Yarl Forum
காதல் காதல் காதல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: காதல் காதல் காதல் (/showthread.php?tid=7279)

Pages: 1 2 3 4

- aathipan - 03-31-2004

அன்பு என்பது பால் எனக்கொண்டால்.
காதல் என்பது காமம் என்ற தேயிலைச்சாறு கலந்த பால். அதைத் தேநீர் எனச்சொல்லலாம். எப்போது அது நிறம் மாறியதோ அப்போது அது காதல் எனக்கொள்ளலாம்.

- kuruvikal - 03-31-2004

அப்போ உங்கள் முடிவின் படி தூய பால் ஏதோ ஒன்றால் மாசுபட்டால்....அதுதான் காதல்....அன்பு காமத்தால் மசடைந்தால் அதுதான் காதல்....! அப்படியா....????!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- aathipan - 04-01-2004

பால் விரும்பிப் பருகுபவர்களுக்கு பாலில் தேயிலைச்சாறு கலந்தால் அது மாசுபட்ட பால்தான். ஆனால் தேநீர் விரும்பிப்பருகிறவர்களுக்கு அது பிடித்த பானம். அவர்கள் பார்வையில் அது மாசு என்றுசொல்லமுடியாது.

- kuruvikal - 04-01-2004

அப்போ பார்வைக்குப் பார்வை காதலின் கோலம் மாறினாலும் காதல் என்பது காமத்தால் மாசு பட்ட ஒன்று....அதுதானே உங்கள் முடிவு....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Eelavan - 04-02-2004

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி என்று பாடிய சம்பந்தர்
இறைவன் மீது தான் கொண்டது மாசு கலக்காத அன்பாயிருந்தால் அன்பாகிக் கசிந்து என்று பாடியிருக்கலாமே

அன்பு தான் காதல் தாய் தன் குழந்தை மீது கொள்வதும் காதல்தான் கணவன் மனைவி மீது கொள்வதும் காதல் தான்

அன்பின் வழியது உயிர்நிலை
அதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு என்றால்
காதல் இன்றி நான் வாழவில்லையா என்று சொல்வது எப்படியிருக்கிறது

- Mathan - 04-02-2004

aathipan Wrote:பாசம், நேசம், நட்பு இவற்றி;ல் காமம் கலக்காது.

அன்பு ஒரு நிலைக்குப்பின் காதலாக பரிமானம் பெறுகிறது. காதல் அதன் பயணத்தில் காமத்தையும் அணைத்துக்கொள்கிறது.

காமம் கலக்காத காதல் என்றும் தூய அன்பாக மிளிர்கறது.

உண்மைதான்.

- nalayiny - 04-02-2004

Eelavan Wrote:காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி என்று பாடிய சம்பந்தர்
இறைவன் மீது தான் கொண்டது மாசு கலக்காத அன்பாயிருந்தால் அன்பாகிக் கசிந்து என்று பாடியிருக்கலாமே

அன்பு தான் காதல் தாய் தன் குழந்தை மீது கொள்வதும் காதல்தான் கணவன் மனைவி மீது கொள்வதும் காதல் தான்

அன்பின் வழியது உயிர்நிலை
அதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு என்றால்
காதல் இன்றி நான் வாழவில்லையா என்று சொல்வது எப்படியிருக்கிறது

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

தாயும் தந்தையும் தந்த அதி உச்ச பாச அன்பு அரவணைப்புத்தான் பின்னய நாளில் காதலாகி கசிந்த கண்ணீர்மல்க வைக்கிறது. அவர்களின் அன்பு பண்பு பாசம் அரவணைப்பு கிடைக்காதவைக்கு காதலாகி கசிந்து கண்ணீர்மல்குவது எப்படி புரியும்.????

காதலன் காதலி என வருகிறபோது அன்புப் பரிணாமத்தின் அதி உச்சமே அன்பு பண்பு பாசம் அரவணைப்பு மென்மை கலந்த அதி உன்னத தாம்பத்தியம்.

ஒவ்வொரு குழந்தைக்கும் இவ்வுலகில் அன்பு பண்பு பாசம் மென்மை அரவணைப்பு போன்றதை ஒரு தாயும் தந்தையுமே கற்றுத்தருகிறார்கள். ( இந்த விடயம் நாம் விரிவாக ஆராயவேண்டிய ஒன்று. )

- Eelavan - 04-02-2004

காதலில் காமம் என்பது ஒரு பிற்சேர்க்கை அல்லது ஒரு இடைச்செருகலே அன்றி அதனை காதலுடன் கலக்கும் மாசு என்பது தவறு

அதே போன்று காதல் தூய அன்புதான்

காமம் கலக்காத காதல்தான் தூய அன்பு என்பது புதிய விளக்கமாக இருக்கிறது

- kuruvikal - 04-02-2004

காதல் = pure love = kindness = love = pure kindness....!

எல்லாம் ஒன்றா....?????!

அப்ப எதற்காக காதல் என்று உச்சரிக்க வேண்டும்...????!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 04-02-2004

Eelavan Wrote:காதலில் காமம் என்பது ஒரு பிற்சேர்க்கை அல்லது ஒரு இடைச்செருகலே அன்றி அதனை காதலுடன் கலக்கும் மாசு என்பது தவறு

அதே போன்று காதல் தூய அன்புதான்

காமம் கலக்காத காதல்தான் தூய அன்பு என்பது புதிய விளக்கமாக இருக்கிறது

ஆண் பெண் காதலில் காமம் கலப்பதில் தவறேதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

- Eelavan - 04-02-2004

kindness என்பதற்கு அர்த்தம் இரக்கமா அன்பா

காதல் என்பதும் அன்பு என்பதும் தூயவைதான் இதில் எங்கே தூய காதல் அல்லது அசுத்தக் காதல் அல்லது தூய அன்பு அல்லது அசுத்த அன்பு

- kuruvikal - 04-02-2004

அப்ப காதல் அன்பில் இருந்து வேறுபட்டதா...இரண்டாம் பிரிந்து நிற்க...அப்படி என்றால் என்ன வேற்பாடு....????!

அன்பு சாதாரணம் என்றால் தூய அன்பு அதன் இன்னோர் உயர் நிலை....அப்படித்தான் இருக்கும்....சில பதங்கள் உணர்வுக்கான அளவீடாக இருக்கலாம்...!

Kindness...அன்பு கலந்த இரக்கம்...இரக்கம் கலந்த அன்பு.....அப்படி எல்லாம் சொல்லப்படும்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- nalayiny - 04-02-2004

தொடுகையின் வழியே
கூறும் உணர்வுகளை எந்த மொழி கூறிவிடும்......!!!!!

- Mathan - 04-02-2004

ஏன் விழிகள் பேசும் மொழி?

- Eelavan - 04-02-2004

அப்பிடியாயின் காதல் என்ற வார்த்தைப்பிரயோகம் அன்பின் படிநிலை ஒன்றைக் குறிப்பது எனலாம்

எப்பவுமே தூயதான அன்பை "தூய அன்பு" என்று சொல்வது அந்த அன்பையே கொச்சைப்படுத்தும் ஒழிய மேன்மையைக் காட்டாது

உணர்ச்சி வேகத்தில் அன்பே நம் காதல் தூய காதல் என்று பிதற்றலாம் ஆனால் அதுதான் உண்மையென்றில்லை அவர்கள் காதல் மட்டுமில்லை காதலே தூய்மையானதுதான்

உதாரணத்திற்கு காதலர்தினமாக இருந்தது இன்று அன்பர் தினம் என்று அழைக்கப்படுவது உலகில் அனைவரும் அன்பர்கள் அல்லது காதலர்கள் என்பதைக் காட்டுகின்றது

- kuruvikal - 04-02-2004

அப்ப எல்லாம் மாயை....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Eelavan - 04-02-2004

BBC Wrote:ஏன் விழிகள் பேசும் மொழி?

விழிகள் பேசும் மொழி கூட இன்னொருவகை குறிப்புத் தான் என்றாலும் தொடுகை குறிப்பாலுணர்த்தும் மொழியை எடுத்தியம்ப விழிகளின் மொழியால் முடியாது

- nalayiny - 04-02-2004

விழிகள் பேசும் மொழியை வேறு யாராவது பாற்து புரிந்துகொள்ளும் தன்மை அதிகம்.

- Eelavan - 04-02-2004

உண்மை
அதேவேளை விழிகள் பேசும் மொழிகள் போன்ற நூறு கதைகளை ஒரேயொரு ஸ்பரிசம் கொடுத்துவிடும்

- Eelavan - 04-02-2004

kuruvikal Wrote:அப்ப எல்லாம் மாயை....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

எல்லாம் மாயைதான் குருவிகாள்

என்றோ ஒருநாள் அழியப்போகும் நிலையற்ற இந்த உடம்புக்கு மெய் என்று பெயர் வைத்தது மாயை மண்தின்னும் உடம்புக்குள் மனசு என்று ஒன்று வைத்து அந்த மனதுக்குக்குள் ஆயிரம் உணர்ச்சிகளை வைத்த இறைவன் மாயை

மாயையாகிய உடம்புகளையும் ஊற்றெடுக்கும் உணர்ச்சிகளையும் தேக்கிவைத்திருக்கும் இந்த உலகம் மாயை
பாசம் மாயை, நேசம் மாயை, அன்பு மாயை, காதல் மாயை, ஏன் இந்த ஈழவனும் மாயை கேட்டுக்கொண்டிருக்கும் குருவிகளும் மாயை