![]() |
|
புகைப்பட ஆர்வலர்கள் நட்புவட்டம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: புகைப்பட ஆர்வலர்கள் நட்புவட்டம் (/showthread.php?tid=7094) |
- aathipan - 06-03-2004 கொடைக்கானலில் எடுத்த மஞ்சள்ப்புூக்கள் பெயர் தெரியவில்லை மன்னிக்கவும் - aathipan - 06-04-2004 கேரளாவீடு - aathipan - 06-04-2004 நல்லபுகைப்படம் எடுக்க உதவிகரமான சில அறிவுரைகள். புகைப்படம் எடுப்பது நபராக இருக்கும் பட்சத்தில். புகைப்படக்கருவியை அவரது கண் மட்டத்தில் வைத்திருத்தல் நல்ல பலனைக்கொடு;க்கும்.குழந்தைகளாக இருப்பின் குனிந்து அவர்கள் உயரத்திற்கு ஏற்றாற்போல் குனிந்து புகைப்படம் எடுக்கலாம். அதற்காக புகைப்படம் எடுக்கும் போது அவர்கள் புகைப்படக்கருவியைத்தான் பார்க்கவேண்டும் என்பதில்லை. புகைப்படம் எடுப்பதற்கு முன் ஏற்கனவே சொன்னது போல் புகைப்படக்கருவியின் சட்டதினூடாக எடுக்கும் நபரையோ பொருளையோ சுற்றி என்ன இருக்கிறது என்ற பார்த்துக்கொள்ளவேண்டும். இதன்மூலம் தலையில் இருந்து மரம் முளைத்திருப்பது போன்ற காட்சிகளைத்தவிர்க்கலாம். மதியநேரம் தானே எதற்கு தனியாகவிளக்கு என்று புகைப்படக்கருவியில் பொருத்தியுள்ள விளக்குகை அலட்சியம் செய்யவேண்டாம். மதிய நேரத்தில் வெளிச்சம் அதிகம் இருப்பினும் முகத்தில் கண்களுக்கு கீழே மற்றும் கழுத்துப்பகுதியில் நிழல் கருமையாக தெரிய வாய்ப்பு அதிகம் உண்டு. ஆகவே புகைப்பட விளக்கைப்பயன்படுத்துவது அந்த நிழல்களை அகற்றி முகத்தை தெளிவாக்கும். வானம் மந்தமாக உள்ளபோது வேண்டுமானால் விளக்கைத்தவிர்த்தும் புகைப்படம் எடுக்கலாம். எடுக்கும் பொருள் காரைவிடச்சின்னதாயின் சற்று தள்ளி நின்று ஆனால் புகைப்படக்கருவியில் பெரிதாக்கி பதிவு செய்யலாம். பெரிதாக்கி எடுப்பதால் காட்சியில் அப்பொருள் பெரும்பகுதியை நிரப்புவது மட்டுமன்றி அதன் சிறு சிறு பாகங்களும் தெளிவாகத்தெரியும். ஆனால் காட்சியில் அப்பொருளை பெரிதாக நிரப்பவேண்டும் என்பதற்காக மிக அருகில் சென்று எடுப்பது நல்லதல்ல. அருகில் செல்வதால் அப்பொருள் தெளிவற்று பதிய வாய்புண்டு. ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே புகைப்படக்கருவியை அருகில் கொண்டு செல்லலாம். அந்த குறிப்பிட்ட அளவை மீறும் போது காட்சி தெளிவற்றுப்போய்விடும். இதை அறிய உங்கள் புகைப்படக்கருவியுடன் வந்த கையேட்டில் படித்துத்தெரிந்து கொள்ளுங்கள். மலர்களை புகைப்படம் எடுப்பதற்கு தனியாக குவிவு வில்லைக்கண்ணாடிகளைப் பயன்படு;த்தவேண்டும். புகைப்படத்திற்கான காட்சியைத்தீர்மானிக்கும் போது முக்கியமான பொருளோ நபரோ மையப்பகுதில் இருக்கவேண்டும் என்பதில்லை. வலப்புறமோ இடப்புறமோ கூடஇருக்கலாம். மையப்பகுதில் இருப்பதைவிட ஒருப்பக்கமாக இருத்தல் அழகாகஇருக்க வாய்ப்புள்ளது. நீங்கள் புகைப்படம் எடுக்கும் நபர் மையப்பகுதில் இல்லை என்றால் புகைப்படக்கருவியில் அவரை வைத்து காட்சியைத் தெளிவு செய்ய முடியவில்லை என்று கவலைப்படவேண்டாம் .புகைப்படக்கருவியைத்திருப்பி அவரை மையப்படுத்தி காட்சியைத் தெளிவு செய்தபின் எந்த மற்றமும் செய்யாது புகைப்படகருவியை திருப்பி, கோணத்தில் மட்டும் மாற்றம் செய்து தெளிவான புகைப்படம் எடுக்கமுடியும் புகைப்படக்கருவில் பொருத்தியுள்ள விளக்கானது சுமார் பத்து முதல் பதினைந்து அடி தூரம் மட்டுமே வெளிச்சம் கொடுக்கும். ஆகவே இரவில் புகைப்படக்கருவில் உள்ளவிளக்கைப்பயன்படுத்தி தூரத்தில் உள்ள காட்சிகளை பதிவது எந்தப்பலனும் தராது. முடிந்தவரை நபரையோ அல்லதுபொருளையோ பத்தடி இடைவெளிக்குள் வைத்து புகைப்படம் எடுப்பது நலம். வசதிப்படி புகைப்படக்கருவியை திருப்பி காட்சியைப்பதியலாம். காட்சி சட்டத்தை அழகான கோணத்தில் நிரப்பவே;ண்டும் என்பதுதான் மிக முக்கியம் - aathipan - 06-04-2004 பழம்விற்கும் பெண் - aathipan - 06-04-2004 ரிப்பன் மாளிகை சென்னை - aathipan - 06-05-2004 சாந்தோம் சர்ச் - aathipan - 06-05-2004 இராட்டினம் - Mathan - 06-05-2004 உங்கள் படங்களை சில சமயங்களில் பார்க்க முடியவில்லை. - Eelavan - 06-05-2004 கோப்புகளாக பதிவு செய்திருப்பதால் உள்நுழைந்தால் மட்டுமே தெரியும் - aathipan - 06-06-2004 காட்சியைப்பதிதல் பற்றி இப்பகுதியில் இன்னும் கொஞ்சம் விரிவாகப்பார்ப்போம். காட்சியைப்பதிதல் என்பது புகைப்படத்துறையில் வெளிச்சத்தைப்பதிவுசெய்யும் செயலைக்குறிக்கும். அதாவது ஒரு படத்தை பெறுவதற்காக வெளிச்சத்தை புகைப்படக்கருவியின் உதவியுடன் படச்சுருளிலோ அல்லது டிஐpட்டல் பதிவாக்கியிலோ பதிதல் எனலாம். புகைப்படக்கருவியானது உள்ளே வரும் வெளிச்சத்தை கட்டுப்படுத்தி அதை புகைப்படச்சுருளை நோக்கி அனுப்புகிறது. புகைப்படச்சுருளானது இரசாயனபொருட்கள் புூசப்பட்டவை. வெளிச்சம் படும்போது அவை இரசாயன மாற்றத்திற்குட்பட்டு காட்சியானது அங்கே பதியப்படுகிறது. புகைப்படக்கருவியானது ஒரு ஒளிபுகாத பெட்டி எனலாம். தேவையானபோது மட்டும் அவை திறக்கப்பட்டு தேவைக்கேற்ப வெளிச்சம் உள்ளே அனுமதிக்கப்பட்டு காட்சியானது பதிவுசெய்யப்படுகிறது. வெளிச்சம் உள்ளே அனுமதிப்பதற்காக புகைப்படக்கருவியில் வௌ;வேறு அளவுகளில் துளைகள் இடப்பட்டிருக்கும். இத்துளைகளை மாற்றி நாம் உள்ளே செல்லும் ஒளியைக்கட்டுப்படுத்தலாம். இந்தத்துளைகள் ஆங்கிலத்தில் அப்ராச்சர் என அழைக்கப்படுகிறது. இத்துளைகள் இனி ஒளித்துளைகள் என அழைப்போம். புகைப்படச்சுருளானது ஏற்கனவே கூறியதுபோல வெளிச்சத்திற்கு ஏற்ப இரசாயன மாற்றம் அடையக்கூடியது. அதிக நேரம் வெளிச்சம் உள்ளே சென்றால் இந்த இரசாயன மாற்றம் தேவைக்கதிகமாக ஏற்பட்டு காட்சிதெளிவற்றுப்போக வாய்ப்புள்ளது. ஆகவே வெளிச்சம் உள்ளே செல்லும் நேரத்தையும் நாம் கட்டுப்படுத்தவேண்டி உள்ளது. ஒளிளை உள்ளேவிடுவதற்கு புகைப்படக்கருவியில் கதவுகள் போன்ற உள்ளது. இது தேவைக்கேற்ப வேகமாகத்திறந்து மூடுகிறது. இது உள்ளே செல்லும் ஒளிக்கான நேரத்தை கட்டுப்படுத்துகிறது. மதியநேரத்தில் அதிக வெளிச்சம் இருப்பதால் அந்த நேரத்தில் இவை வேகமாகத்திறந்து மூடும்படி கட்டுப்படுத்தியாகவேண்டும். மாலை அல்லது இரவில் இந்தக்கதவுகள் கொஞ்சம் அதிக நேரம் திறந்து ஒளியை உள்ளேவிட அனுமதிக்கவேண்டும். இந்த நேரம் ஆங்கிலத்தில் சட்டர்ஸ்பீடு என்று அழைக்கப்படுகிறது. ஒளியை உள்விடும் நேரம் என அழைப்போம். புகைப்படச்சுருளில் உள்ள இரசாயனப்புூச்சுக்களும் மாறுபடுகின்றன. சில இரசாயனப்புூச்சுக்கள் துரிதமாக செயல்படுகின்றன. துரிதமாகசெயல்படும் இரசாயனப்புூச்சுக்களைக்கொண்ட புகைப்படச்சுருள் அதிக ஒளியைப்பெறவேண்டியதில்லை. இத்தகைய துரிதமாகச்செயல்ப்படும் இரசாயனப்புூச்சுக்கொண்ட சுருள்கள் இரவில் காட்சிகளைப்பதிய பெரிதும் உதவியாக உள்ளது. இப்புகைப்படச்சுருள்கள் தரப்படுத்தப்பட்டு ஐஎஸ்ஒ 50, 100, 200, 400 என அவற்றின் துரிதமாகசெயல்படும் இரசாயனப்புூச்சுக்கு ஏற்ப இலக்கமிடப்பட்டு கிடைக்கிறது. இதில் ஐஎஸ்ஒ 50 அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இது பகல் நேரத்திற்கு உகந்தது. ஐஎஸ்ஒ 400 துரிதநேரத்தில் இரசாயனமாற்றத்திற்குட்பட்டு காட்சியைப்பதியும் தன்மை கொண்டது. இது இரவுநேரத்தில் பயன்படுத்த உகந்தது. - aathipan - 06-06-2004 புூச்சட்டி - aathipan - 06-07-2004 இராமகிருஸ்ண மடம் சென்னை - Paranee - 06-07-2004 ம் பூச்சட்டியில் சட்டி வெட்டி நிற்குதே எல்லைகள் மாறிவிட்டதோ ஆதிபன் aathipan Wrote:புூச்சட்டி - aathipan - 06-07-2004 உண்மைதான் பரணி புூச்சட்டியைப்படம் பிடித்தபோது நான் சரியாக காட்சியை சட்டத்தினுள் கொண்டுவரவில்லை. நான் புூக்களில் அதிக கவனம் செலுத்திவிட்டேன். அது மட்டுமல்ல புகைப்படக்கருவி வாங்கிய புதிது, எனது முதல் படச்சுருள் கற்றுக்கொள்வதற்காக விளையாட்டாக எடுத்தவை. - aathipan - 06-08-2004 இதற்கு முன் ஒளித்துளைகள்(அப்பராச்சர்), ஒளியை உள்விடும் நேரம் (சட்டர்ஸ்பீடு), புகைப்படச்சுருளில் உள்ள இரசாயனபுூச்சின் தன்மையை வரைமுறைப்படுத்தும் ஐஎஸ்ஓ இலக்கம் பற்றி பார்த்தோம். இதில் ஒளித்துளைகளை மற்றும் ஒளியை உள்விடும் நேரத்தையும் நாம் மாற்றிக்கொள்ளலாம். ஒளியை உள்விடும் நேரம் மிகவும் சிறியது அதாவது ஒரு செக்கண்டைப் மேலும் பிரித்து அந்த குறிகிய நேரத்தில் ஒளியை உள்விடுகின்றோம். புகைப்படகருவியில் பொதுவாக காணப்படடும் ஒளியை உள்விடும் நேரங்களைப்(சட்டர்ஸ்பீடு) பார்ப்போம். 1/2000 (செக்கட்ண்ட்) 1/1000 1/500 1/250 1/125 1/60 1/30 1/15 1/8 1/4 1/2 1 இதில் மிகச்சிறிய ஒளியைஉள்விடும் நேரம் 1/2000. இது மிகவேகமானது ஆகும். அதாவது ஒரு செக்கண்ட்டை 2000 சிறுபிரிவுகளாப்பிரித்து ஒரு சிறிய அலகு நேரத்தில் புகைப்படக்கருவியின் கதவுகள் திறந்து மூடுவதாகும். விளையாட்டுப்போட்டிகள் மோட்டார்க்கார்ப்பந்தையங்கள் போன்றவற்றை புகைப்படம் எடுக்க பயன்படும். மிகப்பெரிய ஒளியை உள்விடும் நேரம் 1 செக்கண்ட். அதாவது ஒளியை உள்ளேவிடுவதற்காக புகைப்படகருவியின் முன்னே உள்ள கதவுகள் ஒரு செக்கண்ட் நேரம் திறந்து பின் மூடிக்கொள்ளும். இங்கே நான் காட்சிக்கு வைத்த இராட்டினம் ஒரு செக்கண்ட் ஒளியை உள்விடும் நேரத்தில் எடுக்கப்பட்;டதாகும். - aathipan - 06-08-2004 வழக்கமாக நாம் குழந்தைகளை புகைப்படம் எடுப்பதற்கு அவற்றைச்சிரிக்கச் சொல்லி வருத்துவதுண்டு ஆனால் இயற்கையாக அவர்களை புகைப்படம் எடுங்கள் எவ்வளவு அழகான படங்கள் கிடைக்கும். - aathipan - 06-08-2004 சில அனுபவம் மிக்க புகைப்படக்கலைஞர்கள் எடுத்த குழந்தைகளின் புகைப்படங்கள் - aathipan - 06-08-2004 ஒளிவிடும் துளைகள் புகைப்படக்கருவியில் ஒளியை உள்விடுவதற்கு பல்வேறு அளவுகளில் துளைகள் காணப்படும் இத்துளைகள் உள்ளே நுளையும் வெளிச்சத்தின் அளவைத்தீர்மானிக்கிறது. இத்துளைகள் "எப் ஸ்டாப்" (F stop) என்னும் அலகுகளில் அளவிடப்படுகிறது. சிறிய துளைகள் ஊடாக குறைந்த ஒளியும் பெரிய துளைகள் ஊடாக அதிக ஒளியும் உட்செல்லும். இத்துளைகளை தேவைக்கேற்ப மாற்றி நாம் காட்சிகளை பதிகின்றோம். பொதுவாகக்காணப்படும் புகைப்படக்கருவிகளில் காணப்படும் துளைகள் "எவ்" (F) அலகுகளி;ல் பார்ப்போம். f/2.0 f/2.8 f/f/4 f/5.6 f/8 f/11 f/16 f/22 f/32 இந்த இலக்கங்கள் எதுவும் விளங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் கவலைவேண்டாம். உண்மையில் இந்த இலக்கங்களுக்கு எந்தவித நேரடிவிளக்கமும் இல்லை. இங்கே கொடுக்கப்பட்ட இலக்கங்கள் ஒளிவிடும் துளைகளின் அளவையே குறிக்கிறது. 50mm விட்ட கண்ணாடி கொண்ட புகைப்படக்கருவியில் F 2.0 என்பது 50/2 ஐக்குறிக்கும். அதாவது ஒளிவிடும் துளையின் விட்டம் 25mm ஆகும். - aathipan - 06-08-2004 F-Stop 50mm Lens ஒளிவிடும்துளைகளின் விட்டம் f/2.0 50/2.0 25 mm f/2.8 50/2.8 17.9 mm f/4 50/4 12.5 mm f/5.6 50/5.6 8.9 mm f/8 50/8 6.25 mm f/11 50/11 4.5 mm f/16 50/16 3.125 mm f/22 50/22 2.3 mm f/32 50/32 1.56 mm - aathipan - 06-08-2004 மேலே கொடுக்கப்பட்ட அட்டவணையில் இருந்து f2.0 என்பது பெரிய ஒளிவிடும் துளையைக்குறிக்கும் என்பதை அறியலாம். அதேபோல f32 என்பது சிறிய ஒளிவிடும் துளையைக்குறிக்கும். அதாவது சிறிய இலக்கங்கள் பெரிய ஒளிவிடும் துளைகளைக்குறிக்கும். பெரிய இலக்கங்கள் சிறிய ஒளிவிடும் துளைகளைக்குறிக்கும். பெரிய துளைகள் அதாவது சிறிய f இலக்கங்கள் மாலைமற்றும் இரவில் புகைப்படம் எடுக்க பயன்படும். சிறிய துளைகள் அதாவது பெரிய f இலக்கங்கள் வெளிச்சம் அதிகம் உள்ள மதிய நேரத்தில் பயன்படும். |