![]() |
|
நீங்கள் கேட்டவை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நீங்கள் கேட்டவை (/showthread.php?tid=7205) Pages:
1
2
|
- Eelavan - 05-24-2004 காதலியிடம் இதயத்தைத் தொலைத்துவிட்டுக் கவிஞர்கள் ஆகியவர்கள் பலர்.இவரும் அப்படித் தான் கடற்கரையில் காற்றுவாங்கப்போனவர்.கன்னியைக் கண்டதும் மதி மயங்கி இதயத்தைத் தவறவிட்டு அவள் நினைவுகளாக வாங்கி வருகிறார் " நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை" என காதல் தீயில் வாடும் இவர் கவிதை நீங்கள் கேட்டவையில் படம்: கலங்கரை விளக்கம் பாடல்: வாலி பாடியது: டி.எம்.சௌந்திரராஜன் இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் காட்சி: (வாலி எழுதிய புத்தகத்திலிருந்து) விஸ்வநாதன், வாலியிடம் சொன்னது: இது கதாநாயகன் பாடும் ஒரு சாதாரண காதல் சிச்சுவேஷன்தான், இருப்பினும் அதுக்கு ஒரு நல்ல பல்லவியோட ஆரம்பித்து பாட்டு எழுதினீங்கன்னா, இந்த வாட்ச், செயின், மோதிரம் உங்களுக்கு" என்று சொல்லி எல்லாத்தையும் கழட்டி வைக்க. வாயில் புகையிலையைப் போட்டுக் கொண்டு, வாலி இந்தப் பாட்டை எழுத, எம்.எஸ்.வி, ஹார்மோனியப் பெட்டிமேல் இருந்த செயின், மோதிரம், வாட்சை எடுத்து வாலி கையில் கொடுத்தார். உடனே வாலி அவற்றைத் திரும்பி அவரிடம் கொடுத்து, எனக்குத் தேவை உங்கள் ஆசிர்வாதம் மட்டுமே என்றார். காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்னவானாள் நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்னவானாள் நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் நடை பழகும் போது தென்..றல் விடை சொல்லிக்கொண்டு போகும் நடை பழகும் போது தென்றல் விடை சொல்லிக்கொண்டு போகும் அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்..ளிக் கொண்டு போகும் அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும் அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்னவானாள் நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை கொஞ்சம் விலகி நின்ற போதும் இந்த இதயம் தாங்கவில்லை கொஞ்சம் விலகி நின்ற போதும் இந்த இதயம் தாங்கவில்லை அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்னவானாள் நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்னவானாள் நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் - Eelavan - 05-26-2004 பாட்டாளி,முதலாளி வர்க்கவேறுபாடுகள் பற்றிக் கவிதைகள் வருவது போன்று திரைப்பாடல்களும் வந்தவண்ணமிருக்கின்றன. உழைத்தவன் பசியில் வாடவும்,உடுக்கத் துணியின்றிக் குளிரில் வாடவும் உண்டு களித்திருக்கும் முதாளித்துவத்தைச் சாடி எழுதப்பட்ட பாடல் இது. மடி நிறையப் பொருள் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும் என்ற வரிகளின் தாக்கம் அதிகம் படம்: படகோட்டி பாடல்: வாலி இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடியவர்: T.M.S கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன் யாருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை ஊருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை ஊருக்காக கொடுத்தான் மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா மாலை நிலா ஏழையென்றால் வேளிச்சம் தர மறுத்திடுமா உனக்காக.. ஒன்று.. எனக்காக.. ஒன்று ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன் யாருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை ஊருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை ஊருக்காக கொடுத்தான் படைத்தவன் மேல் பழியும் இல்லை பசித்தவன் மேல் பாவம் இல்லை கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார் பலர் வாட வாட.. சிலர் வாழ வாழ.. ஒரு போதும் தெய்வம் பொறுத்ததில்லை கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன் யாருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை ஊருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை ஊருக்காக கொடுத்தான் இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லையென்பார் மடி நிறைய.. பொருளிருக்கும் மனம் நிறைய இருளிருக்கும் எது வந்த போதும்.. பொது என்று வைத்து.. வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன் யாருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை ஊருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை ஊருக்காக கொடுத்தான் - shanmuhi - 05-26-2004 இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லையென்பார் மடி நிறைய.. பொருளிருக்கும் மனம் நிறைய இருளிருக்கும் யதார்த்தமான வரிகள்... - Eelavan - 05-28-2004 தத்துவப் பாடல்களில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்துக் கொண்டவர் கண்ணதாசன் அவர்கள்,கண்கெட்ட பிறகு சூரியோதயம் என்ற பழமொழியை எவ்வளவு அழகாகப் பாடலாக்கியுள்ளார், ஆடிய ஆட்டமென்ன கூடிய கூட்டமென்ன என்ற வரிகளின் தொடர்ச்சியாய் வரும் இந்தப்பாடல் இப்பாடலைப் கேட்கும் போது இன்னொரு பாடல் நினைவு வரும்,கடவுள் பாதி மனிதன் பாதி கலந்து செய்த கலவை நான் என்ற ஆளவந்தான் படப் பாடல்தான் அது படம்: ஆலயமணி பாடல்: கண்ணதாசன் இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடியவர்: T.M.S சட்டி சுட்டதடா கை விட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா சட்டி சுட்டதடா கை விட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா மீதி மனதில் மிருகம் இன்று ஆட்டி வைத்ததடா ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா சட்டி சுட்டதடா கை விட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடி விட்டதடா ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா தர்ம தேவன் கோவிலிலே ஒளி துலங்குதடா தர்ம தேவன் கோவிலிலே ஒளி துலங்குதடா - மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கண்டதடா சட்டி சுட்டதடா கை விட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா எறும்புத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா மனம்சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கண்டதடா சட்டி சுட்டதடா கை விட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா - vasisutha - 06-02-2004 படம்: <b>ரோஜாவை கிள்ளாதே</b> <b>பாடலை கேட்க:</b> http://www.tamilsongs.net/page/build/album...they/index.html பாடல்: அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு <span style='color:#7f00ff'>வானவில் பற்றி என்ன நினைக்கிறாய் மழையில் காயும் வர்ணச்சேலை! புூவினம் பற்றி என்ன நினைக்கிறாய் செடிகள் வண்டுக்கு எழுதிய ஓலை! அருவி என்பது மலையின் தாய்ப்பால்! இரவு என்பது பகலின் தாழ்ப்பாள்! ------------- நிலாவைப் பற்றி என்ன நினைக்கிறாய் வெள்ளி வீதியில் வெள்ளைத் தேர்! நிலாவைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய் ஆகாயத்தின் அமுதச்சாறு! நிலாவைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய் ஏழைக்கு எட்டாத சோழச் சோறு ------- சாவு என்பதை என்ன நினைக்கிறாய் உயிருக்கும் உடம்புக்கும் ஒப்பந்த முடிவு! சாவு என்பதை என்ன நினைக்கிறாய் கனவுகள் இல்லாத கடைசி நித்திரை சாவு என்பதை நீ என்ன நினைக்கிறாய் நான் எழுதிய கவிதைக்கு யாரோ வந்து வைக்கும் முற்றுப்புள்ளி.</span> |