Yarl Forum
மொழிமாற்றம் சில எண்ணங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: மொழிமாற்றம் சில எண்ணங்கள் (/showthread.php?tid=7439)

Pages: 1 2


- adipadda_tamilan - 02-25-2004

அப்பா!!!
இந்த கருத்துக்களத்திலயாவது யாவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.


- Mathan - 02-26-2004

adipadda_tamilan Wrote:அப்பா!!!
இந்த கருத்துக்களத்திலயாவது யாவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.


சண்டை பிடிக்கணுமுன்னு நமக்கு ஆசையா? க்ருத்து ஒத்துபோகாதபோது கருத்து மோதல் வரும் அவ்வளவு தான்.

பொதுவா எந்த ஒரு விசயத்துக்கும் மறுபக்கம், இன்னொரு பார்வை (Different point of view) இருக்கும்

எல்லாரும் ஒரே கருத்தையே சொல்றது மத்த பக்கத்தை யாரும் பாக்கலையோங்கிற சந்தேகத்தை உருவாக்குது.


- nalayiny - 02-26-2004

நேரடி மொழிபெயற்பு என்பது உதாரணமாக ஒரு கட்டுரையின் மூலத்தில் இருந்து நேரடியாக தமிழுக்கு மாற்றம் செய்தலைக்குறிக்கும். அதே கட்டுரை டொச்மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு பின்னர் தமிழுக்கு மொழிமாற்றம் செய்தலை குறிக்காது. அதே கட்டுரையை டொச்மொழியில் இருந்து நேரடியாக தமிழுக்கு மொழிமாற்றம் செய்தலையே நேரடி மொழிமாற்றம் என கூறுகிறார்கள். டொச்சில் இருந்து ஆங்கிலத:;திற்கு மாற்றி பின்னர் தமிழுக்கு மாற்றம் செய்யப்படுகிறபோது அந்த கட்டுரையின் கனம் குறைந்து விடுவதுடன் செற்களும் வழுவிக்காணப்படும். அதனால் தான் மொழிபெயற்பை நேரடியாக மாற்றம் செய்யவேண்டும் .அதுவே நேரடி மொழிபெயற்பு எனப்படுகிறது.

ஆனாலும் மொழிபெயற்பின் போது மூலத்தின் கனம் குறைவதுடன் சொற்களும் பெரும்பாலும் வழுவியே காணப்படும்.