Yarl Forum
பூ ஒன்று புலியாகின்றது - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கதைகள்/நாடகங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=53)
+--- Thread: பூ ஒன்று புலியாகின்றது (/showthread.php?tid=708)

Pages: 1 2


- வெண்ணிலா - 03-02-2006

Quote:கடைசி நேர கடமைகளை செய்வதற்கு என்றாலும் ஆண்பிள்ளைகள் வேண்டுமே என்ற ஆதங்கங்கள் எல்லோர் மனதிலும் ஒலிக்கின்றன. பெற்றோர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தியை அறியவே அண்ணாக்களுக்கு ஆறு மாதம் செல்லப்போகின்றது. இதற்குள் கடமைகளை முடிக்க எப்ப வரப்போகின்றார்கள்? இங்கு நான் அம்மாக்கும் அப்பாக்கும் இறுதி கடமைகளை செய்யும்போது அங்கு அண்ணாக்கள் நண்பர்களுடன் படம் பார்த்து சிரிப்பார்களோ? இல்லை நான் இங்கு சிதை முட்டும்போது நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பார்களோ? என்று நினைத்தவளுக்கு வழிந்த கண்ணீர் துளிகளை அருகில் இருந்த நண்பிகளின் கைகள் மாறி மாறி துடைக்கின்றன. இந்த துயர நேரத்தில் ஆறுதல் கூறி அணைக்க வேண்டிய கைகள் எட்டாத தூரத்தில். சுடலைப் பக்கம் போகதை எதாவது பிடித்து விடும் என்று சொல்லி அவளை பாதுகாத்த அம்மா தன் இறுதி கடமைக்காக தன் மகள் தன்னுடன் அங்கு வருவாள் என்று நினைத்து இருப்பாளா? பெண் பிள்ளைகள் என்றால் இந்த இடத்துக்கு எல்லாம் போகக்கூடாது என்று போக கூடிய இடங்களை படம் கீறி காட்டும் அப்பா தன் மகள் தன்னுடன் காடு வரை வரப்போகின்றாள் என்பதை அறிவாரா?

அடிக்கடி அழ வைக்கிறீங்க ரமாக்கா. நல்ல சிந்தனை. ரமாக்கா என்னக்கா இது உண்மைக் கதையா? Cry Cry Cry Cry தொடர்ந்து இப்படியான ஆக்கங்களை ஆக்க வாழ்த்துக்கள்


- RaMa - 03-02-2006

நன்றிகள் வர்ணன் நிலா உங்கள் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும்.
ஆமாம் இது எனது கற்பனை கதையாக இருந்தாலும் எமது தாயகத்தில் இப்படியான சம்பவங்கள் நடக்க நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு தானே. அதை தான் கதையாக எழுதினேன்.
சோகக் கதைகள் எழுதுவதில் ஒரு சுகம் இருக்கு நிலா.


- Jenany - 03-02-2006

கதை நல்லா இருக்கு ராமா அக்கா.. உங்க அடுத்த கதையை எதிர் பார்த்து கொண்டு இருக்கம்..


- RaMa - 03-03-2006

உங்கள் கருத்துகளுக்கு நன்றிகள் ஐனனி