Yarl Forum
வெளிநாடுகளில் தமிழர் வன்முறை குழுக்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: வெளிநாடுகளில் தமிழர் வன்முறை குழுக்கள் (/showthread.php?tid=7518)

Pages: 1 2 3


- adipadda_tamilan - 02-05-2004

மொத்தத்தில் லண்டனில் அடிதடி பண்ணும் யாவரையும் கழுத்தைப் பிடித்து நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் எனது ஆசையும். ஊரில் சும்மா திரிந்த காவலிகள் எல்லாம் வெளினாடு என்டு புரப்பட்டு இதைத்தான் செய்யுதுகள். இதற்கு முடிவு திருப்பி அனுப்புவதுதான். முழுத்தமிழனும் இதற்கு அந்தந்த நாட்டு பொலிசுக்கு உதவி செய்து இப்படியானவர்களை திருப்பி அனுப்ப வேண்டும். இலங்கைத் தழிழன் என்டா கள்ளன்கள்தான் எண்டுதான் இன்று வெள்ளையன் நினைக்கிறான்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுமாதிரி சில கொடாலிக்காம்புகளால் மொத்த இனத்துக்கே இழுக்கு.

இதெல்லாம் எந்த மூலையில் இருந்து வந்த சாமானுகளெண்டே விளங்குதில்ல.
இன்னுமொண்டு தெரியுமேஇ இதில சில பெண்டுகளும் சேர்ந்திருக்கினமாம்.. நாறுது எமது இனமே..
இந்த கள்ளரை திருப்பி அனுப்பப் படாது என்டு சிலர் வரிஞ்சு கட்டிக்கொண்டு திரியுதுகள். ஏன் என்டே விளன்குதில்ல.
கிட்டத்தில லண்டன் ஈலின்கில ஒரு மனிசன கொடாலியால வெட்டி கொண்டாங்கள். வெட்டுப்பட்டவன் என்ன செய்தானோ எப்படிப்பட்டவனோ தெரியாது. ஆனால் முழுச் சனங்களும் தமிழனை இப்படிப்பட்ட கூட்டமா இது என்டு நினைத்தது உன்மை.


- Mathan - 02-05-2004

[quote=adipadda_tamilan]மொத்தத்தில் லண்டனில் அடிதடி பண்ணும் யாவரையும் கழுத்தைப் பிடித்து நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் எனது ஆசையும். ஊரில் சும்மா திரிந்த காவலிகள் எல்லாம் வெளினாடு என்டு புரப்பட்டு இதைத்தான் செய்யுதுகள். இதற்கு முடிவு திருப்பி அனுப்புவதுதான். முழுத்தமிழனும் இதற்கு அந்தந்த நாட்டு பொலிசுக்கு உதவி செய்து இப்படியானவர்களை திருப்பி அனுப்ப வேண்டும். இலங்கைத் தழிழன் என்டா கள்ளன்கள்தான் எண்டுதான் இன்று வெள்ளையன் நினைக்கிறான்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுமாதிரி சில கொடாலிக்காம்புகளால் மொத்த இனத்துக்கே இழுக்கு.

இதெல்லாம் எந்த மூலையில் இருந்து வந்த சாமானுகளெண்டே விளங்குதில்ல.
இன்னுமொண்டு தெரியுமேஇ இதில சில பெண்டுகளும் சேர்ந்திருக்கினமாம்.. நாறுது எமது இனமே..
இந்த கள்ளரை திருப்பி அனுப்பப் படாது என்டு சிலர் வரிஞ்சு கட்டிக்கொண்டு திரியுதுகள். ஏன் என்டே விளன்குதில்ல.

அத தான் நானும் சொல்றன். ஏன் சப்போட் பண்றான்க்கன்னு என்க்கும் புரியல்ல


- Mathan - 02-05-2004

Rajan Wrote:ஏன் இவர்கள் இப்படி செயல்படுகிரார்கள்?இன்று 14மணிக்கு யாழ் இனையகத்துடன் நேரடிகலந்துரையாடல் நட உள்ளது

லண்டன் டைம்மா? உங்க நடந்து முடிஞ்சிருச்சா? என்ன நடந்துச்சு?


- Rajan - 02-06-2004

மன்னிக்க வேண்டும் பிபிசி நண்பரே எற்பாடு செய்தது உண்மை ஆனால் எனது சில காரணங்களால் தவிர்த்து விட்டேன் ஆனால் பயம் இல்லை அவர்கலும் மனிதர்கள்யாவார்கள் என நினைக்கிறேன்


- Rajan - 02-06-2004

நாடு கடத்தவேண்டும் என்று சொன்ihல் ஒட்டு மொத்தமாக இலங்கை தமிழ்களை நாடு கடத்த வேண்டும்


- Rajan - 02-06-2004

காவாலி என்டால் எனன ? ரி.னெய் எங்கள் வேலி விளப்பிடாது என்று நினைபது தான் எமது சமுதாயம் மற்றவர் வேலி எமக்கு பிரச்சனயில்லை மன்ணிக்கவும் ஆனல்


- adipadda_tamilan - 02-06-2004

காவாலி எண்டால் இப்பிடி கண்ட கண்ட களவுகளையும் வேறு ஏதாவது சமூதாயச் சீர்கேடுகளையும் செய்து கொண்டு திரியிறதுகளைத்தான் சொல்லுறன். :roll:


- Mathan - 02-06-2004

Rajan Wrote:நாடு கடத்தவேண்டும் என்று சொன்ihல் ஒட்டு மொத்தமாக இலங்கை தமிழ்களை நாடு கடத்த வேண்டும்


ஆ???? எல்லா தமிழனும் கள்ளன்னு வெள்ளக்காரன் சொல்ர மாதி சொல்றீங்க?

ஏன்ன அப்பிடி சொல்றீங்க பொஸ்


- adipadda_tamilan - 02-06-2004

ராஐன்,
ஊரில இருந்து ஆமியால பிரச்சினைப் பட்டு வந்த உறவுகள் நிறைய லண்டனில் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் பிரச்சினையால் ஊரில் இருக்க முடியாது எண்டு வந்து ஏதோ மிச்சக் காலத்தை இங்கயாவது பிரச்சினை இல்லமல் கழிப்போம் என்று வந்தவியள். அப்படி இங்கு வந்தவர்கள் - அனேகமானவர்கள் ஒழுங்காக தாமும் தம் வேலையும் என வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதேனெரம் இங்கு களவு செய்து கொண்டு திரியிறதுகளும் நாட்டுப் பிரச்சினையால் தான் வந்தவர்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறென். பிரச்சினையால் நாட்டை விட்டு வந்த நமக்கு ஏன் இந்த எழிய புத்தி - ஏன் எங்கட இனத்தைப் பற்றி மற்றவர்களை கதைக்க வைப்பான். இது தேவையா எமக்கு - இதனால்தான் சொல்லுகிறேன் இவர்களை கட்டாயம் திருப்பி அனுப்ப வேண்டும் என.
முழுத்தமிழனும் கள்ளன் இல்லை. எமது சனம் நிறைய ஒழுங்காக வாழுதுகள்.
உங்களது முடிவைப் பார்த்தால் முழுத்தமிழனும் கள்ளன் என்று கூறுவீர்கள்போல் உள்ளது.


- Mathan - 02-06-2004

adipadda_tamilan Wrote:ராஐன்,
ஊரில இருந்து ஆமியால பிரச்சினைப் பட்டு வந்த உறவுகள் நிறைய லண்டனில் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் பிரச்சினையால் ஊரில் இருக்க முடியாது எண்டு வந்து ஏதோ மிச்சக் காலத்தை இங்கயாவது பிரச்சினை இல்லமல் கழிப்போம் என்று வந்தவியள். அப்படி இங்கு வந்தவர்கள் - அனேகமானவர்கள் ஒழுங்காக தாமும் தம் வேலையும் என வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதேனெரம் இங்கு களவு செய்து கொண்டு திரியிறதுகளும் நாட்டுப் பிரச்சினையால் தான் வந்தவர்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறென். பிரச்சினையால் நாட்டை விட்டு வந்த நமக்கு ஏன் இந்த எழிய புத்தி - ஏன் எங்கட இனத்தைப் பற்றி மற்றவர்களை கதைக்க வைப்பான். இது தேவையா எமக்கு - இதனால்தான் சொல்லுகிறேன் இவர்களை கட்டாயம் திருப்பி அனுப்ப வேண்டும் என.
முழுத்தமிழனும் கள்ளன் இல்லை. எமது சனம் நிறைய ஒழுங்காக வாழுதுகள்.
உங்களது முடிவைப் பார்த்தால் முழுத்தமிழனும் கள்ளன் என்று கூறுவீர்கள்போல் உள்ளது.

ரொம்ப சரி பொஸ்


- aathipan - 02-07-2004

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் நினைத்துவிட்டால்...

இவர்களை ஈழத்திற்கு அனுப்பினால் அங்கு போராட்டம் பாதிக்கப்படலாம். இவர்கள் அங்கு போய் காட்டிக்கொடுப்பு பொன்று நடவடிக்கைளில் ஈடுபடுவார்கள். இவர்களை மேய்பதே போராளிகளுக்கு பெரியவேலையாகிவிடும். இவர்களை அந்தந்த நாட்டு சிறையிலேயே அடைத்துவிடலாம். இந்தியவிலும் இதே நிலைதான். எமக்கு முன் நல்ல மரியாதை இருந்தது. இப்போது அது அடிபட்டுப்போனது. கடந்தமாதம் பொலிசில் நற்சான்றிதழ் வாங்க மிகவும் சிரமப்பட்டேன். இன்டெலிஜன்ட் பொலிசைவைத்து என் முழு PPஜாதகத்தையும் அறிந்தபிறகுதான் கொடுத்தார்கள். எல்லாவற்றிற்க்கும் காரணம் இவர்கள் செய்யும் திருக்கூத்துத்தான்.


- vasisutha - 02-08-2004

8) 8)


- mohamed - 02-10-2004

நம் தமிழினம் அன்று முதல் இன்று வரை செய்த ஒரு விடயம், அடுத்தவன் மீது பழி சுமத்துவது. ஒரு தப்பை செய்தவன் அதை ஏன் செய்கிறான், எதனால் செய்கிறான் என்பதை விடுத்து அதற்கு மருந்து தேடுவது எந்தவிதத்திலும் ஒரு சரியான முடிவாகாது. தப்பு செய்யும் இந்த இளைஞர்கள் வயதில் இளையவர்கள். இந்த இளைஙர்களுக்கு சரியான ஒரு வழிகாட்டல் இல்லாதமையே இன்றைய இந்த வன்முறை குழுக்களக்கு காரணம். இதை நான் சொல்லவில்லை இந்த இளைஞர் குழுக்களின் போக்குகளை ஆராய்ந்த வல்லுனர்கள் சொல்கிறார்கள். இந்த கழுக்கள் தமிழ் மக்கள் மத்தில் மட்டுமில்லை. ஏனைய இனங்களும் வந்தித்த ஒன்றே, ஆனால் மற்றவர்கள் அதனை இனம் கண்டு அதற்கு தக்க வேலைத்திட்டத்தை அமைத்துக் கொடுத்தனர். ஆனால் நமது சமூகம் என்ன செய்தது. ஊருக்கு ஊர் கோயில், ஊர்ச்சங்கம், பள்ளிக்கூட சங்கம், இப்படி தமது தேவைகளை பூர்தி செய்யும் அமைப்புகளை உருவாக்கினார்களே ஒளிய இந்த இளைஞர்களை வழிமுறைப்படுத்தும் வகையில் யாராவது வேலைத்திட்டத்தை வைத்தார்களா? வன்முறையில் ஈடுபடும் இந்த இளைஞர்களை இதற்குள் அறிமுகப்படுத்தியவர்கள் நாமே, ஊர் சண்டையை இங்கு கொண்டு வந்தவர்கள் இந்த அப்பாவி இiளுஞர்கள் அல்ல அவர்களது பெற்றோர், அல்லது அவர்களது உறவினர்களே, தாம் செய்ய முடியா டீபான காலத்தல் அதை தமது சந்ததியை வைத்து செய்வது. அண்மையில் நடைபெற்ற ஒரு சண்டை, ஊர்ச்ச சண்டை, அதில் ஈடுபட்ட பலருக்கு அந்த ஊரின் நிறமே தெரியாது,. பிரதேச வாதத்தை கட்டியெழுப்பிய நாமே, சாதியம், சமயத்தின் பெயரால் வன்முறை வழர்த்ததும் நாமே, தெரிந்தே தெரியாமலே வன்முறையை நமது போராட்டம் இவர்களுக்கு அறிகப்படுத்திவைத்தது. விளைவு வெட்டு, குத்து, கொலை. வன்முறையை நாம் என்று போராட்ட வடிவமாக எடுத்தோமோ அன்றே இந்த அபாயமும் வந்து விட்டது. இது புலம் பெயர் நாட்டில் வர நமது போராட்டம் காராணமாக இல்லாது போனாலும், அதை கொண்டு வந்து அறிமுகப்படுத்தியவரகள் பலர் முன்னை நாள் போராளிகள். எனவே இந்த இளைஞர்களின் இன்றைய நிலைக்கு பொறுப்பெடுக்கவேண்டியது புல் பெயர் தமிழ் சமூகவே ஒளிய இந்த இளைஙர்கள் மட்டுமல்ல. கறுப்பு இனத்தவர்கள் இன்று உதைபந்தாட்டத்தை ஒரு திருப்புமுனையாக பாவிக்கிறார்கள் அத்துட்ன ஏனைய விழையாட்டுக்களை தமது பொழுதபோக்காக மாற்றி தமது கவனத்தை திருப்புகிறாரகள். ஆசியர்கள் கூட இன்று விளையாட்டு, கலை போன்றவற்றில் கவனத்தை திருப்புகிறார்கள். ஆனால் இதற்கு முன்நின்று இந்த இளைஞர்களை வழி நடத்துவது சமய மற்றும் கலாச்சார அமைப்புகள், ஆனால் தமிழ் சமுதாயத்தில் நிலைமை மாறி நடை பெறுகிறது. இளம் சந்ததியை வழி நடத்த வேண்டிய அமைப்புகள் கண் மூடி நிற்கிறது அல்லது வன்முறையை து}ண்டி விடுகிறது. தயவுசெய்து இந்த இளைஞர்களை பரிதாபத்துடன் நோக்கங்கள். இவர்கள் நமது எதிர்கால சந்ததி. இவர்களை வழி நடத்த யாரும் இல்லாத ஒர தவறை விட்ட நாம் தான் வெட்கி தலை குனிய வேண்டியவர்கள். குற்றம் கூறுவதை விடுத்து நாம் அனைவரும் இதை அனுதாபக் கண்ணோட்டத்துட்ன பார்த்து உதவி செய்ய வேண்டும். இல்லை தமிழ் சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியான ஒன்றாகவே இருக்கும்.


- Rajan - 02-10-2004

முகமட் 300?????????குறான்னில் இருக்கும்300பக்கத்தை படிக்க மறக்கவேண்டாம் நாழைக்கு புதன்


- Paranee - 02-10-2004

நாழைக்கு புதன் சரி
நாளைக்கு என்ன ???


- Paranee - 02-10-2004

கருத்து இருதடவை ஏற்பட்டு விட்டது


- Mathivathanan - 02-10-2004

Rajan Wrote:முகமட் 300????????? குறான்னில் இருக்கும் 300 பக்கத்தை படிக்க மறக்கவேண்டாம் நாழைக்கு புதன்
Karavai Paranee Wrote:நாழைக்கு புதன் சரி
நாளைக்கு என்ன ???
இந்த மொடரேற்றர் ஒரு சிலருக்குத்தான் இப்படியான கேள்விகள் வைப்பார்.. அதைப்பற்றி நீங்கள் கவலைப்படக்கூடாது.. தொடருங்கோ..
Idea Idea Idea


- mohamed - 02-10-2004

ம் பெருமூச்செறிவதை தவிர வேறு என்ன செய்யலாம்? செய்தாலும் கற்றம், செய்யா விட்டாலும் குற்றம். நடுவில் ஒருபோதும் அகப்படக் கூடாது.. அனால் மனதில் ஒரு திருப்தி.. இந்த உலகம் உண்மையை உணரும் நாளில் நன்மைகள் மறைந்து பேய்விடும்!!! அவ்வளவே..


- pepsi - 02-12-2004

இலங்கை தமிழன்னு சொன்னா லன்டன் சனங்க பயந்துக்குவாங்களாமே உண்மையா?


- mohamed - 02-12-2004

இலங்கை தமிழன் சண்டித்தனம் எல்லாம் அப்பாவி தமிழ் மகனுடன்தான். நான் கண்ணால் ஒரு தடைவை கண்ட உண்மை. ஒரு தமிழன் சில வெள்ளை இனத்தால் ஒரு சினிமா கொட்டகையில் வைத்து தாக்கப்பட்;டபோது யாரும் உதவ முன்வரவில்லை. ஆனால் அந்த இடத்தில் நின்ற சிலர் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் ஒரு அப்பாவி தமிழ் இளைஞனை கலைத்து கலைத்து வெட்டியவர்கள். இவர்கள் ஒரு கூட்டமாக இருந்தாலும் வெள்ளையினத்தவருடன் ஏனே கொழுவுவது குறைவு. காரணம் யான் அறியேன்.