![]() |
|
தமிழரின் அடையாளத்துவம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: தமிழரின் அடையாளத்துவம் (/showthread.php?tid=7417) Pages:
1
2
|
- Ramanan - 03-02-2004 தமிழரின்ட முக்கியமான ஒரு அடையாத்துவமே தமிழ் கதைப்பது எண்டு நான் நினைக்கிறன், மற்றதெல்லாம் அதுக்கு பிறகு. ஆனா இலங்கையில இந்தியத் தொலைக்காட்சியின் ஆதிக்கத்தையும் அது காட்டும் கலாச்சாரத்தையும் அதுக்கு எம்மவரின் ஆதரவையும் பார்தால் கிட்டடியில.... அதை ஏன் கேட்பான் சரி விடுங்கோ. கௌசிகன் நாங்கள் விலகேல்ல ஆனால் இனிவரும் சந்ததிகளை மேல சொன்ன விடயம் விலக வைக்கும். எல்லாம் அவரவரின் மனதில தான் தங்கியிருக்கு. - kaattu - 03-02-2004 கெளஷிகன் Wrote:எமக்கேயுரிய பண்பாடு கலாச்சார விழுமியங்களை <b>கௌசிகன் இந்த எமக்கேயுரிய... இது பற்றி இங்கை கனபேர் கனக்க கதைச்சு நல்லா களைச்சும் போட்டினம். பதில்தான் சரியாக் கிடைச்ச பாடில்லை. நீங்களாவது சொல்லுங்கோ அந்த எமக்கேயுரிய கலாச்சாரம் பண்பாடு எல்லாம் என்னென்ன என்று..</b> - adipadda_tamilan - 03-03-2004 கெளஷிகன் Wrote:வர வர ஆடைகள் உயர்ந்து கொண்டே போகிறது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உயர்ந்து கொண்டு போவதிலும் கீறலும் வெட்டுமெல்ல விழுந்துவிட்டது. போற போக்கைப்பார்த்தால் இன்னும் கொஞ்ச காலத்தில் .... வேண்டாம்ம்ம்ம்ம்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- கெளஷிகன் - 03-03-2004 தமிழரின் கலாச்சாரம் பண்பாடு தனித்துவம் என்று நோக்கும் போது முதலில் முன்வைக்கப்படவேண்டியது தமிழ் மொழியே.தமிழ் மொழியின் இனிமையும் இளமையும் இலக்கணமும் இலக்கியமும் தமிழருக்கு தனித்துவம் மட்டுமன்றி தரத்தையும் தருகிறது ஆனால் இன்று தமிழே தெரியாத ஒரு தமிழ் சந்ததி சில புலம் பெயர் நாடுகளில் உருவாகிக்கொண்டிருக்கிறது.மேலும் தமிழ் மொழி பேச மட்டுமே தெரிந்த அல்லது தமிழே தெரியாத ஒரு இளம் சந்ததி ஒருசில தமிழ் கலாச்சார எச்சஙகளை மட்டும் தாங்கியபடி இன்று வாழ்ந்து கொண்டிருக்கிரது.தமிழன் என்பதற்கு அடிப்படைத் தகுதி தமிழ் மொழி என்றால் இவர்கள் தமிழர்கள் இல்லயா? பதில் உங்கள் கைகளில். அடுத்து முன்வக்கப்பட வேண்டியது சைவசமயம்.தமிழும் தமிழரும் வளர சைவமும் தனித்துவமாக முன்னிற்கிறது.தமிழ் இலக்கியம் பெரும்பாலாக சைவ சமய அடிப்படையிலேயே தான் வளர்ந்தது.இன்றும் புலத்திலிருக்கும் தமிழ் தெரியாத் தமிழ்ச் சந்ததி சமயத்தினை மறக்கத்துணியவில்லை. தமிழரின் தனித்துவம் கொண்ட மேலும் சில பண்பாடு கலாச்சார முறைகள் சிலவற்றை கூறின் 1.தனித்துவம் மிக்க சமய சம்பிரதாய சடங்குகள் 2.குடும்ப வாழ்க்கை முறை 3.உறவுகளைக் கொண்டாடும் வழமை 4.திருமண +பாலியல் உறவு முறை 5.உணவு ,சிற்றுன்டி வகைகள்,முறைகள் 6.ஆடை அலங்கார முறைகள் 7.தனித்துவம் கொண்ட பன்டிகைகள் ,திருவிழாக்கள் 8.வரவேற்பு உபசார வழமைகள் 9.கிராமியக் கலை வடிவங்கல்(கிராமியப்பாடல்கள்,வடமோடி தென்மோடி,சிந்து நடைக் கூத்து வடிவங்கள்,னாட்டிய நாடகம்,வில்லுப்பாட்டு...............) 10.பரத நடனக் கலை இவ்வாறு கூறிக்கொன்டே போகலாம் எவ்வாறாயினும் எமக்கேயுரிய தனித்துவமான சில மூட நம்பிக்கைகளும் மூடச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் முடிவுக்கு வர வேன்டியது அவசரமும் அவசியமுமாகும் - kaattu - 03-03-2004 கெளஷிகன் Wrote:தமிழரின் கலாச்சாரம் பண்பாடு தனித்துவம் என்று நோக்கும் போது...... நன்றி கௌசிகன். நீங்கள் மேலே குறிப்பிட்டவற்றில் ஒரு சிலதைப் பற்றுp இப்போ கேட்கிறேன். நீங்களே ஒரு கிறிஸ்தவன். (உங்கள் தளத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்) அப்படியானால் உங்கள் சமயம் தமிழ் வளரத் தடையாக உள்ளதா? உங,;கள் 6 ஆவது தமிழரின் கலாச்சார அடிப்படை விடயங்களின் படி.......... நீங்கள் எந்த உடையை அணிந்து கலாச்சாரத்தைக் காக்கிறீர்கள்? இதற்குப் பதில் சொல்லுங்கள் முதலில். தொடர்ந்து மற்றவை பற்றிய எனது சந்தேகங்களையும் கேட்கிறேன். - Mathan - 03-03-2004 thampu Wrote:<b>வழுதி எழுப்பிய கேள்விகளுக்கு விவேகானந்தர் கூறிய புகழ் மிக்க சிறுகதை ஒன்று இங்கு மிகபொருத்தமாக இருக்குமெனக்கருதி கீழ் இணைத்துள்ளேன்......</b> எந்த ஒரு இனமோ மொழியோ கலாச்சாரமோ மற்றதுக்கு தாழ்ந்தது அல்ல. அவற்றை ஒப்பிட்டு பார்ப்பதே தவறு. - Mathan - 03-03-2004 kaattu Wrote:கெளஷிகன் Wrote:தமிழரின் கலாச்சாரம் பண்பாடு தனித்துவம் என்று நோக்கும் போது...... நியாயமான கேள்விதான் தமிழன் என்றால் எப்படிதான் இருக்கவேண்டும்? - thampu - 03-03-2004 BBC Wrote:thampu Wrote:<b>வழுதி எழுப்பிய கேள்விகளுக்கு விவேகானந்தர் கூறிய புகழ் மிக்க சிறுகதை ஒன்று இங்கு மிகபொருத்தமாக இருக்குமெனக்கருதி கீழ் இணைத்துள்ளேன்......</b> அன்பர் பி பி சி, விவேகானந்தரின் குட்டிக் கதையில் கிணற்றுத்தவளை இந்து மதமோ தமிழ் மொழியோ தமிழ் கலாச்சாரமோ அல்ல. <b>உலகத்தில் யாரும் தனது மதம்தான் தனது மொழிதான் தனது கலாச்சாரம்தான் பெரிது என நினைத்து விடக்கூடாது என்பதைத்தான் விவேகானந்தர் மட்டுமல்ல அற்ப பயலான தம்புவும் தாழ்மையுடன் இத்தால் அறியத்தருகின்றேன்................ </b> - nalayiny - 03-03-2004 தமிழருக்குரியது தமிழருக்குரியது என பலவாறு பேசிக்கொள்கிறோம். ஆனால் எல்லா சமூகத்திடமும் எமது பண்பாட்டு விழுமியங்களை காணக் கூடியதாக உள்ளது.(எம்மை விட அதிபயபக்தியுடன் காப்பாற்றி வருகிறார்கள்.) ஆக தமிழர் தான் உயர் சமூக விழுமியங்களை பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்கிறார்கள் என பொருளல்ல. - pepsi - 03-03-2004 ஆரம்பிச்சுட்டாங்கய்யா பண்பாடு விழுமியமுன்னு :roll: - Mathan - 03-03-2004 thampu Wrote:BBC Wrote:thampu Wrote:<b>வழுதி எழுப்பிய கேள்விகளுக்கு விவேகானந்தர் கூறிய புகழ் மிக்க சிறுகதை ஒன்று இங்கு மிகபொருத்தமாக இருக்குமெனக்கருதி கீழ் இணைத்துள்ளேன்......</b> தம்பு, நான் அப்படி எடுத்துக்கொள்ளவில்லை. நான் சொல்லவந்தது மதம், இனம் மொழியை ஒப்பிட்டு பார்க்காமல் மற்றவர்களின் மதம், இனம் மொழிக்கும் மதிப்பு குடுத்து வாழவேண்டும் என்று. சொல்லும் முறை தான் வேறு மற்றப்படி உங்கள் கருத்துடன் முரண்படவில்லை. - anpagam - 03-03-2004 Quote:1.தனித்துவம் மிக்க சமய சம்பிரதாய சடங்குகள்* இவைகளை நல்லாக கலப்படம் செய்து விட்டார்கள் புலம்பெயர்ந்தவரும் அவர்களால் ஈழத்திலும்...... :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Quote:ஆக நல்ல எடுத்துக்காட்டு விவேகானந்நர் அல்லவோ அவரின் சொற்பொழிவுகளில் உங்கள் கேள்ளிக்கு நல்ல பதில்களாக அமையும் எல்ல உலாத்தினருக்கும் அந்த காலத்திலேயே இவைபற்றி வடிவாக வெ வ்வேறு நாடுகளில் கூறியுள்ளார் எது என்னவோ... மனிதன் குரங்கில் இருந்து வந்தான் இனியும் நாம் குரங்காக பரினாமம் அடைய மாட்டோம் எங்கும் வளர்ச்சி எதிலும் வளர்சிதான் வேண்டும் வேண்டாவிட்டாலும் அதுதானாக வளரும் இது இயற்கை. எந்த காலத்திலும் எந்தநேரத்திலும் நல்லவகைதான் வளர்சி அடைய முடியும் கூடாதவைகள் அல்ல அது உலக நியதி. :wink:
- thampu - 03-03-2004 BBC Wrote:thampu Wrote:BBC Wrote:thampu Wrote:<b>வழுதி எழுப்பிய கேள்விகளுக்கு விவேகானந்தர் கூறிய புகழ் மிக்க சிறுகதை ஒன்று இங்கு மிகபொருத்தமாக இருக்குமெனக்கருதி கீழ் இணைத்துள்ளேன்......</b> ஒப்பிடக்கூடாது என்பது நல்ல அறிவுரைதான்....... நடைமுறையில் ஒப்பிடப்படுவதுதான் வழமையாக இருக்கிறது....... - Mathan - 03-03-2004 உண்மை. - Mathan - 03-04-2004 BBC Wrote:kaattu Wrote:கெளஷிகன் Wrote:தமிழரின் கலாச்சாரம் பண்பாடு தனித்துவம் என்று நோக்கும் போது...... இதற்கு உங்க கருத்து என்ன ஈழவன்? - கெளஷிகன் - 03-04-2004 தமிழ் வளர்ச்சியில் கிறிஸ்தவ மதத்தை விட சைவ சமயம் தனித்துவமாக முன்னிற்கிறதேயொழிய கிறிஸ்தவம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று கூற முடியாது. கிறிஸ்தவர்கழும் கிறிஸ்த்வமும் பலவழிகழில் தமிழ் மொழி வளர்ச்சியில் பங்காற்றி இருக்கின்றன.கிறிஸ்தவம் போதிக்க வந்த ஒரு ஆங்கிலேயப்பாதிரியார் தான் தன் பெயரை வீரமாமுனிவர் என்று பெயர் கொண்டு தமிழ் வளர்த்தார். தமிழை உயிராக நேசித்தவர் அருட்திரு டேவிட் அடிகள்.தனது பெயரை தாவீது அடிகள் என்று தமிழில் மாற்றியவர்.யாழ் நூலகம் எரிந்த செய்தி கேட்ட அதிர்சியால் உயிர் துறந்தவர். அடுத்து சுவாமி gnanappirakaasar அடிகள்..............இவர்கள் இறந்த பின்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். தனது தமிழ் வாரிசு என்று அருட்தந்தை தாவீது அடிகள் விட்டுச்சென்ற தத்துவவாதி சம்புக்கலை செல்லத்துரை எனப்படும் அருட்தந்தை பாவிலுப்பிள்ளை . இதுவரை எத்தனயோ அருட்தந்தையர்கள் நம் யாழ் பல்கலைக்கலகத்தில் தமிழ் துறைத் தலைவர்களாகவும் பேராசிரியர்களாகவும் இருந்திருக்கிரார்கள்.இன்னும் இருக்கிரார்கள். fr.dominic, fr.dr.santhirakaanthan, fr.mariyasevior, fr.maththayaas,fr.rajanaayakam,.....etc...etc திருமறைக்கலா மன்றம் மூலம் இன்றும் உலகம் முழுவதும் தமிழ் வளர்க்கப்படுகிரது அருட்தந்தை மரிய சேவியர் அவர்களால்.இவர் இந்து நாகரீகப் பேராசிரியராக விளங்குபவர். இப்படி கூறிக்கொண்டே போகலாம். - Eelavan - 03-05-2004 இனம் என்பதை தமக்குள் கலந்து வளமான எச்சங்களைத் தோற்றுவிக்கக் கூடிய அங்கிகளின் கூட்டம் என்று உயிரியல் ரீதியில் இலகுவாக வரையறுத்துவிடலாம் ஆனால் சமோக,பண்பாட்டு கலாச்சார ரீதியில் இனத்தை திட்டவட்டமாக வரையறுக்க முடியாது வேண்டுமானால் சிறப்பியல்புகளை மட்டுமே பட்டியலிடலாம் நண்பர் கெளஷிகன் கேள்விக்கு நான் ஏற்கனவே பதில் கூறிவிட்டேன் பண்பாடு கலாச்சாரம் என்பவற்றை எமது இனத்தின் சிறப்புகளாகக் காட்டலாமே அன்றி அவற்றை வைத்துக் கொண்டு தமிழினத்தை வரையறுக்க முடியாது எமது இனத்தின் அடிப்படை தமிழ் மொழி அது தெரியாதவன் தமிழனே அல்ல நண்பர் எமது இனத்தில் தற்போது எழுத்துள்ள சமுதாயச்சிக்கலை முன்வைத்து அவர்கள் தமிழன் இல்லையா எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார் உமது ஆதங்கம்புரிகிறது கெளஷிகன் போர் மற்றும் வேலைவாய்ய்புகள் போன்ற பல்வேறு காரணிகளால் எமது இனம் பல்வேறு நாடுகளிற்கும் பெயர்ந்து அங்கேயே தம்மை நிலைப்படுத்திக்கொண்டிருக்கிறது இலங்கையில் போர் ஒரு புறக்காரணி என்றால் இந்தியாவில் வேலை வாய்ய்ப்பு ஒரு புறக்காரணி எப்படியிருப்பினும் வளரும் சூழல்,பெற்றோரின் அக்கறையின்மை,வறட்டுக் கௌரவம் போன்ற பல்வேறு காரணிகளால் புலம் பெயர்ந்த தமிழினத்தின் சந்ததி இன்று தமிழ் தெரியாமல் வளர்ந்து நிற்கிறது இவற்றில் உமது உறவுகள் மட்டுமல்ல எனது உறவுகள் கூட உண்டு பிறநாட்டு மொழி படித்தால் வேலை வாய்ய்ப்பு கல்வி போன்ற காரணங்களால் பிறமொழிகளில் பிள்ளைகள் தேர்ச்சி அடையவேண்டிய கட்டாயத்தை உணர்ந்த பெற்றோர் தாய் மொழிக்கல்வியின் அவசியத்தை உண்ராமலோ அல்லது உணர்ந்தும் தேவையில்லை என்று புறக்கணித்ததாலோ தமிழ் தெரியாத சந்ததி ஒன்று உருவாகி அதன் இன அடையாளமே இன்று கேள்விக்குறியாகியிருக்கிறது நீங்கள் சொல்லும் கலாச்சார பண்பாட்டு எச்சங்களைத் தாங்கி நிற்கும் இவர்கள் எப்படித் தமிழன் என்று அடையாளப்படுத்த முடியும். எமக்குத் தனியானவையும் சிறப்பானவையுமாக நாம் கூறிவரும் பழக்கவழக்கங்களில் ஒன்று அல்லது இரண்டை மட்டும் எச்சமாக கொண்டு திரிவதால் எப்படி இவர்களை தமிழன் என்று சொல்ல முடியும் இவற்றையெல்லம் நான் சொல்வது தனியே வரட்டுக் கௌரவத்தினாலே தமிழ் தேவையில்லை என்று ஒதுக்கியவர்களை மட்டுமே புலத்தில் வாழும் அனைத்து மக்களையும் நன் சுட்டவில்லை தாய்நாட்டிலிருப்பவர்களுக்கு எந்தவிததிலும் சளைக்காமல் தமிழை பேணியும் பண்பாட்டுக் கலாச்சாரங்கலை வளர்த்தும் வருபவர்கள் நிறையப்பேர் புலத்திலிருக்கிறார்கள் தமிழினத்தின் அடிப்படை என்னவென்று பாருங்கள் நண்பரே இன்று இந்திய,இலங்கை மட்டுமன்றி,மலேசியா,மொறிஷியஸ் பிஜித்தீவுகள் போன்ற நாடுகளில் பலநூறு ஆண்டுகாலமாக தமிழினம் வாழ்ந்துவருகிறது இவர்கள் நீங்கள் பட்டியலிட்ட தமிழரின் கலாச்சார பண்பாட்டு பழக்கவழக்கங்களை ஒரே மாதிரி கைக்கொள்கிறார்களா இல்லையே இலங்கைத் தமிழரினதும் இந்தியத் தமிழரினதும் பழக்கவழக்கங்களிலேயே நிறைய வேறுபாடுகள் அப்படியிருக்க இவற்றை வைத்து தமிழினத்தை எப்படி வரையறுக்க முடியும் இந்த நாடுகளில் வாழ்வோர் பல்வேறுபட்ட கலாச்சர பண்பாடுகளைப் பேணிவந்த போதும் இவர்களைத் தமிழினம் என்று தனிப்படுத்தியது அல்லது அடையாளப்படுத்தியது எது? மொழி.தமிழ் மொழி இப்போது நாம் கைக்கொள்ளும் கலாச்சார பண்பாட்டு நடைமுறைகள் தனியே தமிழினத்துக்குரியவை அன்று திராவிட மக்களுக்குரியவை திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து இன மக்களுக்கும் பொதுவானவை அவற்றில் தமிழினத்துக்குரியது என்று சொன்னால் மொழியும் அதனடிப்படையில் வந்த சில பண்பாடுகளும் மட்டுமே எமக்குரியவை இப்போது தமிழ் தெரியாதவன் தமிழன் இல்லையா என்பதை உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள் - Mathan - 03-05-2004 கெளஷிகன் Wrote:தமிழ் வளர்ச்சியில் கிறிஸ்தவ மதத்தை விட சைவ சமயம் தனித்துவமாக முன்னிற்கிறதேயொழிய கிறிஸ்தவம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று கூற முடியாது. உண்மை கிறிஸ்தமும் தமிழுக்கு தன்னுடைய பங்கை குடுத்திருக்கின்றது. - vasisutha - 03-05-2004 Eelavan Wrote:இனம் என்பதை தமக்குள் கலந்து வளமான எச்சங்களைத் தோற்றுவிக்கக் கூடிய அங்கிகளின் கூட்டம் என்று உயிரியல் ரீதியில் இலகுவாக வரையறுத்துவிடலாம் ஆனால் சமோக,பண்பாட்டு கலாச்சார ரீதியில் இனத்தை திட்டவட்டமாக வரையறுக்க முடியாது வேண்டுமானால் சிறப்பியல்புகளை மட்டுமே பட்டியலிடலாம் உண்மை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|