Yarl Forum
இலங்கை தேர்தல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: இலங்கை தேர்தல் (/showthread.php?tid=7287)

Pages: 1 2 3


- Mathivathanan - 03-26-2004

கண்ணன் Wrote:தற்போதைய சூழ்நிலையில் யார் வெல்லுவார் என்று கூறுவது கடினம்.

இலங்கை அரசியலை பார்த்தால் சந்திரிகாவின் பக்கம் தான் காத்து வீசுவதாக தெரிகிறது.
எல்லாக்குதிரையிலும் ஏறி ஓடியாச்சு.. இந்தக்குதிரை வெண்டாலென்ன அந்தக்குதிரை வெண்டாலென்ன.. இஞ்சாலை வெடிகொழுத்துறது இருக்குமட்டும் குதிரை எகிறி விழுத்தத்தான் செய்யம்.. விடுப்புப்பார்க்கும்.. உலகத்துக் குதிரையளெல்லாம் அதுக்குத் துணைபோகும்.. ஜொக்கி எப்படி ஒப்பாரி வைத்தாலும் மாற்ற முடியாது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
கண்ணன் Wrote:கொசுத்தொல்லை தாங்கமுடியலைப்பா?


தாத்தா நான் ஒன்றும் வெல்லோணும் என்று சொல்லவில்லை.
ரனில் விட்ட தவறுகளால் மீண்டும் சந்திரிகாவின் கட்சி ஆட்சியைப்பிடிக்ககூடிய சூழ்நிலையே உள்ளது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

எனக்கு வோணிங் வாறது வளமை.. எதுக்கு தந்ததெண்டே தெரியாத நிலை.. அதை ஒருபக்கம் தூக்கிப் போட்டிட்டு..

கண்ணனுக்கு ஏன் வோணிங் கிடைச்சது சொல்லுங்கோ..? கண்ணன் எங்கை கோவில்மாடுமாதிரி தலையாட்ட மறுத்தார்.. சொல்லுங்கோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- கண்ணன் - 03-26-2004

அது வோணிங்கில்லை தாத்தா மெடல்


- Mathivathanan - 03-26-2004

கண்ணன் Wrote:அது வோணிங்கில்லை தாத்தா மெடல்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- AJeevan - 03-26-2004

இலங்கைத் தேர்தலுக்குப் பின் பிரபாகரன் -கருணா மோதல் அபாயம்

கொழும்பு, மார்ச் 27:

இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைமைக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியுள்ள கருணாவை ஒடுக்குவோம் என்று புலிகள் அறிவித்துள்ளனர்.

இதை அடுத்து, இலங்கையில் தேர்தலுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் அமைப்பின் இரு கோஷ்டிகளுக்கும் இடையில் மோதல் நடைபெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பில், இலங்கை கிழக்குப் பகுதியில் உள்ள போராளிகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி முன்னதாக போர்க்கொடி எழுப்பினார் கர்னல் கருணா என்ற வி. முரளீதரன். இதை அடுத்து அந்த இயக்கத்திலிருந்து கருணா நீக்கப்பட்டார். பின்னர் அவருக்குப் புலிகள் தலைமை பொதுமன்னிப்பு வழங்கியது. அதைக் கருணா நிராகரித்தார். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையில் விரிசல் வலுத்துள்ளது.

இந்நிலையில், "கருணாவை ஒடுக்குவோம்' என்று புலிகள் சபதம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் வெளியிட்ட செய்தி:

புலிகள் இயக்கத்துக்கு பெரிய ஊறு ஏற்படுத்திவிட்டார் கருணா. அவரது ஆதரவாளர்கள் அவரைக் கைவிட்டு வெளியேற வேண்டும்.

மட்டக்களப்பு, அம்பாறை மக்களைக் கருணா தொடர்ந்து ஏமாற்றுவதைத் தேசிய தலைவர் பிரபாகரன் இனியும் அனுமதிக்க மாட்டார்.

எமது மக்களையும் எமது மண்ணையும் காப்பதற்காக கருணாவை எங்கள் மண்ணிலிருந்து ஒடுக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தான் செய்த துரோகம், குற்றச் செயல் ஆகியவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கருணா தனது ஆதரவாளர்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்.

நாங்கள் எடுக்கும் நடவடிக்கையின்போது, எந்த ஒரு போராளியும் உயிரிழக்கக் கூடாது என்று பிரபாகரன் கருதுகிறார். அவரது நல்லெண்ணத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கருணாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதை அவர்கள் கைவிட வேண்டும்.

இந்த வேண்டுகோளையும் மீறி அவருக்கு ஆதரவாகச் செயல்படுவோர், மோசமான விளைவுகளையே சந்திக்க நேரிடும்.

அவருடன் இருப்போர், புலிகளின் நடவடிக்கையில் உயிரிழக்க நேர்ந்தால், மாவீரர்களாகக் கருதப்பட மாட்டார்கள் என்று புலிகளின் செய்தி தெரிவிக்கிறது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறுகிறது. அதில், புலிகள் நேரடியாகப் போட்டியிடாவிட்டாலும் அதன் ஆதரவு பெற்ற தமிழர் தேசிய கூட்டணி போட்டியிடுகிறது.

எனவே, தேர்தலுக்குப் பிறகு கருணா மீது புலிகள் ராணுவ நடவடிக்கை எடுக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக கருணாவின் ஆதரவாளர் வரதன் தெரிவித்தார்.

தங்களிடம் 5 ஆயிரம் போராளிகள் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் வலுத்தபோது, புலிகள் அமைப்பினர் நூற்றுக்கணக்கானோர் கிழக்குப் பகுதியில் உள்ள வெருகல் ஆற்றின் கரையில் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆற்றின் மறு கரையில் கருணாவின் போராளிகள் நின்றிருந்தனர்.

அப்போதே இரு தரப்பினருக்கும் மோதல் வெடிக்கும் சூழ்நிலை இருந்தது. ஆனால், இலங்கை ராணுவம் உஷார் நிலையில் இருந்ததால், அப்போது தவிர்க்கப்பட்டது.

- தினமணி


- AJeevan - 03-26-2004

இலங்கையில் வீதியிலிருந்து வீட்டுக்குள் வந்த பிரசாரம்

இரா. சோமசுந்தரம்

கொழும்பு, மார்ச் 27: இந்தியாவைப் போன்றே இலங்கையிலும் இது தேர்தல் காலம்.

ஏப்ரல் 2-ம் தேதி வாக்குப்பதிவு. ஆனால், இந்தியத் தேர்தல் களத்தின் பரபரப்பு இலங்கையில் இல்லை. கொழும்பு நகரில் கூட்டணிக் கட்சிகளின் சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள்கூட, தேடினாலும் கிடைக்காது. ஒலிபெருக்கி இரைச்சல் இல்லை. நகருக்கு வெளியே மிக அரிதாகவே சில சுவரொட்டிகளைக் காணமுடிகிறது.

ஆனால், வீதியில் இருக்கும் இந்த அமைதி, வீட்டுக்குள் இருப்பதில்லை. ஊடகங்கள் அனைத்திலும் தேர்தல் பிரசாரம் படு தீவிரமாக இருக்கிறது.

நாளிதழ்களில் பெரும்பகுதியான செய்திகளும். விளம்பரங்களும் தேர்தல் தொடர்பானவை.

""நீலத்துக்குப் போட்டா செகப்பாகும்'', ""செகப்புக்குப் போட்டா நீலமாகும்'', ""பாதைகள் மூடப்படவில்லை'' ""கடவுளே!'' என்பது போன்ற ஒருவரி பிரசார விளம்பரங்கள் ஐக்கிய தேசீய முன்னணியில் (ரணில் விக்கிரமசிங்க) அதிகமாக வெளியாகின்றன.

""பகலில் பேச்சு நடத்தி இரவில் அச்சத்துடன் வாழ்வதுதான் நீங்கள் தரும் சமாதானமா, பிரதமரே?'' ""யுத்த செலவுகள் இல்லாதபோது வாழ்க்கைச் செலவு கூடியது ஏன்?'' என்று கேள்விகளை எழுப்பும் சந்திரிகாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விளம்பரங்கள். ஒரு பத்திரிகைப் பேட்டியில் ""இரு கட்சிகளுமே சமாதானத்தை முன்வைக்கிறீர்கள். அப்படியிருக்க உங்கள் இருவருக்கும் எங்கே பிரச்சினை தொடங்குகிறது?'' என்ற கேள்விக்கு, சந்திரிகா அளிக்கும் பதில்: ""அவரது மரபணுவிலிருந்து தொடங்குகிறது''.

""நிதியுதவி வழங்கும் நாடுகளுக்காக ஒரு தேர்தல் அறிக்கை, இலங்கை மக்களுக்காக ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டு மக்களை ஏமாற்றுகிறார் சந்திரிகா'' என்று காரசாரமாக மேடையில் விமர்சிக்கிறார் ரணில்.

விளம்பரம், பேட்டிகளில் ""சொல்லடி'' வலுவாகவே இருக்கிறது

தனியார் தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக வருகின்றன தேர்தல் விளம்பரங்கள். முந்தைய காலகட்டங்களின் வன்முறை தற்போது இல்லை என்று விளக்கும் படக்காட்சிகளை ஐக்கிய தேசீய கட்சி விளம்பரம் செய்கிறது.

இலங்கை நாடாளுமன்றத்தில் சந்திரிகா குமாரதுங்கவின் தீர்மானங்கள் கிழித்து, எரிக்கப்படும்போது ரணில் அமைதியாக உட்கார்ந்திருக்கும் நாடாளுமன்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பி, ""இதுதான் சமாதானமா?'' என்ற கேட்கிறது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி.

இந்த விளம்பரங்களைத் தொடர்ந்து "இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்' என்ற அறிவிப்பு தனியாகத் தோன்றி மறைகிறது.

தனியார் வானொலியிலும் பாடல்களுக்கு இடையில் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தேர்தல் பிரசாரங்கள் ஒலிக்கின்றன.

அச்சு, ஒலி, ஒளி ஊடகங்கள் அனைத்திலும் சந்திரிகா, ரணில் விக்ரமசிங்க இருவரது பேட்டிகளும் பிரசாரக் கூட்டச் செய்திகளும் வந்து கொண்டே இருக்கின்றன.

கடந்த தேர்தல்களில் வன்முறை, படுகொலை, குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இருந்தன. தற்போதைய தேர்தல் இத்தனை அமைதியாக நடைபெறுவது ஏன்?

தேர்தல் ஆணையத்தின் இதே விதிமுறைகள் முன்பும் இருந்தன. ஆனாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புலிகளுடன் போர்நிறுத்த உடன்படிக்கையால் ஏற்பட்டுள்ள அமைதி கெடுவதை யாரும் விரும்பவில்லை. இன்றைய அமைதியான பிரசாரத்துக்கு முக்கிய காரணம் இதுதான்.

முன்னெப்போதும் இல்லாதவகையில் இலங்கைக் காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் ரூ. 80 லட்சம் அளித்துள்ளது. விதிகள் மீறப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டினால், தோரணங்கள் கட்டினால், பேனர்கள் வைத்தால் அவற்றை அகற்றும் கூடுதல் பணிக்காக இந்தத் தொகை அளிக்கப்பட்டுள்ளது. (இலங்கைத் தேர்தலின் மொத்தச் செலவு ரூ.6.5 கோடி)

இலங்கைத் தேர்தலை முன்னிட்டு மார்ச் 25-ம் தேதி கொழும்பு வந்திருந்த பார்வையாளர் குழுவின் பெண்உறுப்பினர் கூறுகையில், ""பிரசாரம் இப்படி அமைதியாக நடந்தால்தான் எதன் தாக்கமும் இல்லாமல் மக்கள் சிந்தித்து வாக்களிக்க முடியும்'' என்றார்.

ஊடகங்கள் நடுநிலையுடன் நடந்துகொள்ளவில்லை என்று தேர்தல் ஆணையர் தயானந்த திசநாயகவுக்குப் புகார்கள் வந்துள்ளன.

""ஊடகங்கள் நடுநிலையாக இருக்க வேண்டும். அல்லது தங்கள் சார்பு எது என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்க நேரிடும்'' என்று எச்சரித்துள்ளார் தேர்தல் ஆணையர் திசநாயக.

-தினமணி


- AJeevan - 03-26-2004

[Image: Ranil%26CBK.jpg][Image: baby_crying.jpg]
[size=16]
"ஏண்டி... பையன் இப்படி வீல், வீல்னு அழுவுறான்?"

"சொன்னா திட்டமாட்டீங்களே?"

"சும்மா சொல்லு..."

"வாக்காளர் அடையாள அட்டையில இருக்கிற உங்க படத்தைக் காட்டினேன்... பயந்துபோய் அலறுறான்!"

"அதே மாதிரி அட்டையில இருக்கிற உன் படத்தைக் காட்டிடாதே... அப்புறம் அடிக்கடி சிரிப்பான், பைத்தியம் புடிச்சு!"



சுட்டு சொருகியது : JuniorVigadan & SL web


- Mathan - 03-27-2004

யாழ் களத்தில் தமிழர்கள் இடையே சந்திரிகா முன்ணணியில் இருக்கும்போது இலங்கையில் முன்ணணியில் இருப்பது ஆச்சரியம் இல்லைதான்.


- Mathan - 03-28-2004

ஓட்டு போடுங்க சாமி ஓட்டு. உங்க பொன்னான ஓட்டை போடுங்க.


- anpagam - 03-28-2004

இந்தமுறையும் தொங்கு பாராளம்தான்.... ரனில் ஆட்சி அமைக்கலாம் கிங்மேக்கர் நாம்தான் தமிழர் (தலைவர்) இது எமது யுகம்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 8) Idea :wink: :|


- Mathivathanan - 03-28-2004

anpagam Wrote:இந்தமுறையும் தொங்கு பாராளம்தான்.... ரனில் ஆட்சி அமைக்கலாம் கிங்மேக்கர் நாம்தான் தமிழர் (தலைவர்) இது எமது யுகம்
அப்ப சிங்களம் ஒண்டுபடப்போகுது கெதியிலையெண்டு சொல்லுறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- anpagam - 03-28-2004

அரசியலில் இது சாரணமப்பா... இது இப்ப... தேர்தலின் பின் என்னம் விசேசங்கள் இருக்கு... முப்பக்கமும்... நீங்கள் யாவரும் அறியாததா... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :?


- shanmuhi - 03-28-2004

அப்படியென்றால் ரணிலாருக்கு வோட்டு போடலாம் என்று சொல்றியலோ....


- anpagam - 03-28-2004

தமிழச்சி எல்லவோ நீங்கள்... அப்ப தமிழ்தேசியகூட்டமைப்பு... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 03-28-2004

மேலே யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்றுதானே தேர்தல். அதனால சந்திரிகா அல்லது ரணிலுக்கு தான் போடணும். வேணுமுன்னா தமிழர் வோட்டு யாருக்கு அப்பிடின்னு இன்னொரு கருத்து கணிப்பு ஆரம்பிச்சுடுறேன்.


- Mathan - 03-29-2004

ஆட்சியை பிடிக்கும் போட்டியில் தற்சமயம் ஒரு ஓட்டால் சந்திரிகா முன்ணணியில் இருக்கின்றார்.


- yarl - 03-29-2004

சந்திரிகா வாறதுதான் தமிழருக்கு நல்லது என யாரோ கிண்டலாக பேசியிருந்தார்கள்.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Eelavan - 03-29-2004

BBC Wrote:ஆட்சியை பிடிக்கும் போட்டியில் தற்சமயம் ஒரு ஓட்டால் சந்திரிகா முன்ணணியில் இருக்கின்றார்.

ஆச்சியைக் கைப்பற்றும் போட்டியில் அப்பு தான் முன்னணியில் இருக்கவேண்டும்


- anpagam - 03-29-2004

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:


- Mathan - 03-30-2004

யாழ்/yarl Wrote:சந்திரிகா வாறதுதான் தமிழருக்கு நல்லது என யாரோ கிண்டலாக பேசியிருந்தார்கள்.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

சிலர் அவரை உண்மையாகவே ஆதரிக்கின்றார்கள். மறைமுகமான எதிரி ரணிலை விட சந்திரிகா நல்லது என்று கூறுகின்றார்கள்.


- tamilini - 04-06-2004

உண்மைதான்
ரணில் வந்தால் சமஸ்டடி ஆட்சி... என்று இழுத்து கொண்டிருந்திருப்பார்கள்.

சந்திரிக்கா வந்ததால் வெட்டு ஓன்று துண்டு இரண்டு தான். தனி தமிழிழம் பற்றி யோசிக்கலாம். {இந்த ஆட்சி எத்தனை நாள் நீடிக்கும் என்று யார் அறிவார்.}