![]() |
|
சினிமா சினிமா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: சினிமா சினிமா (/showthread.php?tid=7402) |
- Eelavan - 03-24-2004 நான் கடந்த தை மாதம் வெள்ளவத்தை Finaze இல் CD வாங்கினேன் இப்போது வைத்திருக்கிறார்களா தெரியவில்லை - Mathan - 03-24-2004 தகவலுக்கு நன்றி - AJeevan - 03-24-2004 [size=14]ஒலியைக் கேட்கும் போதே கணணியில் பதிவு செய்யக் கூடிய ஒரு மென்பொருள் இருக்கிறது. முன்னர் ஒருமுறை ஒரு நண்பரிடமிருந்து கிடைத்தது.அதைத் தவற விட்டது மாத்திரமல்ல பெயரையும் மறந்து விட்டேன். யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். மேற்குறிப்பிட்ட பாடல்களை இவ் வழி கணணியில் பதிவு செய்து ,தேவையானால் சீடியில் பதிவும் செய்து கொள்ளலாம். - AJeevan - 03-24-2004 <span style='font-size:25pt;line-height:100%'><b>சினிமாவில் சேருவது எப்படி?</b></span> <img src='http://gallery.indiainfo.com/tamil/albums/album51/09_G.jpg' border='0' alt='user posted image'> <b>யார் யாரை அணுகலாம்!</b> - சபீதா ஜோசப் [size=14] நடிகராக, நடிகையாக உங்களை விதவிதமான ஸ்டைல்களில் போஸ் கொடுத்து எடுத்த நல்ல கலர் புகைப்படங்களை எல்லாம் ஆல்பமாக எடுத்துக் கொண்டு சென்று, சினி ஏஜென்ட்களிடம் காண்பியுங்கள். சினிமா மக்கள் தொடர்பாளர்களிடம் காண்பியுங்கள். அசோசியேட் டைரக்டர்களிடம் காண்பியுங்கள். முடிந்தால் அவர்களிடம் எல்லாம் உங்களது புகைப்படங்களில் இரண்டைக் கொடுத்துவிட்டு, மறக்காமல் உங்களது முகவரியையும் எழுதிக் கொடுங்கள். முக்கியமாகத் தொலைபேசி நெம்பரை (பி.பி.போன் நெம்பராவது) கொடுத்து "எனக்கொரு வாய்ப்பை ஏற்படுத்தித் தாருங்கள்" என்று கோரிக்கை வைத்துவிட்டு வாருங்கள். யாரிடம் வாய்ப்பு கேட்க சென்றாலும், அவரைப் பற்றி நாலு வார்த்தையாவது புகழ்ந்து பேசிவிட்டு, பிறகு உங்களது கோரிக்கையை முன் வையுங்கள். சரி, துணை நடிகர்களுக்கு எப்படி வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு படத்தில் அலுவலக விழா ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடப்பது போன்ற காட்சியில் நடிப்பதற்கு இருபது ஆண் பெண் நடிகர்கள் தேவை என்கிறார்கள். அவர்கள் எப்படி இருக்க வேண்டும், எந்த மாதிரி உடை அணிந்து வரவேண்டும். எத்தனை வயதுக்குள் இருக்க வேண்டும் என்று தமது எதிர்பார்ப்பை சினி ஏஜென்டிடம் டைரக்டர் சொல்வார். அப்போது யூனியனுக்கு வந்திருந்தவர்களில் அலுவலக உயர் அதிகாரிகள் போன்ற தோற்றம் கொண்டவர்கள், இளம் டைப்பிஸ்ட் போன்றவர்கள், விஐபி போன்ற தோற்றம் கொண்டவர்கள் என்று இருபது பேர் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்படுகின்றனர். அந்த இருபது நடிக நடிகைகளுக்கும் யூனியன் டோக்கன் கொடுக்கப்படுகிறது. அவர்களின் பெயர்களை வரிசையாக ஒரு பெரிய நோட் புத்தகத்தில் பதிவு செய்யப்படுகிறது. அதேபோன்று எந்த பேனர் (கம்பெனி) தயாரிக்கும் படத்திற்காக அவர்கள் நடிக்கப் போகிறார்கள். எந்த ஏஜெண்ட் மூலம் அவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பதையும் பதிவு செய்யப்படுகிறது. பின்னர், இந்த கம்பெனி தயாரிக்கும் படத்திற்காக இத்தனை பேர், இன்ன பெயர் கொண்ட சினி ஏஜென்ட் மூலம் நடிக்க, இன்ன இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்று தேதி, காலம், நேரம் எல்லாம் எழுதி அந்தக் குறிப்பு (துண்டறிக்கை) தகவல் பலகையின் அருகில் மாட்டி வைக்கப்படுகிறது. அதேபோன்று அந்த கம்பெனி பணம் வழங்க இருப்பதை குறித்தும் பலகையில் அறிவிப்பு தொங்கும். தென்னிந்திய நடிகர் சங்கத்திலும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனிலும் பல ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்கம் நாடகக் கலைஞர்களின் தாய்வீடு என்று சொல்ல வேண்டும். நலிந்த கலைஞர்கள், நாடகக் கலைஞர்களுக்கு பல வகையில் உதவி செய்து வருகிறது. பல நாடக நடிகர்கள் சினிமாவுக்கு வர இந்த சங்கம் ஒரு காரணம். நடிகர் சங்கத்தில் வருடத்திற்கு ஒருமுறை, ஒரு மாதம் முழுவதும், நடிகர் சங்கக் கலை அரங்கத்தில் நாடகப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு கலைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் நாடகங்களின் மூலம் தங்களது நடிப்புத் திறமையை வெளிச்சமாக்கிக் காட்டுகிறார்கள். இப்படி நடக்கும் நாடகப் போட்டியில் கலந்து கொண்டு முதல், இரண்டாவது, மூன்றாவது பரிசு பெறும் நாடகக் கலைஞர்களைப் பாராட்டி விருது கொடுத்து கௌரவிப்பதுடன் சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு படங்களில் நடிக்க வாய்ப்பளிக்குமாறு பரிந்துரையும் செய்யப்படுகிறது. அப்படி நிறைய பேர் நடிகர்களாகி இருக்கிறார்கள். நடிகர் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க ஆவன செய்வதுடன், அவர்களுக்கு பலவகையில் உதவிகள் செய்தும் வருகிறது. Thanks: www.intamm.com - Mathan - 03-26-2004 சதுரங்கம் படங்கள் <img src='http://www.tamilcinema.com/cinenews/gallery/movies/sathu/sa2.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.tamilcinema.com/cinenews/gallery/movies/sathu/sa9.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.tamilcinema.com/cinenews/gallery/movies/sathu/sa8.jpg' border='0' alt='user posted image'> நன்றி - தமிழ் சினிமா - Mathan - 03-27-2004 நடிப்பது தமிழில், பேசுவது ஆங்கிலத்திலா? த்ரிஷாவை கடிந்து கொண்டார் டி. ராஜேந்தர் சென்னை, மார்ச் 27: தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டு, மேடையில் ஆங்கிலத்தில் பேசியதற்காக நடிகை த்ரிஷாவைக் கடிந்து கொண்டார் நடிகர் டி.ராஜேந்தர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இயக்குநர்-நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் "நியூ' பட கேசட் வெளியீட்டு விழா, சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் டி. ராஜேந்தர் பேசியதாவது: இப்போதைய நிலைமையில் படத்துக்கு கதைதான் நாயகன். எந்த நாயகனாக இருந்தாலும், நல்ல கதை வேண்டும். இதற்கு முன்பு பேசிய நடிகைகள் சிம்ரன், கிரண், த்ரிஷா ஆகியோர் ஆங்கிலத்தில் பேசினார்கள். த்ரிஷா, தமிழ் பெண். தமிழ்ப் படங்களில் நடிக்கிறார். தமிழில் பேசக் கூடாதா? ஏன் ஆங்கிலத்தில் பேசுகிறார்? தமிழில் பேசுங்கள். திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டூங்கள். வரி: ஆந்திரத்தில் 8 சதவீத கேளிக்கை வரி விதிக்கப்படுகிறது. கர்நாடகத்தில் வரி விலக்கு உண்டு. தமிழகத்தில் வரி அதிகமாக உள்ளது. திரைத்துறையைக் காப்பாற்ற யாரும் இல்லை. தமிழ்த் திரையுலகம் அழிந்து கொண்டிருக்கிறது. திருட்டு விசிடியில் திரைப்படம் பார்க்கக் கூடாது என்றார். நடிகர் சரத்குமார் பேசியதாவது: நடிகை த்ரிஷா, தமிழிலேயே பேசி இருக்கலாம். இருந்தாலும் டி.ராஜேந்தரின் பேச்சை, ஒரு மூத்த கலைஞரின் அறிவுரையாக அவர் எடுத்துக் கொள்ள வேண்டும். வருத்தப்படத் தேவையில்லை. நடிகர்கள் விஜய், சிலம்பரசன், அசோக், மகேஷ் பாபு, நடிகை ஐஸ்வர்யா, இயக்குநர்கள் சரண், வசந்த், தரணி, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மற்றும் பலர் பேசினர். நன்றி - திணமணி - Mathan - 03-28-2004 ஐரோப்பாவில் தமிழ் நடிகைக்கு கோவில் <img src='http://cinesouth.com/images/new/27032004-THN12image2.jpg' border='0' alt='user posted image'> ஐரோப்பாவின் டென்மார்க் நகரில் தமிழ் நடிகை த்ரிஷாவுக்கு அவரது ரசிகர்களால் கோவில் கட்டப்பட்டுள்ளது. குஷ்பூ, நக்மா என இவர்களைத் தொடர்ந்து நடிகை த்ரிஷாவிற்கும் ரசிகர்கள் கோவில் ஒன்றை கட்டியுள்ளனர். தமிழ் திரைஉலகிற்கு நடிக்க வந்த சில காலங்களே ஆகியிருந்தபோதிலும், குறைவான படங்களின் மூலமே பெரும்பான்மையான ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் நடிகை த்ரிஷா. இயக்குனர் கோபி கிருஷ்ணாவின் 'எனக்கு 20 உனக்கு 18' என்ற படத்தின் மூலம் அறிமுகமானாலும், இயக்குனர் அமீர் இயக்கி சூர்யா-த்ரிஷா நடிப்பில் உருவான 'மௌனம் பேசியதே' திரைப்படமே, தமிழ் மக்களுக்கு த்ரிஷாவை அடையாளம் காட்டியது. அதனைத் தொடர்ந்து வெளியான ஹரியின் 'சாமி' படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனசில் மாமியாக நிரந்தரமான ஒரு இடத்தை அடைந்தார். இந்நிலையில் த்ரிஷாவின் கால்சீட்டுக்காக இயக்குனர்கள் காத்துக் கிடக்கையில், மணிரத்னத்தின் 'ஆய்த எழுத்து' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் நடிக்கச் சென்ற த்ரிஷாவிற்கு, தெலுங்கு படங்களின் மூலமாகவும் பலத்த வரவேற்பே கிட்டியது. இவ்வாறு தமிழ், தெலுங்கு என சென்ற பக்கமெல்லாம் த்ரிஷாவின் புகழ் பரவிக் கொண்டே போய், இறுதியில் அது உலகம் முழுவதும் பரவத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஐரோப்பாவின் டென்மார்க் நகரில் நடிகை த்ரிஷாவிற்கு கோவில் ஒன்று அவரது ரசிகர்களால் கட்டப்பட்டுள்ளது என்ற செய்தி வெளிவரவே, அவரைத் தொடர்பு கொண்டு உண்மையா என கேட்க முற்பட்ட போது, அவரின் உதவியாளரே இதை உண்மை என ஊர்ஜிதம் செய்தார். முதன்முதலில் ரசிகர்களுக்கு கோவில் கட்டும் எண்ணத்தை உண்டு பண்ணியவர் குஷ்பூ என்றாலும், மிக விரைவில் ஒரு சில படங்கள் மூலமாகவே (வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு) அப்படி ஒரு இடத்தைப் பிடித்தவர் த்ரிஷாதான். இதைத்தவிர இப்போது இவர் நடித்துக்கொண்டிருக்கும் படங்களிலும், முன்னனி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்திருப்பதனால் நிச்சயம், ஹீரோக்களுடைய ரசிகர்களின் நெஞ்சிலும் இடம் பிடிப்பார் என்பதில் வியப்பில்லை. போதாக்குறைக்கு எல்லா நடிகர், நடிகைகளும் ஒருமுறையாவது அவரது இயக்கத்தில் நடித்துவிட வேண்டும் என்று நினைக்க வைக்கும் டைரக்டர் மணிரத்னத்தின் படத்தில் வேறு நடித்துள்ளார். எனவே இவரது சினிமா எதிர்காலத்தைச் சொல்லவா வேண்டும். என்றாலும் குஷ்பூ, நக்மா, த்ரிஷா என நடிகைகள் ரசிகர்களின் மத்தியில், அவர்களது உள்ளங்களில் கடவுளுக்கு இணையாக கருதப்படுவது ஆச்சர்யத்தையே உண்டுபண்ணுகிறது என்கின்றனர் மூத்த சினிமாக்காரர்கள். நன்றி - சினி சவுத் - Eelavan - 03-29-2004 சிறந்த ஒளிப்பதிவாளரான பி.சி.சிறீராம் அவர்கள் வானம் வசப்படும் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இதிலே கதாநாயகியாக நடிக்கும் பூங்கோதை என்பவரது படம் தான் கீழே உள்ளது இதிலே சிறப்பு இவர் தந்தை செல்வா அவர்களது பேர்த்தி என்பதாகும் - vallai - 03-29-2004 சும்மா சொல்லக்கூடாது பெடிச்சி வடிவாத்தான் இருக்கிறாள் - kuruvikal - 03-29-2004 பொடிச்சி தமிழிச்சியாமே...எண்டாலும் கோயில் ரெம்ப 'ஓவர்....!' அழகை ரசிக்கலாம் ஆராதிக்கக் கூடாது....அதுவும் நிலையில்லாத ஒன்றுதான்....! :wink: :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 03-29-2004 கோவில் கட்டுவது ரொம்ப ஓவர் என்பது உண்மைதான். - Mathan - 04-04-2004 ரஹ்மானின் நியூ படப் பாடல்கள் கேட்டீர்களா? எப்படி இருக்கின்றது? - shanmuhi - 04-04-2004 பாடல்கள் கேட்டேன். ஒரே ஒரு பாடல் என்னைக் கவர்ந்தது. காலையில் தினமும்.... என்ற பாடல் - AJeevan - 04-05-2004 shanmuhi Wrote:பாடல்கள் கேட்டேன். அருமையாக இருக்கிறது. http://www.tamilbeat.com/newsongs/newtamil.html - AJeevan - 04-05-2004 [quote=BBC] ஐரோப்பாவின் டென்மார்க் நகரில் தமிழ் நடிகை த்ரிஷாவுக்கு அவரது ரசிகர்களால் கோவில் கட்டப்பட்டுள்ளது. இப்படியான தனிநபர் வழிபாடுகள்தான் ஒரு சமுதாயத்தை அழிவுக்கு கொண்டு செல்கிறது. - Mathan - 04-05-2004 [quote=AJeevan][quote=BBC] ஐரோப்பாவின் டென்மார்க் நகரில் தமிழ் நடிகை த்ரிஷாவுக்கு அவரது ரசிகர்களால் கோவில் கட்டப்பட்டுள்ளது. இப்படியான தனிநபர் வழிபாடுகள்தான் ஒரு சமுதாயத்தை அழிவுக்கு கொண்டு செல்கிறது. உண்மை. பிரபலங்களும் சாதாரண மனிதர்களே, அவர்கள் ஒன்றும் தேவர்கள் அல்ல. - Mathan - 04-05-2004 குத்து பட விமர்சனம் <img src='http://www.tamilcinema.com/cinenews/images/kuthu_simbu_divyasbanthas.jpg' border='0' alt='user posted image'> ஊரில் உள்ள மசாலா ஐயிட்டங்களை எல்லாம் ஒன்று சேர்த்து அதில் வழிய வழிய, காதல் நெய்யை ஊற்றினால் கமகம 'குத்து' ரெடி! இந்த விபரீத கலவை சில காட்சிகளில் வயிற்றை பிசைய வைப்பதுதான் ஜீரணிக்க முடியாத பகீர்! முந்தைய படமான 'தம்' மிற்கும் இப்போது வந்திருக்கும் 'குத்து' விற்கும் ஆறு வித்யாசங்கள் கேட்டால் ரசிகர்கள் திகைத்து திண்டாடவும் வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் சின்ன சின்ன திருப்பங்களில் தன்னுடைய ஷார்ப் மூளையை பயன்படுத்தி அட போட வைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கடேஷ். கதையை மறுபடி(?) சொல்வதில் தப்பில்லை என்பதால் கதை.... பணக்கார தாதா கலாபவன்மணி. அவருக்கு ஒரே பெண் திவ்யா பந்தனாஸ். கல்லூரிக்கு படிக்க வரும் அவரிடம், காதல் பாடம் கற்க ஆசைப்படுகிறார் சிம்பு. நடுத்தர குடும்பத்து பிள்ளைக்கு, பணக்கார பெண் மீது ஆசை வரலாமா? வரக்கூடாது என்று சொல்வதற்கு சிம்பு என்ன சாதாரண மனுஷனா? அவதாரமாச்சே! இடையில் குறுக்கிடும் அப்பனை, தன் தலையில் ரிப்பனை கட்டிக் கொண்டு விளாசுகிறார் சிம்பு. வில்லன்கள் ஓட, வெற்றியடைகிறது காதல்! விரல் விளையாட்டை ஒலிம்பிக் விளையாட்டு போல் நினைத்து நிறைய மெனக்கட்டிருக்கிறார் சிம்பு. ரசிக்கவும் முடிகிறது! தன் பெண்ணை ஊரெல்லாம் வலை வீசி தேடிக் கொண்டிருக்கும் கலாபவன் மணிக்கு தண்ணி காட்டிவிட்டு அவர் வீட்டிலேயே தன் கல்யாணத்தை முடிக்கும் சிம்புவின் தெம்பு, 100 மைல் வேக அம்பு! அதுமட்டுமா? சிம்புவின் அம்மா அப்பாவை கடத்தி வர தன் கைத்தடிகளை அனுப்புகிறார் வில்லன்! ஆனால் அவர்கள் இருவரும் வில்லன் வீட்டிலேயே விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். (இந்த அப்பளம் எங்கே வாங்கினீங்க? வில்லனிடமே விசாரிக்கிறார் விஜயகுமார். திமிலோகப்படுகிறது தியேட்டர்!) இந்தா எடுத்துக்கோ.. என்று அள்ளி அள்ளி தருகிறார் திவ்யா பந்தனாஸ். கவர்ச்சியையும், நடிப்பையும் சரிவிகிதத்தில் தந்திருக்கிற இந்த தேவதை, ரசிகர்களை நனைக்க வந்த கோடை மழை! விஜயகுமார் பேசும் அந்த வசனங்கள் மனோகராவின் மறுபதிப்பு. மாணவர்கள் மீது கை வைத்தால் அவ்வளவுதான்.... மாணவர் புரட்சின்னா என்னன்னு தெரியுமா? அவங்க மேல கை வச்சு பாருங்க... இப்படியெல்லாம் அவர்பேசுவது ஏதோ யுகப் புரட்சிக்காக என்று நீங்கள் நினைத்தால், ஐயோ பாவம்... எல்லாம் மகன் சிம்புவின் காதலுக்காகதான்! சாமியில் வந்து தூள் கிளப்பிய அந்த கோட்டா சீனிவாசராவா இது? ஸாரி.... இந்த எபிசோடில் மட்டும் ஒரே தெலுங்கு வாசமுலு! கருணாசின் காமெடியில் வியத்தகு வேகம்! சிம்புவின் தோழனாக கல்லூரிக்குள்ளும் வந்து கலக்கியிருக்கிறார். எந்த நேரத்தில் எந்த மாதிரி ரீயாக்ஷன் வருமோ? கதிகலங்க வைத்திருக்கிறார் கலாபவன்மணி. அர்த்த ராத்திரியில் எழுந்து மாமனார் வீட்டுக்கு ஓடிப்போய் மகளை பார்த்துவிட்டு திருப்தியடையும் இந்த ராட்சசன், பல இடங்களில் குழந்தையாக குதூகலிப்பது விசேஷ வெளிப்பாடு! இசையமைப்பாளர் தேவாவின் இசை வாரிசு ஸ்ரீகாந்தின் பாடல்கள் அத்தனையும் குத்து ரகம்! ''நிபுணா நிபுணா..'' விபரீத மெலடி! குத்து...பன்ச்! நன்றி - தமிழ் சினிமா - Mathan - 04-05-2004 BBC Wrote:நடிப்பது தமிழில், பேசுவது ஆங்கிலத்திலா? த்ரிஷாவை கடிந்து கொண்டார் டி. ராஜேந்தர் 'நியூ' பட கேஸட் வெளியீட்டு விழாவில் த்ரிஷா ஆங்கிலத்தில் பேசியதை டி.ராஜேந்தர் கண்டித்தது சரியா? --- அஜீத்தாஸ், பெங்களூர் தெனாலி: த்ரிஷா ஆங்கிலத்தில் பேசியது தவறா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாதவர்கள் மட்டுமே இப்படி மேடைகளில் அறிவுரை சொல்கிறார்கள். நன்றி - சினிசவுத் உங்கள் கருத்துக்களிக்காக இரண்டையும் போட்டுள்ளேன், - AJeevan - 04-05-2004 BBC Wrote:BBC Wrote:நடிப்பது தமிழில், பேசுவது ஆங்கிலத்திலா? த்ரிஷாவை கடிந்து கொண்டார் டி. ராஜேந்தர் மேடையில் இவருக்கு டபிங் கொடுக்க முடியாது என்பதால் தெரியாத மொழியில் பினாத்துவதைவிட தெரிந்த மொழியில் பேசுவதில் தவறில்லை. டி.ராஜேந்தர் ,மகனை ஏன் தமிழ் நடிகைகளுடன் மட்டும் நடிக்க வைக்காமல் இருக்கிறார்? - Mathan - 04-05-2004 AJeevan Wrote:BBC Wrote:[quote=BBC]நடிப்பது தமிழில், பேசுவது ஆங்கிலத்திலா? த்ரிஷாவை கடிந்து கொண்டார் டி. ராஜேந்தர் மேடையில் இவருக்கு டபிங் கொடுக்க முடியாது என்பதால் தெரியாத மொழியில் பினாத்துவதைவிட தெரிந்த மொழியில் பேசுவதில் தவறில்லை. டி.ராஜேந்தர் ,மகனை ஏன் தமிழ் நடிகைகளுடன் மட்டும் நடிக்க வைக்காமல் இருக்கிறார்? அதை ராஜேந்தர் செய்ய மாட்டார். பொதுவாக இது போன்ற பேச்சுக்கள் மேடையில் முழங்குதற்கும், பரபரப்பை உண்டாகுவதற்கும் மக்களை உணர்ச்சி வசப்பட வைப்பதற்கும்தான். |