![]() |
|
ஈழச் செய்திகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஈழச் செய்திகள் (/showthread.php?tid=7368) Pages:
1
2
|
- இராவணன் - 03-09-2004 பிரதேச வாதம் பேசும் கருத்துக்கள் நீக்கப்படுகின்றன. கருணாவிற்கு பொதுமன்ன - vasisutha - 03-09-2004 கருணாவிற்கு பொதுமன்னிப்பு வழங்க விடுதலைப்புலிகள் இணக்கம்? விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலக்கப்பட்டுள்ள திரு. கருணாவிற்கு பொது மன்னிப்பு வழங்க தயாராகவுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். தற்போது கருணா ஈடுபட்டுள்ள விரோத நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவாராயின் அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்க தேசியத் தலைவர் பிரபாகரன் தயாராகவுள்ளதாகத் தெரியவருகிறது. அசோசியேட் பிரஸ் செய்தி ஸ்தாபனத்திற்கே மேற்படி தகவலை தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்ததாக இன்று பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. கருணா தற்போதைய நடவடிக்கைகளை நிறுத்தினால், அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையைத் தொடரும் வகையில் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கத் தயாராகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. கருணா ஒரு தனிமனிதனாக இக் காரியங்களில் ஈடுபட்டு வருவதால், ஒரு இராணுவ நடவடிக்கைக்கான தேவையேதும் இல்லையென தான் கருதுவதாக மேலும் தெரிவித்த திரு.சு.ப.தமிழ்ச்செல்வன், மட்டக்களப்பு பேராயர் அதிவணக்கத்திற்குரிய கிங்ஸ்லி சுவாம்பிள்ளையினூடாக இப் பொதுமன்னிப்புப் பற்றிய விபரங்கள் கருணாவிற்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார். நன்றி: புதினம் இணையத்தளம் www.puthinam.com - Eelavan - 03-09-2004 ஐயா அடிபட்ட தமிழா இவ்வளவு அடிபட்டுமா உமக்குப் புத்தி வரவில்லை அது என்ன கதை மட்டக் களப்புத் தமிழன் யார் சொன்னது அது எவராக இருந்தாலும் கண்டிக்கப் பட வேண்டியது அவர்கள் என்ன சொன்னாலும் சரி அதை நீர் ஏன் தூக்கிப் பிடித்துக் கொண்டு வெளிநடப்புச் செய்கிறீர் புறமுதுகு காட்டுவது அழகல்ல நின்று கருத்துகளைத் தாரும் வெட்டித் திருத்த இராவணன் அண்ணா இருக்கிறார் அவரை எழுப்பிய நளாயினி அக்காவுக்கு நன்றி - vasisutha - 03-09-2004 திருகோணமலை தளபதி பதுமன், கருணாவின் குற்றச்சாட்டை நிராகரித்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி [align=center:a7a969da13]<img src='http://www.lttepeacesecretariat.com/mainpages/images/i08034_01.jpg' border='0' alt='user posted image'>[/align:a7a969da13] திருகோணமலை தளபதி கேணல் பதுமன் வன்னியில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது வேறு தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கலாம் என்று கருணா பிபிசிக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டதை நிராகரித்த கேணல் பதுமன், கிளிநொச்சியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து இது குறித்து விளக்கமளித்துள்ளார். தமிழீழ அரசியற் பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன், ரமேஸ், கரிகாலன், ராம், கௌசல்யன் ஆகியோருடன், கேணல் பதுமன் பத்திகையாளர்களைச் சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். 'மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட போராளிகளையும் மக்களையும் பாதுகாப்பது எமது பொறுப்பு" என்று குறிப்பிட்டுள்ள பதுமன், ஒரு தனிநபரின் முடிவு முழுமையான போராட்டக் கட்டுமானத்தையோ அல்லது மக்களின் அபிலாசைகளையோ பாதித்துவிடாதிருக்க, எம்மாலான அனைத்தையும் நாம் செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு-அம்பாறை மக்களும் விடுதலைப் புலி உறுப்பினர்களும் தேசியத் தலைமையை முழுமையான நம்பி ஏற்றுக்கொண்டே செயற்பட்டுவருவதையும் பதுமன் சுட்டிக்காட்டியுள்ளார். புதினம்.இணையம் - adipadda_tamilan - 03-09-2004 Eelavan Wrote:ஐயா அடிபட்ட தமிழா ------------------------------------------------------- ஈழவன், நன்றி உங்களது பதிலுக்கு. நீங்கள் எழுதியபடி நாங்கள் சிங்களவனாலும் முஷ்லிமினாலும் பட்ட அடிகள் கொஞ்சமில்ல. என்னைப்பொறுத்தவரை புலிகள் அங்கு இருப்பதால்தான் தமிழன் கொஞ்சமேனும் நிம்மதியாக வாழ்கிறான். ஆனால் தற்சமயம் எதோ நடக்குதுஎனும்போது எமது வீட்டிற்குள்ளயெ புருசன் பெண்சாதி சண்டை றோட்டிற்கு வந்த்மாதிரி வெட்கமாகவுள்ளது. இதை சிலர் வேறுமாதிரி எழுதும்போதுதான் கஷ்டமாகவிருக்கிறது. தமிழருக்கேற்ற வெளினாடு எனும் பகுதியில் பார்க்கவும் யார் எழுதியிருக்கிறார் என்டு. - vasisutha - 03-09-2004 ஆதரவாளரை விடுவிக்கக் கோரி ரவிராஜ் நேற்று திடீர் வீதிமறியல்!; பொலீஸாரால் தடுத்துவைக்கப் பட்ட கூட்டமைப்பு ஆதரவாளரை விடு விக்கக்கோரி, தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர் ந.ரவிராஜ் சாவகச்சேரி யில் நேற்று ஷதிடீர்| வீதிமறியல் போராட் டம் ஒன்றை நடத்தினார். சாவகச்சேரி வைத்தியசாலைக் கும் சங்கத்தானைக்கும் இடைப்பட்ட ஏ-9 வீதிப்பகுதியில் பிற்பகல் 4 மணி முதல் சுமார் ஒருமணிநேரம் அவர் மறியல் போராட்டத்தை நடத்தினார். ஒலிபெருக்கிச் சாதனம் பொருத் தப்பட்ட ஓட்டோவில் தமிழ்க் கூட்ட மைப்புக்கு ஆதரவாகச் சிலர் நேற்று சாவகச்சேரிப் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்களது ஓட்டோவும், ஈ.பி.டி.பி அமைப்பினரின் பிரசார வாகனமும், சாவகச்சேரி ஆஸ்பத்திரிக்குச் சமீப மாக அருகருகே நின்று பிரசாரத் தில் ஈடுபட்டனர் என்றும் - அப்போது, ஈ.பி.டி.பி வாகனத்துக்கு பாதுகாப்பளிக்க வந்திருந்த பொலீ ஸார் கூட்டமைப்பினரின் பிரசார ஓட் டோவை அணுகி, ஒலிபெருக்கிக்கான அனுமதிப்பத்திரம் உண்டா என்று கேட்டனர் என்றும் - ஒலிபெருக்கி அனுமதிப்பத்திரம் காண்பிக்கப்படாததையடுத்து, ஓட் டோவில் இருந்தவரான எஸ்.சதாசிவம் (வயது46) என்பவரைப் பொலீஸார் கைதுசெய்து சாவகச்சேரிப் பொலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற னர் என்றும் - கூறப்படுகிறது. இதுகுறித்து ந.ரவிராஜுக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அவர் உட னடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். கைதுசெய்யப்பட்ட நபரைப் பொலீஸார் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரி வீதிமறிய லிலும் அவர் ஈடுபட்டார். அவரது ஆதர வாளர்களும் அவருடன் மறியலில் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்துத் தடைப்பட்டது. இதனையடுத்து, கைது செய்த நபரை அந்த இடத்திற்கு மீண்டும் அழைத்து வந்து பொலீ ஸார் விடுவித்தனர். இதன்பின்னர் வீதி மறியல் கைவிடப் பட்டு போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது செய்தி உதயன் - கண்ணன் - 03-09-2004 ......................... - adipadda_tamilan - 03-10-2004 கண்ணன் Wrote:அடிபட்ட தமிழன் அண்ணா கோவிச்சுகாதங்க ===================================================== கண்ணன், நீங்கள் "கோபிக்கவேண்டாம் என்று சொன்னதே உங்களது பெரிய மனதை காட்டுகிறது - நன்றி. மற்றது அவர்களின் இணையத்தின் குறைபாடுகளும் தெரியாது. நடந்ததை மறப்போம். - vasisutha - 03-10-2004 ஈழநாதம் 09-03.04 அன்று வெளிவந்த ஆசிரியர் தலையங்கம் ஏன் செய்யவில்லை! கருணா தமிழீழத் தேசியத் தலைவருடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர். நம்பிக்கைக்கும் பாத்திரமாகவும் இருந்தவர். அதுமட்டுமல்ல தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் இருந்து ஏனைய தளபதிகள், பொறுப்பாளர்கள் ஆகியோரைவிட அதிகபட்ச அதிகாரங்களையும் பெற்றுக் கொண்டிருந்தவர். இவ்வாறாக தலைமையுடன் நெருக்கமான உறவையும், தொடர்பையும் கொண்டிருந்த கருணா கிழக்கிற்கு அதிக பிரதிநிதித்துவத்தை ஏன் தலைவரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல, அவ்வாறு பேசித்தீர்வு காணமுடியாது என்ற முடிவிற்கு கருணா வருவதற்கு இத்தகைய கோரிக்கைகள் எதுவும் இதற்கு முன்னர் கருணாவினால் முன்வைக்கப்பட்டு தலைவரினால் நிராகரிக்கப்ட்டதுண்டா? அன்றி வேறு யாராவது இத்தகைய கோரிக்கையை முன்வைத்த போது அது தேசியத் தலைவரினால் நிராகரிக்கப்பட்டதாகவோ அன்றி கருத்திற் கொள்ளப்படாமலோ விடப்பட்டது என கருணாவிற்கு ஏதாவது தகவல் தான் கிடைத்ததுண்டா? சரி தலைவருடன் நேரடியாக தனது இக்கோரிக்கைகளை முன்வைக்க விரும்பவில்லையென எண்ணியிருப்பின் ஏனைய தளபதிகளையாவது அனுப்பி தலைவரிடம் இக்கோரிக்கையை முன்வைத்திருக்கலாமல்லவா? தற்பொழுது மட்டு-அம்பாறை மக்களின் உணர்வுகளையே தாம் பிரதிபலிப்பதாகத் கூறும் கருணா, மக்களின் உணர்வுகள் இவ்வாறிருக்கின்றன அதற்குத் தீர்வு காணப்படுதல் வேண்டும் என தனது தளபதிகளிடம் விடயத்ததைக் கூறியாவது தலைவரிடம் அனுப்பி வைத்திருக்கலாமல்லவா? செய்தி ஊடகங்கள் மூலம் தனித்துச் செயற்படப் போவதாக அறிவிப்புச் செய்துவிட்டு, தனது துரோகத்தனமான செயற்பாட்டிற்கு பிரதேச வாதத்தைக் கிளப்புவதும், மக்களை பகடைக் காய்களாவும் போராளிகளையும் பலிக்கடாக்கள் ஆக்கும் எந்த வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ளுவதும் எப்படி ஏற்புடையதாக இருக்க முடியும்? இது கருணா விடுதலைப் புலிகளுக்கு செய்த துரோகமாக மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கும் செய்த துரோகமாகக் கொள்ளாது வேறு எவ்வாறு கொள்ள முடியும்? இது ஒருபுறம் இருக்க அண்மைக் காலத்தில் தலைவர் பிரபாகரனால் அழைக்கப்பட்டும் வன்னிக்குச் செல்ல கருணா தயாராக இருக்கவில்லை. இதனை அவரே ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். தான் வன்னிக்குச் சென்றிருப்பின் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் எழுப்புகின்றார். இதில் உள்ள முக்கியமான வினா என்னவெனில் அவர் அத்தகைய முடிவிற்கோ சந்தேகம் கொள்வதற்கோ காரணம் என்ன? அதாவது தலைவர் பிரபாகரன் அவர்களுடன் தனக்கு ஏற்கனவே முரண்பாடு இருந்ததாக அவரே கூறவில்லை. தலைவர் பிரபாகரன் இவரின் செயற்பாடுகள் எவற்றிக்கும் முட்டுக்கட்டை போடவும் இல்லை. அவரை கட்டுப்படுத்தும் வகையில் அறிவிப்புக்கள் எதையும் விடுக்கவுமில்லை. அவரின் பொறுப்புக்கள், பதவிகள் எதையும் பறிக்கவும் இல்லை. அதுமட்டுமல்ல பேச்சுவார்த்தைகளில் அவர் தொடர்ச்சியாக கலந்துகொள்ள தடையும் விதிக்கவில்லை. அவ்வாறிருந்தும் கருணா ஏன் தலைவர் பிரபாகரன் அவர்களின் அழைப்பை ஏற்று வன்னி செல்லவில்லை? வன்னி சென்றால் தாம் தடுத்து வைக்கப்படுவோம் என்ற சந்தேகம் ஏன்வந்தது? அதாவது முரண்பாடோ அன்றிக் குற்றங்களோ அற்றவராக இருப்பின் அவர் ஏன் இத்தகைய சந்தேகம் கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டது? மாறாக விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தினால் கருணா அமைப்பிலிருந்து நீக்கப்படும் வரை அவர் மீது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டோ அன்றி தனிப்பட்ட நடத்தைகள் தொடர்பான குற்றச்சாட்டோ சுமத்தப்படவில்லை. அவர் தமிழீழ தேசியத் தலைவருக்கும், மக்களுக்கும் துரோகம் இழைத்தாகவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக கருணா பிரிந்து செல்வது தொடர்பான செயற்பாட்டின் மீதே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது கருணா மீதான நடவடிக்கை அண்மைய அவரின் செயற்பாட்டின் விளைவு மட்டுமே. ஆகையினால், கருணா மடியில் கனமில்லை எனின் தேசியத் தலைவர் பிரபாகரனைச் சந்தித்திருக்க முடியும். தனது கோரிக்கையை முன்வைத்திருக்க முடியும். தமது மக்களின் அபிலாசைகள் இவை என கூறியிருக்க முடியும். ஆனால், கருணா அவ்வாறு நடந்து கொள்ளாது இயக்க விதிகளுக்கும், ஒழுங்குகளுக்கும் மாறுபட்ட விதத்தில் நடந்து கொண்டுள்ளார். அர்த்தமற்றதும், உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதோடு பொய்யான தகவல்களையும் வெளியிடுபவராக உள்ளார். தனது தனிப்பட்ட hPதியிலான தான்தோன்றித்தனமான முடிவுகளுக்கு மக்களைச் சாட்டாக்கிக் கொள்ள முனைகிறார். கருணாவின் இச்செயலானது தமிழ் மக்களுக்குப் பெரும் வேதனையையும், துயரத்தையும் அளிப்பதாகியுள்ளது. சிங்களப் பேரினவாத சக்திகள் ஒன்றுதிரண்டு தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை தோற்கடிக்க வேண்டும் என முனைப்புடன் தேர்தலில் இறங்கியுள்ள நிலையில், கருணாவின் நடவடிக்கையானது தமிழ் மக்கள் இடையில் பிளவுகளையும் அவநம்பிக்கைகளையும், தோற்றிவிப்பதாகவும் மாறியுள்ளது. தமிழ் மக்கள் தமது தேசியம் பற்றிய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பினும்கூட, கருணாவின் நடவடிக்கை தமிழ் தேசியத்திற்கு ஊறு விளைவிக்கும் ஒன்றே ஆகும். நன்றி: ஈழநாதம் - vasisutha - 03-11-2004 <b>தமிழ் மக்கள் அணிதிரண்டு நிற்கிறார்கள் என்பதை உலகிற்கு பறை சாற்றும் தேர்தலாக இத் தேர்தல் அமைய வேண்டும்: புதுரை இரத்தினதுரை </b> தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு ஒரு தலைமையின் கீழ் அணி திரண்டு நிற்கிறார்கள் என்பதை உலகிற்கு பறை சாற்றும் தேர்தலாக எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் அமைய வேண்டும். இதன் மூலமே தமிழர் பலத்தை வெளிக்காட்;ட முடியும். எனவே இந்தத் தேர்தல் ஒரு போடி போக்கான தேர்தலாக அமையக் கூடாது. இவ்வாறு, தமிழீழ விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை அவர்கள் தெரிவித்தார். நேற்று முன்தினம் பிற்பகல் யாழ் பல்கலைக்கழக நு}லகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிதர்சனம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'அம்மா நலமா" என்ற முழு நீளத் திரைப்பட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு வெளியீட்டுரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது விடுதலைப் போராட்டம் ஏதோ ஒரு வகையில் தொடருமா அல்லது சந்தைக் கூட்டம் போல் கூடக் கலையுமா? என்று உலகம் பார்க்கின்றது போல் தெரிகின்றது. இந்தத் தேர்தல் மூலம் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படாவிட்டாலும் ஒன்றேயொன்று ஏற்படப் போகிறது. அது உயிரையும் இரத்தத்தையும் விதைத்து நடக்கின்ற இந்தப் போராட்டம் நின்று விடுமா அல்லது பெரிய முனைப்புடன் தொடர்ந்து இறுதி வரை நடக்குமா என்ற சமிக்ஞையாக இந்த தேர்தல் அமையப்போகிறது. அதைத் தீர்மானிக்கின்ற சக்திகளாக நீங்கள் இருக்கப் போகின்றீர்கள். பல கருத்துக்கள் குற்றச்சாட்டுக்கள் உங்கள் மத்தியில் இருக்கின்றது. இது எல்லாவற்றிற்கும் மேலாக நாங்கள் விதைத்துப் புதைத்த அந்த மாவீரர்களின் கனவான இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். அது ஒரு சமிக்ஞையாக இந்த பொதுத் தேர்தல் அமையப்போகிறது. puthinam.com கருணாவின் துரோகம் விட - vasisutha - 03-11-2004 <b>கருணாவின் துரோகம் விடுதலைப் புலிகளுக்கு மட்டுமானதல்ல! ஜெயராஜ்</b> இன்று தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, அரசியல் நோக்கர்கள், ஆய்வாளர்கள் மத்தியில் உள்ள பிரதானமான கேள்வி கருணா ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என்பதே. அதாவது யுத்த நிறுத்தம் அமுலில் உள்ள போதும் தமிழ் மக்கள் தமது தேசிய எழுச்சியை வெளிப்படுத்தும் நோக்கிலும் தேர்தல் ஒன்றை எதிர்கொண்டுள்ள வேளையில் சர்வதேச சமூகம் அதன் முடிவை எதிர்பார்த்துள்ள நிலையிலும் கருணா அவற்றிற்கு மாறாக ஏன் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் என்பதேயாகும். கருணா குறிப்பிடுவது போன்று மட்டு-அம்பாறை மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டதனால் இத்தகையதொரு நிலைப்பாட்டை மேற்கொண்டார் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க வாதமல்ல. அதுவுமல்லாது மட்டு-அம்பாறை மாவட்டங்கள் தமிழீழத் தேசியத் தலைமையினால் புறக்கணிக்கப்பட்டதாக ஒரு பேச்சுக்குத்தான் வைத்துக் கொண்டாலும் கூட கருணா தனது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு இக்காலப் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்? அண்மையில் அவரால் மட்டு-அம்பாறை மாவட்டத்திற்கென ஏதாவது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டனவா? அன்றி மட்டு-அம்பாறை மாவட்டத்திற்கு பாதகமான நடவடிக்கைகள் எதையாவது விடுதலைப் புலிகளின் தலைமை மேற்கொண்டதா? அவ்வாறு எதுவும் நிகழ்ந்ததாக இல்லை. இதேவேளை தமிழீழத் தேசியத் தலைவர் ஆயிரம் போராளிகளை அனுப்புமாறு கோரியமையே முரண்படுவதற்கும், பிரிந்து செல்வதற்குமான காரணியெனக் கருணா கூறுவது எந்தளவு பொருத்தப்பாடானது. ஒரு புறத்தில் தற்பொழுது யுத்தமோ, யுத்தத்திற்கான தயாரிப்புகளோ எவையுமே நடைபெறுவதாக இல்லை. இந்நிலையில் போராளிகளை அனுப்புமாறு கோரினார் என்பதோ, வடக்கில் போரிட போராளிகளை அனுப்பப்போவதில்லை என்பதோ பொருத்தப்பாடானதொன்றல்ல. அவ்வாறு அனுப்புவதற்கு தான் விரும்பவில்லை என்றால் கூட அதனை உரிய முறையில் அல்லவா வெளிப்படுத்தியிருத்தல் வேண்டும். இதேவேளை ஒரு விடுதலை இயக்கமாயினும் சரி ஒரு நாட்டு இராணுவமாயினும் சரி போராளிகளையும் துருப்புக்களையும் ஒருங்கிணைப்பதும், போரிடுவதும், யுத்த தந்திரோபாயத்தின் பாற்பட்டதே யொழிய பிராந்திய hPதியிலான பொறுப்பானவர்களின் விருப்பு வெறுப்பின்பாற்பட்டதல்ல. அதுமாத்திரமல்ல எதிரிகளை எங்கோ ஒரு பகுதியில்-எமக்குச் சாதகமானதொரு களமுனையில் தோற்கடிப்பதன் மூலம் ஒட்டுமொத்தமானதொரு வெற்றியை தேடிக்கொள்வதே இராணுவ hPதியிலான மதிநுட்பமாகும். இந்த வகையில் வடக்குப் போர் முனையென்றால் என்ன? கிழக்குப் போர் முனையென்றால் என்ன? படைகளை ஒருங்கிணைப்பதும் தாக்குதல்களை மேற்கொள்வதும் வெற்றியைத் தேடிக்கொள்வதுமே பொருத்தப்பாடான தந்திரோபாயமாக இருக்க முடியும். ~ஐயசிக்குறு| இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டபோது சிறிலங்கா இராணுவத்தின் போரிடும் ஆற்றலுள்ள சகல டிவிசன் படைகளும் யுத்த முனையில் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக 53,54,55,56 வது டிவிசன்களுடன் 52 வது டிவிசனும் பயன்படுத்தப்பட்டது. இந்நடவடிக்கையில் விடுதலைப் புலிகளை முறியடித்து விட்டால் விடுதலைப் போராட்டமே முடிவிற்குக் கொண்டுவந்து விடப்படும் என்பது அவர்களது தீர்மானமாகும். இதேவேளை அவரை எதிர்த்துப் போரிட்ட விடுதலைப் புலிகளும் அதை ஒத்த குறிக்கோளே இருந்தது. ஐயசிக்குறு நடவடிக்கைகளில் சிறிலங்கா இராணுவத்தை தோற்கடித்தால் அதை ஒரு போரிட முடியாத இராணுவமாக முடக்க முடியும் என்பதே புலிகளின் எதிர்பார்ப்பாகும். இந்நிலையில் விடுதலைப் புலிகளின் படையணிகளும் வடக்கு-கிழக்கு எங்குமிருந்தே திரட்டப்பட்டன. ஒட்டுமொத்தத்தில் இந்நடவடிக்கையானது இரு தரப்பினரதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒன்றாகவே இருந்தது. இதில் யார் வெற்றி பெறுகின்றனரோ அவர்களுக்கு இராணுவ hPதியிலான மேன்மை கிடைப்பது தவிர்க்கப்பட முடியாத தொன்றாகவே இருந்தது. இவ்வாறே புலிகளின் இராணுவ மேலாண்மை உயர்ந்தது. இதேவேளை இவ் இராணுவ hPதியிலான மேலாண்மை என்பது தனியாக வடக்கிற்கோ-கிழக்கிற்கோ என்பதல்ல. தமிழர் தாயகப் பகுதி; எங்குமேயாகும். எடுத்துக்காட்டாக இன்று கருணா தனது கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் மட்டக்களப்பு-அம்பாறைப் பகுதிகள் அங்கு போரிட்டுப் பெறப்பட்ட வெற்றிகளால் கிடைக்கப் பெறவில்லை. ரிவிரெசவிற்கெனவும், ஐயசிக்குறுவிற்கெனவும் இராணுவம் தனது படைகளைத் திரட்டியபோது அங்கு ஏற்பட்ட இடைவெளிகளினால் பெறப்பட்டதாகும். ஒருவகையில் ~ஐயசிக்குறு| முறியடிப்பால் கிடைக்கப்பெற்ற பலாபலனாகும். ஆகையினால் போரில் வடக்கிற்காகப் போரிட்டதாகவோ, கிழக்கிற்காகப் போரிட்டதாகவோ கூறிக்கொள்ளுவதென்பது தவறு. தமிழர் தாயகத்திற்காகப் போரிட்டோம். அதில் வடக்கிலும் கிழக்கிலுமாக பெரும்நிலப்பரப்பு எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வரப்பட்டது என்பதே உண்மை. இதைவிடுத்து தமிழர் தாயகத்திற்காகப் போரிட்டு மடிந்த மாவீரர்களை பிரதேச வாதத்திற்குள் கருணா உட்படுத்த முற்படுவதாவது அவரின் வரட்டுத்தனமான சிந்தனையையும் குறுகிய நோக்கிலான அணுகுமுறையையுமே எடுத்துக்காட்டுவதாயுள்ளது. அடுத்ததாக இன்று தமிழ் மக்கள் தமது தேசிய எழுச்சியை சர்வதேசத்தின் முன் நிரூபிப்பதற்காக முற்பட்டுள்ள ஒரு காலகட்டமாகும். இதற்கென தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு தமிழ்த் தேசிய எழுச்சியை வெளிப்படுத்துவதற்கு எதிர்வரும் ஏப்ரல் 2ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலை பயன்படுத்திக்கொள்ள முற்பட்டு நிற்கும் வேளையாகும். இதற்கு வடக்கு-கிழக்கிற்கு அப்பால் வாழும் மக்களையும் அணிதிரட்டுவதற்காக சிறியளவிலாயினும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுமுண்டு. இக்காலப் பகுதியில் தமிழ்த்; தேசிய எழுச்சிக்கு ஊறுவிளைவிக்கும் நடவடிக்கைகளை யார் மேற்கொண்டாலும் அது தமிழ்; இனத்திற்கு துரோகம் இழைக்கும் நடவடிக்கையாகவே கொள்ளத்தக்கதாகும். இத்தகையதொரு சூழ்நிலையில் கருணா தமிழ்த் தேசியத்தை பாதிக்கத்தக்க வகையில் நடந்துகொண்டது ஏன்? மட்டு-அம்பாறை மக்களின் பெயரால் தமிழ்த் தேசியத்துக்கு அவர் விளைவிக்கும் குந்தகம் மட்டு-அம்பாறை தமிழ் மக்களுக்காயினும் நன்மை பயக்கத்தக்கதா? கருணாவின் தற்போதைய நடவடிக்கைகளுக்கு அடிப்படையில் இருக்கக் கூடிய காரணிகள் இரண்டு மட்டுமே. 1. அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒழுங்கு விதிகளுக்கு மாறான வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருத்தல் வேண்டும். 2. தமிழ்த் தேசிய வாதத்திற்கெதிரான உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளுக்கு அவர் விலைபோயிருத்தல் வேண்டும். கருணாவின் செயலுக்கு இவ்விரண்டு காரணிகளில் ஏதாவது, ஒன்றாகவும் இருக்கலாம், சிலவேளை இரண்டுமே ஒருமித்த நிலையில் இணைந்ததாகவும் இருக்கலாம். கருணாவை பொறுப்பிலிருந்து நீக்குவது தொடர்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலக அறிக்கையானது கருணாவிற்கு பின்னால் சில தீய சக்திகள் இருப்பதாகத் தெரிவிக்கின்றது. ஆயினும் எவரையுமே, எந்த நாட்டையுமோ அது சுட்டிக்காட்டவில்லை. ஆயினும், கருணாவின் செயலுக்கு சிறிலங்கா ஆட்சியாளர்களில் ஒரு தரப்பின் குறிப்பாக, சனாதிபதி சந்திரிகாவின் தரப்பின் ஆதரவு இருப்பதாகவே ஊகிக்க முடிகிறது. எடுத்துக்காட்டாக, சனாதிபதியின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகத்துறை கருணாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியிடும் தகவல்கள் இதனையே வெளிக்காட்டுவதாய் உள்ளது. கருணாவின் பின்னால் உள்ள தீய சக்திகள் அவை உள்நாட்டு சக்திகளாக இருப்பினும் சரி, வெளிநாட்டு சக்திகளாக இருப்பினும்சரி தற்பொழுது அவை இத்தகையதொரு நகர்விற்குச் சென்றதற்குக் காரணம் என்ன? அதாவது யுத்தம் ஓய்ந்துள்ள நிலையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என்ற நிலையிலும் இத்தகையதொரு குழப்பத்தை ஏற்படுத்தி வடக்கு-கிழக்கின் ஸ்திர நிலையை குழப்பியதற்கு வேண்டி தேவைதான் என்ன? இங்குதான் ஏப்ரல் 2ம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் முக்கியத்துவம் பெறுகின்றது. இத்தேர்தலானது நிச்சயம் தமிழ் மக்களின் தேசிய எழுச்சியினை வெளிப்படுத்தும் ஒன்றாக அமையும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அதுமட்டு மல்ல, இத்தேர்தலானது சிறிலங்கா அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் வலுவைத் தமிழருக்குக் கொடுக்குமெனவும் அரசியல் நோக்கர்களால் எதிர்வு கூறப்பட்;டது. ஆனால் இவை எவையுமே சிறிலங்கா சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளுக்கோ தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட வெளிநாட்டுச் சக்திகளுக்கோ உவப்பானதாக இருக்கவில்லை. தமிழரின் தேசிய எழுச்சியை மழுங் கடித்துவிட அவர்கள் ஏற்கனவே மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில் புதியதொரு முயற்சியை அவர்கள் மேற்கொண்டிருக்கலாம். இதற்கு அவர்கள் கருணாவின் பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம். அடுத்ததாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து கருணா புலிகள் இயக்கத்தின் ஒழுங்கு கட்டுப்பாட்டு விதிகளை மீறியுள்ளார் எனக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளதேயொழிய எந்தவகையில் அவை மீறப்பட்டன என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், தம்மீதான குற்றச்சாட்டுக்கள் எத்தகையவை என்பது அவரால் அறியப்பட்டதாகவே இருக்கும். ஏனெனில் தான் இழைத்த குற்றங்கள் அவரால் அடையாளங் காணத்தக்க வகையில் விடுதலைப் புலிகள் அமைப்பை நன்கே அறிந்து கொண்டிருந்தவராவார். இந்நிலையில் தான் தலைமைப்பீடத்தின் அழைப்பை ஏற்று அவர் வன்னிக்குச் செல்லத் தயாராக இருக்கவில்லை. தனது கட்டுப்பாட்டை மீறிய செயல்கள், குற்றச் செயல்கள் என்பனவற்றை மூடிமறைக்கும் வகையில் உணர்ச்சிகர மானதொரு விடயத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளர். ஆனால் இது எந்த வகையிலும் மட்டு-அம்பாறை மக்களுக்கு நன்மை பயக்கத்தக்கதல்ல. கருணாவின் தற்போதைய நடவடிக்கையானது தமிழீழத் தேசியத் தலைமைக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இழைக்கப்பட்ட துரோகம் என்பது வெளிப்படையானது. அதாவது இயக்கத்தின் கட்டுப்பாடுகள், ஒழுங்கு விதிகள் என்பனவற்றை மீறியதோடு மட்டுமல்ல பல பாதிப்புக்களையும் விளைவிக்கத் தக்கதொன்றாகவே அமையத் தக்கதாகும். இதில் குறிப்பாக, தமிழீழத் தேசியத் தலைமையை ஏற்றுப் போராட்டத்தில் இணைந்த போராளிகளை தேசியத் தலைமைக்கு எதிரான கிளர்ச்சிக்குப் பயன்படுத்த முற்படுவதானது அப்பட்டமான துரோகத்தனம் மட்டுமல்ல மோசடியும் கூட. அதுமட்டுமல்ல தமிழீழத் தேசியத் தலைமை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கென வழங்கிய பெருமளவிலான ஆயுதத் தளபாடங்கள் தமிழ் மக்களின் நலனுக்கு எதிராகவே பயன்படுத்த முற்படுவதானது மன்னிக்க முடியாத குற்றமாகும். அத்தோடு கருணாவின் நடவடிக்கையானது தனியாக விடுதலைப் புலிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம் மட்டுமல்ல. தமிழ் தேசியத்திற்கும் இழைக் கப்பட்ட துரோகமாகும். அதாவது ஐக்கியப்பட்டு தமிழ்த் தேசிய எழுச்சியை மக்கள் வெளிப்படுத்த முற்பட்டுள்ள இவ்வேளையில் பிரதேச வாதத்தை கிளப்பியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரிவினையையும் வேறுபாட்டையும் ஏற்படுத்த மேற்கொண்டிருந்த முயற்சியாகவே கொள்ளத்தக்கது. ஆனால் விடுதலைப் புலிகளுக்கும், தமிழ்த் தேசியத்திற்கும் இழைத்த துரோகங்கள் ஒருபுறமிருக்க மட்டு-அம்பாறை மக்களுக்கு இவர் இழைத்துள்ள துரோகமானது மிகவும் உயர்வானது. மட்டு-அம்பாறை மக்கள் தங்கள் பலமே விடுதலைப் புலிகள் தான் என நம்பிக்கொண்டிருக்கையில் விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தும் நோக்கில் மேற்கொண்டுள்ள நடவடிக்கையானது மட்டு-அம்பாறை மக்களை பெரியளவில் பலவீனப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே உள்ளது. அதாவது கருணா மட்டு-அம்பாறை மக்களை புறக்கணிப்பதாகக் கூறிக் கொண்டு தற்பொழுது மேற்கொண்டுள்ள நடவடிக்கையானது மட்டு-அம்பாறை மக்களை அப்பிராந்தியத்திலேயே பலவீனமானதொரு நிலைக்குத் தள்ளியுள்ளது. அரசியல் - இராணுவ hPதியில் இப்பலவீனம் வெளிப்படுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக ஏப்ரல் 2இல் நடைபெறவுள்ள தேர்தலில் மட்டு. தேர்தல் மாவட்டத்தில் நான்கு ஆசனங்களையும் அம்பாறை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறங்கியது. ஆனால் தற்பொழுது கடந்த தேர்தலில் கிடைத்த ஆதாரங்களையே (மட்டு-03, அம்பாறை-01) தக்கவைத்துக் கொள்வதற்கே பெரும்முயற்சி மேற்கொள்ள வேண்டிய நிலையைக் கருணாவின் நடவடிக்கை தோற்றுவித்துள்ளது. இராணுவ hPதியில் பெறப்பட்டிருந்த பலம் கருணாவின் செயலால் சிறிதளவிற்கேனும் பாதிப்பிற்கு உள்ளாகலாம் என்பது நிராகரிக்கப்பட முடியாததே. ஒருபுறத்தில் போராளிகள் மனச் சோர்வு, உற்சாகமின்மை என்பனவும், மறுபுறத்தில் போராளிகள் விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்குதல் அதிகரித்த போக்கிலானதாக இருப்பதற்கும் வாய்ப்புண்டு. இந்த வகையில் கருணாவின் துரோகமானது விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு மட்டுமல்ல தமிழ்த் தேசியத்திற்கும், மட்டு-அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கும் செய்த துரோகமாகவே கொள்ளத்தக்கதாகும். மாறாக சிங்களப் பேரினவாத சக்திகளுக்கும், தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு எதிரான சக்திகளுக்கு தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்ததாகவுமே இருக்கும். நன்றி: ஈழநாதம், - (10.03.04) தமிழ்நாதம். - vasisutha - 03-11-2004 கண்ணுக்குட்டி தான் எழுதின எல்லாம் முழுசா அழிச்சிருக்கிறார். அப்ப அவருக்க எச்சரிக்கை இல்லையா? :evil: - PAAMARAN - 03-13-2004 தவறான பரப்புரைகளுக்கான இடம் இதுவல்ல - மோகன் - Mathivathanan - 03-13-2004 [quote=PAAMARAN]தவறான பரப்புரைகளுக்கான இடம் இதுவல்ல - மோகன்ஒரு 15 நிமிஷம் மற்றத் தளங்கள் பார்க்கப்போனால் அதுக்கிள்ளை இப்பிடியாக்கிடக்கு.. மட்டக்களப்பு செய்திபோலை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- PAAMARAN - 03-14-2004 [quote=PAAMARAN]தவறான பரப்புரைகளுக்கான இடம் இதுவல்ல - மோகன் அண்ணாச்சி மோகன் நியமாகவே நான் குழம்பீட்டேனுங்க..... நான் ஒண்ணும் சொல்லலீங்க அவங்க சொன்னத சொன்னேங்க அம்முட்டுத்தான்........ - Sangili - 03-14-2004 உந்தாளை வெளிநாடுகளுக்கு அனுப்பியது அதைவிட பெரிய தப்பு - sOliyAn - 03-14-2004 அந்தாளை அனுப்பியதும் தப்பு.. அந்தாளின்ரை உளறல்களை இங்க போடுறதும் தப்பு. - Paranee - 03-14-2004 மொத்தத்தில் அவரே தப்புத்தான் |