Yarl Forum
சினிமா கனாக்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51)
+--- Thread: சினிமா கனாக்கள் (/showthread.php?tid=7228)

Pages: 1 2 3


- Mathan - 05-05-2004

வணக்கம் அஜீவன்,

விமர்சனங்கள் குறித்து நீங்கள் கவலைப்படுவதாக தெரிகின்றது. விமர்சனங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று குறை நிறைகளை எழுத்தாளருக்கு சுட்டிக் காட்டுவதற்காக எழுதப்படுவது. மற்றது எழுத்தாளரை தாக்குவது ஒன்றையே நோக்கமாக கொண்டது. இரண்டாது வகை விமர்சனங்களை நீங்கள் கணக்கில் எடுக்க வேண்டியதில்லை, அதனால் அவற்றை கண்டு மனந்தளராமல் தொடர்ந்து எழுதுங்கள்.

சினிமா கனாக்கள் அடுத்த பகுதிக்கு நன்றி. ஈழவன் சொன்னது போல் உங்களுக்கு வேலைப்பளு காரணமாக தொடர்ந்து உடன் எழுத முடியாமல் இருந்திருக்கும், உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்.

மற்றும் இன்னொரு விடயம் நீங்கள் உலக சினிமா குறித்து படித்து பகிர்ந்து கொள்பவற்றை [b]<span style='color:#ff0009'>\"சினிமா கனாக்கள்\" பகுதியுடன் கலக்காமல் தனியான ஒரு தலைப்பில் போட்டீர்கள் என்றால நல்லது என்று நினைக்கின்றேன், இது எனது தனிப்பட்ட கருத்து.

நட்புடன்
BBC</span>


- AJeevan - 05-05-2004

நன்றி BBC,

சோழியனும் என்னைத் தூண்டி விட்டு எழுத வைப்பவர்.

உங்கள் யோசனை சரி. நான் அதை களப் பொறுப்பாளர்களுடன் இணைந்து தனியொரு பகுதிக்கு மாற்ற முனைகிறேன்.

இவர்களது விமர்சனங்களுக்காக வேதனைப்படவில்லை. இவர்களுக்காக வேதனைப்படுகிறேன்.

தேவையற்றவர்களுக்கு உதவுவது பைத்தியகாரத்தனம். தேவையானவர்கள் தேடுவார்கள்......................அவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

அன்புடன்
AJeevan


- AJeevan - 06-02-2004

[Image: wishes.JPG]
சில தனிப்பட்ட விடயங்கள் காரணமாக,
இத் தொடரை தொடர முடியவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

"சந்தர்ப்பவாதி என்பவன் கிணற்றுக்குள் தவறி விழுந்தாலும்
அதைப் பயன்படுத்தி நிம்மதியாக குளித்துவிட்டு வெளியே வரத் தெரிந்தவன்."

இது எனக்கு உடன்பாடான விடயமல்ல.

எனவே இங்கே சந்தித்த அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள் உரித்தாகட்டும் என்று கூறி விடைபெறுகிறேன்.

அன்புடன்
அஜீவன்
[Image: rainbow_pot_of_gold_hr.jpg]
www.ajeevan.com


- Mathivathanan - 06-02-2004

எதுவாகிலும் உங்கள் விருப்பம்.. உங்களது எழுத்தாற்றலை கண்கள் தேடாவிட்டாலும் எனது மனம் தேடும்.. போய்வாருங்கள்..
:!: :?: Idea


- Mathan - 06-02-2004

வணக்கம் அஜீவன்,

உங்கள் மனநிலை எனக்கு புரிகின்றது ஆனால் அதற்காக களத்தை விட்டு செல்லாதீர்கள். அது சரியான தீர்வாகாது. நீங்கள் களத்திலேயே இருந்து உங்களால் முடிந்த தகவல்களையும் சினிமா பற்றிய விபரங்களையும் தாருங்கள்.

நீங்கள் மற்றவர்கள் உங்களை விமர்சித்து எழுதும் கருத்துகளை பார்த்து உணர்ச்சிவசப்படாதீர்கள். அந்த கருத்துகளுக்கு முடிந்தால் நிதானமாக பதில் எழுதுங்கள் அல்லது அவற்றை உதாசீனம் செய்யுங்கள். நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு மற்றவர்களை தாக்கி கருத்து எழுதினாலோ அல்லது களத்தை விட்டு விலகினாலோ உங்களை எதிர்ப்பவர்கள்தான் வெற்றி பெறுவார்கள், உங்கள் முடிவை மீள்பரிசீலனை செய்து களத்தில் நிலைத்திருப்பீர்கள் என நம்புகின்றேன்,

நட்புடன்
BBC


- Eelavan - 06-02-2004

அஜீவன் அண்ணா குரும்படங்களில் எவ்வளவு வேண்டுமானாலும் உணர்ச்சிகளை வெளிக்காட்டலாம் கருத்துகளில் அல்ல இத்துடன் நீங்கள் களத்தை விட்டு வெளியேறும் எத்தனையாவது ஆள்? அல்லது ஒவ்வொருத்தரும் வெளியேற வேண்டாம் என நான் கேட்டு நிற்கும் எத்தனையாவது பதிவு இது?

இனி யாரையும் களத்தை விட்டு வெளியேற வேண்டாம் என வேண்டுகோள் விடுப்பதில்லை எனத் தான் நினைத்திருந்தேன் ஆயினும் உங்கள் குறும்படங்களையும் கருத்துகளையும் ரசித்த ஒருவன் என்ற முறையில் கூறாமல் இருக்க முடியவில்லை.ஏதாவது தவறாக இருப்பின் மன்னிக்கவும்


- shanmuhi - 06-02-2004

தங்களின் தனிப்பட்ட விடயங்கள் காரணமாக... தொடரை தொடர முடியாது கண்டு மனம் வேதனைப்படுகிறேன்.

தங்கள் ஆற்றல், திறமை மேலும் மேலும் வளர வாழ்த்திக்கொள்வதோடு... தங்களது படைப்புக்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.


- kuruvikal - 06-02-2004

அன்புடன் அஜீவன் அண்ணாவிற்கு...

நீங்கள் எது கருதியிருந்தாலும் எமக்கிடையே எழுந்தது வீட்டில் சகோதரங்களுக்கிடையே நடக்கும் சின்னச்சின்ன கருத்து மோதல்கள் போன்றது...! உங்களிடம் ஒரு வலுவான சமூகவியல் நோக்கும் அதை நோக்கி நடக்க வேண்டும்... வெல்ல வேண்டும் என்ற துடிப்பும் உண்டு...ஆனால் உங்களிடம் இருக்கும் கோபமும் அவசரத்தில் மதியிழக்கும் நிலையும் சில சந்தர்ப்பங்களில் உங்கள் முயற்சிக்கு முட்டுக்கட்டைகளாக அமையவும் வாய்ப்பிருக்கிறது....!

நீங்கள் விபரித்த தனிப்பட்ட காரணம் என்பது எங்களுடனான சிறுசிறு கருத்து மோதல்கள்தான் என்றிருப்பின் நாங்கள் உங்களை எந்தவகையிலும் கருத்தால் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறோம்....! மீண்டும் புலம்பெயர் தமிழ்சமூகத்துக்கு ஆற்றும் உங்கள் பணிக்கு ஒரு தொடர்புப்பாலமாக இருக்கும் இக்களத்தில் உங்கள் தரமான சிந்தனைகளையும் படைப்புக்களையும் தொடர்ந்து வைக்க அன்புடன்கேட்டுக் கொள்கின்றோம்....!

நட்புடன்
சகோதரக் கருத்தாளன்
குருவிகள்....!


- vasisutha - 06-03-2004

போகவேண்டாம் அஜீவன் அண்ணா. Cry


- Mathan - 06-03-2004

Eelavan Wrote:அஜீவன் அண்ணா குரும்படங்களில் எவ்வளவு வேண்டுமானாலும் உணர்ச்சிகளை வெளிக்காட்டலாம் கருத்துகளில் அல்ல இத்துடன் நீங்கள் களத்தை விட்டு வெளியேறும் எத்தனையாவது ஆள்? அல்லது ஒவ்வொருத்தரும் வெளியேற வேண்டாம் என நான் கேட்டு நிற்கும் எத்தனையாவது பதிவு இது?

இனி யாரையும் களத்தை விட்டு வெளியேற வேண்டாம் என வேண்டுகோள் விடுப்பதில்லை எனத் தான் நினைத்திருந்தேன் ஆயினும் உங்கள் குறும்படங்களையும் கருத்துகளையும் ரசித்த ஒருவன் என்ற முறையில் கூறாமல் இருக்க முடியவில்லை.ஏதாவது தவறாக இருப்பின் மன்னிக்கவும்

ஆம் களத்தின் உறுப்பினர் வெளியேற்றம் தொடரக்கூடாது, தொடர்ந்து எழுதுங்கள்,


- Chandravathanaa - 06-03-2004

வெளியேறுகிறேன்.. வெளியேறுகிறேன்..
என்று சொல்வது அழகும் இல்லை.

யாருக்காகவும் வெளியேற வேண்டிய அவசியமும் இல்லை.

வெளியேறுகிறேன்.. என்று சொல்லி உங்களுக்கு நீங்களே
- எழுத முடியாதபடி - ஒரு விலங்கு போடுவதில் அர்த்தமும் இல்லை.


- sOliyAn - 06-03-2004

சில குறிக்கோள்களுடன் செயற்படுபவர்களுக்கு சில முரட்டுப் பிடிவாதங்களும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் ஏற்படுவது இயற்கைதான்... அவைதான் அவர்களின் இயங்குவதற்கான மூலம்.. இன்னொரு பார்வையில் பலவீனம்!
இதை வித்தகச் செருக்கு என்றும் சொல்லலாம்.
எனினும்.. இந்த உணர்வுக் கொந்தளிப்பு அதிக நேரம் நீடிக்க ஒரு கலைஞனுள் இருக்கும் 'மனிதம்' அனுமதியாது. :wink: ஆகவே, அஜீவன் தொடர்ந்து எழுதுவார் என நம்புகிறேன்.


- AJeevan - 06-15-2004

<span style='font-size:25pt;line-height:100%'>அனைத்து கள நண்பர்களுக்கும் வணக்கம்.
மீண்டும் உங்கள் அனைவரது அன்புக்கும் அரவணைப்புக்கும் நடுவே கலப்பதில் மகிழ்ச்சி.
நன்றிகள். ...........................................

அன்புடன்
அஜீவன்</span>


சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்..........


- kuruvikal - 06-15-2004

தங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும்.....!


- AJeevan - 07-06-2004

<b><span style='font-size:30pt;line-height:100%'>சினிமா கனாக்கள்..............</b></span>-அஜீவன்

சில வருடங்களுக்கு முன் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளை ஈழமுரசில் யமுனா ராஜேந்திரன் எழுதி வந்த காலமது. எனது குறும்படங்கள் பிரான்ஸ் கலை பண்பாட்டுக் கழக குறும்படப் போட்டிகளுக்காக போய்த் தேர்வான காலத்தில் எனக்கும் யமுனாவுக்குமான தொடர்புகள் ஏற்பட்டன.

நாங்கள் பேசும் போது புலம் பெயர் சினிமாவொன்றின் தேவை பற்றியே அதிகமாக பேசுவோம். இருவருக்குமிடையே அன்று மட்டுமல்ல இன்றும் வாக்கு வாதங்கள் உரத்து நிற்கும். இருப்பினும் அது சினிமா பற்றிய முரண்பாடுகளே அன்றி நட்புக்கிடையேயான தூரத்தை ஏற்படுத்துவது போல் தோன்றினாலும் அப்படி ஏற்பட்டதில்லை.

யமுனாவின் முக்கிய பொழுது போக்கு சினிமா பற்றிய தேடல்கள் கொண்ட புத்தகங்களைப் படிப்பதும் உலக சினிமாக்களை பார்ப்பதும் அதற்கான விமர்சனங்களை எழுதுவதுமேயாகும்.

எனது குறும்படங்கள் பற்றிய விமர்சனங்களில் கவிக்குயில் என்ற குறும்படத்துக்கு யமுனா எழுதிய விமர்சனத்தில் என்னை சனாதனக் கருத்தியல் கொண்டவனாக எனக்கெதிராக வசைபாடியிருந்தார்.

நான் அவரது விமர்சனம் பற்றி நேரிடையாக பேசிக் கொள்ளவில்லை. பேச்சு வந்த போது "என் பதில் ஈழமுரசில் வரும்" என்று சொன்னதுடன் பதிலும் எழுதினேன்.

"அதைச் செய்" என்று யமுனா சொன்னது அவரது விமர்சனங்கள் மேல் அவருக்கு இருந்த நேர்மையான பிடிவாதத்தையே காட்டியது.அது எனக்கு பிடித்த ஒன்று.

தனிப்பட்ட வாழ்வில் விட்டுக் கொடுத்துப் போகலாம். தனது பணி அல்லது துறையில் நேர்மையுடன் இருக்க எந்த விட்டுக் கொடுத்தலும் இருத்தலாகாது.

சனாததனக் கருத்தியல் என்று அவர் எழுதிய கருத்துக்கு எழுதிய பதில் , யாரும் எதிர்பாராதவிதமான தாக்குதல்களாவே இருந்தது கண்டு "உன்னைப் பற்றிய விமர்சனங்களை எழுதி வாசகர்களுக்கு உன்னை அறிமுகம் செய்த ஒருவருக்கு நீ செய்யும் நன்றிக் கடனா?" என்று என்னைத் திட்டியவர்கள் என் நெருங்கிய நண்பர்கள்தான்.

இவற்றில் யமுனாவும் நானும் வன்மம் கொள்ளவில்லை.

என்னை வேற்றுக் கோணத்தில் பார்க்கவும் யமுனாவின் விமர்சனங்கள் துணை புரிந்துள்ளன என்பதை நன்றியுடன் நினைவு கூருகிறேன்.

ஒருவரது வளர்ச்சிக்கு நண்பர்கள் விமர்சனங்கள் எவ்வளவு உறுதுணையோ, அது போலவே எதிர்நண்பர்களது விமர்சனங்களும் உறுதுணையேயாகும்.

எனது நேரடி விமர்சனங்களால் மனம் புண்பட்ட கலைஞர்கள் அதிகமே என்றுதான் நினைக்கிறேன். அதற்குக் காரணம் மனதில் பட்டதை நேரடியாக சொல்லி மனக் கசப்பை சம்பாதித்துக் கொள்வது சிலருக்கு பழக்கப் பட்ட ஒன்று. சமாளித்துப் போவதென்பது ஒரு சிலரால் முடியும். ஏனோ நான் முதலாவது பகுதிக்குள் அகப்பட்டுக் கொண்டதால் என்னால் அதிலிருந்து மீள முடியாமல் இருக்கிறதே என்று வருத்தப்பட்டதுண்டு. இருப்பினும் நான் யாரையும் வீழ்த்துவதற்காக அதைச் செய்பவனல்ல என்பதில் மன நிறைவு கொள்கிறேன்.

சில வேளைகளில் என் ஆசான்கள் என் தவறுகளை எப்படிச் சுட்டிக் காட்டினார்களோ அதுவே என் அடிமனதில் பதிந்து விட்டது போன்ற ஒரு உணர்வு.

ஒரு நல்ல படைப்பை யார் செய்தாலும் அதை பார்க்கவும் பாராட்டவும் ஆசைப்படுவேன். நல்லதைச் செய்ய ஒரு கணம் கூட யோசிக்கக் கூடாது. தீயதைச் செய்ய ஆயிரம் முறையல்ல.............. அதற்கு மேலும் யோசிக்க வேண்டும் என்பது எனது கருத்து.


இப்படிப்பட்ட என்னை ஒருவரோடு இணைந்து ஒரு படத்தை உருவாக்க யமுனா சொன்ன போது அவரோடு தொலை பேசி வழி பேசத் தலைப்பட்டேன். ஏற்கனவே அவர் ஒரு புலம் பெயர் திரைப்படத்தை உருவாக்கி நல்ல பெயரை சம்பாதித்திருப்பவர். ஆனால் இவரது படைப்பை நான் பார்த்ததில்லை. சொல்லக் கேட்டதுண்டு.
இவரது படமும் ஏனோ பெட்டிப் பாம்பாய் இருப்பதற்கு காரணம்தான் புரியவில்லை. பெட்டிக்குள் இருப்பவற்றை வெளியில் விட்டால் நல்லது. நம்மவர் படைப்பு என்றாவது பார்க்கலாம். இலங்கையில் பெட்டிக்குள் வைத்த படங்கள் 1983 கலவரத்தோடு எரிந்து போனது. இலங்கை தமிழ் சினிமாக்களில் நடித்தவர்களும் தயாரித்தவர்களும் கலைஞர்களும் பாவம், தேடி அலைகிறார்கள். அவர்களுக்கும் ஒரு பிடி சாம்பல் கூட கிடைக்குதில்லை. புலம் பெயர் நாடுகளில் இந்த அவலம் தொடர வேண்டாம்.

இனி கதைக்கு வருவோமே?...........இவருடன் பேச்சுக்கள் சில வாரங்களாக தொடர்ந்தன. கதைக் கரு கூட நல்லதாகவே எனக்குப் பட்டது.

"சரி ஒரு முறை நான் இருக்கும் நாட்டுக்கு வாருங்கள் பேசலாம்.
எனது நிலையில் நீங்கள் வாழும் நாட்டுக்கு நான் வர முடியாமலிருக்கிறேன்.
தவறான விதமாக வரலாம்தான்.
அதற்கு நான் உடன்படமாட்டேன். அது எனது உறுதியான முடிவு. இதில் மாற்றமில்லை" என்றேன்.

"சரி நான் ஒருவரை வைத்து ஒளிப்பதிவு செய்கிறேன். நீங்கள் படத்தை (எடிட்) தொகுத்துத் தந்தால் போதும்" என்றார்.

மனமகிழ்வோடு ஏற்றுக் கொண்டேன். ஆனால் . . . . . . . .

"நீங்கள் ஒளிப்பதிவு செய்து இயக்குவதற்கு முன் என்னுடன் உங்கள் கதையை விவாதிக்க ஒரு முறை சுவிசுக்கு வந்து விட்டுப் போங்கள். மனதில் எனக்கு ஏதாவது பட்டால் சொல்கிறேன்" என்றேன்.

அது உங்களுக்குத் தேவையற்ற பிரச்சனை, நான் கொண்டு வருவதை நீங்கள் ஒட்டி எடிட் செய்து தந்தால் போதுமென்றார் நண்பர்.

"நானொன்றும் சைக்கில் டியுப் ஒட்டும் பஞ்சர் கடைக்காரனில்லை" என்று உடனே சொன்னேன்.

மறுமுனையில் திகைப்பு மேலோங்கி பேச்சு தடைப்பட்டது.

இவை கடந்து பல வருடங்களாகி விட்டது.

எனக்கு பறக்கவும், கடக்கவும் அனுமதி கிடைத்த பிறகு பல முறை அவர் வாழும் நாட்டுக்கு சென்று வந்தேன். ஆனால் நாங்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கவேயில்லை . . . .

கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற கிரீக்க நாட்டினர் போர்த்துகீசியரது கொடியையையும் எந்த வஞ்சனையுமின்றி போட்டியென்பது வன்மம் இல்லை என்பதாக ஏந்திச் சென்ற போது . . . . . . .

யார் யார் சிவம்?
நீதான் சிவம்
அன்பே சிவம் . . . . .என்பது போல் இதயத்துக்குள் ஓர் அசைவு............


- sOliyAn - 07-06-2004

"நானொன்றும் சைக்கில் டியுப் ஒட்டும் பஞ்சர் கடைக்காரனில்லை" என்று உடனே சொன்னேன்.'

அருமையான உவமை. அது சரி! சிவமா?! யாரையா அது?!

'இவர்தான் மாப்பிளை.. இவதான் பொண்ணு... இதுதான் திகதி பெயர்.. திருமண வாழ்த்துமடல் எழுது' என்று சொல்லுறமாதிரி ஒரு உணர்வு... தொடருங்கள் அஜீவன்! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- AJeevan - 07-06-2004

sOliyAn Wrote:"நானொன்றும் சைக்கில் டியுப் ஒட்டும் பஞ்சர் கடைக்காரனில்லை" என்று உடனே சொன்னேன்.'

அருமையான உவமை. அது சரி! சிவமா?! யாரையா அது?!

'இவர்தான் மாப்பிளை.. இவதான் பொண்ணு... இதுதான் திகதி பெயர்.. திருமண வாழ்த்துமடல் எழுது' என்று சொல்லுறமாதிரி ஒரு உணர்வு... தொடருங்கள் அஜீவன்! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<span style='font-size:22pt;line-height:100%'>நன்றிகள் சோழியன்.

ஒரு படத்தின் தலைவிதியை இறுதியாக மாற்றி ஆரம்பத்தில் நினைக்காத முடிவை தந்து மெருகூட்டும் கலைஞனே எடிட்டர் எனப்படும் தொகுப்பாளர். இவர் கட்டிட மேல்புூச்சுக்காரர் போன்றவர். அழகியலோடு படைக்கப்படும் கலையை தொய்ய விடாது பார்வையாளனை பொய்யைக் கூட மெய்யாக உணர வைப்பவனே தொகுப்பாளன்.

சிறந்த இயக்குனர்கள் கதை விவாதங்களில் ஈடுபடும் போது எடிட்டிரையும் வைத்துக் கொண்டே விவாதிப்பார்கள். காரணம் கதாசிரியர் தன் கதை திசை மாறக் கூடாது என்பதிலேயே கருத்தாக இருப்பார்.ஒளிப்பதிவாளருக்கோ, கதையின் நோக்கம் கெடா ஒளிப்பதிவு அமைய வேண்டுமென்ற நோக்கமே முதன்மையாக இருக்கும். இயக்குனர் அனைத்தையும் நினைப்பதால் இறுதியாக தேவைப்படும் ஒரு சில ஷாட்களை மறக்க நேரிடலாம். அவற்றைக் கோர்வையாக கோர்க்கும் போது எடிட்டருக்கு பிரச்சனை வருகிறது.அதை ஈடு செய்யவே எடிட்டர் இங்கே இப்படியான ஷாட்களை பிரத்தியேகமாக எடுங்கள் என்று குறிப்பிடுவார்.

எவ்வளவு அழகாக சமையல் செய்தாலும் தட்டில் பரிமாறும் போது அதை கவர்ச்சியாக படைப்பதிலேதான் அந்த பசியே உருவாகி நாவே ஊறுகிறது.

ஒரு படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க வைக்கச் செய்யும் கலை தெரியாத எடிட்டர் கையில் ஒரு படம் கிடைத்தால் அம்போதான்.

எனக்கு ஒரு நண்பரைத் தெரியும் அவரது கதைத் தேர்வு எனக்கே இல்லை. ஆனால் கடைசியில் கதையை சொதப்பி நாற வைப்பதில் அவருக்கு இணையாக நான் யாரையும் பார்த்தில்லை.

சர்வதேச தரம் வாய்ந்த பல படங்கள் படத் தொகுப்பால் சிகரத்தைத் தாண்டியுள்ளது.

எனவேதான்
\"நானொன்றும் சைக்கில் டியுப் ஒட்டும் பஞ்சர் கடைக்காரனில்லை\" என்று சொன்னேன்.

சிவமா? சிவ சிவா !!!!!!!!!!!!!!</span>


- sOliyAn - 07-06-2004

'எடிட்டிங்'க்கு அருமையான விளக்கம்! சிலவகை வெட்டுக்கொத்துகளுக்கு பின்னணி இசையும் கைகொடுக்கிறதுதானே?! 'நிழல்யுத்தம்'தானா?! அதிலே வரும் கார் விபத்துக் காட்சிக்கு எடிட்டிங்குடன் இசையும் மெருகேற்றுகிறதே! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- AJeevan - 07-07-2004

[size=15]உண்மைதான் சோழியன்.

கதை விவாதங்களில் இறுதி சுற்று விவாதங்கள் நடக்கும் போது இசையமைப்பாளர்கள் கலந்து கொள்வதுண்டு.

இவர்கள் எப்படியான பின்னணி இசை அமைய வேண்டும் என்று குறிப்பு எடுக்கவும் அதற்கான உணர்வுகளை முன்னமே (கற்பனைக் குதிரையை) தயார் செய்து கொள்ளவும் வேண்டி உலக திரைப்படங்களுக்கான பின்னணி இசையமைப்பாளர்கள் பங்கு பற்றுவதுண்டு.

ஆனால் தமிழ் இசையமைப்பாளர்கள் பாடல்களை உருவாக்கவே இயக்குனர்களுடன் கலந்தாலோசிக்கிறார்கள். படத்தொகுப்பின் பின்னர்தான் தமிழ் திரைப்படங்களுக்கான பின்னணி இசை கூட சேர்க்கப்படுகிறது. எனவே உங்கள் கருத்து முக்கியமானதொன்று சோழியன்.

இயக்குனர் பாசில் மற்றும் இளையராஜா இணைந்த படங்களில் இசைக்கான இடைவெளி பின்னணி இசை சேர்ந்திருப்பதைக் காணலாம்.


- AJeevan - 07-10-2004

<b><span style='font-size:30pt;line-height:100%'>சினிமா கனாக்கள்.......................</b></span>

<span style='font-size:30pt;line-height:100%'>விமர்சன நிழல்யுத்தம்</span>

<span style='font-size:22pt;line-height:100%'>படைப்பு என்பது ஒரு பிரசவம் என்பார்கள். அது பிரசவத்தை விட வேதனையானது போலத் தெரிகிறது.

விமர்சனங்கள் என்ற பெயரில் , குறும்படத்துக்கும் ,முழு நீளப்படத்துக்குமான புரிந்துணர்வு இல்லமை காரணமாகவே சில விமர்சனங்கள் தமிழர் சமூகத்துக்குள் இடம் பெறுகிறதோ என்ற ஒரு கேள்வி , சில விமர்சனங்களைப் பார்க்கும் போது எழவே செய்கிறது.

குறும்படமென்பது ஒரு சிறு கதைக் கருவை மையமாக வைத்து ஒரு படைப்பை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் உருவாக்கிக் காட்டுவது. (30 நிடங்களுக்குள் அது 1நிமிடமாகக் கூட இருக்கலாம்.) இதில் ஏதாவது ஒரு செய்தி சொல்லப்பட வேண்டும்.தொழில் நுட்ப ரீதியான விடயங்களும் இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

ஒரு முழு நீளத் திரைப்படத்தில் ஒரு கதைக்கருவை பலப்படுத்துவதற்கு ஏகப்பட்ட விடயங்களை சேர்ப்பதோ, அதற்கான நியாயங்களை முன் வைப்பதோ இலகுவான காரியம்.இதற்கு 1 முதல் 3 மணி நேரம் வரை கால வரையரை இருக்கிறது. சில இதற்கு மேலும் நீள முடியும்.

ஒரு குழந்தையை பிரசவிக்கும் வேதனை எப்படியானதென்பது அத் தாய்க்கு மட்டுமே தெரியும்.பக்கத்தில் நிற்பவர்;
\"கொஞ்சம் பொறு சரியாயிட்டு இந்தா கொஞ்சம்தான்..........\"
என்பதோ அல்லது
\"உனக்கு மட்டும்தான் வலியா? வேறு யாரும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லையா? நாங்கள் உன் நன்மைக்குத்தானே சொல்கிறோம்.\"
என்ற அதட்டல் பாணியில் அறிவுரை சொல்வதோ இலகுவானது.

எப்படியோ குழந்தை பிறந்த பிறகு அக் குழந்தையின் வாழ்கை முறை மாற்றங்களுக்கு தாய்-தந்தை-குடும்பம்-சமூகம்............................... என பலர் உரிமை கொண்டாடுகின்றனர். அது நல்லதோ கெட்டதோ எதுவாக இருப்பினும்....................

ஆனால் ஒரு சினிமா படைப்பின் விமர்சனத்துக்கு உள்ளாவது படைப்பாளியான இயக்குனர் மட்டுமேதான்.

நன்றாக நடித்திருக்கிறார்கள் என்றால் அது நடித்தவர்களுக்கான பாராட்டு. இல்லாவிடில் ஏதோ ஒரு பகுதி நன்றாக இருக்கிறது என்றால் அதுவும் அது சார்ந்தவர்களையே சேரும்.

சரியில்லை என்றால் அது நேரடியாக இயக்குனரை மட்டுமே குறிவைத்து தாக்குகிறது.அதை தாங்கிக் கொள்ள வேண்டிய பொறுப்பும், பொறுமையும் இயக்குனருக்கு இருந்தே ஆகவேண்டும்.

குழந்தையின் வளர்ப்பில் வரும் தவறுகளுக்கு சமூகம் கூட பொறுப்பேற்கத் தயாராயிருக்கிறது.ஆனால் ஒரு சினிமா படைப்பின் வளர்ப்புக்கு இயக்குனர் மட்டுமே பொறுப்பேற்க வேண்டி வருகிறது.

தமிழ் திரை விமர்சகர்களில், அநேகமாகக் கதையை மட்டும் முதன்மைப் படுத்தி விமர்சிப்பவர்களே அதிகம். இதற்கு மாற்றுக் கருத்து இல்லை என்றே நினைக்கிறேன். மிகக் குறைவானவர்களே தொழில்நுட்ப ரீதியான விமர்சனங்களை வைக்கின்றனர்.

விமர்சனம் என்பதும் கருத்து என்பதும் வேவ்வேறு.எனக்கு ஒரு செயல் பிடிக்கவில்லை என்பது எனது கருத்தாகலாம். ஒரு செயலைப் பற்றி விமர்சிப்பதற்கு எனக்கு அச்செயல் பற்றிய முழு விபரமும் தெரிந்திருக்க வேண்டும்.இல்லாவிடில் அப்படியாவதற்கான அடிப்படைக் காரணங்களை பகுத்தறியும் கல்வி அல்லது அது குறித்த நீண்ட-நெடிய அனுபவம் இருத்தல் தேவை.

ஐரோப்பிய அல்லது மேற்கத்திய நாடுகளின் திரை விமர்சகர்கள் இவற்றைக் கொண்டிருக்கிறார்கள்.இவர்கள் கதையை மட்டும் பார்ப்பதில்லை தொழில் நுட்ப ரீதியான செயல்பாடுகளையும் கருத்தில் கொண்டே விமர்சிக்கிறார்கள். இப்படியான அநேகமான விமர்சனங்கள் ஒரு ஆரோக்கியமான விமர்னமாகவே இருக்கிறது.

இவர்கள் திரைப்படங்களை வகைப்படுத்தியே பார்க்கிறார்கள்-விமர்சிக்கிறார்கள்.

அது கதை பற்றிய சினிமாவா?
குழந்தைகளுக்கான சினிமாவா?
வெளிநாட்டு சினிமாவா?
பேய் கதைகக்கான சினிமாவா?
யதார்த்த சினிமாவா?
டாக்யுமன்றி சினிமாவா?
விசேட தொழில் நுட்பங்களுக்காக உருவான சினிமாவா?
பொழுது போக்கு சினிமாவா?
கொமடி சினிமாவா?
தகவல் சொல்லும் சினிமாவா?
உண்மை கதையை தழுவிய சினிமாவா?..................................
என்பது போன்ற தரங்களை வகைப்படுத்தி முதன்மைப்படுத்தியே விமர்சிக்கிறார்கள்.

ஒரு திரைப்படைப்பை விமர்சிக்கும் போது இவை கருத்தில் கொள்ளப்பட்டால் என்றுமே ஆரோக்கியமாக இருக்கும்.

எல்லோரையும் எல்லோராலும் திருப்திப்படுத்த முடியாது.இது சினிமாக் கலைக்கு மிக மிக பொருத்தமானதே.

அண்மையில் எம்மவர் ஒருவரின் திரைப்படமொன்றைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. அத் திரைப்படம் புலம் பெயர் நாட்டில் வாழும் ஒருவரால் தமிழ்நாட்டில் உருவான திரைப்படம்.

அதை விமர்சனம் செய்யும் படி சிலர் என்னிடம் கேட்டார்கள். தனிப்பட்ட ரீதியில் எனது கருத்துகளை அது குறித்தவரோடு பகிர்ந்து கொண்டேன்.நான் எழுதுவதினால்; ஒன்று அவரை அடுத்த படைப்பைச் செய்யவிடாது தடை செய்வதாகிவிடும் என்று கூறினேன். தவிரவும் அதை ஒரு நண்பரின் வீட்டிலேயே பார்த்தேன். அத்திரைப்படத்தில் நல்ல பல விடயங்கள் இருந்தன,அதை விமர்சனம் செய்வதானால் நான் பல முறை அத்திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்.. அதை என்னிடம் தருவதற்கு அவரால் முடியவில்லை.காரணம் அது வெளியீடுக்கான பிரதியல்ல.விநியோகஸ்தர்களுக்கான திரையிடல்களுக்காக மட்டுமே லேப்பிலிருந்து கொடுக்கப்பட்ட பிரதியின் கமரா கொப்பியாகும்.

அவருக்கு என் வாழ்த்துகள்.அவரை என்னால் தவறாக எடுத்துக் கொள்ள முடியாது.அது அவரது ஒரு கனவு.ஏதோ ஒரு சிலராவது ஏதாவது, அது நல்லதோ கெட்டதோ எந்த வழியிலாவது அவர்கள் எண்ணப்படி செய்யட்டும். அவர் செலவு செய்ததில் 25 சதவிகிதத்தை புலம் பெயர் சினிமா ஒன்றுக்காக செலவு செய்திருந்தால் அவர் புலம் பெயர் சினிமா வரலாற்றுக்காகப் பேசப்பட்டிருப்பார்.

தவறுகள்தான் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையென்றால்.தவறுகளே புதியதொரு புலம் பெயர் சினிமா ஒன்றை உருவாக்க அடிவகுக்கலாம்தானே?

ஒருவரது கருத்தை மேற்கோள் காட்டும் போது சில கருத்துகள் வேதனை தருகிறது. அது வருத்தத்திற்குரியதே. அதற்காக மேற்கோளை மாற்ற முடியாது.ஒருவரைப் பற்றி வாதிடும் போது தாமும் மற்றையவரது கருத்துகளை வேதனை தந்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவம் வேண்டும்.

காவிக்கொண்டு வந்தாலும் தூக்கிக் கொண்டு வந்தாலும் வார்த்தைகளில்தான் வேறுபாடே தவிர அர்த்தம் ஒன்றுதான்.நாம் எதையும் கொண்டு வரவுமில்லை கொண்டு போகப் போவதுமில்லை. எல்லாமே உண்டு.அதைப் பயன் படுத்துகிறோம்.அவ்வளவுதான்.


<b>ஒரு பக்க சார்ப்பாக முன்வைக்கப்படும் படைப்புகளை விட, யதார்த்தத்தை முன்வைக்கும் போது அதை பகுத்தாராய்ந்து சரி எது, பிழையெது என்று தீர்மானிக்கும் சமூகமாக நமது எதிர்கால சந்ததிகளாவது திகழ வேண்டும் என்பது எனது பிரார்த்தனை.</b>

<b>ஒருவனைத் தாக்கியதற்காக, தாக்குதலுக்குள்ளானானவன் திருப்பி அவனது சட்டையைப் பிடித்தால், தாக்க வந்தவன் என்னைத் தாக்க வருகிறானே என்று கத்தி, ஏதோ தாக்குதலுக்குள்ளானவன் போல் ஊரைக் கூட்டுகிறான்.

தாக்கியவனுக்கே இந்த வலியென்றால், தாக்கப்பட்டவனுக்கு எப்படி வலித்திருக்கும்?</b>

படைப்பாளிகள் விமர்சனங்களை பொறுத்துக் கொண்டேயாகவேண்டும்.அது சிலருக்கு நிச்சயமுண்டு.

குழந்தை தீயவனாக இருக்கிறான் என்று கூற விமர்சனம் என்ற பெயரில் செய்ய வேண்டியதில்லை எனது கருத்து என்று சொல்லலாம்.அது நிச்சயம் தேவை.வரவேற்க வேண்டியது.கருத்துக் கூறப்பட்டவனால் முடியாமல் போனாலும், நாளைய சமூகத்துக்கு அது நிச்சயம் தேவைப்படும்.

கருத்துக்காக வாதிட்டாலும், நட்பில் கீறல்கள் விழாமல் தொடரலாம்?</span>