![]() |
|
சுவாரசியமான செய்திகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: சுவாரசியமான செய்திகள் (/showthread.php?tid=7365) Pages:
1
2
|
- Mathan - 04-08-2004 BlueTooth பற்றி தமிழில் ஏதும் படித்தால் நிச்சயமாக பகிர்ந்து கொள்கின்றேன் பரணி. - Mathan - 04-12-2004 40 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர், தனக்குத்தானே சிசேரியன் சத்திரசிகிச்சை மேற்கொண்டு, பிள்ளையைப் பெற்று எடுத்துள்ளார் என்பது நம்மைத் திடுக்கிட வைக்கும் செய்திதான். மெக்ஸிக்கோவில்தான் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு கிராமப்புறத்தில் வாழந்துவந்த இப்பெண்ணின் வசிப்பிடத்தில், மின்சார வசதியோ, குடிநீர் வசதியோ கிடையாது. தனது பிரசவ நேரம் நெருங்கியபோது, இயற்கையாகப் பிள்ளையைப் பெற முடியாது இவர் வேதனையில் துடித்திருக்கின்றார். இவர் வீட்டிலிருந்து மருத்துவ மனைக்குப் பயணிக்க 8 மணி நேரம் தேவை.பிள்ளையை எப்படியாவது பெற்றாக வேண்டும் என்ற வேகத்தில் செயற்பட்டு இருக்கின்றார். மடக்கு மடக்கு என்று மதுவை அருந்திய இவர், சமையலறைக் கத்தியைக் கொண்டு, அடிவயிற்றை வெட்டிப்பிளக்க முயற்சி செய்து, தனது மூன்றாவது முயற்சியில் வெற்றியும் ஈட்டியிருக்கின்றார். பிள்ளை உயிரோடு வெளியே வந்துவிட்டது. இப்பொழுது மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வரும் இந்தப் பெண் நலமாக இருக்கின்றார். பிள்ளையும் நலமாக இருக்கின்றது. முறத்தால் புலியை விரட்டிய அன்றைய வீரப் பெண்ணை, இந்த நவீன பெண்மணி இன்று ஓரங்கட்டி இருக்கின்றார். நன்றி - சூரியன் வெப்தளம் - Mathan - 04-18-2004 வேடிக்கையான சவால் .. முயன்று பாருங்கள்... என் நண்பர் என்னிடம் சொன்னார்... உங்களுக்கு மொத்தம் மூன்று வாய்ப்புக்கள் தரப்படும்.. நீங்கள் வேகமாகக் கீழேயுள்ள வார்த்தைகளின் நிறத்தை ஆங்கிலத்தில் சொல்லவேண்டும்... ( வார்த்தைகளின் நிறத்தை மட்டுமே...வார்த்தையை அல்ல....) நான் முயன்று பார்த்தேன்.. என்னால் அவ்வளவு வேகமாய் மூன்று வாய்ப்புகளுக்குள் தடங்கலில்லாமல் சொல்ல இயலவில்லை.. உங்களால் முடிகிறதா என முயன்று பாருங்கள்.. <img src='http://homepage.rub.de/muthu.karuthadurai/weblog/color.jpg' border='0' alt='user posted image'> நன்றி - முத்து |