![]() |
|
கருணா அம்மானின் வாழ்க்கை வரலாறு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கருணா அம்மானின் வாழ்க்கை வரலாறு (/showthread.php?tid=7223) |
- Paranee - 04-11-2004 விபீசனன் செய்நன்றி மறந்தான் என்பது மிக முக்கிய குற்றம் அதைவிட தர்மத்தின் பக்கம் சாயும்போது செய்நன்றி என்பது தாழந்தே நிற்கும். செய்நன்றி காப்பதற்காய் அதர்மத்தின் வழி சென்றால் தர்மத்தை யார் காப்பார் ? விபீசனன் இராணவனனை (இலங்கையை) பொறுத்தவரையில் குற்றவாளி . இராமனையும் மற்றவர்களையும் பொறுத்தவரையில் சுற்றவாளி அதேபோல்தான் கருணாவும் அவரைச்சார்ந்தோரைப்பொறுத்தவரையில் சுற்றவாளி. தமிழீழ மக்கள் புலிகள் உலகநாடுகளைப்பொறுத்தவரையில் குற்றவாளி என்றுமே தர்மமே வெல்லும் - Eelavan - 04-11-2004 BBC Wrote:ம் எனது பார்வையில் செய்நன்றிக்காக ஒருவர் அநியாயங்களுக்கு துணைபோக வேண்டியது இல்லை என்று நினைக்கின்றேன். இந்தக்கருத்துக்காகவே இக்கேள்வியைக் கேட்டேன் நன்றி B.B.C ஆயினும் உலகம் கும்பகர்ணனை சுத்த வீரன் என்றும் செய்நன்றி மறவா உத்தமன் என்றும் கொண்டாடும் அதேவேளை விபீஷணனை உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தல் போன்ற காரியங்களுக்கு உதாரணம் காட்டுகின்றதே - Paranee - 04-11-2004 உலகம் எப்போதுமே அப்படித்தான் உயர்ந்து சென்றவனை நோக்கி வாழ்ததும் அதேவேளை அவன் எப்படி உயர்ந்தான் என்பதை ஆராய்ச்சியும் செய்யும். சிறு தவறு இருந்தாலும் அதை முன்னிறுத்தி அவன் அதனால்தான் உயர்ந்தான் என்று எள்ளி நகையாடவும் செய்யும் அதுதான் உலகம் கும்பகர்ணனை செய்நன்றி மறவாதவன் என்று சொல்லும்போது அதற்கு எதிராக ஒருவரை சுட்டவேணுமல்லவா ? அந்த இடத்திற்கு விபீசனனை அமர்த்தி இருக்கின்றது. - Paranee - 04-11-2004 கருணா செய்த தவறிற்காய் பிரதேசவாதம் பேசி தன்னை காப்பாற்ற நினைத்தார். ஒரு பெரும் அரசியல் பொறுப்பாளாரான மகளிர் அணி பொறுப்பாளர் எல்லா விடயங்களும் அறிந்திருந்தும் தலைமையையும் வன்னியையும் ஏன் அவதூறாகவும் கண்டன அறிக்கைகளையும் வீசிக்கொள்கின்றார் சற்று சிந்திக்கவேண்டியதுதான். ஏனைய போராளிகள் (கருணாவின் உறவுகள் நண்பர்கள் சிறு வயது போராளிகள் தவிர்நத) சூழ்நிலைக்கைதிகளாக இருக்கின்றார்கள். மற்றைய அனுபவம் வாய்ந்த போராளிகள் எதற்காக கருணாவின் பக்கம் இத்தனை தவறுகள் இருந்தும் இறுதிவரை ஓன்றாகவே இருக்கின்றார்கள். இதுவும் செய்நன்றிக்கடனா ? - Eelavan - 04-11-2004 அப்படியாயின் விஜயனுக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்த,தர்மனுக்குத் தர்மம் போதித்த பீஷ்மர்,துரோணாச்சாரியார் முதலிய பெருமக்கள் தவறிழைத்துவிட்டனர் என்றாகிவிடுமே? எனக்கென்னவோ ஆனந்த சங்கரி செய்தது போன்று விபீஷணனும் இராமரால் வழங்கப்பட்ட இலங்காபுரி ஆட்சிப் பொறுப்பை மறுத்திருந்தால் இந்நிலை வந்திருக்காது என்று தோன்றுகின்றது - Eelavan - 04-11-2004 Paranee Wrote:கருணா செய்த தவறிற்காய் பிரதேசவாதம் பேசி தன்னை காப்பாற்ற நினைத்தார். ஒரு பெரும் அரசியல் பொறுப்பாளாரான மகளிர் அணி பொறுப்பாளர் எல்லா விடயங்களும் அறிந்திருந்தும் தலைமையையும் வன்னியையும் ஏன் அவதூறாகவும் கண்டன அறிக்கைகளையும் வீசிக்கொள்கின்றார் அவர்களை வளர்த்தெடுத்தது கருணாவாக இருந்திருந்தால் அது செய்நன்றிக்கடன் இல்லையே அவர்களை வளர்த்தது தமிழ் மக்களூம் தேசியத் தலைமையும் அல்லவா இன்றளவும் அவர்கள் உண்ணும் ஒருபிடிச்சோறும் தமிழ் மண்ணைக் காப்பதற்காக வழங்கப்பட்டதல்லவா அப்படியிருக்க பிரேமினி அவர்கள் கருணாவிற்குப் பிற்பாட்டுப் பாடுகிறார் எனின் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதுதான் போலத் தெரிகிறது - Paranee - 04-11-2004 ம் அப்படியும் எண்ணத்தோன்றுகின்றது ஆட்சி ஆசைக்காக எதிரியாயினும் அவன் பக்கம் நாம் சாhந்துகொள்வோம். அண்ணன் பக்கம் இருந்தால் அழிவு நிச்சயம் என்று எண்ணியிருக்கலாம் அல்லவா ? இதைத்தான் மனம் அலைபாய்தல் என்பார்களோ ? - Paranee - 04-11-2004 ம் கருணா வளர்ந்த விதத்தில் அவர்களும் வளர்க்கப்பட்டிருக்கலாம் அதனால் அந்த நன்றிக்கடனிற்காய் வாலாட்டுகின்றார்களோ தெரியவில்லை பிறேமினி செய்தது மிகப்பெரிய மன்னிக்கமுடியாத குற்றம். பெண் இனத்திற்கு ஒரு உத்வேகம் உரிமை கொடுத்தது தலைமைதான் என்பதை ஒரு நிமிடம் எண்ணியிருப்பாரானால் இன்று இந்த நிலைக்கு ஆளாகியிருக்கமாட்டார். Eelavan Wrote:Paranee Wrote:கருணா செய்த தவறிற்காய் பிரதேசவாதம் பேசி தன்னை காப்பாற்ற நினைத்தார். ஒரு பெரும் அரசியல் பொறுப்பாளாரான மகளிர் அணி பொறுப்பாளர் எல்லா விடயங்களும் அறிந்திருந்தும் தலைமையையும் வன்னியையும் ஏன் அவதூறாகவும் கண்டன அறிக்கைகளையும் வீசிக்கொள்கின்றார் - Eelavan - 04-11-2004 அவர் கருணாவின் மனைவியின் நெருங்கிய நண்பி அந்தப் பாசமோ தெரியவில்லை அயினும் கருணா எங்காவது ஓடித்தப்பிவிடுவார் இவர்கள் கதி? - Mathan - 04-12-2004 அவர்களும் கருணாவுடன் சென்றுவிட்டார்கள் என்று படித்தேன். - Eelavan - 04-12-2004 எனவே இவரது வாழ்க்கை வரலாற்றை யாராவது எழுதப் புகுவாராயின் தலைப்பை இவ்வாறு வைக்கலாம் எழுதப்படாத சரித்திரத்திற்கு வரையப்படாத சித்திரம் - Mathan - 04-13-2004 http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/3537025.stm - Eelavan - 04-14-2004 <img src='http://www.yarl.com/forum/files/karunaa.jpg' border='0' alt='user posted image'> நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே - Shan - 04-16-2004 கருணா கண்டுபிடிக்கும் வரை எங்கிருந்தார்கள் கார்ள்ஸ் மாக்சின் பேரப்பிள்ளைகள்? விடுதலைப் புலிகள் ஈட்டிய வெற்றியானதுஇ மட்டக்களப்புஇ அம்பாறை மக்களுக்கு எதிராக ஈட்டிய வெற்றியல்ல. மாறாக தனது சுய விருப்புக்காகவும்இஇருப்புக்காகவும் அப்பாவி இளைஞர்இ யுவதிகளின் வாழ்வை பணயம் வைத்து பிரதேச வாதத்தை சாட்டாக்கி கொண்ட கருணாவிற்கு எதிரான வெற்றியே என்பதை கிழக்கு மாகாண மக்கள் மட்டுமல்ல தமிழீழ மக்கள் அனைவருமே அறிவர். யாழ் மேலாதிக்க வாதமானது ஏதோ விடுதலைப் புலிகளால் உருவாக்கப் பட்ட ஒருவிடயம் போன்றும் அதை போன மாதம் தான் கருணா கண்டுபிடித்தார் போலவும் அறிக்கைகளும் கட்டுரைகளும் எழுதத் தலைப்பட்ட தேசம் போன்ற பத்திரிகைகளும்இ கார்ள்ஸ் மாக்சின் பேரப்பிள்ளைகளும் எங்கிருந்தார்கள்,? இவர்ளுக்கு இப்படி ஒரு பிரச்சனை எமது சமூகத்தில் இருந்தது கருணா கூறிய பின்னர் தான் தெரிய வந்ததா? யாழ் மேலாதிக்க வாதம் என்பதுஇ சீதனம்இசாதிஇ சமயஇவர்க்க வேறுபாடுகள் போன்று காலாகாலமாக இருந்து வந்த ஒரு உள் முரண்பாடுதான் 1960 களில் வன்னியில் யாழகற்றி சங்கம் தொடங்கும் அளவிற்கு இந்தப் பிரச்சனை கூர்மை அடைந்திருந்ததை யாரும் மறுக்க முடியாது. விடுதலைப் போராட்டம் தொடங்கி 25 வருடங்களைத் தாண்டும் வரை டோள் எடுத்து சொகுசாக சாப்பிட்ட வண்ணம் தொழிலாளர் வர்க்கத்திற்கு விடியலைத் தேடிய இந்த மாக்சிய வாதிகள் தங்கள் போராட்டத்தை தொடங்குவதற்கு கருணா வரும்வரை காத்திருந்ததன் காரணம் என்னவோ? கருணாவின் கருத்துக்ளோடு நாம் முற்றாக முரண்படவில்லை. அவர் தேர்ந்தெடுத்த காலம் அவரின் உள்நோக்கத்தை சந்தேகப்பட வைத்தது. பிரதேச வாதம் ஒரு இரவில் முடிந்துவிடும் பிரச்சனையுமல்ல கருணா தமிழீழப் போராட்டத்தின் தாற்பரியத்தை உணராதவரும் அல்ல. 17 வருடங்கள் பொறுத்திருந்தவருக்கு கடந்த மாதம் பொறுமை இழந்து மட்டக்களப்புஇ அம்பாறை மக்களின் அவலம் ஞாபகத்திற்கு வந்த போதுதான் இங்கிருக்கும் புத்திஜீவிகளுக்கும் ஞானம் பிறந்திருக்கிறது. இதுவரை காலமும் மேலாதிக்கத்தின் நகங்கள் அந்த மக்கள் மீது பதிந்திருந்தது இவர்களுக்கு தெரியாமல் போயிருந்ததா? இவர்களின் உள்நோக்கம் மேலாதிக்கதிதிற்கு எதிரானது அல்ல மாறாக கூத்ததாடியின் நிலையே. ஒருவகையில் இவர்கள் எல்லோருமே மேலாதிக்கத்தின் மறைமுக பங்காளிகள் கூட. புரட்சிகர அமைப்புக்குள் சகபோராளிகளை கொன்று குவித்த போது துடிக்காத இரத்தமும் ஜனநாயகத் தேவையும் ரி.பி.சி போன்ற வானொலி நடத்துனர்களுக்கு திடீரென எங்கிருந்து வந்தது ஜனநாயகத்திற்கான அக்கறை?. கருணாவின் பின்வாங்கலானது இழப்புக்களை தவிர்பதாக இருக்கலாம் அல்லது தன்னைக் காப்பாற்றிக் கொள்வதாக இருக்கலாம். எது எப்படியோ பாரிய இழப்புக்கள் இன்றி தமிழர் தாயகம் மீண்டும் இணைந்திருக்கிறது. விடுதலைப் புலிகளின் கீழ் ஓரணியாக இயங்க அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் முன்வந்திருக்கும் வேளையில் தமிழீழப் போராட்டத்தைப் பலப்படுத்துவோம். உரிமையை வென்றெடுப்போம். ஈழபுூமி வெளியீட்டகம் (13ஃ04ஃ2004)-2 - Mathan - 04-17-2004 சண், இந்த ரி.பி.சி ரேடியோ இணையம் மூலம் கேட்க முடியுமா? யார் இதை நடத்துகின்றார்கள்? - adipadda_tamilan - 04-19-2004 BBC Wrote:சண், இந்த ரி.பி.சி ரேடியோ இணையம் மூலம் கேட்க முடியுமா? யார் இதை நடத்துகின்றார்கள்? ++++++++++++++++++++++++++++++++++++ ரிபிசி ரேடியோ இப்போவும் இயங்குதா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . நிச்சாயமாக ஓடி ஒழித்திருப்பார்கள்.. பூசை,மேள,தாளமெல்லம் முடிஞ்சாப் பிறகு எப்படி இருப்பார்கள்.. :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathivathanan - 04-19-2004 குற்றம் குற்றமெண்டு சொல்லுறியளே தவிர என்ன குற்றமெண்டு சொல்லுறியளில்லை.. ஆரம்மபத்திலையே துரோகிப்பட்டம் குடுத்தாச்சிது.. ஏனெண்டும் தெரியேல்லை.. பிரதேசவாதம்தான் பிரச்சனைக்கு ஆரம்பமென்றால் அது ஏன் வந்தது..? அவசரப்பட்டு கருத்து எழுதவேண்டாம்.. அடுத்த ஞாயிறுதான் திரும்ப வருவன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- yarl - 04-19-2004 மதி எப்ப மட்டக்கிளப்பால் வந்தது?<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sutharshan - 04-19-2004 Quote:குற்றம் குற்றமெண்டு சொல்லுறியளே தவிர என்ன குற்றமெண்டு சொல்லுறியளில்லை.. தாத்தாவை நினைச்சால் பாவமாக்கிடக்கு. விடிய விடிய ராமர் கதை கேட்டுப்போட்டு விடிஞ்சதும் ராமன் சீதைக்கு குஞ்சியப்பு எண்டு சொன்னமாதிரி. இவ்வளவு காலத்துக்குப் பிறகு என்ன குற்றமெண்டு கேக்கிறார். அவருக்கு தெரியாதோ அல்லது தெரியாத மாதிரி நடிக்கிறாரோ. எப்பிடி இருந்தாலும் அவருக்கும் கொஞ்சம் விளங்கப்படுத்தத்தானே வேணும். அப்பு.......உதாரணத்துக்கு ஒண்டு மட்டும் தாறன்(மற்றவையும் வேற வேற உதாரணங்களையும் முடிஞ்சால் குடுங்கோ) அவரின்ரை நிதி மோசடி பற்றி மார்ச் 17ம் திகதி 'தாரகி' (டி. சிவராம்) விலாவாரியா எழுதினது. http://www.tamilcanadian.com/pageview.php?...ID=2294&SID=123 அவசரப்பட்டாம ஆறுதலா வாசிச்சுப் போட்டு கருத்துச்சொல்லுங்கோ. இதையும் வாசிச்சுப்போட்டு 'குஞ்சியப்பு' தான் எண்டு சொன்னீங்கள் எண்டா பிறகு இங்கவாற எல்லாருக்கும் உறுதியாக தெரிஞ்சுபோம் நீங்கள் தூங்கவில்லை தூங்குறமாதிரி நடிக்கிறீங்கள் எண்டு. - Mathivathanan - 04-19-2004 sutharshan Wrote:எந்த சிவராம் எழுதினாலும் எனக்கு கவலையில்லை..Quote:குற்றம் குற்றமெண்டு சொல்லுறியளே தவிர என்ன குற்றமெண்டு சொல்லுறியளில்லை.. *** <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->**** உண்மைக்குப்புறம்பான பொய்யான கருத்து என்பதால் நீக்கப்பட்டள்ளது - மோகன் |