![]() |
|
சுட்ட கவிதை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: சுட்ட கவிதை (/showthread.php?tid=7322) |
- Mathan - 03-22-2004 ரகசியமில்லாத சிநேகிதனுக்கு... யார் கேட்டது கீறல் கோடிழுக்கும் உன் பார்வைக் கதிர்வீச்சை? யார் சொன்னது கனிந்து சிரித்தால் காதல் தானென்று? உன் விருப்புக்குத் தலையாட்ட என் சிரிப்புக்குத் தடைபோட்ட சிநேகிதா... சிநேகிதா! பெண் சிரிப்புக்கும் சாயம் பூசாதே கண்ணீருக்கும் மை பூசாதே எங்கள் நேர்கொண்ட பார்வையில் வேர்கொண்ட தோழமை புரிந்திடு! கைதட்டி ஏற்றி விடுவதை விட கைகொட்டி தூற்றி விடும் கானல் சுகமுனக்கு கற்பித்தது யார்? வேற்று கிரகத்திலிருந்து விழுந்து முளைத்தவளில்லை நேற்று உன் கனவில் வந்த நீல தேவதையில்லை உன்னோடு ஒருத்தியான உயிரோடு உனைத்தந்த உணர்வுள்ள பிறவி நான் பெண்ணெனப் பேர் வைத்துப் பிரித்துப் பார்க்காதே உலகத்துப் பிரச்சனைகளெல்லாம் உனக்கும் எனக்கும் ஒன்றே... உன்னைப் போலவே அவற்றை சந்திக்க மட்டுமல்ல சிந்திக்கவும் தெரிந்தவள் தான்! வழி நடத்த வேண்டாம் தலைவனில்லை நீ! வழி தொடர வேண்டாம் கள்வனில்லை நீ! செல்லும் வழியில் சேர்ந்தே நடந்திடு சகாப்த தூரங்களை சாதாரணமாய்க் கடப்போம் உரிமை கோரவில்லை சுதந்திரம் கேட்கவில்லை இயல்பாய் இருக்க விடு இயல்பாய் நடக்க விடு! நன்றி - சிவஸ்ரீ - phozhil - 03-22-2004 ரகசியமில்லாத சிநேகிதனுக்கு.. நன்று - Eelavan - 03-22-2004 ம்ம் நீங்கள் உங்கள் பாட்டுக்கு சுட்ட கவிதை என்று ஒரு தலைப்பு ஆரம்பித்துவிட்டீர்கள் அங்கே ஒருத்தர் சுட்டதைச் சுட்டிட்டாங்களே கிருஷ்ணா கிருஷ்ணா என்று பாடிக் கொண்டிருக்கிறார் - Mathan - 03-22-2004 Eelavan Wrote:ம்ம் நீங்கள் உங்கள் பாட்டுக்கு சுட்ட கவிதை என்று ஒரு தலைப்பு ஆரம்பித்துவிட்டீர்கள் அது யாரு சுட்டதை சுட்டிட்டாங்களேன்னு பாடுறது? - Eelavan - 03-22-2004 இதே பகுதியில் ஒருவர் சுட்ட கவிதை இருக்கு போடவா என்று கேட்டார் அவராகத் தான் இருக்கும் - Paranee - 03-22-2004 எல்லாம் ஆறித்தான் இருக்கின்றது ருசி மாறவில்லை - Mathan - 03-22-2004 Eelavan Wrote:இதே பகுதியில் ஒருவர் சுட்ட கவிதை இருக்கு போடவா என்று கேட்டார் அவராகத் தான் இருக்கும் ஜோசப் பரராஜசிங்கம் மாதிரி குழப்பாம யாருன்னு சொல்லுங்க - nalayiny - 03-22-2004 பிபிசி நீங்கள் சுட்டு போட்டாலும் திரும்ப திரும்ப ஊதி ஊதி வாசிக்க செய்து விட்டார்கள் அத்தனை கவிஞர்களும்.அவர்தம்கவிதைகளும் மிக நன்று. ( சீறும் எனக்குள்.... இரகசியமில்லா சினேகிதனுக்கு) ( கவிஞர்கள் முறையே சிவஸ்ரி சுமதிருhபன்.) - kaattu - 03-22-2004 சுட்டதோ சுடாததோ..! எங்களுக்குத் தேடுற வேலை வைக்காமல் BBC இப்பிடி நல்ல சுவாரஸ்யமான விசயங்களை எல்லாம் கொண்டு வந்து போடுறதுக்கு கண்டிப்பா நன்றி சொல்லோணும். நன்ன்ன்ன்றிறிறிறிறி BBC - kuruvikal - 03-22-2004 தேடவும் பஞ்சியானதுகள் எங்க சிந்திக்கப் போகுதுகள்...நீங்க போடுங்கோ BBC சுட்டதென்ன சுயமே இல்லாததுகள் நிறைந்து போச்சு.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 03-22-2004 kuruvikal Wrote:தேடவும் பஞ்சியானதுகள் எங்க சிந்திக்கப் போகுதுகள்...நீங்க போடுங்கோ BBC சுட்டதென்ன சுயமே இல்லாததுகள் நிறைந்து போச்சு.....! என்ன இன்னைக்கு எல்லாரும் உங்ககிட்ட அந்தமாதிரி அடி வாங்குறாங்க. இன்னை நம்ம ஜனங்க எல்லாருக்கு வெளுத்து கட்டுறீங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sOliyAn - 03-22-2004 அவர் தேடித் தேடி எரிச்சலடைஞ்சுட்டார்போல...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sOliyAn - 03-22-2004 கல்லறைகள் கருத்தரிக்கின்றன..! புல்லும் கொடுமையினால் போர்வாளாய் நிமிர்கையிலே புவியில் ஒருபுரட்சி மென்பூக்களினால் வெடித்திடாதோ? அல்லும் பகலும் தமிழரின்னும் அமைதியற்றுத் தவிப்பதற்கு அந்நியர் கொடுமையென்று அனைவருமே உரைத்தனரே எல்லைகள் தாண்டிவந்து எமதீழமண்ணில் புகுந்து - எதிரி எம்மினத்தை அழிக்கையிலே கல்லறைகள் கருத்தரிக்கின்றன.. சொல்லுக்குள் அடங்கிடாத சோகத்தில் துவண்டதையும் சூழ்ந்திருந்த எதிரிகளின் சூட்சுமங்களை அறிந்ததையும் கல்லும் கவிபாடும் எங்கள் காதல் தேசத்துமைந்தர்கள் காவியம் படைத்துப் பலகரும்புலிகள் களமாடியதையும் மெல்ல உரைத்திட்டால் மேனியெங்கும் சிலிர்த்திடும் - இந்த மேதினி அறிந்திடத்தான் மென்கல்லறைகள் கருத்தரிக்கின்றன.. கொல்லும் படைவந்து கொய்தவுயிர்களின் கணக்கென்ன கோயில்பள்ளி ஆலயங்கள் கொழுந்துவிட்டு எரிந்ததென்ன நெல்வயலும் நிலபுலமும் நீண்டவெம் தொழில்வளமும் நீர்அணையும் நிறைந்தவெம் நித்திய வாழ்வும் வீடுகளும் கல்விக்கூடமும் கலைபயிலும் பள்ளிகளும் கருகியதால் - எம் கண்மணிகள் உறங்குகின்ற கல்லறைகள் கருத்தரிக்கின்றன.. பல்கலைக்கழகம் துறந்து படிப்புடன் தொழில் மறந்து பாழும் கொடுமையினால் பாயும்புலிகளாய் பரிணமித்ததும் வெல்லும் எங்கள்தேசமென்று வெகுண்டெழுந்த மக்களின் வேர்களும் விழுதுகளும் விடுதலைப்புலிகளானதால் - கொடும் செல்லென்ன பம்பரென்ன சிதைத்திடுமோ எமது தாகத்தை சீறிவந்தவேங்கைகளின் சிவந்த கல்லறைகள் கருத்தரிக்கின்றன.. மல்லுக்கு வந்தவர்க்கு மரியாதைசெய்வது முறையல்லவே மார்தட்டி நிமிர்ந்து எழுந்து எம்மானத்தைக் காத்திடத்தான் மில்லரும் எத்தனையோ பலமேஜர்களும் நிமிர்ந்தெழுந்தார் மீட்டிடுவோம் மண்ணையென்று மூச்சாக மோதிநின்றார் வல்லவர் புலிகளென்று வளிமொழிந்தது உலகமின்று - அந்த வரலாற்று வார்த்தைகளாலேயே கல்லறைகள் கருத்தரிக்கின்றன.. வில்லிலிருந்த அம்புகளாக வேங்கைகள் புறப்பட்டபோதும் வீழ்த்திடுவோம் என்று அரசு விமானக்குண்டு வீசிப்பார்த்து வெல்வது கடினமென்று புலிகள்வேகத்தைக்கண்டு தடம்மாறி விரும்பியழைத்தது சிங்களம் விடுதலையை திசைதிருப்பிடவே கல்லறையில் துயில்பவருடன் கலைந்திடுமோ எம்கனவு - எதிர் காலத்தின் கணிப்பினால் ஈழத்தில் கல்லறைகள் கருத்தரிக்கின்றன. -அம்பலவன் புவனேந்திரன், ஜேர்மனி. நன்றி: 'மண்' சஞ்சிகை. - kuruvikal - 03-22-2004 இதெல்லாம் தேடி என்ன பயன்...???! ஆற்றையன் சொத்தை ஏன் மடிக்க வைக்கப்பாக்கிறியள்.... ஏன் உங்கட மண்டையில ஒண்டும் இல்லையா....???! பட்டம் வாங்கினாப் போல விண்வெளிக்குப் பறந்திட முடியுமா...பட்டம் பெறாத குரங்கு போகுது அதெப்படி.....????! படம் பெற்றது பூமியில நிண்டு கைதட்டுது அவ்வளவும் தான்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 03-23-2004 kuruvikal Wrote:இதெல்லாம் தேடி என்ன பயன்...???! ஆற்றையன் சொத்தை ஏன் மடிக்க வைக்கப்பாக்கிறியள்.... ஏன் உங்கட மண்டையில ஒண்டும் இல்லையா....???! மண்டேக்க ஒன்னும் இல்லை என்பது உண்மைதான். எழுத்ததான் தெரியலை யாரும் மண்டேக்க உள்ளவங்க எழுதினதை படிச்சி அதுல கொஞ்சம் நல்லதா படுகிறதை பகிர்ந்துக்கலாம் என்று பாக்கிறன். பட்டம் வாங்கினது தான் பட்டம் பெறாத குரஙகை விண்வெளிக்கு அனுப்புது. பட்டம் பெற்றவனுக்கு அதை சாதித்து காட்டிய சந்தோசம். குரங்குக்கு விண்வெளிக்கு போன சந்தோசம். இலக்கு விண்வெளிக்கு போகனும் அப்பிடிங்கிறது தான், அதுக்காக குரங்கு தானே பட்டம் எடுத்துதான் விண்வெளிக்கு போகணும் என்றோ இல்லை பட்டம் எடுத்தவன் தான் விண்வெளிக்கு போகலாம் என்றோ சொல்லக் கூடாது. பட்டம் எடுத்தவனும் எடுக்காதவனும் சேர்ந்து விசயத்தை முடிதால் சரி. எல்லாருமே பட்டம் எடுக்கிறது முடியுற காரியமா? எத்தனை விசயம் மற்றவர்கள் கண்டுபிடித்தை பாவிக்கிறோம், அவனவன் ஏரோப்பிளேன் கண்டு பிடித்துதான் பறந்து போகலாம் அப்பிடின்னா ஒருத்தரும் இலங்கையை விட்டு போயிருக்க முடியாது. - sOliyAn - 03-23-2004 Quote:எத்தனை விசயம் மற்றவர்கள் கண்டுபிடித்தை பாவிக்கிறோம், அவனவன் ஏரோப்பிளேன் கண்டு பிடித்துதான் பறந்து போகலாம் அப்பிடின்னா ஒருத்தரும் இலங்கையை விட்டு போயிருக்க முடியாது.இரண்டு ஒல்லித் தேங்காயைக் கட்டிக்கொண்டு கடலிலை குதிச்சா...?!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 03-23-2004 sOliyAn Wrote:Quote:எத்தனை விசயம் மற்றவர்கள் கண்டுபிடித்தை பாவிக்கிறோம், அவனவன் ஏரோப்பிளேன் கண்டு பிடித்துதான் பறந்து போகலாம் அப்பிடின்னா ஒருத்தரும் இலங்கையை விட்டு போயிருக்க முடியாது. உங்களுக்கு நல்லா ஜோக்கடிக்க வருது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 03-23-2004 சரியாக் கேட்டியள் சோழியான் அண்ணா...அந்த ஒல்லித் தேங்காயில ஒரு மோட்டரைப் செய்து பூட்டிப்பாத்து ரெஸ் பண்ணி இருந்தா இப்ப மற்றவன்ர ஏரோபிளேலுக்கு கொட்டோ கொட்டெண்டு கொட்டி அவையச் சிம்மாசனத்தில தூக்கி வச்சுப்போட்டு தாங்கள் அடிமையாய் இருக்கிறது புரிந்திருக்குமே.....????!<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அவன் எப்படி ஏரோபிளேன் கண்டு பிடிச்சான் கடவுள் வந்து சொல்லிக் குடுத்தவரே...தானே சுயமாச் சிந்தித்து முயன்று தோற்று விழுந்து எழும்பி வென்றான்...இது நாங்கள் முயல்வதே இல்லை...அப்படி முயன்று தோற்றால் ஒரே போடு....விட்டிட்டு மற்றவன்ர வாயைப் பாத்துக் கொண்டு நிக்க வேண்டியதுதான்.....இதைத்தானே இப்பவும் செய்யுறம்.....! சுயமா ஏதாவது புதுசா சிந்திக்கிறமா...மற்றவன்றைக்கு உயிர் கொடுக்கிறமே ஒழிய எங்களின்றைக்கு உருவம் கொடுக்கிறதா இல்லை....! இதுக்க எங்க பட்டம் பெறவும் விண்வெளிக்குப் போகவும் அவன்ர கையில இருக்கிற குரங்கு போகுதெண்டதுக்காக ஏதோ தாங்கள் தான் அனுப்பினது போல வக்காளத்து...அனுப்பினது அமெரிக்கன் ரஷ்சியன் நீங்கள் இல்லையப்பா...நீங்கள் எப்படி 'போடர்' தாண்டி 'அசைலம்' அடிக்கலாம் எண்டெல்லோ ஆராய்ச்சி பண்ணுறியள்.....! அப்பதானே ஊரில வெளிநாட்டு மாப்பிள்ளை எண்டு பெட்டை பிடிக்கலாம்....! உங்க பலபேருக்கு பெட்டைதானே வாழ்க்கை அதுதானே இலட்சியம்...கேவலம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 03-23-2004 kuruvikal Wrote:சரியாக் கேட்டியள் சோழியான் அண்ணா...அந்த ஒல்லித் தேங்காயில ஒரு மோட்டரைப் செய்து பூட்டிப்பாத்து ரெஸ் பண்ணி இருந்தா இப்ப மற்றவன்ர ஏரோபிளேலுக்கு கொட்டோ கொட்டெண்டு கொட்டி அவையச் சிம்மாசனத்தில தூக்கி வச்சுப்போட்டு தாங்கள் அடிமையாய் இருக்கிறது புரிந்திருக்குமே.....????!<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கண்டுபிடிக்கிறது நல்லது தான். அதோடை ஏற்கனவே கண்டுபிடித்ததை உபயோகிக்கிறதிலயும் தப்பில்லை. ஏற்கனவே கண்டு பிடித்ததை உபயோகிக்காமல் நானும் அதேமாதிரி கண்டு பிடிப்பன் என்று அடம் பிடிக்கிறது நல்லதில்லை. அந்த நேரத்திலை மற்றவர்களுடைய உபயோகித்து கொண்டு தெரியாத இன்னொன்றை கண்டு பிடிக்கலாம். அது தான் எனது கருத்து. விண்வெளிக்கு அனுப்பினது அவர்கள் தான் இல்லை என்று சொல்லவில்லை. யார் அனுப்பினா என்ன மனிதனால விண்வெளிக்கு போக முடிந்திருக்கு சந்தோசம் தானே. மற்றவர்கள் கண்டுபிடித்த இந்த கணணில தமிழை சேர்த்து கருத்து எழுதுறம் தானே. எதிலையும் உச்ச பயன்பாட்டை அடைவம். அதுக்கு அவன் கண்டுபிடிச்சது இவன் கண்டுபிடிச்சது என்றூ பிரிவினை? அசைலம், போடர் என்று ஏதோ சொல்றீங்கள். அது எனக்கு தெரியாத விடயம். அதனாலை நான் அதை பத்தி சொல்ல முடியாது. வெளிநாட்டு மாப்பிளை என்று பொண்ணு பிடிக்கிறது ??? அதுவும் எனக்கு தெரியாது, பொருத்தமானவையை தான் கேக்கணும். ஒரு பெண்ணை அடையிறதே வாழ்க்கையின் இலட்சியம் என்பதை நான் ஏத்துக்க மாட்டேன். ஆனால் ஒரு பெண்ணின் மனதை வெல்வது ஆணை சந்தாஷமடைய வைக்கும் என்பது உண்மை. - kuruvikal - 03-23-2004 உங்களைப் போலத்தானே நாங்களும் சிந்திக்கிறம் ஆனா சிந்திக்கிற போக்கு வித்தியாசம் அடையும் இடம் ஒன்றுதான்....! விண்வெளிக்கு போனது எவராகினாலும் எப்படி மனிதன் ஆகினானோ அது போல்தான் எங்கும் ஆணென்றும் பெண்ணென்றும் பிரிவினை காட்டி ஒருவரைத் தாழ்த்தி மற்றவர் உயர்வு தேட வேண்டாம்....செய்கின்ற குற்றங்கள் யார் செய்யினும் பொதுவில் வைத்து களைந்து... பெறுகின்ற நன்மைகள் எவர் பெறினும் பொதுவில் வைத்து பகிருங்கள்....ஆணிடத்திலும் பெண்ணிடத்திலும் ஆதிக்கம் அடக்குமுறை என்பதெல்லாம் சுத்தப் பித்தலாட்டம்....தேவையற்ற கோசங்கள்...யதார்த்தம் உணரா பாமர நிலை....அதேபோல் தான் உரிமை என்பது தமிழர்களுக்கே அன்றி வடக்குக்கும் கிழக்குக்கும் இல்லை....உரிமைகள் மக்களுக்கே அன்றி தலைவர்களுக்கல்ல....! புரிந்து தெளிந்து நில்லும் ஓரணியில் முயற்சியும் பலமடைந்தால் வெற்றிக் கனிபறிப்பது நிச்சயமாகும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
|