Yarl Forum
பாராட்டுகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: பாராட்டுகள் (/showthread.php?tid=7755)

Pages: 1 2 3


பாராட்டுகள் II - இளைஞன் - 12-05-2003

வணக்கம் மீண்டும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
இன்று இன்னும் இரு கருத்துக்களக் கருத்தாளர்களைப் பாராட்டலாம். நீங்களும் உங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து நமது கருத்துக்கள நண்பர்களை உற்சாகப்படுத்துங்கள்.

<b>சண்முகி</b>
இவர் யாழ் கருத்துக்களத்தில் அனைவரோடும் நட்போடும், பண்போடும் கருத்தாடும் ஒரு பெண். மற்றைய கள அங்கத்துவர்களால் செல்லமாக "சண்முகிப் பாட்டி" என்று அழைக்கப்படுபவர். இதுவரை மொத்தம் 159 கருத்துக்களைப் பதித்திருக்கிறார். ஆர்வமாக அனைத்து விடயங்களிலும் கலந்துகொண்டு சிறப்பிப்பார். உதாரணம்: அஜீவன் அண்ணா நடத்திய ஒரு போட்டியில் பரிசு வென்றுள்ளார். இவர் மென்மேலும் களத்தில் நிறைய ஆக்கங்களைப் பதிவு செய்யவேண்டும் என வாழ்த்துக்கள் கூறுவதோடு அனைத்து கள அங்கத்துவர்களுடனும் சேர்ந்து பாராட்டுகிறோம்.

<b>மணிமாறன்</b>
இவர் யாழ் களத்தின் புதிய அங்கத்துவர். அண்மையில் இணைந்துகொண்ட போதும் சிறப்பாகவும் பண்பாகவும் இதுவரை 24 கருத்துக்களை இங்கு பதித்துள்ளார். அறிவியலுக்கு சந்தேகம் கேட்பார். அரசியலுக்குள் அலசுவார். சமூகம் சார்ந்து தனது பக்க கருத்துக்களை நியாயமாக வைப்பார். மேலும் நிறையக் கருத்துக்களைப் பதித்து களத்தை மெருகூட்டி சிறப்படையுமாறு வாழ்த்துவதோடு அனைவரும் சேர்ந்து பாராட்டுகிறோம்.


பி.கு: நான் மட்டும் இதில் எழுத வேண்டுமென்றல்ல. நீங்களும் வந்து பெயர் குறிப்பிட்டுப் பாராட்டலாம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- vasisutha - 12-05-2003

நானும் ஷண்முகி மற்றும் மணிமாறன் இருவருக்கும் வாழ்த்துக்கள் சொல்கிறேன்.


- Paranee - 12-06-2003

அனைவருக்கும் வாழ்த்துக்கள்


- AJeevan - 12-06-2003

[size=18]இருவருக்கும் பணிவன்பான வாழ்த்துகள்.


06-12-2003 today - etbc - 12-06-2003




- Eezhaven - 01-31-2004

நான் இவர்களது அனைத்துப் படைப்புகளையும்
வாசித்ததில்லை... வாசித்த படைப்புகளில்
இவர்களது திறமைகளை உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. பாராட்டுக்கள்

என்றும் அன்புடன்
ஈழவன்

[b]சாதிக்க துணிந்த பின் யோசியாதே!


- tamilini - 02-11-2004

வணக்கம்
இங்கு வெளிவரும் ஆரோக்கியமான தகவல்கள்
வாசிப்பதற்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. பயனுள்ள தகவல்களை தருபவர்களுக்கு நன்றிகள்.


என்றும் அன்புடன்
தமிழினி
வணக்கம்


பாராட்டுகள் தேவகுரு - இளைஞன் - 04-09-2004

வணக்கம் மீண்டும் அனைவருக்கும்!
நீண்ட நாட்களாகக் களம் வரமுடியாததால் பல நல்ல அங்கத்துவர்களைப் பாராட்டமுடியாமல் போய்விட்டது. மற்றவர்களாவது எழுதியிருக்கலாம். சரி இன்று இன்னொருவர்:

<b>தேவகுரு</b>
யாழ் கருத்துக்களத்தின் கணினிப் பகுதியில் மிகவும் பிரபல்யமானவர். "குறுக்கு வழி" தேவகுரு என்று யாழ்களத்தில் அன்பாக மகுடம் சூடுகிறோம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> . மொத்தம் 50 கருத்துக்களை யாழ் கருத்துக்களத்தில் பதித்திருக்கிறார். இதுவரைக்கும் மொத்தம் 44 கணினி சார்ந்த குறுக்குவழிகளை இங்கு எமக்கு பயனுள்ளவகையில் தேர்ந்தெடுத்து அளித்திருக்கிறார். அந்தவகையில் அவரிற்கு எமது நன்றிகளும், பாராட்டுகளும். தொடர்ந்தும் எமக்கு பல்வேறு பயனுள்ள ஆக்கங்களைத் தரவேண்டுமென்று நட்புடன் கேட்டுக்கொள்கின்றோம். தொடர்க...


- shanmuhi - 04-09-2004

கணனிப்பகுதியில் பல பல குறுக்குவழிகளைத் தரும் தேவகுருவுக்கு மனமுவந்த பாராட்டுக்கள்


- vasisutha - 04-09-2004

எனது பாராட்டுகளும் தேவகுரு. மேலும் பல ஆக்கங்களை தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்


- Manithaasan - 04-09-2004

பாராட்டி மகிழ்கிறேன்


- ishwari - 04-09-2004

கணணிப்பகுதி எனக்கு மட்டுமல்ல பலருக்கும் மிகவும் பிடித்த பக்கம் என்று நினைக்கின்றேன். தங்கள் குறிப்புகளும் ஆக்கங்களும் தொடர்ந்தும் வர என் வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்


- yarl - 04-09-2004

இந் தொடர் முடிந்தபின் இதை ஒரு மின் புத்தகமாகவே வழங்கலாம்.

பாராட்டுக்கள்..

தொடர்ச்சியாக பலருக்கும் பயன்படும்வண்ணம் தங்கள் தொடர் அமைந்துள்ளது


- Mathan - 04-10-2004

பாராட்டுகள் தேவகுரு. தொடர்ந்து எழுதுங்கள்


- Paranee - 04-10-2004

பாராட்டுக்கள் தேவகுரு

அரிதான பல தகவல்களை அறியத்தந்ததற்கு கோடி நன்றிகள்

தொடருங்கள்


- Eelavan - 04-10-2004

பாராட்டுகள் தேவகுரு அவர்களே

உங்கள் சேவை எமக்குத் தேவை குறுக்கு வழி தேவகுரு என்பதை விட இலகுவழி தேவகுரு என்பதே பொருத்தமாக இருக்கும்


- பரஞ்சோதி - 07-19-2004

தேவ குரு அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்.


- வெண்ணிலா - 07-19-2004

<b>எல்லோருக்கும் சுட்டி வெண்ணிலாவின் அன்பான பாராட்டுக்கள்.</b>


<img src='http://www.discountballoons.com/images/betallic/10105%20Congrats%20Paper-l.jpg' border='0' alt='user posted image'>


தமிழினி - இளைஞன் - 07-20-2004

<b>தமிழினி</b>
10 ஆம் திகதி பெப்ரவரி மாதம் களத்தில் இணைந்ததிலிருந்து இன்றுவரை 713 பதிவுகளை எழுதியிருக்கிறார். "ரமிலினி" என்று செல்லமாக களநண்பர்களால் அழைக்கப்படுபவர். எழுதுவதும், பாடல்களும் தனது விருப்பங்கள் எனக் குறிப்பிட்டிருக்கும் இவர், களத்தில் அப்பப்பொழுது கவிதைகளையும் இணைத்துள்ளார். அதேபோல மற்றைய கள நண்பர்களின் ஆக்கங்களுக்குப் பதில் எழுதி ஊக்குவிப்பதிலும் முன்நிற்பவர். வலைப்பதிவு (http://www.tamilini.blogspot.com/) ஒன்றினை அமைத்து அங்கும் தனது எழுத்துக்களைப் பதித்து வருகிறார். நகைச்சுவை, பொதுஅறிவு, கவிதைகள், தொழில்நுட்பம் என்று முடிந்தளவு பங்கெடுத்துக்கொள்கிறார். "நான் வாழும் வரை வாழும் காதல் காவியம்..", எனக்கே எனக்காக.......! ஆகிய கவிதைகள் நம் களநண்பர்களின் பாராட்க்களைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்தும் நிறைய எழுதிட வாழ்த்துகிறோம். பாராட்டுக்கள் தமிழினி. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- tamilini - 07-20-2004

தீடிரெண்டு தமிழினி என்று தலைப்பை பார்த்தவுடன் பயந்து போனேன். என்னடா இது.. என்று..... பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி இளைஞன்.........! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->