![]() |
|
கவியரங்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: கவியரங்கம் (/showthread.php?tid=7454) Pages:
1
2
|
- கெளஷிகன் - 02-24-2004 பாரதி கண்ட புதுமைப்பெண் காணத் துடிக்கிறாயா? வா என் தேசத்துக்கு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! அங்கே புது மணப்பெண்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் என்று நீ எண்ணிக்கொண்டிருக்கிறாய் ஆனால்!!!!!!!!!!!!!!!!!!!!!1 புயலாகிப் போர் செய்த புதுமைப்பெண்களும் அங்குதான் இருக்கிறார்கள் - Eelavan - 02-24-2004 sOliyAn Wrote:உன் ஊடலிலும் கூடலிலும்தானே முத்தமிட்டேன், குத்துதென்று சிணுங்கினாள். என்னை விட்டுப் போனபின்னும்! வளர்க்கின்றேன், அவள் நினைவாக. - kuruvikal - 02-24-2004 வசிச்சாமி கேட்கிறார் விடை சொல்லவேணாமோ...?! சாமிக்கு ஆர்வக்கோளாறு அதிகம் அதில சிந்தையும் கோணம் மாறிப்போகுது...! ஆண் அடக்கிறதா பாத்தா ஆண் பிசாசாத்தான் தெரிவான் பள்ளி ஆசான் நல்லதுக்காய் சொல்வது நமக்குப் பிடிக்கல்லை என்றால் அவர் எம் எதிரியாவார்....! இதுதான் இயற்கை....! ஆண் ஆணாய் இன்றி மனிதனாய் சக மனிசியை வழி நடத்தினான் விலங்கு போடவல்ல விலங்கில் இருந்து குணத்தால் விலகி இருக்க....! இல்லை... நான் யதார்த்தம் புரியாமல் போலித்தனம் காட்டி போடாத விலங்குடைத்து விலகி நின்று விலங்காவேன் என்றால் அதற்காய் எதிர்த்து நாம் மாரடிக்க முடியுமா....?! எனி உங்கள் விருப்பம் எனி மனித விலங்கோடு போராடிப்பாருங்கள் தக்கன பிழைக்கும் வரை மனிதர் எமக்கு நிம்மதியே.....! தாலி என்ன வேலி...?! வேலி போட்டால் சிறை என்பர்...! தாலி ஒரு புனிதம் ஆணின் அன்புப் பரிசு பெண்ணே உன் கழுத்தில்-அது மின்னும் ஒவ்வோர் கணமும் உன்னவன் அன்பும் பாசமும் உன்னுள் ஊற்றெடுக்க வேணும் அன்றில் நீ அவன்பால் அன்பில்லா சடம் என்றே பொருளாகி நிற்கும்....! நாளில் கருகும் ரோஜாவும் கசங்கிப் போகும் சேலையும காற்றில் கலந்து கலையும் பேச்சும் நொடியோடு நொருங்கும் அணைப்பும் முத்தமும் இப்படியும் இன்னமும் உணர்சிகளின் விளையாட்டெல்லாம் போலியே...நீரரும்பிடு குமிழ்தானே....! சபை நடுவே ஊரறிய ஆண் தரும் அன்புப் பரிசு தாலியே...! அன்பின் கருத்துணர்த்தும் புனிதம் அது ஒன்றுமே...! பாவம் ஆண் உன் அன்புப் பரிசு தேடியும் இன்றுவரை சபையறிய நீ கொடுப்பதாய் இல்லை மாறாய் வேலி என்று அவன் அன்பை குப்பையில் போட விளைகிறாய் அன்பில்லா வாழ்க்கை மனிதருக்கல்ல எந்த உயிருக்கும் சொந்தமில்லையடி பேதைப் பெண்ணே....! அன்பு கொள் கொள்ளும் அன்பு நிலையென்று நீயறிந்தால் முத்தமும் பின்வரும் வலியும் வலி தரும் சுகமும் நீயும் தனித்திருக்க வேண்டியதில்லை....! ஆணும் பெண்ணும் இணைந்தே இது உணர வேண்டும்....! நாம் மனிதர் சமூக விலங்குகள்....! இதுதான் நம் அடிப்படை....! வேறொன்றும் இல்லை மற்றெல்லாம் போலியே....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- shanmuhi - 02-24-2004 சாத்திரியாரிடம் சாத்திரத்தைக் காட்ட வெளிநாட்டு பயணத்துக்கு யோகம் என்றே சாத்திரியாரும் சாதகமாய்; மொழி பகர்ந்திட வெளிநாட்டு மாப்பிள்ளை பட்டியலில் வரன் பார்த்து நடந்தேறியதோர் தாய் நாட்டில் ஓர் ஒப்பந்தம் வெளிநாடு என்றாலே சொர்க்கபுரியாம் சொன்னார்கள் சொன்னார்கள் சொல்ல வேண்டியதை சொல்லாமல் எல்லாவற்றையும் சொன்னார்கள் இங்கு வந்த பின்தான் உணர்ந்தேன் சுதந்திரம் என்றால் என்ன என்று திருமணமே ஓர் போர்க்களமானதே..! அறிமுகமில்லா ஒருவரோடு திருமணம் சுமக்கும் தாலியினை கழற்றினால் பாவமாம் சாகும் வரை தொங்க விட்டார்கள் பெண்களின் கழுத்திலே தூக்குக்கயிராக…. - sOliyAn - 02-24-2004 வெளிநாட்டைப்பற்றி அறியவும் ஆர்வமில்லை சுதந்திரம்பற்றியும் புரியவும் மனதில்லை தாலியைப்பற்றியும் விளங்கவும் அறிவில்லை 'ஆசை' ஒன்றாலே மோசம் போனதென்ன?! பகுத்தறிவும் சிந்தனையும் மானுடத்தின் சொத்தென்று தகுந்தோர்கள் சொன்னார்கள் அதுதான் மழுங்கியதோ? நுகத்தடியில் கழுத்தோட்டி சுருக்கினிலே விழுந்திட்ட அறிவற்ற மானுடரே! தங்களையே திருத்திடுங்கள்!! - kuruvikal - 02-24-2004 வெளிநாட்டு மோகம் கண்ணை மறைக்க சிந்தை கலங்கி எடுத்தீர் முடிவு...! அப்போ... எங்கே போனது உங்கள் சுயபுத்தி....?! விடுதலை வேட்கை பேசினால் போதாது சதி வலை எங்கும் உண்டு அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது...! நிதானம் எங்கும் வேண்டும் வலைகண்டு ஒதுங்குதல் வலிமை....! வீழுதல் பலவீனம்....! அதுதான் சொன்னோமே ஆளறிந்து அன்பு கொள் அன்பு நிலையென்று நீயறிந்தால் வாங்கு அவன் அன்புப் பரிசு அன்றில் அது தூக்குக் கயிரானாலும் ஆச்சரியமில்லை...! அது உன் தவறு பெண்ணே அவசரத்தில் நீ இழந்த நிதானத்தின் பயன்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
- Paranee - 02-24-2004 அன்பு கண்டு அடங்கிப்போ அன்பால் உன்னை அடக்கிப்போ தாலி என்றும் கழுத்தை நெரிப்பதில்லை நெரிக்கும் கயிறு தாலியாய் அமைவதில்லை பணத்திற்காக சொந்த சுகத்திற்காக கௌரவத்திற்காய் கொண்ட தன்னலத்திற்காய் முகமறியாதவன் கரம் பிடித்தால் முகவரியே தொலைந்துபோகும். தாய் நாட்டின் சிறகடித்த இறக்கைகளை புலம்பெயர்ந்து நறுக்கும் கூட்டம் பாரினுள் பலகோடி உண்டு அன்பு கொள் அன்பை கொள் மனதோடு சேர் உன்னை மணத்தோடு சேர் சீர் கொடுத்து வாங்காதே சீருடன் வாங்கப்பார் பெண் என்றால் என்ன கடைப்பொருளா ? உனக்கு கிடைக்கும் அதிகாரம் உனக்கு கிடைக்கும் சுதந்திரம் உனக்கு கிடைக்கும் எல்லாமே அவளிற்கும் பங்குண்டு ஆயதம் து}க்கிய தலைவன்தான் ஆணிற்கு சமன் பெண் என்றான் ஆள்பவன் அவனே ஆமாதித்தபின் அடங்க நீயும் மறுப்பதேனோ பெண்ணடிமை விலங்கொடிக்க கரம் கொடு அன்றேல் விலகி நில் தாலி என்னும் வேலிகொண்டு தாழ்வாக்காதே கழுத்தை உறுத்துவதாய் நீயும் கயிறு போடாதே அவள் மனதில் உதிக்க நீ மனிதனாய் வாழப்பார் - kuruvikal - 02-24-2004 தலைவன் தந்த சொத்தென்று நஞ்சு மாலை கொண்டீர் அவன் வழிகாத்து நின்று போராட்ட இலட்சியம் எட்ட...! அங்கு ஆணென்றும் பெண்ணென்றும் வேறுபாடு காட்டி நின்றீரோ....! இல்லை... நாம் பெண்டிர் சமத்துவத்துக்கு எமக்கும் ஒரு தனித்தலைமை அன்றில் நஞ்சுமாலை அணியோம்-என்று அடம்பிடித்திருந்தால் போராட்டம் தானும் நெறிப்பட்டிருக்குமோ....?! இங்கோ..... ஆண் தலைவனாக பெண் தலைவியாக வாழ்க்கைப் போராட்டம் வழிநடத்தப்பட்டு வாழ்வில் வெற்றி வாகை சூட ஆண் தரும் அன்புக் கயிறு பற்ற மறுப்பதேனோ....???! வேறுபாடும் வெறுப்புணர்வும் காட்டி நிற்பதேனோ...! இயற்கை தந்த சுதந்திரம் ஆணுக்கும் பெண்ணிற்கும் சமன்...! அப்படி இருக்க... ஆண் ஏன் பறிக்கிறான் அவன் தலைவி உரிமை....! அது கொண்டு அவன் சாதிப்பது என்ன...?! பெண்கள் நீவிர் உம் உரிமையறியா வாழும் நிலை எனியும் வேண்டாம்...! உமதுரிமைகள் ஆணிடமில்லை அவை கட்டின்றி சுதந்திரமாய்த்தான் உளது...! குருட்டுத்தனமாய் சுதந்திரம் என்று ஏதேதோ கொண்டு சீரழியாதீர்...! தகுதி கண்டோர் வழிகாட்டுதல் கொண்டு இருந்தும் எடுக்குத்தவறியதை தலைவன் வெறுப்பின்றி பெற்று சீருடன் வாழ முனையுங்கள்...! எனியாவது.... சிந்தித்து வாழ்வீர் சீருடனே....! பகைமை கொண்டு வாழ்வே சீரழிய வேண்டாம்...! வாழ்வு வாழ்வதற்கே அன்றி வாடுவதற்கல்ல....! ஒன்று கொள்ளும் நெஞ்சில் எதுவும் நிலையில்லை இப்பாரினில் உடல் கொண்ட ஆன்மா நிலை மாறும் வரை....! அதுவரை வாழ்ந்திடும் வேண்டாத வருத்தங்கள் இன்றி ஒழுக்கம் என்ற உயர் நெறி காத்து மனிதராய்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Eelavan - 02-25-2004 பெண்களை போகப் பொருளாக்கி மோக வலை வீசியவர் செப்பும் மொழி கேட்டு அவரிடம் காரிருக்காம் காலில் தூசிபடா வேலையாம் சீதனமும் வேண்டாமாம் சீதையாயிருந்தால் போதுமாம் என்றெல்லாம் சொல்லிப் போனவரே அடுத்த வீட்டில் பிறந்த நாள் முதல் உங்களுக்காக வாழும் மச்சானை மறந்தீரே - kuruvikal - 02-25-2004 மச்சான் மச்சாள் உறவெல்லாம் பிறப்புரிமை வியாதி கொண்டு தொந்தரவு தருமென்று ஆரோ சொல்ல என்னருமை மச்சானின் வாழ்வு செழித்திடவே நானும் அப்படி ஓர் முடிவெடுத்தேன் மச்சான்...! கனவில் வாழ்வமைத்து நான் மகிழ்ந்திருக்க வந்த வெளிநாட்டுக் கண்ணாளன் கொண்டவன் ஆனாலும் குடியும் கும்மாளமும் பியரும் சிகரட்டும் பப்பும் வெள்ளையும் கறுப்புமென்று தோழிகளோடு சுத்துறான் கேட்டா சீறுறான்...! நரகத்தில் நகருது என் வாழ்க்கை இப்ப தான் புரியுது வியாதிக்கு பயந்து விட்டுவந்த மச்சானின் அருமை....! தோழியரே வெளிநாட்டில் வாழ்வமைக்க முதல் ஒன்றுக்கு நாலுதடவை சிந்தித்து முடிவெடும்....! கொண்டபின் வருந்திப் பலனில்லை....! விடுதலை அது இது என்று புலம்பினாலும் வாழ்வது நாமாச்சே...! யதார்த்தம் புரிந்து நில்லும்...! இறுதியில் மச்சானுக்கு..... இது வரைகாளும் உனக்கொரு கடிதம் போடவில்லை...! காரணம் என் கதை கேட்டால் உன் இரத்தம் கொதித்திடும் என்று..! இப்போ நீயும் ஒரு பிள்ளைக்கு அப்பா அதனால்தான் சொல்லுறன்....! எனக்காய் அழுவதோடு நிறுத்திக் கொள் ஆத்திரப்படாதே....! என்விதி என்னோடு போகட்டும்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கெளஷிகன் - 02-28-2004 இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை - Eelavan - 02-28-2004 அன்பான மச்சாளே... எனதருமை கண்மணியே. ஊரான ஊரிருக்க உறவாக நானிருக்க பேர் மட்டும் அறிந்தவனை பெரிதெனவே போனாயோ! ஊருக்கென்ன தெரியும், உன்னோட அருமை பற்றி. பேர் வைத்த நாள்முதலாய், பேச்சுத் துணையானாய். அடி வைத்த நாள் முதலாய் அருகிருக்கும் தாயானாய். ஊருக்கென்ன தெரியும் உன்னை நான் சுமந்த உப்பு மூட்டை பற்றி. தோளில் சுமக்கையிலே மனதில் குடி வந்தவளே.... பேரு வைத்த பெற்றவர் தான் பிரிக்கச் சதி செய்தாரோ. கைபிடித்து நீ நடக்க, நினைவெல்லாம் வழி மீது. முள்ளுத் தைத்திடுமோ... முரட்டுக் கல்லடித்திடுமோ... மனசெல்லாம் பயம் வழிய வருவேனே உன் மச்சான். ஊரு சொன்ன பொல்லாப்போ... ஊற்றவனை மறந்ததுவோ... ஏது இருந்தாளும் என்னை நீயும் மறந்ததேனோ? ஒரு வரி எழுதியிருந்தால் ஒற்றையிலே நின்றிருப்பேன். - Paranee - 02-28-2004 எக்கரை நோக்கினும் அக்கரை பச்சையே (எங்கேயேனும் பாலைவனப்பக்கம்தான் போய் நிற்கவேணும்) - kuruvikal - 02-28-2004 மச்சான் உனக்கென்ன பித்தா...?! சின்னதில் செய்ததுகள் சென்னி விளங்கியா செய்தது...! நானும் பருவமாகி குமரியான பின் உன்னோடு காதல் என்று கனவு கண்டதும் இல்லை கல்யாணம் என்று கதை பறையவும் இல்லை...! இப்ப எல்லாம் மாறிப்போச்சு நானும் மாற்றானின் தாலி கொண்டு வாழ்க்கைப்பட்டாயிற்று...! வாழ்வில் கசப்பும் இன்னிப்பும் என்னோடென்றாயிற்று...! நீயும் தாலி தந்து இன்னொருத்தி சொத்தாயிற்று...! இப்ப நான் சொன்ன என் சங்கதி நாளை உன் தங்கைக்கு என் கதி வேண்டாம் என்பதற்காய்...! சென்னி தெளிந்து உன் சமுதாயம் சொல்லிவை நாம் படும் வேதனை இங்கு..! அது போதும் நீ என் மீது கொண்ட பாசத்திற்கு....! அக்கரைக்கு இக்கரை பச்சை என்போரே....! வந்து ஒருக்கா நேரில் தரிசித்தால் தெரியும் எங்கரையில் பசுமை அதிகம் என்று....! வேம்படியில் படிச்சவளும் சுண்டுக்குளியில் சுத்தியவளும் இந்து மகளிர் இருந்து வந்தவளும் கொழும்பென்றால் இராமநாதன் மகளிரும் கொன்வென்றுக் கெட்டிக்காரியும் பிள்ளை பெற்று வண்டில் தள்ளும் வேலையாட்களாய் லண்டன் வீதியில்....! (ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன் மேற்கில் இதுதான் நம்ம பலரின் கதி....) ஒரு காலை வேளை நடை பயின்று பாரும்....! விடுதலை வேட்கை கொண்டவள் இங்கோ வீட்டுக்கு வேலைக்காரி...! வெள்ளைக்காரி வராள் வேலைக்காரியாய் அதுதான் நாம் இங்கே இறக்குமதிப் பொருளாய்....! எப்படிச் செப்புவேன் உம் சென்னி தெளிய நீர் தெளியும் போது நான் நானாய் இரேன்....! :roll: :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- shanmuhi - 05-18-2004 கண்களால் என்னை காதல் வலையில் கைது செய்த கள்வன் அவன் கடவுள் சாட்சியாய் கடைசிவரை கைவிடேன் என்றே சத்தயம் செய்தே சத்தியயத்தை கைவிட்டுப் போன இரக்கமற்ற இதயமா உனக்கு மனதில் உறுதியில்லாமல் மங்கை மீது மோகம் கொண்டு மரம் விட்டு மரம் தாவும் மந்தியாய் மனமுடைய உனக்கு வேண்டாம் இந்த மணவாழ்க்கை காலம் பல கடந்தாலும் காதலை மறக்க முடியா நினைவுடனே பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தும் கண்ணீர்த்துளிகளின் சமர்ப்பனம் |