![]() |
|
பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்... (/showthread.php?tid=7447) |
- Mathan - 02-23-2004 kuruvikal Wrote:அது அவங்கதான் சொல்ல வேணும்....அதுக்கு முதல் ஒரு கேள்வி பெண் விடுதலை என்றால் என்ன....?! பெண்விடுதலை என்பது, - சமஉரிமை, வேலை நேரம், சம்பளம், தொழில் வாய்ப்பில் பாரபட்சமின்மை........இவைகளில் தொடங்கி சமையலறை, படுக்கையறை, மனஉணர்வுகள் வரையிலான அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விடயம் நன்றி சந்திரவதனா - kuruvikal - 02-23-2004 இதன் அடிப்படையில் பார்த்தால் ஆண் விடுதலை..... சம உரிமை... சமையல் அறை உரிமை... படுக்கை அறை உரிமை...சாமியறை உரிமை...வரவேற்பு மட்டப உரிமை... வேலை நேரத்தில பிரசவ விடுமுறைக்கு சமனான உரிமை... தொலைக்காட்சி போடுற உரிமை....தாதி... ஆசிரியர்... வரவேற்பாளர்... அந்தரங்கச் செயலாளர் இப்படிப் பலபதவிகள் ஆண்களுக்கு முயற்கொம்பா எல்லோ கிடக்கு......அதுமட்டுமல்லாம மாதாமாதம் உடலில் ஏற்படும் ஓமோன் சுரப்புக்களால் பெண்களின் மனக்கொதிப்பில் ஏற்படும் மாற்றம் அதனால் ஆண்கள் வாங்கும் திட்டுகள் தீர்ப்புக்கள் அதையே திருப்பிக் கொடுக்க முடியாத நிலை....இப்படி இஸ்தியாதி இஸ்தியாதி....என்று ஆண்கள் சம உரிமைய இழந்தெல்லோ நிக்கினம்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 02-23-2004 மார்ச் 8ந் திகதி சர்வதேசப் பெண்கள் தினமாகக் அனுஷ்டிக்கப் பட்டு சம உரிமைகளுக்கான பெண்களது போராட்டம் தொடர்கிறது. *************************************************************************** இருந்தும் என்ன?????. இத்தனை வருடங்கள் போயும்; என்ன ?????. கொம்பியூட்டர் யுகம் வந்துமென்ன?????. ஆணாதிக்கப் பண்பாட்டில் பெண் என்பவள் ஆணின் உடைமை என்பது மறுக்கப் பட்டு விட்டதா? இல்லையே ! பெண் என்பவள் உற்பத்தி மெசின் என்பது மறுக்கபப்பட்டு விட்டதா? இல்லையே! இப்படி இன்னும் எத்தனை இல்லைகள். இந்தப் பெண் என்பவள் தனக்கே தான் சொந்தமாக இருக்கிறாளா? அது கூட இல்லையே“ அவள் எதை உடுக்க வேண்டும் , எப்படி வாழ வேண்டும், எப்படிச் சிரிக்க வேண்டும், எதைப் படிக்க வேண்டும், யாருடைய குழந்தையை எந்த முறையில் தனக்குள் சுமக்க வேண்டும்-----! இவையெல்லாமே மற்றவர்களால்தான் தீர்மானிக்கப் படுகின்றன. அது மட்டுமன்றி இவைகளெல்லாம் மற்றவர்களுடைய சர்ச்சச்சைக்குரிய விடயங்களாகவுமே கருதவும்; படுகின்றன. பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்று ஆங்காங்கு கூக்குரல்கள் கேட்கிறதுதான். ஆனாலும் இன்னும் முழுமையான விடுதலை கிடைக்கவில்லை. எமது பெண்களில் அனேகமானோர் நினைக்கிறார்கள் வேலைக்குப் போகவும் சொப்பிங் செய்யவும் கணவனிடமிருந்து அநுமதி கிடைத்து விட்டால் அதுதான் பெண் விடுதலை என்று. இந்த அறியாமை மாற வேண்டும். பெண் விடுதலை என்பதன் பொருளை இவர்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். பெண்விடுதலை என்பது, - சமஉரிமை, வேலை நேரம், சம்பளம், தொழில் வாய்ப்பில் பாரபட்சமின்மை........இவைகளில் தொடங்கி சமையலறை, படுக்கையறை, மனஉணர்வுகள் வரையிலான அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விடயம் என்பதை முதலில் பெண்களே புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து அதை அவர்கள் அவர்களை அண்டியுள்ள ஆண்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் பெண் விடுதலையின் தாத்பரியம் பற்றி சமூக ரீதியானதொரு புரிந்துணர்வு ஏற்படும். பெண் விடுதலை உலகளாவிய ரீதியாகக் கிடைக்கவேண்டும். பெண் சுயமாக இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். பெண் இப்படித்தான் வாழ வேண்டு மென்று வீட்டுக்குள் நடைமுறுத்தப்படும் எழுதாதசட்டங்கள்அழித்தொழிக்கப் படவேண்டும். பெண்ணை இறுகப் பற்றியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் பெண்ணின் உயிரையும் உள்ளத்தையும் வதைக்கின்ற அத்தனை விலங்குகளும் உடைத்தெறியப் படவேண்டும். நன்றி - சந்திரவதனா - kuruvikal - 02-23-2004 பழைய கள்ளு புதுப் பானை....! மணத்தில தெரியுது கள்ளுப் பாழசெண்டு....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 02-23-2004 அந்த கட்டுரையை பத்தி அதுல இருக்கிற கேள்விகளை பத்தி உங்க கருத்துக்கள்? - sOliyAn - 02-23-2004 என்னையா பெரிய ஆக்கினையாக் கிடக்கு.. ஆண் என்ன பெண்ணை கட்டாயக் கலியாணமா பண்ணியிருக்கான்?! சிறை என்று தெரிந்தா விலத்தி நடக்கவேண்டியதுதானே?! ஏதோ நாங்கள் வெருட்டி இழுத்துப் பிடிச்சு இருத்திவைச்சு தாலிகட்டுறமாதிரி இருக்கு!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- vasisutha - 02-23-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 02-24-2004 [quote=sOliyAn]என்னையா பெரிய ஆக்கினையாக் கிடக்கு.. ஆண் என்ன பெண்ணை கட்டாயக் கலியாணமா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 02-24-2004 [quote=sOliyAn]என்னையா பெரிய ஆக்கினையாக் கிடக்கு.. ஆண் அதுதானே....சோழியான் அண்ணாவே சொல்லியாச்சு...இதுக்குமேல என்ன வேண்டிக்கிடக்கு விடுதலை எண்டு கொண்டு.....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- pepsi - 02-24-2004 குருவி நீங்க சொல்லுறது தப்பு. எத்தனையோ பொண்ணுங்க விருப்பமில்லாமே அப்பா அம்மாவுக்கு பயந்து தாலி கட்டிக்குதுங்க தெரியுமா? - sOliyAn - 02-24-2004 இந்தக் காலத்திலுமா? நினைச்சவனோட எவ்வளவு சீதணம் கொடுத்தாவது கட்டிவைக்காட்டி தற்கொலை செய்து போடுவன் என்று வெருட்டுறதைப்பற்றித்தான் கேள்விப்பட்டிருக்கிறன்..!! - kuruvikal - 02-24-2004 சரி அது தப்பென்டே வைப்பம்....இப்ப சோழியான் அண்ணா சொன்ன இதுக்கு என்ன சொல்லுறீங்க பெப்சி...! அது போக எமது நண்பன் ஒருவனை (அவன் சும்மா சிவனே எண்டு இருந்தவன) ஓடி ஓடிக் காதலித்த ஒருத்தி வீட்டுக்காரர் கனடா மாப்பிள்ளை பாக்க சொல்லாமல் கொள்ளாமல் செய்து கொண்டு கனடாவில பதுங்கிட்டாள்...அதுக்கும் என்ன சொல்லுறீங்க பெப்சி....இப்படிப் பலதும் ஏன் கிளறுவான்....?! :roll: ஆரோ பெண்பிரசுகள் வாழட்டும்..அதையேன் நாம் கெடுப்பான்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 03-06-2004 சிறிய மார்பகம் என்ற பிரச்னையால் என்னுடைய காதலேதோல்வி அடைந்துவிட்டது! சிறிய மார்பகம் என்ற பிரச்னையால் ஒரு கல்யாணமே நின்றதாக குமுதம் சிநேகிதியில் (ஜனவரி இதழ்) படித்தேன். இந்தப் பிரச்னையால் என்னுடைய காதலும்-கூட தோல்வி அடைந்துவிட்டது! இதனை எழுத எனக்கு வெட்கமாக இருந்ததால் அப்போது நான் எழுதவில்லை. ஆனால் அந்தக் கட்டுரையைப் படித்தவுடனே எனக்கும் எழுத வேண்டும் என்று தோன்றியது. நானும் அவனும் உயிருக்குயிராக ஒருவரையருவர் நான்கு வருடங்கள் நேசித்தோம். இருவரும் தொட்டதில்லை. வெளியில் சுற்றியதில்லை. கடிதங்கள் மூலம் மட்டும் எங்கள் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்வோம். போனில் வெகுநேரம் பேசுவோம். நேரில் பார்ப்போம். இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும்போது நட்பாகி, அது காதலாக மாறிப்போனது! புனிதமான காதலாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. நான் நல்ல சிவப்பாகவும் ஒல்லியாகவும் அழகாகவும் இருப்பேன். நீளமான கூந்தலும் எனக்கு உண்டு. பளிச்சென்ற என் தோற்றம் கண்டு நிறையப் பேர் என்னைக் காதலித்தார்கள்! எனது காதலன் என்னை மிகவும் நேசிப்பதாக நினைத்து நானும் அவனைக் காதலித்தேன். அவன் அடிக்கடி எனக்கு எழுதும் கடிதங்-களில் "நிறைய சாப்பிடு.... குண்டாகு" என்று எழுதுவான். எனக்கு அது அப்போது புரியவில்லை. திருமணம் நிச்சயமாகும் நேரம் ஒரு நாள்... அப்போதுதான் முதன்முதலாய் இருவரும் தனியாக ஒரு இரவு சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. காதலித்த நான்கு வருடங்களாக எந்தத் தொடுதலும் இல்லாததாலும், திருமணம் நிச்சயமாகப் போகிறதே என்ற தைரியத்தாலும் இருவரும் முத்தமிட்டுக் கொண்டோம்! அவன் என்னுடன் உடலால் உறவு கொள்ள நினைத்தான். நான் அவனைக் கட்டுப்படுத்திவிட்டு "இப்போது வேண்டாம்... திருமணத்திற்குப் பிறகு தான் நல்லது" என்று தடுத்துவிட்டேன். ஆனாலும் இருவரும் கட்டிப்பிடித்த நிலையில் படுத்திருந்தோம். அப்போது அவன் என் உடம்பைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டான். "என்ன, உனக்கு சதை இருக்க வேண்டிய இடத்தில் சதையே இல்லை. உன் மார்பு இதற்கு மேல் வளராதா?" என்று அவன் கேட்க, எனக்கு அசிங்க-மாகிவிட்டது! அதிர்ச்சியில் திகைத்துத் தடுமாறிவிட்டு, பின் கொஞ்சம் சுதாரித்துக்-கொண்டு "திருமணத்-திற்குப் பிறகு வளரும்" என்று சொன்னேன். எனக்கு இப்போது 29 வயது ஆகிறது. ஒரு பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறேன். இப்போதுதான் வாழ்க்கை என்றால் என்னவென்று எனக்குப் புரிகிறது. அதுவும் அவன் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்ட பிறகுதான் புரிந்தது! அந்தக் குறிப்பிட்ட சம்பவத்துக்குப் பிறகு அவன் என்னிடம் பேசுவது இல்லை. எந்தத் தொடர்பும் இல்லை. பிறகு மெல்ல விசாரித்தபோதுதான் தெரிந்தது. டீன் ஏஜ் வயதில், சிகப்பான, மார்பு பெரிதாக இருக்கும் ஒரு மாணவியை அவன் விரும்பு-கிறானாம். அவளை இன்னும் நான்கு வருடங்கள் காத்திருந்து திருமணமும் செய்துகொள்ளப் போகிறானாம். பள்ளியில் அவன் அந்தப் பெண்ணிற்கு பாடம் எடுக்கும் வாத்தியார்! நான் இதைக் கேள்விப்பட்டதுமே முதலில் வேதனையில் துடித்தேன். இருந்தும் மனதைத் தேற்றிக் கொண்டேன். நல்ல காலம், திருமணத்திற்கு முன்பே அவனின் சுயரூபம் தெரிந்ததே! முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண், 18 வயதானதும் அவனைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறதாம். <span style='color:#1200ff'><b>ஆண்களில் பலர்... ஏன், 99 சதவீதம் பேர், பெண்களின் மனதை அல்ல, பெண்களின் உடம்பை, சதையைத்தான் நேசிக்கிறார்கள். ஆனால் ஆண்கள் தொந்தி, தொப்பை, வழுக்கை, குள்ளம், ஒல்லி என்று எப்படி இருந்தாலும் பெண்கள் ஏற்றுக்-கொள்ள வேண்டுமாம். பெண்தான் சிவப்பாக, வெள்ளையாக, மார்பு பெரிதாக, கன்னம் குண்டாக, முடி நீளமாக, மொத்தத்தில் மிகவும் அழகாக இருக்க வேண்டும்!</b> இவ்வளவுக்கும் நான் அவன் மனதைத்தான், அதாவது அவன் நல்லவன் என்று நினைத்துதான் அவனை நேசித்தேன். ஏனென்றால் அவன் உருவத்தில் பெரிய அழகு கிடையாது. கறுப்பு நிறம், சுமார்தான்! நிரந்தர வேலையும் இல்லாதவன். நேசித்தேன்... கடைசியில் அவன் எல்லோரையும் விட கேவலமாக, சாக்கடையாகப் போய்விட்டான்! சினிமாவில் பெண் பார்க்கப் போகும்போது பெண்களின் உருவத்தை வைத்துக் கேவலப்படுத்துவது போல் வரும் சில சீன்களை எல்லாம் பார்த்துவிட்டு "ச்சேச்சே!.. உண்மையில் அதுபோல் எல்லாம் இல்லை" என்கிறார்கள் பலர். ஆனால், நிஜத்தில் இதுபோல் எத்தனையோ பெண்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நானே பெரிய உதாரணம் தானே! <b>பெண் பார்க்க வருகிறவர்கள், குஷ்பு மாதிரி, மும்தாஜ் மாதிரி பெண்கள் வேண்டுமென்று கேட்கிறார்கள். ஆனால், அவர்கள் என்ன அஜீத்தா, கமலா?</b>முப்பத்தைந்து வயதில் பதினைந்து வயது பெண்ணாகப் பார்க்கிறார்கள்! இப்போதெல்லாம் பாடம் சொல்லித் தரும் வாத்தியார்கள், தன்னிடம் படிக்கும் டீன்ஏஜ் பெண்களுடன் ஓடிப் போவதை அடிக்கடி பேப்பர்களில் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. எப் படித்தான் பெண்கள் முன்னேறினாலும் இதுபோன்ற தவறான ஆண்களால் பல பெண்கள் இப்படி வழுக்கி விழுந்து கொண டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனை!</span> நன்றி - குமுதம் - shanthy - 03-06-2004 kuruvikal Wrote:பழைய கள்ளு புதுப் பானை....! மணத்தில தெரியுது கள்ளுப் பாழசெண்டு....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Quote:பங்குனி 8. - kaattu - 03-06-2004 http://www.nilacharal.com/stage/kathai/kat42a.html - Mathan - 03-08-2004 kuruvikal Wrote:[quote=sOliyAn]என்னையா பெரிய ஆக்கினையாக் கிடக்கு.. ஆண் பெண் ஏன் அடக்கப் பட்டாள்..? ஏன் ஒடுக்கப் பட்டாள்..? [b]பெண்களை நாங்கள் வெளியில் போக விடுகிறோம். விரும்பிய உடைகளை அணிய விடுகிறோம். பல்கலைக்கழகம் வரை படிக்க விடுகிறோம். வேலை செய்ய விடுகிறோம். ஏன்.. கணினியில் கூட எழுத அனுமதிக்கிறோம். இன்னும் என்ன வேண்டுமென்று இவர்கள் ஆர்ப்பாட்டக் கொடி பிடிக்கிறார்கள்.. என்ற ஆணாதிக்கம் தொனிக்கும் கேள்விகள் கூட சில ஆண்களிடம் இருந்து சினத்தோடு எழுகின்றன http://www.yarl.com/articles.php?articleId=386 நன்றி - சந்திரவதனா முழு கட்டுரையையும் படித்து உங்கள் கருத்தை எழுதுங்கள் - kuruvikal - 03-08-2004 மனிசனுக்கே சுதந்திரம் இல்லையாம் அதுக்க இவையொண்டு....! ஆண் பெண் இப்படித்தானே எல்லா இடமும் தேவையில்லாம பிரிவினை காட்டி இப்ப கவுந்து போய் நிக்கிறியள்...இங்கையுமா....???! திருந்த மாட்டியள் திருந்தினா உருப்பட்டிரிவியலே...திருந்தாதேங்கோ.....?! மனிசர் இருக்கிற நிம்மதியும் மண்ணும் பறிபோகப்போகுதெண்டு இருக்கிறாங்கள்...இவை அதுக்க பெண் விடுதலை மண்ணாங்கட்டி எண்டு கொண்டு...இப்ப இதுதான் அவசியம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll:
- kuruvikal - 03-08-2004 <img src='http://www.webulagam.com/news/photonews/images/2004/03/08_women.jpg' border='0' alt='user posted image'> இவர்களுக்கு பெண் விடுதலை பெற்றுத் தந்ததென்ன....?!!! தலை சுமக்கும் மண்ணாங்கட்டியா.....???! இது ஏன்....???! (Image from webulagam.com) :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- Mathivathanan - 03-08-2004 பௌர்ணமிக்கு சிலபேருக்கு கூடுறது எண்டு சொல்லுவாங்களே.. அதைமாதிரி வருஷா வருஷம் இந்த நேரத்திலை உதுகளும் வாசிக்கவேணுமெண்டு ஒரு தலையெழுத்து.. மாத்தவா முடியும்..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 03-08-2004 kuruvikal Wrote:மனிசனுக்கே சுதந்திரம் இல்லையாம் அதுக்க இவையொண்டு....! ஆண் பெண் இப்படித்தானே எல்லா இடமும் தேவையில்லாம பிரிவினை காட்டி இப்ப கவுந்து போய் நிக்கிறியள்...இங்கையுமா....???! திருந்த மாட்டியள் திருந்தினா உருப்பட்டிரிவியலே...திருந்தாதேங்கோ.....?! அந்த பிரைச்சனையும் பெண் விடுதலையையும் இணைக்காதீர்கள் குருவி. |