலம்பெயர்ந்த தமிழச் சமூகத்திற்கு பதினைந்து மொழிகள் தெரியும். 10,000 பேர் பிரான்சில், ஒரு லட்சம் பேர் ஜேர்மனியில், ஐந்து லட்சம் பேர் லண்டனில், பதினைந்தாயிரம் பேர் நார்வேயில் என உலக நாடுகளிலெல்லாம் வாழ்கிறார்கள். இருபத்தைந்தாயிரம் பேர் இத்தாலியில் இருக்கிறர்கள். ஸ்பெயின், போர்ச்சுகல், பெல்ஜியத்தில் வாழ்கிறார்கள். அந்தக் குழந்தைகள் எல்லாம் அந்தந்த மொழியைப் பேசுகிறர்கள். தமிழ்ச் சமூகத்தின் அறிவு பல மொழி அறிவாக விரிவடைந்திருக்கிறது. இந்திய சமூகங்களில் எந்த சமூகத்திற்கும் இந்த வாய்ப்புக் கிடைக்காது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து உயர் தொழிநுட்பங்களும் நமம்வர்கள் சிலருக்குக் கிடைத்திருக்கின்றன. இது ஒரு முக்கியமான அம்சம். யுத்தங்களும், கலவரங்களும் நிகழ்ந்த நிலையில் அதற்கு நேர் எதிராகக் கிடைத்த பலன்கள் இவை. சிங்கள அரசு, தமிழ் மக்கள் சின்னாபின்னப்பட்டு அழியட்டும் என்றுதான் எங்களை அனுப்பியது. அந்தச் சூழலை உருவாக்கியது. அதுதான் போராட்டத்திற்குப் பலமாகவும் மாறி, அதற்கு பன்முகத் தன்மையை அளித்திருக்கிறது. இந்த நுண்ணிய மாற்றம் இன்றைக்கு அறியப் படாமல் இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் இது தமிழ்ச் சமூகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். நூல்கள், இணையத்தளங்கள், ஊடகங்கள் என்று அனைத்தும் இப்போது பரவலாகியிருக்கின்றன. புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களுடைய நினைவுகளை உறைந்த நிலையில்தான் வைத்திருக்கிறார்கள். தங்களுடைய தாயகத்தை எங்கிருந்தாலும் புனிதமாகக் கருதுகிறார்கள். புலம்பெயர்ந்து எங்கோ சென்ற நினையில்தான் தங்களுடைய சொந்த நாட்டின் தாக்கத்தை அது மனதில் எழுப்பியிருக்கும் ஆதிக்கத்தை உணரமுடிகிறது. கலாசாரத் தேடல் இருக்கிறது. வெயிலில் நிழலைத் தேடுவது போல எங்களுடைய தேடல் நீடிக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஊடகங்களில் அந்தத் தேடல் இல்லை. அதன் வழியாக நஞ்சு வழிகிறது. ஊடகங்கள் வழியாக ஒரு வகையான கலாசாரம் திணிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களையும் இது பாதிக்கிறது. புலம்பெயர்ந்த நாட்டில் பலர் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறபோது ஊடகங்களின், குறிப்பாகத் தொலைக்காட்சியின் ஆதிக்கமும் அதிகம். இளைய தலைமுறையினருக்கு அதுதான் நம்முடைய தமிழர் கலாசாரம் என்று மயக்கத்துடன் புரிந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம். அதன் மோசமான விளைவை பல புலம்பெயர்ந்த தமிழர்கள் கடல் கடந்தாலும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எப்படிப்பட்ட இரட்டை நிலை இது? நேர்காணல் நடாத்தியவர்: மணா தொகுப்பு: சுந்தரபுத்தன் படங்கள் புதூர் சரவணன் நன்றி: புதிய பார்வை, டிசம்பர் 16-31 2005. - அகிலன் - 02-21-2006 [quote=ஊமை] உணமையைச் சொன்னா வெளிநாடுகளில் வாழுகிற தமிழன் எவனுமே இலங்கைக்கு சென்று நிரந்தரமாக வாழமாட்டான் உங்களை வைத்து நீங்கள் எல்லோரும் இப்படித்தான் எண்று பினாத்துவது புரிகிறது. அதற்காக உங்களிக்காய் என் வருத்தங்கள். இராணுவ பயத்தில் பிள்ளையை களவாக காணிநிலத்தை வித்து ஏஜன்சிக்கு பணம் கட்டி, களவாய் கொழும்பு கொண்டுவந்து விமானம் ஏற்றிய பெற்றோரை நீங்கள் அறியாதது எங்கள் தவறும் அல்ல. கிழக்கு ஜேர்மனி ஒண்றும் வசதியான நாடுகிடையாது அங்கு எம்மவர் வந்து இறங்கவில்லையா.? நீங்கள் சொன்ன போலந்துக்கும் எம்மவர் போய் இருப்பார்கள் இலங்கையில் இருந்து நேரடியாக விமானம் இருந்திருந்தால். உறவுகள், உறவினர் இருக்கும் நாட்டை நோக்கி பயணம் என்பது அதன் பின் தவிர்க்க முடியாதது. எனது அண்ணா இருக்கும் நாட்டுக்கு வருவது எனக்கும் வசதி அண்ணனுக்கும் வசதி எனும்போது வரநினைப்ப்பது தவறும் இல்லை. இது உங்களுக்கு புரிய வளியும் இல்லை. அதோடு சொன்னீர்கள் ஈழத்துக்கு எவனும் போய் வாழமாட்டன் எண்று போர் நிறுத்தம் ஆரம்பித்தபோது யாழ்ப்பணத்தில் இங்கு உள்ளவர்களால் காணிகள் வீடுகள் எல்லாம் யாழ்ப்பாணத்தில் வாங்கப்பட்ட செய்தி தெரியுமா.? வீடு இருந்தவர்கள் அத திருத்த பல ஆயிரங்களை செலவு செய்ததாவது தெரியுமா.? அப்படி அவர்கள் வெறும் பவுசு காட்டமட்டுமா செய்கிறார்கள். அதுக்காகவா பணத்தை செலவளிக்கிறார்கள். உங்களுக்கு தெரியாமல் பலவிடயங்கள் நடந்தேறி இருக்கிறது. நீங்கள் கிணற்றுத்தவளையாக இருப்பது உங்களின் தவறுதான். - கந்தப்பு - 02-21-2006 Niththila Wrote:சாருநிவேதிதாவை விடுங்க அவருக்கு ஷோபா சக்தி சொல்வதுமட்டுமே இலங்கை தமிழரின் கருத்தா தெரியுமோ என்னவோ சோபாசத்தியைப்பற்றி இங்கே பார்த்து அறிந்து கொள்ளுங்கள் http://www.orupaper.com/issue25/pages_K__10.pdf - MUGATHTHAR - 02-21-2006 என்னுடைய நிலமை உங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது ஆனபடியால் நானும் இதில் கூறும் கருத்து ஏற்கமுடிமோ தெரியவில்லை ஏனெனில் சவுதியிலிருந்து வருடத்துக்கு ஒருமுறை கிடைக்கும் 1மாதலீவில் தாயகம் போய் வருகிறேன் இப்ப நினைத்தாலும் போயி விடலாம் ஆனால் ஜரோப்பா நாடுகளில் குடும்பங்களுடன் வாழ்பவர்கள் பலவிதப்பட்ட கஷ்டங்களின் மத்தியில் போய் சேர்ந்திருப்பார்கள் தாயகத்தை பற்றி அறிவிலும் சரி நடப்புகளிலும் சரி ஈழத்தில் உள்ளவர்களை விட அதிகம் தெரிந்து கொள்வதிலும் தெரிந்தும் இருப்பார்கள் ஆனால் இப்பத்தைய போராட்ட சூழ்நிலையில் திரும்பிப் போவார்களா என்பது கொஞ்சம் யோசிக்கவேணும் இளையவர்களை கட்டாயப்படுத்தி அனுப்பிய பெற்றோர் தாயகத்தில் இருந்தார்கள் எண்டால் ஒருக்காலமும் தமது பிள்ளைகள் திரும்பி வருவதை விரும்ப மாட்டார்கள் இது முற்றும் முழுக்க சுயநலம் .........ஆனையிறவு தாக்குதலின் போது ஒரு பெரியவர் 5பிள்ளைகளையும் இந்திய ஆமி காலத்தில் வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டவர் சொல்கிறார் "எங்கடை பெடியள் விட மாட்டாங்கள்" எண்டு இப்பிடி சுயநலத்திதுடன் இருப்பவர்கள் தமது பிள்ளைகள் வர அனுமதிப்பார்களா???? நாட்டில் முதலில் அமைதியான நிலை ஏற்பட கடவுளிடம் பிராத்தியுங்கோ.....நீங்க திரும்பிப் போவதை விட அங்கு இருப்பவர்களாவது நிம்மதியாக இருக்கவேண்டாமா..........(ஏற்கனவே யுத்தநிறுத்த காலத்திலை ஊருக்குப் போய் கிடந்த காணி வீடுகளின்ரை விலையை உயத்திவிட்டது காணாதா.........? அங்கை உழைக்கிறவன் தலையிலை கை வைச்சுக் கொண்டிருக்கிறான் ) Re: புலத்தமிழர்கள் நாடு திரும்புவார்களா? - வர்ணன் - 02-21-2006 <!--QuoteBegin-இவோன்+-->QUOTE(இவோன்)<!--QuoteEBegin-->சாரு நிவேதிதா என அறியப்பட்ட எழுத்தாளர் அண்மையில் இனிய உதயம் என்னும் சஞ்சிகைக்கு செவ்வியொன்றினை அளித்திருந்தார். அதிலிருந்து ஒரு கேள்வியும் சாருவின் பதிலும் <b>நீங்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் அழைப்பை ஏற்று வெளிநாடு சென்று வந்தீர்கள். புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஈழப்பிரச்சனை தீர்ந்த பிறகு மீண்டும் அவர்கள் தாயகம் திரும்பும் மனநிலையில் இருக்கிறார்களா?</b> திரும்பும் மனநிலையில் அவர்கள் இல்லை.ஐரோப்பிய கனேடிய வாழ்க்கை தரும் செளகரியங்கள் ஈழத்தில் கிடைக்காது. வாழ்க்கை செளகரியம் மட்டுமல்ல! அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் ஐரோப்பா மற்றும் கனடாவில் அரசியல் ஜனநாயகம் பெண்ணுரிமை போன்ற அருமையான சூழல் நிலவுகிறது. ஈழத்திலோ தமிழகத்திலோ அவையெல்லாம் இன்னும் ஏட்டளவில் கூட வரவில்லை. மட்டுமல்லாமல் Diaspora என்று கூறப்படும் புலம் பெயர்தல் நடந்த பல சமூகங்களிலும் தாய்நாட்டுக்கு திரும்பிச் செல்லுதல் என்ற நிகழ்வே நடைபெறவில்லை. பல நூற்றாண்டுகளாக துருக்கியில் வாழ்ந்து வந்த இரண்டு லட்சம் கிரேக்கர்கள் 1921ம் ஆண்டில் தாங்கள் பார்த்தேயிராத தாய் நாடான கிரேக்கத்திற்கு திரும்பிய போது அவர்களை கிரேக்க சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னமும் அவர்கள் தங்கள் தாயகத்தில் அகதிகளாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள். <span style='font-size:25pt;line-height:100%'>மேலும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் பிள்ளைகள் தற்போது வேறு நாட்டில் பிறந்து வளர்கின்றார்கள். அவர்களால் தங்கள் நாட்டிற்கு சுற்றுலா சென்று வர முடியுமே தவிர நிரந்தரமாக அங்கே வாழ முடியாது. இது ஒரு மிகப்பெரிய வரலாற்றுச்சோகம். </span> ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து உருக வேண்டிய வரலாற்றுச்சுமை<!--QuoteEnd--><!--QuoteEEnd--> சாருநிவேதா - சிறந்த ஆய்வாளர் - இலக்கியவாதி-என்பது - இந்த விடயத்தில் - சுப்பர்-ப்-! 8) இதில்; வெட்கப்பட ஒண்ணுமில்ல- கொஞ்ச காலமா - புலம்பெயர்ந்து வாழுறவங்களே- திரும்பி போய் என்ன செய்ய போறோம் என்னு நினைக்கும் சூழ்நிலையில்- புலம்பெயர்ந்த நாடுகளில் - பிறந்து வளர்ந்தவர்களுக்கு ஏது வழி-? வாழ்விடத்தை -பிரிந்து - நீண்டகாலம் வாழ்ந்தால்- சிக்கல் தான் -! மீண்டும் எப்படி ஆரம்பத்தில் - இருந்து தொடங்குவது என்பதில்-! வரலாற்று சோகம் தான் - ஆனால் - புலிகள் இயக்கம் - அதை இலாவகமாக கையாளும்- அது சாரு நிவேதா- எழுத்துக்களுக்கு அப்பாற்பட்ட விசயம்-! எப்படியென்பதில்- சுனாமி வந்தபோது- தாயகம் நோக்கி ஓடிய - போயும் திரும்பி வர நினைக்காத - இங்கே சின்னவயசில இருந்து வாழ்ந்த-பலருக்கு தெரிந்த-உண்மைகள் - அது-! 8) - ஊமை - 02-21-2006 [quote=அகிலன்] உங்களை வைத்து நீங்கள் எல்லோரும் இப்படித்தான் எண்று பினாத்துவது புரிகிறது. அதற்காக உங்களிக்காய் என் வருத்தங்கள். இராணுவ பயத்தில் பிள்ளையை களவாக காணிநிலத்தை வித்து ஏஜன்சிக்கு பணம் கட்டி, களவாய் கொழும்பு கொண்டுவந்து விமானம் ஏற்றிய பெற்றோரை நீங்கள் அறியாதது எங்கள் தவறும் அல்ல. கிழக்கு ஜேர்மனி ஒண்றும் வசதியான நாடுகிடையாது அங்கு எம்மவர் வந்து இறங்கவில்லையா.? நீங்கள் சொன்ன போலந்துக்கும் எம்மவர் போய் இருப்பார்கள் இலங்கையில் இருந்து நேரடியாக விமானம் இருந்திருந்தால். உறவுகள், உறவினர் இருக்கும் நாட்டை நோக்கி பயணம் என்பது அதன் பின் தவிர்க்க முடியாதது. எனது அண்ணா இருக்கும் நாட்டுக்கு வருவது எனக்கும் வசதி அண்ணனுக்கும் வசதி எனும்போது வரநினைப்ப்பது தவறும் இல்லை. இது உங்களுக்கு புரிய வளியும் இல்லை. அதோடு சொன்னீர்கள் ஈழத்துக்கு எவனும் போய் வாழமாட்டன் எண்று போர் நிறுத்தம் ஆரம்பித்தபோது யாழ்ப்பணத்தில் இங்கு உள்ளவர்களால் காணிகள் வீடுகள் எல்லாம் யாழ்ப்பாணத்தில் வாங்கப்பட்ட செய்தி தெரியுமா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> யார் நானா பினாத்துகிறேன் நான் உண்மையைச் சொல்கிறேன். நீங்களே உங்கள் வாத்தத்தை நியாயப்படுத்த ஏதோ புசத்துகிறீகள் அகிலன் உங்களை நினைக்க நினைக்க எனக்கு சிரிப்பு வருகிறது. சரி ஜேர்மனிக்கு நேரடி விமானமான ஏறோபிளைற் இருந்தபடியால் ஏதோ எல்லோரும் ஜேர்மனி வந்தார்கள் சரி வந்தவர்களில் அங்கு தங்கியிருந்தவர்கள் எத்தனை பேர்? அனைவரும் மேற்கு ஜேர்மனிக்கு இரயிலின் சீற்றின்கீழ் படுத்திருந்தல்லவா சென்றார்கள் ஏன் உயிரை பாதுகாக்க வந்தால் கிழக்கு ஜேர்மனியில் வாழ்ந்திருக்க வேண்டியது தனே ? அடுத்தது சொன்னீர்கள் உறவுகளுடன் இருந்தால் ஒரு அளவு உதவி என்று அது கொஞ்சம் ஏற்றுகொள்ளலாம். ஆனால் கடைசிவரை அந்த உறவுகளுக்கு உதவியாய் இருந்தவர்களும் உறவுகள் இவர்களுக்கு உதவியாய் இருந்ததும் இன்றும் நிலைத்திருக்கிறதா ? அப்படியானவர்களை விரல் விட்டு எண்ணலாம். சரி எதை நீங்கள் உங்கள் வாதங்கள் சரியான பாதையில் முன்வைக்க சொன்னாலும் அதனுள் மறைந்து கிடக்கும் மிகப்பெரிய உண்மை. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் ஒரு சிலரைத்தவிர மிகுதி அனைவரும் பொருளாதார அகதிகளே ஏன் போர் காரணமாக தான் நீங்கள் இங்கு வந்தால் ஏன் தமிழீழத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களுக்கு போர் இல்லையா ? அத்தினை இலட்சம் பேர் அங்கிருக்க உங்களுக்கு மட்டும் அங்கு வாழ இயலாதோ எல்லாம் சுயநலம். என் பிள்ளை சாகக்கூட்டாது ஊரவன் பிள்ளைகள் சாகலாம். இதுதான் எம் இனத்தின் சிறப்புக்குணம். இதனுள் இன்னொரு சோகம் என்னவென்றால் அங்கு இருக்கும் இளைஞர் யுவதிகள் ஏன் மக்கள் தங்கள் உயிரைகொடுத்து ஒரு நாட்டை ஏற்படுத்தினால் அதன் பின் இவர்கள் இங்கு வறுகிச்சுருட்டிய சொத்துக்களோடு அங்கு போய் வாழப்போறார்களாம். வெட்கமாய் இல்லை எமக்கு? |